Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இராணுவ அணிவகுப்பை புறக்கணிக்கிறது கூட்டமைப்பு! சம்பந்தன், சுமந்திரன் சார்பிலோ நான் இந்தக் கருத்தை வெளியிடவில்லை

Featured Replies

Suresh-Premachandran_1.jpgசிறிலங்காவில் போர் முடிவுக்கு வந்ததை நினைவு கூரும் வகையில், மாத்தறையில் வரும் 19ம் நாள் சிறிலங்கா அரசாங்கத்தினால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள, இராணுவ அணிவகுப்பில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பங்கேற்காது என்று கூட்டமைப்பின் பேச்சாளர், சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

2009ம் ஆண்டு போர் முடிவுக்கு வந்த நாளில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்டு வரும் இந்த இராணுவ அணிவகுப்பை புறக்கணிப்பது என்ற தெளிவான நிலைப்பாட்டை, கூட்டமைப்பு எடுத்திருக்கிறது.

ஆனால், இரா.சம்பந்தனின் சார்பிலோ, சுமந்திரனின் சார்பிலோ நான் இந்தக் கருத்தை வெளியிடவில்லை.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஏனைய உறுப்பினர்கள், வெற்றி விழா நிழ்வுகளில் பங்கேற்பதில்லை என்று ஆரம்பத்தில் இருந்தே தெளிவான நிலைப்பாட்டில் இருக்கின்றனர்.

இது தமிழர்கள் கொண்டாடும் நாள் அல்ல. இது சிறிலங்கா இராணுவத்தினரின் கொண்டாட்டத்துக்குரிய நாளாக இருக்கலாம், ஆனால், இதனை தமிழ்மக்களால் கொண்டாட முடியாது.

தனிப்பட்ட ரீதியாக, மாத்தறையில் நடைபெறும் நிகழ்வில் நான் பங்கேற்கப் போவதில்லை.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மாத்தறையில் நடைபெறும் இராணுவ அணிவகுப்பு நிகழ்வில் பங்கேற்குமாறு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும், வடக்கு மாகாணசபை உறுப்பினர்களுக்கும் சிறிலங்கா அரசாங்கம் அழைப்பு விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.http://www.pathivu.com/news/40128/57//d,article_full.aspx

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களவனுடன் இதயத்தால்.... ஒன்று கலந்த... சம்பந்தன், சுமந்திரன் இதில் கலந்து கொள்ளாமலா இருக்கப் போகின்றார்கள்.
அப்படி அவர்கள் கலந்து கொண்டாலும், வரும் பாராளுமன்றத் தேர்தலின் பின்.. வீட்டிற்குள் தானே... முடங்கி இருக்கப் போகின்றார்கள்.
 
சுரேஷ் பிரேமச்சந்திரனின் நிலைப்பாட்டுக்கு, தமிழ் மக்கள் சார்பில் நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் தோழா வெல்க உன் நிலைபாடு

  • கருத்துக்கள உறவுகள்

தோழர் சுரேசுக்கு நன்றி, வாழ்க வளர்க வலுப்பெறுக உன் நிலைபாடு

கடந்த காலங்களில் செய்த பலிகள் ,கொலைகள் போன்றவற்றுக்கு சுரேஷ் பிராச்சித்தம் தேடத்தானே வேண்டும் ,ஜனாதிபதி தேர்தலில் மைத்திரிக்கு பெரியளவில் ஆதரவு காட்டாமல் இருந்தவராம் .காரணம் பழைய எஜமான பாசமாம் .

 சம்பந்தன், சுமந்திரன்கள் மைத்திரியுடன் இதயத்தால் ஒன்றிணைந்து வித்தியாக்கள், அப்பாவி முன்னாள் போராளிகளை பலி கொடுக்காமல், தம் மனைவி மக்களை தானம் செய்யட்டும், 

சுமந்திரன் அடுத்த தேர்தலில் போட்டியிவாரா? அல்லது வழமை போல் பின் கதவு வழிதானா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 சம்பந்தன், சுமந்திரன்கள் மைத்திரியுடன் இதயத்தால் ஒன்றிணைந்து வித்தியாக்கள், அப்பாவி முன்னாள் போராளிகளை பலி கொடுக்காமல், தம் மனைவி மக்களை தானம் செய்யட்டும், 

சுமந்திரன் அடுத்த தேர்தலில் போட்டியிவாரா? அல்லது வழமை போல் பின் கதவு வழிதானா?

