Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தாயாரின் தாலிக்கொடி, நகைகள், பெருமளவு பணத்துடன் காதலனுடன் ஓட்டம் பிடித்தார் 18 வயது யாழ் மாணவி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தனது தாயாரின் 15 பவுண் தாலிக்கொடி உட்பட 50 பவுண் நகைகள் மற்றும் 6 இலட்சம் ரூபா காசு என்பவற்றுடன் யாழ் பிரபல பாடசாலை மாணவி ஒருவர் தாயாருக்கு கடிதம் எழுதி வைத்துவிட்டு காதலனுடன் தலைமறைவானார்.

 

இவ் வருடம் கா.பொ.த உயர்தரம் எடுக்கும் யாழ் நகருக்கு அண்மையில் உள்ள பிரபலபாடசாலை மாணவி தனது 18 வயது கடந்த 29ம் திகதி முடியும் வரை காத்திருந்து திட்டமிட்ட வகையில் செயற்பட்டு காதல் போதையில் காதலனுடன் தலைமறைவான சம்பவம் தாவடிப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

குறித்த மாணவியின் தந்தை பிரபல வர்த்தகர் ஆவார். மாணவி 17 வயதாக இருக்கும் போது தனது வீட்டுக்கு அயலில் வசித்து வந்த வலிவடக்குப் பகுதியைச் சொந்த இடமாகக் கொண்ட 22 வயதான இளைஞனுடன் காதல் வயப்பட்டுள்ளார்.

குறித்த இளைஞன் க.பொ.த உயர்தரம் வரை கல்விகற்றவர் என்பதும் யாழ் நகரில் புகழ்மிக்க பாடசாலையில் கற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. அத்துடன் கொழும்பில் இருந்து செயற்படும் தனியார் ஒப்பந்த  நிறுவனம் ஒன்றில் தொழில்நுட்பவியலாளராக வேலைபுரிந்து வருகின்றார்,

இவர்களது காதலை அறிந்த தந்தை குறித்த இளைஞனை கடுமையாகத் தாக்கியதுடன் அவனை பொலிஸ்நிலையத்திற்கும் கொண்டு சென்று எச்சரித்துள்ளார். அத்துடன் மாணவியை தனது நகரப்பகுதியில் உள்ள சகோதரியின் வீட்டில் கொண்டு வந்து விட்டு படிக்க செய்துள்ளார்.

சினிமா பாணியில் வில்லனாக மாறிய தந்தை தனது மகளான மாணவியும் இளைஞனும் தமது கைத் தொலைபேசியில் பகிர்ந்து கொண்ட குறுஞ்செய்திகளை அத் தொலைபேசியைப் பறித்து சேகரித்து வைத்திருந்ததுடன்  இளைஞனை அடித்து இனிமேல் இவ்வாறு செய்யமாட்டேன் என கைத் தொலைபேசியில் வீடியோவாக வாக்குமூலம் பெற்றும் 18 வயதுக்குக் குறைந்த சிறுமியை காதலித்த குற்றத்திற்காக பொலிசாரிடமும் கொடுத்து அடி வாங்கச் செய்தும் அவர்களால் அச்சுறுத்தப்பட்டு இளைஞனை கடும் தொல்லைகளுக்கு உள்ளாக்கியிருந்தார்.

அத்துடன் குறித்த வர்த்தகரது கடும்போக்கைக் கண்டு அச்சப்பட்ட இளைஞனின் குடும்பத்தினர் அப் பகுதியில் இருந்து வேறு இடத்திற்கு சென்று குடியேறியுள்ளனர்.

இந் நிலையிலே நேற்று முன்தினம் தனது வீட்டுக்கு வந்த மாணவி தாயாருடன் சந்தோசமாகக் கதைத்து சிரித்தும் தனது தம்பிகளுடன் விளையாடியும் பொழுதைக் கழித்துவிட்டு   பாடசாலையில் பரீட்சை நடைபெறுவதால் அங்கு செல்வதற்காக நகரப்பகுதியில் உள்ள அத்தை வீட்டுக்குச்  தனது தந்தையின் வாகனத்தில் சென்றுள்ளார். அந்த வீட்டில் இருந்து பாடசாலை செல்வதாகத் தெரிவித்து இளைஞனுடன் ஓடித் தப்பியுள்ளார் குறித்த மாணவி.

