Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எல்.ரீ.ரீ.ஈ தலைவரை சரணடையும்படி கூறவில்லை: கனிமொழி

Featured Replies

article_1433672193-kanimozhi120.jpg
 
தனது ஆலோசனையின் பேரிலேயே தமிழீழ விடுதலைப் புலிகளின் பிராந்திய தலைவர்களில் ஒருவராகவிருந்த எழிலன் (சசிதரன்) இலங்கை இராணுவத்தினரிடம் கரணடைந்ததாக அவரது மனைவி அனந்தி சசிதரன் முன்வைத்துள்ள குற்றச்சாட்டை, திராவிட முன்னேற்றக் கழகத்தின் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி நிராகரித்துள்ளார்.
 
'யாரையும் இலங்கை அரசாங்கத்தின் சார்பில் அல்லது இந்திய அரசாங்கத்தின் சார்பில் சரணடையும்படி கூறும் அதிகாரம் எனக்கு இல்லை. இந்த செய்தியின் பின்னணியில் யார் உள்ளார்கள் என்று எனக்கு தெரியாது' என்று, இந்தியாவிலிருந்து வெளியாகும் தி இந்து பத்திரிகைக்கு கனிமொழி எம்.பி கூறியுள்ளார்.
 
'தனது கணவர் எழிலன், இலங்கை இராணுவத்தினரிடம் சரணடைவதற்கு தீர்மானம் எடுக்க முன்னர், செய்மதி தொலைபேசி மூலம் கனிமொழியுடன் உரையாடியிருந்ததாக, இந்து பத்திரிகைக்கு அளித்துள்ள பேட்டியொன்றின் போதும் முல்லைத்தீவு நீதவான் முன்னிலையில் சாட்சியளிக்கும் போதும், அனந்தி கூறியிருந்தார்.
 
அனந்தியின் இந்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் பதிலளித்துள்ள கனிமொழி எம்.பி, 'எனக்கு சசிதரன் யார் என்றே தெரியாது. ஏனென்றால், அவர் எல்.ரீ.ரீ.ஈ.யின் முன்னணி தலைவர்களில் ஒருவர் அல்ல. செய்மதி தொலைபேசி மூலம் அவருக்கு ஆலோசனை கூறியதாகச் சொல்வது முற்றுமுழுதிலும் தவறானது. யுத்தம் அதி உச்சகட்டத்தில் இருக்கும் போது, ஒருவரை இலங்கை இராணுவத்திடம் சரணடையும்படி யாராவது கூறுவார்களா?' என கேள்வி எழுப்பியுள்ளார்.
 
  • Replies 65
  • Views 5.7k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

ஆனால் அம்மணி நீங்கள் இறுதிக்கட்டம் வரை அரசியல் பிரிவோடு செய்மதி தொலைபேசி வரை தொடர்பில் இருந்தீர்கள் என்பது உண்மை தானே. ஏலவே அதனை அண்மையில் சக்தி ரிவிக்கு அளிக்கப்பட்ட ஒரு நேர்காணலும் உறுதி செய்துள்ளது.

அப்போது நீங்கள் அவர்களுக்கு கூறியவை என்ன..????????!

நடேசன் உள்ளிட்ட உயர்மட்ட தலைவர்கள் உங்களோடு பேசிய போது.. எழிலனும் அந்த தொலைபேசி உரையாடல்களில் சிலவற்றின் போது கூட இருந்திருக்கலாம். அவர் மனைவியும் இருந்திருக்கலாம். இது மறுப்பதற்கில்லை.

முக்கியம்.. கடைசி நிமிடம் வரை.. நீங்கள் அவர்களோடு தொடர்பில் இருந்தீர்கள். வாக்குறுதிகளை வழங்கினீர்கள். அவர்களின் மரணம் அல்லது காணாமல் போதலில் உங்களின் பங்கும் விசாரிக்கப்பட வேண்டும் அம்மணி கனிமொழி. அதை அவ்வளவு இலகுவாகப் புறந்தள்ள முடியாது.

