Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பசுமை வல்லரசாகிறது ஜெர்மனி

Featured Replies

green_2417113f.jpg

புதுப்பிக்கவல்ல மின்சக்தியைப் பொறுத்தவரை ஜெர்மனிதான் இன்றைய நம்பிக்கை!
 
பெர்லினில் உள்ள அமெரிக்க அகாடமியில் நான் கழித்த ஒரு வாரம் எனக்கு இரண்டு நேரெதிரான உணர்வுகளை ஏற்படுத்தியது: முதலாவது, இன்றைய ஜெர்மனிக்கு சமாதானத்துக்கான நோபல் விருது வழங்கப்பட வேண்டும். இரண்டாவது, இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய சமாதான நிலைப்பாட்டிலிருந்து ஜெர்மனி மீண்டுவந்து, இன்னும் தீவிரமாகச் செயல்படக்கூடிய உலக சக்தியாக மாற வேண்டும். இரண்டையுமே நான் பாராட்டாகத்தான் சொல்கிறேன்.
 
முதல் விஷயத்தைப் பொறுத்தவரை ஜெர்மானியர்கள் தங்களின் மின்உற்பத்தியில் 30 சதவீதத்தைப் புதுப்பிக்கத்தக்க சக்தியாக மாற்றியிருக்கிறார்கள். 0% என்ற நிலையிலிருந்து கடந்த 15 ஆண்டுகளில் இந்த நிலையை அடைந்திருப்பது நமது பூமி, அதன் பருவநிலை ஆகியவற்றின் பாதுகாப்புக்குப் பெரும் பங்களிப்பு. ஜெர்மனின் எரிசக்தித் துறையின் இலக்கே ‘மாசற்ற எரிசக்திக்கான விலை’ என்பதுதான். இதன் அடிப்படையில் ஜெர்மானியர்கள் சூரிய சக்தி அல்லது காற்று மின்சக்தி சாதனங்களை மிக எளிதாகத் தங்கள் வீட்டில் நிறுவி, அவர்கள் தயாரிக்கும் மின்சாரத்துக்குத் தகுந்தபடி அதிக விலையை அவர்கள் பெறுவார்கள்.
 
இந்த முறையில் ஆரம்ப காலத்தில் மிகவும் செலவு பிடித்தது என்பது மறுப்பதற்கில்லை. அதற்கான மானியங்கள் கோடிக் கணக்கான யூரோக்களைத் தொட்டன. எல்லோருடைய மின்கட்டணத்தின் மூலமும் இந்த மானியம் சரிசெய்யப்பட்டது. புதுப்பிக்கத் தக்க மின்சக்தியை அதிக அளவில் உருவாக்குவது மட்டுமே அதன் இலக்கு அல்ல; இந்த வகையில் அதிக அளவில் உற்பத்தி செய்து இந்த உற்பத்தி முறைகளை மையநீரோட்டமாக மாற்றுவதன் மூலம் உற்பத்தி செலவைக் குறைப்பதும் எல்லோருக்கும் கட்டுப்படியாகக் கூடியதாக இவற்றை மாற்றுவதும்தான் அடிப்படை நோக்கம்.
 
தற்போது, சூரிய மின்சக்தியின் கட்டணம் 80% அளவுக்குக் குறைந்திருப்பதாலும், காற்று மின்சக்தி 55% அளவுக்குக் குறைந்திருப்பதாலும் எரிபொருள் கொண்டு உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்துடன் போட்டியிடும் நிலைக்குக் கரிமமில்லா மின்சக்தி இப்போது வந்திருக்கிறது.
 
வருமானத்துக்கான புதிய வாசல்
 
“சீன சூரிய மின்தகடு தொழில்துறைக்கு ஏற்றம் கொடுத்திருப்பதைத்தான் ஜெர்மனியின் மின்சக்தியில் ஏற்பட்டுள்ள மாற்றத்தின் பெரும் வெற்றி என்று சொல்வேன்” என்கிறார் ரால்ஃப் ஃபூக்ஸ். ஜெர்மனி பசுமைக் கட்சியைச் சேர்ந்தவர் இவர். “பேரளவிலான சந்தையை நாங்கள் உருவாக்கினோம். அதனால், உற்பத்தி அதிகரித்ததோடல்லாமல் செலவும் பெருமளவு குறைந்திருக்கிறது” என்கிறார் அவர்.
 
