Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சர்வதேச விசாரணையே தமிழருக்கு நீதியைத் தரும்! - என்கிறார் மாவை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
சர்வதேச விசாரணையே தமிழருக்கு நீதியைத் தரும்! - என்கிறார் மாவை 
[Saturday 2015-07-18 09:00]
சர்வதேச விசாரணை மூலமே தமிழ்த் தேசிய இனத்தின் பிரச்சினைக்கு தீர்வு காணமுடியும். எமக்கு உள்ளக விசாரணையில் நம்பிக்கையில்லை என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை.சேனாதிராஜா தெரிவித்தார். இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், ஐ.நா. மனித உரிமைப் பேரவையினால் நிறைவேற்றப்பட்ட சர்வதேச போர்க்குற்ற விசாரணை அறிக்கை செப்டெம்பர் மாதம் தாக்கல் செய்யப்படும்.

அதையொட்டியே போர்க்குற்ற விசாரணை தொடரும் அப்படி தொடரும் என்பதால் தான் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடுகின்றார். ஐ.நா.மனித உரிமை பேரவையிடம் தொடர்ந்தும் சர்வதேச விசாரணை வேண்டும் என்றே கோருகிறோம். இறுதி யுத்தத்தின் போதும் அதற்குப் பின்னரான காலத்திலும் நடந்தேறிய படுகொலைகள், அநீதிகள் தொடர்பில் உண்மைகள் வெளிவரவேண்டும். போர்க்குற்றம் நடந்ததற்கான காரணங்களை அறிவதன் மூலம் தமிழ்த் தேசிய இனத்தின் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கான பொறிமுறை உருவாகுவதற்கான சாத்தியம் ஏற்படும்.

ஏற்கனவே இவ்விடயம் மனித உரிமைப் பேரவையின் அறிக்கையில் சொல்லப்பட்டுள்ளது. ஆனால் கடந்த கால அரசாங்கம் ஐ.நா.விசாரணை இடம்பெற ஒத்துழைப்பையோ அனுமதியையோ வழங்க மறுத்துவந்தது. இந்நிலையில் வரப்போகும் அரசு இதற்கு அனுமதிக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். சர்வதேச விசாரணை முழுமையாக நிறைவேற்றப்படாது விட்டால் தமிழ் தேசியக் கூட்டமைப்பு சர்வதேச நாடுகளுடன் தொடர்ந்தும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டும் என்றார்.

http://www.seithy.com/breifNews.php?newsID=136083&category=TamilNews&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்

சுமந்திரனை, மடியில் கட்டி வைத்துக் கொண்டு....
சர்வதேச விசாரணையை , எதிர் பார்க்கலாமா... மாவை.
எமக்கு தெரிந்த, அரசியல் அறிவு கூட... உங்களுக்குக்குத் தெரியாமல் போனது ஏன்? :grin:

  • கருத்துக்கள உறவுகள்

இது வாக்குப் பொறுக்கச் சொல்லப்படுவது. சம் சும் கும்பல்.. ஆட்டினால் அதற்கு ஏற்பட ஆடுபவர் இவர். அந்தளவு தான் மாவையின் அரசியல். :grin:

உள்ளூர மகிந்த திரும்பி வந்திட்டாலும் என்ற பயமும் இவைக்கு இருக்குது. :grin: இது சனாதிபதி தேர்தல் போல அல்ல. மகிந்த சிங்களவர்கள் மத்தியில் குறிப்பிடத்தக்க வெற்றி பெறுவார். அவர் விதைத்த சிங்கள பேரினவாத தமிழர்களை வெற்றி கொண்ட அந்த வெறி அதற்கு உதவும்.

  • கருத்துக்கள உறவுகள்

புலிகள்தான் தமிழர், தமிழர்கள்தான் புலிகள் என்று உலகத்திற்கு ஆணிபோல் அறைந்து வைத்துள்ளது சிங்களம். முதலில் புலிகள் பயங்கரவாதிகள் என்ற முத்திரை நீக்கப்படாது, சர்வதேச விசாரணையில் சிங்களம் தண்டிக்கபட்டாலும்! தமிழருக்கு எதுவுமே கிடைக்கப்போவதில்லை.... உலகத்தைப் பொறுத்தவரையில் தமிழர்கள் எதனைச் செய்தாலும் அது பயங்கரவாதிகளின் செயற்பாடுகளாகவே இன்றும் நோக்கப்படுகிறது. நிகழ்ச்சி ஒன்றை நடாத்துவதற்காக இங்கு யேர்மனியில் மண்டபம் ஒன்றை ஒழுங்கு செய்தபோது அதன் உரிமையாளர் "நீங்கள் சிறீலங்காத் தமிழர்! புலிகள்?" என்ற சொல்லை ஒரு சிறிய நமட்டுச் சிரிப்புடன் வெளியிட்டார். 

