Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மோடி வருகையுடன் இந்திய- இலங்கை உறவில் புதிய ஆரம்பம்! - ரணில்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

எமது நாட்டில் இல்லாத சிங்கத்தை ஒருவர் தனது கொடியில் வைத்திருக்கின்றார். மிருகக்காட்சிசாலையில் மட்டும் பார்த்த புலியை இன்னொருவர் எமது கொடி என்கிறார். இதையே யாரும் கேட்பதாக தெரியவில்லை.

இங்கு அம்மன் அமெரிக்காவில் இருந்து வந்தாலென்ன அனுமார் ஆபிரிக்காவில் இருந்து வந்தாலென்ன.

சூப்பர் பஞ்ச் டயலாக் ரொம்ப புடிச்சிரிக்கி!
  • Replies 60
  • Views 3k
  • Created
  • Last Reply

நான் ஒன்றும் வரலாற்றசிரியன் இல்லை அமைசரே. ஒரு பொறுக்கி. அங்கங்க பொறுக்கினதை உங்களிடம் பகிர்கிறேன்.

நாம்தான் ஆரியத்தையும் வட இந்த்ஹியாவையும் போட்டுக் குழப்பி அடிக்கிறோம் என்று தோன்றுகிறது.

ஆரிய வருகைக்கு முன் வட இந்தியாவில் சிவ வழிபாடு இருந்திருக்கலாம். அதுக்காக சிவன் தமிழ் கடவுள் என்றாகாது.

சிந்து சமவெளியில் ஆதி தமிழர்கள் வாழ்ந்தார்கள் என்கிறார்கள். அங்கே இருக்கும் எழுத்துக்களில் கூட முந்து சிவன் என்று இருப்பதாக படித்த நியாபகம்.

ஆனால் வட இந்தியா, ஆப்கான், நேபாளம், பலூச்சிஸ்தான், திபெத் என்று சிவ வழிபாடு நடக்கும் எல்லை பிரமாண்டமாணனது.

தென்னாடுடைய சிவன், எந்த பாரிய படை எடுப்பும் தெற்கு - வடக்கு என்று நிகழாத போது எப்படி தமிழர் மத்தியில் இருந்து இந்தளவுக்கு பரவினார் என்பதும் ஆய்வுக்குரியதே.

திபெத் வாசியான (கைலாயம்) எப்படி தமிழ் கடவுளாக முடியும்?

ஏன் வட இந்தியர் ஒரு தமிழ் கடவுளை தமதாக வரித்துக்கொள்ள நேர்ந்தது?

ஒரு சிலர் சொல்கிறார்கள் - முன்பு இந்தியா முழுமையும் தமிழ் மயப்பட்டிருந்ததாகவும் பின்னர் தமிழர் தெற்கு நோக்கி நகர்ந்ததாயும்.ஆனால் இதை வரலாற்று ஆசிரியர்கள் ஏற்பதில்லை. சும்மா கந்தபுரிதான் Canterbury ஆகியது எனும் ரேஞ்சில் ஊர் பெயர்களை வைத்து, சில பழம்பெருமை பேசும் தமிழர்கள் சொல்லும் இட்டுகதைகளே உள்ளன ( நானறிந்த வரையில், வேறு ஆதாரம் இருந்தா அறியத்தரவும்).

என் சிற்றறிவுக்கு பட்ட வகையில் சிவன் ஒரு வட இந்திய கடவுள் என்றே படுகிறது. ஆளிண்ட பேர்த் சேர்டிபிக்கெட் கிடைச்சா நல்லாயிருக்கும் :)

 

 

சிவன் தமிழர்க்குமட்டும் கடவுள் என்று சொல்லவில்லையே.
 
தமிழர்களும் சிவனை வழிபட்டார்கள். அவர்கள் தமிழர்களாவதற்கு முன்பிருந்தே சிவனை வழிபட்டார்கள். 
 
தமிழ் என்பது அண்மயது. சைவம் அதற்கு முந்தியது.
 
நாங்கள் மொழிக்குழுமங்களாகப் பிரிவதற்கு முன்பே சிவவழிபாடு செய்திருக்கிறோம்.
 
இந்திய உபகண்டத்தில் மனித இனம் தோன்றவில்லை. வட இந்தியாவிற்கு வந்து பின் தொடர்ந்து இடம்பெயர்ந்து தெற்கு வந்து பின் இலங்கைக்கும் வந்தோம். எம்மோடு எம் வழிபாட்டு முறைகளும் இடம் பெயர்ந்தது. 
 
சிந்து நதியில் காணப்படுவது தமிழின் முன் மொழி. தமிழ் அப்போது பேசப்படவில்லை. அல்லது இப்போதைய வடிவில் இல்லை. ஆனால் அவர்கள் எம் மூதாதையர்கள்.
 
சிவன் வட இந்தியர் என்றால் நாமும் வட இந்தியர் தான்.
 
இது சம்பந்தமாக வேறு ஒரு திரியில் உரையாடலாம் அமைச்சரே.
  • கருத்துக்கள உறவுகள்

உண்மைதான் அமைச்சர்வாழ்,

சைவ வழிபாடு தமிழுக்கு முந்தியதாக இருக்கலாம். ஆனால் அது வட இந்தியாவுக்குரியது என்பதே என் கருத்து.

