Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரசியற் போராட்டமே இந்திய கொள்கையை மாற்றியது. - தமரா முன்னாள் சிறிலங்கா ராஜதந்திரி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய உள்நாட்டு உற்பத்தியில் தமிழகத்துக்கு மூன்றாவது இடம். தகுந்த தலைமை தமிழ்நாட்டில் தோன்றும்போது டில்லியை கட்டுப்படுத்தி வைக்க முடியும்.

http://statisticstimes.com/economy/gdp-of-indian-states.php

  • Replies 78
  • Views 4.3k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

இரெண்டே இரண்டு வர்த்தைகள் மட்டும்.....

Dream on.......

அப்ப நான் வட்டா ?

  • கருத்துக்கள உறவுகள்

நல்லா இருக்கு வில்லுப்பாட்டு :) சின்ன மணி தோத்தார்!

இந்தியாவிடம் Tamil Nadu containment strategy ஒன்று இருக்கு.

அதை அவர்கள் எப்போதும் நடைமுறைப்படுத்திய படியே இருப்பார்கள்.

இது ஒரு constant (மாறிலி). இது எப்போதும் அமுலிலே இருக்கும்.

தேர்தல் போன்ற விடயங்கள் வரும் போது இதன் அமுலாக்கம் வெளித்தெரியும். அவ்வளவே.

கூட்டணிக்காக ஒரு மென்போக்கை தற்காலிகமாக கடைப்பிடித்த படியே, மாணவர் போராட்டம் போன்றவற்றை நலிவடையச் செய்வார்கள். Short term இல் பார்த்தால் இந்த போராடங்கள் ஏதோ வெற்றி அடைவதைப் போல தோன்றினாலும், end result டெல்கி விரும்பியபடியே இருக்கும்.

இந்த containment ஐ உடைத்தால் - தமிழ் நாட்டை எரிநிலைக்கு கொண்டுவந்தால் - எமக்கு நன்மை வரும். இது ஒன்றும் சிதம்பர ரகசியமல்ல.

ஆனால் இது சாத்தியமா என்பதுதான் கேள்வி.

தமாரா மேலே சொன்னது, நீங்கள் சொல்வது அத்தனையும் 100% உண்மை என்றே வைத்துக்கொள்வோம்.

இப்போ நீங்கள் சொன்ன போராட்டத்துக்கு என்ன ஆச்சு? பிசு பிசுத்து விட்டதா இல்லையா?

இறுதியில் இந்தியாவின் நோக்கப் படி விடயங்கள் நடகிறதா இல்லையா?

டெல்லியின் Tamil Nadu containment ஐ உடைப்பத்கற்கு முயற்சிப்பது மேலும் டெல்லியை சினம் கொள்ளவே செய்யும்.

இது ஒரு high risk, low probability option.

பிரபா கையாண்டு தோல்வியில் முடிந்தது.

நல்லவேளை கூட்டமப்புத்தலைமைக்கு இது விளங்கிறது.

றோவுக்கும், மத்திய அரசுக்கும் தெரியாதது எல்லாம் உங்களுக்கு தெரிகிறது. இதற்குள் மற்றவர்கள் வில்லுப்பாட்டாம். :icon_mrgreen:

வெளிநாட்டில் சாய்மன கதிரையில் இருந்து எவ்வளவு high risk உம் எடுக்கலாம். சாகாப்போறது நாமோ நம்ம பிள்ளையளோ இல்லைத்தானே.

போராட்டம் என்பது ஒரு அடையக் கூடிய இலக்கு நோக்கியே இருக்க வேண்டும்.

Struggle for struggle's sake என்பதாக அமைவது மக்களுக்கு நன்மை பயக்காது, சில சாய்மன கதிரை போராளிகளுக்கு it may give some colour to their otherwise pointless existence.

Accepting ground realities and endeavouring for a just and honourable solution, with minimal risk, is not servitude. It is common sense survival strategy.

இப்போ நீங்கள் பாயில் இருந்து ரைப் அடிபதால் பாய் போராளியாகிறீர்கள். :icon_mrgreen:  வெளிநாட்டில் இருந்து எழுதுவது. அதற்குள் மற்றவர்களை பார்த்து நக்கல்.

நல்லவேளை கூட்டமப்புத்தலைமைக்கு இது விளங்கிறது. 

கூட்டமைப்பை போல ஜீனியசை எடுப்பது ரொம்ப கயிட்டம். :)

இரெண்டே இரண்டு வர்த்தைகள் மட்டும்.....

Dream on.......

அப்ப நான் வட்டா ?

வெகு தூரமில்லை..!

