Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கார் விபத்து வழக்கில் இந்தி நடிகர் சல்மான் கானுக்கு 5 ஆண்டு சிறை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

குடி வெறியில் கார் ஓடி, பாதையோரம் படுத்திருந்த ஒருவரை கொன்று, இருவரை காயப்படுத்தி அங்கிருந்து ஓடிவிட்ட சல்மான் கான், இன்று, 10 ஆண்டுகள் தண்டனை வழங்கப்பட்ட நிலையில் பம்பாய் நீதிமன்றில் உடனடியாகவே கைதானார்.

இது வக்கீலீன் மன்றாட்டத்தின் மூலம் 5 ஆண்டுகளாகக் குறைக்கப்பட்டுள்ளது.

Edited by Nathamuni

இது பல வருடங்களுக்கு முன்னர் நடந்தது. இப்போது தீர்ப்புச் சொல்வதில் அரசியல் விளையாட்டுக்கள் இருக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
சல்மான்கானுக்கு 5 ஆண்டு சிறை தண்டனை: மும்பை அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு
 
salmankhan.jpgமது போதையில் கார் ஓட்டி விபத்து ஏற்படுத்தியதாக தொடரப்பட்ட வழக்கில் பாலிவுட் நடிகர் சல்மான் கானுக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து மும்பை அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 
 
மும்பையில் கடந்த 2002ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 28ஆம் தேதி அதிகாலையில் சல்மான் கானின் கார் மோதியதில், ஒருவர் உயிரிழந்தார். 4 பேர் படுகாயம் அடைந்தனர். சல்மான் கான் குடிபோதையில் அதிவேகமாக காரை ஒட்டி விபத்தை ஏற்படுத்தியதாக தொடரப்பட்ட இந்த வழக்கின் விசாரணை கடந்த 13 ஆண்டுகளாக நீடித்தது. பல திருப்பங்களுக்குப் பின்னர் இந்த வழக்கின் விசாரணை முடிவடைந்ததையடுத்து, புதன்கிழமை மும்பை அமர்வு நீதிமன்றம் இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கியது.
 
இந்த வழக்கில் சல்மான் கான் மது அருந்திவிட்டு காரை ஓட்டியது நிரூபணமாகியுள்ளது என்றும், சல்மான் கான் குற்றவாளி என்றும் மும்பை அமர்வு நீதிமன்ற நீதிபதி தேஷ்பாண்டே அறிவித்தார். சல்மானுக்கான தண்டனை விவரம் பகல் 1.10க்கு அறிவிக்கப்படும் என்றார்.
 
அதன்படி பின்னர் நீதிமன்றத்தில்,  சல்மான் கானுக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து மும்பை அமர்வு நீதிமன்ற நீதிபதி தேஷ்பாண்டே அறிவித்தார்.
 
நக்கீரன்.இன்
 
 

salmankk1_2396720f.jpg

மும்பை நீதிமன்றத்தை ஆஜரான நடிகர் சல்மான் கான். | படங்கள்: பிடிஐ$
 
மது அருந்திவிட்டு கார் ஓட்டி விபத்து ஏற்படுத்திய வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட நடிகர் சல்மான் கானுக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து மும்பை செசன்ஸ் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
 
முன்னதாக இன்று (புதன்கிழமை) காலை நீதிமன்றம், இந்த வழக்கில் சல்மான் கான் குற்றவாளி என தீர்ப்பு வழங்கியது.
 
இதனையடுத்து சல்மான் கான் தண்டனை தொடர்பாக வாதங்கள் நடைபெற்றன. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி மதியம் 1.10-க்கு தீர்ப்பை ஒத்திவைத்தார்.
 
மீண்டும் நீதிமன்றம் கூடியபோது, நீதிபதி தண்டனை விபரத்தை அறிவித்தார். சல்மான் கானுக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து அவர் உத்தரவிட்டார்.
 
இதனையடுத்து சல்மான் கான் மும்பை ஆர்தர் சாலையில் உள்ள சிறையில் அடைக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
மும்பை உயர் நீதிமன்றத்துக்கு மே10-ல் கோடை விடுமுறை தொடங்குகிறது. எனவே, அதற்குள் சல்மான் கான் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்ய வேண்டும்.
 
