Jump to content

திருநெல்வேலி சொதி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பொதுவாக புதுமண தம்பதியர்களுக்கு திருநெல்வேலி ஜில்லாவில் செய்து கொடுக்கப்படும் பிரபலமான ஒரு ரெசிபி தான் சொதி. இது மிகவும் வித்தியாசமான சுவையுடன் தேங்காய் பால் மற்றும் நிறைய காய்கறிகள் சேர்த்து செய்யப்படும். சொல்லப்போனால் இது ஒரு ஆரோக்கியமான சமையல் என்றும் சொல்லலாம். ஏனெனில் இதில் காய்கறிகளை அதிகம் சேர்த்து செய்வதால், இதில் சத்துக்கள் அதிகம் இருக்கும்.

 

சரி, இப்போது திருநெல்வேலி சொதி ரெசிபியை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

 

 
05-1425545918-tirunelveli-sodhi-recipe.j

 

தேவையான பொருட்கள்:

 

கேரட் - 1

உருளைக்கிழங்கு - 1

பீன்ஸ் - 10

பச்சை பட்டாணி - 1/4 கப்

கத்திரிக்காய் - 2

முருங்கைக்காய் - 1

வெங்காயம் - 2

இஞ்சி - 2 இன்ச்

பூண்டு - 5 பற்கள்

பச்சை மிளகாய் - 5

தேங்காய் - 1/2 மூடி (துருவியது)

பொட்டுக்கடலை - 1 டேபிள் ஸ்பூன்

மஞ்சள் தூள் - 1 சிட்டிகை

கறிவேப்பிலை - சிறிது

நல்லெண்ணெய்/தேங்காய் எண்ணெய் - 2 டீஸ்பூன் + 1/2 டீஸ்பூன்

கடுகு - 1/2 டீஸ்பூன்

வெந்தயம் - 1/4 டீஸ்பூன்

எலுமிச்சை சாறு - 2 டீஸ்பூன்

 

செய்முறை:

 

முதலில் அனைத்து காய்கறிகளையும் நறுக்கிக் கொள்ள வேண்டும்.

 

பின்னர் தேங்காயை மிக்ஸியில் போட்டு, தண்ணீர் சேர்த்து அரைத்து, 1 கப் தேங்காய் பால் எடுத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பின் மீண்டும் அதில் தண்ணீர் ஊற்றி, 1 கப் தேங்காய் பால் எடுத்துக் கொள்ள வேண்டும்.

 

பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பச்சை மிளகாய் சேர்த்து 1 நிமிடம் வதக்கி, தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

 

பிறகு அதில் இஞ்சி, பூண்டு, வெந்தயம் சேர்த்து தாளித்து, பின் அதில் வெங்காயத்தை சேர்த்து, பொன்னிறமாக வதக்க வேண்டும்.

 

பின் அதில் நறுக்கி வைத்துள்ள காய்கறிகள் அனைத்தையும் சேர்த்து 3-4 நிமிடம் நன்கு வதக்கி, மிஞ்சுள் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு பிரட்டி விட வேண்டும்.

 

அடுத்து அதில் 1 கப் தண்ணீர் ஊற்றி, இரண்டாவது தேங்காய் பாலை ஊற்றி, 10 நிமிடம் காய்கறிகளை மிதமான தீயில் வேக வைக்க வேண்டும்.

 

பின் வதக்கி வைத்துள்ள பச்சை மிளகாயை, பொட்டுக்கடலையுடன் சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி, பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.

 

காய்கறிகளானது நன்கு வெந்ததும், அதில் அரைத்து வைத்துள்ள பொட்டுக்கடலை பேஸ்ட் சேர்த்து, தீயை குறைத்து, முதல் தேங்காய் பாலை ஊற்றி, 1-2 நிமிடம் கொதிக்க விட வேண்டும்.

 

குழம்பானது கொதிக்க ஆரம்பித்ததும், அதனை இறக்கி, அதில் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.

