Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்கின் அபிவிருத்திக்கு புலம்பெயர் தமிழர்களின் உதவி தேவை! - அமெரிக்காவில் விக்னேஸ்வரன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
வடக்கின் அபிவிருத்திக்கு புலம்பெயர் தமிழர்களின் உதவி தேவை! - அமெரிக்காவில் விக்னேஸ்வரன் Top News
[Monday 2015-07-06 20:00]
இலங்கை அரசாங்கம் வட மாகாணத்திற்கான வளங்களை குறைத்துள்ளதால்,தமிழர்கள் வளமாக வாழக்கூடிய சூழலை உருவாக்குவதற்கு புலம்பெயர் தமிழர்கள் உதவி செய்ய வேண்டும் எனவும் வட மாகாண முதலைமைச்சர் சி.வி விக்னேஸ்வரன் கோரியுள்ளார். சான்பிரான்சிஸ்கோவில் நடைபெற்ற வட அமெரிக்க தமிழ்ச்சங்க பேரவையின் வருடாந்த மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே சி.வி.விக்னேஸ்வரன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை அரசாங்கம் வட மாகாணத்திற்கான வளங்களை குறைத்துள்ளதால்,தமிழர்கள் வளமாக வாழக்கூடிய சூழலை உருவாக்குவதற்கு புலம்பெயர் தமிழர்கள் உதவி செய்ய வேண்டும் எனவும் வட மாகாண முதலைமைச்சர் சி.வி விக்னேஸ்வரன் கோரியுள்ளார். சான்பிரான்சிஸ்கோவில் நடைபெற்ற வட அமெரிக்க தமிழ்ச்சங்க பேரவையின் வருடாந்த மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே சி.வி.விக்னேஸ்வரன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

  

இதன்போது தொடர்ந்தும் உரையாற்றிய அவர், இலங்கை அரசாங்கம் வட மாகாணத்திற்கான வளங்களை தற்போது குறைத்துள்ளது. வடக்கு கிழக்கிற்கான அதிகாரப் பகிர்வு என்பது ஒரு நகைப்புக்குரியதாகவும், கேலிக்குரிய விடயமாகவும் உள்ளது. அத்துடன், வடக்கு கிழக்கில் தேர்வுசெய்யப்பட்ட அதிகாரிகளின் வார்த்தைகள் கருத்தில் எடுக்கப்படுவதில்லை. ஏனைய மாகாணங்களை விட போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்குப் பிரதேசங்களுக்கு மேலதிக உதவிகளும் நிதியும் தேவைப்படுகின்றது. ஆனால் எமக்கான மூல வளங்களை மத்திய அரசாங்கம் குறைத்துள்ளது.என்று குறிப்பிட்டார்.

இதேவேளை, இலங்கை அரசாங்கம் தமிழர்களின் நிலங்களை கையகப்படுத்துவதற்கு வட மாகாண முதலமைச்சர் கண்டனம் வெளியிட்டுள்ளார்.தேவைகளை அடிப்படையாக கொண்ட செயற்றிட்டங்களில் ஐக்கிய நாடுகள் சபையுடன் இணைந்து வட மாகாணம் செயற்படுவதற்கும் இலங்கை அரசாங்கம் அனுமதிக்கவில்லை எனவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

 

cm-vigneswaran-us-060715-seithy.jpg
  • கருத்துக்கள உறவுகள்

இன்னும் ஒரு 30 வருடத்தில் எல்லாம் சரியாகிவிடும் ஐயா.......வடக்கு தெற்கு என்ற பாகுபாடே இருக்காது....

  • கருத்துக்கள உறவுகள்

கிழக்கை யார் அபிவிருத்தி செய்வது. அதுவும் வடக்குப் போல யுத்தத்தை எதிர்கொண்ட பகுதி தானே. வடக்குக் கிழக்கை சிங்களவனை காட்டிலும் நாங்களே அதிகம் பிரிச்சிடுவம் போலக் கிடக்குது..?! :(

முதலில் வேலைத்திட்டத்தை சரியாக முன்வைத்தால் உதவிகள் தானாக வந்துசேரும்

  • கருத்துக்கள உறவுகள்

முதலில் வேலைத்திட்டத்தை சரியாக முன்வைத்தால் உதவிகள் தானாக வந்துசேரும்

உண்மை தான்....சேர்வயர்.
வேலைத் திட்டம் இல்லாமல், உதவி என்று சொன்னால்...உதவி கிடைப்பது குதிரைக் கொம்பாகி விடும்.

விக்னேஸ்வரன் ஐயா சொன்னால், புலம் பெயர் தமிழ் மக்கள் நிச்சயம் உதவி செய்வார்கள்.
சம்,சும்... கொம்பனி கேட்டால்.... செருப்படி விழும்.

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்களத்தின் உறுப்பினர்களில் ஒருவர் கூறுவதுபோன்ற படித்த மேல்தட்டு வர்க்கத்தினரிடம் விக்னேஸ்வரன் அவர்கள் உதவி கேட்பாராகவிருந்தால், அவர்கள் அள்ளி இறைத்துவிட்டுத்தான் அடுத்தவேலையைப்பார்ப்பார்கள்.

இவர்களது வேலை இப்படியான விழாக்களுடன் தங்களுடைய கடமை செவ்வனே முடிந்ததாகக்  அடுத்தவேலையைப் பார்க்கப்போய்விடுவார்கள், மேலும் மதில்மேல் பூனைகள்போல் இருந்து கச்சிதமாகக் காரியம்பார்ப்பார்கள்.

