Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பால்தேநீர், தேநீர், ஆப்பம் விலைகள் நிர்ணயம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஆமா இந்த எட்டப்பன், காக்கை வன்னியன், கருணா, கே பி இவர்கள் எல்லாம் மலையாளிகளாய் இருக்குமோ?

சும்மா சந்தேகம்தான். :)

  • கருத்துக்கள உறவுகள்

http://www.yarl.com/forum3/index.php?/topic/107068-%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%88%E0%AE%B4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95/


smaikay_2217484f.jpg
 

மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளுடன் தமிழுக்கு இருந்த உறவு அரசியல் காரணங்களால் நலிவடைந்தது.

திராவிட மொழிகளுள் மூத்த மொழியான தமிழ், இந்திய விடுதலைக்கு முன்புகூட தன் சக மொழிகளுடன் நல்லுறவு கொண்டிருந்தது. மொழிவாரி மாநிலம் உருவான பிறகு ஏற்பட்ட அரசியல் காழ்ப்புணர்ச்சி, மொழி மீதான அரசியல்வாதிகளின் நிதானமற்ற ஆவேசம் இரண்டும் ஒரு குடும்ப மொழிகளுக்குள்ளே மாறுபாட்டை உருவாக்கிவிட்டன.

கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளுக்கும் தமிழுக்குமான உறவில் சில அரசியல் காரணங்களால் இடைவெளி வந்துவிட்டது. என்றாலும், விதிவிலக்காகப் பண்பாட்டு ஆய்வாளர் சிலர் இனத்துக்கும் மொழிக்குமான பழைய உறவைச் சரியாகவே பதிவுசெய்துள்ளார்கள்.

ஷெட்டரின் ஆராய்ச்சி

சங்க இலக்கியங்களின் கன்னட மொழி பேசிய பகுதியின் வரலாற்றை நேர்மையாக ஆராய்ந்தவர் ஷெட்டர். இவரது முக்கியமான நூல், ‘ரிஃப்லெக்‌ஷன் ஆன் தி எர்லி டிரவிடியன் ரிலேஷன்’ (Reflection on the Early Dravidian Relation). ஷெட்டர் மானுடவியல், தொல்லியல் வரலாற்றுப் பேராசிரியர். கர்நாடகப் பல்கலைக்கழகத்திலும் கேம்பிரிட்ஜ், ஹார்டுவேர்டு பல்கலைக்கழகங்களிலும் பேராசிரியராக இருந்தவர்.

தென்னிந்திய வரலாறு சங்க காலத்திலிருந்து தொடங்க வேண்டும் என்று ஷெட்டர் பலமுறை வற்புறுத்தியிருக்கிறார். கன்னடமும் தமிழும் ஒரே வேரில் முளைத்தவை என்ற கருத்தை தன் நூல் வழி வெளிப்படுத்திய ஷெட்டர், கன்னட கவிராஜ மார்க்கத்துக்கு முன்னோடி தொல்காப்பியர் என்கிறார்.

கவிராஜரும் தொல்காப்பியரும்

கவிராஜ மார்க்கம் என்பதைத் தமிழில் ‘கவிஞர்களின் ராஜபாதை’ எனக் கூறலாம். இது தொல்காப்பியம் போன்ற இலக்கண நூல்; கவிதை, உரைநடை பற்றியும் கன்னடம் பேசிய மக்களின் நிலம், பண்பாடு பற்றியும் பேசுகிறது. இந்நூலின் ஆசிரியர் ஸ்ரீ விஜயன். இவர் அமோகவர்ஷ நிருதுபங்கன் என்ற அரசனின் (கி.பி.814-878) காலத்தவர். இந்நூல் கி.பி. 850-ல் இயற்றப்பட்டது.

தண்டி முதலானோரின் வடமொழி இலக்கண நூற்களின் பாதிப்பால் கவிராஜ மார்க்கத்தை அதன் ஆசிரியர் எழுதினார்; என்றாலும் கன்னட இலக்கணத்தை வடிவமைக்க திராவிட வேரை நம்பினார். ஒரு விதத்தில் தொல்காப்பியரும் இத்தகையவரே. இருவரும் சமஸ்கிருத, பிராகிரத மரபை அறிந்தவர்கள். பெண்களை வர்ணிப்பதில்கூட இவர்கள் திராவிட வேர்களைத் தேடியவர்கள். தொல்காப்பியத்தையும் கவிராஜ மார்க்கத்தையும் ஒப்பிடும் சூழ்நிலையில் ஷெட்டர் தமிழ் மொழியின் தொன்மை பற்றிய கருத்துக்களை முன்வைத்திருக்கிறார். சங்கப் பாடல்களும் தொல்காப்பியமும் சேர்ந்து ஏறத்தாழ 4,000 பாடல்கள் வருகின்றன. இவை சுமார் 2,000 ஆண்டுகளுக்கு முற்பட்டவை. இந்த அளவுக்குச் செறிவான பழமையான பதிவு உலகில் வேறு மொழிகளுக்கு இல்லை என்கிறார்.

