Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காணாமல்போகச் செய்யப்பட்டவர்கள் இரகசிய முகாம்களில் சப்பாத்துத் துடைக்கின்றனர் -

Featured Replies

cv%20viki%20599w.jpg

காணாமல் போகச் செய்யப்பட்டவர்கள் இரகசிய முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருக்கின்றனர். இவர்களை இராணுவத்தினர் தமது சப்பாத்துக்களைத் துடைப்பதற்கும், வேறு வேலைகளுக்கும் பயன்படுத்துகின்றனர் என வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
 
காணாமற் போகச் செய்யப்ட்டவர்களின் உறவுகள் நேற்று யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள் முதலமைச்சரையும் சந்தித்தனர். இதன்போது முதலமைச்சர் மேற்கண்ட தகவலைத் தெரிவித்தார்.
 
காணமற் போகச் செய்யப்பட்டவர்கள் உயிருடனே இருக்கின்றனர். அவர்களை இரகசிய முகாம்களில் தடுத்து வைத்திருக்கும் இராணுவத்தினர் தங்களின் சப்பாத்துக்களைத் துடைக்கவும் பிற வேலைகள் செய்யவும் பயன்படுத்தபடுகின்றனர் என எனக்கு இரகசியத் தகவல் கிடைத்திருக்கிறது. இது குறித்து ஜனாதிபதிக்குத் தெரியப்படுத்தியிருக்கிறோம். விரைவில் அவர்கள் எங்கு தடுத்து வைக்கப்பட்டிருக்கின்றனர் என விரைவில் கண்டுபிடித்து அவர்களை விடுவிக்க ஜனாதிபதி நடவடிக்கை எடுப்பார் என நம்புகிறேன். இதற்கான வேலைகளை நான் முன்னெடுத்திருக்கிறேன் - என்றார்.
 
  • கருத்துக்கள உறவுகள்

---

நன்றி, விக்னேஸ்வரன் ஐயா.

சம்பந்தன் போன்ற.... பம்மாத்து அரசியல் வாதிகள்  செய்ய முடியாததை,

நீங்கள் ஒருவராவது தனித்து நின்று செய்வது.. ஆறுதல் அளிக்கின்றது.

ஒரு மனித நேயம் மிக்கவர் என்பதை நாங்கள் உணர முடிகின்றது . சம்பந்தர் நினைத்தது தன்னை போல ஒரு ------- இருப்பார் என்று . சுமந்திரன் மாதிரி ஆனால் சிறந்த மனிதராக செயல்படுகின்றார் . இவர் அரசியல்வாதி இல்லை . உண்மையான மனிதர் .

Edited by நிழலி
இவ்வகையான வார்த்தைப் பிரயோகங்களை முற்றாகத் தவிர்க்கவும்

  • கருத்துக்கள உறவுகள்

தனக்குத் தெரிந்த உண்மையை மறைக்காமல் சொல்லியிருக்கிறார்.தமிழரின் தலைவர் சம்பந்தன் இது பற்றி ஒரு போதும் கரிசனை கொண்டது கிடையாது. (பிரித்தானியப் பிரதமர் யாழ்ப்பாணம் வந்த போது) காணாமல் போன உறவுகளைச் சந்திக்கவே மறுத்த பின் வாசல் வழியால் ஓடியவர்.அவருடன் ஒப்பிடுகையில் முதலமைச்சர் எவ்வளவோ மேல்.

சி.வி.விக்னேஸ்வரனை ,சம்பந்தன் ஐயா கொண்டுவரும் போது இதில் கருத்து எழுதிய பலரும் என்ன எழுதினீர்கள் என்று யாழ் இணையத்தில் உள்ளது .

சம்பந்தன் ஐயா வின் நினைத்ததை சாதிக்கும் திறமையால் இன்று வடக்கு தமிழர்களுக்கு சிறந்த முதலமைச்சரை தந்துள்ளார் .நன்றிகள் சம்பந்தன் ஐயா .

