Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நிபந்தனைகளுடன் பிணையில் விடுவிக்கப்பட்டார் ஜெயக்குமாரி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

குற்றச்சாட்டுக்கள் எவையும் சுமத்தப்படாமல் கடந்த ஒரு வருட காலமாக தடுத்து வைக்கப்பட்டிருந்த பாலேந்திரன் ஜெயக்குமாரி நிபந்தனைகளுடன் இன்று பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டார். நாட்டை விட்டு வெளியேறக்கூடாது. ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை தான் வசிக்கும் பிரதேசத்தில் உள்ள பொலிஸ் நிலையத்திற்குச் சென்று ஒப்பமிடவேண்டும்.

எதிர்வரும் ஜூலை மாதம் 7ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகவேண்டும் ஆகிய நிபந்தனைகளுடன் கொழும்பு நீதிவான் நீதிமன்றம் அவரை இன்று பிணையில் விடுவித்தது. விடுதலைப் புலிகள் உறுப்பினர்கள் சிலருக்கு புகலிடம் வழங்கினார் என்று குற்றஞ்சாட்டப்பட்டு கடந்த ஒரு வருடத்திற்கு முன்னர் ஜெயக்குமாரிரை பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு பொலிஸார் கைதுசெய்திருந்தனர்.

விசாரணைகளின் பின்னர் அவர் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் ஜெயக்குமாரிக்குப் பிணை வழங்குமாறு கடந்த 6ஆம் திகதி கொழும்பு நீதிவான் நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை விசாரித்த நீதிவான் மார்ச் 10ஆம் திகதிக்கு வழக்கை ஒத்திவைத்தார்.

அத்துடன் பிணை மனுத் தொடர்பில் சட்டமா அதிபரின் அறிக்கையை எழுத்துமூலம் சமர்ப்பிக்குமாறும் உத்தரவிட்டார். அந்த மனு மீதான சட்டமா அதிபரின் அறிக்கை இன்று பரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டு ஜெயகுமாரியை நீதிவான் பிணையில் விடுவித்தார்.

இதேவேளை ஜெயக்குமாரின் மகள் விபூசிகா நீதிமன்ற உத்தரவுக்கமைய கிளிநொச்சி ஜெயந்திநகரிலுள்ள சைவச் சிறுவர் இல்லத்தில் பராமரிக்கப்பட்டு வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

jeyakumari2-600x337.jpg

jeyakumari-450x600.jpg

செய்தி மூலம் - http://www.tamilcnnlk.com/archives/353119.html

  • Replies 108
  • Views 5.6k
  • Created
  • Last Reply

yafgggggggg8578578578.jpg

குற்றச்சாட்டுக்கள் எவையும் சுமத்தப்படாமல் கடந்த ஒரு வருட காலமாக தடுத்து வைக்கப்பட்டிருந்த பாலேந்திரன் ஜெயக்குமாரி நிபந்தனைகளுடன் இன்று பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டார்.
 
நாட்டை விட்டு வெளியேறக்கூடாது. ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை தான் வசிக்கும் பிரதேசத்தில் உள்ள பொலிஸ் நிலையத்திற்குச் சென்று ஒப்பமிடவேண்டும். எதிர்வரும் ஜூலை மாதம் 7ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகவேண்டும் ஆகிய நிபந்தனைகளுடன் கொழும்பு நீதிவான் நீதிமன்றம் அவரை இன்று பிணையில் விடுவித்தது.
 
விடுதலைப் புலிகள் உறுப்பினர்கள் சிலருக்கு புகலிடம் வழங்கினார் என்று குற்றஞ்சாட்டப்பட்டு கடந்த ஒரு வருடத்திற்கு முன்னர் ஜெயக்குமாரிரை பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு பொலிஸார் கைதுசெய்திருந்தனர். விசாரணைகளின் பின்னர் அவர் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.
 
இந்த நிலையில் ஜெயக்குமாரிக்குப் பிணை வழங்குமாறு கடந்த 6ஆம் திகதி கொழும்பு நீதிவான் நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை விசாரித்த நீதிவான் மார்ச் 10ஆம் திகதிக்கு வழக்கை ஒத்திவைத்தார். அத்துடன் பிணை மனுத் தொடர்பில் சட்டமா அதிபரின் அறிக்கையை எழுத்துமூலம் சமர்ப்பிக்குமாறும் உத்தரவிட்டார்.
 