போற நிலைமையை பார்த்தால் பின் கதவுக்காலைதான் உள்ளடுவார் போலை கிடக்கு...

  • கருத்துக்கள உறவுகள்

கடந்த காலங்களில் செய்த பலிகள் ,கொலைகள் போன்றவற்றுக்கு சுரேஷ் பிராச்சித்தம் தேடத்தானே வேண்டும் ,ஜனாதிபதி தேர்தலில் மைத்திரிக்கு பெரியளவில் ஆதரவு காட்டாமல் இருந்தவராம் .காரணம் பழைய எஜமான பாசமாம் .

அவருடைய பழைய எசமானி சந்திரிக்கா தானே.

  • கருத்துக்கள உறவுகள்

அவருடைய பழைய எசமானி சந்திரிக்கா தானே.

அப்ப சிங்களவீட்டு பின்கதவால் வந்து தமிழ்தரப்புக்கு பாடம் எடுக்கூடும்

  • கருத்துக்கள உறவுகள்

மண்டையன் குழு 87-90 இல் அப்பாவி தமிழ் மக்கள் மீதும் புலி ஆதரவாளர்கள் மீதும் செய்த கொலை வன்புணர்வுகளுக்கு எப்போ பகிரங்க மன்னிப்பு கேட்கப்போறர் மண்டையன் குழுத்தலைவர் சுரேசு.

90-2001 வரை சந்திரிக்காவுடன் சேர்ந்து தமிழ் மக்களை கொடுமைப்படுத்தியதுக்கு என்ன பதில்.

தேர்தலில் போட்டியிடப்போவதாக அண்மையில் ஒரு பேட்டியில் சொல்லியிருந்தார்.

அவருடைய பழைய எசமானி சந்திரிக்கா தானே.

சுரேஷ் 1994 தேர்தலில் தோற்று மகிந்த மீன்பிடி அமைச்சராக இருக்கும் போது ,மீன்பிடி அமைச்சின் ஆலோசகராக இருந்தவர் .

போற நிலைமையை பார்த்தால் பின் கதவுக்காலைதான் உள்ளடுவார் போலை கிடக்கு...

உங்களுக்கெல்லாம் நினைப்புத்தான் பிழைப்பை கெடுக்குது ,இப்படித்தான் நீங்கள் எல்லாம் சம்பந்தரை தோற்கடிக்க களமிறங்கி கடைசியில கட்டுக்காசை இழந்தது தான் மிச்சம் ,திரும்பவும் வீராப்புகளுக்கு குறைச்சலில்லை .

அப்ப சிங்களவீட்டு பின்கதவால் வந்து தமிழ்தரப்புக்கு பாடம் எடுக்கூடும்

சுமந்திரன் தேர்தலிலை நின்று வென்று காட்டுவார் ,சுமந்திரன் அரசியலுக்கு வரமுன்பே உனர்வுபூர்வமாக மக்களுக்காக பல வழக்குகளை சிங்கள அரசு மீது தொடுத்தவர் .பல சட்டத்தரணிகள் ,புத்திஜீவிகள் உள்ள குடா நாட்டிலுள்ளவர்கள் எங்கை போனவர்கள் ?

  • கருத்துக்கள உறவுகள்

மண்டையன் குழு 87-90 இல் அப்பாவி தமிழ் மக்கள் மீதும் புலி ஆதரவாளர்கள் மீதும் செய்த கொலை வன்புணர்வுகளுக்கு எப்போ பகிரங்க மன்னிப்பு கேட்கப்போறர் மண்டையன் குழுத்தலைவர் சுரேசு.

90-2001 வரை சந்திரிக்காவுடன் சேர்ந்து தமிழ் மக்களை கொடுமைப்படுத்தியதுக்கு என்ன பதில்.

கோஷான், இது சுத்தமான காழ்ப்புணர்ச்சி இல்லையென்றூ சொல்கிறீர்களா? 

முந்தி அவர் அப்படி இருந்தார் என்றபடியினால், அவர் இன்று எது சொன்னாலும் பிழைதான், அதை எவரும் கேட்கக் கூடாதென்று சொல்கிறீர்களா/ அதுவும் அவர் உங்களுக்குப் பிடிக்காத ஒரு கருத்தைச் சொல்லும்போது ?

