Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முஸ்லிம் மக்களுக்கு உதவ காத்திருக்கிறோம்: சம்பந்தன் உறுதி

Featured Replies

தமிழ், முஸ்லிம் மக்­களின் உறவு பலப்­ப­டுத்­தப்­பட வேண்டும். அதற்­காக நாங்கள் முஸ்லிம் மக்­க­ளுக்கு உதவ காத்­தி­ருக்­கிறோம். நடை­பெ­ற­வுள்ள தேர்­தலின் பின் நியா­ய­மா­ன­தொரு தீர்வு ஏற்­ப­டத்தான் போகின்­றது. ஆகவே, நீங்கள் எம்­முடன் இணைந்­துதான் ஆக வேண்டும்.எனவே தான் தமிழ், முஸ்லிம் உறவு பல­மாக்­கப்­பட
வேண்­டு­மென்­பதில் நாம் கண்ணும் கருத்­து­மாக இருக்­கின்றோம். இது எமது எதிர்­பார்ப்பு, என்று தமிழ் தேசியக் கூட்ட­மைப்பின் தலைவர் இரா.சம்­பந்தன் தெரிவித்தார்.TNA_17.jpg

மூதூர் முஸ்லிம் பிர­மு­கர்கள் மற்றும் புத்­தி­ஜீ­வி­க­ளுக்கும் சம்­பந்­த­னுக்­கு­மி­டை­யி­லான சந்­திப்­பொன்று அவரின் இல்­லத்தில் கடந்த வியாழன் மாலை நடை­பெற்­றது. இதில் கருத்து வெ ளியிடுகையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

நூற்றுக் கணக்­கான முஸ்லிம் பிர­மு­கர்கள் உள்ளிட்ட பலர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர். இரா. சம்­பந்தன் நிகழ்வில் தொடர்ந்து கருத்துத் தெரி­விக்­கையில்,
திரு­கோ­ண­மலை மாவட்ட முஸ்லிம் மக்கள் இந்த தேர்தல் காலத்தில் தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பை விசு­வா­சிக்கும் நல்­லெண்­ணத்­துடன் நாடி­வந்­தி­ருப்­ப­தை­யிட்டு தமிழ் மகன் என்ற வகையில் நான் மட்­டற்ற மகிழ்ச்­சி­ய­டை­கிறேன். உங்கள் வர­வினால் தமிழ் முஸ்லிம் மக்­களின் உற­வுக்­கான புதிய பாலம் கட்­டி­யெ­ழுப்­பப்­பட வேண்டும். தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பை ஆத­ரிக்கும் ஆர்­வத்­து­டனும் தீவி­ரத்­து­டனும் நீங்கள் வந்­தி­ருப்­பது தமிழ் முஸ்லிம் உறவில் இம்­மா­வட்­டத்­தி­லி­ருந்து ஒரு புதிய அத்­தி­யாயம் தொடக்க பட போகி­றது என்பதைக் காட்டுகின்றது.

தந்தை செல்­வாவின் பாரம்­ப­ரி­யத்தில் நான் வளர்ந்­தவன். அதனால் முஸ்லிம் தமிழ் உறவை நேசிப்­பவன். நீங்கள் பல்­வேறு வாக்­கு­று­தி­களை கோரிக்­கை­யாக்­கு­கின்­றீர்கள். உங்கள் கோரிக்­கைக்கு அமைய நான் வாக்­கு­று­தி­ய­ளித்தால் அதை நான் நிறை­வேற்ற வேண்டும். எக்­கா­ரணம் கொண்டும் என்­னு­டைய வாக்­கு­று­தியில் பிழை­யேற்­படக் கூடாது. நான் சில விட­யங்கள் பற்றி சிந்­தித்­தி­ருக்­கின்றேன்.

தேசியப் பட்­டி­யலில் மூதூ­ருக்கு ஒரு பிர­தி­நி­தித்­து­வத்தை வழங்க நான் விரும்­பி­னாலும் கூட அது­காலம் கடந்­து­விட்­டது. சில­வே­ளை­களில் இச்­சந்­திப்பு முந்­தி­யி­ருந்தால் நான் அது பற்றி கவனம் செலுத்த வாய்ப்­பி­ருந்­தி­ருக்கும். இருந்த போதிலும் இச்­சந்­திப்­பினால் ஒரு வழி­வகை கிடைக்­குமா? என தேட முயற்­சிக்­கின்றேன்.

