Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பைத்தியங்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

 

இந்த உலகத்தில் பைத்தியங்கள்  அதிகரித்து கொண்டு செல்கின்றது காரணம் நாம் ஒவ்வொரு பொருளின் மீதும் பைத்தியமாக இருக்கிறோம் உதாரணம் பணம் , பொருள் , நகைநட்டுக்கள்  அடுத்தவன் சொத்துக்கள் ( மண் , பொண் ) இன்னும் பல இதை உங்கள் கண்ணாடியை பார்த்து கேட்டால் தெரியும் .நாம் பைத்தியமா இல்லையா என்று. உன்மையில் பைத்தியம் இல்லாதவரை நீங்கள் பைத்தியாமா என்று சொன்னால் அவர் சிரிப்பார் அல்லது முறைப்பார் .அதுவே பைத்தியமே இல்லாத ஒருவரை பைத்தியகார அதாவது மனநல நிலையங்கள் ஆஸ்பத்திரிகள் உள்ளிட்ட இடங்களில் கண்டு அவரை பைத்தியம் என்று சொன்னால் அவர் மனம் எவ்வளவு பாடு படும் என்பது எத்தனை பேருக்கு தெரியும்  அது போல எந்தன் வாழ்க்கையும் ஓடிக்கொண்டிருக்கிறது .

 

இந்த உலகத்தில் எந்த குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே அது நல்லவர் ஆவதும் தீயவர் அவதும் அன்னை வளர்ப்பினிலே  இது பலவருடமாக சொல்லிக்கொண்டிருக்கும் குழந்தை வளர்ப்பு முறை ஆனால் ஒரு குழந்தை பிறந்து சிறிது காலம் கழிந்த பின் அந்த குழந்தைக்கு நடை பழக்கி ,கதை பழக்கி உன்மை எது பொய் எது நன்மை எது தீமை எது என்று சொல்லி கொடுக்கிறோம் அதுவே சில ஆண்டுகள் போன பின்பு அந்த குழந்தைக்கு  நீ அங்கே போகதே , அதை செய்யாதே ,அவர்களுடன் சேராதே, என்று ஒரு மனிதனின் குணங்களில் இல்லாத ஒரு மனித பழக்கத்தை அந்த குழந்தைக்கு திணிக்கிறோம்.

 

இப்படித்தான் எனது வாழ்க்கையும்  ஆரம்பிக்கின்றது எனது பெயர் வசந்த்  எனது அம்மா ஒரு பொலிஸ் காண்ஸ்ரபிள்  அப்பா ஒரு தொழிநுட்ப உத்தியோகத்தர்  இருவரும் காதலித்து கல்யாணம் கட்டிக்கொண்டவர்கள் ஆனால் எந்த ஒரு விசயத்திலும் எதையும் விட்டுக்கொடுத்து வாழ தெரியாதவர்கள் எனக்கு நினைவு தெரிந்த காலம் தொடக்கம் அம்மாவுக்கும் அப்பாவுக்கும் சண்டை சச்சரவுகள்தான் வாய் பேச்சு அடிதடியில் முடியும் இடையில் நான் சிக்கி தவிக்க எனக்கும் அடி விழும் இதற்கு என்ன  காரணம் என்னவென்று அறியாமல் அழுது கொண்டிருப்பேன் அந்த நாளில் நான்.

 