நீங்கள் கூறும் தமிழரை கொன்றொழித்த அதே அம்மையாரும் இன்று நீங்கள் அவகாசம் கொடுத்து காத்திருக்கும் மைத்திரியின் அரசின் முக்கிய தூண்களில் ஒன்றென்பதை மறந்துவிட்டீர்களோ? முன்னர் மண்டையன் குழு சுரேஷ் இந்த அம்மையாருடன் சேர்ந்து செய்த அட்டூழியங்களை விமர்சித்து, ஆகவே அவர் இன்று சொல்வதைக் கேட்க வேண்டாம் கூப்பாடு போடும் நீங்கள், அந்த அம்மையாரையும் அல்லவா விமர்சிக்க வேண்டும். அதைச் செய்ய வேண்டுமென்றே நீங்கள் மறந்துவிட்டு, மண்டையன் சுரேஷை மட்டும் ஏன் வாருகிறீர்கள்?

அதுமட்டுமல்லாமல், மண்டையன் சுரேஷின்  மேலான உங்களின் ஆத்திரத்தை ஒருபுறம் தூக்கி வைத்துப் போட்டுப் பார்த்தால், அவர் சொல்லுவதில் அப்படி என்னதான் தவறு இருக்கென்று நீங்கள் நினைக்கிறீர்கள்?

மாத்தறையில் நடக்கப்போகும் ராணுவ அணிவகுப்பென்பது எதற்காக நடக்கப்போகிறது என்று நினைக்கிறீர்கள்? மாத்தறையில் மே 18 இல் நடைபெற இருக்கும் நினைவு நிகழ்வென்பது சிங்களம் 2009 மே 18 இல் தமிழர்மீது நடத்தி முடித்த ஒரு திட்டமிட்ட இனவழிப்பில்லாமல், சிங்களத்துக்கும் இன்னொரு வெளிநாட்டுக்கும் இடையே நடந்த ஒரு யுத்தத்தின் நினைவு நாளென்று நீங்கள் கருதுகிறீர்களா? ஆகவேதான் சுரேஷ் இந்த நிகழ்வைப் புறக்கணிக்கக் கோருவது தவறென்று நினைக்கிறீர்கள்?

அப்படியில்லாமல், இந்த நிகழ்வை தமிழர் ஆதரிப்பதன்மூலம், தம்மையும் இந்த நாட்டின் சிங்கள் மக்களுக்கு நிகரான தன்மானமுடைய ஒரு மக்கள் கூட்டமென்று நினைக்குமளவிற்கு(?) அப்படி என்ந்தான் இந்த ஆட்சியில் நடந்துவிட்டதென்று நீங்கள் நினைக்கிறீர்கள்?

இப்படிக் கேட்டதற்காக என்னையும் வாரு வாரென்று வார வேண்டாம், ஏதோ கேட்கவேண்டும்போலத் தோன்றியது, அதனால் கேட்டேன், அவ்வளவுதான்.

  • கருத்துக்கள உறவுகள்

சுமந்திரன் தேர்தலிலை நின்று வென்று காட்டுவார் ,சுமந்திரன் அரசியலுக்கு வரமுன்பே உனர்வுபூர்வமாக மக்களுக்காக பல வழக்குகளை சிங்கள அரசு மீது தொடுத்தவர் .பல சட்டத்தரணிகள் ,புத்திஜீவிகள் உள்ள குடா நாட்டிலுள்ளவர்கள் எங்கை போனவர்கள் ?

அப்ப சுமந்திரன் குடாநாட்டை சேர்ந்தவரில்லையா?

அப்ப சுமந்திரன் குடாநாட்டை சேர்ந்தவரில்லையா?

இங்கு பலர் சுமந்திரன் கொழும்பை பிறப்பிடமாக கொண்டவர் என்று வசைபாடிநீங்கள் ,இப்ப சுமந்திரனை சொந்தம் கொண்டாடுகிறீர்கள் ,சந்தோசம் இதைத்தான் சொல்வதோ அடிக்கு மேல் அடியடித்தால் அம்மியும் நகருமென்று :) காலப்போக்கிலை சுமந்திரனின் நிலைப்பாடு சரியானது என்பதையும் நீங்கள் புரிந்துகொள்வீர்கள் .

  • கருத்துக்கள உறவுகள்

இல்லை இது காழ்ப்புணர்ச்சியில்லை.