எனது எதிர்­பார்ப்பானது இப்­பா­ரா­ளு­மன்ற தேர்­தலில் நாம் பெறக் கூடிய வாக்கு வீதம் நிச்­ச­ய­மாக அதிகரிக்கும். 2004 ஆண்டு தேர்­தலில் 69 ஆயிரம் வாக்­கு­களைப் பெற்­றி­ருந்தோம். அதை­விட இன்று திரு­மலை மாவட்ட தமிழ் மக்கள் மத்­தியில் ஒரு உற்­சா­க­முண்டு. விஷே­ட­மாக ராஜபக் ஷவின் தோல்­விக்கு பிறகு இந்­நிலை ஏற்­பட்­டுள்­ளது.

இன்று எமது மக்­க­ளிடம் ஒரு எதிர்­பார்ப்­பி­ருக்­கி­றது. நாம் நல்­ல­தொரு மாற்­றத்தை அடைவோம். என்னைப் பொறுத்­த­வரை அது­வல்ல முக்­கியம். முக்­கி­ய­மா­னது தமிழ் முஸ்லிம் உற­வாகும். இரு சமூ­கங்களுக்கிடையில் பால­மொன்று கட்­டி­யெ­ழுப்­பப்­பட வேண்டும். இது­வொரு நல்ல ஆரம்பம். நல்ல சந்­தர்ப்பம். அதை நிலை நிறுத்­து­வ­தற்கு நாம் முயற்­சிக்­கின்றோம். இது ஒரு புரட்­சி­க­ர­மான விடயம். எனவே உங்­க­ளது மன­மாற்­றத்தை நாம் வர­வேற்­கின்றோம்.

நான் கடந்­த­வாரம் திரு­கோ­ண­ம­லையின் மூன்­றா­வது ஆசனம் பற்றி பேசி­யது கவ­லை­யீ­ன­மாக அல்ல. எனது கணிப்பு முஸ்லிம் மக்கள் எம்மை ஆத­ரிப்­பதன் மூல­மாக 15 ஆயிரம் வாக்­கு­க­ளுக்கு மேல் எமக்கு அளிப்பாராக இருந்தால் மூன்றாம் இடத்தை நாம் கைப்­பற்­று­வது முடி­யாத ஒரு­வி­ட­ய­மல்ல. எனவே முஸ்லிம் மக்­களின் கணி­ச­மான வாக்கு எமக்கு கிடைக்­கு­மாயின் இரு ஆச­னத்­துடன் போனஸ் ஆச­னமும் எமக்கே கிடைக்கும் வாய்ப்­புண்டு.

நடை­பெ­ற­வுள்ள தேர்­தலின் பின் நியா­ய­மா­ன­தொரு தீர்வு ஏற்­ப­டத்தான் போகின்­றது. ஆகவே நீங்கள் எம்­முடன் இணைந்­துதான் ஆக­வேண்டும். எனவே தான் தமிழ் முஸ்லிம் உறவு பல­மாக்­கப்­பட வேண்­டு­மென்­பதில் நாம் கண்ணும் கருத்­து­மாக இருக்­கின்றோம்.

இது எமது எதிர்­பார்ப்பு, இலக்கு. இன்று இந்த உறவை கட்­டி­யெ­ழுப்பும் நல்ல நோக்­கத்­துடன் இன்று வந்­தி­ருக்­கி­றீர்கள். என்னால் இயன்ற காரி­யங்­களை இதற்­காக நான் செய்வேன். அதில் நீங்கள் சிறி­த­ளவும் சந்­தேகம் கொள்ள வேண்­டி­ய­தில்லை. இந்த சந்­திப்பின் பின் இரா.சம்­பந்தன் அவர்கள் ஊட­கங்­க­ளுக்கு கருத்துத் தெரி­விக்­கையில், த.தே.கூட்­ட­மைப்பின் முக்­கி­யஸ்­தர்­க­ளுக்கும் மூதூர் முஸ்லிம் பிர­மு­கர்­க­ளுக்­கு­மி­டையில் ஓர் சந்­திப்பு இடம்­பெற்­றது. சகல விட­யங்­க­ளையும் நாம் மனம் திறந்து பேசி­யுள்ளோம். நல்ல முடி­வுகள் எடுக்­கப்­ப­டு­மென்று நம்­பிக்கை எமக்­குண்டு என்றார்.

