Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இரட்டைப் பிரஜாவுரிமை பெற 6 நிபந்தனைகள் விதிக்கும் அரசு

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தகமை பிளஸ் பண முதலீடு என்பது பொதுவான நிபந்தனை. 

 

சில கல்வி, தொழில்சார் தகமைகளுக்கு, பண முதலீடு இல்லாமல் duel  சமீப நாட்களில் எனக்கு தெரிந்து கொடுக்கப்பட்டுள்ளது,

 

நான் இந்த திரியில் ஏற்கனவே   எழுதியது போல இது தனிப்பட்டவர்களில் தேவை தொடர்பான விஷயம். இலங்கை பிரஜாவுரிமை அவசியம் தேவை என்ற நிலையில் உள்ளவர்கள், பெற்றுக் கொள்கிறார்கள்.

 

முக்கியமாக இலங்கையின் பல்வேறு வெளிநாட்டு ப்ரொஜெக்ட்களில்  professional consultants ஆக பணிபுரியும் ஆட்கள் இதை பெற்றுக் கொள்கிறார்கள்.  

 

எனக்கு தெரிந்த ஒருவர், ஜேர்மன் ப்ரொஜெக்ட் ஒன்றில்  professional consultants ஆக உள்ளார். அவரோ அவுஸ்திரேலிய பிரஜை.  இந்த ப்ரொஜெக்ட்டுக்குள் நுழைவதற்கு அவருக்கு ஜேர்மன் பிரஜாவுரிமை, அல்லது இலங்கை பிரஜாவுரிமை தேவைப்பட்டது.

 

முன்னாள் இலங்கையர் என்பதால், இலங்கை பிரஜாவுரிமை அவருக்கு சுலபம். எடுத்தார்.

 

இப்போது ஜேர்மன் ப்ரொஜெக்டில் உள்ளார். அந்த ப்ரொஜெக்ட்டை செய்யும் அமைச்சின் சிபாரிசு இருந்தால், பண முதலீடு தேவையில்லை. கல்வி, தொழில்சார் தகுதி போதும்.  

 

இலங்கை ரூபாவில், ஜேர்மன் சம்பளம் அருமையான டீல். இப்படியான  தனிப்பட்ட தேவைகளுக்கு பலனுள்ள திட்டம்.

Edited by sabesan36

  • Replies 157
  • Views 8.7k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

ஒகே எனக்குத் தெரிந்தளவில் சொல்கிறேன்,

1) இரட்டை பிரஜா உரிமைக்கு நீங்கள் முன்னாள் இலங்கையராய், அல்லது முன்னாள் இலங்கையரின் பருவமெய்தாத பிள்ளையாய் இருத்தல் அவசியம். யூகேயில் இருக்கும் ஒரு வெள்ளை இதை பெற முடியாது.

2) மேற்சொன்ன நிபந்தனைகள் ஆறில் ஏதாவது ஒண்டு இருந்தால் போதுமானது.

3) சூறாவளி நீங்கள் சொல்லியது போல் வெளிநாட்டு பிரஜா உரிமையை மறுதலித்து விட்டு இலங்கைக்கு திரும்பினாலும், உங்கள் இலங்கை பிரஜா உரிமையை திரும்ப பெறமுடியாது. நீங்கள் இன்னொரு நாட்டின் பிரஜா உரிமையை ஏற்கும் போதே, உங்கள் இலங்கை பிரஜா உரிமை தானியக்கமாக இல்லாமல் போய்விடும். இழந்த இலங்கை பிரஜா உரிமைய மீளப் பெறுவதானால் இரட்டை குடியுரிமை முறை ஒன்றே ஒரே வழி. வெளிநாட்டு பிரஜா உரிமையை மறுதலித்து விட்டு இலங்கை திரும்பினால் நீங்கள் stateless person ஆக இருப்பீர்களே ஒழிய இலங்கை பிரஜை ஆக முடியாது.