இதே வேளை தனது வீட்டுக்கு வந்த மாணவி வீட்டு வளவினுள் புதைத்து வைத்திருந்த நகைகள் மற்றும் தந்தை சீட்டுக் கட்டியவர்களுக்கு கொடுப்பதற்காக வைத்திருந்த 6 இலட்சம் ரூபா பணம் என்பவற்றை தனது புத்தகப் பையினுள் கொண்டே மாணவி தலைமறைவாகியுள்ளார்.

மாணவி பாதுகாப்பான இடத்தில் இருந்து கொண்டு தனது தாய்க்கு தொலைபேசியில் தனது காதலனுடன் இருக்கும் தகவல்களையும் தன்னால் காசு எடுக்கப்பட்ட தகவல்களையும் நேற்று காலை  10 மணியளவில் தெரிவித்துள்ளார்.

மகள் இவ்வாறு செய்துவிட்டதை தனது மனைவியால் அறிந்த தந்தைக்கு நெஞ்சு வலி வந்து தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது. இன்று குறித்த இளைஞனையும் மாணவியையும் வரவழைத்து சமாதானம் பேசுவதற்காக அப்பகுதியில் உள்ள முக்கியஸ்தர் ஒருவரும் பெண்ணின் உறவினர்களும் முயன்றுள்ளனர்.

தற்போது குறித்த இளைஞனின் வீட்டில் மாணவியின் உறவினர்கள் இருவர் சென்று முகாமிட்டுள்ளதாகவும் இளைஞனின் பெற்றோர் மற்றும் இளைஞனின் சகோதரிகளை அச்சுறுத்தும் பாணியில் அவர்கள் தொழிற்பட்டு வருவதாகவும் அங்கிருந்த கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

www.yarlosai.com

 

 

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாம் யாழ்தேவி வந்ததாக வந்த வினை.

கடவுளே யாழ்ப்பாணத்தில் செய்திகளுக்கா பஞ்சம். ஓடிப் போய் கட்டுறதெல்லாம் செய்தி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மானங்கெட்ட ஓடுகாலி கழுதைகள்..

காதலித்து தனித்து நிற்க வக்கில்லை. இதற்குள் தாய் தகப்பனின் காசுபணம் நகை களவெடுப்பு......

பெட்டைக்குத்தான் புத்தியில்லையெண்டால் பெடியனுக்கு எங்கை போச்சுது புத்தி....

களவாணிப்பயலுகள்.

  • கருத்துக்கள உறவுகள்

உந்த ரேசில ஒலிம்பிக் போட்டி நடத்தினா நம்மாக்களுக்கு தான் தங்கப் பதக்கம்.. வெள்ளிப் பதக்கம்... வெங்கலம் எல்லாம். 

 

காதல் என்பது ஒரு இயற்கையான.. அழகான.. அனுபவக்கூடிய உணர்வு. அதை.. காமத்தோட கலந்தடிச்சு.. பள்ளிக்கூட வயசில.. படிப்பைக் கெடுத்து.. புள்ளையச் சுமந்து.. பிறகு அதன் மீது உங்கள் கனவுகளை திணித்து துன்புறுத்துவதிலும்.. நீங்களா ஓடமுதல்..யோசிங்க..! அப்படி யோசிக்க சமூகம் வழிகாட்டல்லையுன்னா.. அது சமூகத்தின் தப்பு. ஓடியவர்களின் தப்பு மாத்திரமில்ல.  :icon_idea:  :)

 

யாழ் தேவி வரவின் பின்னாடி.. உந்த ரேசின் அளவும் அதிகரிச்சிருக்குது. இரண்டு இடையிலும்.. பாசிட்டிவ் காரிலேசன் உள்ளது போலவே தெரிகிறது.  :lol:

  • கருத்துக்கள உறவுகள்

காதல் கலியாணம் எண்டு கட்டப்போனால், தகப்பன் சீதனம் குடுக்க மாட்டார்! :D

 

சீதனம் கேட்டுக் 'கோட்டு' அது .. இது எண்டு அலைய ஏலுமோ? ஏலாது தானே!