  • தொடங்கியவர்

மத்தியால் எந்த அளவுக்கு மாகாணத்தைக் கட்டுப்படுத்த முடியும் என்பதை எமக்குணர்த்தி வருகின்றார் பிரதமர். இதை அறியாமல் மத்தியின் மாய்மாலங்களுக்கு மண்டியிட முனைந்துள்ளோம் எம்முட்சிலர். இதிலே எமது மக்களின் உரித்துக்கள் அடங்கியுள்ளன. இப்பேர்ப்பட்ட செயல்களை வெறும் மனித உறவுகளின் வெளிப்பாடு என்று கூறமுடியாது."

சொன்னவர் விக்கினேசுவரன் , யாருக்குச் சொன்னார் என்று எல்லோருக்கும் விளங்கும்.

he is also dreaming. In order to change you need to dream about the change. If you don't dream you cannot change.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
இங்கு கோஷனும் இசையும் போடும் போட்டி கருத்துக்கள் நன்றாக இருக்கிறது. தமிழக தமிழனான என்னை கேட்டால் ஈழ விஷயத்தில் தமிழக தமிழர்களிடம் அனுதாபமும் , அன்புமும் இருக்கிறது. ஆனால் தெருவில் வந்து இறங்கி தினமும் போராட  நேரமும், ஈழ தமிழர்களை போல் தன்னுடைய இந்திய அரசை எதிர்த்து ஆயுதம் ஏந்த வேண்டிய அவசியமும் இல்லை. 
 
அதனால் கொஷன் சொல்வதை போல் தமிழ் நாட்டை முற்றும் நம்பி இருக்க வேண்டாம். உங்களின் எதிர் காலத்தை நீங்களே உங்கள் தலைமைகளை வைத்து தான் தீர்க்க வேண்டும். வேறு வழி இல்லை. ஒரு வாரம் எங்களால்  உங்களுக்காக போராட முடியும். தினமும் செய்ய முடியுமா. யார் வந்து சோறு போடுவார்கள். எங்களை ஆள்பவர்களை எங்களை விட நன்றாக தேர்ந்து எடுக்க இந்தியாவில் உள்ள எந்த மாநிலதவராலும் முடியாது. தமிழ் நாடு ஒரு அரசை தேர்ந்து எடுக்கிறது என்றால் 237 தொகுதிகளில் 200 ஐ ஒரே கட்சிக்கு கொடுப்பார்கள்.
 
 திராவிட கட்சிகளுக்கு வாக்கு அளித்ததால்  தான் இந்தியாவுடன் முரண் படாமல் ஈழத்தை போல் ஜனங்களை இழக்காமல் காப்பாற்ற முடிந்தது. மேலும் வளர்ச்சியையும் பெற முடிந்தது. இப்பொழுது இசை சொன்னதுபோல் இந்தியாவின் முதல் மாநிலங்களின் வரிசையில் தமிழ் நாடு உள்ளது. எனவே  நான் முன்பு சொன்னது போல் தனி நாட்டுக்காக போராடாமல் இந்தியாவின் ஒரு அதிகாரமிக்க ஒரு மாநிலமாக வேண்டும் என்று  ஈழம் போராடியிருந்தால் இந்நேரம் ஈழம் ஒரு வளர்ச்சி அடைந்த மாநிலமாக உருவாகி இருக்க முடியும். தமிழ்  நாட்டை  தன்னுடைய ஒரு அங்கமாக வைத்து கொண்டு ஒரு தனி தமிழ் ஈழம் உருவாக இந்திய விடவே விடாது. அது ஒரு கானல் நீர் தான் என்று வருத்ததுடன் சொல்லி கொள்கிறேன். 

Edited by kanna123

அ....து....!

இங்குள்ளவர்களுக்கு முகத்தில் அறைந்தது மாதிரி சொல்லியிருக்கிறீர்கள் கண்ணா, உண்மையான தமிழகத்து உணர்வுகளை வெளிப்படுத்தியமைக்கு நன்றி!