நீங்கள் சொல்வதை படி பார்த்தால் நாம் வட இந்தியர்கள் இல்லை - கென்ய ஆபிரிக்கர்கள், ஏனெண்டால் அங்குதான் ஆரம்பமாகிறது ஹோமோ சேபியன்ஸின் வரலாறு.

நீங்கள் இதில் கரை கண்டவர் போல தெரிகிறது. தொழில்/கல்வி வழியா ? இல்லை தேடல் வழியா?

நன்றி.
 
தேடல் தான். ஆனால் கூகுள் தேடல் அல்ல.  :)
 
பௌத்தம் சொல்லும்  Seeker என்பது. ( Not a searcher )
 
Seeking for the "Truth".
 
 
  • கருத்துக்கள உறவுகள்

இப்பவே மருதனா மடத்தில் ஒரு மிகப்பெரும் அனுமார் சிலையுள்ளது.

இந்து சமயத்தை இறுகப்பற்றுவதுதான் எமக்கு அரசியல் உரிமையை பெற்றுத்தருமெண்டால் - அதைச் செய்வதில் ஒரு தப்புமில்லை.

தோற்றுவிடுவோம் .....
என்பதால் போராட கூடாது என்னும் உங்கள் நிலைபாட்டில் எனக்கு உடன்பாடு அறவே இல்லை.
அப்படி என்றால் உலகில் மனிதன் இப்போதும் கற்காலத்தில்தான் வாழ்ந்திருக்க முடியும்.
திருத்த பட்ட தோல்விகள்தான் .... தற்கால வெற்றிகள்.
 
அடாவடித்தனத்தால் அதிக காலம் எதையும் சாதிக்க முடியாது என்று நான் நம்புகிறேன்.
சிரிய போரை வெற்றிகொள்ள மேற்கு இப்போ ரசியாவுடன் சொறிய தொடங்கி  இருக்கிறது
ரசியாவுடனான சொறி வேலைகளால் பாதிக்க போவது மேற்குதான் என்பதுதான் எனது கணிப்பு அல்லது நம்பிக்கை.
 
அவர் அவர் கடந்த கால அனுபவங்கள்தான் எதிர்கால நம்பிக்கையை உருவாக்குகின்றது. 
உங்கள் அனுபவம் இப்படி இருக்கிறது.
காலம் தாண்டிதான் முடிவை பார்க்க முடியும். 
  • கருத்துக்கள உறவுகள்

மருதனாமடத்தில் உள்ள குரங்கு கோவிலை நானும் பாரத்தேன்.

 

20141019_133623.jpg

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு விவசாயம் படிப்பித்த ஆசிரியர், இந்தியாவில் உள்ள 'புனா' என்ற ஊரில் பயிற்ச்சி பெற்றவர். அவர் அந்த ஊருக்குச் சென்றபோது, அங்குள்ள சிலர் "நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள்?" எனக் கேட்டுள்ளார்கள். ஆசிரியர் "இலங்கை" என்று சொன்னதும் மிகவும் அதிசயப்பட்டார்களாம். "இலங்கையா... ? அதைத்தான் அனுமார் எரித்துவிட்டாரே..!" என்று ஆச்சரியப்பட்டு ஆசிரியரைப் பார்த்தார்களாம். :o   

  • கருத்துக்கள உறவுகள்

ஆரியர்கள் நவராத்திரியைக் கொண்டாடும் அளவுக்கு சிவராத்திரியைக் கொண்டாடுவதில்லை.பாமர ர்களின்( வேடங்களின்)முருகனுக்கு மக்களிடத்தில் இருந்த வரவேற்பைக் கண்டு தெய்வயானை என்று பெண்ணை உருவாக்கி சுப்ரமணியாக்கி ஆரியத்தெயவமாக்கும் முயற்சி நடை பெற்று இருக்கிறது.ஆரியத் தெயவமான கணபதியைத்தான் முதலில் வழிபட வேண்டும் ஏன் கொண்டு வந்தார்கள்.. தமிழ் நீச மொழி சமஸ்கிருத மே தேவபாஷை அதுதான் கடவுளுக்குப் புரியும் என்று ஏன் கொண்டு வந்தார்கள்?பாவம் செத்த மொழி சிவனுக்கு விளங்குமாம் வாழும்மொழி விளங்காதாம்???

  • கருத்துக்கள உறவுகள்

ஆந்திராவில் ஒரு முறை ஒருவர் என்னிடம் கேட்டார் "இப்ப ஸ்ரீ லங்காவுக்கு ரெயின் போகுதா இல்ல முன்ன மாரி பஸ்தானா?" என்று.

இல்லை நாம் ஒரு தீவு, பிளேனில் வந்தேன் என்று சொன்னேன். உடனே ஐயா கேட்டார் "அப்ப ராமர் கட்டிய பாலத்துக்கு என்னாச்சு?"