கண்ணீர்விட்ட சல்மான்
 
மது அருந்திவிட்டு கார் ஓட்டி விபத்து ஏற்படுத்திய வழக்கில் இந்தி நடிகர் சல்மான் கான் குற்றவாளி என மும்பை அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
 
இந்த வழக்கில் குற்றச்சாட்டுகள் அனைத்தும் நிரூபிக்கப்பட்டதால், சல்மான் கானுக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை கிடைக்க வாய்ப்பு உள்ளது.
 
இந்தி நடிகர் சல்மான் கான், மது அருந்திவிட்டு தாறுமாறாக காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்தி ஒருவர் உயிரிழக்கவும், நான்கு பேர் காயமடையவும் காரணமாக இருந்ததாக தொடரப்பட்ட வழக்கில் சல்மான் கான் குற்றவாளி என மும்பை அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
 
இவ்வழக்கில் பெருநகர குற்றவியல் நீதிமன்ற நீதிபதி டி.டபிள்யூ தேஷ்பாண்டே இன்று தீர்ப்பு வழங்கினார். நீதிபதி கூறும்போது, உங்கள் மீதான அனைத்துக் குற்றச்சாட்டுகளும் நிரூபணமாகிவிட்டது.
 
சம்பவத்தன்று நீங்கள் மது அருந்தியிருந்தீர்கள். அன்றைய தினம் நீங்களே காரை ஓட்டியிருக்கிறீர்கள். மேலும் லைசன்ஸ் இல்லாமலும் காரை ஓட்டியிருக்கிறீர்கள். இந்த வழக்கில் நீங்கள் குற்றவாளி என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது" என்றார்.
 
சல்மான் கானிடம், "நீங்கள் ஏதாவது சொல்ல வேண்டுமா" என நீதிபதி கேட்டார். அதற்கு சல்மான் கான், "நான் காரை ஓட்டவில்லை" என்று தெரிவித்தார்.
 
நீதிபதி தீர்ப்பு வழங்கும்போது, டெல்லியில் நிகில் நந்தா என்பவர் கார் ஓட்டி ஏற்படுத்திய விபத்து வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பை மேற்கோள் காட்டினார்.
 
நீதிபதி தீர்ப்பு வழங்கும் போது, சல்மான் கான் கண்களில் கண்ணீர் மல்க அதைக் கேட்டுக் கொண்டிருந்தார்.
 
கடந்த 2002 செப்டம்பர் 28-ம் தேதி இரவு, தாறுமாறாக ஓடிய நடிகர் சல்மான் கானின் கார் பந்த்ரா பகுதியில் ஒரு பேக்கரியின் வெளியே படுத்திருந்தவர்கள் மீது மோதியது. இதில் நூருல்லா மெஹ்பூப் ஷெரீப் என்பவர் உயிரிழந்தார். நான்கு பேர் படுகாயமடைந்தனர்.
 
இவ்வழக்கு மும்பை அமர்வு நீதிமன்றத்தில் கடந்த 13 ஆண்டுகளாக நடைபெற்று வந்தது.
 
அந்தக் காரை நடிகர் சல்மான் கான் ஓட்டியதாகவும், அப்போது அவர் மது போதையில் இருந்ததாகவும் காவல்துறை தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது. ஆனால், “காரை ஓட்டியது தான் அல்ல. தனது டிரைவர் அசோக் சிங்தான்” என சல்மான் கான் தரப்பில் வாதிடப்பட்டது.
 
  • கருத்துக்கள உறவுகள்

jayalalitha_sapporter_20080.jpg

 

அரசன் அன்று கொல்வான், தெய்வம் நின்று கொல்லும். இந்திய அரசும் அதன் நிறுவனங்களும் தெய்வத்திற்குச் சமமானது. பொதுவாக அரசியல்வாதிகளுக்கு மக்கள் வணக்கம் சொல்வார்கள். இந்தியாபோன்ற நாடுகளில் மக்கள் அரசியல்வாதிகளை வீழ்ந்து வணங்குவதிலிருந்தே அனைத்தையும் புரிந்துகொள்ளலாம். 
 