 

இறுதியில் சிறு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1/2 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, குழம்புடன் சேர்த்தால், திருநெல்வேலி சொதி ரெடி!!!

 

 

http://tamil.boldsky.com/recipes/veg/tirunelveli-sodhi-recipe-007675.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நம்ம ஊர் சொதி மிகவும் இலகுவாக செய்யலாம் என்பது எனக்கும் தெரியும். இது நம்ம ஊர் பால்கறி போன்று இருக்கும் என நினைக்கின்றேன் யாராவது விரும்பினால் சமைத்து சுவைத்து பாருங்கள் .....  :D  :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அது தமிழகத்து திருநெல்வேலி ரசம்..!

அப்படியே ஈழத்து திருநெல்வேலிக்கு எடுத்துச் சென்றால் சொதி..!

இது தமிழனின் சதி! :)
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

'திருநெல்வேலி'..... நான் யாழ் திருநெல்வேலியைச் சொல்கிறேன். மீன் சமைத்தால் அன்று மீன்தலையில் சொதி கட்டாயம் இருக்கும், அதன் சுவையே தனி.  :)  :D  

 

சொதிக்கு ஆள் எழுப்பி என்றும் பெயருண்டு. "உண்டது போதும் எழுந்திரு" என்று சொல்லாமல் சொல்வதற்குச், சொதியை விட்டாலே போதும் உண்பவருக்கு விளங்கிவிடும்.  :(  :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இரசத்துக்கு மிளகு கட்டாயம் சேர்க்க வேண்டும். அதனுடன் பூண்டும் நிறையப் போடவேண்டும். ஒரு கொதியுடன் இறக்க வேண்டும்...!! :)

 

இது பாற்சொதி சுவையாய் இருக்கும்...!! :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

'திருநெல்வேலி'..... நான் யாழ் திருநெல்வேலியைச் சொல்கிறேன். மீன் சமைத்தால் அன்று மீன்தலையில் சொதி கட்டாயம் இருக்கும், அதன் சுவையே தனி. :):D

சொதிக்கு ஆள் எழுப்பி என்றும் பெயருண்டு. "உண்டது போதும் எழுந்திரு" என்று சொல்லாமல் சொல்வதற்குச், சொதியை விட்டாலே போதும் உண்பவருக்கு விளங்கிவிடும். :(:lol:

ஆமாம், வீட்டில் சோறு போதாவிடில், முதல் சேர்விங்குடன், 'சொதிய விட்டு சாப்பிடுங்க' எண்டால், அதோட எழும்ப வேண்டியது தான் எண்டு விளங்கும். :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எந்த இலைக்குச் சொதி வேணும்.....??

 

 

63466.gif                     37.jpg                                

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவளுகள் ஏற்கனவே நல்லா திருநெல்வேலி அல்வா குடுப்பதில் கெட்டிக்காரிகள், இப்ப வேற திருநெல்வேலி சொதி வந்திச்சா, செலவில்லாம சிம்பிளா ஊத்திவிட்டுப் போயிடுவாளுகள். இனி அல்வா குடுக்குறது மட்டுமில்லை சொதி ஊத்திறதும் நடக்கும்!

Link to comment
Share on other sites

சொதி என்றாலே வாயூறும். இணைப்பிற்கு நன்றி தமிழரசு.