சுமந்திரன், சம்பந்தர் தமிழர்களுக்கு செய்வதாக சொல்லப்படும் தீமையில் 1000 மடங்கு செய்தவர் மண்டையன்.

அப்போ இல்லாத ஞானோதயம் இப்போ வந்ததாய் சொல்லப்படுவதை நான் நம்பத்தயார் இல்லை.

மனம் திருந்தியிருந்தால் செய்த பாவத்துக்கு நல்லூர் வீதியில் ஆண்டி போல் போய் இருக்கட்டும்.

தொடர்ந்தும் குளறுபடி அரசியல் செய்வது தனக்கும் தம்பிக்கும் பதவி சுகம் வேண்டியே.

ராணுவ அணிவகுப்புக்கு போகக் கூடாது என்பது என் முடிவு ஈபி யுன் முடிவு என்று சொல்லிவிட்டு நிப்பாட்டி இருந்தால் பரவாயில்லை.

சம்பந்தர் சுமந்திரன் பற்றி நான் சொல்லவில்லை என்பது......தேவையில்லாத குத்தல் கதை. கேடு கெட்ட அரசியல்.

வாக்குப் பிச்சை.

சபாஷ் goshan_che 

உங்களுக்கு சுமந்திரன் தான் தெரியும் எனக்கு சுப்பிரமணியன் இல் இருந்து தெரியும்.

  • கருத்துக்கள உறவுகள்

இல்லை இது காழ்ப்புணர்ச்சியில்லை.

சுமந்திரன், சம்பந்தர் தமிழர்களுக்கு செய்வதாக சொல்லப்படும் தீமையில் 1000 மடங்கு செய்தவர் மண்டையன்.

அப்போ இல்லாத ஞானோதயம் இப்போ வந்ததாய் சொல்லப்படுவதை நான் நம்பத்தயார் இல்லை.

மனம் திருந்தியிருந்தால் செய்த பாவத்துக்கு நல்லூர் வீதியில் ஆண்டி போல் போய் இருக்கட்டும்.

தொடர்ந்தும் குளறுபடி அரசியல் செய்வது தனக்கும் தம்பிக்கும் பதவி சுகம் வேண்டியே.

ராணுவ அணிவகுப்புக்கு போகக் கூடாது என்பது என் முடிவு ஈபி யுன் முடிவு என்று சொல்லிவிட்டு நிப்பாட்டி இருந்தால் பரவாயில்லை.

சம்பந்தர் சுமந்திரன் பற்றி நான் சொல்லவில்லை என்பது......தேவையில்லாத குத்தல் கதை. கேடு கெட்ட அரசியல்.

வாக்குப் பிச்சை.

நான் திரும்ப திரும்ப சொல்வது சுரேஸ் எப்போதோ மன்னிப்பு கேட்டதாக. EPRLF TELO செய்வதெல்லாம் பிழை என்டால் தமிழரசுக்கட்சி ஏன் கூட்டமைப்பு என்று தொங்கிக்கொண்டிருக்கிறது?

  • கருத்துக்கள உறவுகள்

ஆதாரம் கேட்டேன் இன்னும் காட்டவில்லை.

சுரேஸ் ஆசிரியர் சுவாம்பிள்ளை, அகிலன் அண்ணா போன்றோரின் கொலையில் தனக்கு இருக்கும் பங்கை எடுத்துச் சொல்லி மன்னிப்பு கேட்கவேண்டும். செய்வாரா?

அப்படிச் செய்தால் சிலநேரம் கனடா ஆளை பயங்கரவாதி பட்டியலில் இருந்து தூக்கி வீசாவும் கொடுக்கக் கூடும்.

  • கருத்துக்கள உறவுகள்

Suresh-Premachandran_1.jpgசிறிலங்காவில் போர் முடிவுக்கு வந்ததை நினைவு கூரும் வகையில், மாத்தறையில் வரும் 19ம் நாள் சிறிலங்கா அரசாங்கத்தினால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள, இராணுவ அணிவகுப்பில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பங்கேற்காது என்று கூட்டமைப்பின் பேச்சாளர், சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

2009ம் ஆண்டு போர் முடிவுக்கு வந்த நாளில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்டு வரும் இந்த இராணுவ அணிவகுப்பை புறக்கணிப்பது என்ற தெளிவான நிலைப்பாட்டை, கூட்டமைப்பு எடுத்திருக்கிறது.