  • கருத்துக்கள உறவுகள்

ஐயோ  மாவை...!

ஒரு கால கட்டத்தில் உங்களை அண்ணார்ந்து பார்த்தவன் நான்! ( நான் அப்போது சிறுவன் என்பதைத் தான்  சொல்லுகிறேன்! <_<)

இப்ப உங்களைப் பார்க்க எனக்கே பரிதாபமாய் இருக்கு!

  • கருத்துக்கள உறவுகள்

சர்வதேச விசாரணையே தமிழருக்கு நீதியைத் தரும்! - என்கிறார் மாவை

தலைவர்  இலங்கைக்குள் ஒரு தீர்வு 

சட்டம்பியர் உள்ளக விசாரணையே நன்மை தரும். வெளிநாட்டுத்தமிழர் சும்மா இருந்தாப்போதும்

கட்சித்தலைவர் சர்வதேச விசாரணையே தேவை. 

உண்மையான அரசியல்வாதிகள்

மக்கள் தான் தலையை பிய்க்கிறார்கள்

பாவம் மக்கள்..

  • கருத்துக்கள உறவுகள்

த.தே.கூ வினரின் மிகப் பெரிய பலவீனம் இது தான்! தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்கும் இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் ஒரே மாதிரிச் சொல்லக் கூடிய ஒரு கொள்கை ஒன்று இவர்களிடம் இல்லை! ஒரு விடயம் பற்றிய கட்சியின் கருத்தை பத்து விதமாகப் பத்துப் பேருக்குச் சொல்லிக் கடைசியில் யாருக்கு எதைச் சொன்னோம் என்பதே மறந்து விடுவார்கள். இன்ரர்நெற் இல்லாத காலங்களில் இப்படிப் பலமுகம் காட்டுவதை ராசதந்திரம் என்று புகழ்ந்திருக்கலாம்! எல்லாச் செய்திகளும் எல்லோருக்கும் விரல் நுனியில் போய்க் கிடைக்கும் இந்த யுகத்தில் இந்தப் போக்கிற்கு ஒரே ஒரு பெயர் தான் வைக்கலாம்: கடைந்தெடுத்த மொள்ளமாறித்தனம்!. நோக்கம்: ஆயுசுக்கும் பதவியும் பஜிரோ இன்ரர்கூலரும்.  :lol:

இது நீங்கள் சொல்லவில்லையா?

11018604_10203270907334026_6925261093258

இப்படிக் கூறிவிட்டு கொழும்பு சென்று அவர்களுக்கு கைலாகு கொடுத்து தேநீர் அருந்தினால் தீர்வு எப்படி வரும்......

11162507_1780395178853741_49973272664603

சர்வதேசவிசாரணை முடிந்து விட்டது. இனி அதன்படி உள்ளூர் விசாரணைதான் தேவை என்று சுமந்திரன் சொல்கிறார் ஐயா!!
கட்சியில யார் முடிவெடுக்குற நபர் ???

Edited by BLUE BIRD

வாக்குப் பொறுக்கிகள் இவர்கள்

தங்கள் தீர்மானம் எடுக்கும் சக்திகளின் உண்மையான எண்ணத்தைக் கூறி வாக்குக் கேட்க முடியாது கேவலமான பொய்களை மக்களிடம் சொல்லி வாக்குக் கேட்கும் உந்தக் கோதாரிகளை  என்ன என்று சொல்வது?