பாவி மக்கா fees எதுவும் இல்லாமா இலவசமா அட்வைஸ் கறக்குற்ரிங்களே இது நியாயமா :)

இங்கே கல்வித் தகமை - என்ன என்பது இன்னமும் தெளிவாக சொல்லப்படவில்லை. குறைந்த பட்சம் 1st degree from a recognised university கேட்பார்கள் என நினைக்கிறேன். CIMA போன்ற துறைசார் நிபுணத்துவத்தையும் ஏற்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

சகல தமிழர்களும் கட்டாயம் எடுத்து வைத்திருக்க வேண்டும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கிழவி,

1) அசையா சொத்து வைத்திருத்தல்

2) விசா எடுக்க தேவையில்லை

3) அரசியலில் ஈடுபடும் உரிமை(இனிமேல் எம்பி ஆக முடியாதாம்)

4) சொகுசு ஹோட்டல்களில் தங்கும் போது இலங்கையர்கான விலைக்கழிவு கிடைக்கும்

5) சுங்க வரிச் சலுகைகள்

6) வியாபாரம்/கம்பனி ஸ்தாபிக்கும் உரிமை

இப்படி பல அனுகூலங்கள் உண்டு.

பெற்றதாயும் பிறந்த பொன் நாடும் நற்ற யாவிலும் நனி சிறந்ததே என்போர்க்கு ஒரு நல்ல விடயம்.

சொறிலங்கா ஒரு பிச்சைகார நாடு என பழித்தபடி வெளிநாடுகளில் பிச்சை எடுப்போர்க்குத் தேவையில்லை.

 

 

சிங்களவனின் ஏகபோக அதிகாரத்தின் கீழ் வாழும்வரை ஶ்ரீ லங்கா பெருன்பான்மை தமிழருக்கு சொறி லங்காவாகவே விளங்கும்.

 

அசையா சொத்து வைத்து இருப்பது தவிர (அசையா சொத்தின் மதிப்பு சுமார் 25 இலட்சம் இலங்கை ரூபாவுக்கு மேல் தேறினால் ஒழிய) மிகுதியை பெரிய அனுகூலங்கள் என்று கூறமுடியாது.

 

நீங்கள் "பெற்றதாயும், பிறந்த பொன் நாடும் நற்ற யாவிலும் நனி சிறந்ததே" என்று ஷெல், கீபீர், கெலி, கன்போட், வெவ்வேறு தரைபடைகளின், இயக்கங்களின் தாக்குதல்களின்போதும் கூறினீர்களா? 

 

காட்டுமிராண்டிகளின் நாட்டிற்கு இரட்டை பிரஜா உரிமை ஒரு கேடு.

 

என்று உண்மையான ஜனநாயகம், நீதி, நேர்மை, சமாதானம், அனைத்து இன பொதுமக்களுக்கும் பாதுகாப்பு ஏற்படுகின்றதோ அதுவரை ஶ்ரீ லங்கா கறுப்பு பட்டியலில் காணப்படவேண்டிய நாடு. சிவப்பு புள்ளி போடப்பட்டு தீண்டத்தகாத நாடாக பிரகடனப்படுத்தப்படவேண்டியது.

  • கருத்துக்கள உறவுகள்

ஓம் அப்போதும் கூறினேன். இப்போதும் கூறுவேன். இலங்கையின் அத்தனை பகுதியிலும் வாழ்தவன் நான்.

குறிப்பாக வடக்கு கிழக்கின் ஒவ்வொரு ஏஜிஏ பிரிவுக்கும் சென்றுள்ளேன்.

என் தாய்நாட்டுக்கு நிகர் ஏதுமில்லை. அது தழிழீழம் என பிரிக்கப்பட்டிருந்தாலும் இல்லை சிறிலங்கா என்று இணந்திருந்தாலும் - அது நற்றயாவிலும் நனி சிறந்ததே. சிங்கள தமிழ் முஸ்லீம் காட்டுமிராண்டிகள் அதை நாறடித்தார்கள், நாறடிக்கிறார்கள் என்பதை மறுபதற்கில்லை. ஆனால் அதையிட்டு நாட்டை வெறுக்க என்னால் முடியவில்லை.

