Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலிகளைச் சீண்டிப்பார்க்கும் சில ”கழுதைகளுக்கு” .....

Featured Replies

புலிகளைச் சீண்டிப்பார்க்கும் சில ”கழுதைகளுக்கு” .....

ஒருநாள்
என் நாட்டு
அரசியல் சாரா அறிவு ஜீவிகள்
எளிமையான எம் மக்களால்
குறுக்கு விசாரணை செய்யப்படுவர்.

தன்னைச் சிறுகச் சிறுக
இழந்து கொண்டிருந்த
தீச்சுடரென மெதுவாக
அவர்கள் தேசம் செத்துக் கொண்டிருந்தபோது
அவர்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள்
என்று விசாரிக்கப்படுவார்கள்.

ஒருவரும் அவர்களிடம்
அவர்கள் உடைகளைப் பற்றியோ

அவர்களின் மதிய உணவையடுத்த
நீண்ட உறக்கத்தைப் பற்றியோ
கேட்கப் போவதில்லை.

அவர்களின்
‘உலகலாவிய’ கருத்துக் கொண்ட
மலட்டுப் புரட்சியைப் பற்றிக்கூட
அறிய எவரும் ஆவலாக இல்லை.

அவர்கள் தங்கள் நீதியை எப்படிப்
பெற்றார்கள் என்று ஒருவருமே
கவலைப்படவில்லை.

கிரேக்கப் புராணங்களைப் பற்றியோ

ஒரு சுய மாறுதலை
அவர்கள் உணர்ந்தது பற்றியோ
அவர்களிடம் எதுவும் கேட்கப் போவதில்லை.

முழுப் பொய்யின் நிழலிலே
பிறந்த
அவர்களின் மடத்தனமான
சமாளிப்புகளைப் பற்றியும்
அவர்களிடம் கேட்கப் போவதில்லை.

2
அந்த நாளில்
அந்த எளிய மனிதர்கள் வருவார்கள்.

அரசியல் சாரா அறிவு ஜீவிகளின்
புத்தகங்களிலோ,
கவிதைகளிலோ
இடம் பெற்றிராத
அந்த எளிய மனிதர்கள் வருவார்கள்.

ஆனால்

தினமும் அவர்களுக்கு
ரொட்டியும், பாலும் சேகரித்துத் தந்த

ஆம்லெட்டும், முட்டையும் உடைத்து ஊற்றிய,

அவர்களின் துணியை நெய்தும், தைத்தும் கொடுத்த

அவர்களின் வாகனங்களை ஓட்டித் திரிந்த

அவர்களின் நாய்களையும்,
தோட்டங்களையும் மேய்த்துவந்த

மொத்தமாக
அவர்களுக்காகவே தங்களை அர்ப்பணித்துவிட்ட
அந்த எளிய மனிதர்கள் வருவார்கள்.

வந்து கேட்பார்கள்:

‘ஏழைகள் துன்பத்தில் துடித்துக் கொண்டிருந்தபோது
அவர்களின் இளமையும், வாழ்வும்
திகுதிகுவென எரிந்து
கொண்டிருந்தபோது
நீங்கள் என்ன செய்து கொண்டு இருந்தீரகள்?’

3
என் இனிய நாட்டின்
அரசியல் சாரா அறிவு ஜீவிகளே
அப்போது

உங்களால் பதிலளிக்க இயலாது.

உங்கள் மனோதிடத்தை
மெளனம் அரித்துத் தின்னும்.

உங்கள் ஆத்மாவை உங்கள்
துன்பமே கடித்துக் குதறும்.

உங்கள் அவமானத்தில்
நீங்களே ஊமையாகிப் போவீர்.

(கண்ணியமிகு கழுதைகள் எம்மை மன்னிக்குமாக)

ஆங்கிலம் : Otto Rene Castillo (Gautemala)

தமிழில் : பூவுலகின் நண்பர்கள்.

(பாமரனின் முகநூலில் இருந்து)

  • கருத்துக்கள உறவுகள்

அம்மாடியோவ்,

அப்படியே என் கருத்து நிகர்தவர்களை குறித்து எழுதியமாதிரியே இருக்கே :)

அருமையான கவிதை.

தலைப்பு பாமரனினதா நிழலியினதா?

  • தொடங்கியவர்

அம்மாடியோவ்,

அப்படியே என் கருத்து நிகர்தவர்களை குறித்து எழுதியமாதிரியே இருக்கே :)

அருமையான கவிதை.

தலைப்பு பாமரனினதா நிழலியினதா?

பாமரனது தலைப்பு இது

சாம்ராஜ் என்பவர் 'ஒண்டிப்புலி சர்பத்' என்ற கவிதையில் தலைவர் பிரபாகரன் அவர்களை மிகக் கேவலமாக விளித்து எழுதியமைக்கு எதிர்வினையாக பாமரன் இக் கவிதையை பிரசுரித்து உள்ளார்.

  • கருத்துக்கள உறவுகள்

ஒட்டுக் குழுக்களுக்கும், 
சம், சும் துதி பாடிகளுக்கும், ஒரு நாள் இருக்கு.... ஆப்பு. 

