Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சாத்தியமாகாத ஒரு நாடு இரு தேசம் கொள்கை- முஸ்லீம்களை புறந்தள்ளி தீர்வு சாத்தியமில்லை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மலையகத்தில் ஒரு தேர்தல் தொகுதியில் கூட தமிழர் பெரும்பான்மையாய் இல்லை. அதுதான் மனோவும் திகாம்பரமும் multi member constituency கேட்கிறார்கள், புதிய தேர்தல் முறையில். ஜீ ஜீ யின் நரித்தனம் இல்லாது விடின் நுவெரஎலிய தொகுதி இருந்திருக்கக் கூடும்.

  • Replies 58
  • Views 3.7k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

கிழக்கு.. வடக்கும்.. இப்போ தமிழருக்கும் இல்லை.. முஸ்லீம்களுக்கும் இல்லை. சிங்களவர்கள் கையில். இதுதான் யதார்த்தம். இதனை உணராமல்.. முஸ்லீம்கள்.. தமிழர்களின் நிலைப்பாடுகளை புறக்கணித்து ஒதுக்கக்கனவு கண்டால்.. களுத்துறையில் நடந்தது தான் அவர்களுக்கு கிடைக்கும் உரிமையாக இருக்கும்.

மலையக தமிழ் மக்களுக்கு முஸ்லீம்களை விட அதிக உரிமையுண்டு.. மலையகத்தில் தனி அலகு கேட்க. அவர்கள் சிறீலங்காவின் பொருண்மியத்தை இன்றும் தாங்கிப் பிடிக்கும் மக்கள் கூட்டமாக உள்ளனர். :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

முஸ்லீம்கள் தாங்கள் பெரும்பான்மையாக இருக்கும் காரணத்தால் தாங்கள் தனித் தேசியம் என்று சொல்வது சரியானால், சாதி அடிப்படையில் சில தமிழர்கள் தாங்கள் தனி தேசியம் என்று பிற்காலத்தில் சொல்லலாம். எதற்கும் வரைவிலக்கணம் இல்லாமல் போய்விடும்.

  • கருத்துக்கள உறவுகள்

அதெப்படி தமிழர்கள் மட்டும் சுயநிர்ணயமுடையவர்கள், முஸ்லீம்கள் இல்லை என்கிறீர்கள்?

தேசிய இனமாய் இருந்தால்தான் சுயநிர்ணய உரிமை இருக்கும் என்பதில்லை.

சிலநூறு பேரளவிலான அமேசன் பழங்குடிகள், ஜிப்ரால்டர் பாறையில் வசிக்கும் ஆங்கில வந்தேறிகள், போர்க்லாண்ட் ஐலண்ட் வாசிகள் என்று தேசிய இனமல்லாத பல குழுக்கள் சுயநிர்ணயத்தை அனுபவிக்கும் தகமை உடையனவாய் கருதப் படுகிறன.

இலங்கை தமிழர் கூட ஒரு தேசிய இனமா என்பது கேள்விக்குறியே.

இதுக்கெல்லாம் அப்பால்

நாம் கொடுக்கும் நிலையிலும் இல்லை

முஸ்லீம்கள் பெறும் நிலையிலும் இல்லை என்பதுதான் ய்தார்த்தம்.

  • கருத்துக்கள உறவுகள்

எமக்கு பலமில்லை என்பதால் வரைவிலக்கணத்தை மாற்ற முடியாது.. அது எமக்கு ஒரு குறிப்பிட்ட மொழியைப் பற்றித் தெரியாமை என்பதைக் கொண்டு அந்த மொழியே உலகில் இல்லை என்று சொல்வதற்கு ஒப்பானது.. யார் சொல்கிறார்கள் என்பது முக்கியமில்லை. என்ன சொல்லப்படுகிறது என்பதே முக்கியம்.

தேசிய இனம் என்பதற்கு சில வரைவிலக்கணங்கள் உள்ளன.

1) தொடர்ச்சியான ஒரு நிலப்பரப்பில் காலங்காலமாக வாழ்ந்து வருதல்.

கிழக்கில் தமிழர்கள் ஏன் விரட்டப்பட்டார்கள் என்பதற்கான காரணி மேலே உள்ள விடயத்தில் தங்கியுள்ளது. மன்னாரில் ஏன் முஸ்லீம் ஆதிக்கம் நிலை நிறுத்தப்படுகிறது என்பதற்கான காரணியும் அதுதான். ஆனால் உடனடி இலக்கு என்பது கிழக்கு மட்டுமே.

2) தனித்துவமான கலை, இலக்கியம், பண்பாடு, மொழி போன்ற அலகுகளைக் கொண்டிருத்தல்.

இலங்கை முஸ்லீம்களுக்கும், தமிழர்களுக்கும் உள்ள தொடர்பு அதிகமா அல்லது அவர்களுக்கும், மத்திய கிழக்கிற்கும் உள்ள தொடர்பு அதிகமா?!