பொருளாதார காரணங்களுக்கா 11 மாதம் வெளியில் இருப்பதே அந்த 1 மாத சந்தோசத்துக்காகத்தான். This is a love-hate relationship.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பேசாமல் இப்படி கிளம்ப வேண்டியதுதான்- (பாட்டில் சொல்வதுபோல கட்டுச்சாதம்கூட கட்டத் தேவையில்லை)

 

ஆற்றவுங் கற்றார் அறிவுடையார் அஃதுடையார்
நாற்றிசையுஞ் செல்லாத நாடில்லை - அந்நாடு
வேற்றுநா டாகா தமவேயாம் ஆயினால்
ஆற்றுணா வேண்டுவ தில்
 
-பதினெண் கீழ்க்கணக்கில், பழமொழி நானூறு (55-வது பாடல்)

Edited by sabesan36

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
எமது தாய்நாட்டை சொறி லங்காவுடன் இணைத்து குழப்பக்கூடாது.
 
ஈழம் எங்கள் தாய்த்திருநாடு. அது காங்கேசன்துறையில் இருந்து கதிர்காமம் வரை நீண்டு செல்கின்றது.
 
ஶ்ரீ லங்கா எனப்படும் சொறி லங்கா சிங்களவனின் அதிகாரத்துக்கு உட்பட்ட நிர்வாக அலகு. அது சிங்களவன் தனது அராஜகங்களை சிறுபான்மை இனங்கள் மீது கட்டவிழ்த்து அரங்கேற்றும் சட்டரீதியான அங்கீகாரத்தை பெற்ற நிர்வாக இயந்திரம்.
 
உங்களைப்போல் எனக்கும் நான் பிறந்த, வாழ்ந்த இடம் மீது மதிப்பு, பற்று என்றும் இருக்கும்.
 
ஆனால், அது சிங்களவனின் ஆணைக்கு உட்பட்ட சொறி லங்காவுக்கு இல்லை.
 
சொறி லங்காவை ஈழத்தில் இருந்து பிரித்தறியும் பகுத்தறிவு இல்லை என்றால் நாலு படிப்பு படித்தமைக்கு பிரயோசனம் இல்லை.
 
நான் பிறந்து, வாழ்ந்த தாயகத்தில் எனக்கு குடியுரிமை என்றும் உண்டு. அதைப்பறிப்பதற்கு ஒருவருக்கும் உரிமை இல்லை. இன்னொருவன் கொடுத்து நான் வாங்குவதற்கு எனது குடியுரிமை ஒன்றும் அடுத்தவன் வீட்டு சொத்து இல்லை. அது என்றும் எனது சொத்து.
 
திருடன் வருகின்றான், கொள்ளை அடிக்கின்றான், எனது வீட்டில் தங்கிவிடுகின்றான், என்னை வீட்டைவிட்டு துரத்தி அடிக்கின்றான். இங்கே நான் திருடனுடன் சமரசம் செய்வதற்கு ஒன்றும் இல்லை. வீடு எனதுடையது. திருடன் சட்டவிரோதமாய் எனது குடியிருப்பை கைப்பற்றியுள்ளான். திருடன் கூறுகின்ற தகமைகளை காட்டி திருடனிடமே நான் மன்றாடி அவனிடம் இருந்து எனது வீட்டை மீளப்பெறுவதற்கு பெயர் குடியுரிமை இல்லை. அது அடிமை வாழ்வு. இரட்டை பிரஜாவுரிமை எனும் பெயரில் சிங்களவனிடம் நாம் மண்டியிட்டு அவனிடம் அடிமையாகக்கூடாது. இந்த அடிமைத்தனத்தை நீங்கள் பெற்றுக்கொள்ளுங்கள். எனக்கு அது தேவையில்லை. 
 
சொறி லங்காவில் சொத்தையான சட்டமூலத்தை உருவாக்கி மலையக தமிழரின் குடியுரிமையை பறித்தார்கள். வடக்கு, கிழக்கு மக்களின் குடியுரிமையை சாமர்த்தியமாய் பறிக்கின்றார்கள். அவர்கள் பறிப்பதற்கும், கொடுப்பதற்கும் எல்லாம் நாம் கொடுக்கும் இடம்.
 
சொறி லங்காவை வைக்கும் இடத்தில் வைத்துக்கொண்டால் நல்லது.
 

Edited by கிழவி

  • கருத்துக்கள உறவுகள்

உண்மைதான் கிழவி,

எனக்குத்தான் விளக்கம் பத்தவில்லை.