  • தொடங்கியவர்
கண்ணா நீங்கள் இந்தியாவையும் சிறிலங்காவையும் ஒன்றாகப் பார்க்கிறீர்கள். சிறிலங்காவில் இரண்டு தேசிய இனங்கள் பல் ஆயிரம் ஆண்டுகளாக இருக்கின்றன. அதில் ஒன்று முழு இலங்கையும் பிடித்து வைத்துக் கொண்டு , ஒன்று குவிக்கப்பட்ட சகல அதிகாரங்களும் பொருந்திய சனாதிபதி முறைமையின் கீழ் , முற்று முழுதும் சிங்கள மயப்படுத்தப்பட்ட இராணுவ, சட்ட , அரசு இயந்திரத்தைக் கொண்டு ஆட்சி நடாத்துகிறது. இந்தியாவில் இது போன்ற நிலைமை இல்லை. இந்தியாவில் தமிழர்கள் இனப் படுகொலைக்கும் ஆளாக வில்லை. இவை அனைத்துமே இலங்கையில் த்மிழர்களுக்கு ஒரு தனி நாடு வேண்டும் என்னும் நிலைக்குத் தள்ளின. தமிழரின் போராட்டம் தனி நாடு கேட்டுத் தொடங்கப்படவும் இல்லை. தனி மாநிலம் கேட்டே  போராட்டம் ஆரம்பமாகியது. பிறகு இலங்கை இந்திய ஒப்பந்தம் மூலம் கொண்டு வரப்பட்ட 13 ஆம் திருத்தச் சட்டமும், சிறிலங்காவில் உள்ள ஆட்சி அதிகாரம் குவிக்கப்பட்ட சனாதிபதி முறைமையினால் பயனற்றதாக இருக்கின்றது.
 
ஆகவே கருத்து எழுதும் போது இவற்றைப் பற்றியும் அறிந்து, ஆளச் சிந்தித்து எழுத வேண்டும். இங்கே  ஈழத்தில் உள்ள தமிழர்கள் தான் தமக்கு எது தீர்வு எனத் தீர்மானிக்க முடியும், அதற்கு அவர்கள் தான் போராட வேண்டும். ஆனால்   கோசன்  போன்றவர்கள் போராடத் தேவை இல்லை என்னும் நிலையில் இங்கே  கருத்துக்களைப் பலகாலமாக எழுதிக் கொண்டிருகின்றனர். இவர்கள் விளக்கம் குறைத்து இவ்வாறு எழுதுகின்றனரா அல்லது வேண்டும் என்றே  போராட்டங்களைச் சிதைப்பதற்காக  எழுதுகின்றனரா என்று தெரியவில்லை.  புலிகள் களத்தில் நின்று தமக்காகப் போராடினர் . ஆனால் அதனை நசுக்கியதில் சிறிலங்கா அரசுக்கு பெரும் உதவி செய்தது இந்திய அரசு. இந்தியக் குடிமக்கள் என்ற வகையில் தமிழ் நாட்டுத் தமிழருக்கும் அந்தப்படுகொலைகளில்   பங்கு இருக்கிறது. ஆகவே குறைந்த பட்சம் அண்டை நாட்டின் மக்கள், மனிதாபிமானம் என்னும் அடிப்படையிலாவது தமிழ் நாட்டுத் தமிழர்களுக்கு கடப்பாடு இருக்கிறது, ஈழத் தமிழர்களின் போராட்டத்திற்கு ஆதரவு வழங்க.
 
ஏனெனில் இனப் படுகொலைக்கு உறுதுணை அழித்தவர்கள் தான் இன்றும் அதே சிறிலங்கா அரசுக்கு உறுதுணை வழங்கிக் கொண்டு இருக்கின்றனர். தமிழ் நாட்டில் பல சக்திகள் எமக்காகக் குரல் கொடுக்கின்றனர், போராடுகின்றனர். மாணவர் போராட்டமே இந்தியக் கொள்கையில் மாற்றத்தை உருவாக்கியது. கோசன் சொல்வதைப் போல் எவருமே எதுவுமே செய்யாது இருந்ததால், ஈழத்தில் தமிழரின் நிலைமை இன்றும் மோசமாகவே    இருந்திருக்கும் இன்றும் மக்கள் முள் வேலி முகாம் கழுக்குள் உள்ளேயி இருந்திருப்பார். இப்போதும் ராஜபக்ஸவிn  ஆட்சியே  நடந்து கொண்டிருக்கும்.
      
  • கருத்துக்கள உறவுகள்

ல் இந்தியாவின் ஒரு அதிகாரமிக்க ஒரு மாநிலமாக வேண்டும் என்று  ஈழம் போராடியிருந்தால் இந்நேரம் ஈழம் ஒரு வளர்ச்சி அடைந்த மாநிலமாக உருவாகி இருக்க முடியும். . அது ஒரு கானல் நீர் தான் என்று வருத்ததுடன் சொல்லி கொள்கிறேன். 

