Jump to content

உங்கள் தாயை அனுமதிப்பீர்களா ??????

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted

பெண்கள் திருமணத்துக்கு முன்னர் கறுப்பு அல்லது வேறு கலர்களில் பொட்டு வைப்பார்கள் ஆனால் கல்யாணம் கட்டாத எந்த ஒரு பெண்ணும் எமது சமுதாயத்தில் குங்குமப் பொட்டு வைப்பதில்லை, திருமணத்தன்று தானே வைப்பார்கள். குங்குமப் பொட்டு திருமணத்துடன் சார்ந்தது என்று நினைக்கிறேன், இப்ப குங்குமப் பொட்டு வைப்பவர்கள் குறைவு மாதிரி இருக்கு, அனேகமானவர்கள் சிவப்பு ஸ்ரிக்கர் பொட்டையே வைக்கின்றார்கள். கணவனுடன் வந்த குங்குமம் கணவனுடன் போவதே நல்லது மாதிரி இருக்கு. மற்றும்படி சிவப்பு ஸ்ரிக்கர் பொட்டு வைப்பதில் தவறு இருக்கிற மாதிரி தெரியேலை. கணவனை இழந்த சில பெண்கள் கறுப்புப் பொட்டு வைப்பதைக் கண்டிருக்கிறேன். 

கணவனை இழந்த பெண் குங்குமப் பொட்டு வைத்துக் கொண்டு திரிந்தால் சமுதாயத்தில் மற்றவர்கள் நிட்சயம் குறைகள் சொல்லுவார்கள் என்பது உண்மை. அதைப் பற்றிக் கவலைப்படாத பெண்ணாயின் விரும்பியபடி செய்யலாம் இச் சுதந்திர பூமியில்!! :D

என் தாய் என்றாலும் இப்படித் தான் சொல்வேன், முடிவு உங்கள் கையில் என்று. எதுக்கும் கட்டாயப்படுத்த மாட்டன்  :D

பெண்கள் தான் பெண்களின் முதல் எதிரி என்று சும்மாவா சொன்னார்கள் :D ஒட்டுப் பொட்டு அறிமுகமானதே எண்பதாம் ஆண்டு காலப் பகுதியில்த் தான். அதற்கு முன்னர் பெண்கள் - திருமணமாகாதவர் கோவிலுக்குப் போனால் குங்குமம் தானே ஐயர் கொடுப்பது மீனா ????? அல்லது உங்கள் ஊர்க் கோயில்களில் ஒட்டுப் பொட்டுத்தானோ ???

குங்கும பொட்டு வைப்பது திருமணத்துடன் ஆரம்பிப்பதால் கணவனை இழந்தவர்கள் ஒட்டு பொட்டுகளை வைக்கலாம்.

அம்மா ,அப்பா இறந்தவுடன் பொட்டு வைக்காமல் விட்டார் ஆனால் நாம் வற்புறுத்தி வைக்க சொல்லி இப்பவும் பொட்டு வைப்பவர்.

குங்குமமா ஒட்டுப் பொட்டா??? குங்குமம் வைக்கும் படி நீங்கள் கூறவில்லையா??? அல்லது சமூகத்துக்குப் பயந்து ஒட்டுப் பொட்டு வைக்கச் சொன்னீர்களா மீரா???

  • Replies 111
  • Created
  • Last Reply
Posted

பெண்கள் தான் பெண்களின் முதல் எதிரி என்று சும்மாவா சொன்னார்கள் :D ஒட்டுப் பொட்டு அறிமுகமானதே எண்பதாம் ஆண்டு காலப் பகுதியில்த் தான். அதற்கு முன்னர் பெண்கள் - திருமணமாகாதவர் கோவிலுக்குப் போனால் குங்குமம் தானே ஐயர் கொடுப்பது மீனா ????? அல்லது உங்கள் ஊர்க் கோயில்களில் ஒட்டுப் பொட்டுத்தானோ ???

ஓட்டுப் பொட்டு வரும் முன்னர்  சின்னப் போத்தலுக்கை வரும் பொட்டை(சிவப்பு, கறுப்பு)  போடுகின்றனாங்கள், சிரட்டைப் போட்டும் போடுறானாங்கள் தானே.

கோயிகளில் குங்குமப் பொட்டை திருமணமானோர் தானே போடுகிறவர்கள்.

அது சரி எவ்வாறாயினும் புலத்தில் கணவன்மார் இருக்கத் தக்கதாகவே பலர் ஆட்கள் பொட்டுப் போடுவதில்லையே.

:D

  • கருத்துக்கள உறவுகள்
Posted

vai-mu-kothainayagi.jpg

4a689528-b2c1-4e96-aeee-526e49e39d3e_S_s

உங்கள் தந்தை இறந்தபின் உங்கள் தாயார் தொடர்ந்தும் குங்குமப் பொட்டு வைக்க நீங்கள் அனுமதிப்பீர்களா ???

