Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

குளிர் நிறைந்த அதிகாலை பொழுதில் காணாமல் போய் அலைந்து திரிந்து கண்டுபிடிக்கப்பட்ட சிறுவனின் சோக முடிவு. கனடிய மக்களை துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.

Featured Replies

கனடா- ரொறொன்ரோவில் வியாழக்கிழமை அதிகாலை 4-மணியளவில் 3-வயதுடைய எலையா என்ற சிறுவன் தொடர்மாடிக்கட்டிடம் ஒன்றில் இருந்து காணாமல் போய் உள்ளான். இச்சம்பவம் நெடுஞ்சாலை 401 மற்றும் பாத்றஸ்ட் வீதியில் நடந்துள்ளது.

சிறுவனை இரவு 9.30-மணியளவில் படுக்கையில் விட்டதாகவும் காலை 7.30-மணியளவில் எழுந்து பார்க்கும் போது சிறுவனை காணவில்லை எனவும் குடும்பத்தினர் தெரிவித்ததாக பொலிசாரின் கூற்று பிரகாரம் தெரியவந்துள்ளது.

அதிகாரிகள் கண்காணிப்பு கமரா பதிவை பார்வை இட்டபோது அதிகாலை 4.05-மணியளவில் சிறுவன் கட்டிடத்தைவிட்டு வெளியேறியதும் 4.20-ற்கு வண்டிபாதையில் காணப்பட்டதும் பதிவாகியுள்ளது காணப்பட்டது.

சிறுவன் தனது பேத்தியாருடன் தொடர்மாடிக் கட்டிடத்தில் இருந்தான் எனவும் “நல்ல குணமுள்ள பையன்” எனவும் அப்பகுதி அயலவர்கள் கூறியுள்ளனர். பொலிசார் தீவிர தேடுதல் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

யோர்க் பிராந்திய பொலிசார் கூட தேடுதலில் உதவும் பொருட்டு ஒரு ஹெலிஹொப்டரை கொடுத்துள்ளனர்.

காலநிலைக்கு ஏற்ற ஆடைகளை எலையா அணிந்திருக்கவில்லை எனவும் படுக்கை உடுப்புகளை மட்டும் அணிந்திருந்தான் எனவும் கூறப்பட்டுள்ளது.

சிறுவன் வசித்த குடியிருப்பு பகுதியான நெப்ரியூன் பகுதி குடியிருப்பாளர்களை அவர்களது பகுதிகளிற்குள் சிறுவன் காணப்படுகின்றானா என தேடும் படி பொலிசார் அனைவரையும் வலியுறுத்தியுள்ளனர்.

boy1-600x337.jpgboy-600x337.jpg

 

- See more at: http://www.canadamirror.com/canada/38177.html#sthash.go3ybbwp.dpuf

 

கனடா- ரொறொன்ரோவில் காணாமல் போன 3-வயது சிறுவன் ரொறொன்ரோ பகுதியில் இரு வீடுகளிற்கிடையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளான்.

சிறுவனை தேடும் முயற்சியில் அயலவர்கள், நண்பர்கள், அந்நியர்கள் மற்றும் பல்வேறு பகுதிகளின் பொலிசார் அனைவரும் தீவிரமான தேடுதல் முயற்சியில் ஈடுபட்டிருந்தனர். சரியாக 10.15-மணியளவில் அவனது தொடர்மாடிக்கட்டிடத்தில் இருந்து 300-மீற்றர்கள் தொலைவில் பேகிறஸ்ட் அவெனியுவில் வைத்து கண்டுபிடிக்கப் பட்டுள்ளான்.

எதுவித உயிர்த்துடிப்புமற்ற நிலையில் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் அண்மையில் உள்ள வைத்தியசாலைக்கு உயிராபத்தான நிலைமையில் கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் ரொறொன்ரோ மருத்துவ உதவியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

- See more at: http://www.canadamirror.com/canada/38183.html#sthash.AnLDmg1M.dpuf

 

கனடா- ரொறொன்ரோ தொடர்மாடிக்கட்டிடத்தில் இருந்து கடுமையான குளிர் நிறைந்த காலையில் ரீ சேர்ட்டும், டயப்பரும் மட்டும் அணிந்து காலில் பூட்சும் அணிந்த நிலையில் காணாமல் போய் அலைந்து திரிந்து பலரின் தேடுதல் முயற்சியினால் உயிராபத்தான நிலையில் கண்டு பிடிக்கப்பட்டு வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட 3-வயது எலையா என்ற சிறுவன் மரணமடைந்து விட்டான்.