நீங்கள் இது நாள் வரை அந்த இறுதிக் கணத்தில் நீங்கள் வகித்த பங்கை பகிரங்கமாக ஒப்புக்கொள்ளாதது மட்டுமன்றி போரின் பின் ராஜபக்சவை சந்தித்து பொன்னாடையும் போர்த்தி அவரிடம் பரிசும் வாங்கியவர் என்பதையும் இங்கு கவனத்தில் எடுக்க வேண்டி உள்ளது.

09_06_10_MR_MS_5.jpg

06_0.jpg

இந்தப் பொன்னாடை எதற்கு இறுதிப் போரில் தமிழின அழிப்பில்.. உங்களின் பங்களிப்பை காட்டிக்கொடுக்காததற்கா...

  • கருத்துக்கள உறவுகள்

அனந்தியின் குற்றச்சாட்டை கனிமொழி திட்டவட்டமாக நிராகரித்துள்ளார், இங்கு கடைசி நேரத்தில் இலங்கை இரானுவத்தை சமாளிக்க முடியாமல் புலிகள் திண்டாடியபோது யார் எவர் என்று இல்லாமல் அழைப்புக்களை மேற்கொண்டுள்ளார்கள் என நினைக்கத் தோன்றுகின்றது. அவ்வகையில் நடேசன் அவர்கள் கனிமொழிக்கு அழைப்பு எடுத்திருக்கிறார். இங்கு வேடிக்கையான விடயம் என்னவென்றால் கனிமொழியின் உத்தரவாதத்தை அடுத்து புலிகள் சரணடைந்தார்களாம். இன்னொரு விடயமும் நினைவுக்கு வருது, புலிகளால் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டும் பெரும்பாலானோரின் குடும்பங்களுக்கு குறிப்பிட்ட நபர் பாதுகாப்பாக திரும்ப ஒப்படைக்கப்படுவார் என வாய்மூலமாக அழைத்துச் செல்பவர்களால் நேரடியாக சொல்லப்படும், பின்னர் பெரும்பாலும் அவர்களின் உடலங்கள் மட்டும் பாதுகாப்பாக ஒப்படைக்கப்படும் அல்லது மனநோயாளிகளாக (முழுமையாக இல்லையாயினும்) பாதுகாப்பாகத் திரும்புவர். இத்தகைய ஒரு பின்னணியைக் கொண்ட புலிகள் (சரி அப்படிக் கனிமொழி வாக்குக் கொடுத்திருந்தாலும்) எவ்வாறு நம்பிக்கை இல்லாத திமுகவின் கனிமொழியின் உத்தரவாதத்தை நம்பினார்கள்? இங்கு விதி விளையாடியதா?

Edited by வாலி

  • கருத்துக்கள உறவுகள்

விடுதலைப்புலிகள் மீதான அவதூறுகளை காவித் திரிபவர்கள் பற்றி அல்ல இப்ப பிரச்சனை.

கடைசி நேர உண்மை என்பது என்ன என்பது தான் மக்களிடம் உள்ள தேடல்..!

விடுதலைப்புலிகள் எல்லா காலக்கட்டத்திலும்.. உலகம்.. பிராந்திய மட்டத்தில் தொடர்புகளை ஏற்படுத்தியே இருந்துள்ளனர்.

கடைசி நேரத்தில் சீமானுடன் தொடர்பில் இருந்தார்கள்.. கடற்புலிகள். அவர்களுக்கு சொல்லப்பட்ட செய்தி அப்பவே வெளியிலும் வந்துவிட்டது.

ஆனால் அரசியல் துறை போராளிகள் தொடர்பில் இருந்தவர்கள் வஞ்சகமாக அவர்கள் அழிக்கப்படக் காரணமாக இருந்துள்ளனர் என்பதும் வெளிப்படை.