இந்த கதிர்காமம் வரை நீளும் நாட்டுக்கு பிரஜா உரிமை எடுக்கும் முறையை ஒருக்கா சொல்லித்தாங்கோவன்.

சொறிலங்காவுடன் நிண்டு மாரடியாம நாங்களும் பிரஜா உரிமை எடுப்பம்.

அப்படியே செவ்வாய் கிரகம், யுரேனசிலும் எடுத்து வையுங்கோ, காணி நல்ல மலிவா போகுதாம்:)

  • கருத்துக்கள உறவுகள்

32 குழுக்களாக பிரிந்து அடிப்பட்டு, எல்லாவற்றையும் இழந்து அப்பாவிகளையும் ஈற்றில் பலிகொடுத்து ஒடிய  ஈழத்தமிழருக்கு எதற்கு இரட்டை குடியுரிமை? 5ம் கட்ட போர் ஆரம்பிக்கட்டும் எல்லோரும் வாங்க , 32 குழுக்களாக பிரிந்து அடித்து தமிழீழ மண்ணை மீட்போம்.

  • கருத்துக்கள உறவுகள்

இப்படியும் யோசிக்கலாமே? வடக்கு கிழக்கில் இருக்கும் தமிழர்களுக்கு உதவ வருடத்தில் சில நாட்களாவது அவர்களிடையே வாழ வேண்டியிருக்கும். நீங்கள் வெளிநாட்டுப் பிரஜையாக இருந்தால் விசாக் கெடுபிடி மட்டுமன்றி பணியாற்றக் கூடத் தடைகள் வரலாம்! இரட்டைப் பிரஜாவுரிமை இருந்தால் பயணிப்பதும் பணியாற்றுவதும் சுலபம். எனவே தனிப் பட்ட காரணங்கள் மட்டுமன்றி தமிழர் நலம் பேணும் காரணங்களுக்காகவும் இதைப் பயன் படுத்திக் கொள்வதில் தவறில்லை!

  • கருத்துக்கள உறவுகள்

இப்படியும் யோசிக்கலாமே? வடக்கு கிழக்கில் இருக்கும் தமிழர்களுக்கு உதவ வருடத்தில் சில நாட்களாவது அவர்களிடையே வாழ வேண்டியிருக்கும். நீங்கள் வெளிநாட்டுப் பிரஜையாக இருந்தால் விசாக் கெடுபிடி மட்டுமன்றி பணியாற்றக் கூடத் தடைகள் வரலாம்! இரட்டைப் பிரஜாவுரிமை இருந்தால் பயணிப்பதும் பணியாற்றுவதும் சுலபம். எனவே தனிப் பட்ட காரணங்கள் மட்டுமன்றி தமிழர் நலம் பேணும் காரணங்களுக்காகவும் இதைப் பயன் படுத்திக் கொள்வதில் தவறில்லை!

 

நான் 2003 இல் தாயகம் சென்றிருந்தபோது..

இதைத்தான் சொன்னார்கள்

உங்களுக்காக இல்லாதுவிட்டாலும்

எங்களுக்கு உதவும்

எடுத்து வையுங்கள் என...

  • கருத்துக்கள உறவுகள்

சும்மா UK பாஸ்போர்டுடன் போற தமிழனையே பிடிச்சுவச்சு ஆட்டம் காட்டும் சொறிலங்கா இதுக்குள்ளை சொறிலங்கா பாஸ்போர்ட் எடுங்கோ என்று கேட்டு அழுவுது ஒரு கூட்டம் இங்கு.

  • கருத்துக்கள உறவுகள்

நான் இரட்டை கடவுச்சீட்டு பெறுவதாக இல்லை.. (அது குடியுரிமை அல்ல.. குடியுரிமை இருந்திருந்தால் இப்படி வெளிநாட்டில் குளிரும் கம்பலையுமாக அலையவேண்டியதில்லை.)

ஆயினும், இன்னும் நான்கு ஆண்டுகளில் கொழும்பு ஊடாக தாயகம் செல்லவேண்டி இருக்கும். அப்போது சிறீலங்கா விசாவுக்கு விண்ணப்பிக்கவேண்டி வரும்.