  • கருத்துக்கள உறவுகள்

நிச்சயமாக

எனக்கு அறிவு வந்ததிலிருந்து

அந்தக்கேள்வி என்னை நோக்கி நீளாதவகையில் நடந்து வருகின்றேன்

சாகும்வரை தொடர்வேன்....

இது தான் ஆகக்குறைந்த நமது பங்கு...

ஒவ்வொரத்தரும்

ஒவ்வொரு புலம் பெயர் மக்களும் இதை உணர்ந்தால்

வாழ்பவர் நெஞ்சு மட்டுமல்ல

மாண்டவர் இதயமும் சாந்தி பெறும்..

 

நன்றி  பதிவுக்கு நிழலி.

  • கருத்துக்கள உறவுகள்

முன்பொருநாள் அவர்கள் செய்தால் சரியாய்தான் இருக்கும் என்று வாளாவிருந்த நாங்கள் - இன்னும் கேள்விகளுக்கு பயப்படத் தயாராய் இல்லை.

சகோதர்கள் குரல்வளைகளை கடித்துக் கொண்ட போது சோடா உடைத்துக் கொண்டாடிய நாம்- எப்போதும் கேள்விகளை கண்டு அஞ்சியதில்லை.

எங்கள் மின்கம்பங்களை அரசியல்சாரா புத்திஜீவிகளின் உடலங்கள் அலங்கரித்த போது " களை" விளக்கம் கொடுத்த நமக்கு, கேள்விகள் ஒரு உறுத்தலையும் ஏற்படுத்தாது.

நாங்கள் யாசிப்பதெல்லாம், எம் பிள்ளைகள் சுற்றுலாபோக, எவன் பிள்ளையோ இறந்து ஒரு நாடு. 

ஸ்கோர் எவ்வளவு என்பதை தவிர வேறு எந்த கேள்விகளை பற்றியும் நாம் அலட்டிக் கொள்வதில்லை.

மனிதர்கள்தான் கேள்விக்கு உரியவர்கள். நாங்கள் மாவீர (ர்) கம்பளம் போர்த்திக் கொண்ட புனிதர்கள். 

தெய்வத்திடம் கேள்வி கேட்கலாம், ஆனால் பதிலை எதிர்பார்க்கக் கூடாது.

  • கருத்துக்கள உறவுகள்

விளக்கத்துக்கு நன்றி நிழலி.

முழுப் பொய்யின் நிழலிலே
பிறந்த
அவர்களின் மடத்தனமான
சமாளிப்புகளைப் பற்றியும்

அவர்களிடம் கேட்கப் போவதில்லை.

என்பது பிழையாக மொழிபெயர்ப்பாகியுளது போலத்தெரிகிறது.

ஆங்கில மொழிபெயர்ப்பில் lie என்றில்லாமல் life என்றே வருகிறது.

ஒட்டுக் குழுக்களுக்கும், 
சம், சும் துதி பாடிகளுக்கும், ஒரு நாள் இருக்கு.... ஆப்பு. 

வருசக்கணக்கா  இதைத்தானே ஒவ்வொரு திரியிலையும் சொல்லுறீங்க ,சொல்றவன் செய்யமாட்டான் .அட்லீஸ் உங்க உரில இருந்து டக்கியையே துரத்தக்காணோம் , இதுக்குள்ள வீறாப்புகளுக்கு குறைச்சலில்லை .

  • கருத்துக்கள உறவுகள்

முன்பொருநாள் அவர்கள் செய்தால் சரியாய்தான் இருக்கும் என்று வாளாவிருந்த நாங்கள் - இன்னும் கேள்விகளுக்கு பயப்படத் தயாராய் இல்லை.

-----

புலிகள்.... போராட்டத்தை காட்டிக் கொடுத்த, நீங்கள்.... வாழாமல் இருந்தீரீர்களா?
நல்ல வேஷம் போடத் தெரிந்தவர்கள் நீங்கள். 
இதனைச் சொல்ல, உங்களுக்கு... வெட்கமாயில்லை?

  • கருத்துக்கள உறவுகள்

வருசக்கணக்கா  இதைத்தானே ஒவ்வொரு திரியிலையும் சொல்லுறீங்க ,சொல்றவன் செய்யமாட்டான் .அட்லீஸ் உங்க உரில இருந்து டக்கியையே துரத்தக்காணோம் , இதுக்குள்ள வீறாப்புகளுக்கு குறைச்சலில்லை .

சம்பந்தன், சுமந்திரனை விட.... டக்கி மேல்.
உள்ளிருந்தே....கழுத்தை அறுப்பவர்கள் தான்.... சம்,சும் கோஷ்டி.
இதனைப் புரிய, உங்களுக்கு, நாள் எடுக்கும் ஹரி.
அதனை நீங்கள்  புரிந்த பின்... தலைக்கு மேல் வெள்ளம் போயிருக்கும்.