முதலாவது என்பதுதான் சரியான பதில். முழுமுதலாக அநேகர் பேசியது / பேசுவது தமிழ்மொழி. அது அவர்களை தமிழர்கள் என அடையாளப்படுத்துகின்றது. ஆனால் அதை மறுதலித்து அவர்களைப் பிரித்தாள்வது சிங்கள அரசியல். அதற்குத் துணைபோவது முஸ்லிம் தலைமைகளும், முஸ்லிம் மூர்க்கவாதிகளும்.

இதன்காரணமாகவே பேரீச்சை மரங்களும், அரபி எழுத்துக்களும், ஹிஜாப் உடைகளும் முளை விடுகின்றன. அதாவது தனித்த கலை, இலக்கியம், பண்பாடு, மொழி என்பவனவாகக் காட்டும் முயற்சிகளே இவை. இவற்றுக்காக துரத்தப்பட்ட தமிழர் நிலங்களும் பறிபோகின்றன. இந்த நுட்பமான அரசியலைப் புரிந்துகொண்டு அதை வெளிக்கொண்டுவந்து ஆவணப்படுத்துதல் என்கிற எதிர் அரசியல் மிக முக்கியமானது.

Edited by இசைக்கலைஞன்

  • கருத்துக்கள உறவுகள்

அதெப்படி தமிழர்கள் மட்டும் சுயநிர்ணயமுடையவர்கள், முஸ்லீம்கள் இல்லை என்கிறீர்கள்?

தேசிய இனமாய் இருந்தால்தான் சுயநிர்ணய உரிமை இருக்கும் என்பதில்லை.

சிலநூறு பேரளவிலான அமேசன் பழங்குடிகள், ஜிப்ரால்டர் பாறையில் வசிக்கும் ஆங்கில வந்தேறிகள், போர்க்லாண்ட் ஐலண்ட் வாசிகள் என்று தேசிய இனமல்லாத பல குழுக்கள் சுயநிர்ணயத்தை அனுபவிக்கும் தகமை உடையனவாய் கருதப் படுகிறன.

இலங்கை தமிழர் கூட ஒரு தேசிய இனமா என்பது கேள்விக்குறியே.

இதுக்கெல்லாம் அப்பால்

நாம் கொடுக்கும் நிலையிலும் இல்லை

முஸ்லீம்கள் பெறும் நிலையிலும் இல்லை என்பதுதான் ய்தார்த்தம்.

சுய நிர்ணயம் என்றால் என்ற கேள்விக்கான பதிலை தேடவும்.....

  • கருத்துக்கள உறவுகள்

சுயநிர்ணயம் என்ன என்பதை தேடி, வூட் றோ வில்சனில் தொடங்கி, லெனின் ஈறாக, கொசோவோ சவுத் ஒசேசியா என்று ஆராய்ந்து, ஆராய்ச்சிக் கட்டுரை சமர்பித்து, அது பப்ளிஸ் ஆகியும் விட்டது. மறுபடியும் முதலில் இருந்து துடங்குவது நேர விரயம்.

தேசிய இனத்துக்கும், சுய நிர்ணயத்துக்கும் முடிச்சு போடுவது ஏல் லாஜிக் அல்லது basic verbal reasoning படிச்ச எல்லோர்க்கும் விளங்கக் கூடியத்தான்.

1) தேசிய இனங்களின் பண்புகளில் ஒன்று சுயநிர்ணய உரிமை

2) சுயநிர்ணய உரிமை உள்ள குழுக்கள் எல்லாம் தேசிய இனங்களில்லை

3) சுய நிர்ணயம் என்பது தேசிய இனங்களுக்குரிய பண்பு மட்டும் இல்லை.

முஸ்லீம்கள் தேசிய இனம் இல்லைத்தான், ஆனால் அவர்களுக்கு நிச்சயம் சுய நிர்ணய உரிமை உண்டு.

The clue is in the name. முஸ்லீம்களின் "சுய" நிர்ணய உரிமை, அவர்களது சுயமான உரிமை. எனவே அதை சிங்களவர்களோ, தமிழர்களோ அவர்களுக்கு வழங்க முடியாது.

எப்படி தமிழரின் சுய நிர்ணய உரிமையை சிங்களவர் வழங்க முடியாதோ அப்படி.

ஒன்றில் இலங்கையில் சிங்களவர், தமிழர், முஸ்லீம்கள் எனும் மூன்று சுயநிர்ணயத்துக்கு தகுந்த மூன்று குழுக்கள் உள்ளன. அல்லது இலங்கையில் எந்த ஒரு குழுவுக்கும் சுய நிர்ணயம் இல்லை - ஒட்டுமொத்த இலங்கை பிரசைகளிடமே அது தங்கியுள்ளது.

இது தியரி.