உலகைக் காப்பாற்றும் முயற்சியாகத்தான் இந்த சாதனையை நாம் கருத வேண்டும். விலை குறைந்தவுடன் சாதனங்களை நிறுவுவதற்கான மானியங்களும் குறைந்திருக்கின்றன. சூரிய மின்சக்தி சாதனங்களைத் தங்கள் வீடுகளில் பொருத்தியிருக்கும் ஜெர்மானியர்களுக்கு அவற்றால் இப்போது வருமானமும் கிடைக்க ஆரம்பித்திருக்கிறது. அதனால்தான், நிலக்கரி கிடைக்கும் பிரதேசங்களைத் தவிர, மற்ற பகுதிகளில் இந்தத் திட்டத்துக்கு இவ்வளவு வரவேற்பு கிடைத்திருக்கிறது.
 
ஜெர்மனியில் இன்று, 14 லட்சத்துக்கும் மேற்பட்ட வீடுகளும், கூட்டுறவு அமைப்புகளும் தங்கள் கட்டிடங்களிலேயே தங்களுக்குத் தேவையான சூரிய / காற்று மின்சக்தியை உற்பத்தி செய்துகொண்டிருக்கின்றன. “கிட்டத்தட்ட 1,000 மின்சக்திக் கூட்டுறவு அமைப்புகள் தனியாரால் தற்போது நடத்தப்படுகின்றன” என்கிறார் ஆற்றல் துறைப் பொருளியல் நிபுணர் கிளாடியா கெம்ஃபெர்ட்.
 
பசுமைக் கட்சியின் நாடாளுமன்றக் குழுவின் துணைத் தலைவர் ஒலிவியர் கிரிஷர் என்னிடம் இப்படிச் சொன்னார்: “என்னுடைய நண்பர் ஒருவர் தினமும் வீடு திரும்பும்போது வெயில் இல்லையென்றால், எனக்கு ‘ஹலோ’ கூடச் சொல்ல மாட்டார். நேராக அவர் வீட்டின் கீழ்த்தளத்துக்குச் சென்று மீட்டரைப் பார்த்து, அன்றைய தினத்தில் எவ்வளவு மின்சாரத்தைத் தான் தயாரித்திருக்கிறேன் என்பதை அவர் தெரிந்துகொண்டுதான் மறுவேலை. சொந்தமாகவே நீங்கள் உங்களுடைய மின்சாரத்தை உற்பத்திசெய்துகொள்ள முடியும் என்பதுதான் இதன் தாத்பரியமே. புதுவிதமான முன்னேற்றமில்லையா இது!” இதன் காரணமாக ஜெர்மனியின் நிலக்கரி உற்பத்தி/ அணுமின் உற்பத்தி நிறுவனங்களில் பின்னடைவு ஏற்பட்டிருக்கிறது. அவற்றில் ஒரு நிறுவனமான ‘ஈ.ஆன்’ தற்போது இரண்டாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது.
 
நிலக்கரி, எண்ணெய், எரிவாயு, அணுசக்தி ஆகியவற்றிலிருந்து கிடைக்கக் கூடிய கடைசிக் கட்ட லாபத்தைப் பிழிந்தெடுப்பதற்கான ஒரு நிறுவனமாகவும், புதுப்பிக்கவல்ல எரிசக்தியின் மீது கவனம் செலுத்துவதற்கான ஒரு நிறுவனமாகவும் அது பிரிக்கப்பட்டிருக்கிறது. ஜெர்மானியர்கள், “ஈ.ஆஃப்’, ‘ஈ.ஆன்’ என்று அந்த நிறுவனங்களைக் கிண்டலடிக்கிறார்கள்.
 
ஜெர்மனியில் மலிவான, அசுத்தமான பழுப்பு நிலக்கரி டன் கணக்கில் இன்னும் இருக்கிறது. சூரிய/ காற்று மின்சக்தியில் ஏதேனும் தட்டுப்பாடு ஏற்பட்டால், மாற்று ஏற்பாடாக அது பயன்படுத்தப்படுகிறது. தூய்மையான இயற்கை எரிவாயு மிகவும் செலவு பிடிப்பது என்பதாலும் அணுசக்தி கொஞ்சம் கொஞ்சமாக விலக்கிக்கொள்ளப்படுவதாலும் இந்த நிலை. இதுதான் இப்போதைக்கு இருக்கும் பிரச்சினை.
 