திராவிட வேரைத் தேடலாம்

பொதுவாக, தென்னிந்திய மொழிகளின் இலக்கணக் கூறுகளையும், பண்பாட்டுத் தன்மைகளையும் ஆராய்ந்த ஐரோப்பிய அறிஞர்கள் இவற்றில் திராவிட வேர்களைத் தேடவில்லை. இவற்றின் மூலம் சமஸ்கிருதம் என்றனர். தொல்காப்பியம், கவிராஜ மார்க்கம் இரண்டையும் ஆராய்ந்தவர்கள் இவற்றில் வடஇந்தியச் செல்வாக்கையே தேடினர். இவர்கள் மட்டுமல்ல பழைய உரையாசிரியர்களும் பிற்காலத் தென்னிந்திய மொழியியல் பண்பாட்டு ஆய்வாளர்களும் சமஸ்கிருத வேர்களை மட்டுமே தேடினார்கள். ஒரு வகையில் இது எல்லாமே சமஸ்கிருதமயமாக்கலின் ஆரம்பம். இவர்களைப் பின்பற்றியே மு. ராகவையங்கார் போன்ற தமிழறிஞர்கள் சிலரும் நகர்ந்தனர். ஷெட்டர் இதிலிருந்து வேறுபடுகிறார்.

தொல்காப்பியத்திலும் கவிராஜ மார்க்கத்திலும் கூறப்படும் பண்பாடு பண்டைத் தமிழ்ப் பண்பாடுதான். இவற்றின் மூலத்தை திராவிட வேர்களில் தேடலாம். அரசியல் சார்பில்லாத திராவிடப் பண்பாடு ஒன்று உண்டு. அதைத் தென்னிந்திய மொழிகளின் வழி தேடிக் கண்டுபிடித்தால் ஒரு பொதுமைப் பண்பு கிடைக்கும் என்கிறார் ஷெட்டர்.

தமிழிலிருந்து மலையாளம்

தமிழ் மொழியிலிருந்துதான் மலையாள மொழி உருவானது என்ற கருத்தை கால்டுவெல், குண்டர்ட் போன்றவர்கள் ஆரம்ப காலத்தில் வெளியிட்டபோது கேரளத்து அறிஞர்கள் அதை ஒத்துக்கொண்டனர். பேராசிரியர் இளங்குளம் குஞ்சம்பிள்ளை என்ற மலையாள மொழி ஆய்வாளர் இந்தக் கருத்தை விரிவாக ஆராய்ந்திருக்கிறார். சங்க காலத்திலிருந்து கி.பி. 8-ம் நூற்றாண்டுவரை கேரளத்தின் செய்யுள் மொழியும், பேச்சுவழக்கு மொழியும் தமிழாகத்தான் இருந்தது என்கிறார் இளங்குளம். கேரளத்தின் நவீனப்படைப்பாளிகளும் சிலப்பதிகாரம், பதிற்றுப்பத்து, சங்கப் பாடல்கள் சில ஆகியவற்றைத் தங்கள் மண்ணின் கவிதைகளாகவே உரிமை கொண்டாடுகிறார்கள். வையாபுரிப்பிள்ளையின் கருத்துப்படி தொல்காப்பியம்கூட தென் கேரளத்தைச் சார்ந்தது. குலசேகர ஆழ்வார் கேரள அரசர்; சேரமான் பெருமாள் நாயனார்; புறப்பொருள் வெண்பா மாலை ஆசிரியர் வேணாட்டிகள் என கேரளப் படைப்பாளிகளின் நீண்ட பட்டியலே உள்ளது. அதோடு தீயாட்டுப் பாட்டுகள், சர்வப்பாட்டுகள், கிருஷிப்பாட்டுகள், வள்ளப் பாட்டுகள், சாற்றுப் பாட்டுகள் முதலிய நாட்டார் பாடல்களும் தமிழ் செல்வாக்குடையவை.

கி.பி. 14-ம் நூற்றாண்டில் எழுதப்பட்ட ‘ராமசரித காப்பியம்’, கி.பி.15-ம் நூற்றாண்டில் எழுந்த ‘கிருஷ்ணகாதை’, ‘பாரதமாலை’ போன்ற காவியங்களும் தமிழ் மரபுக்கே முதலிடம் கொடுப்பவை. இந்தக் காவிய கர்த்தாக்கள் தங்கள் பாடல்களைத் தமிழ்க்கவி என்று கூறிக்கொள்ளுவதில் தயக்கம் காட்டவில்லை. ஒரு சான்று:

ஆதி தேவனில் அமிழ்ந்த மனக் காம்புடைய சீராமன்

அன்பினோடே இயம்பின தமிழ்க் கவி வெல்வோர்

போதில் மாதின் இடமாவருடல் வீழ்வதினு பின்

போகி போக சயனன் சரணதார் அயர்வாரே

கி.பி. 9-ம் நூற்றாண்டில் கேரள இலக்கிய மரபில் சமஸ்

கிருதக் கலப்பு வேகமாகப் பாய்ந்ததால் மணிப்பிரவாளத்தில் வைசிக தந்திரம், உண்ணிநீலி சந்தேசம், உண்ணிச்சிரி தேவி சரிதம், அனந்தபுர வர்ணனம் போன்ற இலக்கியங்கள் தோன்றின.