 

என்ன இருந்தாலும் திரளிமீன் சொதியை வெல்ல முடியாது. வெள்ளை இடியப்பத்துடன் திரளிமீன் சொதியைச் சேர்த்தால் சொர்க்கத்துக்கே சென்று வரலாம்.  :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

 

 
05-1425545918-tirunelveli-sodhi-recipe.j

 

தேவையான பொருட்கள்:

 

கேரட் - 1

உருளைக்கிழங்கு - 1

பீன்ஸ் - 10

பச்சை பட்டாணி - 1/4 கப்

கத்திரிக்காய் - 2

முருங்கைக்காய் - 1

வெங்காயம் - 2

இஞ்சி - 2 இன்ச்

பூண்டு - 5 பற்கள்

பச்சை மிளகாய் - 5

தேங்காய் - 1/2 மூடி (துருவியது)

பொட்டுக்கடலை - 1 டேபிள் ஸ்பூன்

மஞ்சள் தூள் - 1 சிட்டிகை

கறிவேப்பிலை - சிறிது

நல்லெண்ணெய்/தேங்காய் எண்ணெய் - 2 டீஸ்பூன் + 1/2 டீஸ்பூன்

கடுகு - 1/2 டீஸ்பூன்

வெந்தயம் - 1/4 டீஸ்பூன்

எலுமிச்சை சாறு - 2 டீஸ்பூன்

 

இதை... நம்மூரிலை, சாம்பார் என்று சொல்வார்கள்.

சிலோன் சொதியை மட்டுமல்ல, எந்த ஒரு கறி வகைகளையும் தமிழக தமிழரால் சுவையாக செய்ய முடியாது என்பது தான் உண்மை.

 

அவர்களுக்கு... இட்லி மட்டும் தான்... மல்லிகைப் பூவை போல செய்யத் தெரியும். :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

... எந்த ஒரு கறி வகைகளையும் தமிழக தமிழரால் சுவையாக செய்ய முடியாது என்பது தான் உண்மை. :D

 

ஆதாரம்..? :o:)

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆதாரம்..? :o:)

 

 

சொந்த அனுபவம். :D 

முன்பு.. தமிழ் நாட்டு, உணவு விடுதிகளில் சாப்பிட்டு... நாக்கு செத்து விட்டது..

எல்லாவற்றுக்கும் கடலை எண்ணையை... சேர்ப்பதால், அந்த வாசனை எனக்கு பிடிக்கவில்லை. :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

...

எல்லாவற்றுக்கும் கடலை எண்ணையை... சேர்ப்பதால், அந்த வாசனை எனக்கு பிடிக்கவில்லை. :)

 

மனசிலாயி..! ஆ.., எந்தா சேட்டா.. தேங்கா ஊனு கழிஞ்ஞோ..? :o

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எந்த ஒரு கறி வகைகளையும் தமிழக தமிழரால் சுவையாக செய்ய முடியாது என்பது தான் உண்மை.

 

ஆதாரம்..? :o:)

 

 

புளி புளிக்கும். உப்பு கைக்கும். இரண்டும் உணவில் சேரும்போது அதன் சுவை......... ஆகா !!  :)
 
தமிழ்சிறி சாடல். ராசவன்னியர் தேடல். ஒருவர் ஈழம் மற்றவர் தமிழகம். இருவரும் தமிழில் சேரும்போது அதன் சுவை......... ஆகா ஆகா !!!  :wub:

 

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ராசவன்னியர்,

சிறியர் சொல்வது சரிதான்.

இலங்கையர்கள், கறி வகைகளில் மிளகாயினை அறிமுகப்படுத்தி பெரும் கறிப்புரட்சி செய்த போர்த்துக்கேயர், பின்னர் ஒல்லாந்தர் ஆட்சிக்கு உட்பட்டவர்கள்.

தமிழ்நாட்டில் கறிப்புரட்சி செய்தவர்கள். பிராமணர்களும், செட்டிநாட்டவர்களும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

..சொதிக்கு ஆள் எழுப்பி என்றும் பெயருண்டு. "உண்டது போதும் எழுந்திரு" என்று சொல்லாமல் சொல்வதற்குச், சொதியை விட்டாலே போதும் உண்பவருக்கு விளங்கிவிடும்.  :(  :lol:

 

விருந்தோம்பலுக்கு பெயர்போன தமிழர் வழக்கத்தில் இப்படியுமா..? தமிழகத்தில் இப்படியெல்லாம் இல்லை..Thank god..! :o

இனிமேல் யாராவது ஈழத்தமிழர் வீட்டிற்குச் சென்றால், உணவு வகைகளில் சொதி இல்லைதானேயென உறுதிபடுத்துவதில் அவதானமாக இருப்பேன். :)

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சொந்த அனுபவம். :D 

முன்பு.. தமிழ் நாட்டு, உணவு விடுதிகளில் சாப்பிட்டு... நாக்கு செத்து விட்டது..