நழுவும் மீனாகப் பதிவைப் பார்த்துவிட்டுப் போகாது உங்கள் கருத்துக்களைப் பதியுங்கள் உறவுகளே.

அனுமதிப்பதற்கும் அனுமதிக்காமல் விடுவதற்கும் எமக்கு என்ன உரிமை இருக்கின்றது? அது தாயாரின் விருப்பு வெறுப்புடன் சம்பந்தப்பட்டது. அது அவரின் மனநிலை சம்பந்தப்பட்டது.
 
விதவை குங்குமப்பொட்டு வைக்கலாமா என்றால் இல்லை என்பதுதான் என் கருத்து.
 
பொட்டு வைக்க விரும்பினால் சாந்துப்பொட்டு  போன்ற பலவகைகள் இருக்கின்றன. அவற்ற்றில் ஒன்றை தேர்வு செய்யலாம்.
  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் சுமே

எனக்கு அம்மா 1993 இல் இறந்து விட்டா?

இருந்தாலும் நீண்ட காலமாகவே என் மனதுக்குள் நினைத்து வைத்திருப்பது

என் மரணம் முன்னர் வந்தால்

நான் இருக்கும் போது எப்படி இருக்கிறியோ 

இல்லாத போதும் அப்படியே இருக்க வேண்டும்

என்று மனைவியிடம் சொல்ல வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

முன்னொரு நாள், கங்கைக் கரையில் அமைக்கப்பட்டிருக்கும் ( வாரணாசி என்று நினைவு) விதைவைகளுக்கான 'அநாதை மேடம்' ஒன்று பற்றிய விவரணப் படம் பார்த்தேன்!

சிறு வயதுகளில் பெற்றோரால் நிர்ணயிக்கப் பட்ட 'பாலியல் விவாகங்களில்'.. மணமகன் யாரென்று அறியாமலே விதைவைகளாகிப் போன 'இளசுகளின்' கதை அது!

அவர்கள் சமூகத்தால் சீரழிக்கப் படும் விதம்.... சமுதாயப் பெரிசுகள் .. விலை பேசும் அவர்களது 'கற்பு"!

சிறு குழந்தைகளின்  'கை வளையல்களைப்' பெருசுகள் உடைத்தெறியும் திமிர்....! ( நல்ல வேளை.. இந்த வளையல்கள் உடைக்கும் பழக்கம் இலங்கையில் இல்லை என நினைக்கிறேன்)!

அதை விடக் கொடுமை என்னவெனில்..இவளைத் தொட்டதால் தான் அவன் செத்தான் என்ற கொடும் பழியை அவர்கள் சுமப்பது!

மிகவும் கொடுமையான ஒரு வழக்கம்!

தாய்க்கு மட்டுமல்ல.. எனது பரம எதிரிக்குக் கூட இந்த நிலை.. வரக்கூடாது! :lol:

சுமே, நாங்கள் ஏன் இன்னுமொரு படி மேலே போய்... விதவைகளின் மறுமணம் பற்றிச் சிந்திக்கக் கூடாது( அவர்கள் விரும்பும் பட்சத்தில்)?

இப்படியான செயல்கள்.. தாலியகற்றுதல், பொட்டழித்தல், வெள்ளைப் புடவை அணிதல் போன்ற எல்லாவற்றையும் முடிவுக்குக் கொண்டு வருமே? :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்
Posted

-----

உங்கள் தந்தை இறந்தபின் உங்கள் தாயார் தொடர்ந்தும் குங்குமப் பொட்டு வைக்க நீங்கள் அனுமதிப்பீர்களா ???

தாயின் விருப்பம், அதுவாக இருந்தால்.... அதில் நாம் தலையிடுவது சரியல்ல.

அதனை வரவேற்று... ஊக்கம் கொடுக்க வேண்டும்.

அதுவே.... அவருக்கு, மிகுதிக் காலங்களை... மகிழ்ச்சியுடன் வாழ வழிசமைக்கும்.

அதில்... எமது தலையீடு, அவருக்கு வெளியெ... சொல்ல முடியாத மனக் கவலைகளை உருவாக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
இனி இதெல்லாம் இல்லாது போய்விடும் ......
 
புருஷன் இருக்கிறவர்களே குங்கும போட்டு வைக்க தயங்குகிறார்கள் 
மணமுடித்து விட்டோம் என்று பெடியங்கள் சையிட் அடிக்க மாட்டாங்கள் என்று 
ஸ்டிக்கர் பொட்டுடன் திரிக்கிறார்கள். 
இருக்கிற புருசனுக்கே பொட்டில்லை ....
இல்லாத புருசனுக்கு பொட்டு வைத்தால் என்ன வைக்காது போனால் என்ன?
 