 இப்படி நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டு செல்ல அப்பா ஒரு நாள் இரவில் யாருக்கும் தெரியாமல் அப்பா தூங்கில்  இட்டு அகாலமரணம் அடைய  இன்னும் தனிமைக்கு என் வாழ்க்கை நகரத்தொடங்கியது. என்னை பார்த்த்துக்கொள்வது என் அப்பாதான்  என்னை குளிப்பாட்டி வெளிகிடுத்தி பாடசாலலைக்கு கூட்டி செல்வது எல்லாம் அப்பாதான் அம்மா என்னை கவனிப்பதில்லை காரணம் அவக்கு நேரம் இல்லை  என்று சொல்லுவா லீவு எடுப்பதில்லை அப்பாவுக்கும் சந்தேகம் வந்துதான் வாய்பேச்ச்சு முற்றி  தற்கொலை செய்து கொண்டிருப்பார் என்பது  போக போக எனக்கு புரிய ஆரம்பித்தது   அம்மாவின் போக்கு எனக்கு எனக்கும் பிடிக்கவில்லை வீட்டுக்கு நேரத்துக்கு வருவதுமில்லை என்னை கவனிப்பதுமில்லை என்னை பார்த்துகொள்ள வேலைக்காரி ஒருவரை வீட்டில் வைத்தார் ஒரு குழந்தையை சொந்த தாய் பார்பதை போல வேறு யாராலையும் பார்த்த்துகொள்ள முடியுமா ? அந்த வேலைக்காரியோ வீட்டுக்கு நேரத்துக்கு வரவேண்டும் வெளியில் எங்கையும் ஊர் சுற்ற கூடாது யாருடனும் சேரக்கூடாது  என்று அதட்டும் கட்டளை போடுவாள் நான் நடந்து கொள்ளும் வீதம் பற்றி என் அம்மாவின் தம்பி மாமாவுக்கு போட்டு கொடுப்பது  இவள்தான் என் மாமாவுக்கு எங்கள் அம்மாவின் சொத்தை அபகரிக்க கனநாளா ஆசை அந்த மாமா பயலுக்கு. என்னை  பயமுறுத்திக்கொண்டே இருப்பான் . நீ ஏதாவது தப்பு தண்டா செய்தால்  உன்னை கொன்று விடுவேன் என்பான். 

 

நான் சந்தோசமாக இருக்கும் நாட்கள் அந்த பாடசாலை நடக்கு ஐந்து நாட்கள்தான் நண்பர்களுடன் விளையாடுவது  வெளியில் சுற்றுவது எனது நண்பர்கள் ராஜன், அகிலன் இந்த இருவருமே எனது உயிர் நண்பர்கள்  அன்றைய நாள் பாடசாலை விட்டு வீட்டுக்கு வந்தேன் அம்மாவும் மாமாவும் பேசிக்கொண்டிருந்தார்கள் அவர்கள் பேசிய சாரம்சம் மட்டுமே என் காதில் விழுந்தது என்னை விடுதியில் சேர்க்க வேண்டும் என்பது மாமாவின் பேராசை அதற்கு அம்மா சம்மதம் தெரிவிக்க வில்லை ஒரு சிறிய சந்தோசம் என்றாலும்  என் அம்மவை பற்றி நினைப்பேன் என்னை அவள் அவரசரத்திற்கு பெற்றாளோ அல்லது வெறும் உணர்ச்சிக்கு மட்டும் பெற்றாளோ அல்லது சமுதாயம் தன்னை குற்றம் சாட்ட கூடாது என்பற்கு பெற்றாளோ என்ற கேள்வி மட்டும் என் மனதில் மரதன் ஓட்டம் போல ஓடி கொண்டிருக்கும் . இரவும் தனிமையும் என் வயதும் என்னை கொஞ்சம் கொஞ்சமாக என்னை வேட்டையாட தொடங்க நான் அதைச் செய்தால் என்ன இதை செய்தால் என்ன என்று என்மனம்  ஆட்டம் காண ஆரம்பித்தது. வேலைக்காரிக்கு வேட்டு வைக்க தொடங்கினேன் வீட்டில் இருக்கும் கள்ள வழி அதுதான் யன்னல் வழியாக வெளியில் செல்ல ஆரம்பிக்க தொடங்கினேன்.

 