இந்திய நீதிமன்றம் நின்றுதான் தீர்ப்புச் சொல்லியிருக்கிறது:icon_mrgreen:
 

இந்தியா...

 

மது போதையில் காரேற்றிக் கொன்றால்: 5 வருடத் தண்டனை

 

வெறுமனே பற்றரி வாங்கிக் கொடுத்தால்: மரண தண்டனை

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா...

 

மது போதையில் காரேற்றிக் கொன்றால்: 5 வருடத் தண்டனை

 

வெறுமனே பற்றரி வாங்கிக் கொடுத்தால்: மரண தண்டனை

 

இந்த ஐந்து ஆண்டே பெரியவிடயம்..

எத்தனை நாள் உள்ளே இருக்கிறார் என்று பார்ப்போம்...

 

இத்தனை பெரிய நடிகர்

எத்தனை நூறு விருதுகள்

எவ்வளவு கோடி ரசிகர்கள்.....

 

ஆனால் தான் காரை ஓட்டவில்லை என தயங்காது பொய் சொல்கிறார்

இந்த ஐந்து ஆண்டே பெரியவிடயம்..

எத்தனை நாள் உள்ளே இருக்கிறார் என்று பார்ப்போம்...

இத்தனை பெரிய நடிகர்

எத்தனை நூறு விருதுகள்

எவ்வளவு கோடி ரசிகர்கள்.....

ஆனால் தான் காரை ஓட்டவில்லை என தயங்காது பொய் சொல்கிறார்

இன்னமும் 10 நாட்களில் வெளியில் வந்து சினிமா வில்லன்களை பந்தாடுவார்.இதுக்கு மக்களின் வரி பணத்தை செலவழிக்காமல் இருக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

இன்னமும் 10 நாட்களில் வெளியில் வந்து சினிமா வில்லன்களை பந்தாடுவார்.இதுக்கு மக்களின் வரி பணத்தை செலவழிக்காமல் இருக்கலாம்.

 

சல்மான் கானுக்கு 1 மணிக்கு சிறை தண்டனை…

5 மணிக்கு ஜாமீன் பாதிக்கப்பட்டவர்கள் குமுறல்

 

கார் மோதி ஒருவர் பலியான வழக்கில் பாலிவுட் நடிகர் சல்மான் கானுக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து மும்பை செசன்ஸ் நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது.

 

இந்த தீர்ப்பை எதிர்த்து சல்மான் கான் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த மும்பை உயர் நீதிமன்றம், சல்மான் கானுக்கு இரண்டு நாள் இடைக்கால் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. இதனையடுத்து நேற்று பிற்பகல் 1 மணிக்கு சிறை தண்டனை அறிவிக்கப்பட்ட சல்மான் கான், மாலையே தனது வீட்டுக்குத் திரும்பினார்.

 

07-1430969384-salman-khan72-600.jpg

 

கடந்த 2002, செப்டம்பர் 28ம் தேதியன்று அதிகாலையில், சல்மான் கான் விருந்து நிகழ்ச்சி ஒன்றில் கலந்து விட்டு தனது காரில் பாந்த்ராவில் உள்ள வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தார். நள்ளிரவு வரை நடந்த விருந்தில் கலந்து கொண்ட அவர், மது போதையில் கார் ஓட்டி வந்ததாக கூறப்படுகிறது.

 

பாந்த்ரா பாலிஹில் ரோடு பகுதியில் சல்மான் கான் கார் வந்தபோது, சாலையோரத்தில் படுத்திருந்தவர்கள் மீது அவரது கார் ஏறியது. இதில் நூருல்லா மெஹபூப் ஷெரீப் என்பவர் பலியானார். காலீம் முகமது, முன்னா மலாய் கான், அப்துல்லா ரவுப் ஷேக், முஸ்லிம் ஷேக் ஆகிய 4 பேர் காயமடைந்தனர். இந்த வழக்கில் இந்த விபத்து தொடர்பாக கைது செய்யப்பட்ட சல்மான் கானுக்கு அன்றைய தினமே நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.