1980 களில் புலிகள் இப்படி செய்தார்கள் அப்படி செய்தார்கள் என்று 
காய்ச்சல் பிடித்து வாந்தி எடுத்து ஒரு கூட்டம் இப்போது திரிகிறது 
ஆறாறிவு இருந்தால் அன்று அவர்களுக்கு இருந்த வசதிகள் பற்றி 
முதலில் சிந்திக்க தூண்டும்   அது இல்லாதவர்கள் வாந்தி எடுத்தே வாழ முடியும். 
 
நாம் உடன் கட்டை ஏறிய சமூகத்தின் விழுதுகள்.
உடன் கட்டை ஏறுவதை ஆயிரம் வருடம் கழித்து வந்த நான் தவறு என்று எளிதாக சொல்ல முடியும்.
ஆயிரம் வருடம் முன்பு கணவன் இறந்த மனைவியின் வாழ்க்கை தான் கேள்விக்கு உட்படுத்த வேண்டியது.
தீர்வு உடன்கட்டையல்ல 
வாழ்க்கை கேள்விக்கு உள்ளானது.
வாழ்க்கைக்கு வழி இருக்கும் நாளில் அது தானாக இல்லாது போய்விடும்.
போய்விட்டது.
 
வட்டத்திற்குள் வாழ்க்கை இருக்கும்போது பொட்டை சந்திர மண்டலம் ஆக்கி கதை பேசிகொண்டோம்.
இப்போ பெட்டைகள் சந்திர மண்டலத்தில் நிற்கிறார்கள் 
யார் பொட்டை பொருள் படுத்த போகிறான்.
 
சமூகத்தை முன்னோக்கி தள்ளிவிட்டால் .........
எல்லாம் தானாக மாறிவிடும்.  
 
ஊரில் சாதி பேசியவர்கள் ...
இங்கு வெள்ளையிடம் என்ன சாதி என்று கேட்டுவிட்டா வேலை கேட்கிறார்கள் ???
இங்கு கூட்டி பெருக்கிவிட்டு ...
திரும்பவவும் வட்டத்திற்குள் போனால் மீண்டும் காதோடு காதக சாதி பேசுகிறார்கள். 
அவர்களை வட்டத்திற்கு வெளியே எடுத்தால் 
சாதியை விடுகிறார்கள்.
குறுகிய வட்டம்தான் பிரச்சனை 
பொட்டு ஒரு பொருட்டே இல்லை.

அம்மாவை வட்டத்திற்குள் வளைப்பதா ??
வெளியே கூட்டி வருவதா ?
என்பதுதான் கேள்வி 
பதில் .............. ஐந்து அறிவு உள்ளவர்கள் 
கூட்டிவர ஆறாம் அறிவை பெறும்வரை காத்திருக்க வேண்டும்.
ஆறாம் அறிவு செயல்பாடில் உள்ளவர்கள் கூட்டி வந்துவிடுவார்கள். 
  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஓட்டுப் பொட்டு வரும் முன்னர்  சின்னப் போத்தலுக்கை வரும் பொட்டை(சிவப்பு, கறுப்பு)  போடுகின்றனாங்கள், சிரட்டைப் போட்டும் போடுறானாங்கள் தானே.

கோயிகளில் குங்குமப் பொட்டை திருமணமானோர் தானே போடுகிறவர்கள்.

அது சரி எவ்வாறாயினும் புலத்தில் கணவன்மார் இருக்கத் தக்கதாகவே பலர் ஆட்கள் பொட்டுப் போடுவதில்லையே.

:D

குங்குமப் பொட்டு விலை அதிகம் என்பதனால் தான் குமரிகள் எல்லாம் சாந்துப் பொட்டை வைப்பார்கள் என நினைக்கிறேன். எனக்கு நினைவு தெரிய குத்துவிளக்குப் பூசை செய்யும் போது எனக்குப் பதினாறு வயது இருக்கும். ஐயரே எல்லாரையும் பொட்டு வையுங்கோ என்று விளக்குக்கும் வைத்து எம்மையும் வைக்கச் சொன்னது நினைவிருக்கு.

நீங்கள் புலம் என்று எதைக் குறிப்பிடுகிறீர்கள் மீனா ஈழத்தையா ????

கணவன்மார் இருக்கும் போதே பலர் போட்டு வைப்பதில்லை என்றால் கணவனுக்கும் பொட்டுக்கும் தொடர்பு இல்லை என்று தானே கொள்ள வேண்டும்

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அனுமதிப்பதற்கும் அனுமதிக்காமல் விடுவதற்கும் எமக்கு என்ன உரிமை இருக்கின்றது? அது தாயாரின் விருப்பு வெறுப்புடன் சம்பந்தப்பட்டது. அது அவரின் மனநிலை சம்பந்தப்பட்டது.
 
விதவை குங்குமப்பொட்டு வைக்கலாமா என்றால் இல்லை என்பதுதான் என் கருத்து.
 
பொட்டு வைக்க விரும்பினால் சாந்துப்பொட்டு  போன்ற பலவகைகள் இருக்கின்றன. அவற்ற்றில் ஒன்றை தேர்வு செய்யலாம்.