 

அவளுக்குச் சேர வேண்டிய 'சீதனத்தை' அவள் எடுத்துக்கொண்டு போய்ற்றாள் எண்டு விட்டுப் போட்டு வேற வேலையைப் பாருங்கப்பா! :icon_idea:

 

தகப்பனின்ர 'ஈகோவுக்கு' ஒரு பெரிய 'அடி' தான்! :wub:

  • கருத்துக்கள உறவுகள்

//குறித்த இளைஞனையும் மாணவியையும் வரவழைத்து சமாதானம் பேசுவதற்காக அப்பகுதியில் உள்ள முக்கியஸ்தர் ஒருவரும் பெண்ணின் உறவினர்களும் முயன்றுள்ளனர்.//

 

ஓடிப் போனவள்.. ஓடிப் போனவள் தானே....
இனி, என்ன.... சமாதானம் வேண்டிக் கிடக்கு. :)

  • கருத்துக்கள உறவுகள்

உந்தச் சாதி, கவுரவம், சமயம் பாக்கிற ஆக்களுக்கு இது நல்லா வேணும்! அந்தப் பிள்ளை செய்தது சரி! இந்த தாவடி, இணுவில் எல்லாம் கிராமப்புறங்கள், ஆனால் அவைக்கு நினைப்பு வேறை! இப்ப தன்னோட ஓடி வந்த பிள்ளையை ஏமாத்தாமல் கடைசிவரை அவளை காப்பாற்ற வேண்டியது அந்தப் பெடியனின் பொறுப்பு! மற்றது காசைக் கரியாக்காமல் வேலைக்கு ஒழுங்காப் போகவேணும். முடிஞ்சால் அந்தப் பிள்ளையை உயர்தரம் படிக்க வைக்கலாம்!

புலிகள்  இருந்தால்  இப்படி  ஓடி  போக  முடியுமே .......நம்ம  பங்குக்கு  ஏதாவது  சொல்லிட்டு  போவம் ,கலியாணம்  கட்டுறது  கூட  இப்ப  தலைப்பு  செய்தி  ஆகிட்டு ....

 

எல்லாம்  கூட்டமைப்பு தலைவர்கள்  என்ன  செய்து  கொண்டு  இருக்கிறார்கள் என்று  இன்னும்  எவரும் கேள்வி  கேட்க்கவில்லை அப்பாடா  :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

புலிகள் இருந்தால் இப்படி ஓடி போக முடியுமே .......நம்ம பங்குக்கு ஏதாவது சொல்லிட்டு போவம் ,கலியாணம் கட்டுறது கூட இப்ப தலைப்பு செய்தி ஆகிட்டு ....

எல்லாம் கூட்டமைப்பு தலைவர்கள் என்ன செய்து கொண்டு இருக்கிறார்கள் என்று இன்னும் எவரும் கேள்வி கேட்க்கவில்லை அப்பாடா :icon_idea:

கூட்டமைப்பில் உள்ள ஆக்கள் எல்லாம் வயசுபோன ஆக்கள்,அவையல் இதில என்ன செய்யமுடியும். அஞ்சரன்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