அதுவும் ஒரு கானல் நீர் தான்.......இந்தியாவின் கனவு சிறிலங்கா, தான் அதிகாரம் செய்யக்கூடிய அரசாக இருக்க வேண்டும் என்பதே .....நேபாள்,மாலைதீவு,பூட்டான் போன்ற நாடுகள் போன்று

  • தொடங்கியவர்
சிறிலங்காவைப் போல் இந்தியாவில் பவுத்த பேரினவாதம்  இல்லை என்பதே அடிப்படையான வேற்றுமை. அதில் இருந்து தான் ஈழத்தில் தமிழர்கள் தனி ஈழம் கோரினர். இந்த அடிப்படை வேறு பாட்டை விளங்கிக் கொள்ளாத எவராலும், சிறிலங்காவில் நிகழும்  எந்த அரசியல் நிகழ்வையும்  விழங்க்கிக்கொள்ள முடியாது. துரதிஸ்டவசமாக ஈழத் தமிழர்கள் சிலருக்கு இந்த அடிப்படை அரசியல் அறிவு இல்லை. இது எமது போராட்டம் தொடர்ந்தும்  தோற்பதற்கு  இன்னொரு காரணம்.      
 
நாம் எமது இன்றைய  சோற்றுக்கு வழியைப் பார்ப்போம் என்று இருப்பதே , தமிழர்களின் போராட்டங்கள் வெற்றி பெறாததற்கான அடிப்படை. இதனாலேயே  நாம் இன்றும் நாடு நாடாக சோத்துக்கு அலைந்து கொண்டிருக்கிறோம். அப்படி அன்றாடம் காட்ச்சிகளாகத்  தொடர்ந்து இருப்பதையா தமிழர்கள் விரும்புகின்றனர்.? சிந்தித்து ,தெளிவுற்று , ஒன்று சேர்ந்து போராடுவதன    மூலமே விடுதலையைப் பெற முடியும். அவ்வாறு போராடிய மக்களே உலகில் விடுதலை பெற்று தமது பொருளாதாரத்தையும் வளm படுத்தி உள்ளார்கள். தமிழ் நாட்டிலும் திராவிட இயக்கங்கள் நிகழ்த்திய போராட்டங்க்கலே  தமிழ் மக்களுக்கு இன்றைய பொருளாதார வழத்தைக் கொடுத்திருக்கிறது. 

பெரியாரின் தனி நாட்டுக் கோரிக்கை தான் இந்தியாவில் மொழி வாரி மாநிலங்கள் தோன்றக் காரணம். பெரியார் அவ்வாறு கூறி இருக்கவிட்டால் நேரு  அதைப் பற்றிச் சிந்தித்து இருக்க மாட்டார். சிறிலங்கா போல் ஒன்றுபட்ட மத்தயில்  ஆட்ச்சி அதிகாரம்  குவிக்கப்பட்ட ஒரு இந்தியாவே உருவாகி இருக்கும்.      

  • தொடங்கியவர்

தேசிய இனங்களின் சுயநிர்ணயக்  கோரிக்கை என்பது பிரிந்து செல்வதற்கான உரிமையே . அது பிரிப்பதற்கான கோரிக்கை அல்ல. எவ்வாறு ஒரு குடும்பத்தில் மனைவியைக் கணவன் சமமாக நடத்தாமல் இருந்து , மனைவிக்கு  விவாகரத்துப் பெறும் உரிமை இருக்கிறதோ அவ்வாறன ஒரு அடிப்படை ஜனநாயக உரிமையியே சுயநிர்ணய உரிமை. இதனைப் பிழையாகக் விளங்கிக் கொண்டு அது தனி நாட்டுக் காண கோரிக்கை என எழுதுவது தவறு. ஒரு நாட்டில் பேரினவாதம் இன்னொரு இனக் குழுமத்தை அடக்கும் போது அந்த அடக்கப்படும் இனக் குழுமம் தனது சுய நிர்ணயத்தைக் கூறுவது, தன்னைப் பாதுகாக்க. தினம் அடிக்கும் ஒரு கணவனுடன் வாழ வேண்டும் என்று அந்தப் பெண்ணுக்கு என்ன தலை எழுத்து? எனது கணவர் என்னை நன்றாக வைத்திருக்கிறார் அதனால் நீயும் கணவருடன் சேர்ந்து வாழு என்று சொல்ல எந்தப் பக்கத்து வீட்டுப் பெண்ணுக்கும் உரிமை இல்லை. அடக்கப்படும் பெண் தான் தான் விவாகருத்துப் பெறுவதா சேர்ந்து வாழ்வதா என்று தீர்மானிக்க முடியும்.    

  • தொடங்கியவர்

சம்பந்தரின் போக்கிரித்  தனத்தை உடைக்கும் கஜன். விக்கினேசுவருனும்  கஜனும் இணைய வேண்டும் .

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு கோஷனும் இசையும் போடும் போட்டி கருத்துக்கள் நன்றாக இருக்கிறது. தமிழக தமிழனான என்னை கேட்டால் ஈழ விஷயத்தில் தமிழக தமிழர்களிடம் அனுதாபமும் , அன்புமும் இருக்கிறது. ஆனால் தெருவில் வந்து இறங்கி தினமும் போராட நேரமும், ஈழ தமிழர்களை போல் தன்னுடைய இந்திய அரசை எதிர்த்து ஆயுதம் ஏந்த வேண்டிய அவசியமும் இல்லை.