தமிழரசு கட்சி என்ற தந்தை செல்வா உருவாக்கிய  தமிழரின் தேசிய கட்சியாக வளர்த்த கட்சியால் தான் சம்பந்தனுக்கு இந்த வாழ்க்கை கிடைத்துள்ளது.  தந்தை செல்வாவால் கிடைத்த  வாழ்வை தனது வாழ்வின் கடைசி காலத்தில் நல்லாக Enyoy பண்ணும் சம்பந்தனுக்கு வாழ்த்துக்கள். அதை Enyoy பண்ண   திண்ணை எப்ப  காலியாகும் என்று காத்திருக்கும் சுமந்திரனுக்கும் வாழ்த்துக்கள்

  • கருத்துக்கள உறவுகள்

சம்பந்தன் ஐயா வின் நினைத்ததை சாதிக்கும் திறமையால் ....

 நினைத்ததை சாதிக்கும் அவர், இன்னமும் தமிழீழம் என்பது பற்றி நினைக்கவேயில்லையோ..?  :o

பாவம், அறுபது வருசமா இந்த 'பவர்புஃல் ஐயா' இருப்பது தெரியாமலே இலட்சக்கணக்கில் மாண்டுவிட்டனரே!  hill.gif

 நினைத்ததை சாதிக்கும் அவர், இன்னமும் தமிழீழம் என்பது பற்றி நினைக்கவேயில்லையோ..?  :o

தமிழீழம் என்பது என்றுமே சாத்தியமானதாக இருந்ததில்லை, இருக்கப் போவதுமில்லை. இதற்குள் மறுபடியும் யதார்த்தத்தில் இருக்கும் சம்பந்தரையும் கனவுலகில் சஞ்சரிக்கச் சொல்கிறீர்களா?

  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழம் என்பது என்றுமே சாத்தியமானதாக இருந்ததில்லை, இருக்கப் போவதுமில்லை. இதற்குள் மறுபடியும் யதார்த்தத்தில் இருக்கும் சம்பந்தரையும் கனவுலகில் சஞ்சரிக்கச் சொல்கிறீர்களா?

இந்த ஞானோதயம், ஏன் 70களில் ஈழத்தலைவர்களின் மூளையிலும், ஆயுதம் தூக்கிய அக்கால இளசுகளின் புத்தியிலும், அவர்களை 2009 வரையிலும் ஆதரித்த ஈழமக்களின் சிந்தையிலும் அருணோதயமாகவில்லை ? :o:huh:

அப்புக்காத்துக்கும் பிரதம நீதியரசருக்கும் வித்தியாசம் நிறையவே உண்டு.அப்புக்காத்துக்கள் மக்களிடம் பணத்தை கறப்பவர்கள். நீதியரசர்கள் நீதியை நிலை நிறுத்தப்பாடு படுபவர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்த ஞானோதயம், ஏன் 70களில் ஈழத்தலைவர்களின் மூளையிலும், ஆயுதம் தூக்கிய அக்கால இளசுகளின் புத்தியிலும், அவர்களை 2009 வரையிலும் ஆதரித்த ஈழமக்களின் சிந்தையிலும் அருணோதயமாகவில்லை ? :o:huh:

அது சாத்தியமாகும் என்றவகையில் எமது தலைவர்களும் இளைஞர்கள் 30 வருடமாக செயல்படுத்தி காட்டினார்கள்....உலகநாடுகளின் தலையீட்டால் அது சாத்தியப்படவில்லை....சிறிலங்காவில் தமிழர் பிரதேசம் என்று ஒன்று உண்டு என்பதை சர்வதேசம் இப்பொழுது உணர்ந்துள்ளது....சர்வதேசத்திற்க்கு ஈழம் நன்மை பயக்கும் என்றால் அதை அவர்கள் உருவாக்குவார்கள், தமிழர்கள் நிராகரித்தாலும்....

இந்த ஞானோதயம், ஏன் 70களில் ஈழத்தலைவர்களின் மூளையிலும், ஆயுதம் தூக்கிய அக்கால இளசுகளின் புத்தியிலும், அவர்களை 2009 வரையிலும் ஆதரித்த ஈழமக்களின் சிந்தையிலும் அருணோதயமாகவில்லை ? :o:huh:

எனக்கும் பதில் தெரியாத பல கேள்விகளில் இதுவும் ஒன்று. ஆனாலும் 70களில் இருந்த தலைவர்களின் பேச்சுவன்மை மக்களை மாயைக்குள் தள்ளிவிட்டது மட்டும் உண்மை.