தேச சக்தியின் நிலை
 
புதுப்பிக்கவல்ல ஆற்றலின் கதை இப்படியென்றால், தேச சக்தியின் நிலை எப்படி இருக்கிறது? இரண்டாம் உலகப் போருக்குப் பின்னரான இரண்டு தலைமுறைகளுக்குப் பிறகு, தனது எல்லையைத் தாண்டி எந்த அதிகாரத்தையும் செலுத்துவதில் ஜெர்மனிக்குள்ள தயக்கம் அதன் அரசியல் மனநிலையில் ஆழமாகப் பதிந்திருப்பது. ஜெர்மனியின் கடந்த கால வரலாற்றை வைத்துப் பார்க்கும்போது அது நல்ல விஷயம்தான். ஆனால், அதை வைத்துக்கொண்டு தனது நிலையைத் தொடர்ந்து தக்கவைத்துக்கொள்ள முடியாது.
 
ஜெர்மனிக்கு இன்று கூடுதல் வலு சேர்ந்திருக்கிறது. அதன் ஆட்சி நிர்வாகத் திறன், சட்டத்தின் ஆட்சியைத் திறம்பட நடத்துவது, நடுத்தர அளவு தொழில்களால் உருவான அதன் பொருளாதார வல்லமை போன்றவற்றால்தான் ஜெர்மனிக்கு இந்த சிறப்பியல்புகள் கிடைத்திருக்கின்றன. ஐரோப்பிய நாடுகள் எதற்கும் இல்லாத தனித்துவம் இது.
 
ஐரோப்பா மீது அமெரிக்காவுக்கு அவ்வளவாக ஆர்வம் இல்லை. ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்தும் உலகளாவிய ராணுவ சக்தி என்ற நிலையின் கடைசி எச்சங்களிலிருந்தும் பிரிட்டன் கொஞ்சம் கொஞ்சமாக ஒதுங்கிச் செல்கிறது. பிரான்ஸும் இத்தாலியும் பொருளாதாரத்தில் தள்ளாடிக்கொண்டிருக்கின்றன. நேட்டோ உறுப்பினர்கள் பலர் தங்கள் நாடுகளின் ராணுவங்களுக்கான செலவைக் குறைத்துக்கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில், இன்னும் அதிக அளவிலான தலைமைப் பொறுப்பை ஜெர்மனி ஏன் தவிர்த்துக்கொண்டிருக்கிறது என்பது எனக்குப் புரியவில்லை.
 
உக்ரைன் மீதான ரஷ்ய ஊடுருவலுக்கு எதிரான முக்கியமான நடவடிக்கையாக ஜெர்மனியின் பொருளாதாரத் தடை அமைந்தது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். மத்தியத் தரைக்கடல் பிரதேசத்தில் அகதிகளின் வருகை வெள்ளம்போல் நிகழ்ந்துகொண்டிருக்கிறது. இதற்கு ஐரோப்பிய ஒன்றியத்திடமிருந்து தகுந்த கடல் வழி நடவடிக்கை எடுக்கப்படுவதற்கு ஜெர்மனி வினையூக்கியாகச் செயல்பட வேண்டும்.
 
ஐரோப்பாவின் மற்ற நாடுகளோடு ஒப்பிடும்போது ஜெர்மனியின் பலம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. ஆனால், இதையெல்லாம் வெளியில் சொல்ல முடியாது. ஜெர்மனியின் வெளியுறவுத் துறை அதிகாரி ஒருவர் இந்தப் பிரச்சினையை இப்படி முன்வைத்தார்: “பெரிய அளவில் தலைமைப் பொறுப்பை ஏற்க வேண்டிய நிலைக்கு நாங்கள் வந்திருக்கிறோம். அதே நேரத்தில் ஜெர்மனியின் தலைமையை ஏற்பதில் மற்ற நாடுகள் எந்த அளவுக்குத் தயக்கம் காட்டுகின்றன என்பதையும் நாங்கள் அறிந்திருக்கிறோம் - எனவே, இதை ஐரோப்பிய ஒன்றியத்தின் வழியாகத்தான் நாங்கள் நிறைவேற்றிக்கொள்ள வேண்டும்.”
 
