Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

திருமணத்துக்கு முன்...கவனிக்க வேண்டிய 10 ஃபைனான்ஷியல் டிப்ஸ்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இது இந்தியர்களுக்கான கட்டுரை எனிலும் பல விடயங்கள் சர்வதேச எல்லைக் கோடுகளை தாண்டியும் பொருந்துகின்றன என்பதால் இணைக்கின்றேன்

 

 

-------------------------------

 

 

ஆறு மாத பணக் கையிருப்பு அவசியம்!

திருமணத் தேதி குறித்தவுடனே ஆறு மாதங்களுக்குத் தேவையான குடும்பச் செலவு எவ்வளவு என்பதைத் தோராயமாகக் கணக்கிட்டு, அதற்குத் தேவையான பணத்தைச் சேமித்து வைத்திருக்க வேண்டும். இந்தப் பணத்தைக் கடனாக வாங்கக் கூடாது. திருமணத்துக்குப்பின் ஏற்படும் அவசர கால செலவுக்கு இந்த சேமிப்பு நிச்சயம் உதவும்.

p31a.jpg

ஆயுள் காப்பீடு அவசியம்!

திருமணத்துக்கு முன்பே ஆண், பெண் இருபாலருக்கும் அவர்களது வருமானத்துக்கு ஏற்ற ஆயுள் காப்பீட்டை எடுத்துக் கொள்வது அவசியம். ஆயுள் காப்பீட்டுத் திட்டங்களில் கட்டப்படும் பிரீமியம் ஒருவரது  வருமானத்துக்கு ஏற்றவாறு இருக்க வேண்டியது அவசியம்.

கிரெடிட் கார்டு பயன்பாட்டில் கவனம் தேவை!

திருமணமானவுடன் புதுப் பெண்டாட்டியை அசத்த பலரும் வேண்டிய, வேண்டாத பொருட்கள் என்றுகூட பார்க்காமல் கிரெடிட் கார்டை பயன்படுத்தி வாங்கித் தள்ளுவார்கள். கிரெடிட் கார்டு பயன்படுத்தி அதில் உள்ள கடன் வரம்பை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்வது தவறு. நம்மை அறியாமல் பெறும் இந்த கிரெடிட் கார்டு கடன், பிற்பாடு மிகப் பெரிய சுமையாக மாறிவிடும் என்பதால் கிரெடிட் கார்டை பயன்படுத்திப் பொருட்களை வாங்கிக் குவிப்பதில் கடன் வரம்பை மீறாமல் இருப்பது அவசியம்.

திருமணச் செலவுக்கு பெர்சனல் லோன் வேண்டாமே!

திருமணம் முடிவானதும் நண்பர்களுக்கு பார்ட்டி தருவதில் ஆரம்பித்து பலவிதமான செலவுகளை சமாளிக்க பலரும் நாடுவது  பெர்சனல் லோனைத்தான். பெர்சனல் லோன் வாங்கி இந்தச் செலவுகளை சமாளிக்க நினைப்பது பெரும் தவறு. பெர்சனல் லோன்கள் அவசரத்துக்கு உதவியாக இருக்கும் என்றாலும் பிற்பாடு அதுவே பெரும்சுமையாக மாறிவிடும். இந்தக் கடனை சமாளிக்க வெளியில் கடன் வாங்கி இரண்டுக்கும் வட்டி கட்டும் சூழல் ஏற்படும். இதனைத் தவிர்க்க, வேலை கிடைத்த நாளில் இருந்தே திருமணத்துக்கு என நல்ல வருமானம் தரும் முதலீட்டில் சேமித்தால் அடுத்த நான்கு வருடங்களில் ஒரு நல்ல தொகை கையில் இருக்கும்.

p31b.jpgதிருமணச் செலவுகளைக் குறையுங்கள்!

திருமணம் என்பது ஒருவருக்கு வாழ்க்கையில் ஒருமுறை நடப்பதுதான். அதனை சிறப்பாக செய்யவேண்டும் என்று நினைப்பதில் தவறில்லை. அதற்காக எக்கச்சக்கமாக செலவு செய்யவேண்டும் என்பதில்லை.   2 - 3 லட்சங்களில் செய்யவேண்டிய ஒரு  செலவை 5 - 6 லட்சத்துக்குக் கொண்டு செல்வதைக் குறைக்கலாம். திருமணச் செலவைக் குறைப்பதன் மூலம் திருமணத்துக்குப்பின் நிதி தொடர்பான சிக்கல் எழாமல் இருக்க உதவும்.