சிங்களப் படைகளின் தாக்குதலை புலிகள் 35 வருடங்கள் எதிர்கொண்டவர்கள். சர்வதேசப் படைகளை அவர்கள் எதிர்க்கும் அளவுக்கு பலமுடைய அமைப்பினராக இருந்ததில்லை. கடைசி யுத்தம்.. ஒரு சர்வதேசப் படையெடுப்பு. தனிய சிங்கள இராணுவம் என்று போர் செய்திருந்தால்.. ஜெயசுக்குறு கதிதான்.. ஆகி இருக்கும். இதை சரத் பொன்சேகாவே சொல்லி இருக்கிறார். ஆனால்.. இங்கு சிங்களப் படைகளை கூட உயர்த்திப் பேச ஆக்கள் இருக்கினம்.. புலிகள் மீது கண்ணை மூடிக்கொண்டு அவதூறு பரப்பும் அவசரத்திலோ தெரியவில்லை. :rolleyes::lol::icon_idea:

கனிமொழியிடம் உதவிக்கு போயிருந்தால்  முழு தமிழ் இனத்திற்குமே அவமானம் .

கிணற்றுக்குள் விழும்போது சிறு துரும்பையாவது பிடித்து உயிரை காக்க முயற்சிப்பது போலத்தான் இவர்களின் செயற்பாடுகள் இருக்கு .சூசையின் அந்த கடைசி நேர ஓலமே அதை சொல்லும் .

தமது பலம் அறியாமல் விளையாடிய விளையாட்டுகளின் விளைவுகள் தான் வேறென்ன ?

  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழம் கேட்டு போராட வெளிக்கிட்ட எல்லாருமே தமது பலத்துக்கு மிஞ்சிய கனவு கண்டவை தான். மக்களையும் கனவு காண வைச்சவை தான். அது புலிகளுக்கு மட்டும் சொந்தமானதல்ல. இவர்களோடு ஒப்பிடும் போது புலிகள் கூடிய அளவு சாத்தியமான யதார்த்தை மக்களுக்கு நடைமுறையில் செய்வித்தாவது காட்டினார்கள். அதில் அவர்கள் வெற்றி பெற்றவர்களாவர்.

உலகத்தை எதிர்த்து நிற்க புலிகள் வல்லரசோ.. ரஷ்சியாவோ.. சீனாவோ.. அமெரிக்காவோ அல்ல. ஒரு சிறிய இனத்தின் விடுதலைக்காக பாடுபட்ட எறும்புக்கூட்டம் எனலாம். அவற்றை உலகமே சேர்ந்து நசுக்கிப் போடுவது பெரிய காரியமும் அல்ல. :icon_idea:

Edited by nedukkalapoovan

ஆகா... அருமையான, பதில் நெடுக்ஸ்.

இதுக்குப் பிறகும், கையாலாகதவர்கள்...... கணணியை தட்டிக் கொண்டிருப்பதிலிலும் பார்க்க...

வேறு... பிரயோசனமான வேலைகளை செய்யலாம். :D

  • கருத்துக்கள உறவுகள்

அன்றைய நெருக்கடியான நேரத்தில் ஆனந்தபுர முடிவுக்கு பின் பலருடைய போன்கள் வேலை செய்யாமல் போய்விட்டது.எதிரி கடும் குழப்பநிலையில் வைத்திருக்கவே விரும்பிய காலம் அது .இதில் கனி அக்கா மறந்த விடயம் யாரை ஏமாத்தினாலும் நவீன இலத்திரனியலை சுத்த முடியாது எனும் உண்மையை .

  • கருத்துக்கள உறவுகள்

கனிமொழிக்கும் அரசியலுக்கும் வெகு தூரம்.
நான்கு வசனத்தை  தொடர்ச்சியாக பேசுவதற்குள் முழி பிதுங்கிவிடும்.
அவவுக்கு... கருணாநிதியின் மகள் என்னும் தகுதி மட்டுமே.... அரசியலுக்கு போதுமானதல்ல.  :)

சிலருக்கு அது கனவு என்று சில வருடங்களில் புரிந்துவிட்டது பலருக்கு முப்பது வருடங்களாக புரியாமலே இருந்ததுதான் வியப்பு .

போராட்டம் என்றவுடன் நாட்டை விட்டு ஓடிவந்தவர்கள் தான் உண்மையில் தொலைநோக்கு அதிகம் உள்ளவர்கள் .