எனது கணிப்பு இதுதான்: ஜெர்மனிதான் ஐரோப்பாவின் பசுமைமிகு, சூரியசக்தி சார்ந்த முதல் வல்லரசாக ஆகும். இந்த இரண்டு பண்புகளையும் ஒரே நாட்டுக்கு உரித்தாக்க முடியுமா என்று கேட்கிறீர்கள். அவர்கள் நிச்சயமாக இப்படித்தான் ஆகப்போகிறார்கள், பாருங்கள்!
 
- © ‘தி நியூயார்க் டைம்ஸ்’, 
சுருக்கமாகத் தமிழில்: ஆசை
 

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
நூற்றுக்கு நூறு வீதம் உண்மை.
 
ஜேர்மனியர்களின் தொழில் நுட்பம் மிதமிஞ்சி டென்மார்க்குக்கும் நெதர்லாந்துக்கும் குப்பை மலிவில் மின்சாரத்தை விற்கின்றார்கள்.  :)
 
  • கருத்துக்கள உறவுகள்

Germany.gif Proud  to be a German.images_abd7df289f1ae7d58aef2ad9a88da8b8.:) 

  • கருத்துக்கள உறவுகள்

குளிர் நாடான ஜெர்மனியில் சூரிய மின்சக்தி உற்பத்தியை பற்றி சுவாரசியமான பதிவு. பகிர்விற்கு நன்றி..

இன்னும் சில ஜெர்மானிய அறிஞ்ஞர்களின் கருத்தை எதிர்பார்கிறேன்! :)

இங்கே வெயில் வருடம் முழுவதும் காயுது.. ஆனால் எந்த முனைப்பும் இல்லை.. :wub:

 

முன்னேறிய நாடுகள் அணுசக்தி மூலம் மின் உற்பத்தியை தவிர்த்து வரும் நிலையில், மூன்றாம் தர நாடுகள் அந்த தொழிற்நுட்பத்தை கெட்டியாக பிடித்துக்கொண்டு தங்கள் நாட்டு குடிமக்களின் உயிர்மேல் கிஞ்சித்தும் அக்கறையின்றி அணு மின் உற்பத்தி நிலையங்களை இன்றும் நிறுவிக்கொண்டு வருகின்றனர்.

 

  • கருத்துக்கள உறவுகள்

குளிர் நாடான ஜெர்மனியில் சூரிய மின்சக்தி உற்பத்தியை பற்றி சுவாரசியமான பதிவு. பகிர்விற்கு நன்றி..

இன்னும் சில ஜெர்மானிய அறிஞ்ஞர்களின் கருத்தை எதிர்பார்கிறேன்! :)

இங்கே வெயில் வருடம் முழுவதும் காயுது.. ஆனால் எந்த முனைப்பும் இல்லை.. :wub:

 

முன்னேறிய நாடுகள் அணுசக்தி மூலம் மின் உற்பத்தியை தவிர்த்து வரும் நிலையில், மூன்றாம் தர நாடுகள் அந்த தொழிற்நுட்பத்தை கெட்டியாக பிடித்துக்கொண்டு தங்கள் நாட்டு குடிமக்களின் உயிர்மேல் கிஞ்சித்தும் அக்கறையின்றி அணு மின் உற்பத்தி நிலையங்களை இன்றும் நிறுவிக்கொண்டு வருகின்றனர்.

 

வன்னியன்,  என்னுடன் வேலை செய்யும் ஒருவர், எட்டு வருடங்களுக்கு முன்பு....

50,000 € செலவழித்து, தனது வீட்டுக் கூரை முழுக்க.... சூரிய ஒளியில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் தகடுகளை பொருத்தியவர்.

 

ஒரு, வருடத்துக்கு அவர் தனது வீட்டுக்கு தேவையான இலவச மின்சாரத்தையும் பெற்றுக் கொண்டு, மேலதிக மின்சாரத்தை... மின் வாரியத்துக்கு விற்பதன் மூலம், ஒவ்வொரு வருடமும்.... 3,500 € அளவில் மின் வாரியத்திடம் இருந்து பணமாக பெறுகின்றார்.