லீலாதிலகம்

மணிப்பிரவாள இலக்கியம் பரவலான பிறகு கி.பி. 14-ம் நூற்றாண்டில் மலையாள இலக்கண நூலான லீலாதிலகம் தோன்றியது. லீலாதிலக ஆசிரியர் தமிழ் அறிந்தவர். தொல்காப்பியம், நன்னூல் போன்ற பல இலக்கண நூற்களைக் கற்றவர். இவர் தொல்காப்பியரை மேற்கோள் காட்டுகிறார். தமிழ் இலக்கணங்கள் கூறும் புணர்ச்சி விதிகளை எடுத்துக்கொண்டவர். வீரசோழியத்தை இவர் ஏற்றுக்கொள்ளவில்லை. சேந்தன் திவாகரத்தை நாட்டுமொழி நிகண்டு என்கிறார். யாப்பருங்கலத்திலிருந்தும் ஒரு எடுத்துக்காட்டு தருகிறார்.

கேரள பாணினீயம்

மலையாள இலக்கண நூல் லீலாதிலகத்தைப் போன்ற இன்னொரு நூல் கேரள பாணினீயம். இதன் ஆசிரியர் ஏ.ஆர். ராஜராஜவர்மா (1863 – 1918) கேரள பாணினீயம் 1895-ல் வந்தது. 7 பகுதிகள் 194 நூற்பாக்கள் என அமைந்தது. இந்நூலை பேராசிரியர் இளையபெருமாள் தமிழில் பெயர்த்திருக்கிறார். தமிழகத்தில் நன்னூல்போல் மலையாள மாணவர்களின் இலக்கணப் பாடத்திட்டத்தில் இருப்பது இந்த நூல். இந்த நூலுக்கு விரிவான முகவுரையையும் உரையையும் நூலாசிரியரே எழுதியிருக்கிறார்.

ராஜராஜ வர்மா கேரள பாணினீய முகவுரையில் தமிழிலிருந்துதான் மலையாளம் உருவானது என்பதைக் காரண-காரியங்களுடன் குறிப்பிடுகிறார். தொல்காப்பியம் குறிப்பிடும் பண்டை தமிழ்நாட்டுப் பகுப்பையும் அவர் ஒத்துக்கொள்ளுகிறார். சேரநாட்டில் அடங்கிய தமிழ்ப் பகுதிகளில் தமிழ் வட்டார மொழியாக இருந்தது. ஆனால், இது மதுரைத் தமிழிலிருந்து வேறுபட்டது என்கிறார். வர்மா தன் நூலில் நன்னூலிலிருந்து இருபது இடங்களில் மேற்கோள் காட்டுகிறார். கபிலர், கம்பர், குலசேகர ஆழ்வார் ஆகியோரின் பாடல்களையும் எடுத்தாளுகிறார். நம்பூதிரிகள் கேரளத்தில் நிலையாகத் தங்க ஆரம்பித்த காலகட்டத்தில் (கி.பி. 600 – 774) கேரளத் தமிழில் வடமொழிக் கலப்பு அதிகரித்தது என்ற லீலாதிலக நூல் கருத்தை இவரும் ஒத்துக்கொள்ளுகிறார்.

“கொடுந்தமிழ் மொழி திராவிடமாகிய இமயமலையிலிருந்து சமஸ்கிருத யமுனையில் கலந்து மலையாளமாயிற்று” என்கிறார் ராஜராஜ வர்மா.

மலையாளம் பிரிந்ததற்குக் காரணம் தமிழிலிருந்து மலையாளம் பிரிந்ததற்கு பண்பாடு, இலக்கணம், நம்பூதிரிகளின் செயல்பாடு ஆகியவற்றை ராஜராஜ வர்மா காரணங்களாக்குகிறார். மணிப்பிரவாள நடையில் எழுதப்பட்ட காலத்தில் மலையாள இலக்கியவாதிகள் பழந்தமிழ்ச் சொற்களைத் தங்கள் படைப்பில் எழுதுவதில் தயக்கம் காட்டினார்கள். இந்தத் தயக்கம் கூட்டு வெறுப்பாக வளர்ந்தது. இத்தகைய படைப்பாளிகளில் பெரும்பாலானோர் நம்பூதிரிகள். இதே சமயத்தில் திராவிட வேரிலிருந்து வந்த வினையெச்ச, பெயரெச்ச வாய்ப்பாடுகளை எடுத்துக்கொண்டார்கள்.

பிற்காலச் சோழர் காலத்துக்குப் பின் கேரளம் தமிழகத்திலிருந்து அரசியல்ரீதியாகப் பிரிந்தது. இந்த மாநில இயற்கையமைப்பும் ஒரு காரணம். தமிழ் மண்ணின் தாயாதிகள் என்னும் பண்டைய எண்ணம் மெல்ல மறைந்தது. தமிழர்களுடனான உறவும் குறைந்தது. பக்தர்களும் வியாபாரிகளும் தமிழகத்திலிருந்து கேரளத்துக்குச் செல்வது என்ற சூழ்நிலை உருவானது.

கேரளத்தின் மருமக்கள்வழி தமிழர்களுடனான உறவைத் துண்டித்தது சமூகக் காரணங்களில் முக்கியமானது என்கிறார் ராஜராஜவர்மா. தமிழிலிருந்து மலையாளம் பிரிந்து செல்வதற்கு சில இலக்கண விதிமுறைகளும் காரணம் என்கிறார் வர்மா. இந்த இலக்கண விதிகள் பிற்காலச் சோழர் காலத்துக்குப் பின் உருவானவை.