அதனால் கொஷன் சொல்வதை போல் தமிழ் நாட்டை முற்றும் நம்பி இருக்க வேண்டாம். உங்களின் எதிர் காலத்தை நீங்களே உங்கள் தலைமைகளை வைத்து தான் தீர்க்க வேண்டும். வேறு வழி இல்லை. ஒரு வாரம் எங்களால் உங்களுக்காக போராட முடியும். தினமும் செய்ய முடியுமா. யார் வந்து சோறு போடுவார்கள். எங்களை ஆள்பவர்களை எங்களை விட நன்றாக தேர்ந்து எடுக்க இந்தியாவில் உள்ள எந்த மாநிலதவராலும் முடியாது. தமிழ் நாடு ஒரு அரசை தேர்ந்து எடுக்கிறது என்றால் 237 தொகுதிகளில் 200 ஐ ஒரே கட்சிக்கு கொடுப்பார்கள்.

திராவிட கட்சிகளுக்கு வாக்கு அளித்ததால் தான் இந்தியாவுடன் முரண் படாமல் ஈழத்தை போல் ஜனங்களை இழக்காமல் காப்பாற்ற முடிந்தது. மேலும் வளர்ச்சியையும் பெற முடிந்தது. இப்பொழுது இசை சொன்னதுபோல் இந்தியாவின் முதல் மாநிலங்களின் வரிசையில் தமிழ் நாடு உள்ளது. எனவே நான் முன்பு சொன்னது போல் தனி நாட்டுக்காக போராடாமல் இந்தியாவின் ஒரு அதிகாரமிக்க ஒரு மாநிலமாக வேண்டும் என்று ஈழம் போராடியிருந்தால் இந்நேரம் ஈழம் ஒரு வளர்ச்சி அடைந்த மாநிலமாக உருவாகி இருக்க முடியும். தமிழ் நாட்டை தன்னுடைய ஒரு அங்கமாக வைத்து கொண்டு ஒரு தனி தமிழ் ஈழம் உருவாக இந்திய விடவே விடாது. அது ஒரு கானல் நீர் தான் என்று வருத்ததுடன் சொல்லி கொள்கிறேன்.

கண்ணா..

உங்களுடைய கருத்துக்கள் தமிழகத்தின் நிலையை பிரதிபலிக்கின்றன. ஆனால் சிலவற்றில் எனக்கு முரண்பாடுகள் உண்டு..

1) தமிழகம் ஆயுதம் ஏந்திப் போராட வேண்டும் என்று இங்கு யாரும் நினைக்கவில்லை..

2) தமிழக மக்கள் வாரக்கணக்கில் வீதியில் நின்று போராட வேண்டும் என்றும் இப்போது நினைக்கவில்லை.. இது நடந்திருக்க வேண்டியது முள்ளிவாய்க்கால் நேரத்தில்.. ஆனால் அப்போது நடைபெறாமைக்குப் பல காரணிகள்..

3) தமிழகத்தின் அரசியல் தலைமைகள் ஊழல் பேர்வழிகளிடம் சிக்கியிருப்பதே பல சீர்கேடுகளுக்கும் முக்கிய காரணம்.. முதன்மை மாநிலமாக இருந்தாலும் அதன் குடுமி மத்தியில் மாட்டிக் கொண்டுள்ளது.. ஜெயாவுக்கும், கலைஞருக்கும் தங்களைக் காப்பாற்றும் போராட்டமே பெரும் போராட்டமாக உள்ளது.

குட்டி கேரளம் மத்தியில் எத்தனை செல்வாக்கு செலுத்தகிறது!! (மலையாளத்தையும் செம்மொழி என்று அறிவிக்க வைத்துவிட்டார்களாமே.. அதுக்கு தொல்காப்பியம் தமது இலக்கியம் என்று சொல்லியுள்ளார்களாம்.. :o )

கேரளத்தின் அரசியல் தலைமைகள் டெல்லியில் செல்வாக்கு செலுத்த முடிகிறது.. காரணம் அவர்கள் ஊழல்களில் அகப்படுகிறவர்கள் அல்ல..

தமிழக மக்கள் செய்யவேண்டியது வீதியில் இறங்குதல் அல்ல.. மாறாக, தமது வாக்குரிமைகளை முறையாகப் பயன்படுத்துவது ஒன்றுதான் அவர்கள் செய்யவேண்டியது. திமுகவை விட்டால் அதிமுக.. அதிமுகவை விட்டால் திமுக என்கிற நிலை மாற வேண்டும்.