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி, விக்னேஸ்வரன் ஐயா.

இந்த ஞானோதயம், ஏன் 70களில் ஈழத்தலைவர்களின் மூளையிலும், ஆயுதம் தூக்கிய அக்கால இளசுகளின் புத்தியிலும், அவர்களை 2009 வரையிலும் ஆதரித்த ஈழமக்களின் சிந்தையிலும் அருணோதயமாகவில்லை ? :o:huh:

எல்லோரும் தெளிவாகத்தான் இருந்தார்கள்

எல்லாமே சரியாகத்தான் நடந்தது

பக்கத்தில் இந்தியா என்ற சனியனும்

தூரத்தே இசுலாமியப்பயங்கரவாதிகளும் இல்லையென்றால்

எம்மை எவராலும் தடுத்து நிறுத்தியிருக்கமுடியாது

வரலாறு பதியும்.

  • கருத்துக்கள உறவுகள்

பக்கத்தில் இந்தியா என்ற சனியனும்...

பெரியவாளை(?) அப்படியெல்லாம் பேசப்படாது, கொயந்தை.. :lol:

இன்னமும் அப்பெரியவாளை பூசிக்கிறவர்களும்,யாசிப்பவர்களும் உங்களில் பலரும் உண்டே..! :(

அது எங்களாலா, இல்லை சார்ந்த மதம்,கலாச்சாரத்தாலா என்பதில் குழப்பம்.

பக்கத்தில் இந்தியா என்ற சனியனும்

தூரத்தே இசுலாமியப்பயங்கரவாதிகளும் இல்லையென்றால்

எம்மை எவராலும் தடுத்து நிறுத்தியிருக்கமுடியாது

வரலாறு பதியும்.

இந்தியா ஆரம்பத்திலிருந்தே அப்படித்தான். எமக்கு உண்மையாக என்றுமே சார்பாக இருந்ததில்லை. ஜே.ஆரினை கட்டுப்படுத்த எமக்கு உதவினார்கள். இலங்கை காலில் விழுந்ததும் எம்மையே அழித்தார்கள். இந்தியாவை நம்பாமல்தான் ஆரம்பம் முதல் சில இயக்கங்கள் வளர்ந்தன. முடிவு நாம் பார்த்தவை.

  • கருத்துக்கள உறவுகள்

பெரியவாளை(?) அப்படியெல்லாம் பேசப்படாது, கொயந்தை.. :lol:

இன்னமும் அப்பெரியவாளை பூசிக்கிறவர்களும்,யாசிப்பவர்களும் உங்களில் பலரும் உண்டே..! :(

அது எங்களாலா, இல்லை சார்ந்த மதம்,கலாச்சாரத்தாலா என்பதில் குழப்பம்.

தமிழகம் இந்தியாவில் இருந்திருக்காவிட்டால் :(

அல்லது மலையாளிகள் எமது  தொப்பிள்கொடி உறவுகளாக இருந்திருந்தாலும்   :(

வென்றிருக்கமுடியும்...

பெரியவாளை(?) அப்படியெல்லாம் பேசப்படாது, கொயந்தை.. :lol:

இன்னமும் அப்பெரியவாளை பூசிக்கிறவர்களும்,யாசிப்பவர்களும் உங்களில் பலரும் உண்டே..! :(

அது எங்களாலா, இல்லை சார்ந்த மதம்,கலாச்சாரத்தாலா என்பதில் குழப்பம்.

எந்த குழப்பமுமில்லை இந்தியாவினை பகைத்துக்கொண்டு எந்த தீர்வையும் எட்டமுடியாது என்பதில் உள்ள தெளிவு.

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா ஆரம்பத்திலிருந்தே அப்படித்தான். எமக்கு உண்மையாக என்றுமே சார்பாக இருந்ததில்லை. ஜே.ஆரினை கட்டுப்படுத்த எமக்கு உதவினார்கள். இலங்கை காலில் விழுந்ததும் எம்மையே அழித்தார்கள். இந்தியாவை நம்பாமல்தான் ஆரம்பம் முதல் சில இயக்கங்கள் வளர்ந்தன. முடிவு நாம் பார்த்தவை.