இஎம்ஐல் கவனம் தேவை!

திருமணமானவுடன் வாகனக் கடன், வீட்டுக் கடன் என வாங்கிக் குவித்துவிட்டு, இஎம்ஐயில் எளிதாகக் கட்டலாம் என பலரும் நினைக்கிறார்கள்.  இஎம்ஐல் கடனைத் திரும்பக் கட்டுவது   தனியாளாக இருக்கும் வரை எளிது. ஆனால், திருமணம், குடும்பம் என்று ஆகிவிட்டால், அது சுமையாக மாறிவிடும். காரணம், மாதச் செலவுகளில் பெரும் தொகையை இஎம்ஐ கடன்கள் ஆக்கிரமித்துவிடும். அதனால் குடும்ப செலவுகளைச் சமாளிக்க முடியாத நிலை உருவாகும். உங்கள் வருமானத்தில் இஎம்ஐயானது 10 - 15 சதவிகிதத்துக்குள் இருந்தால் நல்லது.  

பிபிஎஃப்ல் சேமியுங்கள்!

பிபிஎஃப் போன்ற நீண்ட கால முதலீடுகளில் சேமிப்பை ஏற்படுத்துவது உங்களுக்குத் திருமண நேரத்தில் உதவியாக இருக்கும். வேலைக்குச் சேர்ந்ததிலிருந்து ஆறு வருடங்களில் ஒருவருக்குத் திருமணம் ஆகிறது எனில், பிபிஎஃப்ல் சேமித்த தொகை மிகப் பெரிய உதவியாக இருக்கும். எனவே, பிபிஎஃப் போன்ற நீண்ட கால முதலீட்டை அவசியம் செய்யுங்கள்.

முன்கூட்டியே திட்டமிடுங்கள்!

21 வயதில் வேலைக்குச் சேர்ந்தாலும், ஆண், பெண் இருவருக்குமே 25 அல்லது 26 வயதில் திருமணம்  ஆகிறது எனக் கொண்டால், இடையே நான்கு முதல் ஐந்து ஆண்டுகள் உள்ளன. இந்த நான்கு ஆண்டுகளில் நீங்கள் சராசரியாக ஆண்டுக்கு 3,00,000 ரூபாய்ச் சம்பாதிப்பவர் எனில், உங்கள் அத்தியாவசியமான செலவுகள் அனைத்தும் போக மாதமொன்றுக்கு 5,000 ரூபாயை ஒருவரால்  சேமிக்க முடிந்தால், ஐந்து வருடங்களில் அவரிடம்  3 லட்சம் ரூபாய்க்கு மேல் இருக்கும். திட்டமிட்டு சேமிப்பதன் மூலமே இது சாத்தியம்.

p32a.jpg

இம்பல்ஸிவ் பர்ச்சேஸை குறையுங்கள்!

திருமணமானவுடன் மனைவி கேட்டதை எல்லாம் வாங்கித் தரவேண்டும் என்று நினைக்கத் தோன்றும். இதில் எந்தத் தவறும் இல்லை என்றாலும் சம்பளம் கிடைத்தவுடன் அடிக்கடி மால்களுக்கு விசிட் செய்து, ஒரு பொருளை பார்த்தவுடன் வாங்க விரும்பும் இம்பல்சிவ் மனநிலை அதிகரிப்பதால், நிதி நிர்வாகம் கடுமையாகப் பாதிப்படையும். ஆன்லைனில் பொருட்களை வாங்குவது துவங்கி ஷாப்பிங், சினிமா எனப் பட்டியல் நீளும். திருமணத்துக்குமுன் இவை உங்களுக்கு ஒரு பெரிய விஷயமாகத் தெரியாவிட்டாலும், திருமணத்துக்குப்பின் இவை சிரமம் தரும் என்பதால் முடிந்த அளவுக்கு இந்த இம்பல்ஸ் பர்சேஸை குறைத்தால் உங்கள் நிதிப் பிரச்னை குறையும்.

புதிய நிதி சூழலுக்குத் தயாராகுங்கள்!