  • கருத்துக்கள உறவுகள்

த.தே.கூ வினரின் மிகப் பெரிய பலவீனம் இது தான்! தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்கும் இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் ஒரே மாதிரிச் சொல்லக் கூடிய ஒரு கொள்கை ஒன்று இவர்களிடம் இல்லை! ஒரு விடயம் பற்றிய கட்சியின் கருத்தை பத்து விதமாகப் பத்துப் பேருக்குச் சொல்லிக் கடைசியில் யாருக்கு எதைச் சொன்னோம் என்பதே மறந்து விடுவார்கள். இன்ரர்நெற் இல்லாத காலங்களில் இப்படிப் பலமுகம் காட்டுவதை ராசதந்திரம் என்று புகழ்ந்திருக்கலாம்! எல்லாச் செய்திகளும் எல்லோருக்கும் விரல் நுனியில் போய்க் கிடைக்கும் இந்த யுகத்தில் இந்தப் போக்கிற்கு ஒரே ஒரு பெயர் தான் வைக்கலாம்: கடைந்தெடுத்த மொள்ளமாறித்தனம்!. நோக்கம்: ஆயுசுக்கும் பதவியும் பஜிரோ இன்ரர்கூலரும்.  :lol:

வாக்குப் பொறுக்கிகள் இவர்கள்

தங்கள் தீர்மானம் எடுக்கும் சக்திகளின் உண்மையான எண்ணத்தைக் கூறி வாக்குக் கேட்க முடியாது கேவலமான பொய்களை மக்களிடம் சொல்லி வாக்குக் கேட்கும் உந்தக் கோதாரிகளை  என்ன என்று சொல்வது?

இருவரது கருத்துக்கும்  நன்றிகள்

இங்கு இதற்கு மாற்றுக்கருத்துள்ளவர்கள்

கூட்டமைப்பு வேசம் போடவில்லை

மக்களை  ஏமாற்றவில்லை என்பவர்கள்

அதை ஆதாரபூர்வமாக வைத்தால் நாமும் பேசலாம்..

அப்படியல்லாது

அவர்கள் தூய்மையானவர்கள் வேசமிடவில்லை என்றோ 

அல்லது அவர்கள் அப்படித்தான் ஆனால் அவர்கள் மட்டும் தான் எமது தெரிவு என்றோ எழுதுவார்களாயின் 

நீங்கள் மக்கள்மீது அக்கறையற்றவர்கள்

இன்னொரு தலைமையை ஒருவாக்கும் தகுதியற்றவர்கள் என்பதை ஒத்துக்கொள்ளலாம்....

ஆனால் நாம் அப்படியன்று.......

மக்களை ஏமாற்றினால் அங்கு வருவோம்

இன்னொரு தலைமையைத்தேடுவோம்

உருவாக்குவோம்....

காலமிடும் கட்டளை இது..

அந்தக்காலத்தை முன்னோக்கி  தள்ளுபவர்கள் வேறுயாருமல்லர் கூட்டமைப்பினரே........

Edited by விசுகு

உள்ளூர்ப் பொறிமுறையில் தமிழர்களுக்கான தீர்வு கிடைக்குமென்பதில் நம்பிக்கை இல்லை 

தமிழர்களுக்கான அரசியல் தீர்வுத்திட்டம் உள்ளூர்ப் பொறிமுறையில் தீர்க்கப்படுமென்பதில் நம்பிக்கை இல்லை. அது சர்வதேச பொறிமுறையில்  தீர்க்கப்பட வேண்டுமென்பதிலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தமிழ் மக்களும் இருக்கின்றார்கள் என்று கூட்டமைப்பின் சார்பில்  மட்டக்களப்பு மாவட்டத்தில்  தலைமை வேட்பாளராக போட்டியிடும் பொன்.செல்வராசா தெரிவித்தார்.

துறைநீலாவணையில் சனிக்கிழமை (18) மாலை நடைபெற்ற மக்கள் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு மேலும் தெரிவித்த அவர், '2009ஆம் ஆண்டு மே மாதம் வட, கிழக்கில் யுத்தம் மௌனித்த பின்னர் இந்நாட்டில் அரச பயங்கரவாதம் புரையோடிக் காணப்பட்டது. இதை எவராலும் மறக்கமுடியாது.

2010ஆம் ஆண்டு பொதுத்தேர்தல் நடைபெற்றது. மனம் நொந்து போயிருந்த தமிழ் மக்கள், இந்தத் தேர்தலில்  வடக்கு, கிழக்கிலுள்ள தமிழ் மக்களின் ஏகபிரதிநிதியாக  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை நிரூபித்தார்கள்.

இதன் பின்னர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் அரசாங்கத்துக்குமிடையில் நாடாளுமன்ற கட்டடத்தொகுதியில் பலசுற்றுப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. இதில் தமிழர்களின் அபிலாஷைகள் தீர்க்கப்பட வேண்டுமென்பது கூட்டமைப்பின் ஆக்கபூர்வமான முன்னெடுப்பென்பதை மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்துக்கு  தெளிவுபடுத்தியும், அதனை ஏற்காத மஹிந்த அரசாங்கம் பேச்சுவார்த்தையை முறித்துக்கொண்டது.