In practice - நீங்கள் விரும்பியோ, விரும்பாமலோ முஸ்லீம்கள் சுய நிர்ணய உரிமையை மட்டுப் பட்ட ரீதியில் பாவிக்கத் தொடங்கியே விட்டார்கள். 1990 இல் புலிகள் செய்தது போல ஒரு இனச் சுத்தீகரிப்பை கிழக்கில் செய்யாத வரைக்கும், கிழக்கில் முசுலீம்களை தவிர்த்து ஏதும் செய்ய முடியாது. ஜனநாயகம் விடாது.

ஆக, வடக்கு கிழக்கு மீளிணக்கப் பட்ட மாகாண, அல்லது பெடரல் அலகு என்பதே முசுலீம்களை கெஞ்சிக் கூத்தாடியே பெற வேண்டும். முஸ்லீம் தலைமை ஒத்துக் கொண்டாலும், முசுலீம் மக்கள் சர்வசன வாக்கெடுப்பை சிங்களவருடன் சேர்ந்து தோக்கடிப்பர்.

இதுக்கே இப்படி எனும் போது, கஜன் சொல்லும் confederacy க்கு ஒப்பான one country, two nations என்பது கிழக்குத்தமிழரை அம்போ என்று கைவிட்டால் மட்டுமே சாத்தியம்.

கஜனுக்கும் இது தெரியும். கிழக்கில் தமது கட்சி க்கு வாக்கு வங்கி இல்லை என்பதால், தெரிந்தே கீழ்தரமான வாக்கு வங்கி அரசியல் செய்கிறது கஜன் கொம்பனி.

  • கருத்துக்கள உறவுகள்

முஸ்லீம்கள்.. தேசிய இன மக்கள் அல்ல. மதக் குழும சமூகம். முஸ்லீம்கள் தனி இனம் என்றால் தமிழ் பேசும் கிறிஸ்தவர்கள்.. இந்துக்கள் எல்லோரும் தனித்தனி இனம். அதேபோல்.. சிங்களம் பேசும் பெளத்தர்கள்.. கிறிஸ்தவர்கள்.. இஸ்லாமியர்களும் தனித்தனி இனம். அப்படியும் பிரிக்கலாமோ..??!

பேசுவது தமிழ். கட்டுவது சேலை அல்லது சாரம். சாப்பிடுவது சோறு... கறி. இருப்பது தமிழர்களுக்கு மத்தியில்.ஓதுவதைத் தவிர வேறு எல்லாம் ஒன்று.

இதில்.. தனித் தேசிய இன அடையாளம் என்று எதைச் சொல்வது. அராபிய பெயர்பலகைகளையும்.. புதிதாக முளைச்ச பர்தாக்களையும்..பேரீச்சை மரத்தையுமா..?! :D:icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

சுயநிர்ணயம் என்ன என்பதை தேடி, வூட் றோ வில்சனில் தொடங்கி, லெனின் ஈறாக, கொசோவோ சவுத் ஒசேசியா என்று ஆராய்ந்து, ஆராய்ச்சிக் கட்டுரை சமர்பித்து, அது பப்ளிஸ் ஆகியும் விட்டது. மறுபடியும் முதலில் இருந்து துடங்குவது நேர விரயம்.

தேசிய இனத்துக்கும், சுய நிர்ணயத்துக்கும் முடிச்சு போடுவது ஏல் லாஜிக் அல்லது basic verbal reasoning படிச்ச எல்லோர்க்கும் விளங்கக் கூடியத்தான்.

1) தேசிய இனங்களின் பண்புகளில் ஒன்று சுயநிர்ணய உரிமை

2) சுயநிர்ணய உரிமை உள்ள குழுக்கள் எல்லாம் தேசிய இனங்களில்லை

3) சுய நிர்ணயம் என்பது தேசிய இனங்களுக்குரிய பண்பு மட்டும் இல்லை.

முஸ்லீம்கள் தேசிய இனம் இல்லைத்தான், ஆனால் அவர்களுக்கு நிச்சயம் சுய நிர்ணய உரிமை உண்டு.

The clue is in the name. முஸ்லீம்களின் "சுய" நிர்ணய உரிமை, அவர்களது சுயமான உரிமை. எனவே அதை சிங்களவர்களோ, தமிழர்களோ அவர்களுக்கு வழங்க முடியாது.

எப்படி தமிழரின் சுய நிர்ணய உரிமையை சிங்களவர் வழங்க முடியாதோ அப்படி.

ஒன்றில் இலங்கையில் சிங்களவர், தமிழர், முஸ்லீம்கள் எனும் மூன்று சுயநிர்ணயத்துக்கு தகுந்த மூன்று குழுக்கள் உள்ளன. அல்லது இலங்கையில் எந்த ஒரு குழுவுக்கும் சுய நிர்ணயம் இல்லை - ஒட்டுமொத்த இலங்கை பிரசைகளிடமே அது தங்கியுள்ளது.

இது தியரி.