 

13 ஆண்டுகால வழக்கு

கிட்டத்தட்ட 13 ஆண்டு காலமாக நடைபெற்று வந்த இந்த வழக்கில் நேற்று செசன்ஸ் நீதிமன்ற நீதிபதி டி.டபிள்யூ. தேஷ்பாண்டே தீர்ப்பு வழங்கினார். சல்மான் கானை குற்றவாளியாக அறிவித்து அவருக்கு 5 ஆண்டு சிறைத் தண்டனை விதித்தார்.

 

செய்த குற்றம் என்ன?

‘‘கொலைக்கு நிகரான குற்றச்சாட்டு உட்பட சல்மான் கான் மீது இ.பி.கோ.304(ஏ)(தாறுமாறாக வாகனம் ஓட்டுதல்), 279(விதிகளை மீறி வாகனம் ஓட்டுதல்), 337(லேசான காயம் ஏற்படுத்துதல்), 338 (பலத்த காயம் ஏற்படுத்துதல்), 427 (அலட்சியம்) ஆகிய பிரிவுகளில் தொடரப்பட்ட அனைத்து குற்றச்சாட்டுகளும் ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. மேலும் சல்மான் கான் லைசென்ஸ் இல்லாமல் கார் ஓட்டியதும், அவர், 2004ம் ஆண்டில்தான் அவர் லைசென்ஸ் பெற்றதும் ஆர்.டி.ஓ. ஆவணங்கள் மூலம் நிரூபணமாகியுள்ளது'' என்று நீதிபதி தேஷ்பாண்டே தனது தீர்ப்பில் கூறினார்.

 

மாலையில் ஜாமீன்

இதற்கிடையே, செசன்ஸ் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக சல்மான் கான் தரப்பில் அவரது வழக்கறிஞர் ஸ்ரீகாந்த் ஷிவ்டே உடனடியாக மும்பை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்து ஜாமீன் கோரினார். இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட மும்பை உயர்நீதிமன்றம் சல்மான் கானுக்கு இரண்டு நாள் இடைக்கால ஜாமீன் வழங்கியது. மேலும் மனு மீதான விசாரணை வெள்ளிக்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டது.

 

தண்டனையும் ஜாமீனும்

காலையில் வீட்டிலிருந்து செஷன்ஸ் நீதிமன்றத்துக்குச் சென்ற சல்மான் கானுக்கு நீதிபதி 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து மதியம் தீர்ப்பளித்தார். அதையடுத்து போலீஸ் வசம் சல்மான் கான் ஒப்படைக்கப்பட்டார். அவர் சிறையில் அடைக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதனிடையில், சல்மான் சார்பில் உயர் நீதிமன்றத்தில், இந்தத் தீர்ப்பை எதிர்த்தும், ஜாமீன் கோரியும் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவை ஏற்றுக் கொண்டு 2 நாள் இடைக்கால ஜாமீன் அளித்தது உயர் நீதிமன்றம்.

 

வீடு திரும்பிய சல்மான்

இதனையடுத்து சுமார் 8 மணி நேரம் செசன்ஸ் நீதிமன்றத்தில் இருந்த சல்மான் கான், உயர்நீதிமன்றத்தில் இருந்து ஆவணங்கள் வந்த பின்னர் நீதிமன்றத்தில் இருந்து வெளியேறினார். நேராக சல்மான் கான் தனது வீட்டிற்கு சென்றார். அவரது வீடு முன்பு ஏராளமான ரசிகர்கள் குழுமியிருந்தனர். அவர்கள் சல்மான் கானை சூழ்ந்து கொண்டனர். இதனையடுத்து அவர்களை கலைக்க போலீசார் லேசான தடியடி நடத்தினர்.

 

சிறை செல்லமாட்டார்

இதனிடையே, சல்மான் கான் வழக்கு தொடர்பான முழு தீர்ப்பு வரும் வரை, அவர் சிறை செல்ல மாட்டார் என்று சல்மான் கானின் வக்கீல் சால்வே கூறியுள்ளார்.