இன்று பெரும்பாலானோர் வெளியில் தங்கி வேலை பார்ப்பவர்களாக இருப்பீர்கள். அப்போது நீங்கள் தங்கும் இடத்துக்கான வாடகை துவங்கி உணவு வரை நண்பர்களுடன் பகிர்ந்துகொள்வது என்ற நிதி சூழலில்தான் இருந்திருப்பீர்கள். தற்போது திருமணம் ஆனவுடன் தனி வீடு, உணவுக்கான பொருட்கள், வீட்டு உபயோக பொருட்கள் எனத் தொடங்கி அனைத்துக்கும் நீங்களே செலவு செய்யும் சூழல் உருவாகும். அப்படி உருவாகும்போது அந்த நிதிச் சூழலில் உங்களது சம்பளத்தில் இருந்து பங்களிப்பு அதிகமாகும். அதனைச் சமாளிக்கும் விதமாக உங்கள் சம்பளமும் அதில் நீங்கள் செய்யும் செலவு களும் இருக்க வேண்டும். இதனைச் சமாளித்தால் உங்கள் நிதிச் சூழல் சிறப்பாக அமையும்.

ராதாகிருஷ்ணன், நிதி ஆலோசகர்

 

 

http://www.vikatan.com/article.php?module=magazine&aid=104320

  • கருத்துக்கள உறவுகள்

இப்படிப்பார்த்திருந்தால்....

இப்பவும்

ஏன்

இனியும் எனக்கு திருமணம் நடந்திருக்காது....... :o

  • கருத்துக்கள உறவுகள்

திருமணமான முதல் ஒருவருட காலம், மிக மிக இனிமையான நாட்களாக அமையும்.. இன்றும் அந்த இனிமையான நாட்களின் சுவை மனதிலாடுகிறது! :)

 

முன்னர் அறியாத உள்ளங்கள், காதலாலும், அன்பினாலும் இருவருமே பரஸ்பரம் விட்டுக்கொடுப்புகளுக்கு மனதை தயார் செய்து அடுத்து வரும் நீண்ட வாழ்க்கை இணைப்பிற்கு அடித்தளம், உரமிடும் காலம்.. அந்த நேரம் கஞ்சம், கருமித்தனம் பார்த்தால் 'தி ஸ்வீடெஸ்ட் & திரில்லிங் பீரியட்' என்றும் பின்னர் தம்பதிகளுக்கு கிட்டப்போவதில்லை..! :o:lol::rolleyes:

 

வாழ்க்கை அடித்தளத்திற்கு செலவு செய்வதில் தவறில்லை.

 

  • கருத்துக்கள உறவுகள்

அவரவர் பொருட்களை செலவுகளை அவரவரே பார்த்துக் கொள்ளனுன்னு சொல்லிட்டா.. பிரச்சனை முடிஞ்சுது. இதில போய் எங்க காசுக்கு நாங்களே திட்டமிட்டு.. செலவு வைக்கப்பட்டாது. பொண்ணுங்க ஓசில சீவியம் நடத்த அனுமதிக்கவே கூடாது. ஆண்கள்.. உழைச்சு அவங்களுக்கு (பொண்ணுங்களுக்கு) உதவி செய்த காலம்.. போயாச்சு. அவங்க உழைச்சு தங்களுக்கு செலவு செய்து.. வாழிற காலம் வந்தாச்சு. என் உழைப்பு எனக்கு சொந்தம். அதை பங்கிட திருமணம் என்ற பெயரில்.. ஒரு குரங்கு அப்பத்தில் பங்கு கேட்க அனுமதிக்க முடியுமா என்ன..?!  :D  :icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

திருமணம் என்னும் கோட்டைக்குள்

 

உள்ளே இருப்பவன் வெளியே வர விரும்புகிறான்.

 

வெளியே இருப்பவன் உள்ளே போக விரும்புகிறான்.

 

திருமணம் என்னும் கோட்டைக்குள்

 

உள்ளே இருப்பவன் வெளியே வர விரும்புகிறான்.

 

வெளியே இருப்பவன் உள்ளே போக விரும்புகிறான்.

