Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நோர்வேயின் 10 முதன்மை வெளிநாட்டவர்களில் ஒருவராக ஈழத்தமிழ் பெண்

Featured Replies

நோர்வேயின் 10 முதன்மை வெளிநாட்டவர்களில் (Top 10) ஒருவராக ஈழத்தமிழ் பெண்ணான மகா சிற்றம்பலம் தெரிவாகியுள்ளார். 48 வயதான இவர் 1987ஆம் ஆண்டு, தனது 20வது வயதில் ஈழத்திலிருந்து நோர்வேக்குப் புலம்பெயர்ந்தவர்.

maha1.jpg

நோர்வேயில் ”Leadership Foundation” எனும் செயற்திட்டம் மூலம், சமூக-பண்பாட்டு-தொழில்-கல்விசார் தளங்களில் தடம்பதித்து வருகின்ற தலைமைத்துவத் திறமைகளையுடைய –  வெளிநாட்டுப் பின்னணியைக் கொண்ட 10 ஆளுமைகளை அடையாளப்படுத்தி விருது வழங்கப்பட்டுவருகின்றது.

வெளிநாட்டுச் சமூகங்களின் இளையவர்களுக்கு முன்மாதிரியாக விளங்குபவர்களை அடையாளப்படுத்துவது இவ்விருதின் நோக்கமாகும்.

இந்த அமைப்பு இவ்வாறாக கடந்த 10 ஆண்டுகளாக தொடர்ச்சியாக ஒவ்வோராண்டும் இந்தத் தெரிவை மேற்கொண்டு வருகின்றது. பத்துப்பேரில் ஐவர் பெண்களும் ஐவர் ஆண்களுமாவர்.

குறிப்பாக இளைய தலைமுறையினருக்கு சிறந்த முன்மாதிரியானவர்களை (Role Models) அறிமுகப்படுத்தி, அவர்களின் மேம்பாட்டுக்குரிய உந்துதலை வழங்குவதும் அவர்கள் மத்தியிலிருந்து தலைமைத்துவ ஆளுமைகளை வளர்த்தெடுப்பதும் இத்தெரிவின் மற்றுமோர் நோக்கமாகும்.

ஆண்கள் பெரும்பான்மையாகவுள்ள துறையாக விளங்குகின்ற வாகனச் சாரதிப்பயிற்சி ஆசிரியராகத் தனக்கான தொழிற்துறையைத் தெரிவு செய்த மகா, தனது விடாமுயற்சி மற்றும் கடின உழைப்பின் மூலம் சாரதிப்பயிற்சி நிறுவனமொன்றினை நிறுவி கடந்த பல ஆண்டுகளாக நடத்தி வருகிறார்.
 
’Learn2Drive’ என்ற பெயரில் அவர் நடத்திவரும் சாரதிப்பயிற்சி நிறுவனத்தினை அவரது தலைமைத்துவ மற்றும் நிர்வாக ஆளுமைத்திறன் மூலமாக வெற்றிகரமாக நடத்திவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

அந்த நிறுவனத்தின் தலைமை நிர்வாகியாக தற்பொழுது இயங்கிவரும் இவர் பல பயிற்சி ஆசிரியர்களைக் கொண்ட நிறுவனமாக அதனை வளர்த்தெடுத்துள்ளார்.

வெளிநாட்டுப் பின்னணியைக் கொண்ட முதலாவது பெண் சாரதிப் பயிற்சியாளர் என்ற பெருமையும் இவருக்கு உண்டு.

இவரது பயிற்சி நிறுவனத்தினூடாக இதுவரை நூற்றுக்கணக்கான வெளிநாட்டுப் பின்னணியைக் கொண்ட பெண்கள் சாரதிச் சான்றுப்பத்திரம் பெற்றுள்ளனர்.

Top10 விருதுக்கு இவர் தெரிவானமை தொடர்பாக நடுவர் குழு குறிப்பிட்டுள்ளதாவது,

இயந்திர மயமான புலம்பெயர் வாழ்வியல் சூழலில் பெண்களின் சமூக இணைவாக்கத்திற்கு வாகனம் ஓட்டத்தெரிந்திருத்தல் இன்றியமையாத தேவையாகவுள்ளது. இப்புறநிலையில் சமூகத்தில் பெண்களின் நிலையை உயர்த்த இவரது இப்பங்கு காத்திரமாக இருந்துள்ளது.

அத்தோடு ஆண்களின் ஆதிக்கம் நிறைந்த இத்தொழிற்துறையில் தன்னை நிலைநிறுத்தி, வளர்த்துக்கொண்டமை முக்கியத்துவம் பெறுகின்றது.

ஏனைய வெளிநாட்டுப் பின்னணியுடைய பெண்கள், இளையவர்கள் மத்தியில் இவர் முன்மாதிரியாகக் கொள்ளத்தக்கவர் என இவ்விருதுக்கான நடுவர் குழு இவரைத் தெரிவுசெய்தமையை நியாயப்படுத்தியுள்ளது.

வாகன ஒட்டுதல் நடைமுறை, போக்குவரத்து விதிமுறைகள் சார்ந்த முன்னனுபவம் இல்லாத வெளிநாட்டுப் பின்னணியுடைய பெண்களுக்கு உகந்த முறையில் பயிற்சி முறைமைகளை உருவாக்கி நடைமுறைப்படுத்தி வெற்றி கண்டுள்ளார் எனவும் நடுவர் குழு மேலும் தெரிவித்துள்ளது.

நோர்வேயில் தொழில்-கல்வி, சமூக மற்றும் பண்பாட்டுத் தளங்களில் பல்லின மக்கள் பற்றிய புரிதலை வளர்த்தல், சகிப்புத்தன்மை மற்றும் இணைவாக்கத்தினை ஊக்குவித்தலும் இவ்விருதின் நோக்கங்களென்பது சுட்டிக்காட்டத்தக்கது.
  http://www.pathivu.com/news/40004/85/10/d,article_full.aspx

நல்ல விடயம், வாழ்த்துக்கள்

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல விடயம், வாழ்த்துக்கள்

 
தமிழர்  உயரணும்...
  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

இவரது பெயரை உள் வட்டாரங்களில் எங்கேயோ கேள்விப்பட்டமாதிரி இருக்கு..

வாழ்த்துக்கள்..!

வாழ்த்துக்கள்!!

  • கருத்துக்கள உறவுகள்

இவரது பெயரை உள் வட்டாரங்களில் எங்கேயோ கேள்விப்பட்டமாதிரி இருக்கு..

வாழ்த்துக்கள்..!

சமூகத்திற்கு ஏதும் நல்லது செய்திருப்பா ......
எலி பார்ட்டி ஏதாவது திரியிலே முனு முனுத்திருக்கலாம் 
  • கருத்துக்கள உறவுகள்

உலகில் மகிழ்ச்சியான நாடுகளில், ஒன்று நோர்வே..
தமிழர்கள் முன்னணியில்... இருப்பதில், ஆச்சரியமில்லை.

 

ஆனால்... பிற ஐரோப்பிய நாடுகளில் இருந்து செல்பவர்களுக்கு....
அதன் அதி கூடிய குளிர்,  சூரிய அஸ்தமனம், சன நடமாட்டம்

(நோர்வேயின் மொத்த சனத் தொகை நாலு மில்லியன்)
பாண் கடை (9´மணிக்குத் தான் திறப்பாங்கள்)

போன்றவை.... பிடிக்காத விடயம். :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.