மக்கள் பலமே அரசியல் பலம். நன்றி.

Edited by இசைக்கலைஞன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழர்கள் எப்பொழுதும் லேட்டாக முடிவு எடுப்பார்கள் என்பதற்கு ஈழ போராட்டங்களும் ஒரு எடுத்துகாட்டு. இலங்கை விடுதலை பெரும் 1948 இல் ஆங்கிலேயர்களிடம் பேசி ஒரு தனி நாடு பெற முயற்சி எடுக்காமல் அதற்க்கு பிறகு நாம் சிங்களத்திடம் மாட்டி கொண்டு விட்டோம் என்று குய்யோ  முய்யோ சத்தம் போடுவதால் என்ன பயன். இலங்கையில் எப்பொழுதும் இரண்டு தேசிய இனங்கள் இருக்கிறது, இரண்டு ராஜ்ஜியங்கள் இருந்தது என்று இப்பொழுது சொல்லி என்ன பயன். ஏன் இந்த சிந்தனையும், முன் எச்சரிக்கை நடவடிக்கையும் அப்பலொழுது இருந்த ஈழ தலைமைகள் எடுக்காமல் கோட்டை விட்டார்கள் என்று புரிந்து கொள்ள முடியவில்லை. இனி ஒன்று பட்ட இலங்கையில் அதிகாரம் பெற்று தான் இருக்க வேண்டிய கட்டாயம் வேறு. இதையாவது ஈழ தலைமைகள் சரியாக செய்ய வேண்டும். 

இது சரியான கேள்வி!! படித்த மேட்டுக்குடி தமது சொந்த நோக்கங்களை தாயகத்தின் நோக்கமாக நினைத்ததால் அன்றே பிரச்சினை தீர்க்கப்படவில்லை. 1915 இல் சிங்களவர்கள் இலங்கை முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்திய வரலாற்றைக் கண்டபின்பும்கூட அவர்களது சிந்தனைகள் மாறவில்லை.. தென்னிலங்கையில் அவர்களுக்கு இருந்த நொடர்புகளை, சொத்துக்களை காப்பாற்றும் ஆர்வம் காரணமாக இருந்திருக்கலாம்..

அட.. அவ்வளவு தூரம் போகவேண்டாம்.. 1947 இல் பாகிஸ்தான் பிரிவினையைக் கண்ட பிறகாவது யோசித்திருக்கலாம்.. இலங்கையின் ஏட்டுப்படிப்பு நாட்டுக்கு உதவாது என்பதற்கு இது ஒரு நல்ல உதாரணம்.. :lol::D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
இசை
 
தமிழகம் அதிமுக , திமுக என்ற இரண்டு கட்சிகளிடம் மாட்டி கொண்டுள்ளனர் என்பது உண்மை தான். அவர்களிடம் வேறு வாய்ப்புகள் இல்லை. தேமுதிக விஜய காந்திற்கு வாய்ப்பு கொடுக்க நினைத்தார்கள் ஆனால் அவருடைய பல நடவடிக்கைகள் மக்களிடம் திராவிட கட்சிகளே பரவா இல்லை என்று மக்களை எண்ண தூண்டியது. இன்னும் 5 -10 வருடங்களுக்கு திராவிட கட்சிகளை தவிர வேறு மாற்று சக்தி வரும் என்று நான் நினைக்க வில்லை. 
 
மேலும் நீங்கள் ஊழலை பற்றி சொன்னீர்கள். ஆம் ஊழல் ஒரு பெரிய பிரச்னை. ஆனால் அது ஒரு தமிழ் நாடு பிரச்னை மட்டும் அல்ல. அது ஒரு பெரிய இந்திய பிரச்னை ஆகும். கேரளத்திலும் இப்பொழுது ஊழலை பற்றி தான் செய்திகள் அதிகம் வருகின்றன. கேரளத்தில் எப்பொழுதும் தேசிய கட்சிகள் தான் ஆட்சிக்கு வரும். ஆனால் தமிழ் நாட்டில் பிராந்திய திராவிட கட்சிகளே வரும். தேசிய கட்சிகளை எப்பொழுதும் தமிழக மக்கள் நம்பியதில்லை. நம்பவும் மாட்டார்கள். இந்த விசயத்தில் தமிழக மக்கள் தெளிவாக உள்ளார்கள். அவர்களுக்கு இந்தியாவில் கிடைக்கும் அதிகாரத்தை வைத்து கொண்டு, தங்களின் பிராந்திய கட்சிகள் மூலம் தேவைகளை நிறைவேற்றி கொள்வதே சரியான வழி என்று தெரிகிறது. 