சம்பந்தன், சுமந்திரனை விட.... டக்கி மேல்.
உள்ளிருந்தே....கழுத்தை அறுப்பவர்கள் தான்.... சம்,சும் கோஷ்டி.
இதனைப் புரிய, உங்களுக்கு, நாள் எடுக்கும் ஹரி.
அதனை நீங்கள்  புரிந்த பின்... தலைக்கு மேல் வெள்ளம் போயிருக்கும்.

நீங்கள் எல்லாத்தையும் தப்பான கண்ணோட்டத்தில் பார்க்கிரீங்கள் ,உங்கள் போன்றவர்களுக்கு காலம் தான் பதில் சொல்லும் .
  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் எல்லாத்தையும் தப்பான கண்ணோட்டத்தில் பார்க்கிரீங்கள் ,உங்கள் போன்றவர்களுக்கு காலம் தான் பதில் சொல்லும் .

காலம் பதில் சொல்லும், என்று.... தப்பிக்கும், நேரம் இதுவல்ல.... ஹரி.
புலிகள், விட்ட இடத்திலிருந்து..... தமிழ் தேசியக் கூட்டமைப்பு, தனது அரசியல் நகர்வுகளை...

உள்ளுரிலும், சர்வ தேசத்திலும் கொண்டு சென்றிருக்க வேண்டும்.
அதனை சொதப்பியவர்கள் தான்... சம், சும் கோஸ்டி.
அவற்றை சுட்டிக் காட்ட வேண்டியது, ஒவ்வொரு தமிழ் மகனின் கடமை.
எனக்கு, இதனால் தான்..... அவர்கள் மேல் ஆத்திரம். அதனை... இடித்துக்  காட்டுவது தவறா?

Edited by தமிழ் சிறி
எழுத்துப் பிழை திருத்தப் பட்டது.

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் காத்திரமான கவிதை...! பகிர்வுக்கு நன்றி நிழலி...!!

களத்துக்கு வெளியில் இருக்கும் கவிஞனால்தான் இதுபோன்ற வினாக்களை கேட்டுவைக்க முடியும். இது ஒரு தற்காப்புக் கவசமும் கூட...!

தீச்சுவலைக்கு நடுவே களமாடிக் கொண்டு சற்றே கிடைக்கும் சிறு ஓய்வில் , கசங்கிய காகிதத்தில் கிறுக்குபவனின் கவிதையில் இம்மாதிரிக் கேள்விகள் ஜனிக்காது. அவனுக்குத் தெரியும் , இந்த மலட்டு வினாக்களையும் தாண்டி எதிர்காலத் தலைமுறைக்கும் சேர்த்துத்தான் இந்த வேள்வியில் நெய்யாய் வேகுறேன் என்று...!

  • தொடங்கியவர்

முன்பொருநாள் அவர்கள் செய்தால் சரியாய்தான் இருக்கும் என்று வாளாவிருந்த நாங்கள் - இன்னும் கேள்விகளுக்கு பயப்படத் தயாராய் இல்லை.

சகோதர்கள் குரல்வளைகளை கடித்துக் கொண்ட போது சோடா உடைத்துக் கொண்டாடிய நாம்- எப்போதும் கேள்விகளை கண்டு அஞ்சியதில்லை.

எங்கள் மின்கம்பங்களை அரசியல்சாரா புத்திஜீவிகளின் உடலங்கள் அலங்கரித்த போது " களை" விளக்கம் கொடுத்த நமக்கு, கேள்விகள் ஒரு உறுத்தலையும் ஏற்படுத்தாது.

நாங்கள் யாசிப்பதெல்லாம், எம் பிள்ளைகள் சுற்றுலாபோக, எவன் பிள்ளையோ இறந்து ஒரு நாடு. 

ஸ்கோர் எவ்வளவு என்பதை தவிர வேறு எந்த கேள்விகளை பற்றியும் நாம் அலட்டிக் கொள்வதில்லை.

மனிதர்கள்தான் கேள்விக்கு உரியவர்கள். நாங்கள் மாவீர (ர்) கம்பளம் போர்த்திக் கொண்ட புனிதர்கள். 

தெய்வத்திடம் கேள்வி கேட்கலாம், ஆனால் பதிலை எதிர்பார்க்கக் கூடாது.

ஆரோக்கியமான விமர்சனத்துக்கும்  அருவருப்பான காழ்ப்புணர்வுக்கும் இடையில் கடும் வேறுபாடு இருக்கின்றது. தலைவர் எடுத்த அரசியல் ரீதியிலான தவறுகளை தர்க்க ரீதியில் விவாதிப்பது வேறு, அவர் மீது காழ்புணர்வுகளிக் கொட்டி நையாண்டி செய்வது வேறு

கோசான் நீங்கள் எத்தனை தடவை தலைவரைப் பற்றி 'கோமணத்துடன்' இறுதியில் கிடந்தார் என்று அருவருப்பான முறையில் நையாண்டி செய்து இருக்கின்றீர்கள் என்று நாம் அறிவோம்.