 

இன்னும் சில வருடங்களில்... அவர் போட்ட முற் பணத்தை திரும்ப பெற்ற பின்.... இது அவருக்கு மேலதிக வருமானமாக இருக்கும். :)

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்சிறி, இம்மாதிரி சூரிய மின் உற்பத்தி திட்டத்தை அடுக்கு மாடிகளிலும் நிறுவியுள்ளார்களா..? :o

அப்படியாயின், இதன்மூலம் கிட்டும் வருமானம் மற்றும் சேமிப்பு அனைவருக்கும் பகிர்த்தளிக்கப்படுமா?

பொருளாதாரத்தில் பின் தங்கிய நாடுகளில் தங்கள் வீடுகளில் இவற்றை நிறுவ, அரசாங்கம் மானியம் கொடுத்தால்தான் மக்கள் முனைப்பு காட்டுவர்.

  • கருத்துக்கள உறவுகள்

வன்னியன்... 2,3 மாடிகளில் உண்டு.

அதற்கு மேல்... தொடர்  மாடிகளில், நிறுவியுள்ளதை நான் எங்கும் காணவில்லை.
கூடுதலாக தனி வீடுகள் வைத்திருப்பவர்கள் மட்டுமே.... தமது கூரைகளிலும், கராஜ் போன்றவற்றிலும் நிறுவியுள்ளார்கள்.
அனேகமாக இதனை அடுக்கு மாடி வீடுகளில் நிறுவ, முதலில் போடும் ஆரம்ப கட்ட செலவுகள் அதிகமாக இருப்பதால்.... அதில் வசிப்பவர்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்திருப்பார்கள் என்று எண்ணுகின்றேன்.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

 தொடர் மாடிகளின் உச்சத்தில், இதனை நிறுவியிருந்தாலும்... என்ரை கண்ணுக்கு தெரியாமலும் இருக்கலாம். :D  :lol:  :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

 தொடர் மாடிகளின் உச்சத்தில், இதனை நிறுவியிருந்தாலும்... என்ரை கண்ணுக்கு தெரியாமலும் இருக்கலாம். :D  :lol:  :icon_mrgreen:

 

பாவம், ஜெர்மனியில் பெண்கள் மொட்டைமாடியில் உடற்பயிற்சி ஏதும் செய்வதில்லை போலும்.. இல்லையெனில் தமிழ்சிறி பார்வையில் தப்பாது விடுமா? :lol::D

  • கருத்துக்கள உறவுகள்

இது புங்கையின் வீட்டின் கூரை!

 

maxresdefault.jpg

 

இது மட்டும் இல்லை! சுடு தண்ணிக்கும் 'சூரிய ஒளி' தான்!

 

1391631125wurtulla.jpg

  • கருத்துக்கள உறவுகள்

நல்லாயிருக்கு, புங்கை. :rolleyes:

 

எவ்வளவு மின்சார சக்தி தினமும் இதன்மூலம் உற்பத்தி செய்யப்படுகிறது?

 

தேவைபோக மிச்சமிருக்கும் மின்சக்தியை சேமிக்கிறீர்களா இல்லை உள்ளூர் மின்சார சபைக்கு ஏற்றுமதி செய்கிறீர்களா?

  • கருத்துக்கள உறவுகள்

ஒருவாறு புதிய வீடு கண்டுபிடித்தாயிற்றா??? புங்கை

ஜேர்மனி அணுமின் உற்பத்தியைக் குறைத்துக் கொண்டுள்ளதே தவிர நாம் நினைப்பது மாதிரி பசுமைப் புரட்சி அல்ல. மாறாக ஜேர்மனியின் மின் உற்பத்தி பசுமைப் புரட்சிக்கு எதிரானது. இது பற்றி பின்னர் எழுதுகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

மீளத்தக்க வளப் பயன்பாடு மேற்கு நாடுகளில் வளர்ந்து வருகின்றதே தவிர இன்னும் மீள முடியாத சுவட்டு.. மற்றும் அணுக்கரு தொழில்நுட்பங்கள் தான் மின் தேவையில் பெரும்பகுதியை பூர்த்தி செய்கின்றன. இதுதான் யதார்த்தம். காரணம்.. செலவும்.. வளங்களின் தொடர் இருப்புத் தகவும்.. உற்பத்தித் திறனில் குறைவும். இன்னும் முன்னேற எவ்வளவோ இடமிருக்குது. அதுக்குள் புரட்சியா..??! :icon_idea::rolleyes:

Edited by nedukkalapoovan

இது இலங்கையிலும் உள்ளது.. தற்போதைய நிலவரப்படி சுமார் 400,000 ரூ ( வீட்டு நுகர்வில் தங்கி உள்ளது) வரை தேவைப்படும் ( pay back time 3-5 years). கொழும்பில் அண்ணா வீட்டிலும் அவரது சில நண்பர்கள் வீட்டிலும் பொருத்தி உள்ளோம்.