2009 - ல் ஈழத்தின் உச்சகட்ட போரின்போது வெள்ளைக்கொடி ஏந்தி சரணடைந்த முக்கால்வாசி பேரை, தமிழ்நாட்டில் இருந்து ஏமாற்று வாக்குறுதி கொடுத்து சிங்கள கொலைகாரர்களுக்கு 
காட்டிக்கொடுத்த முக்கிய தூதுவர்கள் கனிமொழி, ஜெகத் கஸ்பர், ப.சிதம்பரம் ! இதை யாரும் மறுக்கவும், மறக்கவும் முடியாது !

கனிமொழியையும் சீமானையும் நம்பியா அவ்வளவு சனத்தை முள்ளிவாய்க்காலுக்கு இழுத்துக்கொண்டு போனவை?
30 வருசம் போராடி கடைசில‌ கனிமொழின்ட பேச்சை கேட்டு வெள்ளை கொடி தூக்கினதென்று சொன்னால் அதை விட கேவலம் வேறு எதுவும் இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்

சிலருக்கு அது கனவு என்று சில வருடங்களில் புரிந்துவிட்டது பலருக்கு முப்பது வருடங்களாக புரியாமலே இருந்ததுதான் வியப்பு .

போராட்டம் என்றவுடன் நாட்டை விட்டு ஓடிவந்தவர்கள் தான் உண்மையில் தொலைநோக்கு அதிகம் உள்ளவர்கள் .

போராட புறப்பட்ட... புளொட், ஆரம்ப கால கட்டங்களில்.

மற்ற இயக்கங்களை விட அதிகமான போராளிகளையும், நவீன ஆயுதங்களை வைத்திருந்தும்.....

தனது இயக்க வரலாற்றில்... 35 வருடமாக... ஒரு இராணுவத்தையோ, கடற் படையினனையோ...

போனால் போகுது... ஒரு பொலிஸ்காரனையோ... சுட்டிருக்க வக்கில்லாத இயக்கம்.

மாறாக தன்னுடைய... இயக்கத்தவர்களை கொல்ல மட்டுமே... அந்த ஆயுதங்களை பாவித்தது.

சிங்களவனை எதிர்த்து... துவக்கு தூக்காத இயக்கத்துக்கு... கனவு பலிக்காது எப்படி.. புரிந்தது? :D

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

கனிமொழியையும் சீமானையும் நம்பியா அவ்வளவு சனத்தை முள்ளிவாய்க்காலுக்கு இழுத்துக்கொண்டு போனவை?
30 வருசம் போராடி கடைசில‌ கனிமொழின்ட பேச்சை கேட்டு வெள்ளை கொடி தூக்கினதென்று சொன்னால் அதை விட கேவலம் வேறு எதுவும் இல்லை.

தெனாலி உங்களுக்கு அந்த கடைசி நாட்களின் முடிவுகள் நன்றாகவே தெரியும். ஆனாலும் கூத்து நாடக பாஷையில் புலிஅவதூறு ஒன்றே பிரதானமாய் வைத்து கேள்வி வருவது அழகல்ல . அங்கு நடந்தது யாராலும் தவிர்க்க முடியாதது .

போராட புறப்பட்ட... புளொட், ஆரம்ப கால கட்டங்களில்.

மற்ற இயக்கங்களை விட அதிகமான போராளிகளையும், நவீன ஆயுதங்களை வைத்திருந்தும்.....

தனது இயக்க வரலாற்றில்... 35 வருடமாக... ஒரு இராணுவத்தையோ, கடற் படையினனையோ...

போனால் போகுது... ஒரு பொலிஸ்காரனையோ... சுட்டிருக்க வக்கில்லாத இயக்கம்.

மாறாக தன்னுடைய... இயக்கத்தவர்களை கொல்ல மட்டுமே... அந்த ஆயுதங்களை பாவித்தது.

சிங்களவனை எதிர்த்து... துவக்கு தூக்காத இயக்கத்துக்கு... கனவு பலிக்காது எப்படி.. புரிந்தது? :D

ஓடி வந்த வேகத்தில் நாட்டில்  நடந்த பல விடயங்கள் தெரியாது போலிருக்கு .ஆனால் வரலாறு அப்படியல்ல ..