இந்த துயரத்தை கனடியர்கள் அணைகடந்த வெள்ளம் போல் சமூக ஊடகங்களில் பகிர்ந்து கொண்டிருக்கின்றனர்.

வீடொன்றின் பின்புற மூலையில் கிடந்ததை தேடுதல் முயற்சியில் ஈடுபட்டிருந்த இரு தன்னார்வ தொண்டர்கள் கண்டுபிடித்தனர்.

ரொறொன்ரோ மக்களை மட்டுமன்றி கனடியர்கள் அனைவரையும் துயரத்தில் ஆழ்த்திய பயங்கரமான துன்பமாகும்.

எலையா கண்டுபிடிக்கப்பட்ட வீட்டின் பின்புறம்:.

tragic1.jpg

tragic-600x337.jpgmiss3-600x408.jpgboy-600x337.jpgmiss1-600x337.jpg

 

- See more at: http://www.canadamirror.com/canada/38196.html#sthash.1dq1ZLn5.dpuf

 

 

மிகவும் கவலை தரும் விடயம். நேற்று முழுதும் மனம் பதைப்பிலேயே இருந்தது.

 

இதையே எண்ணிக்கொண்டு இருந்தமையால்  இன்று காலை -37C அளவுக்கு குளிர் என்பதால் என் பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்பவில்லை.

மிகவும் கவலையளித்த விடயம்.  இரவு முழுவதும் அந்த பையனே கண்ணுக்குள் நின்றான். :(

 

ஆழ்ந்த அனுதாபங்கள் .நேற்று இதேதான் எங்கும் செய்தி .

 

இந்த குழந்தை காணாமல் போன செய்தி கேட்டு அதிகாலை, நல்ல குளிர் வெகு தூரத்தில் இருந்து எல்லாம் குழந்தையை தேட வந்தவர்களின் எண்ணிகையை பார்த்து மனிதம் இன்னும் இறக்கவில்லை என்று மனதிற்கு ஆறுதலாக இருந்தது .

  • கருத்துக்கள உறவுகள்

துயரமான செய்தி.
3 வயது சிறுவன் என்பதால்.... அந்த வயது உடையவர்கள், நீண்ட நேரம் நித்திரை கொள்வதை அவதானிக்கலாம்.
இவன், அதிகாலை 4 மணிக்கு, படுக்கை உடுப்புடன் மட்டுமே, வெளியில் சென்றுள்ளமையால்....
நித்திரையில்  நடக்கும் வியாதி, இருந்துள்ளது போலுள்ளது.

அது அவனது பாட்டிக்கோ, பெற்றோருக்கோ தெரியாமல்... இருந்திருக்கலாம்.
குளிர், அவனின் உயிரை பறித்து  விட்டது.

 

என்னுடன் வேலை செய்யும், ஒருவருக்கும் இந்த வியாதி பத்து வயது வரை இருந்து,

காலப் போக்கில் இல்லாமல் போய்விட்டதாக கூறியவர்.
மனதிற்கு, வருத்தமளிக்கும் செய்தி.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

என்னவென்று பெடியன் வீட்டுக் கதவைத் திறந்து,தொடர் மாடிக் குடியிருப்பால் வெளியே போனான்?...ஆத்மா சாந்தியடையட்டும்

  • கருத்துக்கள உறவுகள்

சிறுவனின் விதி அதுதான் போல. அவனின் ஆத்மா சாந்தியடையட்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

என்னவென்று பெடியன் வீட்டுக் கதவைத் திறந்து,தொடர் மாடிக் குடியிருப்பால் வெளியே போனான்?...ஆத்மா சாந்தியடையட்டும்

 

 

எனது மகனுக்கும் இப்படியொரு பழக்கம் இருந்தது

கதவைப்பூட்டி திறப்பு எடுத்து என்னுடன் வைத்துக்கொள்வேன்

திறப்பு இருக்கும் இடம் கூட அவர்களுக்குத்தெரியக்கூடாது.

நித்திரையில் அதுவும் ஞாபகத்துக்கு வரும்

இன்றும் அவர்கள் படுத்தபின்( அவனுக்கு 23 வயசு)

பூட்டி திறப்பு என்னிடம் தான் இருக்கும்....

 

பெற்றவர்கள் மிகவும் யாக்கிரதையாக இருக்கணும்

இதோ ஒரு பரிதாபம்.. :(  :(  :(

எனது மகனுக்கும் இப்படியொரு பழக்கம் இருந்தது

கதவைப்பூட்டி திறப்பு எடுத்து என்னுடன் வைத்துக்கொள்வேன்

திறப்பு இருக்கும் இடம் கூட அவர்களுக்குத்தெரியக்கூடாது.