மொத்தத்தில் உங்கள் தாயார் குங்குமப் பொட்டு வைப்பதை நீங்கள் விரும்ப மாட்டீர்கள். அப்படித்தானே குமாரசாமி ???

வணக்கம் சுமே

எனக்கு அம்மா 1993 இல் இறந்து விட்டா?

இருந்தாலும் நீண்ட காலமாகவே என் மனதுக்குள் நினைத்து வைத்திருப்பது

என் மரணம் முன்னர் வந்தால்

நான் இருக்கும் போது எப்படி இருக்கிறியோ 

இல்லாத போதும் அப்படியே இருக்க வேண்டும்

என்று மனைவியிடம் சொல்ல வேண்டும்.

அப்ப இன்னும் நீங்கள் சொல்லவே இல்லையா ??? சொல்ல நினைப்பதை நினைக்கும் போதே சொல்லிவிடுவது தான் நல்லது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சுமே, நாங்கள் ஏன் இன்னுமொரு படி மேலே போய்... விதவைகளின் மறுமணம் பற்றிச் சிந்திக்கக் கூடாது( அவர்கள் விரும்பும் பட்சத்தில்)?

இப்படியான செயல்கள்.. தாலியகற்றுதல், பொட்டழித்தல், வெள்ளைப் புடவை அணிதல் போன்ற எல்லாவற்றையும் முடிவுக்குக் கொண்டு வருமே? :icon_idea:

புங்கை நீங்களும் நானும் நினைத்தால் எல்லாம் சமூகத்தில் நடந்துவிடுமா ??/ ஆனாலும் மறுமணம் என்பதைக் கூட ஏற்றுகக் கொள்ளும் எம் சமூகம் குங்குமம் வைப்பதைத்தான் ஏற்றுக் கொள்ளாது போல் இருக்கே ???

நான் கேட்ட கேள்விக்கு நீங்கள் பதில் கூறாமல் பொதுவாக எழுதியுள்ளீர்களே ஏன் ???

  • கருத்துக்கள உறவுகள்
Posted

குங்குமமா ஒட்டுப் பொட்டா??? குங்குமம் வைக்கும் படி நீங்கள் கூறவில்லையா??? அல்லது சமூகத்துக்குப் பயந்து ஓட்டுப் போட்டி வைக்கச் சொன்னீர்களா மீரா???

ஒரு பெண் குங்கும பொட்டு முதன்முதலில் வைக்க் ஆரம்பிப்பது திருமணத்துடன் ஆகவே கணவனை இழந்த பின் குங்கும பொட்டு தேவையற்றது.

எனது தந்தை இறக்கும் போது எனக்கு 8 வயது, அம்மாவின் வெற்று நெற்றியை பார்த்து அழுது கொண்டே, நானே அவரின் நெற்றியில் பொட்டு இட்டேன்.

நான் முதலில் அவருக்கு கொடுத்தது குங்கும பொட்டு ஆனால் அவர் " குங்கும பொட்டும் தாலியும் ஒரு பெண்ணுக்கு அவளது கணவனால் தான் அணியப்படுவது, கணவன் இறந்தபின் அவற்றை அணியக்கூடாது " என கூறி கறுப்பு மைப்பொட்டு வைத்தார். காலப்போக்கில் ஒட்டு பொட்டு பாவனைக்கு வந்தபின் ஒட்டு பொட்டு இன்றும் அணிகிறார்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

தாயின் விருப்பம், அதுவாக இருந்தால்.... அதில் நாம் தலையிடுவது சரியல்ல.

அதனை வரவேற்று... ஊக்கம் கொடுக்க வேண்டும்.

அதுவே.... அவருக்கு, மிகுதிக் காலங்களை... மகிழ்ச்சியுடன் வாழ வழிசமைக்கும்.

அதில்... எமது தலையீடு, அவருக்கு வெளியெ... சொல்ல முடியாத மனக் கவலைகளை உருவாக்கலாம்.

எமக்கு அடுத்த சந்ததி இதை எல்லாம் லட்சியம் செய்யாதவர்களாகவே இருப்பார்கள். நீங்கள் சொல்வதுபோல் பலர் சமூகத்துக்குப் பயந்து பொட்டைப் போடாமல் திரிந்தாலும் அவர்களுக்கு அது மன அழுத்தத்தைக் குடுப்பதாகத்தாநிருக்கும் என்பது நிட்சயம்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

புங்கை நீங்களும் நானும் நினைத்தால் எல்லாம் சமூகத்தில் நடந்துவிடுமா ??/ ஆனாலும் மறுமணம் என்பதைக் கூட ஏற்றுகக் கொள்ளும் எம் சமூகம் குங்குமம் வைப்பதைத்தான் ஏற்றுக் கொள்ளாது போல் இருக்கே ???

நான் கேட்ட கேள்விக்கு நீங்கள் பதில் கூறாமல் பொதுவாக எழுதியுள்ளீர்களே ஏன் ???