உங்களைப் போன்ற ஒருவரின் கவிதைக்குத் தான் பதிலாக பாமரன் இக் கவிதையை முன் வைத்து இருந்தார்

அவ்  அவருவருப்பான கவிதையை பிரசுரிக்க கூடாது என்று இருந்தேன்...ஆனால் புறச்சூழலை புரிந்து கொள்ள இது உதவும் என்பதால் வருத்தத்துடன் இணைக்கின்றேன்

--------

"ஒண்டிப்புலி சர்பத் அந்தத் தீவில்
மிகப் பிரபலம்
சீறும் அதன் சிவப்பு முகமே குப்பியில் லட்சினை
அது பெயருக்குப் பொருத்தமாய் ஊரில் வேறு எவரும்
தலையெடுக்காது பார்த்துக்கொண்டது

கூழ் பதநீர் கள்
எல்லாவற்றிக்கும் தடை
சர்க்கஸிலும் கூட
புளிக்குழம்பு
தேச விரோதம் மொழியிலிருந்து
குதித்தோடியது
அந்த நான்கு கால் மிருகம்.

கால் நூற்றாண்டு காலத்தில்
அதற்கு சர்பத்திற்கும்
ரத்தத்திற்கும் குழப்பம்
ரத்தத்தை சர்பத் என்றது
சர்பத்தை ரத்தம் என்றது

தீவின் அக்கரையில் வாழும்
அதன் கழுதைப்புலி முகவர்கள்
விற்று வாழ்ந்தனர்
வெகுகாலமாய் அதை

ஒரு வைகாசி மாதத்தில்
ஒண்டிப்புலி ஒண்டிப்புலியாய்
கடற்கரையில் மரித்தது

இறக்கும் மதியப்
பொழுதிலும் கடலின் சிவப்பை
அது சர்பத் என்றே
இறுதிவரை நம்பியது."

 

- சாம்ராஜ்

-----------
 

 

சர்பத் ருசி இன்னமும் பலர் நாவில் ஒட்டியிருக்கு .அந்த அளவு அதை ருசித்து குடித்தார்கள் ஆனால் இப்ப கடை முடியாச்சு .மீண்டும் திறக்காதா என்று ஏங்குபவர்களும் இருக்கின்றார்கள் ஆனால் ஒரு காலமும் அது திறக்காது திறக்க நாட்டில் மக்களும் விட மாட்டார்கள்.

தேன் உண்ட நரி கணக்கு அந்த ருசியில் சிலர் இப்பவும் அலைகின்றார்கள் 

 

  • கருத்துக்கள உறவுகள்

புலிகள்.... போராட்டத்தை காட்டிக் கொடுத்த, நீங்கள்.... வாழாமல் இருந்தீரீர்களா?
நல்ல வேஷம் போடத் தெரிந்தவர்கள் நீங்கள். 
இதனைச் சொல்ல, உங்களுக்கு... வெட்கமாயில்லை?

சிறி,

புலிகள் இருக்கும் வரை நான் ஒரு வார்தை கூட அரசியல் பேசவில்லை, எழுதவில்லை, செய்யவில்லை.

அப்படி இருக்கும் போது நான் புலிகளை காட்டிக் கொடுத்தேன் என்று எந்த அடிபடையில் எழுதுகிறீர்கள்.

தமிழன் சிறி புலிகளிடம் அடித்த காசில் வாழ்கிறார் என்று நான் சொன்னால் அது  எவ்வளவு புரளியோ அந்தளவுக்குப் புரளிதான் நீங்கள் என்னை பற்றி மேலே எழுதியுள்ளது.

இதில் எனக்கு ஒரு மனவருத்தமும் இல்லை. நான் ஒரு அனாமேதயன். ஆனால் நீங்கள் முகம் காட்டி கருத்தாடுபவர். உங்கள் தகமையை நீங்களே குறைக்கிறீர்கள் என்ற வருத்தம் மட்டுமே.

  • கருத்துக்கள உறவுகள்

சிறி,

புலிகள் இருக்கும் வரை நான் ஒரு வார்தை கூட அரசியல் பேசவில்லை, எழுதவில்லை, செய்யவில்லை.

அப்படி இருக்கும் போது நான் புலிகளை காட்டிக் கொடுத்தேன் என்று எந்த அடிபடையில் எழுதுகிறீர்கள்.

தமிழன் சிறி புலிகளிடம் அடித்த காசில் வாழ்கிறார் என்று நான் சொன்னால் அது  எவ்வளவு புரளியோ அந்தளவுக்குப் புரளிதான் நீங்கள் என்னை பற்றி மேலே எழுதியுள்ளது.

இதில் எனக்கு ஒரு மனவருத்தமும் இல்லை. நான் ஒரு அனாமேதயன். ஆனால் நீங்கள் முகம் காட்டி கருத்தாடுபவர். உங்கள் தகமையை நீங்களே குறைக்கிறீர்கள் என்ற வருத்தம் மட்டுமே.