எல்லாவற்றுக்கும் கடலை எண்ணையை... சேர்ப்பதால், அந்த வாசனை எனக்கு பிடிக்கவில்லை. :)

 

நீங்கள் எந்தக்காலத்தில் இருக்கிறீர்கள்?

 

கடலை எண்ணை போய், இப்பொழுது சூரியகாந்தி ரிபைன்டு ஆயில், நல்லெண்ணை என மாறிவிட்டது.. ஆனால் நீங்கள் தான் தலைக்கு தடவும் தேங்காய் எண்ணையை பயன்படுத்தி உடலில் கொழுப்பை ஏற்றுகிறீர்கள்.. :o

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

புளி புளிக்கும். உப்பு கைக்கும். இரண்டும் உணவில் சேரும்போது அதன் சுவை......... ஆகா !!  :)
 
தமிழ்சிறி சாடல். ராசவன்னியர் தேடல். ஒருவர் ஈழம் மற்றவர் தமிழகம். இருவரும் தமிழில் சேரும்போது அதன் சுவை......... ஆகா ஆகா !!!  :wub:

 

பாஞ்ச் 'பஞ்சாயத்து தலைவராக' இருக்க வேண்டியவர்..! (பச்சை முடிஞ்சது).

Link to comment
Share on other sites

சொதியை விட்டு ஆட்களை எழுப்பும் கதை இன்றைக்குத்தான் கேள்விப்படுகிறேன்.. என்ன இருந்தாலும் விருந்தோம்பலுக்கு தமிழகம், நிழலி வீடு, விவசாயி விக் பண்ணைதான்.. :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எமது உணவு வகைகளில் காரம் அதிகமாய் இருக்கும். உறைப்பு இல்லையென்டால் எங்களுக்கு இறங்காது. மூண்டுவயதுக் குழந்தைகள் கூட கண்ணில் நீர் வடிய மூக்கில் சளி ஒழுக மூக்கை உறிஞ்சிக்கொண்டு குழம்புச் சாதத்ததொரு வெட்டு வெட்டுவதை சாதாரணமாய் வீடுகளில் காணலாம்...! :rolleyes::)

 

தமிழகத்தோர், மலையாளிகள் மிளகாய்த் தூளைக் கண்டாலே கண்ணில் நீர் விடுவார்கள்...!!  :)  :D

Link to comment
Share on other sites

நீங்கள் எந்தக்காலத்தில் இருக்கிறீர்கள்?

 

கடலை எண்ணை போய், இப்பொழுது சூரியகாந்தி ரிபைன்டு ஆயில், நல்லெண்ணை என மாறிவிட்டது.. ஆனால் நீங்கள் தான் தலைக்கு தடவும் தேங்காய் எண்ணையை பயன்படுத்தி உடலில் கொழுப்பை ஏற்றுகிறீர்கள்.. :o

 

 

சார்.. மேனாட்டுக்காரங்க வெஜிடபிள் ஓயில விற்பதற்காக தேங்காய் எண்ணை கொழுப்பு கூடாதென சொன்னாங்க.. தற்போது தேஙாய் என்ணெய் நல்லதென சொல்லியிருக்காங்க.. http://coconutoil.com

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் எந்தக்காலத்தில் இருக்கிறீர்கள்?