மலையாளத்தில் தமிழ் மூலம்

கேரளத்துக்கும் தமிழகத்துக்கும், கர்நாடகத்துக்கும் தமிழகத்துக்கும் உள்ள உறவில் விரிசல் வந்துவிட்டது. நதிநீர் காரணமாக எழுந்த இந்த விரிசலை ஊடகங்கள் ஊதிப் பெருக்கிவிட்டன. தமிழ், கன்னடம், கேரளம் மூன்றின் பழம் பண்பாட்டு உறவு, மொழி உறவு, அரசியல் உறவு எல்லாம் ஆராய்ச்சியாளர் மத்தியில் பேசப்படுவன ஆகிவிட்டன.

சிலப்பதிகாரக் கண்ணகி வழிபாடு இன்று கேரளத்திலும் ஈழத்திலும் மட்டுமே உள்ளது. சிலப்பதிகாரத்தின் பல்வேறு கதை வடிவங்கள் கேரளத்தில் வாய்மொழியாகவும் கதைப்பாடல் வடிவிலும் உள்ளன என்பது இன்னும் முழுமையாக ஆராயப்படவில்லை.

கேரளத் தோல்பாவைக் கூத்து நிகழ்ச்சியில் கம்பனின் பாடல்கள் 2300 பாடப்படுகின்றன. இந்த நிகழ்ச்சி வட மலபாரில் நிகழ்கின்றது. பண்டைத் தமிழ் இலக்கியங்களில் பேசப்பட்ட ஓணவிழா இன்று கேரளத்தின் மாநில விழா. பழந்தமிழ் இலக்கியங்களில் கூறப்படும் வேலன் வெறியாடல் கேரளத்தில் தெய்யனாட்டமாக ஆடப்படுகிறது. இன்றும் அங்கு வேலன் மதிக்கப்படுகிறார். எட்டுத்தொகைப் பாடல்கள் கூறும் வேலன் இவரே.

இந்த வேர்கள் எல்லாம் எங்கே தொலைந்தன? மறக்கக் காரணம் யார் அல்லது எது?

http://tamil.thehindu.com/opinion/columns/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D/article6625464.ece

 

  • கருத்துக்கள உறவுகள்

விதி யாரை விட்டது தொடக்கத்திலேயே தமிழகத்தினை விட கேரளத்தினை அதிகம் நாடியிருந்தால் சிங்களத்தினை எளிதாக வென்றிருக்கலாம்.

எப்ப என்னதாம்பா முடிவு? 

 

நாங்க மலையாள வம்சமா? தமிழ் வம்சமா? 

ஆமா இந்த எட்டப்பன், காக்கை வன்னியன், கருணா, கே பி இவர்கள் எல்லாம் மலையாளிகளாய் இருக்குமோ?

சும்மா சந்தேகம்தான். :)

ஒரு சந்தேகமும் உங்களுக்கு இல்லை. நீங்கள் பிரசங்கம் செய்ய திரியை திசை திருப்ப பார்க்கின்றீர்கள்.
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

விதி யாரை விட்டது தொடக்கத்திலேயே தமிழகத்தினை விட கேரளத்தினை அதிகம் நாடியிருந்தால் சிங்களத்தினை எளிதாக வென்றிருக்கலாம்.

 

வாலி நீங்கள் பாளி( சிங்களவனின்) மேல் உள்ள கோபத்தை தமிழகத்தவர் மேல் கொஞ்சம் கூடுதலாக காட்டுகிறீர். ஒரு 20 லச்சம் பேர் உள்ள இலங்கை தமிழர்களிடம் கொஞ்சம் கூட ஒற்றுமையும், சரியான திட்டமும் இல்லாதபோது, இந்தியாவின் கீழ் உள்ள 7 கோடி தமிழக தமிழ் மக்கள் எப்படி ஓடி வந்து உங்களுக்கு உதவி செய்து விட முடியும். அதுவும் ஒரு தடை செய்ய பட்ட இயக்கத்திற்கு ஆதரவாக எப்படி அரசியல் கட்சிகள் ஓடி வருவார்கள். கருணாநிதி முயன்றார் ஆனால் முடியவில்லை. ஈழ போர் ஒரு தடை செய்ய பட்ட இயக்கத்திற்கும், ஒரு அரசிற்கும் நடந்த போராக காட்ட பட்டது. தமிழகத்தின் பேச்சை கேட்டா சண்டை பிடித்தீர்கள் இல்லை தமிழகத்தின் பேச்சை கேட்டா ஒரு முடிவுக்கு வர முயன்றீர்கள். இல்லையே. உங்களக்கு எப்பவும் தமிழகத்தின் ஆதரவு வேண்டும் ஆனால் எங்கள் தலைமைகளின் பேச்சை கேட்பதில்லை. 
 
சரி தமிழனாவது உங்களுக்கு உயிரை கொடுத்து போராடினான், மலையாளியை நம்பி இருந்தால் என்ன நடந்திருக்கும் என்று மற்ற ஈழ தமிழர்களின் அறிவிற்கே விட்டு விடுகிறேன். 
  • கருத்துக்கள உறவுகள்

கண்ணா123,

வாலியின் கருத்து ஒட்டுமொத்த ஈழத்தமிழரின் கருத்தல்ல.. அது தமிழகத்தவரை சீண்டுவதற்காக எழுதப்பட்டதாகவே நான் பார்க்கிறேன்.. மற்றும்படி கலைஞர் முயற்சி செய்தார் என்பதை ஏற்க முடியவில்லை.. அவர் பிரச்சினையை தன்பக்கமாக கடத்திப்போகவே நினைத்தார்.. (அரசியல் அனுகூலம் மற்றும் பிரச்சினையை தணிவிக்க வேண்டிய காரணங்களுக்காக..)