இளைஞன் கருத்து
இதேவேளை இந்த சந்திப்பில் இடை நடுவில் கருத்து தெரி­வித்த ஒரு முஸ்லிம் இளைஞன் குறிப்பிடுகையில்
தந்தை செல்­வ­நா­யகம் என்­றெல்லாம் எமது மூத்­த­வர்கள் கூறு­வார்கள். நாங்கள் அவர் வாழ்ந்த காலத்தில் பிறக்­க­வில்லை. எங்கள் காலத்தில் ஒரு தந்தை வாழு­கின்றார் என்றால் அது ஐயா சம்­பந்­த­னா­கிய நீங்­கள்தான். 30 வரு­ட­காலம் நாங்கள் இடை­வெளி கொண்­ட­வர்­க­ளா­கவே இருந்­து­விட்டோம். தந்­தை­யா­கிய தங்கள் தலை­மையில் முஸ்லிம் தமிழ் உறவு மீண்டும் கட்­டி­யெ­ழுப்­பப்­பட வேண்டும் என்றார்.

திடீர் தௌபீக்
இது இவ்வாறு இருக்க கலந்துரையாடலில் திடீர் தெளபீக் கருத்து வெளியிடுகையில்,
ஐயா நீங்கள் உல­கத்­தி­லேயே சிறந்த சட்ட வல்­லுனர். வழியைத் தேடு­வது என்­பது உங்­க­ளுக்கு இல­கு­வான காரியம் என்று குறிப்பிட்டார்.
இதற்கு பதில் அளித்த இரா.சம்­பந்தன் குறிப்பிடுகையில்

தேர்­த­லின்பின் அர­சி­யலில் முழு­மை­யான மாற்றம் ஏற்­படும். மிகவும் கவ­ன­மான அதி­கா­ரப்­ப­கிர்வு கொண்­டு­வ­ரப்­படும். அதன்பின் நாங்கள் எமது மக்கள் பிரச்­சி­னைக்கு தீர்வு காண முயற்­சிப்போம். நான் உங்­க­ளிடம் ஒரு வினாவைக் கேட்­கிறேன். நீங்கள் பேரம் பேசு­கிறேன் என நினைத்துக் கொள்­ளக்­கூ­டாது. தங்கள் கோரிக்கை விட­யத்தில் நாம் ஒரு ஒழுங்­குக்கு வரு­வோ­மாக இருந்தால் அந்த ஒழுங்கின் மூல­மாக (ஒப்­பந்தம்) முஸ்லிம் மக்­க­ளு­டைய எத்­தனை வீத வாக்­குக்­களை த.தே.கூட்­ட­மைப்பு பெற­மு­டியும் என்று கலந்துரையாடலில் கேள்வி எழுப்பினார்.
இதற்குப் பதிலளித்த திடீர் தௌபீக் நீங்கள் இம்­மா­வட்­டத்தில் எத்­த­னை­யா­யிரம் வாக்­கு­களைப் பெறு­வீர்கள் என்று சம்பந்தனிடம் வினவினார்.

தௌபீக்கின் கேள்விக்கு சம்­பந்தன் பதிலளிக்கையில்;
நாங்கள் இம்­மா­வட்­டத்­தி­லுள்ள தமிழ் மக்­க­ளு­டைய வாக்­குக்­களை முழு­மை­யாகப் பெறுவோம். சுமார் 65 ஆயிரம் வாக்­கு­களை நாம் பெற முடியும். 2004 ஆம் ஆண்டு தேர்­தலில் 68 ஆயிரம் வாக்­குக்­களைப் பெற்றோம் என்று குறிப்பிட்டார்.

எனினும் இதன் போது குறிப்பிட்ட தௌபீக் 2012 மாகாண சபை தேர்­தலில் நீங்கள் 44 ஆயிரம் வாக்­கு­களைப் பெற்­றி­ருந்­தீர்களே என்று வினவினார்.

அதற்கு பதிலளித்த சம்­பந்தன்
அது ஒரு முழு­மை­யான வாக்­க­ளிப்பு வீத­மல்ல என்று குறிப்பிட்டார்.