 

இழப்பீடு வேண்டும்

நடிகர் சல்மான் கானுக்கு சிறைத் தண்டனை விதிப்பதால் எங்களுக்கு எந்தப் பலனும் இல்லை என்று கார் விபத்தில் பலியான நூருல்லா மெஹ்பூப் ஷரீபின் மனைவி கூறியுள்ளார். "எங்களுக்கு ரூ.10 லட்சம் வரை இழப்பீடு கிடைக்கும் எனக் கூறப்படுகிறது. ஆனால், நாளுக்கு நாள் மாறிவரும் பொருளாதாரச் சூழலில் அந்தப் பணம் எங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருக்கும் என்று கூற முடியாது. எனவே, என் மகனுக்கு ஒரு வேலை கிடைத்தால் போதுமானதாக இருக்கும்" எனத் தெரிவித்தார்.

 

விரோதம் இல்லை

விபத்தில் தனது காலை இழந்த அப்துல்லா ரவுஃப் ஷேக், "நடிகர் சல்மான் கானுக்கு சிறைத் தண்டனை விதிப்பதால் எங்களுக்கு எந்தப் பலனும் இல்லை. எங்களுக்குத் தேவை எல்லாம் இழப்பீடு மட்டுமே. இந்த 13 ஆண்டுகளில் என்னை யாரும் வந்து பார்த்ததில்லை. சிறு வேலைகள் செய்து என் குடும்பத்தை மிகவும் கஷ்டப்பட்டு காப்பாற்றி வருகிறேன். இருப்பினும், சல்மான் கான் மீது நான் எப்போதும் விரோதம் கொண்டதில்லை. இன்றளவும் அவரது படங்களைப் பார்த்து வருகிறேன்.

 

கால் கிடைக்குமா?

சல்மான் தண்டிக்கப்படுவதால் மட்டும் நான் இழந்த கால் திரும்பக் கிடைக்கப் போவதில்லை. அதற்குப் பதிலாக எங்கள் வாழ்வாதாரத்துக்கு போதிய இழப்பீடு வழங்கினால் அதுவே போதுமானது" என்றார்.

 

நன்றி தற்ஸ் தமிழ்.

 

#####

 

நகைப்புக்கிடமான... செயல்.  தண்டனை வழங்கிய நான்கு மணி நேரத்தில், அவருக்கு பிணை கிடைத்துள்ளது.

இப்படியான தீர்ப்புக்களை இந்தியாவில் மட்டுமே... காணலாம்.

சல்மானுடன் காரில் பாதுகாப்புக்குச் சென்றதால் சாகும் வரை கொடூரத்தை சந்தித்த கான்ஸ்டபிள்: நண்பர் கண்ணீர் பேட்டி
 
salman_2397689f.jpg
கான்ஸ்டபிள் ரவீந்திர பாட்டீல் (உள்படம்) , காசநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றபோது எடுத்த படம்.
 
சல்மான் கான் குடிபோதையில் கார் ஓட்டி விபத்து ஏற்படுத்தியது குறித்து, அவருடன் பாதுகாப்புக் குச் சென்ற போலீஸ் கான்ஸ்டபிள் தான் போலீஸில் புகார் கொடுத் தார். பின்னர் போலீஸ் தரப்பில் இருந்தும், பலதரப்பில் இருந்தும் அவருக்குக் கடும் நெருக்கடிகள் வந்துள்ளன. ஆனால், கடைசி வரை தனது புகாரில் உறுதியாக இருந்த கான்ஸ்டபிள், காச நோயால் பரிதாபமாக இறந்துள்ளார்.
 
சல்மான் கான் உயிருக்கு, மும்பை நிழல் உலக தாதாக்களால் ஆபத்து இருப்பதாக கூறப் பட்டது. அதனால், அவருக்குப் போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டது. கடந்த 1998-ம் ஆண்டு பிரிவைச் சேர்ந்த ரவீந்திர பாட்டீலை, சல்மான் பாதுகாப்புப் பணிக்கு அனுப்பினர்.
 
சல்மான் செல்லும் இடங்களுக்கு எல்லாம் பாட்டீல் அவருடன் காரில் சென்றுவந்தார். கடந்த 2002-ம் ஆண்டு ஒரு நாள் இரவு, அதிகமாக மது குடித்து விட்டு காரை தானே ஓட்டியுள்ளார் சல்மான்.
 