திருட்டு குற்றத்துக்காக மகளை பெற்றோர் போலீசில் பிடித்து கொடுக்க வேண்டும். பெற்ற தாயின் தாலியை திருடிக்கொண்டு ஓடும் பிள்ளை என்றால் எவ்வளவு வக்கிரகுணம் உள்ள பெண் இவள்? பெற்றாருடன் வாழ்ந்தாலும் இப்படியான களவுகள் செய்வதற்கு பிள்ளைகளிற்கு உரிமை இல்லை. பாட்டன், பூட்டன் வழிச்சொத்து உயில்மூலமாய் கிடைப்பது வேறு விசயம். ஆனால், பெற்றோர் வீட்டிலேயே இப்படி திருடுவதை எந்தநாட்டு சட்டமும் அனுமதிக்காது. ஒன்றில் பெற்றோர் மகளை மனம் உவந்து அவள் விரும்புவனுடன் வாழ்வதற்கு வழிவிடவேண்டும். அல்லது, போலிசில் புகார் செய்து தம் மகளிற்கு திருட்டு குற்றத்திற்காக சட்டரீதியான தண்டனையை பெற்றுக்கொடுக்க வேண்டும்.

எமது பண்டைய சங்ககால மரபின் படி காந்தர்வ மணம் புரிந்த தம்பதியை நீடூழி வாழ்கவென வாழ்த்துவதை 
விட்டுவிட்டு ஓடுகாலிகள் என்றெல்லாம் திட்டுவது நல்லாயில்லை.  :D  :lol:
  • கருத்துக்கள உறவுகள்

திருட்டு குற்றத்துக்காக மகளை பெற்றோர் போலீசில் பிடித்து கொடுக்க வேண்டும். பெற்ற தாயின் தாலியை திருடிக்கொண்டு ஓடும் பிள்ளை என்றால் எவ்வளவு வக்கிரகுணம் உள்ள பெண் இவள்? பெற்றாருடன் வாழ்ந்தாலும் இப்படியான களவுகள் செய்வதற்கு பிள்ளைகளிற்கு உரிமை இல்லை. பாட்டன், பூட்டன் வழிச்சொத்து உயில்மூலமாய் கிடைப்பது வேறு விசயம். ஆனால், பெற்றோர் வீட்டிலேயே இப்படி திருடுவதை எந்தநாட்டு சட்டமும் அனுமதிக்காது. ஒன்றில் பெற்றோர் மகளை மனம் உவந்து அவள் விரும்புவனுடன் வாழ்வதற்கு வழிவிடவேண்டும். அல்லது, போலிசில் புகார் செய்து தம் மகளிற்கு திருட்டு குற்றத்திற்காக சட்டரீதியான தண்டனையை பெற்றுக்கொடுக்க வேண்டும்.

 

நன்றி  கிழவி

 

இது தான் உண்மை

 

எப்பொழுதும் நம்மிலிருந்தே சிந்திக்கணும்

இது போன்ற பெண்களும் ஆண்களும் சுயநலவாதிகள்

பேராசையும் காமமும் உடையவர்கள்

இவர்களுக்கு திருப்தி என்பது கிடைக்கவே கிடைக்காது..

 

இந்தப்பெண் இனி அடிக்கடி மூக்கைச்சிந்தியபடி பெற்றோரிடம் அனுப்பப்படுவார்

வருவார்

அது தான் இவர்களின் நோக்கம்

இதெல்லாம் காதல் கன்றாவிகிடையாது

பணம்

சொத்து மீது தான் கண்...

 

இல்லாது விட்டால்

வீட்டிலிருந்தே படித்திருக்கலாம்

காலம்வரும்வரை காத்திருந்திருக்கலாம்

சொந்தக்காலில் இருவரும் நின்றபடி கேள்வியை திரும்ப தொடங்கியிருக்கலாம்

வீட்டிலேயே ஆட்டையைப்போட்டவளை

பெற்றோரை

சகோதரர்களை 

கடைசி நிமிடம்வரை நம்பவைத்து கழுத்தறுத்தவளை

இனி எவரும் நம்பார்

அவர் புகுந்தவீடு உட்பட...