In practice - நீங்கள் விரும்பியோ, விரும்பாமலோ முஸ்லீம்கள் சுய நிர்ணய உரிமையை மட்டுப் பட்ட ரீதியில் பாவிக்கத் தொடங்கியே விட்டார்கள். 1990 இல் புலிகள் செய்தது போல ஒரு இனச் சுத்தீகரிப்பை கிழக்கில் செய்யாத வரைக்கும், கிழக்கில் முசுலீம்களை தவிர்த்து ஏதும் செய்ய முடியாது. ஜனநாயகம் விடாது.

ஆக, வடக்கு கிழக்கு மீளிணக்கப் பட்ட மாகாண, அல்லது பெடரல் அலகு என்பதே முசுலீம்களை கெஞ்சிக் கூத்தாடியே பெற வேண்டும். முஸ்லீம் தலைமை ஒத்துக் கொண்டாலும், முசுலீம் மக்கள் சர்வசன வாக்கெடுப்பை சிங்களவருடன் சேர்ந்து தோக்கடிப்பர்.

இதுக்கே இப்படி எனும் போது, கஜன் சொல்லும் confederacy க்கு ஒப்பான one country, two nations என்பது கிழக்குத்தமிழரை அம்போ என்று கைவிட்டால் மட்டுமே சாத்தியம்.

கஜனுக்கும் இது தெரியும். கிழக்கில் தமது கட்சி க்கு வாக்கு வங்கி இல்லை என்பதால், தெரிந்தே கீழ்தரமான வாக்கு வங்கி அரசியல் செய்கிறது கஜன் கொம்பனி.

இதைத்தானே இங்கு எல்லோரும் படிச்சு படிச்சு எழுதுகிறார்கள்

எங்களது உரிமை

வடக்கு கிழக்கு இணைந்த சுய உரிமை கேட்பது.

அதைதான் மேலே கஜேந்திரன் கேட்கிறார்.

முஸ்லிம்களுக்கு என்ன இருக்கிறதோ ?

என்ன வேண்டுமோ ?

அதை யார் மறுக்கிறார் ....?

சுய நிர்ணயம் வேண்டும் என்றால் ......

கூடி இருந்தபோது கொத்தாவிடம் கேட்டிருக்கலாமே ?

நாம் எங்கிருந்து வந்தோம்

எங்கு நிற்கிறோம் என்ற இடத்தில் இருக்கிறோம் என்பதில்

இருந்துதான் கஜேந்திரனின் நிலைப்பாடு இருக்கிறது.

எதிர்காலத்தில் இப்படி இருக்கும் என்றால்...

சந்திர மண்டலத்தில் காணி பிரித்து

இப்போதே நாடுகள் சண்டை பிடிக்கனுமா??

கஜேந்திரனை ஓரம்கட்ட நீங்கள் கூட்டிவந்ததுதான்

இந்த முஸ்லீம்கள்.

நேரம் வரும்போது சிங்களவன் இவர்களை கவனிப்பான்

அப்ப அப்ப கவனித்து வருகிறான்.

உரிமை இருந்தால் அவர்கள் கேட்கலாம் அதில் எந்த தவறும் இல்லை.

காத்தான் குடியில் இருந்து சிங்கள போலிசை அகற்றும் வேலையை தொடங்க சொல்லுங்கள்.

சுயநிர்ணயம் என்ன என்பதை தேடி, வூட் றோ வில்சனில் தொடங்கி, லெனின் ஈறாக, கொசோவோ சவுத் ஒசேசியா என்று ஆராய்ந்து, ஆராய்ச்சிக் கட்டுரை சமர்பித்து, அது பப்ளிஸ் ஆகியும் விட்டது. மறுபடியும் முதலில் இருந்து துடங்குவது நேர விரயம்.

தேசிய இனத்துக்கும், சுய நிர்ணயத்துக்கும் முடிச்சு போடுவது ஏல் லாஜிக் அல்லது basic verbal reasoning படிச்ச எல்லோர்க்கும் விளங்கக் கூடியத்தான்.

1) தேசிய இனங்களின் பண்புகளில் ஒன்று சுயநிர்ணய உரிமை

2) சுயநிர்ணய உரிமை உள்ள குழுக்கள் எல்லாம் தேசிய இனங்களில்லை

3) சுய நிர்ணயம் என்பது தேசிய இனங்களுக்குரிய பண்பு மட்டும் இல்லை.

முஸ்லீம்கள் தேசிய இனம் இல்லைத்தான், ஆனால் அவர்களுக்கு நிச்சயம் சுய நிர்ணய உரிமை உண்டு.

The clue is in the name. முஸ்லீம்களின் "சுய" நிர்ணய உரிமை, அவர்களது சுயமான உரிமை. எனவே அதை சிங்களவர்களோ, தமிழர்களோ அவர்களுக்கு வழங்க முடியாது.

எப்படி தமிழரின் சுய நிர்ணய உரிமையை சிங்களவர் வழங்க முடியாதோ அப்படி.