வணக்கம், சுமே!

எனது தாயார் ஒரு படித்தவர்! அவருக்குப் புத்தி சொல்லும் 'அருகதை' எனக்கில்லை!

அவர் எனது அபிப்பிராயத்தைக் கேட்கும் நிலை ஏற்பட்டால், எனது பதில் "உங்கள் விருப்பம் எதுவோ, அதன் படி முடிவெடுங்கள்" என்பதாகவே இருக்கும்!

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அம்மாவை வட்டத்திற்குள் வளைப்பதா ??
வெளியே கூட்டி வருவதா ?
என்பதுதான் கேள்வி 
பதில் .............. ஐந்து அறிவு உள்ளவர்கள் 
கூட்டிவர ஆறாம் அறிவை பெறும்வரை காத்திருக்க வேண்டும்.
ஆறாம் அறிவு செயல்பாடில் உள்ளவர்கள் கூட்டி வந்துவிடுவார்கள். 

அம்மாவை மட்டும் கூட்டி வந்துவிட்டால் பிரச்சனை தீர்ந்துவிடுமா ??? பார்ப்பவர்களும் தடுப்பவர்களும் இன்னும் வட்டத்துள்ளேயல்லா.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம், சுமே!

எனது தாயார் ஒரு படித்தவர்! அவருக்குப் புத்தி சொல்லும் 'அருகதை' எனக்கில்லை!

அவர் எனது அபிப்பிராயத்தைக் கேட்கும் நிலை ஏற்பட்டால், எனது பதில் "உங்கள் விருப்பம் எதுவோ, அதன் படி முடிவெடுங்கள்" என்பதாகவே இருக்கும்!

எனது தாயார் கூட கூடைப்பந்து ஆடிய, கவிதைகள், சிறுவர் பாடல்கள் எழுதிய, அடிமைத் தனமற்ற சுதந்திரமான ஒரு பெண் தான். ஆனாலும் தனக்கு என்று வரும்போது தங்கள் அறிவை அவர்கள் பயன்படுத்துவது இல்லை. 

Posted

குமரிகள் குங்குமப்பொட்டு வைப்பதும் வழக்கத்தில் இருந்தது என்றுதான் நானும் நினைக்கிறேன். ஆனால் மேல் நெற்றி வகிட்டிலும் குங்குமம் வைத்தால் மணமானவர் என்று பொருள். அல்லது இது தமிழகத்து வழக்கமோ தெரியவில்லை.

சுமே... உங்கள் அம்மாவினதும், அப்பாவினதும் வாழ்க்கைக்குள் ஆயிரம் இரகசியங்கள் புதைந்திருக்கக் கூடும்! 

அவர்கள் இருவருக்குமிடையில் ஒரு விதமான 'புரிந்துணர்வு' நிச்சயம் இருந்திருக்கும்! அது அவர்களுக்கு மட்டுமே உரியது!

உங்கள் தாயாரின் முடிவானது, சமூகத்துக்குப் பயந்து எடுக்கப் பட்ட ஒன்றாக நிச்சயம் இருக்க முடியாது!

அது ஒரு வேளை.. உங்கள் தந்தையாருக்கு அவர் அளிக்கக்கூடிய மிக உயர்ந்த 'மரியாதையாகக்' கூட இருக்கலாம்!

எனவே .. யாரிடமும் எதையும் திணிப்பதில் எனக்கு என்றுமே நம்பிக்கை இருந்ததில்லை! எனது தாயாரிடம் கூட, நான் இதுவரை எதையுமே வற்புறுத்தித் திணித்தது இல்லை!

நன்றியண்ணா..

இதைத்தான் நானும் எழுதினேன்....

சுமே

ஏதோ புதுமையைப்பகுத்துகின்றோம் என்று 

மற்றவர்களின் சொந்த வாழ்க்கையில் தலையிடுவதை உணர்வாராக..

Posted

என்னைப் பொறுத்த வரைக்கும் இது பிள்ளைகள் சொல்லி செய்ய வேண்டிய ஒன்று அல்ல. பல வருடங்கள் ஒன்றாக வாழ்ந்த தம்பதியரின் வாழ்வே எதை செய்ய வேண்டும் என்று அவர்களுக்கு உணர்தி இருக்கும்.

என் வீட்டில் என் அப்பா தான் இறந்து விடுவேன் என்று நிச்சயமாக புரிந்த கொண்ட பின் சாவதற்கு 10 தினங்களுக்கு முன்பாகவே ' ஒரு போதும் இந்த பொட்டை வைக்காமல் விடக் கூடாது' என்று சொல்லி விட்டே இறந்தவர். என் அம்மா அப்பா இறந்து 10 வருடங்கள் சென்ற பின்னும் இன்று வரைக்கும் பொட்டு வைத்துக் கொண்டு வர்ண சேலைகள் கட்டிக் கொண்டு தான் வாழ்கின்றார்.