அந்த மனு மீதான சட்டமா அதிபரின் அறிக்கை இன்று பரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டு ஜெயகுமாரியை நீதிவான் பிணையில் விடுவித்தார். இதேவேளை ஜெயக்குமாரின் மகள் விபூசிகா நீதிமன்ற உத்தரவுக்கமைய கிளிநொச்சி ஜெயந்திநகரிலுள்ள சைவச் சிறுவர் இல்லத்தில் பராமரிக்கப்பட்டு வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. -
 
  • கருத்துக்கள உறவுகள்

மேற்கு நாடுகள் மற்றும் ஐநா அமைப்புகள் போன்றவற்றின் கையாலாகாத்தனமும் பக்கச்சார்பான தமது பொருண்மியச் சந்தைக்கான கொள்ளைகைக்கும் கூட்டுக் கொள்ளைக்கான நாடுதேடலின் விளைவே உரிமைகள் மறுக்கப்படுதலும் உரிமைகளைக் கேட்போர் கொல்லப்படுவதற்குமான கரணியமாகும். எனவே இந்த வேடதாரர்களான மேற்குநாடுகள் மனிதஉரிமையை தமது வர்த்தகப்பாதுகாப்புக்கவசமாக அணிவதை விடுத்து மக்களைக் காக்கும் கவசமாக மாற்றிட முன்வருவதொன்றோ இதுபோன்ற அவலங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க உதவும். 

  • கருத்துக்கள உறவுகள்

போகும் போது தமிழிச்சியா போனா... வரும் போது பன்சல போய் வரும் சிங்களத்தி போல மாத்தி அனுப்பிட்டாங்க. புலிகள் செய்தால்.. மூளைச்சலவை..  அதையே சிங்களவன் செய்தால்.. புனர்வாழ்வு. நல்ல உலகம்.  :rolleyes:  :icon_idea:

எதுஎப்படியோ.. அந்தச் சிறுமியின் தாய் மீண்டதை இட்டு மகிழ்வோம்.  :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

விடுதலையான மற்றயவர்களின் விபரம் .

1. Mahalingam Padmawathi (64 years old)
2. Raveendran Mathani
3. Loganathan Maheshwary
4. Rekan Subani
5. Sasikaran Thangamalar
6. Arunachalam  Pirabakaran
7. Muthulingam Kajavarman
8. Krishnaraj Suthakaran

மே 18க்கு முதல் சந்தேகத்தில் சிங்கள பகுதிகளில் பிடிக்கபட்ட தமிழருக்கு விடிவு எப்போது ?

Edited by பெருமாள்

  • கருத்துக்கள உறவுகள்

மகிழ்சியான விடயம்.

ஒரு வருடம் சிறையில் இருந்து வரும் ஒரு பெண் சீலை கட்டி இருக்கிறாவா இல்லை ஸ்கேர்ட் போட்டிருக்கிறாவா என்று விண்ணானம் கதைக்கும் அளவில்தான் இருக்கு புலயாவாரிகளின் சிந்தனை.

இவவின் விடுதலைக்கு பல சிங்களவர்கள் வேலை செய்தார்கள் என்பதை மறுக்கவியலாது.

மகிந்தவின் தோல்வி இல்லாதிருந்தால் இது நடந்திராது.

தாங்கள் 150 பேர் லண்டனில் கொடி பிடித்ததால் மைத்திரி பயந்துபோய் ஜெயகுமாரியை விட்டார் என்று கொடி பிடிக்கும் கூட்டம் சொன்னாலும் சொல்லும் ;)

  • கருத்துக்கள உறவுகள்

இவவின் விடுதலைக்கு பல சிங்களவர்கள் வேலை செய்தார்கள் என்பதை மறுக்கவியலாது.

உங்கடை புளுகு மூட்டைகளை அவிழ்க்க யாழ் தான் கிடைச்சுதாக்கும்  :icon_mrgreen:

இந்த பூவுலகில் தமிழர்களை உணவு உண்டு, தண்ணீர் குடித்து உயிரோடு இருக்க விட்டதற்காக சிங்கள எஜமானர்களுக்கு நன்றி சொல்லி விழுந்து கும்பிடுவதை விட்டு விட்டு இப்படிப்பட்ட வெட்டிப் பேச்சு பேசப்படாது.