ஒன்றில் இலங்கையில் சிங்களவர், தமிழர், முஸ்லீம்கள் எனும் மூன்று சுயநிர்ணயத்துக்கு தகுந்த மூன்று குழுக்கள் உள்ளன. அல்லது இலங்கையில் எந்த ஒரு குழுவுக்கும் சுய நிர்ணயம் இல்லை - ஒட்டுமொத்த இலங்கை பிரசைகளிடமே அது தங்கியுள்ளது.

இது தியரி.

In practice - நீங்கள் விரும்பியோ, விரும்பாமலோ முஸ்லீம்கள் சுய நிர்ணய உரிமையை மட்டுப் பட்ட ரீதியில் பாவிக்கத் தொடங்கியே விட்டார்கள். 1990 இல் புலிகள் செய்தது போல ஒரு இனச் சுத்தீகரிப்பை கிழக்கில் செய்யாத வரைக்கும், கிழக்கில் முசுலீம்களை தவிர்த்து ஏதும் செய்ய முடியாது. ஜனநாயகம் விடாது.

ஆக, வடக்கு கிழக்கு மீளிணக்கப் பட்ட மாகாண, அல்லது பெடரல் அலகு என்பதே முசுலீம்களை கெஞ்சிக் கூத்தாடியே பெற வேண்டும். முஸ்லீம் தலைமை ஒத்துக் கொண்டாலும், முசுலீம் மக்கள் சர்வசன வாக்கெடுப்பை சிங்களவருடன் சேர்ந்து தோக்கடிப்பர்.

இதுக்கே இப்படி எனும் போது, கஜன் சொல்லும் confederacy க்கு ஒப்பான one country, two nations என்பது கிழக்குத்தமிழரை அம்போ என்று கைவிட்டால் மட்டுமே சாத்தியம்.

கஜனுக்கும் இது தெரியும். கிழக்கில் தமது கட்சி க்கு வாக்கு வங்கி இல்லை என்பதால், தெரிந்தே கீழ்தரமான வாக்கு வங்கி அரசியல் செய்கிறது கஜன் கொம்பனி.

இதைத்தானே இங்கு எல்லோரும் படிச்சு படிச்சு எழுதுகிறார்கள்

எங்களது உரிமை

வடக்கு கிழக்கு இணைந்த சுய உரிமை கேட்பது.

அதைதான் மேலே கஜேந்திரன் கேட்கிறார்.

முஸ்லிம்களுக்கு என்ன இருக்கிறதோ ?

என்ன வேண்டுமோ ?

அதை யார் மறுக்கிறார் ....?

சுய நிர்ணயம் வேண்டும் என்றால் ......

கூடி இருந்தபோது கொத்தாவிடம் கேட்டிருக்கலாமே ?

நாம் எங்கிருந்து வந்தோம்

எங்கு நிற்கிறோம் என்ற இடத்தில் இருக்கிறோம் என்பதில்

இருந்துதான் கஜேந்திரனின் நிலைப்பாடு இருக்கிறது.

எதிர்காலத்தில் இப்படி இருக்கும் என்றால்...

சந்திர மண்டலத்தில் காணி பிரித்து

இப்போதே நாடுகள் சண்டை பிடிக்கனுமா??

கஜேந்திரனை ஓரம்கட்ட நீங்கள் கூட்டிவந்ததுதான்

இந்த முஸ்லீம்கள்.

நேரம் வரும்போது சிங்களவன் இவர்களை கவனிப்பான்

அப்ப அப்ப கவனித்து வருகிறான்.

உரிமை இருந்தால் அவர்கள் கேட்கலாம் அதில் எந்த தவறும் இல்லை.

காத்தான் குடியில் இருந்து சிங்கள போலிசை அகற்றும் வேலையை தொடங்க சொல்லுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

அதெப்படி தமிழர்கள் மட்டும் சுயநிர்ணயமுடையவர்கள், முஸ்லீம்கள் இல்லை என்கிறீர்கள்?

தேசிய இனமாய் இருந்தால்தான் சுயநிர்ணய உரிமை இருக்கும் என்பதில்லை.

சிலநூறு பேரளவிலான அமேசன் பழங்குடிகள், ஜிப்ரால்டர் பாறையில் வசிக்கும் ஆங்கில வந்தேறிகள், போர்க்லாண்ட் ஐலண்ட் வாசிகள் என்று தேசிய இனமல்லாத பல குழுக்கள் சுயநிர்ணயத்தை அனுபவிக்கும் தகமை உடையனவாய் கருதப் படுகிறன.

இலங்கை தமிழர் கூட ஒரு தேசிய இனமா என்பது கேள்விக்குறியே.

இதுக்கெல்லாம் அப்பால்

நாம் கொடுக்கும் நிலையிலும் இல்லை

முஸ்லீம்கள் பெறும் நிலையிலும் இல்லை என்பதுதான் ய்தார்த்தம்.