நல்லதொரு பதிவு இசை.

இலங்கையையும் இந்தியாவும் நிலத்தொடர்புற்று இருந்தது என்பதில் சந்தேகம் இல்லை.

இலங்கை தீவாக முன்னரே இங்கே மக்கள் இருந்தனரா?

அப்படியாயின் அவர்கள் தமிழரா?

அல்லது வேடுவர் போன்றோர் இனமா?

வேடுவரும்- விஜயன் கோஸ்டி- தமிழர் கலப்பினம்தான் சிங்களவரா ( பாலி, சமஸ்கிருத ஆதிக்கத்துடன்)?

திசமாரகமவில் தமிழில் எல்லாம் பொருட்கள் கண்டுபிட்க்கப்பட்டுள்ளது.

வரலாற்றுக்கு முன்பே தமிழரும் தமிழர் அல்லாதோரும் இலங்கையில் வசித்தனரா?

கேள்விகள் பல விடைதான் இல்லை.

இதுகுறித்து எனக்கு தனிப்பட்ட கருத்துக்களே உள்ளன. நேற்றிலிருந்து தேடிப்பார்த்துக்கொண்டு இருக்கிறேன் ஏதாவது அகப்படுமா என்று.. இன்னும் ஒன்றும் உருப்படியாகக் கிடைக்கவில்லை.. கிடைத்தால் இணைக்கிறேன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழகத்தின் தமிழ் ஆர்வலர்களையும் கேட்டால் தெரியும். கருணாநிதி ஒருவர் தான் இதய சுத்தியாக ஈழ தமிழர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்று நினைத்தவர் என்று. அவருக்கு சாதாரண ஈழ தமிழனும், ஈழ புலியும் ஒன்று தான். அவர் போரை நிறுத்த வேண்டும் என்று ஆட்சியில் இருந்து கொண்டு கெஞ்சினார், போராடினார். ஆனால் மத்திய காங்கிரெஸ் அரசு இந்த போர் நடப்பது தீவிரவாதிகளுக்கும் மற்றும் இலங்கை அரசிற்கும் என்று அவரின் வாயை அடைத்தது. தமிழகத்தில் பொங்குகிற இத்தனை உணர்வுகளுக்கு காரணமே அந்த சேனல் 4 விடியோக்கள் தானே தவிர மற்ற ஏதும் இல்லை. அந்த விடியோக்கள் தான் ஜெயாவின் மனசையே மாற்றியது (உண்மையாகவே மாறியதா?). கருணாநிதி தன்னால் முயன்றதை செய்தார். அவரை குறை கூற முடியாது. அவர் மேலும் அழுத்தம் கொடுத்து போரை நிறுத்த முயற்சிக்கும் போதெல்லாம் அவரை புலி ஆதரவாளர் என்று வட இந்தியாவும், ஜெயாவும் சாடினார்கள். அவரின் நிலைமை இரு தலை கொல்லி எறும்பு போல் தான் இருந்தது.

 

அந்த ராஜீவ் காந்தி படு கொலை மற்றும் அவருடன் இறந்த 21 ஆட்களின் நிகழ்வு நடக்காமல் இருந்திருந்தால் ஈழ பிரச்சனைக்கு தீர்வு கிடைத்திருக்கும். மேலும் ஈழத்தவர்கள் தனி நாடு கேட்டதே தவறான திட்டம். அவர்கள் புதுசேரி போல் ஒரு தனி மாநிலமாக இந்தியாவுடன் இணைந்திருக்க வேண்டும். இந்நேரம் ஈழம் ஒரு கோவா போல் இந்தியாவில் உருவெடுத்திருக்க முடியும். என்ன செய்வது. தமிழகதவரால் ஐடியா தான் கொடுக்க முடியும். எடுத்து கொள்வது ஈழத்தவரின் கைகளில். 

  • கருத்துக்கள உறவுகள்

ரிங்கோ,

மலையாளிகள் மட்டுமில்லை தமிழர்களும் கட் தொரோட் பெல்லொஸ்தான் என்பதை சுட்டவே அப்படி எழுதினேன்.

கண்ணா,

ஈழத்தமிழர்களின் உயிரை துருப்பாக வைத்து குடும்பத்தை ஊழல் வழக்குகளில் இருந்து காப்பாற்றிய கொலைஞன் தான் கருணாநிதி.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழகத்தின் தமிழ் ஆர்வலர்களையும் கேட்டால் தெரியும். கருணாநிதி ஒருவர் தான் இதய சுத்தியாக ஈழ தமிழர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்று நினைத்தவர் என்று. அவருக்கு சாதாரண ஈழ தமிழனும், ஈழ புலியும் ஒன்று தான். அவர் போரை நிறுத்த வேண்டும் என்று ஆட்சியில் இருந்து கொண்டு கெஞ்சினார், போராடினார். ஆனால் மத்திய காங்கிரெஸ் அரசு இந்த போர் நடப்பது தீவிரவாதிகளுக்கும் மற்றும் இலங்கை அரசிற்கும் என்று அவரின் வாயை அடைத்தது. தமிழகத்தில் பொங்குகிற இத்தனை உணர்வுகளுக்கு காரணமே அந்த சேனல் 4 விடியோக்கள் தானே தவிர மற்ற ஏதும் இல்லை. அந்த விடியோக்கள் தான் ஜெயாவின் மனசையே மாற்றியது (உண்மையாகவே மாறியதா?). கருணாநிதி தன்னால் முயன்றதை செய்தார். அவரை குறை கூற முடியாது. அவர் மேலும் அழுத்தம் கொடுத்து போரை நிறுத்த முயற்சிக்கும் போதெல்லாம் அவரை புலி ஆதரவாளர் என்று வட இந்தியாவும், ஜெயாவும் சாடினார்கள். அவரின் நிலைமை இரு தலை கொல்லி எறும்பு போல் தான் இருந்தது.