Edited by trinco

  • கருத்துக்கள உறவுகள்

நான் ஏன் புழுகோணும் விரைவில் ஜெயந்தியே இதை உறுதி செய்வார் என நம்பலாம்.

நான் ஏன் புழுகோணும் விரைவில் ஜெயந்தியே இதை உறுதி செய்வார் என நம்பலாம்.

ஓ அதற்கும் உங்க ஆட்கள ஏற்பாடு பண்ணீற்றாங்களா?

  • கருத்துக்கள உறவுகள்

நான் ஏன் புழுகோணும் விரைவில் ஜெயந்தியே இதை உறுதி செய்வார் என நம்பலாம்.

நீங்க இலங்கையில் செல்வாக்கனா ஆள் விடுதலையானபின் எதுவும் சொல்ல வைக்க முடியும்  :D  :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

மகிழ்சியான விடயம்.

விபூசிகாவின் அம்மா பிணையில் வந்தமைக்கான எல்லாப்புகழும் சிங்கள முற்போக்கு சக்திகளுக்கு தான் சேருமென்று அவர்களின் தொடர்ச்சியான போராட்ட்ங்களை கவனித்த வகையில் நினைக்கிறேன்.

கன்றை இழந்த பசுவைப்போல கதறித்துடிக்கும் தாய்க்கு நிரந்தர விடுதலையையாவது பெற்றுத்தர தமிழ் தலைமைகள் முன்வரவேண்டும்.

இதுவே பலரின் கருத்தா இருக்கு இன்று .

  • கருத்துக்கள உறவுகள்

இப்படி வங்குரோத்து அரசியல் செய்வதை தவிர கொடிபிடிக்கும் கூட்டத்துக்கு வேறு எதுவும் இயலாது என்பது தெரிந்ததே.

சிங்கள முற்போக்கு சக்திகளுக்கு நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்

இப்படி வங்குரோத்து அரசியல் செய்வதை தவிர கொடிபிடிக்கும் கூட்டத்துக்கு வேறு எதுவும் இயலாது என்பது தெரிந்ததே.

சிங்கள முற்போக்கு சக்திகளுக்கு நன்றி.

அது சரி இது வரைக்கும் கொடி பிடிக்காமல் வெட்டி முறிச்ச நாலு விடயம் சொல்லுங்கள் ?

தமிழனை படுகுழியில் தள்ளினதுதான் மிச்சம் .

விபூசிகாவின் அம்மா பிணையில் வந்தமைக்கான எல்லாப்புகழும் சிங்கள முற்போக்கு சக்திகளுக்கு தான் சேருமென்று அவர்களின் தொடர்ச்சியான போராட்ட்ங்களை கவனித்த வகையில் நினைக்கிறேன்.

கன்றை இழந்த பசுவைப்போல கதறித்துடிக்கும் தாய்க்கு நிரந்தர விடுதலையையாவது பெற்றுத்தர தமிழ் தலைமைகள் முன்வரவேண்டும்.

இதுவே பலரின் கருத்தா இருக்கு இன்று .

காணாமல் போன தனது பிள்ளைகளுக்கு நீதிகேட்டு போராடப்போய்த் தான் இந்த அம்மாவை பிடித்து உள்ளே போட்டவங்க.  அவவை உள்ளே போட்டவுடன் அவவின் பிள்ளைகளை பற்றிய பிரச்சனை முடிந்து அவவை விடுதலை செய்ததற்கு எஜமான்களுக்கு நன்றி சொல்லுல் நிலை நமக்கு  அதேபோல் நீங்கள் இப்பசொல்வது போல் இவவின் நிரந்தர  விடுதலைக்காக தமிழ் தலைமைகள் போராடப்போக அவர்களை பிடித்து இரண்டு வருடம் உள்ளே போட்டு அதன்பின் அவர்களை விடுதலை செய்ய உங்களை போன்றவர்கள் இங்கு  வந்து அவர்களை விடுதலை செய்த நல்ல மனதுக்கு சிங்களத்திற்கு நன்றி சொல்லி இவவை மறந்து விடுவீர்கள். சூப்பர்.

இப்படி வங்குரோத்து அரசியல் செய்வதை தவிர கொடிபிடிக்கும் கூட்டத்துக்கு வேறு எதுவும் இயலாது என்பது தெரிந்ததே.

சிங்கள முற்போக்கு சக்திகளுக்கு நன்றி.