ஆனால், இரா.சம்பந்தனின் சார்பிலோ, சுமந்திரனின் சார்பிலோ நான் இந்தக் கருத்தை வெளியிடவில்லை.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஏனைய உறுப்பினர்கள், வெற்றி விழா நிழ்வுகளில் பங்கேற்பதில்லை என்று ஆரம்பத்தில் இருந்தே தெளிவான நிலைப்பாட்டில் இருக்கின்றனர்.

இது தமிழர்கள் கொண்டாடும் நாள் அல்ல. இது சிறிலங்கா இராணுவத்தினரின் கொண்டாட்டத்துக்குரிய நாளாக இருக்கலாம், ஆனால், இதனை தமிழ்மக்களால் கொண்டாட முடியாது.

தனிப்பட்ட ரீதியாக, மாத்தறையில் நடைபெறும் நிகழ்வில் நான் பங்கேற்கப் போவதில்லை.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மாத்தறையில் நடைபெறும் இராணுவ அணிவகுப்பு நிகழ்வில் பங்கேற்குமாறு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும், வடக்கு மாகாணசபை உறுப்பினர்களுக்கும் சிறிலங்கா அரசாங்கம் அழைப்பு விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.http://www.pathivu.com/news/40128/57//d,article_full.aspx

இங்கிருக்கும் சிலர் தாம் கூவித்தான் இரவு விடிவதாக எண்ணுகிறார்கள் போல்

அதுதான் திரிக்கு திரி வந்து கூவுகிறார்கள்.

அவர்களது எண்ணம் உண்மைக்கு புறம்பானது

கற்பனைக்கே எட்டாதது என்றாலும்.

திரிக்கு திரி வந்து கூவும் கடமை உணர்வை பாராட்டாது என்னால் இருக்க முடியவில்லை.

மேல் இருக்கும் செய்தியில் எல்லாம் தெளிவாக இருக்கு.

கூட்டமிப்பின் பேச்சாளர்தான் கூட்டமைப்பு பற்றிய நிலைபாட்டை பற்றி பேசுவார்.

அதை தட்டி மறுதலிக்க தலைவருக்கு உரிமை உண்டு.

கூட்டமிப்பின் முடிவு கூத்தமைப்பு பங்கேற்காது என்பதாகும்.

சுதந்திர தின விழாவில் இதே நிலை பாடு இருந்தபோதும்

சம்மந்தன் போய் நக்கிட்டு வந்தார்

எச்சில் சோறாக கொஞ்சத்தை காகங்களுக்கும் அரசு வீசியிருக்கலாம்

அது பற்றி காகங்கள் கரைவதில்லை.

இந்த நிலையில் சம்மந்தன் பற்றி கூட்டமைப்பு ஒரு முடிவை எடுக்க முடியாது

அது தன்னுடைய தனி நிலைபாடு என்பது அவரது பாணி.

அதில் கூத்தமைப்பு குருக்கிடவும் முடியாது.

இங்கே இரண்டு விடயங்கள் முக்கியமானவை.

சம்மந்தனும் சுமந்திரனும்

கட்சி பற்றிய நல்லெண்ன்னமோ

தமிழர்களுடைய நல் எண்ணமோ பற்றி

சிந்திப்பதில்லை

தமக்கு தனி லாபம் வருமென்றால் .....

தனியாக செல்வார்கள் என்பதை நான் எழுதவில்லை ..

சுரேஷ் சொல்லவில்லை

நாட்டு மக்கள் கூட இன்னமும் சொல்லவில்லை

இருவரும் செய்து காட்டி வருகிறார்கள் என்பது ஒன்று.

இரண்டு கூட்டமைப்பின் முடிவுகளில்

ஒரு இலட்சிய போக்கோ

சரியான திட்டம் இடலோ இல்லை

குழுவாக கூடி தமது போக்கில் போய்கொண்டு இருக்கிறார்கள்.

இதில் பின்கதவால் வந்தவர்கள்

மக்கள் நம்பி வாக்கு போட்டவர்கள் என்று எல்லாம் அடங்கும்.

நான் பல தடவை எழுதிவருகிறேன்.

காரணம் கள நிலைமைகளை எம்மை விட பாரிய பண செலவில்

ஆராய்வது உளவு துறைகள்தான்.

இந்திய ரோ வின் தற்போதைய போக்கில் ...