நித்திரையில் அதுவும் ஞாபகத்துக்கு வரும்

இன்றும் அவர்கள் படுத்தபின்( அவனுக்கு 23 வயசு)

பூட்டி திறப்பு என்னிடம் தான் இருக்கும்....

 

பெற்றவர்கள் மிகவும் யாக்கிரதையாக இருக்கணும்

இதோ ஒரு பரிதாபம்.. :(  :(  :(

 

நித்திரையில் நடக்கும் பழக்கம் உள்ளவர்கள் இருக்கும் வீட்டில், வாசலில் கொஞ்சம் பெரிய பாத்திரத்தில் நீர் உற்றி வைத்து விட்டு படுக்கச் செல்வது நல்லது. ஒரு வேளை நித்திரையில் வாசல் கதவை திறந்து வெளியே போக நினைப்பவர்காள், நீர் இருக்கும் பாத்திரத்தினுள் கால் வைப்பதன் மூலமோ அல்லது பாத்திரத்தில் இடறி நீரை சிந்துவதன் மூலமோ விழிப்படைந்து விடுவர்.

  • கருத்துக்கள உறவுகள்

நித்திரையில் நடக்கும் பழக்கம் உள்ளவர்கள் இருக்கும் வீட்டில், வாசலில் கொஞ்சம் பெரிய பாத்திரத்தில் நீர் உற்றி வைத்து விட்டு படுக்கச் செல்வது நல்லது. ஒரு வேளை நித்திரையில் வாசல் கதவை திறந்து வெளியே போக நினைப்பவர்காள், நீர் இருக்கும் பாத்திரத்தினுள் கால் வைப்பதன் மூலமோ அல்லது பாத்திரத்தில் இடறி நீரை சிந்துவதன் மூலமோ விழிப்படைந்து விடுவர்.

 

 

அப்படியென்றால் இந்தக்குழந்தையின் காலில் குளிர் படவில்லையா நிழலி....

  • கருத்துக்கள உறவுகள்

என்னவென்று பெடியன் வீட்டுக் கதவைத் திறந்து,தொடர் மாடிக் குடியிருப்பால் வெளியே போனான்?...ஆத்மா சாந்தியடையட்டும்

 

பகலில் நடப்பதை, அவதானித்து....

அவர்களே... அறியாமல், ஒரு கனவில் நடப்பது போல்....

நித்திரையால்..... எழும்பியவுடன் வாசல் கதவை திறந்து,

கால் போன போக்கில் போவார்கள் என்று, கேள்விப்பட்டுள்ளேன்.

விசுகு, சொன்ன அனுபவமும் அதை... உறுதி செய்கிறது ரதி.

அப்படியென்றால் இந்தக்குழந்தையின் காலில் குளிர் படவில்லையா நிழலி....

 

கதவைத் திறந்து வெளியே போனபின் தான் குழந்தை குளிரை கடுமையாக உணர்ந்து இருக்கும். பாவம், எழும்பி தன் இறகுகள் வைத்த சப்பாத்தினையும் போட்டுக் கொண்டு தான் வெளியே போயிருக்கின்றார். 

  • கருத்துக்கள உறவுகள்

கதவைத் திறந்து வெளியே போனபின் தான் குழந்தை குளிரை கடுமையாக உணர்ந்து இருக்கும். பாவம், எழும்பி தன் இறகுகள் வைத்த சப்பாத்தினையும் போட்டுக் கொண்டு தான் வெளியே போயிருக்கின்றார். 

 

கொடுமை............ :(  :(  :(

  • கருத்துக்கள உறவுகள்

எனது மகனுக்கும் இப்படியொரு பழக்கம் இருந்தது

கதவைப்பூட்டி திறப்பு எடுத்து என்னுடன் வைத்துக்கொள்வேன்

திறப்பு இருக்கும் இடம் கூட அவர்களுக்குத்தெரியக்கூடாது.

நித்திரையில் அதுவும் ஞாபகத்துக்கு வரும்

இன்றும் அவர்கள் படுத்தபின்( அவனுக்கு 23 வயசு)

பூட்டி திறப்பு என்னிடம் தான் இருக்கும்....

 

பெற்றவர்கள் மிகவும் யாக்கிரதையாக இருக்கணும்

இதோ ஒரு பரிதாபம்.. :(  :(  :(

 

உண்மை... விசுகு.

திறப்பு ஒளித்த இடத்தை, ஒரு சில வினாடிகளே...