கனிமொழியிடம் உதவி கேட்டு வெள்ளை கொடி பிடிக்கும் கேவலத்தை வேறு எந்த இயக்கமும் கடைசிவரை செய்து இருக்கமாட்டாது 

கனிமொழி, யுத்த நிறுத்த காலத்திலேயே புலிகளின் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டவர், களத்தில் மட்டுமல்ல புலத்தில் கூட, பத்திரிகையாளர்களையும் அவர் விட்டு வைக்கவில்லை. ஒரு தடவை இதயச்சந்திரன் கனிமொழியிடன் "நீ உன் அரசியல் பிரவேசத்துக்கு புலிகளை பாவிக்க நினைக்கிறாய்" என பகிரங்கமாக கேட்டதற்கு "உண்மை, நான் அரசியலுக்கு போகப்போகிறேன்தான், ஆனால் புலிகளின் போராட்டத்தை அதனுடன் இணையாதீர்கள். ஈழத்தமிழ் மக்களின் விடுதலையின் பாலுள்ள அக்கறையில் நான் இணைந்திருக்கிறேன்" என்றாராம். ஏரக்குறைய யுத்த நிறுத்த காலத்தில் புலிகளின் பேச்சாளினியாக தன்னைத்தானே பிரகடனமும் செய்தார். 

யுத்த தொடங்கி உச்சம் அடைந்த வேளையில் தமிழக கருணாவிற்கும் புலிகளளுக்குமான தொடர்பாளர்களாக மூவர் இருந்தனர், சுப வீரபாண்டியன், திருமாவளவன், கனிமொழி. இவர்கள் மூத்த தளபதிகள் மட்டுமல்ல இடைநிலை தளபதிகள், புலம்பெயர் செயற்பாட்டாளர்களுடன் அன்றாடம் தொடர்பில் இருந்தனர். இறுதி நேர கனிமொழியின் பங்கு மற்ப்பதற்கில்லை. 

அப்ப இந்த கனிமொழியை  நம்பித்தான் கிணத்துக்குள்ள குதிச்சனாங்கள் என்கிறீர்கள். சரி நம்பிட்டன்.

அனந்தியின் குற்றச்சாட்டை கனிமொழி திட்டவட்டமாக நிராகரித்துள்ளார், இங்கு கடைசி நேரத்தில் இலங்கை இரானுவத்தை சமாளிக்க முடியாமல் புலிகள் திண்டாடியபோது யார் எவர் என்று இல்லாமல் அழைப்புக்களை மேற்கொண்டுள்ளார்கள் என நினைக்கத் தோன்றுகின்றது. அவ்வகையில் நடேசன் அவர்கள் கனிமொழிக்கு அழைப்பு எடுத்திருக்கிறார். இங்கு வேடிக்கையான விடயம் என்னவென்றால் கனிமொழியின் உத்தரவாதத்தை அடுத்து புலிகள் சரணடைந்தார்களாம். இன்னொரு விடயமும் நினைவுக்கு வருது, புலிகளால் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டும் பெரும்பாலானோரின் குடும்பங்களுக்கு குறிப்பிட்ட நபர் பாதுகாப்பாக திரும்ப ஒப்படைக்கப்படுவார் என வாய்மூலமாக அழைத்துச் செல்பவர்களால் நேரடியாக சொல்லப்படும், பின்னர் பெரும்பாலும் அவர்களின் உடலங்கள் மட்டும் பாதுகாப்பாக ஒப்படைக்கப்படும் அல்லது மனநோயாளிகளாக (முழுமையாக இல்லையாயினும்) பாதுகாப்பாகத் திரும்புவர். இத்தகைய ஒரு பின்னணியைக் கொண்ட புலிகள் (சரி அப்படிக் கனிமொழி வாக்குக் கொடுத்திருந்தாலும்) எவ்வாறு நம்பிக்கை இல்லாத திமுகவின் கனிமொழியின் உத்தரவாதத்தை நம்பினார்கள்? இங்கு விதி விளையாடியதா?