அதுக்குத்தான் இந்தியா என்ற சனியன் என எழுதினேன்

அது விடாது.. :(

இந்த ஞானோதயம், ஏன் 70களில் ஈழத்தலைவர்களின் மூளையிலும், ஆயுதம் தூக்கிய அக்கால இளசுகளின் புத்தியிலும், அவர்களை 2009 வரையிலும் ஆதரித்த ஈழமக்களின் சிந்தையிலும் அருணோதயமாகவில்லை ? :o:huh:

அரசியல் என்பது பற்றி விளங்க கொஞ்ச அரசியலாவது தெரியவேண்டும் .

அக புற காரணிகள் மாற நாமும் மாறித்தான் அரசியல் செய்யவேண்டும் .

விக்கி நல்லவரா சம்பந்தன் கெட்டவரா என்பதை விட்டு காணமல் போனவர்களை கண்டு பிடிக்க உருப்படியாக எதையாவது செய்யுங்கள் .

அதுக்குத்தான் இந்தியா என்ற சனியன் என எழுதினேன்

அது விடாது.. :(

உவமானம் தப்பு விசுகு. ஏழரை சனியன்கூட ஏழரை வருடம்தான். ஆனால் இது நம்முடனேயே ஒட்டியிருக்கும் வாழ்நாள் முழுவதும். பார்த்துத்தான் ஏதாவது செய்ய வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழம் என்பது என்றுமே சாத்தியமானதாக இருந்ததில்லை, இருக்கப் போவதுமில்லை. இதற்குள் மறுபடியும் யதார்த்தத்தில் இருக்கும் சம்பந்தரையும் கனவுலகில் சஞ்சரிக்கச் சொல்கிறீர்களா?

இதை நீங்கள் என்ன ஆராய்ச்சிகளின் அடிப்படையில் சொல்லுறீங்க அண்ணாச்சி. உங்களால் முடியாதது.. அல்லது உங்கள் காலத்தில் முடியாதது எவ்வளவோ.. எதிர்காலத்தில் நிகழ உள்ளதே. அதையும் நீங்கள் மறுதலித்து விட்டு செத்துப்போயிடுவீர்கள். அதற்காக எவனும் முயற்சி இன்றி.. ஆராய்ச்சி இன்றி இருந்துவிடப் போவதில்லை. 

முயன்றால் தான் எதுவும் கிடைக்கும். வெட்டிக்கு இயலாது என்று கொண்டிருந்தால்... தமிழீழம் என்ன வயிற்றுக்கு சோறு கூடக் கிடைக்காது.  :icon_idea:  :D  :lol:

  • கருத்துக்கள உறவுகள்

எந்த குழப்பமுமில்லை இந்தியாவினை பகைத்துக்கொண்டு எந்த தீர்வையும் எட்டமுடியாது என்பதில் உள்ள தெளிவு.

அல்லது இந்தியாவை சுளித்து ஏதாவது செய்ய முடியுமா என்பதுதான் கேள்வி. காட்சியில் இல்லாதிருந்த‌ சீனா எவ்வாறு மூக்கை நுழைத்தது என்பதில் பதில் இருக்கிறது. அதை விரட்ட எவ்வளவு பாடுபடுகிறார்கள் என்பதும் தெளிவு. இப்போது சீனா தோற்றுவிட்டதா?

ஒரு சக்தி ஆட்டிப்படைக்கும்போது தீர்வு கிட்டாது. இரண்டு சக்திகள் வேண்டும். உப்பு சத்தியாகிரகம் நடத்திய காந்தியால் இந்தியாவுக்கு சுதந்திரம் கிட்டவில்லை (வரலாற்றுப் புத்தகங்களில் மட்டும்தான்