தமிழர்களே ஒரு தேசிய இனமா (சிங்களவரின் வாதம்) என்று கேள்வி கேட்கும் நீங்கள்தான் முஸ்லீம்களுக்கு சுய நிர்ணய உரிமை உள்ளது என வாதிடவும் செய்கிறீர்கள்.

ஒரு தேசிய இனம் இருந்தால் அதற்கு சுயநிர்ணய உரிமை உள்ளது. சுயநிர்ணய உரிமை இருந்தால் மட்டுமே சமஷ்டி / தனிநாடு போன்றவற்றைக் கோரமுடியும்.

உங்கள் வாதப்படி முஸ்லீம்களுக்கு இலங்கைத்தீவில் உள்ள உரித்துகள்கூட தமிழர்களுக்கு இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்

இசுலாமியர்களுக்கு எப்பொழுதும் தமிழரிடம் தான் வேண்டுதல்

கோரிக்கை எல்லாமே...

சிங்களவருடன் எப்பொழுதும் இந்தக்கோரிக்கைகளை  வைப்பதில்லை

போராடுவதில்லை

ஆனால் தமிழருக்கு ஏதாவது  கொடுக்கப்போகிறார்கள் என்றால்

அல்லது தமிழர்களின் பலம் மூலம் ஏதாவது கிடைக்கப்போகிறது என்றால் மட்டும் வந்துவிடுவார்கள்

இதன் உள் நோக்கம்

சிங்களவருடன் ஒட்டு

தமிழருடன் வெட்டு என்பது தான்

இது தாயகத்திலுள்ள பாலகர்களுக்கும் தெரிந்த ஒன்று.....

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு மொழி பேசும் முசுலீம்களும் எங்கள் தேசிய இனத்தில்தான் அடங்குவார்கள் என்றால்? பிரெஞ்சு மொழி பேசும், பிரான்சுக்காரன், பெல்ஜியும்காரன், சுவிஸ்காரன் எல்லாரும் ஓரினமா?

ஹிந்தி பேசுபவர்களும் உருது பேசுபவர்களும் ஓரே இனமா வேறினமா?

இலங்கைத்தமிழரும், இந்தியத்தமிழரும் ஒரே தேசிய இனமா அல்லது வேறு வேறு தேசிய இனமா?

தேசிய இனமா இல்லையா என்பது தேவையில்லாத irrelevant போயிட்ன்.

நாம் சுயநிர்ணய உரிமை உள்ள ஒரு குழுவா? இல்லையா? ஆம் எனில் அதே உரிமை முசுலீமுக்கும் உண்டு.

இதை நீங்கள் யாரும் கொடுக்கத்தேவையில்லை. அவர்களயே எடுத்துக்கொண்டு விட்டார்கள்.

இப்போ இலங்கையில் 2ம் பெரிய அரசியல் சக்தியாய் வளர்ந்தும் விட்டார்கள்.

எம்மை மகிந்த என்ன பாடு படுத்தினான்? அவன் ரோமத்தை கூட புடுங்க முடியவில்லை, புலத்தில் இவ்வளவு பேர் இருந்தும்.

ஒரு மூணு இடத்தில் முஸ்லீம் மீது கைவைத்தான் வீட்டுக்கு அனுப்பி இனி கழியும் தின்ன வைப்பார்கள்.

அதுதான் நாம் மொக்குச் சோனி என்று இகழ்ந்தவர்களின் கெட்டித்தனம்.

முசுலீமுக்க்கு எதையும் கொடுக்கும் நிலையில் தமிழர் இல்லை.

கஜன் இரு நாடு என்பதில் குறிப்பது நிச்சயமாக வடக்கை மட்டுமே.

இந்த பட்டவர்த்தனமான கயமைக்கு, கிழக்கிலங்கை மக்களை நடுத்தெருவில் விடும் போக்குக்கு புலத்தில் இருக்கும் சில யாழ்மையவாதிகளும் விசிறி வீசுவது ஆசாரியமில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

கோசான்.. நீங்கள் இப்படி உணர்ச்சிவசப்பட இங்கு ஒன்றும் பெரிய விடயம் ஏதுமில்லை..

தேசிய இனம் என்பதற்கான அடிப்படைக் கூறுகள் ஏற்கனவே மேலே வழங்கப்பட்டுவிட்டன. முஸ்லிம்கள் அதற்குள் அடங்குகிறார்களா என்பதை நீங்களே சிந்தித்து அறிந்துகொள்ளலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

முஸ்லீம்கள் தேசிய இனம் இல்லை என்பதில் எனக்கு ஒரு மாற்றுக்கருத்தும் இல்லை.

ஆனால் தமிழர்கள் சுயநிர்ணயம் உடையவராயின் முஸ்லீம்களும் அப்படியே.