அது அவர் அப்பாவுக்கு கொடுக்கும் மரியாதையாக இருக்கலாம், அல்லது தன்னுணர்வு நிரம்பப் பெற்றவர் என்பதால் சுய சிந்தனையின் பால் எழுந்ததாக இருக்கலாம்.

அம்மாவின் செயலுக்கு முதலில் அப்பாவின் சகோதரங்கள் கொஞ்சம் முணுமுணுத்தார்கள், பின் அவர்களில் கணவரை இழந்தவரும் வர்ண சேலைகள் பொட்டு என்பதை துணிந்து அணியத் தொடங்கினார்.

அப்பாவின் மரண வீட்டில் தாலி கழட்டி வைக்கும் சம்பிரதாயம் மட்டுமே அம்மா சூழ்நிலைகளால் செய்த ஒரு காரியம்..அதை பின்னர் சரி செய்து கொண்டார்.

இங்கு அப்பா அம்மாவினது உறவின் நீட்சிதான் இன்னும் எமக்கு தெரிகின்றது. பிள்ளைகளாகிய எங்களின் நம்பிக்கைகள், கொள்கைகள் பெற்றோரை  மாற்றுவதில்லை.

எனக்கு சாவு வந்தால் மரணச் சடங்கில் சாதியத்தினை வலியுறுத்தும் ஐயனைக் கூட்டி வந்து செய்யும் சடங்கு போன்ற எந்தவொரு விடயத்தினையும் செய்யக் கூடாது என்பதை என் குடும்பத்தினர் முக்கியமாக மனைவி புரிந்து வைத்துள்ளார். பொட்டு வைப்பது தொடர்பாக, தாலி கழட்டி எறிவது தொடர்பாக என்ன செய்ய வேண்டும் என்பதையும் அவர் புரிந்து வைத்துள்ளார்.

என் பிள்ளைகளின் உத்தரவுக்காகவோ அல்லது அனுமதிக்காகவோ அவர் காத்திருக்கவும் போவதில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மொத்தத்தில் உங்கள் தாயார் குங்குமப் பொட்டு வைப்பதை நீங்கள் விரும்ப மாட்டீர்கள். அப்படித்தானே குமாரசாமி ???

தமிழ்ப் பெண்கள் எப்போதிலிருந்து / எதன் பின் குங்குமப்பொட்டு வைப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர்?

எனக்குதெரிந்து திருமணம் முடிக்காத பெண்கள் குங்குமப்பொட்டு வைத்ததாக தெரியவில்லை. 

Posted

குங்குமப் பொட்டுக்கும்  அல்லது எந்தப் பொட்டுகளுக்கும் திருமணம் தொடர்பில்லை அல்லது கணவன் காரணம் இல்லை என்பது தான் சுமேயின் வாதம். சுமே தான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்று நினைத்துக் கொண்டு வாதம் புரிகிறா நீங்கள் அம்மா என்ன செய்ய வேண்டும் என்று நினைத்தபடியோ அல்லது அம்மா விரும்பியபடியோ செய்யுங்கோ டியர், எங்கடை நேரத்தை வீணாக்காமல்  :rolleyes:  :D 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

எனது தாயார் கூட கூடைப்பந்து ஆடிய, கவிதைகள், சிறுவர் பாடல்கள் எழுதிய, அடிமைத் தனமற்ற சுதந்திரமான ஒரு பெண் தான். ஆனாலும் தனக்கு என்று வரும்போது தங்கள் அறிவை அவர்கள் பயன்படுத்துவது இல்லை. 

மேலதிக அறிவுடன் எமது கலாச்சாரத்தை ஆராய வெளிக்கிட்டால் தமிழகத்தில் நடக்கும் தாலியறுப்பு போராட்டமும் நியாயமானதே. உங்கள் குங்குமப்பொட்டு திரியும் தேவையற்றது.
 
எந்தவொரு மதமும் கலாச்சாரமும் ஒரு எல்லைக்குட்பட்டது. அதனை மேலதிக அறிவுடன் ஆராயும் போது தேவையற்ற ஒன்றாகவே தெரியும்.

உண்மை!!

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நான் என்ன நடந்தது என்று முதலிலேயே எழுதினால் திரியில் எழுதுபவர்கள் எனது கருத்துக்குச் சார்பாக அல்லது எழுதியதுக்குச் சார்பாக எழுதுவார்களே என்ற காரணம் தான்.

அப்பாவின் முப்பத்தியோராம் நாள் துடக்குக் கழிக்க என வந்த ஐயர் கிரியைகளைச் செய்துவிட்டு விபூதி சந்தானம் குங்குமம் என்பவற்றை அனைவருக்கும் கொடுக்கும்படி கூறி என் கடைசித் தம்பியிடம் கொடுத்தார். என் கடைசித் தம்பி தன் பத்து வயதில் யேர்மனிக்கு வந்தவன். அவனின் நண்பர்கள் இலங்கையில் பிறந்து வளர்ந்து இருபது வயதின் பின்னர் வெளிநாடு வந்து குடும்பமாகி வசிப்பவர்கள்.