Edited by விசுகு

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உந்தச் சாதி, கவுரவம், சமயம் பாக்கிற ஆக்களுக்கு இது நல்லா வேணும்! அந்தப் பிள்ளை செய்தது சரி! இந்த தாவடி, இணுவில் எல்லாம் கிராமப்புறங்கள், ஆனால் அவைக்கு நினைப்பு வேறை! இப்ப தன்னோட ஓடி வந்த பிள்ளையை ஏமாத்தாமல் கடைசிவரை அவளை காப்பாற்ற வேண்டியது அந்தப் பெடியனின் பொறுப்பு! மற்றது காசைக் கரியாக்காமல் வேலைக்கு ஒழுங்காப் போகவேணும். முடிஞ்சால் அந்தப் பிள்ளையை உயர்தரம் படிக்க வைக்கலாம்!

 

சாதி சமயம் கௌரவம் எல்லாவற்றையும் ஒருபுறம் தள்ளிவைத்துவிட்டு அவர்கள் செய்த வேலை சரியா என சிந்தியுங்கள்.பணத்தை திருடியிருக்கின்றார்.அதுமட்டுமல்லாமல் தாயின் தாலியை திருடியிருக்கின்றார். இதையெல்லாம் சரியென வாதிடுகின்றீர்கள்.
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி  கிழவி

 

இது தான் உண்மை

 

எப்பொழுதும் நம்மிலிருந்தே சிந்திக்கணும்

இது போன்ற பெண்களும் ஆண்களும் சுயநலவாதிகள்

பேராசையும் காமமும் உடையவர்கள்

இவர்களுக்கு திருப்தி என்பது கிடைக்கவே கிடைக்காது..

 

இந்தப்பெண் இனி அடிக்கடி மூக்கைச்சிந்தியபடி பெற்றோரிடம் அனுப்பப்படுவார்

வருவார்

அது தான் இவர்களின் நோக்கம்

இதெல்லாம் காதல் கன்றாவிகிடையாது

பணம்

சொத்து மீது தான் கண்...

 

இல்லாது விட்டால்

வீட்டிலிருந்தே படித்திருக்கலாம்

காலம்வரும்வரை காத்திருந்திருக்கலாம்

சொந்தக்காலில் இருவரும் நின்றபடி கேள்வியை திரும்ப தொடங்கியிருக்கலாம்

வீட்டிலேயே ஆட்டையைப்போட்டவளை

பெற்றோரை

சகோதரர்களை 

கடைசி நிமிடம்வரை நம்பவைத்து கழுத்தறுத்தவளை

இனி எவரும் நம்பார்

அவர் புகுந்தவீடு உட்பட...

 

பையன் நல்லவன் என்றால் அல்லது பையனின் பெற்றோர் நல்லவர்கள் என்றால் இப்படி திருட்டு மூலம் பெண் கொண்டுவந்தவற்றை திருப்பி பெண்ணின் பெற்றோரிடம் ஒப்படைத்து இருப்பார்கள். 

 

பதினெட்டு வயதுக்கு முன்னர் ஓடிப்போனால் சட்டச்சிக்கலில் மாட்டவேண்டி வரும் என்று தெரிந்த பெண்ணுக்கு, பெற்றோரின் பணம், நகைகளை திருடிக்கொண்டு ஓடுவது பாரிய குற்றம் என்பது ஏன் தெரியவில்லை? 

 

பையன் ஒரு தொழில்நுட்ப நிபுணர் என்று கூறப்படுகின்றது. எனவே, நன்றாக திட்டமிட்டு திருட்டு புத்தியை பெண்ணிற்கு சொல்லிக்கொடுத்ததும் பையன் தானாக்கும். பையன் பிரபல பாடசாலையில் படித்தவராம். பிரபல பாடசாலையில் படிப்பவர்கள் சமூகத்தில் வாழ்வதற்கு சிறப்பு சலுகைகள் உள்ளனவா? 

  • கருத்துக்கள உறவுகள்

நகையை தூக்கிக்கொண்டு போனது மிகத்தவறு.. ஆனால் அந்தப் பையனை பெண்ணின் தந்தையார் அடித்தபோது இந்த யோசனை வந்திருக்க வேணும்.. ஒரு தவறு இன்னொரு தவறுக்கு காரணமாகிவிட்டது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.