மாம்ஸ் உங்களை பார்த்தால் உள்ளேயும் இல்லை வெளியேயும் இல்லை 
இரண்டும் கெட்டான் நிலை போல இருக்கு  :D  :lol:  :icon_idea:

அவரவர் பொருட்களை செலவுகளை அவரவரே பார்த்துக் கொள்ளனுன்னு சொல்லிட்டா.. பிரச்சனை முடிஞ்சுது. இதில போய் எங்க காசுக்கு நாங்களே திட்டமிட்டு.. செலவு வைக்கப்பட்டாது. பொண்ணுங்க ஓசில சீவியம் நடத்த அனுமதிக்கவே கூடாது. ஆண்கள்.. உழைச்சு அவங்களுக்கு (பொண்ணுங்களுக்கு) உதவி செய்த காலம்.. போயாச்சு. அவங்க உழைச்சு தங்களுக்கு செலவு செய்து.. வாழிற காலம் வந்தாச்சு. என் உழைப்பு எனக்கு சொந்தம். அதை பங்கிட திருமணம் என்ற பெயரில்.. ஒரு குரங்கு அப்பத்தில் பங்கு கேட்க அனுமதிக்க முடியுமா என்ன..?!  :D  :icon_idea:

சபாஷ் நெடுக்கர் சூப்பர். :D 
ஆண் பெண் சமத்துவம்  கதைக்கிற பாரதியின் புதுமை பெண்கள் இதை கவனத்தில் 
எடுக்க வேண்டும். :lol:
 
திருமண செலவை குறைக்க ஒரு சூப்பர் வழி டாவு செட் ஆனதும் கொண்டு ஓட வேண்டியான்:o
திருமண செலவு பாட்டி செலவு மிச்சம்.  :D
திருமணத்திற்கு முன்னர் நிதி நிலைமையை தவிர வேறை என்னென்ன முக்கியவிடயங்கள் கவனிக்க வேண்டுமென்று 
யாழில் அனுபவம் மிக்க மகானுபாவர்கள் வந்து எழுதினால் நிறைய பேருக்கு பயன் உள்ளதாக அமையும்.  :D

Edited by seeman

  • கருத்துக்கள உறவுகள்

 

திருமணத்திற்கு முன்னர் நிதி நிலைமையை தவிர வேறை என்னென்ன முக்கியவிடயங்கள் கவனிக்க வேண்டுமென்று 
யாழில் அனுபவம் மிக்க மகானுபாவர்கள் வந்து எழுதினால் நிறைய பேருக்கு பயன் உள்ளதாக அமையும்.  :D

 

மனமும், உடலும் ஒருங்கிணைத்து குறையில்லாமல் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். தீய பழக்க, வழக்கங்களை, சேர்க்கைகளை அறவோடு ஒழிக்க வேண்டும்.

புது வசந்தத்தை வரவேற்க தயாராக இருக்கவேண்டும்.. மனதில் ஆயிரம் பட்டாம் பூச்சிகள் பறக்கும்.. உலகமே இனிமையாக தோன்றும்..

 

Enjoy ! :)

  • கருத்துக்கள உறவுகள்

 

திருமணத்திற்கு முன்னர் நிதி நிலைமையை தவிர வேறை என்னென்ன முக்கியவிடயங்கள் கவனிக்க வேண்டுமென்று 
யாழில் அனுபவம் மிக்க மகானுபாவர்கள் வந்து எழுதினால் நிறைய பேருக்கு பயன் உள்ளதாக அமையும்.  :D

 

 

கூச்சம்... அறவே, இருக்கப் படாது. :lol:

இப்படி எல்லா படிமுறைகளையும் தாண்டி வர, காசு இருக்கும், வயசு வாலிபம் இரண்டும் போய்விடும். அப்புறம் கலியாணம் கட்டி என்னத்தை கட்டாமல் விட்டு என்னத்தை.... :icon_idea:  :D 

லேகியம் வியாபாரிகுதான் கொண்டாடம் ..... :rolleyes:  :rolleyes:  :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

ஒருத்தர் மீது ஒருத்தர் நம்பிக்கையும், விட்டிக் கொடுத்தலும் , வாரம் ஒருமுறையாவது வெளியேபோய் பூங்காவொ, கடற்கரையோ, காடோ சிறு உணவுகளுடன் போய் பலதும் பத்தும் (வீ. பிரச்சனைகள் தவிர) கதைத்து, கொஞ்சம் சைட் அடித்து பொய் கோபத்தை ரசித்து வர செலவின்றி இல்லறம் சிறக்கும்....! :rolleyes:  :D

 

அட ! இது நல்லாயிருக்கே...! இந்த வாரத்தில் இருந்து நானும் இதை பாலோ பண்ண வேண்டும்...!!! :lol::D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.