அவருக்குப் பக்கத்தில் அமர்ந்து வந்த பாட்டீல், சல்மானை எச்சரித்துள்ளார். காரை மெதுவாக ஓட்டுங்கள் என்று கூறியுள்ளார். அதை அலட்சியப்படுத்திய சல்மான், காரை தாறுமாறாக ஓட்டி நடைபாதையில் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது ஏற்றினார். இந்த விபத்தில் பாட்டீலுக்கும் காயம் ஏற்பட்டது. அதன்பிறகு, சல்மான் கானுக்கு எதிராக கான்ஸ்டபிள் பாட்டீல்தான் புகார் கொடுத்துள்ளார். அதன் பிறகு அவர் பல பிரச்சினைகளை, மிரட்டல்களை, நெருக்கடிகளைச் சந்தித்துள்ளார்.
 
கார் விபத்து குறித்த வழக்கை முதலில் மும்பை மாஜிஸ்திரேட் நீதிமன்றம் விசாரித்தபோது, எதைப் பற்றியும் கவலைப்படாத பாட்டீல், துணிச்சலாக நடந்த விவரங்களை நீதிமன்றத்தில் தெரிவித்தார். குடி மயக்கத்தில் இருந்ததால், காரை மெதுவாக ஓட்டும்படி சல்மானை எச்சரித்தேன். அதை அவர் கேட்கவில்லை என்று சாட்சியம் அளித்தார். இந்த வாக்குமூலத்தை மாற்றி சொல்லும்படி, பாட்டீலுக்கு பல தரப்பில் இருந்து நெருக்கடிகள் வந்துள்ளன.
 
நெருக்கடி முற்றியதால், பாட்டீல் திடீரென காணாமல் போனார். சல்மான் கானின் வழக்கறிஞர்களின் நெருக்கடி யைத் தாங்க முடியாமல் தலைமறை வானதாக அப்போது கூறப்பட்டது. அத்துடன் போலீஸ் துறையில் இருந்தவர்களே, சல்மான் மீது கூறப்பட்ட புகாரை மாற்றி சொல் லும்படி நிர்பந்தம் கொடுத்தனர் என்று புகார் எழுந்தது. அதன்பின், நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை என்று கூறி கடந்த 2006-ம் ஆண்டு போலீஸார் பாட்டீலை கைது செய்தனர். அத்துடன் கான்ஸ்டபிள் பணியில் இருந்தும் அவரை நீக்கினர்.
 
அதன்பிறகு கடந்த 2007-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சீவ்ரி பகுதியில் உள்ள ஒரு தெருவில் அநாதையாக பாட்டீல் கிடந்தார். அவரது நண்பர் ஒருவர் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளார். காசநோயால் கடுமையாக பாதிக்கப்பட்டி ருந்தார் பாட்டீல். அதனால், அவரது குடும்பத்தினரும் அவரை அநாதையாக விரட்டி உள்ளனர். மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி 2007 அக்டோபர் மாதம் பரிதாபமாக பாட்டீல் இறந்து விட்டார்.
 
பாட்டீலை மருத்துவமனையில் சேர்த்தது அவரது நண்பர் சுஷாந்த் சாவந்த் என்பவர் தான். அவர் கூறும்போது, ‘‘பாட்டீல் எனக்கு சிறந்த நண்பர்.
 
இறப்பதற்கு 2 நாட்களுக்கு முன்னர், பாட்டீல் என்னிடம் மனம் திறந்து பேசினார். ‘சல்மான் கான் மீது தான் கூறிய புகாரில் கடைசி வரை உறுதியாக இருந்தேன். ஆனால், என்னுடைய போலீஸ் துறையினரே எனக்கு ஆதரவாக இல்லை. எனக்கு மீண்டும் கான்ஸ்டபிள் வேலை வேண்டும். நான் வாழ வேண்டும். ஒரு முறை போலீஸ் கமிஷனரைச் சந்தித்துவிட வேண்டும்’ என்று கூறினார். ஆனால், பரிதாபமாக உயிரிழந்து விட்டார்’’ என்றார்.
 