ஒரு முக்கியமான இறுதி போரில் கனி மொழியிடமும் சீமானிடமும் பேசும் கேவலமான 
நிலையிலா புலிகளின் சர்வதேச அரசியல் பலம் இருந்தது?. அது உண்மையாயின் அதைவிட 
கேவலம் ஒன்றுமில்லை. தமிழ் செல்வன் போன்றவர்கள் அரசியல் தலைவராக இருந்தால் 
எப்படி புலிகளின் சர்வதேச அரசியல் டிப்ளோமசி உருப்பட்டிருக்கும்? பாலா அண்ணை போன்ற
பலரை உருவாக்காமல் நெடியவன் காஸ்ரோ போன்றவர்கள் புலிகளின் சர்வதேச அரசியலை கையாண்டால்  கனி மொழி சீமான் ரேஞ்சில பேசுற நிலையில தான் புலிகளின் நிலை இருந்திருக்கும். 
ராணுவ பலத்தை மட்டும் வைச்சு இன்னொரு ஓயாத அலையை நடத்தி காட்டுவம் எண்டு வெளிக்கிட்டால் இதுதான் கதி. பாலா அண்ணையும் கருணாவும் படிச்சு படிச்சு சொல்லியும் ஒருத்தரும் கேட்கயில்லை.  கருணாவுக்கு இருந்த அரசியல் தெளிவு புலிகளுக்கு இருந்திருந்தால் இந்த அழிவை தடுத்திருக்கலாம். பால்ராச் அண்ணைக்கு நிகரான ஒரு தளபதி கருணா அம்மான் தான். ஆனால் கருணா அம்மானுக்கு இருந்த அரசியல் தெளிவு மற்றவர்களுக்கு இல்லாதது தமிழனின் துரதிஷ்டம்.  :D  :D  :lol:

சிங்களவனிட்டை வாங்கி கட்டிய பின்னர் கனி மொழியை குற்றம் சாட்டுவதை விட கேவலம் வேறொன்றும் இல்லை.  :o

கனிமொழியிடம் உதவிக்கு போயிருந்தால்  முழு தமிழ் இனத்திற்குமே அவமானம் .

கிணற்றுக்குள் விழும்போது சிறு துரும்பையாவது பிடித்து உயிரை காக்க முயற்சிப்பது போலத்தான் இவர்களின் செயற்பாடுகள் இருக்கு .சூசையின் அந்த கடைசி நேர ஓலமே அதை சொல்லும் .

தமது பலம் அறியாமல் விளையாடிய விளையாட்டுகளின் விளைவுகள் தான் வேறென்ன ?

தெளிவான யதார்த்தமான கருத்து நன்றி அர்ஜுன் அண்ணா  :D

ப்ளீஸ் டண்டணக்கா நீங்களாவது சொல்லுங்களேன். கிணத்துக்க குதிச்சது கனிமொழியை நம்பியா இல்லையா?
 
மற்றது உந்த கருணா அம்மான் விளையாட்டுக்கெல்லாம் நான் வரமாட்டேன். அப்புறம் ஏதாவது ஏடாகூடமாகி நான் தேசியத்திற்கு எதிரானவன் என்று சொல்லி சிறுமனிதர் விருதுகூட தரமாட்டாங்கள்.
  • கருத்துக்கள உறவுகள்

நான் நினைக்கிறேன் இதுதான் நடந்திருக்கும் என. ஊகம் மட்டுமே. ஆதாரம் ஏதுமில்லை.

1) தேதா எல்லோரையும் போகதா ஊருக்கு கூட்டிப் போறார் எனும் விடயம் ஜீவன், அர்ஜூன், வாலி, எனக்கு கொஞ்சம் முன்பு விளங்கியது போல, கிட்டத்தட்ட அவரை நம்பி இருந்த பலருக்கும் கிளிநொச்சி, அல்லது புதுக்குடியிருப்பு வீழ்ந்த பின் விளங்கி இருக்கும். முன்பே இப்படி ஒரு நிலைக்கு வந்தவர்தான் தயா மாஸ்டர். கருணாவை அப்படிச் சொல்ல முடியாது. கருணா புலி பலமாய் இருந்த போதே, புலியை தன் நுயநலத்துக்காய் உடைத்தவர். பொட்டுடன் பிரச்சினை வந்திராட்டி கருணா தொடர்ந்தும் புலியாய் இருந்து, ரமேசுடன் சரணடைந்திருக்கலாம்.