தேசிய இனத்துக்குத்தான் சுயநிர்ணய உரிமை உண்டு என்று இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்கள் ஒரு தேசிய இனம். அவர்களுக்கு அதற்கான எல்லா தகுதி நிலைகளும் பூர்வீகமும் உண்டு. முஸ்லீம்கள்.. ஒரு மதக் குழும சமூகம். அவர்களும் தமிழர்களே. எதுக்கு ஒரு டி என் ஏ ரெஸ்ட் செய்தால் போச்சு.. அராபிய டி என் ஏயா.. தமிழ் டி என் ஏயா அதிகம் என்று தெரிஞ்சிடும். சும்மா.. பர்தாவை போட்டு இழுத்து மூடி.. பேரிச்சமரத்தை கப்பலில் இறக்கி நட்டு வைச்சாப் போல தேசிய இனமாகவோ.. சுயநிர்ணய உரிமையை கோரவோ தகுதி அடையமாட்டார்கள்.

முஸ்லீம்களின் மத மொழி.. மதக் கலாசார சுதந்திரத்தை தமிழ் மக்கள் எப்போதுமே அங்கீகரித்து நிற்கிறார்கள். தமிழ் மக்களுக்கு ஆபத்து உண்டு பண்ணாத நில சுதந்திரமும் முஸ்லீம்களுக்கு உண்டு. அதில் கருத்து வேறுபாடு கிடையா. இவை மலையக மக்களுக்கும் கிடைக்க வேண்டும். :icon_idea:

முஸ்லீம்கள் தேசிய இனம் இல்லை என்பதில் எனக்கு ஒரு மாற்றுக்கருத்தும் இல்லை.

ஆனால் தமிழர்கள் சுயநிர்ணயம் உடையவராயின் முஸ்லீம்களும் அப்படியே.

தேசிய இனத்துக்குத்தான் சுயநிர்ணய உரிமை உண்டு என்று இல்லை.

நிச்சயமாக முஸ்லிம்களுக்கு சுயநிர்ணய உரிமை இருக்கு ........அது அவர்கள் மொழியை அவர்கள்  கலாச்சாரத்தை ,அவர்கள் பண்பாட்டை கொண்டு வாழும் அவர்களது தேசத்தில் .........
 
தமிழை மொழியாக கொண்டு ,அதனூடு ஏற்பட்ட  கலாச்சாரத்தை பின்பற்றிக்கொண்டு ,பண்பாட்டை பின்பற்றிக்கொண்டு வாழும் முஸ்லிம் ,கத்தோலிக்கம் ,கிறிஸ்தவன் என்று வாழும் மாந்தர்க்கு தனியான சுயநிர்ணய உரிமை எதுவும் கிடையாது .தமிழன் என்ற சுயநிர்ணய உரிமை மட்டுமே அவர்கள் உரிமையாகும் சகோதரா .... :icon_idea:
  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்கள் வடக்கு / கிழக்கில் பெரும்பான்மையுடன் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக வாழ்ந்து வந்துள்ளார்கள் என்பது சான்றுபூர்வமாக நிறுவப்பட்டுள்ளது.

இவர்கள் தமிழ்மொழி பேசியவர்கள் என்பதும் கல்வெட்டுக்கள் மற்றும் தமிழக இலக்கிய சான்றுகள் மூலம் நிறுவப்பட்டுள்ளது.

இந்தத் தமிழ் பூர்வகுடிகளுடன் அராபிய வணிகர்கள் கலந்ததால் இஸ்லாம் மதத்தைத் தழுவிய ஒரு மரபினர் உருவானார்கள். இவர்களும் தமிழ் மொழியைத்தான் பேசி வளர்ந்தார்கள்.

ஆங்கிலேயர் வருகையுடன் கிறீஸ்தவர்களாக சில தமிழ் பூர்வகுடியினர் மாறினர். ஆனாலும் இவர்கள் தமிழ் மொழியையே பேசினர்.

ஆக, இந்தப் பூர்வகுடிகள், தமிழ் முஸ்லீம்கள், தமிழ் கிறீஸ்தவர்கள் அனைவரும் தமிழ் தேசியத்தினுள் அடங்குகிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

முசுலீம் வேண்டாம் வேண்டாம் எண்டி அழுதாலும் அவனுக்கு தமிழ் தேசியம் தீத்தியே தீருவோம் என்கிறீர்கள். உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்.

ஆனால் என் சிற்றறிவுக்கு பட்டதை சொல்லி விடை பெறுகிறேன்.

இனிமேல் முசுலீமா பார்த்து ஏதாவது தமிழர்க்கு விட்டுக்கொடுத்தாதான் உண்டு.

உங்கள் வீட்டுக்கொல்லையில் வந்து எந்த முசுலீமும் இனி சுயநிர்ணயப் பிச்சை எடுக்கப் போவதில்லை.

அவர்கள் உங்களை மீறி போய் பலகாலமாகி விட்டது.