இதன்போது முஸ்லிம் பிரதிநிதியொருவர் குறிப்பிடுகையில்,

2012 ஆண்டு தேர்­தலில் 44 ஆயிரம் வாக்குகள் த.தே.கூட்­ட­மைப்­புக்கு கிடைத்தன. 43 ஆயிரம் வாக்குகள் முஸ்லிம் காங்­கி­ர­ஸூக்கு கிடைத்தன. 24 ஆயிரம் வாக்குகள் ஐ.தே.கட்­சிக்கு கிடைத்தன. அந்த வகையில் தங்­க­ளிடம் 44 ஆயிரம் வாக்குகள் ஏல­வே­யுண்டு. ஆயிரம் வாக்குகள் சரா­ச­ரி­யாக கூடி­யி­ருக்­கலாம். 50 ஆயிரம் வாக்கு வங்கி உங்­க­ளி­ட­முண்டு. தற்­பொ­ழுது ஐ.தே.கட்­சியின் அலை அதி­க­ரித்­தி­ருப்­பதால் இந்­நி­லைமை ஆராய்ந்து பார்த்துக் கொள்­கிறோம் என்றார்.

இந்நிலையில் திடீர் தௌபீக் எம்.பி. குறிப்பிடுகையில்;
சம்­பந்தன் ஐயா மூதூரில் வந்து முஸ்லிம் மக்­க­ளுக்கு ஒரு வார்த்தை கூறினால் போதும். சுமார் 15 ஆயிரம் வாக்­குள்ள மூதூரில் நாங்கள் 10 ஆயிரம் வாக்குகளே த.தே.கூட்­ட­மைப்­புக்குப் பெற்­றுத்­த­ருவோம். நீங்கள் கூறப் போகின்ற வார்த்­தைகள் தான் திரு­கோ­ண­மலை மாவட்­டத்­தி­லுள்ள தமிழ் முஸ்லிம் உறவை உச்ச நிலை அடையச் செய்யும்.

கடந்த இரண்டு நாட்­க­ளாக பிர­தமர் ரணில் மற்றும் பல ஐ.தே.க முக்­கி­யஸ்­தர்கள் தொலை­பே­சியில் எம்மை அழைக்­கி­றார்கள். எம்­முடன் வாருங்கள் எம்.பி.பதவி தரு­கி­றோ­மென்று கூறுகின்றார்கள். எமது நோக்கம் அமைச்சர் பதவி பெறு­வ­தல்ல. முஸ்லிம் தமிழ் உறவை கட்­டி­யெ­ழுப்ப வேண்­டு­மென்ற ஆதங்­கத்­து­ட­னையே தங்­களை நாடி வந்­துள்ளோம். மூதூர் பிர­தேசம் முஸ்லிம் காங்­கி­ரஸின் செல்­வாக்­குக்கு உட்­பட்ட பிர­தேசம். ஆனால் இம்­முறை தேர்­தலில் நாங்கள் விரும்­பிய ஒரு வேட்­பா­ளரை அவர்கள் நிறுத்த விரும்­ப­வில்லை. எமது ஏகோ­பித்த முடிவை தலைவர் உதா­சீனம் செய்து விட்டார். கிண்­ணியா வேட்­பாளர் ஒரு­வரை வெல்­ல­வைக்க வேண்­டு­மென்­ப­தற்­கா­கவே மூதூர் மக்­களின் விரும்­பத்தை அவர் நிறை­வேற்­ற­வில்லை.

ஆகவே எமது முழு இலக்கு மூதூர் முஸ்லிம் காங்­கிரஸ் வேட்­பா­ளரை தோற்­க­டிப்­ப­தாகும். மூதூ­ருக்கு பிர­தி­நி­தித்­துவம் தர­மாட்டேன் என்று சொன்­ன­தற்­கு­ரிய காரணம் மூதூர்­மக்கள் வெற்றி பெற்று விடு­வார்கள் என்ற பயத்தின் கார­ண­மாகும். முஸ்லிம் காங்­கி­ர­ஸூக்­காக உயிர் தியாகம் செய்­த­வர்கள் மூதூர் மக்கள். அத்­த­கைய மக்­களின் கோரிக்கை இத்­தேர்­தலில் நிரா­க­ரிக்­கப்­பட்­டுள்­ளது. நீங்கள் ஒரு சிறிய வாக்­கு­றுதி தாருங்கள். முழு மூதூ­ரையும் கூட்­ட­மைப்பின் பக்கம் நாம் திருப்பிக் காட்­டுவோம். நீங்கள் மூதூரில் உள்ள ஒரு­வ­ருக்கு தேசி­யப்­பட்­டி­யலில் இடந்­த­ருவேன் என்று வாக்­கு­றுதி தாருங்கள், மாபெ­ரிய மேடை போட்டு அதில் வாக்­கா­ளர்­களைத் திருப்பிக் காட்­டுவோம். இதை நாம் கூறு­வது வாக்கு தரு­வ­தற்காக மட்டும் என்று கரு­த­வேண்டாம். தமிழ் முஸ்லிம் உறவை திரு­கோ­ண­மலை மாவட்­டத்­தி­லி­ருந்து ஆரம்­பிப்­ப­தற்கு இதை­யொரு நல்ல வாய்ப்­பாக பயன்­ப­டுத்­துவோம். மூன்று பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களை நீங்கள் இம்­மா­வட்­டத்­தி­லி­ருந்து பெற­மு­டியும்.