இப்போது சல்மானுக்கு வழங்கப்பட்டுள்ள தீர்ப்பு, இறந்தவர், படுகாயம் அடைந்த 4 பேருக்கு கிடைத்த வெற்றி மட்டுமல்ல, பரிதாபமாக உயிரிழந்த கான்ஸ்டபிளுக்கும்தான் என்கிறார் அவரது நண்பர்.
 
http://tamil.thehindu.com/india/%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%95%E0%AF%86%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%82%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF/article7179519.ece?homepage=true

Edited by Athavan CH

  • கருத்துக்கள உறவுகள்

சல்மான் கானுக்கு 1 மணிக்கு சிறை தண்டனை…

5 மணிக்கு ஜாமீன் பாதிக்கப்பட்டவர்கள் குமுறல்

 

 

 

கடந்த 2002, செப்டம்பர் 28ம் தேதியன்று அதிகாலையில்,

 

13 ஆண்டுகால வழக்கு

கிட்டத்தட்ட 13 ஆண்டு காலமாக நடைபெற்று வந்த இந்த வழக்கில் நேற்று செசன்ஸ் நீதிமன்ற நீதிபதி டி.டபிள்யூ. தேஷ்பாண்டே தீர்ப்பு வழங்கினார். சல்மான் கானை குற்றவாளியாக அறிவித்து அவருக்கு 5 ஆண்டு சிறைத் தண்டனை விதித்தார்.

 

செய்த குற்றம் என்ன?

‘‘கொலைக்கு நிகரான குற்றச்சாட்டு உட்பட சல்மான் கான் மீது இ.பி.கோ.304(ஏ)(தாறுமாறாக வாகனம் ஓட்டுதல்), 279(விதிகளை மீறி வாகனம் ஓட்டுதல்), 337(லேசான காயம் ஏற்படுத்துதல்), 338 (பலத்த காயம் ஏற்படுத்துதல்), 427 (அலட்சியம்) ஆகிய பிரிவுகளில் தொடரப்பட்ட அனைத்து குற்றச்சாட்டுகளும் ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. மேலும் சல்மான் கான் லைசென்ஸ் இல்லாமல் கார் ஓட்டியதும், அவர், 2004ம் ஆண்டில்தான் அவர் லைசென்ஸ் பெற்றதும் ஆர்.டி.ஓ. ஆவணங்கள் மூலம் நிரூபணமாகியுள்ளது'' என்று நீதிபதி தேஷ்பாண்டே தனது தீர்ப்பில் கூறினார்.

 

பாருங்கள்

இது தான் இந்தியா...

ஐரோப்பிய நாடுகளில் இவ்வாறு

அதிலும் கொலைக்குற்றம்

அதிலும்

சாரதி அனுமதிப்பத்திரமில்லாது வாகனத்தை ஓட்டி

குற்றம் சாட்டப்பட்ட ஒருவர் 

சாரதி அனுமதிப்பத்திரத்தை பெறவே முடியாது.

 

பணமும் அதிகாரபலமும் இருந்தால் இந்தியாவில் என்ன வேண்டுமானாலும் செய்யலாம்

என்பதற்கு இதை விட என்ன ஆதாரம் வேண்டும்.

 

மேலும் இவர்களுக்கு எதிராக சாட்சி சொன்னால் பிச்சை எடுத்து வீதியில் நின்று சாவாய் என்பதற்கு 

இவரது காவல்த்துறை அதிகாரி சாட்சி.

Edited by விசுகு

காசு இருந்தால் இந்தியாவில் நீங்களும் கொலை செய்துவிட்டு சிறைக்கு போகாமல் இருக்கலாம். அல்லது ஆக்களை வைத்து கொலையும் செய்விக்கலாம். ஒரு பிரச்சினையும் வராமல் காசுமூலம் வெட்டி ஆடலாம்.
 
இதுதான் இந்தியா.  இதுக்கை எதிர்கால வல்லரசு கனவு வேற...... :lol:  :lol:
  • கருத்துக்கள உறவுகள்

பாதிக்கப்பட்ட குடும்பத்தினரே இழப்பீடு தந்தால் போதும் என்கிறார்கள்..! அதாவது காசைக் குடுத்திட்டு திரும்பவும் தண்ணியைப் போடலாம்.. வாகனம் ஓட்டலாம் என்கிறார்கள். :o

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.