இந்தப் பொறிமுறையை அரசாங்கம் சரியானமுறையில் நடைமுறைப்படுத்தி  தீர்வை வழங்காதென்பதை அறிந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, சர்வதேசத்தின் மத்தியில் எம்முடைய பிரச்சினைக்கு தீர்வு காண  எடுத்துச்சென்றது' என்றார்

 http://www.tamilmirror.lk/150500#sthash.shffciEz.dpuf

தமிழரின் இலட்சியத்தை தோற்கடிக்க நினைப்போருக்கு பாடம் புகட்டுங்கள்! - வடக்கு, கிழக்கு மக்களிடம் மாவை வேண்டுகோள்

தமிழரின் கொள்கைகள், இலட்சியத்தை தோற்கடிக்க நினைப்போருக்கு இந்த நாடாளுமன்றத் தேர்தல் மூலம் பாடம் படிப்பிக்கவேண்டும். - இவ்வாறு வடக்கு, கிழக்கு தமிழ் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட முதன்மை வேட்பாளருமான மாவை சேனாதிராஜா. போர்க்குற்ற விசாரணைகளைத் துரிதப்படுத்துமாறு சர்வதேச சமூகத்திடம் நாம் வேண்டுகோள் விடுத்துள்ளோம். இந்த விசாரணையின் அடிப்படையில் தமிழ் மக்களின் இனப் பிரச்சினை தொடர்பான விடயங்களும் உள்ளடங்கியுள்ளதால் நாம் பலமாக இருந்தாலே விசாரணைகளை மேலும் விரைவுபடுத்த முடியும். இதற்கு மக்களின் வாக்கு பலம் அதிகம் எமக்குத் தேவை - என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:- 

தமிழரின் ஆயுதப் போராட்டம் 2009ஆம் ஆண்டு மே மாதம் 18ஆம் திகதி முள்ளிவாய்க்காலில் மௌனித்தது. இதனையடுத்து தமிழ் மக்களைத் தோற்றுப்போன சமூகமாகக் கருத்துக்களை வெளியிட்ட மஹிந்த ராஜபக்‌ஷவை எமது சமூகமே தோற்கடித்து வரலாறு படைத்தது. அதேபோன்று எமது கொள்கைகளை - எங்களது இலட்சியத்தை எமது மண்ணிலே தோற்கடிக்க நினைப்போருக்கு இந்தத் தேர்தல் மூலம் பாடம் படிப்பிப்பதுடன், வடக்கு கிழக்கு மாகாணங்களில் எம்மால் நிறுத்தப்பட்ட வேட்பாளர்கள் அனைவரையும் வெற்றி பெறச் செய்து தமிழ் இனம் என்றும் யாருக்கும் அடிபணியமாட்டாது என்பதை தெளிவாக எடுத்துக்காட்ட வேண்டும்.

இந்தத் தேர்தலில் எமக்கு தோல்வி ஏற்படுமாயின் எமது வேட்பாளர்களுக்கு கிடைக்கும் தோல்வி என்பதை விட எமது மக்களுக்கு கிடைக்கும் தோல்வியாகவே கருதவேண்டும். கடந்த பொதுத் தேர்தலில் எம்மால் முழுமையாக தேர்தல் பரப்புரைகளைக் கூட செய்யமுடியாத அளவுக்கு இராணுவ ஆக்கிரமிப்புகள் அதிகமாக இருந்தது. தேர்தல் நாளன்று கூட வாக்களிப்பு நிலையங்களுக்கு அருகில் பெருமளவு படையினர் குவிக்கப்பட்டதுடன் சிவில் உடையில் காணப்பட்ட இராணுவப் புலனாய்வாளர்கள் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் செயற்பட்டனர். அதனால் வாக்களிப்போர் வீதம் குறைவடைந்ததால் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் ஏனைய கட்சிகளைச் சேர்ந்தவர்கள் தெரிவு செய்யப்பட்டனர். எதிர்வரும் தேர்தலில் அவ்வாறான நிலைமை இல்லாததால் தமிழ் மக்கள் அனைவரும் தமது வாக்குகளைச் செலுத்தி வடக்கு, கிழக்கு மாகாணங்களில் எமது கட்சி சார்பில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களையம் வெற்றி பெறச் செய்ய வேண்டும். 