அன்றைய நாளில் இருந்து யாருக்கும் தெரியாமல் எனது நண்பர்களுடன் பீடி குடிக்க ஆரம்பித்தேன் ,அதில் என்ன ஒரு சுகம் கூட  இல்லையே என்று ,சிகரட் ,கோல்ட்லீவ் என்பன குடிக்க ஆரம்பித்தேன் காசுக்கு வீட்டில் திருட ஆரம்பித்தேன் அதன் சுவையையும் அறிந்து விட்டேனே பிறகு என்ன சாரயம் ஏதாவது குடிக்கலாம் என்று நினைத்து ஆளாளுக்கு ஐம்பது ரூபாய் போட்டு கள் குடிக்க அடுத்த கிரமத்துக்கு சென்று கள் வாங்கி குடித்தோம் புது பழக்கம் என்ற படியால் ஆளாளுக்கு குடித்த கப்புக்கு மேலாக சத்தி எடுத்து கப்பை நிறைத்து கொண்டு மரத்தை பிடித்து கொண்டிருந்தோம் தலை சுற்றால் என்னடா இப்படி ஆகிவிட்டதே எப்படி ஊருக்கு செல்வது என்ற பயத்தினால் யாருக்கும் தெரியாமல் மாலை வரை அந்த ஊரில் உள்ள புதரில் ஒளிந்திருந்தோம் இப்படி யாருக்கும்  தெரியாமல் இந்த பழக்கம் தொடர ,பியரிலிருந்து  எல்லாவற்றையும் ருசிக்க ஆரம்பித்து விட்டோம் மது பழக்கத்துக்கு அடிமையாகிவிட்டோம்  இப்படி சிலகாலமாக எங்கள் வாழ்க்கை ஓடியது வீட்டில் அம்மாவுக்கு தெரியாமல் அப்பாவின் சைக்கிளில் இருந்து ஒவ்வொரு பொருளாக  மூவரும் அவரவர் வீட்டில் திருட ஆரம்பித்தோம். படிப்பு என்பது மக்கி போக எப்படி கள்ள வேலை செய்து பிடிபடாமல் வாழ்வது என்று மூவரும் திட்டம் வகுத்து வகுத்து எனக்களது வேலையை காட்ட ஆரம்பித்தோம்.பாடசாலைக்கு போவது போல போய் வெளியில் சுற்றுவதும் விளையாடுவதும் இப்படி போக மச்சான்  நாம அந்த தூள் இருக்குதானே அதை ஒருக்கா போட்டு பார்க்க வேணும் மச்சான் என்று அது தான் கடைசி ஆசை என்றான் திட்டம் ஒன்று போட்டேன் உங்கட சொந்த காரர்கள் யாராவது கொழும்பில் இருக்கிறார்களா என கேட்க ஒம் என்றான் அகிலன் அப்ப சரி நீ உங்கட வீட்ட எப்படியாவது ஒரு காரணம் சொல்லி அங்க போக ஏற்பாடு செய் என்றேன் அவனும் ஏற்பாடு செய்ய  ராஜனோ காசுக்கு என்னடா செய்யுற என்ற கேள்விக்கு நான் எடுக்கிறன் என்று சொல்லி வீட்ட போய் அம்மாவின் காப்பை திருடி விற்று கொழும்புக்கு மூவரும் புறப்பட்டோம் .

 

அன்று இரவு சென்று மருதானையில் ஒரு விடுதியில் றூம் போட்டோம் அங்கு மூட்டை இல்லாத றூமும் இல்லை ஓட்டை இல்லாத  றூமும் இல்லை தானே அங்கு தங்கின ஆட்சளூக்கு தெரியும். றூமில் தங்கியிருந்து மூவரும் யோசிக்க அதுதான் யாரிடம் போவது எங்கே வாங்குவது பற்றி யோசிச்சு கொண்டிருக்கும் போது பக்கத்து றூமில் இருந்து அணுகிற சத்தம் கேட்க எங்கள் சிந்தனை தூளாக இருந்தது துவண்டு எழுந்து பெண்ணாக மாறியது மச்சான் இதையும் ஒருக்கா செய்து பார்ப்பமே என சொல்ல எங்கள்  றூமில் இருந்து அடுத்த றூமுக்கான ஓட்டை பெருப்பிக்கலானோம் இருட்டு என்பதால் ஒன்றுமே தெரியவில்லை சத்தம் மட்டுமே கேட்டது  அன்றிரவு தூக்கம் இல்லாமல் காத்திருத்தோம் அவளை அழைப்பதற்க்கு அடுத்த நாள் காலை அந்த றூம் வாசல் திறபடாத என அலிபாபாவின் மந்திரங்களை மறந்தவர்கள் போல அந்த றூம் கதவினை பார்த்துக்கொண்டிருந்தோம் . கதவு திறபட உள்ளே இருந்து ஒரு நீக்றோ போல கருபான கட்டையன் ஒருத்தன்  வந்தான் என்ன தம்பி நிற்கிற  என்றான்  இல்லை அண்ணை இரவு முழுக்க சத்தம் கேட்டதே அண்ணே அது தான் பார்க்கலாம் என்று வந்த என்று சொல்ல ஓ அதுவா தம்பி எனக்கு இரவு முழுவதும் நடுக்கலும் காய்ச்சலும் என்றான் எப்படியிருக்கும் பரதேசி நாயே அதுக்காடா ஆளை எழுப்புற அளவுக்கு அணுகுவ என்று மனதுக்குள் திட்டி தீர்த்தாலும் ஆசை அடங்கவில்லை  அடுத்த நாள் காலை ஆள் பிடிக்க மருதானையை சுற்ற ஆரம்பித்தோம் ஆளாளுக்கு ஒரு திசையில்  மூவரும் சென்று தேட யாரும் கிடைக்க வில்லை நான் அடிக்கடி சுற்றி திரிவதை பார்த்த சி .ஐ. டி காரன் என்னை பிடித்து விசாரிக்க கொண்டு சென்றான் அவர்களின் காரியாலத்திற்கு.