2) இதில் புலிகளிலால் பல நன்மை அடைந்தோரும் இருந்திருப்பர். மக்கள் தப்பி ஆமியிடம் ஓடி வந்த போதே, நடேசன், புலித்தேவன், பாப்பா, பாலகுமார் போன்றோர் பிரபா முடிந்தவுடன், எப்படி சேதாரம் இல்லாமல் ஆமியிடம் போவது என கணக்குப் போட தொடங்கி இருப்பர்.

3) அதற்கு, சொல்கேய்ம் முதல் கனிமொழிவரை, தமக்கு தெரிந்த எல்லோரிடமும் உதவி கேட்டிருப்பர். அந்த நிலையில் தான் தப்புவதுமட்டுமே முக்கியமாய் இருந்திருக்கும்.

4) கடைசியில் தேத வும் சரணடையிறவை சரணடையுங்கோ என தன் தோல்வியை சூசகமாய் சொல்லி, தன் இறுதி சண்டைக்கு தயாரான போது, இவர்கள் கனி மொழி போன்றோரின் பரிந்துரையில் சரணடைய வந்திருப்பர்.

5) ஏலெவே இந்திய ரோவின் ஏஜெண்டுகளாய் இருந்த, கனிமொழி, சுபவீ, திருமா, கஸ்பர், சீமான் ஆகியோர் இந்த சரணடிவுக்கு உதவியிருப்பர்.

6) யாரும் எதிர்பாராதவகையில், கோத்த அபய, சரணடைந்தவர்களை மண்டையில் போட்டு விட்டார்.

7) இலங்கை அரசின் குணமறிந்த பிரபா, தானோ மனைவியோ, மகளோ ( இவர்கள் வன்னியை விட்டு நீங்கவில்லை ஆயின்) (87இல் சுவிஸ் போனதுபோல்) சரணடைய விட்டிரார். அவர்கள் ஆட்கள் இல்லை என்பதே என் ஊகம்.

பாலச்சந்திரனை மட்டும், குழந்தை என்பதால் ஒண்டும் செய்ய மாட்டார்கள் என நினைத்து சரணடைய சொல்லி இருக்கலாம்.

கொஞ்சம் யோசித்துப் பார்த்தால் நடந்ததை ஊகிப்பது கடினமல்ல.

ஆஹா என்ன ஒரு தெளிந்த சிந்தனை அறிவு ஞானம்.  :D
இதை நீங்கள் தலைவருக்கு முன்னரே சொல்லி இருக்கலாம்.  :o
கனி மொழிக்கு றோ எவ்வளவு சம்பளம் கொடுத்துது?  :lol:

அப்பா யாழிலை நீங்கள் அர்ஜுன் அண்ணா வாலி ஐயா ஜீவன் ஐயா தவிர மற்றவர்கள் எல்லாம் 
சும்மா டண்டணக்காவா?  :D
  • கருத்துக்கள உறவுகள்

சும்மா டண்டனக்கா இல்லை. முன்னாள் சீமான், இந்நாள் டண்டணக்கா :)

சொல்புத்தி - கேட்பவருக்கு மட்டுமே வேலை செய்யும். தேத முக்காலம் உணர்ந்தவர். அவருக்கு நாம் சொல்வதெல்லாம் சும்மா டண்டனக்கா...டனக்குநக்க...நாக்குமுக்கா...

  • கருத்துக்கள உறவுகள்

கனிமொழியையும் சீமானையும் நம்பியா அவ்வளவு சனத்தை முள்ளிவாய்க்காலுக்கு இழுத்துக்கொண்டு போனவை?
30 வருசம் போராடி கடைசில‌ கனிமொழின்ட பேச்சை கேட்டு வெள்ளை கொடி தூக்கினதென்று சொன்னால் அதை விட கேவலம் வேறு எதுவும் இல்லை.

இதற்கு பதில் சொல்ல வேண்டி வரும் என்று தான் அவர்கள் அழிந்து போனார்கள்....உண்மையிலயே இவர்களை நம்பியா சரணடைந்தார்கள்?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.