இதுவே எனது முனைவர் ஆராய்ச்சிக்கான தலைப்பும்..

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இது புங்கையின் வீட்டின் கூரை!

 

maxresdefault.jpg

 

இது மட்டும் இல்லை! சுடு தண்ணிக்கும் 'சூரிய ஒளி' தான்!

 

1391631125wurtulla.jpg

 

என்ரை வீடு எண்டு படம் போட்டுருக்கிறியள் புங்கை!!!! ஆனால் ஓடு இரண்டு கலரிலை இருக்குதே? :rolleyes:

ஒருவேளை புங்கையின் வீடுகளாய் இருக்கும்..... :rolleyes:  :D

  • கருத்துக்கள உறவுகள்

என்ரை வீடு எண்டு படம் போட்டுருக்கிறியள் புங்கை!!!! ஆனால் ஓடு இரண்டு கலரிலை இருக்குதே? :rolleyes:

ஒருவேளை புங்கையின் வீடுகளாய் இருக்கும்..... :rolleyes:  :D

ஒண்டு மத்தியானம் எடுத்தது...மற்றது பின்னேரம் எடுத்தது! :D

  • கருத்துக்கள உறவுகள்

நல்லாயிருக்கு, புங்கை. :rolleyes:

 

எவ்வளவு மின்சார சக்தி தினமும் இதன்மூலம் உற்பத்தி செய்யப்படுகிறது?

 

தேவைபோக மிச்சமிருக்கும் மின்சக்தியை சேமிக்கிறீர்களா இல்லை உள்ளூர் மின்சார சபைக்கு ஏற்றுமதி செய்கிறீர்களா?

அவுசில்.. இப்படியான சூரிய சக்தியில் செயல் படும் உபகரணங்களைப் பொருத்தும் போது.. கணிசமான  பணம் தருவார்கள்!

பின்னர் பெறப்படும் மின்சாரத்தில் பயன்படுத்தப் பட்டது போக மிகுதி..மின்சார சபைக்குப் போகும்! பொதுவாக எனக்கு மின்சாரம் தரும் விலையில், ஏழரை வீதம் கழிவு தரப்படுகின்றது!

 

எனது அபிப்பிராயப் படி.. சுடு தண்ணீரில் தான் எனது 'சேமிப்பு' அதிகம் உள்ளது போலத் தெரிகின்றது!

இதில் பல 'குழாய்கள்' மூலம் நீர் சூடாக்கப் பட்டு..பின்னர் தாங்கியில் சேமிக்கப் படுகின்றது!

 

பழைய வீட்டில் சுடுதண்ணீரும், சமையலும் மட்டும் 'காஸ்' மூலம் செய்யப்பட்டது! எனது மனைவியினதும், மக்களினதும் யாழ்ப்பாணத் துலாக் கிணறுக் குளிப்புக்கு.. ஒரு மூன்று மாதத்துக்கு ஒரு முறை.. $400 டாலர் சராசரியாக 'பில்' வந்தது!

 

இப்போது சூரிய ஒளியின் மூலம் மின்சாரச் செலவு... ( சுடுநீர்/ வெளிச்சம்) உட்பட $400  டொலர் தான் வருகின்றது!

 

சமையலுக்கு 'LPG" காஸ் உபயோகிப்பதால்.. அது மிகவும் மலிவாக உள்ளது!

 

சூரிய சக்தி பயன்படுத்துவதால் எனது கணக்குப் படி.. மூன்று மாதத்துக்கு ஒரு முறை.. மொத்த சேமிப்பு.. $350 டொலர்கள் வரை வரும் என்று எண்ணுகின்றேன்!

 

முன்பு 'காஸ்' உபயோகத்துக்கு $420 டொலர் அளவில் மூன்று மாதத்துக்கு ஒரு முறை வரும்!