அவர்கள் பார்த்தாலும்... அந்த இடத்தை, நித்திரையில் கண்டு பிடித்து எடுத்து,

தங்கள் கட்டளைப் படி செய்து விடுவார்களாம்.

  • கருத்துக்கள உறவுகள்

நித்திரையில் நடப்பவராக இருந்தால், வெளியில் சென்றவுடன் முழிப்பு வந்திருக்கும். ஆனாலும் இந்தக் கதவுகளை சிறு குழந்தைகளால் வெளியில் நின்று திறக்க முடியாது. உடல் ஊனமுற்றவர்கள் அழுத்தும் அந்த சுவிட்ச் இருந்தாலும் அது குழந்தைகளுக்கு கடினமான விடயம்.

  • கருத்துக்கள உறவுகள்

உண்மை... விசுகு.

திறப்பு ஒளித்த இடத்தை, ஒரு சில வினாடிகளே...

அவர்கள் பார்த்தாலும்... அந்த இடத்தை, நித்திரையில் கண்டு பிடித்து எடுத்து,

தங்கள் கட்டளைப் படி செய்து விடுவார்களாம்.

 

உண்மை சிறி..

அது தான் எனது மகனின் வயதைப்போட்டேன்..

23 x 365 = ...............

ஒரு நாள் மறந்ததில்லை

இது தான் பெற்றோர்.........

  • கருத்துக்கள உறவுகள்

குழந்தையின் ஆத்மா சாந்தியடையட்டும்....!

 

எனது உறவிணருக்கும்  இந்த வியாதி இருந்தது. அவர் எழுந்து நடந்து போகும்போது பக்கத்தில் யாரும் நின்றாலும் தெரியாது. வீட்டின் முன் கேட்  உள்ளே திறாங்கு போட்டு அதில் உள்ள துவாரத்தில் ஒரு சீற் ஸ்பிறிங் போட்டுச் சுற்றி விடுவோம். அவர் சாமத்தில் உள்ளிருந்து ஹால், போர்ட்டிகோ எல்லாம் கடந்து வந்து அந்த ஸ்பிறிங்கை கழட்டி வெளியில் வந்து றோட்டைக் கடந்து முன்  வெறும் வளவின் சுவரில் சூ அடித்து விட்டு பின் பழைய படி அதேபோல் கதவைப் பூட்டிவிட்டு வந்து படுத்துக் கொள்ளுவார். இதுவரையும் எதுவும் தெரியாது...!! :) :)

  • கருத்துக்கள உறவுகள்

உண்மை சிறி..

அது தான் எனது மகனின் வயதைப்போட்டேன்..

23 x 365 = ...............

ஒரு நாள் மறந்ததில்லை

இது தான் பெற்றோர்.........

 

விசுகு, உங்கள்.. முன் எச்சரிக்கை, பாராட்டத் தக்கது.

நான் அறிந்த வரையில், எல்லோரும்...இது காலப் போக்கில், சரியாகி விட்டதாகவே கூறுகிறார்கள்.

இதற்கு... மருத்துவ ரீதியாக, என்ன காரணங்கள் இருக்கும் என்பதை, அறிந்து பார்த்தீர்களா....

 

  • கருத்துக்கள உறவுகள்

இன்று இன்னுமொரு 3 வயது பெடியும் வெளியில் நடந்து திரிந்துள்ளது.. நல்லவேளை காப்பாற்றிவிட்டார்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
நித்திரையில் நடக்கும் வியாதி பொல்லாதது. தற்கொலைக்கு சமமான வியாதி. எமது ஊர்களில் என்றால் காலநிலையாவது காப்பாற்றியிருக்கும். குளிர் நாடுகளில் அதுவுமில்லை.
 
பாலகனின் ஆத்மாசாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கின்றேன்.
  • தொடங்கியவர்

கனடா- வியாழக்கிழமை தீவிர குளிர் வெப்பநிலையில் தொடர்மாடிக் கட்டிடத்தை விட்டு பாதுகாப்பான ஆடைகள் ஏதும் இன்றி அதிகாலை நேரத்தில் வெளியேறி அலைந்து திரிந்து சோகம் ததும்பிய முறையில் மரணத்தை தழுவிக்கொண்ட 3-வயது எலையாவின் மரணசடங்கிற்கான நன்கொடை குவிந்த வண்ணம் உள்ளது.