வடக்குக்கிழக்கினது அபிவிருத்திக்கு முதலாவதாகத் திட்டமிடல்வேண்டும், அதன்பின்னரான ஆளணி அமர்த்தல் மத்திய அரசிடம் அனுமதி வாங்குதலின் பின்னரான பொதுஅறிவிப்பு அவைபோன்ற இன்னபிறவிடையங்களைச் செவ்வனே செய்துமுடித்தபின்பு அதற்கான நிதிமூலங்களை ஒன்றிணைக்கும்வண்ணம் ஒரு ஸ்தாபனம் அதனது திறன்சார் தணிக்கை அதிகாரிகள் கட்டமைப்பு இவைகள் எல்லாம் நீண்டகாலநோக்கில் மிகவும் கச்சிதமாக எவ்வித தவறுகளும் எதிர்காலத்தில் ஏற்படாதவண்ணம் செய்திடல்வேண்டும்.

அதன்பின்பு புலம்பெயர் தேசங்கள் எங்கும் வாருங்கள் அடிமட்டத்தில் தாயகத்தை நேசிக்கும் ஆயிரமாயிரம் மக்கள் இருக்கிறார்கள். அறுபது அடிக்கம்பத்தில் ஏறிநிண்டு வித்தை காட்டாதையுங்கோ இறங்கி வாங்கோ அங்குதான் காசுபோடும் மக்கள் அண்ணாக்காப் பார்த்துக்கொண்டு நிற்கிறார்கள் ஆனால் அவர்களுக்கு நீங்கள் கணக்குக்காட்டவேணும், ஆனையிறவுப்பக்கம் ஐம்பதும் வவுனியாப்பக்கம் ஐம்பதும் கொக்கிளாய் கொக்குத்தொடுவாய்ப்பக்கம் ஐம்பதும் அடிச்சம் நீங்கள் தந்தகாசு முடிஞ்சுபோட்டுது என இனிமேல் கணக்குச் சொல்லமுடியாது, அல்லது மங்கல்யான் அனுப்பினன் அது இன்னும் பத்துப்பன்னிரண்டு வருசத்தில படங்காட்டவெளிக்கிடும் எனும் கோதாவிலும் இனிமேல் கூறமுடியாது.

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

பதவி பலத்துடன் இருக்கும் இவரே ஒரு அறக்கட்டளையை ஆரம்பித்தால் நல்லாயிருக்கும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாழ்களத்தின் உறுப்பினர்களில் ஒருவர் கூறுவதுபோன்ற படித்த மேல்தட்டு வர்க்கத்தினரிடம் விக்னேஸ்வரன் அவர்கள் உதவி கேட்பாராகவிருந்தால், அவர்கள் அள்ளி இறைத்துவிட்டுத்தான் அடுத்தவேலையைப்பார்ப்பார்கள்.

இவர்களது வேலை இப்படியான விழாக்களுடன் தங்களுடைய கடமை செவ்வனே முடிந்ததாகக்  அடுத்தவேலையைப் பார்க்கப்போய்விடுவார்கள், மேலும் மதில்மேல் பூனைகள்போல் இருந்து கச்சிதமாகக் காரியம்பார்ப்பார்கள்.

மற்ற நாடுகளுக்கும் அமெரிக்கவிற்க்கும் இடையில் உள்ள தமிழர்களில் உள்ள பெரிய வித்தியாசம் இதுவே. முதலில் இங்கே பெரியளவில் தொழில் முறையில் நிபுணத்துவம் அற்றவர்கள் குறைவு . நான் கனடாவில் 3-4 வருடம் இருந்தேன் அங்கெ ஒரு விழாவிற்கு போனால் 4-5 உயர் தொழில் / நிபுணத்துவம் வாய்ந்த தொழில் பார்பவர்கள் இருப்பார்கள் ஆனால் அமெரிக்காவில் மாறி . சிலவேளைகளில் நான் பழகிய கூட்டத்தில் வேறுபாடு வந்து விட்டதோ தெரியாது . கனடாவில நான் ஒரு வேலையிலாத பட்டதாரி இங்கே அமெரிக்காவில் வேலை செய்கிறேன் . 

எனக்கு தெரிய பலரும் தங்களால் இயன்றவு உதவிகளை செகிறார்கள் - படித்த நல்ல தொழிலில் இருப்பவர்கள் ...அமேரிக்காவ கொக்கா :)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

எங்கடை வெரி பிரிட்டிஷ் மூத்த மேட்டுக்குடியளை பற்றியும் ஏதாவது சொல்லுங்கோப்பா (1982 முதல் வந்தவையள்) :lol:

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு சட்டமூலத்தையாது அமுல் படுத்த முடியவில்லை. ஈபிடிபியும் கூட்டமைப்பும் குடும்பி பிடி சண்டையில் ஈடுபட்டு  மாறி மாறி குழப்பிக்கொண்டே இருந்தார்கள். விளைவு மக்களுக்கு எதுவும் கிடைக்கவில்லை. கடைசி விக்கினேஸ்வரன் அவர்கள் திட்டத்தை வரைந்து அந்தந்த நாடுகளில் பொறுப்பான சமூக ஆர்வலர்கள் மூலம் உதவியை பெறலாம். அரசு கொடுக்கும் சிறு தொகையை வைத்து பெரிதாக எதுவும் செய்து விட முடியாது. விக்கி அவர்கள் முற்றுமுழுதாக அரசியல்வாதி ஆகாததால் தனது கடைமையை நேர்மையுடன் செவ்வனே செய்ய வேண்டுமென நினைக்கிறார் போல உள்ளது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.