Edited by இசைக்கலைஞன்

  • கருத்துக்கள உறவுகள்

நான் 2003 இல் தாயகம் சென்றிருந்தபோது..

இதைத்தான் சொன்னார்கள்

உங்களுக்காக இல்லாதுவிட்டாலும்

எங்களுக்கு உதவும்

எடுத்து வையுங்கள் என...

 

அவர்கள் சொன்னது சரியானது தான்! எல்லா விடயத்திலும் யூதர்களை உதாரணமாகக் காட்டுகிறோம். ஆனால் யூதர்கள் எப்படி இஸ்றேலை உருவாக்கினார்கள் என்று மறந்து விடுகிறோம். Exodus என்ற வரலாற்று நூலில் (இது "தாயகம் நோக்கிய பயணம்" எனத் தமிழிலும் மொழிபெயர்க்கப் பட்டது!) விவரமாக வாசிக்கலாம். பிரிட்டிஷ் தடையையும் மீறி ஆயிரக்கணக்கில் ஐரோப்பிய யூதர்கள் கள்ளத் தோணியில் இப்போதைய இஸ்றேலில் போய் இறங்கினார்கள். நாம் களவாகப் போக வேண்டியதில்லை. நமது ஊருக்கு அருகில் சட்ட ரீதியாக வசிக்க இருக்கும் வாய்ப்பைப் பயன் படுத்திக் கொள்கிறோம்! அவ்வளவு தான்!

 

சும்மா UK பாஸ்போர்டுடன் போற தமிழனையே பிடிச்சுவச்சு ஆட்டம் காட்டும் சொறிலங்கா இதுக்குள்ளை சொறிலங்கா பாஸ்போர்ட் எடுங்கோ என்று கேட்டு அழுவுது ஒரு கூட்டம் இங்கு.

 

அழவில்லைப் பெருமாள். இது கருத்துக் களம், ஒவ்வொன்றிலும் இருக்கும் சாதக பாதகத்தைக் கதைக்கவே இங்க வருகிறோம்! எடுக்காமல் இருப்பதற்கான காரணங்களைப் போல எடுக்க அவசியமான காரணங்களையும் சொல்வோம்! அவ்வளவே! nothing more, nothing less! :)

லண்டனில் இருக்கும் எனது சில நண்பர்கள் இரட்டை குடியுரிமை வைத்திருக்கின்றார்கள் .அடிக்கடி நாட்டிற்கு போய் வருபவர்கள் தமிழ் மக்களுக்கு நல்ல விடயங்கள் பல செய்தும் வருகின்றார்கள் .இதுதான் உண்மையான யதார்த்த வாழ்க்கை. :o

 

நான் தமிழ் ஈழம் பிரஜையாக அங்கு போனாலும் போவேனே ஒழிய சொறிலங்காவிற்கு போகமாட்டன்  இது இணையத்தில் பச்சைக்கான வாழ்க்கை . :icon_mrgreen:

 

 

இப்படியும் யோசிக்கலாமே? வடக்கு கிழக்கில் இருக்கும் தமிழர்களுக்கு உதவ வருடத்தில் சில நாட்களாவது அவர்களிடையே வாழ வேண்டியிருக்கும். நீங்கள் வெளிநாட்டுப் பிரஜையாக இருந்தால் விசாக் கெடுபிடி மட்டுமன்றி பணியாற்றக் கூடத் தடைகள் வரலாம்! இரட்டைப் பிரஜாவுரிமை இருந்தால் பயணிப்பதும் பணியாற்றுவதும் சுலபம். எனவே தனிப் பட்ட காரணங்கள் மட்டுமன்றி தமிழர் நலம் பேணும் காரணங்களுக்காகவும் இதைப் பயன் படுத்திக் கொள்வதில் தவறில்லை!