அந்த ராஜீவ் காந்தி படு கொலை மற்றும் அவருடன் இறந்த 21 ஆட்களின் நிகழ்வு நடக்காமல் இருந்திருந்தால் ஈழ பிரச்சனைக்கு தீர்வு கிடைத்திருக்கும். மேலும் ஈழத்தவர்கள் தனி நாடு கேட்டதே தவறான திட்டம். அவர்கள் புதுசேரி போல் ஒரு தனி மாநிலமாக இந்தியாவுடன் இணைந்திருக்க வேண்டும். இந்நேரம் ஈழம் ஒரு கோவா போல் இந்தியாவில் உருவெடுத்திருக்க முடியும். என்ன செய்வது. தமிழகதவரால் ஐடியா தான் கொடுக்க முடியும். எடுத்து கொள்வது ஈழத்தவரின் கைகளில்.

உங்கள் கருத்தை எடுத்துக்கொண்டிருப்பேன் பின்வருவன நடைபெறாமல் இருந்திருந்தால்..

1) தன்னெழுச்சியாக தமிழகத்தில் தோன்றிய போராட்டங்களை அடக்கியமை (உ+ம்: வழக்கறிஞர் போராட்டம்)

2) சன், கலைஞர் தொலைக்காட்சிகளில் இருட்டடிப்பு.

3) இன அழிப்பு இறுவட்டு விநியோகித்தவர்களை விரட்டிப்பிடித்து கைது செய்தமை.

4) 3 மணிநேர உண்ணாவிரதம்.

5) மத்திய ஆட்சியில் தொடர்ந்தும் நீடித்த விடயம்.

பால் கலக்காத 'டீ'க்கு பேரு, வர டீ அல்லது கட்டஞ்சாயா!

 

துபாயில் அதுக்கு பேரு சுலைமானி (  நாங்கள் கிண்டலாக சொல்வது, பேமானி ! :) )

ஒருமுறை துபாய் வந்தபோது கடையில் பிளேன்டீ கேட்க அவர்களுக்கு புரியவில்லை, பிறகு வேறொரு வாடிக்கையாளரின் உதவியுடன் சுலைமானி என்ற முடிவுக்கு வந்தார்கள்

பிறகு கேட்டார்கள் "பாசல் or நோர்மல்" எண்டு

பிளேன்டீ வேண்டாம் என்று போய்விட்டது

  • கருத்துக்கள உறவுகள்

ம்.. எல்லோரும் பால்தேநீர், ஆப்பம் கொரித்துக்கொண்டே கறுப்பு ஈழம் 'டீ' சாப்பிடுகிறீர்கள் போல..! :o:):lol:

  • கருத்துக்கள உறவுகள்

 

வாலி நீங்கள் பாளி( சிங்களவனின்) மேல் உள்ள கோபத்தை தமிழகத்தவர் மேல் கொஞ்சம் கூடுதலாக காட்டுகிறீர்.

 

 

அவர் தடக்குப்பட்டு வீழ்ந்தாலும் பாளி மேல தான் விழுவார். அவ்வளவு காதல் அதன் மீது. அவருக்கு அதுதான் சரி. :D:lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
இசை, 
 
அப்படி கருணாநிதி நடந்து கொள்ள வில்லை என்றால் அவரை தடை செய்ய பட்ட பயங்கரவாத இயக்கத்துக்கு அவர் துணை நிற்க்கிறார் என்று  அவர் மீதும் அவர் கட்சியின்  மீதும் ஜெயா  பாய்ந்து விடுவார். இதையே சாக்காக வைத்து அவரின்  ஆட்சியை கலைக்க ஜெயாவும் சுவாமியும் முயற்சித்தனர் என்பதை மறக்க கூடாது. முன்பு இது போல் ஈழத்தை ஆதரித்து பதவியை இழந்தவர் கருணாநிதி. எனவே தான் சொன்னேன் அவருடைய நிலைமை இரு தலை கொல்லி எறும்பு போல் இருந்தது. ஈழத்திற்காக அவர் நிறையவே தியாகம் செய்து இருக்கிறார், இரண்டு முறை ஆட்சியை இழந்தும் கூட. ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். தமிழக மக்கள் ராஜீவ் காந்தியின் நிகழ்வுகளுக்கு பிறகு ஈழ பிரச்சனையில் இருந்து விலகி கொண்டு விட்டனர். மேலும் அங்கு நடக்கும் தினம் தற்கொலை நிகழ்வுகள் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியது. என்ன தமிழ்நாடும் இலங்கை போல் ஒரு பிர்ச்சனையனில் மாட்ட கூடாது என்று தெளிவாக இருந்தனர். 
 