 

அங்கு ஏற்கனவே  என் நண்பர்கள் அங்க கோழியை குந்த வைச்சது போல இருக்க கண்கள் பேசின ஆளாளுக்கு சாத்திரிக்கானுகள் என்பது ஆட்களை பார்க்கவும் தெரிந்துகொண்டேன் விசாரிக்க தொடங்க நாங்கள் சொந்த காரங்கள் வீட்டுக்கு வந்தோம் ஆனால் வழி தெரியவில்லை அதனாலதான் சுற்றி கொண்டிருந்தோம் என்று சொல்லியும் மருதானையில தங்கியிருந்தோம் என்று சொல்ல விடுதிக்கு வந்து விசாரித்து விட்டு  விட்டு  சரி நீங்க ஊருக்கு போங்க என்று சொல்லி எச்சரித்து விட்டான் . தப்பினோம் சாமி என்று  ஊருக்கு வந்து சேர வீட்டில் மாமாவும் அம்மாவும் எனக்காக காத்திருந்தனர் எங்கே போன நீ என்று விசாரிக்கும் பொழுது மாமாவின் கைகள் என்னை அடிக்க ஆரம்பிக்க அம்மாவின் கேள்விகள் ஒவ்வொன்றும் நான் செய்த தவறுகள் ஒவ்வொன்றையும்  பக்கத்தில் இருந்து பார்த்தவர் போல கேட்க என்னை என்னால் பார்க்க முடியாமல் மாமாவுக்கு வீட்டு மூலையில் இருந்த தடியால் ஒன்றை போட மண்டை கிழிந்தது பதினாறு தையல்  உடனே ஆஸ்பத்திரி பொலிஸ் முறைப்பாடு என ஆரம்பித்து  அம்மாவோ பொலிஸ் முறப்பாட்டை சமாளிக்க பார்க்க மாமா விட வில்லை நீதிமன்றதுக்கு சென்றது வழக்கு.  என்னை சிறுவர்  சீர்திருத்த பள்ளியில் சேர்க்க ஆணையிட்டார்  நீதிபதி காரணம் நான் மாணவன் என்ற படியால் .

 

அப்போதுதான் எனக்கு புரிந்து கொண்டது நாம் எங்கு சென்று தவறு செய்தாலும் அதை கண்டு கொள்ளும் கண்கள் உண்டு என்பதை   . அங்கே சீர்திருத்த பள்ளி என்பது கவுன்சிலிங் கோம்  அங்கே ஒவ்வொரு மதத்துக்கும் உரிய பெரியவர்கள் வந்து உபதேசம் செய்வார்கள் எனக்கு அது பிடிக்காது அங்கும் தனிமை என்னை நானே திருத்தி கொள்ள வேணும் என்பதை முடிவு செய்தேன்  மனநலம் பாதிக்கப்படவன் போல நடிக்கலானேன் அப்போதுதான் ஒரு கிறிஸ்தவ பாதரியார் வந்தார் அவரோ மனநலம் பாதிக்கப்பட்டவர்களை தனியாக வைத்து பராமரிப்பவர்  அவரிடம் நான் உன்மையை சொல்ல அதாவது எனக்கு இந்த உலகத்தில் வாழ பிடிக்க வில்லை எப்படியாவது என்னை உங்க இடத்துக்கு அழைத்து செல்லுங்கள் என்றேன் அவர் மறுத்து விட்டு பின்னர் சரி அப்படியானால் நீ வாழ்க்கை பூரகவும் நடிப்பாயா எனக்கேட்க இல்லை ஐயா எனக்கு எப்ப வாழ பிடிக்கிறதோ அப்போது நான்  தெளிந்தவன் போல விலகிவிடுவேன் என்றேன் அன்று சீர்திருத்த பள்ளியில் இருந்து என்னை பைத்தியம் போல என்னை கட்டி கூட்டி சென்றனர் அங்கே  நான் உள் செல்ல என்னை எல்லா பைத்தியங்களும் சேர்ந்து என்னை பார்த்து பைத்தியம் பைத்தியம் என்றது எனக்கு சிரிப்பதா அழுவதா என்பது தெரியவில்லை  இப்படி நாட்கள் சென்றன அந்த வாழ்க்கை பழகி கொண்டது மனதில் வஞ்சகம் இல்லாத ,அடுத்தவனுக்கு தீங்கு செய்ய நினைக்காத மனங்கள் ,அடுத்தவன் பொருளுக்கு ஆசைப்படாத மனிதர்கள்  அவர்களுக்கென ஒரு தனி உலகம்  தனி வாழ்க்கை நடத்தும் மனிதர்கள் இவர்களை பார்த்து பைத்தியம் என்று சொல்பவர்களை என்னவென்று சொல்வது  இந்த உலகத்தில்.