ஒரு 1/2 மணி நேரம் விளங்கப்படுத்திய பின், புரிந்தது போல தலையாட்டினார்.

அடுத்து உங்கள் ஊரில் தங்கம் என்ன விலை எண்டார். இலங்கை இந்தியா ரூபாய்க்கு ஒரே பெயர் ஆனா மதிப்பு வேற என்று விளங்கபடுத்தப் போய் மண்டை காஞ்சிட்டு.

கடைசியில் ஐயா சொன்னார். எல்லாம் இந்தியாதான் - போகும் போது தங்கம் வாங்கிப்போய் ஊரில் வித்து லாபம் ஈட்டு என்று.

சரி என்று அடங்கி விட்டேன்.

யாழில் சிலரோடு உரையாடுவதும் இதை ஒத்த அனுபவம்தான் :)

கோசான் கவலைப்படாதீங்கள்.
 
இந்தியாவில் படித்த காலத்தில் ஒரு கோடை விடுமுறைக்கு இரு மாதம் இலங்கை சென்று திரும்பியிருந்தேன். பேச்சுவழக்கு மறுபடியும் யாழ்ப்பாண தமிழிற்கு மாறி இருந்தது. திரும்பி வந்த என்னை வரவேற்ற வீட்டுக்கார அம்மா (ஆசிரியர் அதுவும் தமிழ்) சொன்னா "ஏம்பா ஊருக்கு ரண்டு மாசம் போனா தாய் மொழியையே மறந்திடுவாங்களா. என்ன பிள்ளையப்பா நீ" என்று. இதற்கு நீங்கள் எவ்வளவோ தேவலை.
 
நானும் ஆம் என்று அடங்கி விட்டேன். எதற்கு தேவையில்லாத சோலி.
  • கருத்துக்கள உறவுகள்

 

கோசான் கவலைப்படாதீங்கள்.
 
இந்தியாவில் படித்த காலத்தில் ஒரு கோடை விடுமுறைக்கு இரு மாதம் இலங்கை சென்று திரும்பியிருந்தேன். பேச்சுவழக்கு மறுபடியும் யாழ்ப்பாண தமிழிற்கு மாறி இருந்தது. திரும்பி வந்த என்னை வரவேற்ற வீட்டுக்கார அம்மா (ஆசிரியர் அதுவும் தமிழ்) சொன்னா "ஏம்பா ஊருக்கு ரண்டு மாசம் போனா தாய் மொழியையே மறந்திடுவாங்களா. என்ன பிள்ளையப்பா நீ" என்று. இதற்கு நீங்கள் எவ்வளவோ தேவலை.
 
நானும் ஆம் என்று அடங்கி விட்டேன். எதற்கு தேவையில்லாத சோலி.

 

 

ஈழத் தமிழர்கள் யூதர்கள் போன்று எல்லாத் துறைகளிலும் வல்லவர்கள். அவர்கள் படிப்பு, திறமை, ஆற்றல், தொழில், வர்த்தகம் வீரம் என எல்லாத் துறைகளிலும் வல்லவர்களாக விளங்கியவர்கள். 
 
1951 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் வந்திருந்த கல்கி ஆசிரியர் அமரர்  கிருஷ்ணமூர்த்தி  தமது பிரயாணக் கட்டுரையில் “யாழ்ப்பாணத் தெருக்களில் நடந்து செல்லும்போது தப்பித் தவறி வழுக்கி வீழ்ந்துவிட்டால் ஓரு ஆசிரியர் மேல்தான் விழ வேண்டியிருக்கும். கல்வியாலும் மற்றும் எல்லாத்துறையாலும்  பெருமை பெற்று விளங்கும் தமிழர்களிடையே ஒன்று மட்டும் இல்லை அதுதான் “ஒற்றுமை”. இதுவும் இருந்தால் ஈழத்தமிழர்கள் உலகையே கட்டி ஆளும் வல்லமையுடைவர்களாக விளங்குவார்கள்  என்றார். ஒரு மதிநுட்பம் மிகுந்த எழுத்தாளர் என்ற முறையில் அவரது  மதிப்பீடு சரியானதே.
 
வீரகேசரி 6-02-2011
 
 
 
 
 
இலங்கையின் ஒரு பகுதியாகிய யாழ்ப்பாணத்திலும் அதன் சுற்றுப் பகுதிகளிலும் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்கள் வாழ்ந்து வந்தனர் என்று கூறுகின்றனர். யாழ்ப்பாணத் தமிழையும், தமிழகத் தமிழையும் ஒப்பிட்டுப் பார்க்கும்போபது பல உண்மைகள் நமக்குப் புலப்படுகின்றன. கடலால் பிரிக்கப்பட்ட பகுதியாதலின் தமிழின் பல தொன்மைக் கூறுகளை யாழ்ப்பாணத் தமிழ் இன்னும் காப்பாற்றி வருகிறது. சங்ககாலச் சொற்களில் பல சொற்கள் இன்றும் யாழ்ப்பாணத் தமிழில் உலா வருகின்றன. 
 
தமிழ் களஞ்சியம் >ஆய்வு > யாழ்ப்பாணத் தமிழ்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.