கோசான்....நீங்கள் அரசியல் விடயங்களில், என்னை விட... பல மடங்கு அறிந்தவர் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை.
ஆனால், நீங்கள் புலிகள் மேலுள்ள காழ்ப்பு உணர்வால்... உங்களை அறியாமலே.... சில அவதூறுகளை பரப்புவது நியாமல்ல, அதனை எம்மால்  ஏற்றுக் கொள்ள முடியாது. 
யாழ் களத்தில்..... காலத்திற்கு, ஏற்றவாறு வந்து.... புது பெயருடன் கருத்து எழுதுபவர்களை நாம்... அவ்வப் போது காண்கின்றோம்.
அந்த வகையில்.... நீங்களும், அப்படியான ஒருவர் என்று, நினைத்துத்தான், "ஒட்டுக்குழு, காட்டிக் கொடுத்தவர்" என்று எழுதினேன்.
அதற்கு... உரம் சேர்க்கும் வகையில் தான், உங்களது எல்லாக் கருத்துகளும் உள்ளது என்பதை, நீங்கள் மறுக்க முடியாது. 

உண்மையில்.... நான், அரசியல்வாதி அல்ல, சாதாரண தமிழ் மகன் மட்டுமே.
எனக்கு.... ஏற்படும், விழிப்புணர்வை.... களத்தில், சுட்டிக் காட்டுவதில் தப்பில்லை என நினைக்கின்றேன்.
அதனைக் கூட.... செய்யா விட்டால், என் சமூகமும், வருங்கால சந்ததியும்.... என்னை மன்னிக்காது.

  • கருத்துக்கள உறவுகள்

சர்பத் ருசி இன்னமும் பலர் நாவில் ஒட்டியிருக்கு .அந்த அளவு அதை ருசித்து குடித்தார்கள் ஆனால் இப்ப கடை முடியாச்சு .மீண்டும் திறக்காதா என்று ஏங்குபவர்களும் இருக்கின்றார்கள் ஆனால் ஒரு காலமும் அது திறக்காது திறக்க நாட்டில் மக்களும் விட மாட்டார்கள்.

தேன் உண்ட நரி கணக்கு அந்த ருசியில் சிலர் இப்பவும் அலைகின்றார்கள் 

இதென்ன... உதாரணம்?
நரி, தேன் குடிக்குமா?:o
இதுக்குத்தான்.... பள்ளிக் கூடம்  போனால் மட்டும் போதாது, வாத்தியார் சொல்லுறதையும்.....   
காது குடுத்து கேட்டு, புத்தகத்தை திறந்தும் பார்க்க வேணும்.

  • கருத்துக்கள உறவுகள்

ஒண்டிப்புலி மறைஞ்சு

அரை தசாப்தம் கடந்தும்..

பல கழுதைகள்

இன்னும் உச்சா போய் வாழாநிலையில்..

ஆக்கிரமிப்பு குதிரைகளுக்கு

கோவேறு கழுதைகளைப் பிரசவித்தபடி

சுயமிழக்கின்றன

இனத்துவம் கூட இழக்கின்றன..!

தன்னிலையறியா..

கழுதைச் சாம்ராச்சியம்

கோவேறுகளால் உய்வுறா..

தாழ்வுற்றே அழியும். :lol:

  • கருத்துக்கள உறவுகள்

முகநூலில் கவிதையைப்பிரசுரித்த பாமரனுக்கும் அதனை இங்கு இணைத்த நிழலிக்கும் நன்றி.

திரியின் தொடர்ச்சியில் முழுவிபரத்தையும் அறியத்தந்த நிழலிக்கு நன்றி.

 

முற்றுமுழுதாக ஒண்டிப்புலி கவிதை அப்பட்டமான கீழ்த்தரமான காழ்ப்புணர்வுடன் எழுதப்பட்ட கவிதை என்பதில் எந்தவித மாற்றுக்கருத்தும் கிடையாது. இப்படிப்பட்ட எழுத்தை தமிழின விரோதியால்தான் எழுதமுடியும். ஆகவே தன்னினத்திற்கே தன்னை விரோதியாக கொண்டவனுக்கு பதில் எழுதுவதே வீண்.

  • கருத்துக்கள உறவுகள்

புலிகளின் தலைவர் குறித்து மீண்டும் மரடோனா…..

 புலிகளின் தலைவர் குறித்து மீண்டும் மரடோனா…..

தமிழர்கள் போற்றும் ஒப்பற்ற தலைவர் பிரபாகரன் அவர்களை உலக மக்களும் எத்துணை உயர்வாக போற்றுகின்றார்கள் என்பதற்கு இந்த ஒரு சிறு நிகழ்வு ஒரு உதாரணம்.

உலகக் கால்பந்தாட்ட ஜாம்பவான் மரடோனா என்றால் கால்பந்து பிரியர்களிற்கு இன்றும் மகிழ்ச்சி பெருக்கெடுக்கும். கால்பந்தாட்டத்தில் இருந்து ஓய்வுபெற்ற போதிலும் உலகளாவியளவில் மரடோனாவிற்கு இருக்கும் மதிப்பும் மரியாதையும் இன்றும் துளியும் குறையவில்லை.