நன்றி ஜஸ்ரின். இதன் மூலம் நீங்கள் கூறும் செய்தி தமிழ் மக்கள் நல்வாழ்வு திட்டம் என்ற சமூக நலன் பேணும் திட்ட நோக்கில் வருடத்தில் ஒரு சில நாட்கள் ஒருவர் அங்கு தங்கினாரலும் அதை ஏதோ ஒரு காரணம் கூறித் தடை சைய்யும் தமிழ் மக்கள் விரோதமான நிலை இலங்கையை ஆளும் அரசுகளுடன் என்றும் இருக்கப்போகிறது என்பதா?
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி ஜஸ்ரின். இதன் மூலம் நீங்கள் கூறும் செய்தி தமிழ் மக்கள் நல்வாழ்வு திட்டம் என்ற சமூக நலன் பேணும் திட்ட நோக்கில் வருடத்தில் ஒரு சில நாட்கள் ஒருவர் அங்கு தங்கினாரலும் அதை ஏதோ ஒரு காரணம் கூறித் தடை சைய்யும் தமிழ் மக்கள் விரோதமான நிலை இலங்கையை ஆளும் அரசுகளுடன் என்றும் இருக்கப்போகிறது என்பதா?

 

எனது தொழில் தரவுகளை வைத்து எதிர்வுகூறல்களும் எடுகோள்களும் உருவாக்குவது! இலங்கையில் கடந்த காலங்களில் வெளிநாட்டுப் பிரஜைகளான தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்கும் என்ன மாதிரியான வரவேற்பு இருந்தது எனப்பார்த்தால், நீங்கள் சொல்லும் நிலைமை தான் எதிர்காலத்திலும் நீடிக்கும் என நம்பலாம்! புற மாற்றங்களுக்கேற்ப சிங்களவர்களும் முஸ்லிம்களும் தங்கள் வழிகளை மாற்றிக் கொள்கிறார்கள்! தமிழர்கள் நாமும் சுழியர்களாக மாறப் பழக வேண்டும் என நினைக்கிறேன்! இதை எப்படி எடுத்துக் கொள்ள விரும்புகிறீர்களோ அப்படியே எடுத்துக் கொள்ளுங்கள்! :D

  • கருத்துக்கள உறவுகள்

 

 

அழவில்லைப் பெருமாள். இது கருத்துக் களம், ஒவ்வொன்றிலும் இருக்கும் சாதக பாதகத்தைக் கதைக்கவே இங்க வருகிறோம்! எடுக்காமல் இருப்பதற்கான காரணங்களைப் போல எடுக்க அவசியமான காரணங்களையும் சொல்வோம்! அவ்வளவே! nothing more, nothing less! :)

வெளி நாட்டு குடிஉரிமை உள்ளவன் சொறிலங்காவில் ஏதோ ஒரு காரணத்திட்க்கு மாட்டுபட்டால் உங்கள்ளுக்காக கேள்வி கேட்க்க அந்த நாடு இருக்கும் .ஆனால் சொறிலங்காவின் காலில் விழுந்து இரட்டை குடிஉரிமை எடுத்த பின் உங்களுக்கு கதைக்க என யாரும் வரமுடியாது.  

  • கருத்துக்கள உறவுகள்

ஜஸ்டின், விசுகு,

ஒரு புத்தக வெளியீட்டில் பேசதென்றாலும் டூரிஸ்ட் விசால போன பிரச்சினை வரலாம். எனவே அரசியல் மட்டுமல்ல சமூக நடவடிக்கைகளில் ஈடுபடுவதையும் இது இலகுவாக்கும்.

மற்றும்படி தமிழ் ஈழ பாஸ்போர்ட் வரும் வரைக்கும் கொழும்பு ஊடாக ஊருக்கு போக மாட்டோம் என கி பி அரவிந்தன் போல் இருந்தால் அது வைராக்கியம்.

அத விட்டுட்டு பொரின் பாஸ்பொர்டில ஊருக்குப் போறது, கொழும்பில கும்மி அடிக்கிறது. புலத்தில் சிறிலங்கா பொருட்களை வாங்கி பாவிப்பது ( புறகணிப்பு போராட்டம் அடைந்த தோல்வி தெரியும்தானே?) கேட்டா சொறிலங்கா பிச்சைகார நாடு.

யாரையும் இரட்டை பிரஜா உரிமை எடுங்கோ எண்டு காலில விழேல்ல பாருங்கோ. எடுக்க முடியுமானவை எடுப்பதால் உள்ள நன்மை தீமைகளை அலசுறோம். அவ்வளவே.

