Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆமி பிடித்தவர்களுக்காக சுமந்திரனின் கொடும்பாவியை எரிப்பதானால் புலிகளால் பிடித்துச் செல்லப்பட்டவர்களுக்காக யாருடைய கொடும்பாவியை எரிப்பது?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மாகாண சபையில் அன்ரனி ஜெகநாதன் கேள்வி:-

 

மாகாண சபையில் இடம்பெற்ற விவாதத்தன் சுருக்கம்:-


டெனிஸ் வரன் :- கொடும்பாவி எரித்ததற்கு கண்டனம் தெரிவிப்பு


அனந்தி :- உணர்ச்சி வசப்பட்டவர்களால் எரிக்கப்பட்டது. இது திட்டமிட்டு எரித்தது என கூறுவது தவறு.


அன்ரனி ஜெகநாதன் :- இது திட்டமிட்டு எரிக்கப்பட்ட து.  இதே போல புலிகளால் காணாமல் போக காரணமாக இருந்தவர்களின் கொடும்பாவிகள் எரிக்கப்பட தொடங்கினால் நிலைமை என்னவாகும்?
 

கூட்டமைப்பில் உள்ளவர்களுள் மண்டைவளம் மிக்கவர் சுமந்திரனேயென  வடமாகாணசபையின் பிரதி அவை தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முல்லைத்தீவு மாவட்ட மாகாண சபை உறுப்பினருமான அன்ரனி ஜெகநாதன் தெரிவித்துள்ளார். அத்துடன் புலிகளால் பிடித்து செல்லப்பட்டவர்களிற்காக யாரது கொடும்பாவியை எரிப்பதெனவும் அவர் கேள்வி எழுப்பியிருந்தார்.

வடமாகாணசபையின் இன்றைய அமர்வில் மீன்பிடி மற்றும் போக்குவரத்து அமைச்சர் டெனீஸ்வரன் அண்மையில் சுமந்திரனின் கொடும்பாவி எரியூட்டப்பட்டமை தொடர்பில் விவாதமொன்றை ஆரம்;பித்திருந்தார்.

இதற்கு ஆதரவாக பேசிய  பிரதி அவை தலைவர் அன்ரனி ஜெகநாதன் காணாமல் போனோர் தொடர்பான விவகாரங்களுடன் தொடர்புடைய வடமாகாணசபை உறுப்பினரொருவரே இதன் பின்னணியில் இருப்பதாக தெரிவித்தார்.

இதன் போது குறுக்கிட்ட மற்றொரு உறுப்பினர் அனந்தி சசிதரன் காணாமல் போனவர்களை தேடித்திரியும் அவர்களது குடும்பங்களிற்கே அதன் வலி தெரியும். ஜ.நா விசாரணை அறிக்கை மூலம் நல்லதொரு தீர்வு தமது விடயத்தில் கிடைக்குமென அவர்கள் காத்திருந்தனர். ஆனால் இப்போது சிலர் உள்ளக விசாரணை பற்றி பேசுகின்றார்கள். ஏற்கனவே கற்றுக்கொண்ட பாடங்கள் நல்லிணக்க ஆணைக் குழுவிற்கும் அதே போன்று காணாமல் போனவர்களை தேடிக்கண்டறியும் குழு விசாரணைகளிற்கு நடப்பது அனைவரிற்கும் தெரியும். உணர்ச்சிவசப்பட்ட நிலையில் அதனை சிலர் அப்போது செய்திருக்கலாமென அனந்தி தெரிவித்தார்.

காணாமல் போனவர்களது குடும்பங்கள் ஜெனீவாவிற்கு எடுத்து செல்லுமாறு மகஜரொன்றை தரப்போவதாக அறிவித்திருந்த நிலையில் அதை பெற்றுக்கொள்ளவே அங்கு சென்றிருந்ததாகவும் குறிப்பிட்டிருந்தார்.

அன்ரனி ஜெகநாதனின் பேச்சிற்கு குறுக்கிட்டு விளக்கமளிக்க மற்றொரு உறுப்பினரான சர்வேஸ்வரன் முற்பட்ட போது அதற்கு அவைத்தலைவர் அனுமதித்திருக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது..

இந்நிலையில் ஆமிப்பிடித்து காணாமல் போனதற்கு சுமந்திரனின் கொடும்பாவியை எரிப்பதானால் புலிகள் பிடித்து சென்றவர்களிற்கு யாருடைய கொடும்பாவியை எரிப்பதென அன்ரனி ஜெகநாதன் கேள்வி எழுப்பியிருந்தார்.

நடந்து முடிந்த மாகாணசபை தேர்தலில் தன்னை மாவீரர் குடும்பமென அடையாளப்படுத்தியே அன்ரனி ஜெகநாதன் பிரச்சாரங்களை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
  

 

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/116920/language/ta-IN/article.aspx

  • கருத்துக்கள உறவுகள்

ஈபிடிபி கடத்திக் காணாமல் போனதற்கு யாரை எரிக்கிறது. :lol:  :D

 

 

இச் செய்தியின் கடைசி வரிதான் தமிழர்களை சிங்கன்கள் என்று காட்டுது :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

நடந்து முடிந்த மாகாணசபை தேர்தலில் தன்னை மாவீரர் குடும்பமென அடையாளப்படுத்தியே அன்ரனி ஜெகநாதன் பிரச்சாரங்களை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

  

 

உலகம் சின்னது அடுத்த முறை என்பது கிடையாது இவர்களுக்கு .

நீங்க கொடும்பாவி எல்லாம் எரிக்க தேவையில்ல . காட்டுக்க போய் புலியை பிடிச்சு எரியுங்க. யார் வேனாமேண்டது. 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எப்படியோ.. நிறைய (கொடும்)பாவிகளை எரிக்கப் போகிறார்கள் போலிருக்கிறது.

 

வைக்கோல் தட்டுப்பாடு வராவிட்டால் சரி.

அடுத்த தேர்தலில் இவர் எந்த முகத்தை வைத்து வரப்போகின்றார் ? ....காலம் பதில் சொல்லும் .

  • கருத்துக்கள உறவுகள்
அண்ணே எனது கொடும்பாவியை எரியுங்கள் .......
இப்பிடி என்றாலும் பேமஸ் ஆகிடுவோம் .
  • கருத்துக்கள உறவுகள்

அண்ணே எனது கொடும்பாவியை எரியுங்கள் .......
இப்பிடி என்றாலும் பேமஸ் ஆகிடுவோம் .

 

அப்ப சுமத்திரன் ஆள் வைச்சு தன்னுடைய கொடும்பாவியை எரித்திருப்பார் ...பிரபலம் அடைவதற்க்கு.. :D

  • கருத்துக்கள உறவுகள்
யாரு கண்டா .....???
அப்ப அப்ப குஷ்புவும் தமிழ்ல எதோ எதோ உளறிட்டுதானே இருக்கு .......

மக்களின் விடிவுக்காக தங்களையே வெடிகுண்டால் வெடிக்கவைத்த புலிகளை at least பதவியை தக்கவைக்க சுமந்திரனின் விடிவுக்காக ஒருவர் எரிக்கபோறாராம். ஹிஹிஹி

Edited by trinco

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.