முன்னைய ஆட்சிக் காலத்தில் மக்களிடையே காணப்பட்ட அச்ச நிலை இன்னமும் நீங்கவில்லை என்பதை தற்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர்களின் கூட்டங்களில் கலந்துகொள்ளும் மக்களின் அளவுகளைக் கொண்டு கணிப்பிட முடிகின்றது. இவ்வாறான கூட்டங்களில் கலந்துகொள்வோர் அந்த மக்களின் அச்சத்தைப் போக்கக்கூடிய வகையில் அவர்களை ஊக்கப்படுத்தி தேர்தலில் வாக்களிக்கச் செய்யவேண்டும். 

தமிழ் மக்கள் ஏனோதானோ எனச் செயற்படுவது எதிரணியினருக்கு வாய்ப்பாக அமைந்து விடும். பல்வேறு வாக்குறுதிகளை வழங்கி இம்முறை தேர்தல் பரப்பரைகளில் ஈடுபடும் பேரினவாதக் கட்சிகளுக்கும், தமிழனத் துரோகக் கட்சிகளுக்கும் முகத்தில் கரி பூசுவது போல அவர்களை ஓரம் கட்டும் வகையில் தமிழ் மக்கள் வாக்களிக்கவேண்டும். ராஜபக்‌ஷ மேற்கொண்ட ஊழல்களிலிருந்து தப்பித்துக்கொள்ள குடும்ப ஆட்சியை மீண்டும் கொண்டுவர நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுகின்றார். இதற்கு தெற்கு மக்களும் மற்றும் வடக்கு, கிழக்கு மக்களும் இடம்கொடுக்கக்கூடாது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் கூறுவது போல எமது கட்சிக்கு குறைந்தது 20 இடங்கள் கிடைப்பின் நிச்சயமாக பலம் பொருத்திய நிலையில் சர்வதேச சமூகத்திடம் எமது கோரிக்கைகளை விரைவுபடுத்துமாறு கோரலாம். எமக்குக் கிடைத்துள்ள சர்வதேச சந்தர்ப்பத்தை இழந்து விடக்கூடாது. எனவே, வடக்கு கிழக்கு மாகாணங்களில் உள்ள உள்ளூராட்சி சபைகளின் உறுப்பினர்கள் மற்றும் மாகாண சபைகளின் உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட்டு எமது மக்களின் விடிவுக்குப் பாடுபடவேண்டும் - என்றார். 

http://www.malarum.com/article/tam/2015/07/20/11079/தமிழரின்-இலட்சியத்தை-தோற்கடிக்க-நினைப்போருக்கு-பாடம்-புகட்டுங்கள்-.html#sthash.PGyaFyLT.dpuf

அப்படியென்றால் முதலில் உங்களுக்கு தான் பாடம் புகட்டவேண்டும்.....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

த.தே.கூ வினரின் மிகப் பெரிய பலவீனம் இது தான்! தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்கும் இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் ஒரே மாதிரிச் சொல்லக் கூடிய ஒரு கொள்கை ஒன்று இவர்களிடம் இல்லை! ஒரு விடயம் பற்றிய கட்சியின் கருத்தை பத்து விதமாகப் பத்துப் பேருக்குச் சொல்லிக் கடைசியில் யாருக்கு எதைச் சொன்னோம் என்பதே மறந்து விடுவார்கள். இன்ரர்நெற் இல்லாத காலங்களில் இப்படிப் பலமுகம் காட்டுவதை ராசதந்திரம் என்று புகழ்ந்திருக்கலாம்! எல்லாச் செய்திகளும் எல்லோருக்கும் விரல் நுனியில் போய்க் கிடைக்கும் இந்த யுகத்தில் இந்தப் போக்கிற்கு ஒரே ஒரு பெயர் தான் வைக்கலாம்: கடைந்தெடுத்த மொள்ளமாறித்தனம்!. நோக்கம்: ஆயுசுக்கும் பதவியும் பஜிரோ இன்ரர்கூலரும்.  :lol:

உண்மையில் இது அவர்களின் பலமும் கூட. யாரும் எதுவும் சொல்லலாம் அதுவும் தேர்தல் காலம் என்றால் தம்பிமார் வெளுத்து வாங்குவினம். 

இந்த கோமாளிகளை ராஜதந்திரம் என்ற வால்கள் எங்க ... இதெல்லாம் அவர்களுக்கு ..
இந்த மாவையருக்கு எல்லாம் ஏன் அரசியல் ....கோமாளி 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.