ஆர்ஜென்ரீனா நாட்டின் கால்பந்தாட்ட முகவரியான மரடோனா அண்மையில் இந்தியாவிற்கு சுற்றுப் பயணம் சென்றிருந்தார். அவர் சென்ற இடங்கள் எல்லாம் ரசிகர்கள் குவிந்து அவரை பார்த்து அன்போடு வரவேற்று மகிழ்ந்தார்கள்.

இந்திய சுற்றுப்பயணத்தில் ஓர் நாள் விடுதி ஒன்றில் அவர் தங்கியிருந்தபோது விடுதிக்கு வெளியே ஏற்பட்ட ஆரவாரம் தனது இரசிகர்களுடையதென உணர்ந்து அவர்களை சந்திக்க சென்றுள்ளார்.

அப்போது வாயிலில் பாதுகாப்பிற்காக நின்றிருந்த காவலரிற்கு கைகொடுத்து வணக்கத்தை தெரிவித்த மரடோனா அவரது பெயரை கேட்டுள்ளார். காவலர் எதற்காக கேட்கின்றார் என முழித்துக் கொண்டு இருக்கும் பொழுது அவரது சீருடையில் அவருடைய பெயர் குத்தப்பட்டிருந்த பெயர்பட்டியை பாரத்து மிகுந்த உற்சாகமான மரடோனா அந்த காவலரை இறுக்கக் கட்டியணைத்து பெரும் மகிழ்வடைந்துள்ளார். அந்தக்காவலரது பெயர் பிரபாகரன் என்பதே அதற்கு காரணம். நடப்பவை அந்த காவலரிற்கு என்னவென்று ஒன்றும் புரியாமல் சற்று குழம்பி போயிருந்தார்.

இதனையுனர்ந்த மரடோனா தனது கையில் பச்சை குத்தியுள்ள புரட்சியாளர் சே குவேராவின் படத்தை காட்டி

புரட்சி வீரரான சேகுவேராவை எனக்கு மிகவும் பிடிக்கும். அதைவிட பிரபாகரனை எனக்கு மிகவும் பிடிக்கும்என்று கூறியுள்ளார்.

பிரபாகரன் ஒரு ஒப்பற்ற புரட்சியாளன்என்று புகழ்ந்தார்

அந்த பெயரை நீங்கள் வைத்து இருக்கிறீர்கள் அதான் உங்களை சந்தோஷத்தில் கட்டி அணைத்தேன்என்றார்

புரட்சியின் நேற்றைய உருவான சேகுவேராவை பச்சை குத்தியுள்ள மரடோனா இன்றைய புரட்சியின் வடிவமான பிரபாகரனை இதயத்தில் பதித்துள்ளார்.

பிரபாகரன் என்ற பெயருடைய காவலரை கண்டதற்கே இவ்வளவு மகிழ்ச்சியடைந்துள்ளார் என்றால் பிரபாகரனை எந்தளவிற்கு நேசிக்கின்றார் மரடோனா.

தேடாமல் கிடைத்தால் அதன் அருமை தெரியாது என்பார்கள். அதுபோல தமிழினத்தின் விடுதலையை (சில தமிழர்கள்) விரும்பாத சூழ்நிலையில் பிரபாகரன் அவர்களே தாமாக முன் வந்து விடுதலைக்கான போராட்டத்தை நடத்தினார்

எம்மவர்களில் எத்தனையோ பேர் பிரபாகரனது விடுதலைப் போராட்டத்தையும் போராட்ட வழி முறைகளையும் கடுமையாக விமர்சித்து வருவதுடன் பங்களிக்காது ஒதுங்கியே இருந்து வந்திருக்கின்றார்கள்.

. ஆனால் உலகின் எங்கோ ஒரு மூலையில் தமிழினத்திற்கு நேரடி சம்பந்தமில்லாத மரடோனா தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களது மகிமையினை உணர்ந்துள்ளார் என்பது உலகத் தமிழர்கள் பெருமிதம் கொள்ள வேண்டிய விடயமாகும்..

 asrilanka.com

 

புலிகளைச் சீண்டிப்பார்க்கும் சில கழுதைகள் இதனையும் உதைக்க வருமா...???

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சாம்ராஜ் போன்ற காகிதப் புலிகளுக்கு, களமாடும் புலிகளின் தியாகங்கள் எப்படித் தெரியும்?

தமிழினத்திற்காகப் போராடும் நல்லவர்களை அவதூறு செய்வதும், இனத் துரோகிகளைத் துதிபாடுவதும், நம் இனத்துக்குள்ளே இருக்கும் துரோகக் கும்பலின் வாடிக்கை.

 

கீழ்க்கண்ட மனுஷ்யபுத்திரனின் கவிதையையும் முழுமையாகப் படித்துப் பார்க்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.  முற்போக்குவாதி என்ற முகமூடியில் பலர் இப்படி எழுதத் தலைப்பட்டிருக்கிறார்கள்.