காணாமல் போன தனது பிள்ளைகளுக்கு நீதிகேட்டு போராடப்போய்த் தான் இந்த அம்மாவை பிடித்து உள்ளே போட்டவங்க.  அவவை உள்ளே போட்டவுடன் அவவின் பிள்ளைகளை பற்றிய பிரச்சனை முடிந்து அவவை விடுதலை செய்ததற்கு எஜமான்களுக்கு நன்றி சொல்லுல் நிலை நமக்கு  அதேபோல் நீங்கள் இப்பசொல்வது போல் இவவின் நிரந்தர  விடுதலைக்காக தமிழ் தலைமைகள் போராடப்போக அவர்களை பிடித்து இரண்டு வருடம் உள்ளே போட்டு அதன்பின் அவர்களை விடுதலை செய்ய உங்களை போன்றவர்கள் இங்கு  வந்து அவர்களை விடுதலை செய்த நல்ல மனதுக்கு சிங்களத்திற்கு நன்றி சொல்லி இவவை மறந்து விடுவீர்கள். சூப்பர்.

பற்றுதல் என்னும் பெயரில் ஏதாவது  எழுதக்கூடாது எங்களுக்கு  என்று  ஒரு  மனட்சாட்சி  இருக்கணும்  எல்லோரும் போற்றி எழுதும் போது  நான் மாற்று  கருத்து  எழுதினால் இவர்  அவர் ஆள்  என்னும்  நிலைதான்  யாழில்  இருக்கு  அதுக்காக யதார்த்தம்  எதுவோ  அதை  மறைப்பது நல்லது  அல்ல ..

தமிழ்  தலைமைகளை  விட  அவர்களே  அதிகமா குரல் கொடுத்தார்கள் என்பதால்  இதை  சொன்னேன் அவ்வளவுதான் ..

இங்கு விசுவாசம் வேறு கள நிலைமை  வேறு  என்பதை கவனிக்க  வேண்டும் .

அஞ்சரன் நான் கூறியதும் ஜதார்த்தம் தான். அன்றிலிருந்து நான் கூறிய விடயம் தான் நடைபெறுகிறது. நான் உங்களுக்கு பதிலாக கூறினாலும் அது தான் ஜதார்த்தம்.

ஒரு விடயத்திற்காக  போராட போக, அதை விட அதிக பாரிய  துன்பம் எதிரியால் வழங்கபட, வழங்கபட்ட  புதிய துன்பத்தை சற்று  குறைத்தாலே போதுமாது பிரச்சனை தீர்ந்ந்து விட்டது  என நம்மவர் நினைப்பத்து தான் நடக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு அப்பாவித் தாயை பிடிக்கும் போதும் அரசியல்..  விடுவிக்கும் போதும் அரசியல் தான்.

சிறீலங்காவில் தமிழர்களின் சிறை இருப்பும்.. விடுதலையும் சிங்கள தேச அரசியலானது கொடுமை.

ஊடகங்கள்.. இந்த அம்மாவின் கைது தொடர்பில் வழங்கிய முக்கியத்துவங்கள்.. இந்த அம்மா தன் காணாமல் போன பிள்ளையைத் தேடி செய்த போராட்டங்களில் அவர் ஊடகங்களில் முக்கியம் பெற்றமை.. மற்றும் விபூசிகாவின் தொடர் முயற்சிகள்.. அது நல்லிதயம் கொண்ட மக்களை உலக அளவில் சிந்திக்கத் தூண்டியமை என்று.. பல்வேறு காரணிகள் இந்த விடுதலையில் செல்வாக்குச் செய்துள்ளன.

சிங்கள முற்போக்கு சிந்தனைவாதிகளின் ஆதரவும் அதில் அடங்கும். ஆனால் அதுவே தனித்து இந்த விடுதலை கொண்டு வந்தது என்பது ஏற்கக் கூடிய உண்மையல்ல.  :icon_idea:  தொடர்ந்து தமிழ் அரசியல் கைதிகள்.. மற்றும் சரணடைந்தோர் விடயத்தில் சிங்கள முற்போக்கு சக்திகள்.. மனிதாபிமானத்தோடு சிந்தித்து நடக்க வேண்டும் என்றும் வினையமாகக் கேட்டுக்கொள்கிறோம்.  :icon_idea:

மிக மகிழ்சியான விடயம் .