இவர்கள் மீது உள்ள நம்பிக்கையை இழந்துள்ளது.

என்பது தெளிவாக தெரிகிறது.

இப்போது மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது .....

யாரும் எதிர்பாரதா இன்னொரு மூனறாம் தரப்பு ஆகும்

கருணா டக்கிலஸ் ஆனந்த சங்கரி வரதராசர்

இவர்களை இந்தியா எந்த வடிவில் களம் இறக்கும் என்பது

இன்னமும் புரியவில்லை.

கஜேந்திர குமார் கட்சி வெற்றி பெற்றாலும் ...

பயங்கரவாத தடை சட்டத்தின் ஊடாக சிறையில் போடுவார்கள்.

மக்கள் சக்திதான் விடுதலையை பெறும்.

தமிழனுக்கு ஊர் சக்தியில் வீடு கட்டி பழகி விட்டது

இப்போதைக்கு மோட்சம் இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்

கடந்த காலங்களில் செய்த பலிகள் ,கொலைகள் போன்றவற்றுக்கு சுரேஷ் பிராச்சித்தம் தேடத்தானே வேண்டும் ,ஜனாதிபதி தேர்தலில் மைத்திரிக்கு பெரியளவில் ஆதரவு காட்டாமல் இருந்தவராம் .காரணம் பழைய எஜமான பாசமாம் .

சித்தாத்தன் என்ன பிராயசித்தம் செய்ய வேண்டும் என சொல்லவில்லையே நீங்கள்?

மண்டையன் குழு 87-90 இல் அப்பாவி தமிழ் மக்கள் மீதும் புலி ஆதரவாளர்கள் மீதும் செய்த கொலை வன்புணர்வுகளுக்கு எப்போ பகிரங்க மன்னிப்பு கேட்கப்போறர் மண்டையன் குழுத்தலைவர் சுரேசு.

90-2001 வரை சந்திரிக்காவுடன் சேர்ந்து தமிழ் மக்களை கொடுமைப்படுத்தியதுக்கு என்ன பதில்.

2009 வரை கொலை, கொள்ளை, என பல்வற்றுக்கு பின்னால் நின்று ஆதரவு வழங்கிய சித்தாத்தனை பற்றி நீங்களும் ஹரியும் என்ன பிராயசித்தம் தேட வேண்டும் என கூறினால் நல்லது. சம்பந்தருக்கு எதிராக சுரேஸ் கருத்து சொன்னால் உடனே ஹரி பிராயசித்தம் என எழுதுகிறார். சித்தாத்தன் வழமையாக பம்முவதால் அவருக்கு பிராயசித்தம் தேவை இல்லை என நினைக்கிறீர்களா?

ஆதாரம் கேட்டேன் இன்னும் காட்டவில்லை.

சுரேஸ் ஆசிரியர் சுவாம்பிள்ளை, அகிலன் அண்ணா போன்றோரின் கொலையில் தனக்கு இருக்கும் பங்கை எடுத்துச் சொல்லி மன்னிப்பு கேட்கவேண்டும். செய்வாரா?

முதல் கொலை "துரையப்பா", முதலில் மாவையை(அன்று அமிரின் ஏஜென்ட்) பகிரங்க மன்னிப்பு கேட்க சொல்லுங்கள் பார்ப்போம்? பின் நாளில் 1083 முதல் இந்திய அமைதிப்படை காலம் ஈறாக சந்திரிக்கா வரை கூட இருந்து காட்டிக்கொடுத்து படுகொலை செய்ய்ப்ப்ட்ட போராளிகள் தொகையை சொல்லுங்கள்? இக்கொலைகளில் சம்பந்தர்/மாவை சம்பந்தப்படவில்லை?

  • கருத்துக்கள உறவுகள்

சித்தார்தன் என்ன என் சித்த்கப்பாவா? அவரும் மன்னிப்புக் கேட்டு அரசியலை விட்டு விலக வேண்டும்.

மாவை சம்பந்தர் போன்ற ரத்த பொட்டு காரரும் உசுப்பேத்தினதுக்கு மன்னிப்பு கேட்கணும்.

ஆனால் மண்டையன் போல தாமே ஒரு மக்கள் கொலைக்குழுவை மாவையும் சம்புவும் வழிநடத்தி தாமே கொலை செய்யவில்லை. இரண்டுக்கும் வித்துயாசம் இருக்கு.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.