 

கடலை எண்ணை போய், இப்பொழுது சூரியகாந்தி ரிபைன்டு ஆயில், நல்லெண்ணை என மாறிவிட்டது.. ஆனால் நீங்கள் தான் தலைக்கு தடவும் தேங்காய் எண்ணையை பயன்படுத்தி உடலில் கொழுப்பை ஏற்றுகிறீர்கள்.. :o

 

 

கொழுப்பைக் குறைக்கும் உணவுகள்.
 
கொழுப்பைக் குறைப்பதற்கு இயற்கையான வழிகள் பலவும் உள்ளன. பூண்டு, வெங்காயம், இஞ்சி, சிவப்பு, மிளகு, தக்காளி, மற்றும் இலவங்கப்பட்டை , கடுகு, கிராம்பு ஆகியவையும் கொழுப்பைக் கரைக்க உதவுகின்றன. 
 
சிறிது கிராம்பு, பச்சைப் பூண்டு சிறிது இஞ்சி ஆகியவற்ரைக் கலந்து தினமும் காலை சாப்பிட்டு வந்தால் கொழுப்பை நிச்சயம் கரைக்க முடியும். 
 
வெதுவெதுப்பான தண்ணீரில் கொஞ்சம் எலுமிச்சைச் சாறு, தேன் கலந்துகாலையில் வெறுவயிற்றில் அருந்துவதும் மிகப்பிரபலமான உடல் எடையைக் குறைக்கும் வழியாகப் பின்பற்றப்படுகிறது. 
 
கெட்ட, தேவையற்ற கொழுப்புக்களை குறைக்கும் முயற்சியில் ஆரோக்கியமான கொழுப்பு வகைகளைப் புறம் தள்ளிவிடக் கூடாது. 
 
நல்ல கொழுப்பு வகைகளான தேங்காய்நெய், வெண்ணை, ஆலிவ், ஆகியவற்றை சேர்த்துக் கொள்ளுதல் வேண்டும்.    
 
பாட்டி வைத்தியம்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

...
நல்ல கொழுப்பு வகைகளான தேங்காய்நெய், வெண்ணை, ஆலிவ், ஆகியவற்றை சேர்த்துக் கொள்ளுதல் வேண்டும்.    
 
பாட்டி வைத்தியம்

 

தேங்காய் எண்ணெய் கொழுப்பா, இல்லையா? இதில நல்ல கொழுப்பு கெட்ட கொழுப்பு வேறையா?

 

இது எந்த ஊரு 'யூஸ்லெஸ்' பாட்டி? மலையாள பார்டியா ? ராங்கா பேசுது! :lol:

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் எந்தக்காலத்தில் இருக்கிறீர்கள்?

 

கடலை எண்ணை போய், இப்பொழுது சூரியகாந்தி ரிபைன்டு ஆயில், நல்லெண்ணை என மாறிவிட்டது.. ஆனால் நீங்கள் தான் தலைக்கு தடவும் தேங்காய் எண்ணையை பயன்படுத்தி உடலில் கொழுப்பை ஏற்றுகிறீர்கள்.. :o

 

 

வன்னியன் சார்... நான் தமிழ்நாட்டுக்குப் போனது,

சென்ற நூற்றாண்டு,  நைன்டீன் எய்ட்டி சிக்ஸ் (1986)

இப்ப.. நீங்க சொல்லுற கதை... ரூ தவுசன்ட் பிப்டீன் (2015)

அதற்கு இடையில்.... மாற்றங்கள், நிகழ்ந்து இருக்கலாம்.. என்பதை மறுக்கவில்லை.

ஆனால்... தமிழ்நாட்டு சமையல் குறிப்புக்களில் இன்றும்... இரண்டு தக்காளியும், மஞ்சள் தூளும் இல்லாத சமையலே இல்லை. என்பதை, நீங்க ஒத்துக் கொள்கிறீர்களா? :D  

 

ஆங்... கேட்க மறந்துட்டேன், பாமாயில் என்றால்... என்ன அண்ணா? :icon_idea:

Link to comment
Share on other sites

Palm Oil. :D

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.