 

எனக்கு இந்த வாழ்க்கை மிக பிடித்தது என் அம்மாவும் அடிக்கடி வந்து பார்த்து செல்வார் இதே பாசத்தை ஆரம்பத்தில் என்னிடம் நீங்கள் காட்டியிருந்தால் நான் இப்படியிருந்திருப்பேனா என்றும் கேள்வி எழும் ஆனால்  என் சுய  சொந்த புத்தி எங்கே சென்றது என்றும் யோசித்துக்கொண்டிருக்கிறேன்.

 

சில நடந்த சம்பவங்களை வைத்து கற்பனையாக எழுதினேன்

  • கருத்துக்கள உறவுகள்

நீண்ட நாட்களின் பின்னர் முனிவர் ஜீயை கதையுடன் காண்பதில் மகிழ்ச்சி. :)

  • கருத்துக்கள உறவுகள்

 மனித வாழ்க்கைக்கு தேவையான மூன்று.......மண்,பெண்(ஆண்)பொன் ....மீண்டும் ஜீயை காண்பதில் மகிழ்ச்சி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் நெடுக்ஸ் ,புத்தன் நான் நலம் நீங்கள் நலமா யாழில் பழைய ஆட்கள் வாரது குறைவு போல
நான் எழுதுவது குறைவு நேரம் இருக்கிறது அனால் எழுத வசதிகள் இன்னும் கிட்டவில்லை எழுதுவேன் யாழில்

ஒரு பதிவுக்கு பின்னூட்டல் இடுவது என்பது யாழில் குறைந்து கொண்டு போகிறது உறுப்பினர்கள் எந்த பின்னூட்டமாவது போட வேண்டும் அப்பதான் எழுத்தாளைனை ஊக்குவிக்கும் அது யாழ் இணையத்தில் குறைந்து கொண்டு போவதை காண முடிகிறது.:unsure:

  • கருத்துக்கள உறவுகள்

 

ஒரு பதிவுக்கு பின்னூட்டல் இடுவது என்பது யாழில் குறைந்து கொண்டு போகிறது உறுப்பினர்கள் எந்த பின்னூட்டமாவது போட வேண்டும் அப்பதான் எழுத்தாளைனை ஊக்குவிக்கும் அது யாழ் இணையத்தில் குறைந்து கொண்டு போவதை காண முடிகிறது.:unsure:

நீங்கள் சொல்வதில் உண்மை உண்டு......ஒரு எழுத்தானை ஊக்குவிப்பது பாராட்டும், பச்சைகளும் தான்.......

  • கருத்துக்கள உறவுகள்

அண்மையில் ஒரு குறும்படம் பார்த்தேன்

தன்னைச்சுற்றி  நடக்கும் நிகழ்வுகளால் மனமுடைந்த குழந்தை

தாயின் கருவறையை நிலத்தில் கீறி

அதற்குள் படுத்து உறங்கும்.

அதனைப்போன்று தான் உங்களது கருவும் உள்ளது...

சமுதாயத்தில் பல காவாலிகள்  உருவாகுவதற்கு அவர்களது பெற்றோரது பொறுப்பற்ற நடத்தைகளே காரணம்...

ஆனால் அது சமுதாயத்துக்கு தரும் இன்னல்கள் கொஞ்சநஞ்சமல்ல..

ஆகக்குறைந்தது இவ்வாறானவர்கள்

பிள்ளைகளைப்பெறாதிருப்பதே அவர்களது வீட்டிற்கும் நாட்டிற்கும் உலகுக்கும் செய்யும் பெரிய நல்லகாரியமாகும்..

 

நன்றி  முனிவர்

கதைக்கும் நேரத்துக்கும்

தொடருங்கள்....