இறுதிச்சடங்கிற்கான செலவாக 20,000டொலர்களை இலக்காக வைத்து ஆரம்பிக்கப்பட்ட பிரச்சாரம் இலக்கை மிஞ்சி விட்டுள்ளது. வியாழக்கிழமை இரவு ஆரம்பிக்கப்பட்ட நிதி திரட்டும் பிரச்சாரம் வெள்ளிக்கிழமை பிற்பகல் 5-மணியளவில் 120,000 டொலர்களிற்கும் மேலான தொகையை எட்டிவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பிரச்சாரத்தை ஆரம்பித்த ஜஸ்ரின் கொசுச் திரட்டப்பட்ட பணத்தின் 100சதவிகிதம் எலையாவின் குடும்பத்தினருக்கு செல்லும் என தெரிவித்தார்.

பூக்கள், பொம்மை கரடிகள் மற்றும் அட்டைகளுடன் அஞ்சலி செலுத்த எலையா வசித்த தொடர்மாடிக் கட்டித்தின் வெளியே மக்கள் குவிந்த வண்ணம் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

சமூக ஊடகங்கள் மூலமும் ஆதரவுகள் பெருகியவாறு உள்ளதோடு #RIPElijah மூலமும் இரங்கல் செய்திகள் குவிகின்றன.

எலையாவை கண்டுபிடித்த தன்னார்வ தொண்டர்.

elia1eliaelia5 elia4 elia3 elia2

- See more at: http://www.canadamirror.com/canada/38226.html#sthash.ipFR4uMw.dpuf

இன்று இன்னுமொரு 3 வயது பெடியும் வெளியில் நடந்து திரிந்துள்ளது.. நல்லவேளை காப்பாற்றிவிட்டார்கள்.

கனடா- வியாழக்கிழமை ரொறொன்ரோவில் நடந்த துயர சம்பவமான 3-வயது எலையா தீவிர குளிர் வெப்பநிலையில் சரியான ஆடைகள் இன்றி வீதியில் அலைந்து திரிந்து மரணமடைந்ததை தொடர்ந்து மீண்டும் ஒரு சம்பவம் வெள்ளிக்கிழமை நடந்துள்ளது.

இன்றய சம்பவத்தில் பாதிக்கப்பட்ட 4-வயது சிறுவன் காப்பாற்றப் பட்டுள்ளான்.

சிறுவனின் தாயான 23-வயது பெண் மீது 10-வயதிற்குட்பட்ட சிறுவனை கைவிட்ட குற்றங்கள் உட்பட மேலதிக குற்றங்கள் சுமத்தப்பட்டுள்ளது.

சிறுவன் ஆடை ஏதும் இன்றி அலைந்து திரிந்ததை அயலவர் ஒருவர் கண்டு பொலிசாருக்கு தகவல் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.இச்சம்பவம் வெள்ளிக்கிழமை பிற்பகல் 1.30-மணியளவில் எற்றோபிக்கோ தெற்கில் நடந்தது.

பொலிசார் சிறுவனை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர்.

சிறுவனின் வீட்டின் கதவை தட்டியபோது ஒருவரும் பதில் அளிக்கவில்லை என்றும் பின்னர் பொலிசார் தொலைபேசி மூலம் அவனின் தாயாருடன் தொடர்புகொண்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

ரொறொன்ரோ குழந்தைகள் உதவி சங்கத்தினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

boy1boy

- See more at: http://www.canadamirror.com/canada/38213.html#sthash.1TO4ZADU.dpuf

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அனுதாபங்கள். அவனது செத்தவீட்டு செலவுக்கு 100 ஆயிரத்துக்கும் அதிகமான பணம் (பொதுமக்களிடம் இருந்து)சேர்க்கப்பட்டுள்ளதாம். சிறுவன் குளிரில் நிச்சயமாக கத்தி இருப்பான்.அதிகாலை என்பதால் யாருக்கும் கேட்கவில்லை என நினைக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

விசுகு, உங்கள்.. முன் எச்சரிக்கை, பாராட்டத் தக்கது.

நான் அறிந்த வரையில், எல்லோரும்...இது காலப் போக்கில், சரியாகி விட்டதாகவே கூறுகிறார்கள்.

இதற்கு... மருத்துவ ரீதியாக, என்ன காரணங்கள் இருக்கும் என்பதை, அறிந்து பார்த்தீர்களா....

 

 

மருத்துவம்  என்று தொடங்கினால்..

அவர்கள் சைக்கோ....... அது இது என்று தொடங்கிவிடுவார்கள்

இது  ஊரில் நாங்கள் பார்த்த கேட்ட ஒரு மனநிலை சார்ந்த விடயம் என்பதால் அதிகம் அலட்டிக்கொள்ளாமல்

அதேநேரம் கவனமாக இருந்தோம்..

இனி  பயமில்லை

வெளியில் போனாலும் பிழைத்துக்கொள்வார்.. :icon_idea:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.