கிண்­ணியா பிர­தே­சத்தில் முஸ்லிம் காங்­கி­ர­ஸூக்கு மிக மோச­மான வீழ்ச்­சி­யொன்று ஏற்­பட்­டி­ருக்­கின்­றது. அம்­மக்கள் தற்­பொ­ழுது சிந்­திக்­கி­றார்கள். தங்­க­ளுக்­கென நல்­ல­தொரு தலை­மைத்­துவம் இல்­லை­யென்று இல்லை என்று கருதுகின்றனர். எனவே நல்­ல­தொரு முடிவை நாங்கள் உடன் எடுக்க வேண்­டு­ம் என்றார்.
கலந்துரையாடலில் த.தே.கூட்டமைப்பின் சார்பில் தலைவர் இரா.சம்பந்தனுடன் கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் எஸ்.தண்டாயுதபாணி, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் வேட்பாளருமான க.துரைரெட்ணசிங்கம் மற்றும் வேட்பாளர்களான க.கனகசிங்கம், க.ஜீவருபன் மற்றும் முன்னாள் நகரசபைத் தலைவர் க.செல்வராஜா, உபதலைவர் ஸ்ரீஸ்கந்தராஜா மற்றும் வாமதேவன், திருச்செல்வம், கிளைத் தலைவர் கே.சத்தியசீவராஜா ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

http://www.virakesari.lk/articles/2015/07/25/முஸ்லிம்-மக்­க­ளுக்கு-உதவ-காத்­தி­ருக்­கிறோம்-சம்பந்தன்-உறுதி

 

  • கருத்துக்கள உறவுகள்

சம்பந்தன் முசுலிம் மக்களுக்கு உதவக் காத்திருப்பதாக தலைப்புத் தெரிவிக்கிறது. ஆனால் சம்பந்தனுக்கு உதவ முசுலிம் மக்கள் காத்திருப்பது போன்ற கருத்துக்களையே இப்பதிவு அதிகம் வெளிப்படுத்தியிருப்பதாகத் தெரிகிறது. :(

 

  • கருத்துக்கள உறவுகள்

சம்பந்தன் முசுலிம் மக்களுக்கு உதவக் காத்திருப்பதாக தலைப்புத் தெரிவிக்கிறது. ஆனால் சம்பந்தனுக்கு உதவ முசுலிம் மக்கள் காத்திருப்பது போன்ற கருத்துக்களையே இப்பதிவு அதிகம் வெளிப்படுத்தியிருப்பதாகத் தெரிகிறது. :(

சம்பந்தரால் தமிழரிடையே சாணக்கியர் என பெயர் எடுக்கமுடியுமே ஒழிய

முசுலீம்களிடம் மண்டியிட மட்டுமே முடியும்..

மூஞ்சுறு தான் போகக் காணேல்லை விளக்கு மாத்தையும் இழுத்துக கொண்டு போச்சுதாம்....

  • கருத்துக்கள உறவுகள்

ஐயா தமிழ் மக்களுக்கே  உதவ கானோம் இதில முஸ்லீம் மக்களுக்கு உதவ போறாராம்......அவர்களுக்கு  உதவ நல்ல டமுஸ்லீம் தலைவர்கள் இருக்கிறார்கள்

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல விடயம் தமிழ் முஸ்லிம் உறவு திருமலையில் கட்டியெழுப்பப்பட்டு பலப்படுத்தப்படவேண்டும். 

இது இனவாதத்துடன் தொடர்புடைய கருத்து அல்ல. ஆனால் இன அபிமானத்துடன் எழுதும் கருத்து.