இப்படி தமிழகத்தில் ஈழத்திற்காக தியாகம் செய்துள்ளனர். ஆனால் தமிழக தலைமைகளை ஈழத்தின் தலைவர்கள் பொருட்படுத்தவே இல்லை. இப்பொழுதும் மத்திய மோடி அரசையே நம்பு கிறார்களே தவிர தமிழகத்தின் தலைவர்களை கண்டு கொள்வதாக தெரியவில்லை. திரு விக்னேஸ்வரனும் தமிழகத்திற்கு உணர்ச்சி வசப்பட்டு எங்களுக்கு கிடைக்க வேண்டியதை கெடுத்து விடாதீர்கள் என்று கோரிக்கை தான் விடுகிறார். தமிழகத்தின் ஆதரவை கேட்டார்களே தவிர எப்படி ஈழ பிரச்சனையில் அணுகுவது என்று கேட்க வில்லை. மாறாக எங்கள் முடிவு தான் சரி, I am very sorry என்று தமிழகத்தை தள்ளி வைத்தனர். இப்பொழுது வந்து தமிழகம் எங்களை காப்பாற்ற வில்லை என்று சொன்னால் என்ன சொல்வது. வரும் முன் காப்போம் என்று முடிவு எடுக்காமல் கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்க்காரம் செய்து என்ன பயன்.

Edited by kanna123

எங்கு போய் முட்டுவது  :(

எல்லாம் விதி என்று நோவதை தவிர வேறு வழியில்லை .

தமிழகத்தின் தமிழ் ஆர்வலர்களையும் கேட்டால் தெரியும். கருணாநிதி ஒருவர் தான் இதய சுத்தியாக ஈழ தமிழர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்று நினைத்தவர் என்று. அவருக்கு சாதாரண ஈழ தமிழனும், ஈழ புலியும் ஒன்று தான். அவர் போரை நிறுத்த வேண்டும் என்று ஆட்சியில் இருந்து கொண்டு கெஞ்சினார், போராடினார். ஆனால் மத்திய காங்கிரெஸ் அரசு இந்த போர் நடப்பது தீவிரவாதிகளுக்கும் மற்றும் இலங்கை அரசிற்கும் என்று அவரின் வாயை அடைத்தது. தமிழகத்தில் பொங்குகிற இத்தனை உணர்வுகளுக்கு காரணமே அந்த சேனல் 4 விடியோக்கள் தானே தவிர மற்ற ஏதும் இல்லை. அந்த விடியோக்கள் தான் ஜெயாவின் மனசையே மாற்றியது (உண்மையாகவே மாறியதா?). கருணாநிதி தன்னால் முயன்றதை செய்தார். அவரை குறை கூற முடியாது. அவர் மேலும் அழுத்தம் கொடுத்து போரை நிறுத்த முயற்சிக்கும் போதெல்லாம் அவரை புலி ஆதரவாளர் என்று வட இந்தியாவும், ஜெயாவும் சாடினார்கள். அவரின் நிலைமை இரு தலை கொல்லி எறும்பு போல் தான் இருந்தது.

 

அந்த ராஜீவ் காந்தி படு கொலை மற்றும் அவருடன் இறந்த 21 ஆட்களின் நிகழ்வு நடக்காமல் இருந்திருந்தால் ஈழ பிரச்சனைக்கு தீர்வு கிடைத்திருக்கும். மேலும் ஈழத்தவர்கள் தனி நாடு கேட்டதே தவறான திட்டம். அவர்கள் புதுசேரி போல் ஒரு தனி மாநிலமாக இந்தியாவுடன் இணைந்திருக்க வேண்டும். இந்நேரம் ஈழம் ஒரு கோவா போல் இந்தியாவில் உருவெடுத்திருக்க முடியும். என்ன செய்வது. தமிழகதவரால் ஐடியா தான் கொடுக்க முடியும். எடுத்து கொள்வது ஈழத்தவரின் கைகளில். 

 

அவர் இரண்டு முறையும் ஈழதமிழர்களுக்காகவா ஆட்சியை இழந்தார்? 70களில் ஆட்சி இழந்தது ஊழல் குற்றச்சாட்டுகளுக்காக அல்லவா? பொய்யை திரும்ப திரும்ப கூறினால் அது உண்மை ஆகிவிடுமா? 
அவர் மக்கள் எழுச்சியை அடக்காமல் விட்டிருந்தாலே அது மத்திய அரசுக்கு ஒரு நெருக்குதலை குடுத்திருக்கும். மன்னிக்கவும் கருணாநிதியை மன்னிப்பதற்கு ஈழதமிழர் தயாராக இல்லை. 
 
ராஜீவ் கொலை தமிழகத்தை எம்மிடம் இருந்து பிரித்தது என்பதை ஏற்றுக்கொள்கிறேன். புலிகளின் தலைமை எடுத்த மிக முட்டாள்தனமான முடிவு ராஜீவ் கொலை. அந்த ஒரு சம்பவம் ஒட்டுமொத்த ஈழதமிழினத்தையும் அகல பாதாளத்திற்கு தள்ளிவிட்டது. 
  • கருத்துக்கள உறவுகள்

கண்ணா - சிலவிடயங்கள்

1) நாங்கள் யாரையும் நம்பிப் போராடப் போகவில்லை. தமிழ் ஈழம் என்ற கருத்தியலை எம் அரசியல்வாதிகள் தம் நலனுக்காக தூக்கிப் பிடித்தனர். அதை நம்பி இளைஞர்கள் போராடப்போயினர். முதலில் தமிழ் ஈழம் கிடைக்கும் போராடுங்கள் என்று தலைவர்களை கொம்பு சீவிய இந்தியா - பின்னர் போராளிகளையும் அப்படிச் செய்தது. ஆனால் இந்தியா ஒரு போதும் தமிழ் ஈழம் அமைவதை விரும்பவில்லை. இறுதியில் இலங்கை இந்தியாவுடன் சமரசமாய் போனதும். தமிழ் ஈழத்தை கைவிடுங்கள் 13ம் சட்டதிருத்தத்தை எற்று கொள்ளுங்கள் என்று எம்மை பார்த்து சொன்னது இந்தியா.