அவன் அம்மாவிடம் தட்டை நீட்டியதும் அம்மா விபூதி சந்தானம் வைத்துவிட்டு குங்குமத்தை எடுக்கும் போது நீங்கள் வைக்கக் கூடாது என்று தம்பி உடனே தட்டை இழுத்துவிட்டான். பார்த்துக்கொண்டு நின்ற எனக்குக் கோவம் வந்து ஏன் வைக்கக் கூடாது. நீ அதைச் சொல்லக் கூடாது என்று கொஞ்சம் சத்தமாகக் கூறிவிட்டேன். உடனே ஐயர் விடுங்கோ நிவேதா என்று கூற ஐயருக்கு முன்னால் நான் பிறகு ஒன்றும் கூறவில்லை.

ஐயரை அனுப்பத் தம்பி போக நான் உடனே அம்மாவுக்கு குங்குமப் பொட்டை எடுத்து வைத்துவிட்டேன். அம்மா ஒன்றும் கூறவில்லை. முகத்திலும் எந்த உணர்வையும் காட்டாமல் தன் பாட்டில் திரிந்தார். பத்து நிமிடத்தில் திரும்ப வந்த தம்பி, உங்களுக்கு சொன்னால் விளங்காதா அம்மா என்று கூற, நான் தான் அம்மாவுக்கு வைத்துவிட்டேன். பொட்டு வைப்பது வைக்காதது அம்மாவின் உரிமை. அப்பா இருந்தாலும் அதைத்தான் சொல்லியிருப்பார். நீ என்ன வைக்க வேண்டாம் என்று கூறுவது  என்று நான் கூற மீண்டும் அவன் எனக்கு எதிராகக் கூற, இரண்டுபேரும் பேசாமல் இருங்கோ என்றுவிட்டு அம்மா குங்குமத்தைக் கழுவிவிட்டு திருநீறு சந்தனத்துடன் வந்தார்.

எனக்கு அம்மாவைப் பார்க்க முடியாமல் இருந்தது. பின்னர் யாரும் இல்லாத நேரம் "அம்மா மற்றவர்களுக்காகப் பார்க்கவேண்டாம். உங்களுக்குப் பொட்டு வைக்கவேண்டும் போல் இருந்தால் வைத்துக்கொள்ளுங்கள்" என்றேன். நான் அவனுடன் தானே இங்கு இருக்கப் போகிறேன் என்று கூறிவிட்டு அம்மா இருக்க என்னால் எதுவும் சொல்ல முடியாமல் போய்விட்டது.

அதனால்த்தான் யாழ் இணையத்தில் உள்ளவர்கள் எப்படி இந்த விடயத்தில் இருக்கின்றனர் என்று அறியவே முதலில் இதை எழுதவில்லை.

பெண்கள் கணவன் இழந்தபின் பொட்டு வைப்பதா இல்லையா என்பதை தீர்மானிக்கும் உரிமை அவர்களுக்கே உரியது என்றாலும் நான் பொட்டு வைப்பதை கணவனுடன் என்றுமே தொடர்பு படுத்த மாட்டேன். சிலருக்குப் பொட்டு வைக்காவிட்டால் என்ன பொட்டு வைத்தால் என்ன முகம் அழகாக இருக்கும். எனக்குப் பொட்டு வைத்தால்த்தான் எதோ நிறைவானதுபோல் இருக்கும். பொட்டு வைக்காத சிலரைப் பார்த்தால் நித்திரையால் எழுந்து முகம் கழுவாமல் வருவதுபோல் இருக்கும். எப்படி இருந்தாலும் எமக்குப் பழகியதோ அல்லது கலாச்சாரம் என்று எம் மனதில் பதியப்பட்டதோ எதுவாயினும் பொட்டு வைப்பது முகத்துக்குத் தனி அழகைக் கொடுக்கும்.

பிறந்தது தொடக்கம் இறப்புவரை பொட்டு பெண்களுக்குச் சொந்தமானது தானே அன்றி கணவன் போனவுடன் கரைந்து காணாமற் போவதல்ல.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

என்னைப் பொறுத்த வரைக்கும் இது பிள்ளைகள் சொல்லி செய்ய வேண்டிய ஒன்று அல்ல. பல வருடங்கள் ஒன்றாக வாழ்ந்த தம்பதியரின் வாழ்வே எதை செய்ய வேண்டும் என்று அவர்களுக்கு உணர்தி இருக்கும்.

என் வீட்டில் என் அப்பா தான் இறந்து விடுவேன் என்று நிச்சயமாக புரிந்த கொண்ட பின் சாவதற்கு 10 தினங்களுக்கு முன்பாகவே ' ஒரு போதும் இந்த பொட்டை வைக்காமல் விடக் கூடாது' என்று சொல்லி விட்டே இறந்தவர். என் அம்மா அப்பா இறந்து 10 வருடங்கள் சென்ற பின்னும் இன்று வரைக்கும் பொட்டு வைத்துக் கொண்டு வர்ண சேலைகள் கட்டிக் கொண்டு தான் வாழ்கின்றார்.