கோசான் சே  தூங்குபவனை தட்டி எழுப்பலாம் ...தூங்குபவன் போல நடிப்பவனை தட்டி எழுப்ப முடியாது என்ற பழைய பழமொழி எமக்கும் தெரியும் ..........அதனால்தான்         ,தமிழர்கள் ஆகிய முஸ்லிம் மதத்தவர் பற்றி அவர்கள் தூக்கம் பற்றி நாமறிவோம் .ஆனால் எங்கள் உரிமையில் ,நியாயமான தேவையில் குறுக்கே நிற்கிறார்கள் என்ற அப்பட்டமான உண்மையே எனது இந்தப்பதிவு .கிரகிக்க அறிவிருந்தால் கிரகியுங்கள் .இல்லையேல் நானும் நன்றி வணக்கம் சொல்கிறேன் .கூத்து கச்சேரி என்று நிறைய இருக்கு .வரட்டா ...... :)

  • கருத்துக்கள உறவுகள்

சிறிலங்காவில் வாழும் முஸ்லிம்கள் ஒரு தேசிய இனமா? அவர்கள் என்ன அரபு மொழியையா பேசுகிறார்கள். அவர்கள் அரபு மொழியைப் பேசினால் அவர்களை தேசிய இனமாக ஏற்றுக் கொள்வோம். கட்டுரையாளர் கஜேந்திரகுமார் மீதில் இருக்கும் கடுப்பில் கண்டதையெல்லாம் கிறுக்கிகுறார்.விடுதலைப்புலிகளின் ஆதரவாளார்களால் கஜேந்திரகுமார் ஆதரிக்கப்படுகிறார் என்றால் அதே விடுதலைப்புலிகளால் அமைக்கப்பட்ட ததேகூட்டமைப்பை விட்டு அரசாங்கக் கட்சியிலே சம்பந்தர் சேர்ந்து கொண்டு புலிக் கொடியைத் தூக்கிப் பிடிக்கட்டும். மீண்டும் கிழக்கிலிருந்து பிரதேச வாத்ததைக் கிளப்புகின்றார்.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் தேசிய மக்கள் முன்னணியையும் தங்களோட வந்து சேர சுமந்திரன் கெஞ்சிக்கொண்டு திரிகிறார்.

  • கருத்துக்கள உறவுகள்

முஸ்லீம்கள் எங்களை மீறிப் போய் கனகாலம் ஆகிவிட்டது.. அல்லது அவர்கள் எங்களிடம் சுயநிர்ணயப் பிச்சை எடுக்கப்போவதில்லை என்பதெல்லாம் அவர்களது முடிவு / தெரிவு.. ஆனால் அந்த அவர்களது முடிவுகளுக்கான விளைவுகளையும் அவர்களே பெற்று அனுபவித்துக் கொள்ளுவார்கள். அவை நன்மையாகவும் அமையலாம்.. அல்லது தீமையாகவும் அமையலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

அறுபது வருடமாக தமிழ் தலைமைகள் முன்னெடுத்த தற்கொலை அரசியலையும், அதே காலப்பகுதியில் முசுலீம்கள் செய்த தற்க்காப்பு அரசியலையும் பார்க்கும் போது தமிழரிடம் சேராமல் தனித்தே நல்ல விளைவுகளை முசுலீமகள் பெறுவார்கள் என்றே படுகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

முசுலீம் வேண்டாம் வேண்டாம் எண்டி அழுதாலும் அவனுக்கு தமிழ் தேசியம் தீத்தியே தீருவோம் என்கிறீர்கள். உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்.

ஆனால் என் சிற்றறிவுக்கு பட்டதை சொல்லி விடை பெறுகிறேன்.

இனிமேல் முசுலீமா பார்த்து ஏதாவது தமிழர்க்கு விட்டுக்கொடுத்தாதான் உண்டு.

உங்கள் வீட்டுக்கொல்லையில் வந்து எந்த முசுலீமும் இனி சுயநிர்ணயப் பிச்சை எடுக்கப் போவதில்லை.

அவர்கள் உங்களை மீறி போய் பலகாலமாகி விட்டது.

நீண்ட காலப்போக்கில் சிறுபான்மையினர் ஒற்றுமையாகவிடின் எதனையும் பெற மாட்டார்கள் என்பது தான் யதார்த்தம். தனித்து தனித்து போராடுவது சிறுபான்மையினரை பலவீனப்படுத்தும். ஏதோ ஒரு ஒரு சில கொள்கை அடிப்படையிலாவது ஜீனியஸ் சம்பந்தர் எல்லோரையும் அரவணைக்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

அது சரி அதுக்கும் அந்த பொக்கை கொட்டாவி வாய்க் கிழவன் தானே வரணும் :)

ஆனா ஒன்று என்ன செய்தாலும் புலத்தில் இருந்த படி நாம் சம்பந்தரின் வேட்டியை உருவிக்கிட்டே இருப்போம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.