வரலாறு எனும் பைத்தியக்கார விடுதி  (மனுஷ்யபுத்திரன்)

புலம் பெயர்ந்த 
என் ஈழத்து நண்பர்களை
இப்போது நான் சந்திப்பதில்லை

அவர்களது மின்னஞ்சல்களை
நான் திறப்பதில்லை

கணினியின் உரையாடல் அறையில்
அவர்களது வணக்கங்களுக்கு
இப்போது நான் பதில் வணக்கம் சொல்வதில்லை

வரலாற்றில் இதற்கு முன்பும் 
இது போல்தான் இருந்ததா
அழிவின் மௌனங்கள்?

m

நிறைய பார்த்தாகிவிட்டது
சிதைக்கப்பட்ட உடல்களின் புகைப்படங்களை

நிறைய காண்பித்தாகிவிட்டது
படுகொலைகளின் படச்சுருள்களை

நிறைய படித்தாகிவிட்டது
கொரில்லா போர் முறையின் யுத்த தந்திரங்களை

வரலாற்றில்
இதற்கு முன்பும் இப்படித்தான் சொல்லப்பட்டதா
விடுதலையின் கதைகள்?
m

முப்பதாண்டுகளின் குருதிவெள்ளம்
ஒவ்வொரு சதுரமைலாகச் சுருங்கி
இப்போது ஒரு கண்ணீர்த்துளியாக
எஞ்சி விட்டது

தோழி
நாம் இன்று அருந்துகிற 
ஒவ்வொரு கோப்பை மதுவும்
உன் விடுதலைக்காக இறந்தவர்களின் 
குருதியால் நிரம்புகிறது

அது மரணத்தின் 
எல்லையற்ற போதையை 
நம் இதயத்தில் கலக்கிறது

வரலாற்றில் இதற்குமுன்பும் 
இப்படித்தான் அணைந்ததா
விடுதலையின் சுடர்கள்?
m


கொலைகாரர்கள்
தன்னம்பிக்கையுடன்
இறுதி வெற்றியை நோக்கி
முன்னேறிக் கொண்டிருக்கிறார்கள்

சாத்தான்கள் 
மர்மப் புன்னகையுடன் 
வேறு எங்கோ பார்த்தபடி 
பேச்சுவார்த்தைக்கு அழைக்கின்றன

நீதி தேவதைகளோ
இதைப்பற்றிய தகவல்கள்
இன்னும் தமக்கு வரவில்லை என்கின்றனர்

வரலாற்றில்
இதற்கு முன்பும் 
கொலைக்களங்களில் மனிதர்கள்
இப்படித்தான் கைவிடப்பட்டார்களா?
m 


வெவ்வேறு தலைநகரங்களில்
கண்டன ஊர்வலங்கள் நிறைவுற்று
தனிமையின் இருளில் 
என் ஈழத்து நண்பர்கள் வீடு திரும்புகிறார்கள்

அரசியல் சூதாடிகள்
தங்கள் சீட்டுக் கட்டுகளை 
கலைத்துக் கலைத்து அடுக்குகிறார்கள்

நான் ஒரு கூட்டுப் பிரார்த்தனையில் 
பங்கெடுத்துவிட்டு 
சாலையோரம் அமர்ந்து மூத்திரம் போகிறேன்

வரலாற்றில் 
இதற்குமுன்பும் இப்படித்தான் 
சகோதரத்துவம் நிலைநாட்டப்பட்டதா?
m 


அமைதிக்குப்பின் 
கருணை எல்லா முனைகளிலும் 
ரத்து செய்யப்படுகிறது

புதுப்பிக்கப்படாத விஸாக்கள்
நிறுத்தப்படும் உதவித் தொகைகள்
காலி செய்யப்படும் அகதி முகாம்கள்
எங்கும்கொண்டு சேர்க்காத திரும்பும் பாதைகள்

மயான பூமியை நோக்கிக் 
கிளம்புகிறது
இறுகிய முகங்களுடன்
சமாதானத்தின் மரணக் கப்பல்

வரலாற்றில் இவ்வாறு ஒடுக்கப்பட்டவர்கள் 
இதற்குமுன்பு எப்போதாவது பறவைகளாக மாறி
வனாந்தரங்களுக்குள் பறந்து சென்றிருக்கிறார்களா?

m 


புலம் பெயர்ந்த 
என் ஈழத்து நண்பர்கள்
இப்போது கொல்லப்பட்டவர்களை
நினைவுகூர்வதில்லை

நம்பிக்கையூட்டும்
வதந்திகள் எதையும் 
நம்புவதில்லை

யுத்தமுனைச் செய்திகளைப் 
படிப்பதில்லை

அவர்கள் ஒரு பைத்தியக்காரனின் முகத்தை
சுவரில் வரைகிறார்கள்
குழந்தைகளின் இதயத்தைத்
தின்பவனின் பெயரை 
சுவரில் எழுதுகிறார்கள்
ஒரு அபத்த தியாகத்தின் கதையை
எஞ்சியிருக்கும் தம் குழந்தைகளுக்குச்
சொல்லாமல் மறைக்கிறார்கள்

வரலாறு
இதற்குமுன்பும் இப்படித்தான் 
ஒரு பைத்தியக்காரவிடுதியாக இருந்ததா?