அது அவர் அப்பாவுக்கு கொடுக்கும் மரியாதையாக இருக்கலாம், அல்லது தன்னுணர்வு நிரம்பப் பெற்றவர் என்பதால் சுய சிந்தனையின் பால் எழுந்ததாக இருக்கலாம்.

அம்மாவின் செயலுக்கு முதலில் அப்பாவின் சகோதரங்கள் கொஞ்சம் முணுமுணுத்தார்கள், பின் அவர்களில் கணவரை இழந்தவரும் வர்ண சேலைகள் பொட்டு என்பதை துணிந்து அணியத் தொடங்கினார்.

அப்பாவின் மரண வீட்டில் தாலி கழட்டி வைக்கும் சம்பிரதாயம் மட்டுமே அம்மா சூழ்நிலைகளால் செய்த ஒரு காரியம்..அதை பின்னர் சரி செய்து கொண்டார்.

இங்கு அப்பா அம்மாவினது உறவின் நீட்சிதான் இன்னும் எமக்கு தெரிகின்றது. பிள்ளைகளாகிய எங்களின் நம்பிக்கைகள், கொள்கைகள் பெற்றோரை  மாற்றுவதில்லை.

எனக்கு சாவு வந்தால் மரணச் சடங்கில் சாதியத்தினை வலியுறுத்தும் ஐயனைக் கூட்டி வந்து செய்யும் சடங்கு போன்ற எந்தவொரு விடயத்தினையும் செய்யக் கூடாது என்பதை என் குடும்பத்தினர் முக்கியமாக மனைவி புரிந்து வைத்துள்ளார். பொட்டு வைப்பது தொடர்பாக, தாலி கழட்டி எறிவது தொடர்பாக என்ன செய்ய வேண்டும் என்பதையும் அவர் புரிந்து வைத்துள்ளார்.

என் பிள்ளைகளின் உத்தரவுக்காகவோ அல்லது அனுமதிக்காகவோ அவர் காத்திருக்கவும் போவதில்லை.

நானும் கூட ஐயரைக் கூப்பிட்டுச் சடங்கு செய்வதை வேண்டாம் என்று கூறிப் பார்த்தேன். தம்பி செய்தே தீரவேண்டும் என்று விடாப்பிடியாக நின்றாதனால் ஒன்றும் செய்ய முடியாது போய்விட்டது. சடங்கு பற்றி இன்னுமொன்று வரும் :D

வாழ்த்துக்கள் நிழலி உங்கள் குடும்பப் பெண்களுக்கு

மேலதிக அறிவுடன் எமது கலாச்சாரத்தை ஆராய வெளிக்கிட்டால் தமிழகத்தில் நடக்கும் தாலியறுப்பு போராட்டமும் நியாயமானதே. உங்கள் குங்குமப்பொட்டு திரியும் தேவையற்றது.
 
எந்தவொரு மதமும் கலாச்சாரமும் ஒரு எல்லைக்குட்பட்டது. அதனை மேலதிக அறிவுடன் ஆராயும் போது தேவையற்ற ஒன்றாகவே தெரியும்.

ஒரு பெண்ணுக்கு ஒவ்வாமை ஏற்பட்டு அதன் காரணமாக பொட்டே போடக் கூடாது என்று வைத்தியர் சொன்னால், இல்லை எங்கள் கலாச்சாரம். குங்குமம் வைத்தால்த்தான் புருஷன் இருக்கிறான் என்று தெரியும் என்று  ஒவ்வாமை வந்து பெண்ணுக்கு என்ன நடந்தாலும் பரவாயில்லை என்று பொட்டை வைக்கவா சொல்வீர்கள் ???

தமிழ்ப் பெண்கள் எப்போதிலிருந்து / எதன் பின் குங்குமப்பொட்டு வைப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர்?

எனக்குதெரிந்து திருமணம் முடிக்காத பெண்கள் குங்குமப்பொட்டு வைத்ததாக தெரியவில்லை. 

நீங்கள் திருமணத்துக்குப் பின்னும் முன்னும் எந்தக் கன்னிப் பெண்ணையும் நிமிர்ந்து பார்க்கவில்லைப் போல :D

இசை நன்றாகத் துணிவுடன் நிமிர்ந்து பார்த்துள்ளார் :lol:

இசைக்கலைஞன்

Posted Today, 10:37 AM

குமரிகள் குங்குமப்பொட்டு வைப்பதும் வழக்கத்தில் இருந்தது என்றுதான் நானும் நினைக்கிறேன். ஆனால் மேல் நெற்றி வகிட்டிலும் குங்குமம் வைத்தால் மணமானவர் என்று பொருள். அல்லது இது தமிழகத்து வழக்கமோ தெரியவில்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.