இலங்கையில்  படித்த தமிழன் 

தமிழர் வாழ்வை அழித்தான்

தமிழகத்தில் வெளியிலிருந்து வந்துவேசம் போட்டவன் அழித்தான்

இனியாவது தமிழர்கள்இ ஏமாறாமல்

தமது சொந்தக்காலில் நிற்கணும்

அதுவே இன்றைய தேவை

அதுவே தமிழருக்கான மீட்ச்சியைத்தரும்...

2016 அதற்கானதே..... :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

இசை

தமிழகம் அதிமுக , திமுக என்ற இரண்டு கட்சிகளிடம் மாட்டி கொண்டுள்ளனர் என்பது உண்மை தான். அவர்களிடம் வேறு வாய்ப்புகள் இல்லை. தேமுதிக விஜய காந்திற்கு வாய்ப்பு கொடுக்க நினைத்தார்கள் ஆனால் அவருடைய பல நடவடிக்கைகள் மக்களிடம் திராவிட கட்சிகளே பரவா இல்லை என்று மக்களை எண்ண தூண்டியது. இன்னும் 5 -10 வருடங்களுக்கு திராவிட கட்சிகளை தவிர வேறு மாற்று சக்தி வரும் என்று நான் நினைக்க வில்லை.

மேலும் நீங்கள் ஊழலை பற்றி சொன்னீர்கள். ஆம் ஊழல் ஒரு பெரிய பிரச்னை. ஆனால் அது ஒரு தமிழ் நாடு பிரச்னை மட்டும் அல்ல. அது ஒரு பெரிய இந்திய பிரச்னை ஆகும். கேரளத்திலும் இப்பொழுது ஊழலை பற்றி தான் செய்திகள் அதிகம் வருகின்றன. கேரளத்தில் எப்பொழுதும் தேசிய கட்சிகள் தான் ஆட்சிக்கு வரும். ஆனால் தமிழ் நாட்டில் பிராந்திய திராவிட கட்சிகளே வரும். தேசிய கட்சிகளை எப்பொழுதும் தமிழக மக்கள் நம்பியதில்லை. நம்பவும் மாட்டார்கள். இந்த விசயத்தில் தமிழக மக்கள் தெளிவாக உள்ளார்கள். அவர்களுக்கு இந்தியாவில் கிடைக்கும் அதிகாரத்தை வைத்து கொண்டு, தங்களின் பிராந்திய கட்சிகள் மூலம் தேவைகளை நிறைவேற்றி கொள்வதே சரியான வழி என்று தெரிகிறது.

விஜய்காந்துக்கு அவர் தனித்து நின்ற தேர்தலில் எத்தனை வீத வாக்குகள் கிடைத்தன?? அவர் தனது தொகுதியில் வெற்றிபெற்ற ஒரு விடயம்தான் அவரது சாதனை. மற்றும்படி அதிமுகவுடன் கூட்டணி அமைத்த காரணத்தினால்தான் எதிர்க்கட்சித் தலைவராக முடிந்தது.

கட்சியை ஆக்குவதும் அழிப்பதும்கூட மக்கள் பலம்தான். தனது முதல் தேர்தலில் பொதுவுடமைக் கட்சியுடன் கூட்டணி கண்ட வைகோ அவர்களுக்கு மக்கள் வாய்ப்பு வழங்கவில்லை.. வேறு வழியில்லாமல் அவரும் பிற்காலங்களில் ஊழல் இயக்கங்களுடன் கூட்டணி கண்டார்.

இன்றைய காலகட்டத்தில் பாறைகளில் சிக்கியிருக்கும் நல்ல வைரங்களைக் கண்டுபிடிப்பது மக்களின் கடமை / பொறுப்பு..! :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
இசை,
 
தமிழக மக்கள் விஜய காந்திற்கு இரண்டு முறை10 சதவிகத வாக்குகள் அளித்தார்கள். இந்த வாக்குகள் அனைத்தும் இரண்டு திராவிட கட்சிகள் மேல் வெறுப்பு உள்ளவர்கள் போட்ட வாக்குகள் ஆகும். அந்த சந்தர்பத்தை சரியாக தேமுதிக பயன் படுத்தி இருந்தால் இந்நேரம் 20 -25 % வாக்குகள் பெற்று தனி பெரும் கட்சியாக வரும் தேர்தலில் வர வாய்ப்பு இருந்தது. இது இப்பொழுது  எட்டா கனியாக போய் விட்டது. இப்பொழுது ஜெயாவின் மேல் வரும் தீர்ப்பை பொருத்து தமிழக அரசியல் உள்ளது. தீர்ப்பு வரும் 20 நாட்களில் வர இருக்கிறது. அந்த தீர்ப்பே ஒரு திராவிட கட்சி இருக்குமா இல்லையா என்ற மிக முக்கிய நிலையை தமிழக மக்களிடம் கொடுக்க உள்ளது. 
  • கருத்துக்கள உறவுகள்

கண்ணா,

மிகச் சரியாக சொன்னீர்கள்.