16.04.2009

 

//அவர்கள் ஒரு பைத்தியக்காரனின் முகத்தை
சுவரில் வரைகிறார்கள்
குழந்தைகளின் இதயத்தைத்
தின்பவனின் பெயரை 
சுவரில் எழுதுகிறார்கள்
ஒரு அபத்த தியாகத்தின் கதையை
எஞ்சியிருக்கும் தம் குழந்தைகளுக்குச்
சொல்லாமல் மறைக்கிறார்கள்//

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அவன்
--------- 
அமைதி வழியில் போராடி
உங்கள் கண் முன்னே
பட்டினிப் போராட்டம் நடத்தி
உங்களிடம் அடிபட்டு
அவன் இறந்திருக்க வேண்டும்
சிலை வைத்து நீங்கள்
அரசியல் செய்திருப்பீர்கள்

உங்களிடம்
ஓட்டுப் பிச்சையெடுத்து
உங்கள் முதுகிலேயே
சவாரி செய்திருக்கவேண்டும்
அவன் காலை நக்கி
புரட்சித் தலைவன் என்றிருப்பீர்கள்

அடிமை விலங்கொடிக்க
ஆயுதமேந்திப்
போராடியதால்
அவன் ஒண்டிப்புலியாகிவிட்டான்
உங்கள் காமாலைக் கண்களுக்கு
-சேயோன் யாழ்வேந்தன்

 

Edited by seyon yazhvaendhan

  • கருத்துக்கள உறவுகள்

பொறுக்கித் தின்னி  சாம்ராஜ்... என்பவனது, கழு(வி)தைக்கு.... 
பதில் கவிதை எழுதிய, பாமரனின் அசத்தல் கவிதைகளை....
எமக்கு அறியத் தந்த.... நிழலிக்கும், சேயோன் யாழ் வேந்தனுக்கும் மிக்க நன்றி.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பொறுக்கித் தின்னி  சாம்ராஜ்... என்பவனது, கழு(வி)தைக்கு.... 
பதில் கவிதை எழுதிய, பாமரனின் அசத்தல் கவிதைகளை....
எமக்கு அறியத் தந்த.... நிழலிக்கும், சேயோன் யாழ் வேந்தனுக்கும் மிக்க நன்றி.

 

விடுதலைப் புலிகளை முற்றிலுமாக அழித்தொழித்து விட்ட பிறகும், இறுதிப் போரில் இலட்சக்கணக்கான மக்களைக் கொன்று குவித்த பின்பும், 2012 அக்டோபர் மாதம் வரை முள்வேலி முகாம்களுக்குள் மீதமிருந்த தமிழ் மக்களை உணவு, சுகாதாரம், மருத்துவ வசதியின்றி அடைத்து வைத்திருந்தபோது, எங்கே போனார்கள் இந்த சாம்ராஜ்கள்?

 

மிருகங்களிடமிருந்து தமிழ் மக்களை பாதுகாக்கவே முள்வேலி முகாம் அமைக்கப்பட்டதுஎன்று இலங்கை எம்.பி. கொக்கரித்தபோது, இந்தக் கேடுகெட்ட கவிஞன் என்ன தின்னுகொண்டிருந்தான்?

 

இன்னமும் தமிழ் மக்களுக்கு சம உரிமைகள் மறுக்கப்பட்டு வருகின்றனவே, என்ன செய்ய உத்தேசம் இந்த உலுத்துப் போன கவிஞனுக்கு?

 

ஏதாவது சமூக அவலத்தைக் களைவதற்கு தெருவில் இறங்கிப் போராடியதுண்டா இந்தக் காகிதப் புலிகள்?

 

அந்தப் போராளி இருந்தது போல் ஒரு நாளாவது போராட்டக் களத்தில் கழிக்க முடியுமா, உத்தமர் வேடம் போடும் இந்த உன்மத்தர்களால்?

 

இன்று இங்கே இத்தனை சமூக அவலங்கள் நடைபெறக் காரணமான ஓட்டுப் பொறுக்கி அரசியல்வாதிகளுக்கு எதிராக ஒரு துரும்பையாவது எடுத்துப் போட்டதுண்டா இந்த எழுத்துப் போராளிகள்?  அரிப்புக்கு சொரிந்து கொள்ளும் தொழுநோயாளி நிலையைத் தவிர வேறு ஏதேனும் சிறப்பு இருக்கிறதா இந்த எழுத்து வேள்வி செய்யும் வீணர்களுக்கு?

 

பேனா எடுத்து, எதையாவது எழுதித் தள்ளிக்கொண்டு, அதையும் எவனாவது கேடு கேட்டவன் வெளியிட்டுக் கொண்டு, நாங்களும் படைப்பாளிகள் என்று சொல்லிக்கொண்டு இருப்பதற்க்குப் பதிலாக, இவர்கள் இன்னொரு பழந்தொழிலைச் செய்யலாம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.