இவர்களையெல்லாம் விடக்கூடாது என்றுதானே வெளிநாடுகளில் கொடி பிடிக்கின்றார்கள் .விட்டால் இவர்கள் அரசியல் என்னாவது .

மைத்திரி இவர்களை கணக்கில் எடுக்கவில்லை என்று நினைக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

சிலருக்கு தமிழீழக் கொடிபோபியா வியாதி போல் உள்ளது. எதிலும் கொடி.. எதை எழுதினாலும் கொடி. 

கொடி பறப்பதால் தான்... விபூசிகா.. அம்மா.. எல்லாரையும் ஊடகங்களே திரும்பிப் பார்க்க முடிகிறது. இன்றேல்.. இவர்கள் எவ்வாறு எல்லாம் சத்தப்பட்டாமல் சாகடிக்கப்பட்டிருப்பார்கள் என்பதையும்.. அந்தக் கொடிகளே உலகிற்கு உணர்த்தி நிற்கின்றன.

இன்னும் இன்னும் எழுச்சியோடு அந்தக் கொடிகள் பறக்க வேண்டும். அதுவே தாயகத்தில் அடக்குமுறைச் சிந்தனையில் உள்ள சிங்கள பெளத்த பேரின நிகழ்ச்சி நிரலை மாற்றி அமைக்கும் அழுத்தத்தை உலகில் பிரயோகிக்கும்.  :icon_idea:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

போகும் போது தமிழிச்சியா போனா... வரும் போது பன்சல போய் வரும் சிங்களத்தி போல மாத்தி அனுப்பிட்டாங்க. புலிகள் செய்தால்.. மூளைச்சலவை..  அதையே சிங்களவன் செய்தால்.. புனர்வாழ்வு. நல்ல உலகம்:rolleyes:  :icon_idea:

எதுஎப்படியோ.. அந்தச் சிறுமியின் தாய் மீண்டதை இட்டு மகிழ்வோம்.  :icon_idea:

சரியாக சொன்னீர்கள் நெடுக்கர்.. :)

மிக மகிழ்சியான விடயம் .

இவர்களையெல்லாம் விடக்கூடாது என்றுதானே வெளிநாடுகளில் கொடி பிடிக்கின்றார்கள் .விட்டால் இவர்கள் அரசியல் என்னாவது .

மைத்திரி இவர்களை கணக்கில் எடுக்கவில்லை என்று நினைக்கிறேன்.

கொடி பிடித்தால் என்ட எஜமான் இன்னும் பல அநியாயங்களை செய்வான் என்று எல்லா தமிழரையும் பிளாக் மெயில் பண்ணுறீங்களா?

Edited by trinco

போகும் போது தமிழிச்சியா போனா... வரும் போது பன்சல போய் வரும் சிங்களத்தி போல மாத்தி அனுப்பிட்டாங்க. புலிகள் செய்தால்.. மூளைச்சலவை..  அதையே சிங்களவன் செய்தால்.. புனர்வாழ்வு. நல்ல உலகம்.  :rolleyes:  :icon_idea:

எதுஎப்படியோ.. அந்தச் சிறுமியின் தாய் மீண்டதை இட்டு மகிழ்வோம்.  :icon_idea:

சில வாரங்களிற்கு முன்னர் வீபூசிகா மற்றும் இரு சிறுமிகளின் பூப்புனித நீராட்டுவிழாவிற்கு வீபூசிகா வாழும் மகாதேவா ஆச்சிரமம் உதவி கேட்டிருந்ததே. இங்கு கருத்திடும் நண்பர்கள் எத்தனை பேருக்கு ஞாபகமிருக்கு.
 
வீபூசிகாவின் அம்மா விடுதலையானதையிட்டு சந்தோசப்படாமல் ஏன் குத்தி முறிகிறீர்கள். இங்கு வீபூசிகாவின் அம்மா மட்டுமல்ல இன்னமும் 8 பேர் விடுதலையாகி உள்ளார்கள். இவர் ஒரு வருடம் மற்றவர்கள் எத்தனை வருடமோ. இது மோடிக்கான விடுதலை இருப்பினும் எனது மனம் விடுதலையானவர்க்கே.
 
இன்று விடுதலையானவர்கள் இக்கருத்தாடலைப் பார்த்தால் காறி துப்ப மாட்டார்களா? 

Edited by ஜீவன் சிவா

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.