இசை அதென்ன 4 வருடக் கணக்கு? நெடுக்கர் சொல்லுறமாரி ? ? பேர்சனல் எண்டா சொல்லாதேங்கோ :)

இதைதான் மேலே சொல்லி இருக்கு பெருமாள்.

நான் எடுக்காம இருக்கிறதுக்கு 2 வது காரணமாய் அமைவதும் இதுவே.

எனது தொழில் தரவுகளை வைத்து எதிர்வுகூறல்களும் எடுகோள்களும் உருவாக்குவது! இலங்கையில் கடந்த காலங்களில் வெளிநாட்டுப் பிரஜைகளான தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்கும் என்ன மாதிரியான வரவேற்பு இருந்தது எனப்பார்த்தால், நீங்கள் சொல்லும் நிலைமை தான் எதிர்காலத்திலும் நீடிக்கும் என நம்பலாம்! புற மாற்றங்களுக்கேற்ப சிங்களவர்களும் முஸ்லிம்களும் தங்கள் வழிகளை மாற்றிக் கொள்கிறார்கள்! தமிழர்கள் நாமும் சுழியர்களாக மாறப் பழக வேண்டும் என நினைக்கிறேன்! இதை எப்படி எடுத்துக் கொள்ள விரும்புகிறீர்களோ அப்படியே எடுத்துக் கொள்ளுங்கள்! :D

 

நன்றி ஜஸ்ரன். தங்கள் கருத்துகளை விருப்பத்துடன் வாசிப்பேன். ஒரு இனம் (Nation) என்ற கெளரவத்துடன் ஜதார்த்தவாதிகளாக தமிழர்கள் வாழவேண்டும் என்ற உங்கள் கருத்துகளை மதிக்கிறேன். எப்போதுமே தனது இனத்தை பற்றி தரக்குறைவாக பேசும், இனத்திற்காக அர்பணிப்புடன் தமது உயிர்களை கொடுத்த போராளிகளைக் கூட எள்ளி நகையாடி இளக்கரமாக கருத்து வைக்கும் சிலர் சொறிலங்கா என்றவுடன் தமது சுயநல விசுவாசத்துடன் பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும் என்று தத்துவம் பேசி ஏமாற்றும் நிலைக்கு எதிராகவே எனது கண்டனங்களை பதிவு செய்தேன்.

  • கருத்துக்கள உறவுகள்

முதல் நாளில் 10 பேர் விண்ணபித்தனராம்.

http://www.dailymirror.lk/67315/immigration-dept-receives-10-dual-citizenship-applications

  • கருத்துக்கள உறவுகள்

இதில் நாங்கள் வாக்குவாதப் படுகிறோம்.. ஆனால் உண்மையில் இது நாட்டைவிட்டு வெளியேறும் / வெளியேறிய சிங்களவருக்கான ஏற்பாடு. :huh: உலகளவில் சிறுபான்மையாக உள்ள‌ சிங்களவரை இலங்கைத்தீவில் பெரும்பான்மையாக‌ கால்பதித்திருக்க வழிவகை செய்கிறார்கள்.. :unsure:

  • கருத்துக்கள உறவுகள்

உண்மைதான் இசை - அதை பயன்படுத்தி நாமும் அத்தீவில் எம் இருப்பை ஏன் நிலைநிறுத்தக் கூடாது?

  • கருத்துக்கள உறவுகள்

உண்மைதான் இசை - அதை பயன்படுத்தி நாமும் அத்தீவில் எம் இருப்பை ஏன் நிலைநிறுத்தக் கூடாது?

தேர்தலில் வாக்கு அளிக்கும் உரிமையும் எமக்கு தருவார்களா ?
வசிக்கும் நாட்டில் இருந்து தபால் மூல வாக்களிப்பில் பங்கு எடுக்கலாமா ?
  • கருத்துக்கள உறவுகள்

தேர்தலில் வாக்களிக்கும் உரிமை உண்டு.

அரசியலில் ஈடுபடும் உரிமையும் உண்டு.

ஆனால் விரைவில் இரட்டை குடியுரிமைக் காரர் பாராளுமன்றம் செல்வதை தடை செய்யப்போகிறார்களாம்.

எனக்கு நியாயமாய் படுது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.