வாலி மேலே சிவப்பில் கோடிகாட்டியுள்ள, நீங்கள் சொல்லியுள்ள விடயங்கள்தான் அடிப்படை உண்மைகள்.

உங்கள் உண்மையான, தமிழ்நாட்டின் நிலப்பாட்டை 100% பிரதிபலித்த கருத்துக்களுக்கு நன்றி.

சாய்மன கதிரை சேகுவராக்கள் பத்தி எழுத்தாளர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

அவர்களுக்கும் வாழ்வில் ஒரு பிடிப்பு தேவைதானே :)

  • தொடங்கியவர்

சாயாத கதிரையில்  இருந்து தானே புரட்சியாளர் கோஷான் சே  எழுதிறார். நாங்கள் தான் சாய்ந்த கதிரையில  இருந்து எழுதிறம்.

நியானி: சக களா உறுப்பினரை இழிவுபடுத்தும் வகையில் பெயரைத் திரித்தல் ஆகாது.

Edited by நியானி

  • கருத்துக்கள உறவுகள்

இசை,

தமிழக மக்கள் விஜய காந்திற்கு இரண்டு முறை10 சதவிகத வாக்குகள் அளித்தார்கள். இந்த வாக்குகள் அனைத்தும் இரண்டு திராவிட கட்சிகள் மேல் வெறுப்பு உள்ளவர்கள் போட்ட வாக்குகள் ஆகும். அந்த சந்தர்பத்தை சரியாக தேமுதிக பயன் படுத்தி இருந்தால் இந்நேரம் 20 -25 % வாக்குகள் பெற்று தனி பெரும் கட்சியாக வரும் தேர்தலில் வர வாய்ப்பு இருந்தது. இது இப்பொழுது எட்டா கனியாக போய் விட்டது. இப்பொழுது ஜெயாவின் மேல் வரும் தீர்ப்பை பொருத்து தமிழக அரசியல் உள்ளது. தீர்ப்பு வரும் 20 நாட்களில் வர இருக்கிறது. அந்த தீர்ப்பே ஒரு திராவிட கட்சி இருக்குமா இல்லையா என்ற மிக முக்கிய நிலையை தமிழக மக்களிடம் கொடுக்க உள்ளது.

இத்துடன் இன்னொரு புறக்காரணியும் தமிழக அரசியலைப் புரட்டிப் போடப்போகிறது..! :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

**********

ஜெயா வின் மேல் குற்றம் என்று தீர்ப்பு வந்தாலும், அதிமுகவிற்க்குரிய வாக்கு வங்கியில் ஒரு மாற்றமும் வராது.

அந்த புறக்காரணி யாது? சீமானா! உங்க கேமெடி சென்ஸ் நல்லா இருக்கு இசை.

நியானி: திருத்தப்பட்ட கருத்துக்கான பதில் நீக்கப்பட்டுள்ளது.

Edited by நியானி

  • கருத்துக்கள உறவுகள்

***********

நீங்கள் சாய்மனைக் கதிரை என்று எழுதியதுமட்டும் பொருள் செறிந்த கருத்தோ?? :o பந்தை சுவரில் எறிந்தால் அது திரும்பவும் மூஞ்சைக்குத்தான் வரும்.. :icon_idea::D

அந்த புறக்காரணி யாது? சீமானா! உங்க கேமெடி சென்ஸ் நல்லா இருக்கு இசை.

நீங்களாவே கற்பனை பண்ணுவது.. பிறகு அதுக்கு கருத்து எழுதுவது.. இப்பிடியே காலம் போகுது.. :(

நியானி: மேற்கோள் நீக்கப்பட்டுள்ளது.

Edited by நியானி

  • கருத்துக்கள உறவுகள்

சாய்மன ( மனை அல்ல) கதிரை என்பது வாய்சொல்லில் மட்டும் வீரர் என்பதை சுட்டும் விமர்சனக்கூற்று.

************.

எந்த பந்தையும் பார்த்து நான் அலட்டிக்கொளுவதில்லை. இதெல்லாம் ஜுஜுபி :)
எங்களை சஸ்பென்சில் வைக்காம எது அந்த புறக்காரணி என்று சொன்னால் நாங்களும் கருத்து சொல்லுவோமே? :)

நீங்க மட்டும் அறிந்த அந்த புறக்காரணம் யாரோ?

நியானி: ஒரு வரி நீக்கப்பட்டுள்ளது.

Edited by நியானி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.