 

அவுஸ்திரேலியாவில் நிறைய வெயில் உள்ளதால் இந்த அளவு சேமிப்பு வருகின்றது என நினைக்கிறேன்!

 

'உதயம்' கூறியது போல யாழ்ப்பாணத்தில்.. இந்தச் சேமிப்பு இன்னும் அதிகமாக இருக்கும் என்று நினைக்கிறேன்!

 

பணத்திலும் பார்க்க... நான் சூழலை மாசு படுத்துவதில் குறைவான பங்கே வகிக்கிறேன் என்ற மனத் திருப்த்தியே எனக்கு அதிகம் உள்ளது! :icon_idea:

ஒருவாறு புதிய வீடு கண்டுபிடித்தாயிற்றா??? புங்கை

உங்களைப் போல ஆக்களின்ர புண்ணியத்தில.. ஒரு மாதிரி வாங்கியாச்சு, சுமே! :icon_idea:

 

இருக்கிறதுக்கு ஒண்டு.... சில வேளை பிற்காலத்தில தேவைப்பட்டாலும் எண்டு இன்னொண்டு! :lol:

Edited by புங்கையூரன்

  • கருத்துக்கள உறவுகள்

ஜேர்மனி அணுமின் உற்பத்தியைக் குறைத்துக் கொண்டுள்ளதே தவிர நாம் நினைப்பது மாதிரி பசுமைப் புரட்சி அல்ல. மாறாக ஜேர்மனியின் மின் உற்பத்தி பசுமைப் புரட்சிக்கு எதிரானது. இது பற்றி பின்னர் எழுதுகிறேன்.

 

இணையவன், உங்களது கட்டுரையை... வாசிக்க ஆவலாக உள்ளேன்.

ஆறப் போடாமல்,  சூட்டுடன் சூடாக... எழுதினால், பலருக்கும் பிரயோசனமாக இருக்கும். :)

UAE அபுதாபில உப்பிடி ஒரு சோலார் பார்ம் இருப்பதாக எங்கையோ வாசித்த ஞாபகம். யாராவது மேலதிக விபரம் தர முடியுமா?

பசுமை மின்சாரம் என்பது சூழலை மாசுபடுத்தாத பொருட்களால் அல்லது உருவாக்கப்படும் மாசினைச் சமப்படுத்தக் கூடிய பொருட்களால் உருவாக்கப்படுவது. உதாரணமாக விறகை (Biomass) எரித்து அதிலிருந்து பெறப்படும் வெப்பம் அல்லது மின்சாரம் மசுமையாகக் கருதப்படுகிறது. ஏனென்றால் விறகைத் தந்த அந்த மரம் தனது வாழ்நாள் முழுதும் பெரும்தொகையான காபனீரொட்சைட்டை உள்வாங்கி ஒட்சிசனை வெளியிட்டது. இப்போது அதனை எரிக்கும்போது வெளியாகும் காபனீரொட்சைட்டும் எரிக்கப்பட்ட ஒட்சிசனும் சமப்படுத்தப்பட்டுள்ளது. மரம் இருந்த இடத்தில் இன்னொரு மரத்தை நட்டால் மசுமையாகக் முழுமையாகப் பேணப்படுகிறது.

ஜேர்மனியில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தின் பெரும் பகுதி நிலக்கரி, பெற்றோலியம், எரிவாயு போன்ற சுற்றாடலை மாசுபடுத்துவதுடன் அதிக காபனீரொட்சைடை வெளியிடும் பொருட்களால் உருவாக்கப்படுகிறது. 6 வீதமான மின்சாரம் மட்டுமே Biomass மூலம் பெறப்படுகின்றது. இதுவே உலக அளவுடன் ஒப்பிடப்பட்டுப் பசுமையாகக் கருதப்படுகிறது.

 

சூரிய ஒளி மூலம் மின் உற்பத்தி.