  • 1 month later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி குகதாசன் அண்ணை உங்கள் கருத்துக்கும்

  • கருத்துக்கள உறவுகள்

கதை நன்றாகப் போனது...! ஆனால் பொடியள்தான் பாவம், கடசியில தூளும் கிடைக்கல்ல , பொண்ணும் கிடைக்கல்ல...! :)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இன்றுதான் உங்கள் கதை என்கண்ணில் பட்டது முனிவர் ஜீ........உண்மையையும் கற்பனையையும் கலந்த கதை நல்ல கதை. தொடருங்கள். "பைத்தியம்" நல்ல தலைப்பு.:)

  • 4 months later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி தாத்தா 

  • கருத்துக்கள உறவுகள்

நன்றாக இருக்கிறது கதை

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

நன்றாக இருக்கிறது கதை

நன்றி அக்கா இனி யாழ் இணையத்தில் தொடர்ந்து இருப்பேன்

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, முனிவர் ஜீ said:

நன்றி அக்கா இனி யாழ் இணையத்தில் தொடர்ந்து இருப்பேன்

அப்போ

இதுவரை.....??

  • கருத்துக்கள உறவுகள்

இன்றுதான் கதையை படிக்க முடிந்தது, நன்றாக இருக்கிறது, பெற்றவா்கள் விடும் தவறுகளுக்கு பிள்ளைகள் பலியாவதை பல இடங்களில் காணக்கூடியதாய் உள்ளது, ஆனாலும் தற்கொலை செய்த தந்தையை மன்னிக்க முடியாது, பாராட்டுக்கள் முனிவா்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, விசுகு said:

அப்போ

இதுவரை.....??

அண்ணா எழுத வசதி இல்லாமல் தான் தொடர்ந்து இணைந்து கொள்ள முடியாமல் போனது இனி வந்துட்டம்ல??

1 hour ago, Kavallur Kanmani said:

இன்றுதான் கதையை படிக்க முடிந்தது, நன்றாக இருக்கிறது, பெற்றவா்கள் விடும் தவறுகளுக்கு பிள்ளைகள் பலியாவதை பல இடங்களில் காணக்கூடியதாய் உள்ளது, ஆனாலும் தற்கொலை செய்த தந்தையை மன்னிக்க முடியாது, பாராட்டுக்கள் முனிவா்

நன்றி கண்மணி அக்கா நடந்த சில சம்பவங்களை வைத்து எழுதியது தான் இந்த கதை

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் முனிவர் ஜீ!

உங்கள் கதையைத் திரும்பத் திரும்ப வாசித்தேன்!

எனக்கென்னவோ வாழ்க்கை என்பது ஒரு நேர் கோட்டில் செல்வது போல இருப்பதில் உடன்பாடு இல்லை!

உங்கள் கதையில் வரும் சம்பவங்கள் தான்.. உண்மையில் வாழ்க்கை என்று நினைக்கிறேன்!

துயரமான சம்பவங்களும், அனுபவங்களுமே உங்களை ஒரு முழுமையான மனிதனாக வடிவமைக்கின்றன!

ஒன்றை அனுபவித்துப் பார்க்க வேண்டும் என்னும் ஆசை தோன்றும் போது.. அதை அனுபவித்து விட்டு நகர்ந்து செல்வதே வாழ்க்கை என நான் கருதுகின்றேன்!

இல்லாது விட்டால்.. அந்த ஆசை.. ஒரு ஏக்கமாக உருவெடுக்கின்றது... அதுவே பின்னர் கொலை, கொள்ளை, பாலியல் வன்புணர்வு என்று பிற்காலத்தில் விளைவுகளை உருவாக்குகின்றது!

அத்துடன்.. இப்படியான 'ஒறுப்புகள்' உங்களை நீங்களே.. ஒரு அவதார் நிலைக்கு உயர்த்தும் சந்தர்ப்பங்களையும் ஏற்படுத்தும்!

என்னைப் பொறுத்த வரையில் உங்கள் கதை ஒரு நல்ல கதை ஒன்றை வாசித்த உணர்வை ஏற்படுத்தியது!

தொடர்ந்து எழுதுங்கள்!

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி புங்கையூரான்

திருப்தி என்பது மனிதனுக்கு இல்லை தானே அது இன்னும் அதிகரிப்பதால்தான் ஆயிரம் பிரச்சனைகள்  வாழ்வில்

ஒரு சின்ன தவறு தான் ஒரு சிலருக்கு வாழ்க்கை பாதையை மாற்றி அமைக்கிறது. 

தவறுகளை திருத்திகொள்வோமாக இருந்தால் வாழலாம் வையகத்தில் நல்ல மனிதனாக

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.