அவ்வாறு எழுதி வைத்துள்ளார்கள்.) ஆனால் இரண்டாம் உலகப்போர் சமயத்தில் ஜார்ஜ் வாஷிங்டன் எனும் அமெரிக்க ஜனாதிபதியின் ஏகாதிபத்திய கனவு பிரிட்டிஷ் சாம்ராஜ்யம் இந்திய துணைக்கண்டத்தை விட்டு விலகக் காரணமாயிற்று. அமெரிக்க எழுச்சி இல்லாவிட்டால் காந்தி தொடர்ந்தும் தலாய் லாமா நிலையில்தான் போராடியிருப்பார். :D

சூடானை இரண்டாக்கக் காரணம் சீன முதலீடுகள். அது பிடிக்காத மேற்கு நாடுகளின் தலையீட்டால் எண்ணை வளமில்லாத தெற்கு சூடான் பிரிக்கப்பட்டு சீனாவின் பக்கம் என்றாகிவிட்டது. இன்று உக்ரேனை கண்டதுண்டமாக பிரித்து மேய்கிறார்கள். இரண்டு சக்திகள் அங்கும் உண்டு.

இலங்கையிலும் இப்போது இரண்டு சக்திகள் உண்டு. ஒரு சீனா.. இரண்டாவது இந்தியா+மேற்கு. சீனாவை சும்மாவெல்லாம் விரட்டிவிட முடியாது. சிங்களத்தின் ஒரு தரப்பு அதை விரும்பாது. ஆகவே இன்று ஏற்பட்ட ஆட்சிமாற்றமும் அதனால் இந்தியா / மேற்கு அடைந்த வெற்றியும் தற்காலிகமானதே.

இவையெல்லாம் இப்படி இருக்க, ஒரு சக்தியால் ஆட்டிப்படைக்கப்பட்ட எமது நிலம் இன்று இரண்டு சக்திகள் மோதிக்கொள்ளும் களமாக உள்ளது. இதை நிறைவேற்றித் தந்தது எமது போராட்டமே. அது ஒரு நல்ல முடிவுக்கு வரும்.

விக்கி நல்லவரா சம்பந்தன் கெட்டவரா என்பதை விட்டு காணமல் போனவர்களை கண்டு பிடிக்க உருப்படியாக எதையாவது செய்யுங்கள் .

உண்மைதான் தலைப்புக்கு சம்பந்தமில்லாது நானும் கருத்திட்டுள்ளேன். ஞாபகப்படுத்தியதற்கு நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்

இப்பதான்.. விக்கி ஐயாவின் புலனாய்வுப் பிரிவு வேலையை ஆரம்பிச்சிருக்குது. :D  :lol:  என்ன.. இராணுவம் பிடிச்சவை உயிரோடு இருக்கினம் என்பது ஊருக்கே தெரியும். ஐயாவுக்கு இப்பதான் தெரிய வந்திருக்குது. எனி அவை எங்க எப்படி செருப்புத் துடைக்கினம்.. சப்பாத்து துடைக்கினம் என்று கண்டுபிடிக்கிறதுக்கிடையில.. இராணுவம் ஒவ்வொருத்தாரா கொன்று புதைச்சிடும். 

முதலில காணாமல் போய் உயிருடன் இருக்கக் கூடிய மக்களின் பெயரை வெளியிடுங்கோ. அப்பதான் அவைக்கு பாதுகாப்பு.. எங்க இருந்தாலும். 

சம்பந்தனை.. விக்கியை பிறகு புகழலாம். காணாமல் போன உறவுகள் திரும்பி வந்த பிறகு. அவையே புகழட்டும். அதுவரை வாலுகள் சுருண்டு இருப்பதே நல்லது.  :D  :lol:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

அரசியல் என்பது பற்றி விளங்க கொஞ்ச அரசியலாவது தெரியவேண்டும் .

அக புற காரணிகள் மாற நாமும் மாறித்தான் அரசியல் செய்யவேண்டும் .

அப்படியும் அறுதியிட்டுச் சொல்ல முடியாது..அக, புறக்காரணிகளுக்கேற்றவாறு மாறியும் பாலஸ்தீனம் தூரக்கனவாகவே இருக்கிறது.. முற்றுப்புள்ளியையடைய காலமும் கைகூட வேண்டும்.. அதுவரை இந்த சிரங்கு மாதிரி சொறிந்துகொண்டே இருக்க வேண்டியதுதான். :unsure:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.