இதில் ஜேர்மனி முன்நிலையில் உள்ளது. silicium கொண்டு தயாரிக்கப்படும் இத் தகடுகளின் மின்னாக்க வலு அதிகபட்சம் 14% - 16%. வீட்டுக் கூரைகளில் சாதாரணமாக அமைக்கப்படும் தகடுகளின் வலு (silicium multicristallin - polycristallin) 11-15%. அதாவது அண்ணளவாகக் கணிப்பதானால், 1 சதுர மீற்றரில் 1 மணித்தியாலத்தில் 1kWh அளவுக்கு ஒப்பான சூரிய ஒளி விழுவதாக எடுத்துக் கொண்டால்  மணித்தியாலத்தில் 0.14kWh/M2 என்ற வீதத்தில் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இது ஐரோப்பிய நாடுகளில் இன்னும் குறைவாக இருக்கும். இதற்கு வருடம் முழுவதும் சூரிய ஒளி இல்லாமை, கூரைகளின் பொருத்தமற்ற சரிவு,  சூரியப் பாதை சீராக இல்லாமை போன்ற காரணங்களளைக் கூறலாம். இலங்கை போன்ற சீரான சூரிய ஒளி உள்ள நாடுகளிலேயே இவற்றின் பாவனை பொருத்தமாக இருக்கும். வட ஐரோப்பாவில் குறைந்த அளவு மின்சாரத்தை உற்பத்தி செய்ய அதிகமான தகடுகளைப் பாவிக்க வேண்டும். அத்துடன் இங்கு மின்சாரம் அதிகமாகத் தேவைப்படும் காலப் பகுதியில் சூரிய ஒளி மிகக் குறைவாக இருக்கும். இத் தகடுகளின் ஆயுட் காலம் 25 - 30 வருடங்களாகும். ஆனால் அதற்கு முன்னராகவே இத் தகடுகளின் மின் உற்பத்தி செய்யும் திறன் தேய்ந்து போகும். 15 வருடத்தில் 20 வீதம் வரை குறையும்.

 

இத் தகடுகளை உருவாக்கக் குறிப்பிட்ட அளவு காபனீரொட்சைட்டை வெளியிட வேண்டியிருக்கும். இதனை ஜேர்மனி பொருட்படுத்துவதில்லை. ஏனென்றால் Made in Germany சூரியத் தகடுகளில் உள்ள சிலிசியம் தட்டுக்கள் சீனாவில் தயாரிக்கப்படுகிறது. தயாரிப்பில் உருவாகும் காபனீரொட்சைட்டி அளவை இது உற்பத்தி செய்யும் மின்சாரத்துடன் ஒப்பிட்டால் அது பசுமைக்குள் வருமா என்பது சந்தேகம்.

 

புங்கையூரான் சொன்னதுபோல் சுடுநீரை நேரடியாக உள்பத்தி செய்யும் சூரியத் தகடுகள் ஐரோப்பிய நாடுகளில் இலாபம் தரக்கூடியவை. சுடுநீர் பெரிய கொள்கலனில் சேமிக்கப்பட்டுத் தேவையான போது பாவிக்கப்படுகிறது.

 

அணுசக்தி மூலம் பெறப்படும் மின்சாரத்தைத் தூய்மையான மின்சாரம் என்று சொல்கிறார்கள். ஏனென்றால் இதன் மூலம் காபனீரொட்சைட் வெளியாவதில்லை. ஆனால் பசுமை மின்சாரமாக ஏற்றுக் கொள்ள முடியாது. இதன் கழிவுகள் ஆபத்தானவை. ஜேர்மனி அணுமின்சாரத்தைக் குறைப்பதன் மூலம் இந்த ஆபத்திலிருந்து தப்பிவிடுவதாக எண்ண வேண்டாம். வேறு நாடுகளிலிருந்து, குறிப்பாக பிரான்சிலிருந்து அணு ஆலைக் கழுவுகளை ஜேர்மனி வாங்கிக் கொள்கிறது.

 

நான் தனிப்பட்ட முறையில்  யேர்மனி போன்ற நாடுகளின் மின் உற்பத்தி மாற்றீட்டு முயற்சிகளுக்கான ஆதரவையும் அணுமின்சாரத்திற்கான (தற்போதிய நிலையில்) எதிர்ப்பையும் தெரிவிக்கிறேன். :)

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலம் 25% மின்சாரத்தை காற்று, சூரிர சக்திகளில் இருந்து பெறுகிறார்கள் , 2030 இல் 50% மாக அதிகரிக்கனும் என ப்ளான் , மேலதிக தகவல்களுக்கு

http://www.energy.ca.gov/renewables/

http://www.latimes.com/opinion/op-ed/la-oe-olsen-hochschild-california-solar-energy-20150312-story.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.