2) இதற்கு எல்லோரும் ஒத்துப்போக - பிரபா மட்டும் முரண்டு பிடித்தார். ஏனென்றால் அவர் கொள்கை வீரர். கூடவே ராணுவ பலத்தை மட்டும் நம்பிய, தன் ராஜதந்திர இயலுமையில் கொஞ்சூண்டும் நம்பிக்கை இல்லாத ஒருவர். இதனால் இந்தியாவுடன் போரிடும் முட்டாள்தனமான முடிவையும் அதைவிட முட்டாள்தனமான முடிவாகிய ராஜீவ் கொலையையும் செய்தார்.

3) இதற்கு பழிதீர்கவும், தன் கட்டுப்பாட்டில் தமிழ், சிங்கள தரப்பை எப்போதும் வைத்திருக்கவும் இந்தியா எடுத்த முடிவுதான் புலிகளை அழிப்பது. அதற்கு எத்துணை தமிழ் உயிர்கள் போனாலும் பரவாயில்லை என்று இந்திய-இலங்கை அரசுகள் சேர்ந்து முடிவெடுத்தன. இதில் தமிழகத்தை ஓரளவுக்கு மேல் கொதிக்க விடாமல் பார்த்துகொள்ளும் கண்டிராக்ட் கருணாநிதிக்கு வழங்கப்பட்டது. அதற்கான கூலியாக கனிமொழிமீதும் கருணாநிதி மீதும் தொங்கி கொண்டிருந்த ஊழல் வழக்குகளை கண்டு கொள்ளாமல் விடுவது என்று விலை பேசப்பட்டது.

4) ஈழத்தமிழர்களாகிய நாமும், பிரபாகரனும் ஒரு பெரும் பிழையை விட்டோம். அது இது தான். நம் மீது முள்ளிவாய்க்கால் போல் ஒரு வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டால் அதை பார்த்துக் கொண்டு தமிழகத்தில் 7 கோடி பேர் வாளாது இருக்க மாட்டார்கள் எப்படியாவது வீதியில் இறங்கிப் போராடி அதை தடுப்பார்கள் என மனதார நம்பினோம்.

இதை நீங்கள் புலிக்காக செய்திருக்க தேவையில்லை. சக தமிழனுக்காக செய்வீர்கள் என நம்பினோம். இல்லை என்றாகிப் போனது.

சும்மா போலியாக "தொப்புள் கொடி, அக்குள் கொடி" என்று சப்பை கட்டு கட்டுபவர்கள் சொல்வார்கள், கருணாநிதி எழுச்சியை தடுத்தார், மீடியா எழுச்சியை தடுத்தது என்று ஆயிரம் காரணங்கள். ஆனால் உண்மை அதுவல்ல. தமிழகத்தில் தமிழுணர்வு மட்டுமில்லை, மனிதம் செத்தும் பலகாலம் ஆகி விட்டது. எவன் எப்படிப் போனால் எமெக்கென, யாரை ஏய்த்து நாம் எப்படி வாழலாம் என்னும் ஒரு மனோ நிலைதான் இப்போ இருக்கிறது. ஈழத்திலும் இதே நிலைதான். புலிகள் இருந்தவரை தமிழுணர்வு கொஞ்சம் இருந்தது இப்போ எதுவுமில்லை. அப்படி பட்ட ஒரு மக்கள் கூட்டம்தான், 36 கிமி தொலைவில் சொந்த இனம் கருவறுக்கப்படும் போதும், மானாட மைலாட பார்த்தபடி கடலை கொறித்தது.

7 கோடியில் ஒரு 10 லட்சம் பேர் வீதியில் இறங்கி போராடி இருந்தால் போரை நிப்பாட்டி இருக்கலாம். முடியவில்லை. ஏனெண்டால் - "எமெக்கென மனநிலை". இதுதான் உண்மை. ஈழத்தில் மட்டுமில்லை, நாளைக்கு திருநெல்வேலியில் ஒரு முள்ளிவாய்க்காலை நிகர்த்த அனர்த்தம் நிகழ்ந்தாலும் - தமிழ் நாட்டில் ஒரு காக்காய், குருவியும் அசையாது. அதில் சாதி கலக்காதவரை. சாதி கலந்தால் கதி வேறு.

நான் முன்பும் சொல்லியதுதான், ஈழத்தில் நடந்த போர் தமிழர் உரிமைக்காகவன்றி, வன்னியர் உரிமைக்காக, நாடார் உரிமைக்காக, தேவர் உரிமைக்காக, என்று நடந்திருந்தால் அல்லது நாம் மலையாளம் பேசி இருந்தால் - முடிவு இப்படி இருந்திராது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.