இன்றைய பாராளுமன்றத்தில் முஸ்லிம் மக்களை பிரதிநிதித்துவம் செய்ய 20 இற்கும் மேற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் இருக்கிறார்கள். அவர்களில் பலர் அமைச்சர்களாக இருக்கிறார்கள். அரசுடன் இருந்து கொண்டு தமது மக்களுக்கு பல வசதிகளை அவர்கள் செய்து கொடுத்துக் கொண்டும் இருக்கிறார்கள்.
வேலைவாயப்புகள் தொழில் தொடங்க வசதி பாடசாலை வைத்தியசாலை என பல அபிவிருத்திப் பணிகளை அவர்கள் மேற்கொண்டுள்ளார்கள்.
அது மட்டுமன்றி திருகோணமலை முஸ்லிம்களின் நலன்களைக் கவனிக்க கிழக்கு மாகாண சபையின் முதலமைச்சாரக ஒரு முஸ்லிமே இருக்கிறார்.

இந்த நிலையில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக இந்திய அரசின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்ட வீட்டுத்திட்டத்தின் வீடுகளைக் கூட அபகரித்து தமது மக்களுக்குக் கொடுத்ததான குற்றச்சாட்டுகளும் பரவலாக முன்வைக்கப்படுகிறது.

இந்த நிலையில் அபிவிருத்தி ரீதியாக மிகவும் பின்தங்கியுள்ள இனமாக தமிழினம் இருக்கிறது. இந்த நிலையில் அதிக பாராளுமன்ற உறுப்பினர்களைப் பெற்று அதனூடாக மக்களின் அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுக்க வேண்டிய தேவை இருக்கிறது. (அதனைச் செய்வார்களா என்பது வேறு விடயம்) எனவே கீடைக்கும் தேசியப் பட்டியல் ஆசனத்தையும் இழப்பது நன்மை பயக்காது.

தமிழ் மக்களை ஏமாற்றுவது போல முஸ்லிம்களையும் ஏமாற்றி வாக்குகளைப் பொறுக்க தெரிவிக்கப்பட்ட கருத்தாகவே இதனை நான் பார்க்கிறேன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இது தலைவரின் கடைசி தேர்தல். இந்தளவிற்கு  தன்னிலை தாழும் என மனிதன் நினைத்திருக்கமாட்டார் . தோல்வியை தவிர்பதர்க்கு , எத்தகைய வாக்குறிதிகளையும் விட்டுக்கொடுபுக்க்ளையும் செய்வதற்கு மனிதன் தயார். முஸ்லீம்கள், தங்கள் இனத்தை பிரநிதித்துவம் செய்யும் தம் கட்சியை விட, அதுவும் UNP உடன் சேர்ந்து போட்டி போடும் போது, இவருக்கு வாக்கு போடுவார்கள் என்று எதிர்பார்த்து. அந்த  அற்ப வாக்குகளுக்கா தமிழர்களின் உரிமைகளை இழப்பது இன்னுமொரு பியசெவ்னாவைத்தான் தரும் . 

  • கருத்துக்கள உறவுகள்

உவர் உதைச் சொல்லுறாரு. இதே ஊரில ஹக்கீம் பேசும் போது வேறு மாதிரி சொன்னாரே...:innocent:

  • கருத்துக்கள உறவுகள்

தமிழன் வைரம்போன்றவன். வைரத்தை வைரத்தால்தான் வெட்டமுடியும். தமிழனைத் தமிழன்தான் அழிக்கமுடியும்.

  • கருத்துக்கள உறவுகள்

சரி பிழைகளுக்கு அப்பால் முஸ்லீம்களிடம் இணக்கமாய் போக வேண்டிய தேவையின் தாற்பரியம், யாழ்பாணத்தாருக்கு புரிய நியாயமில்லைத் தான்.

உங்களைச் சொல்லிக் குற்றமில்லை.

மணி,

நீங்கள் கூறிய அத்தனையும் ஒரு தமிழ் எம்பி செய்தால் - நீங்களே துரோகிப் பட்டம் கொடுத்து கழு ஏற்றுவீர்களே.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
முஸ்லிம் மக்களுக்கு உதவ காத்திருக்கிறோம்: சம்பந்தன் உறுதி

இவர் என்ன தினாவெட்டிலை / என்னத்தை வைச்சு முஸ்லீம்களுக்கு உதவுவம் எண்டு சொல்லுறார்????? அவர்கள் சகல பக்கத்தாலையும் ஸ்ரெடியாய்த்தானே இருக்கினம்!!

சரி பிழைகளுக்கு அப்பால் முஸ்லீம்களிடம் இணக்கமாய் போக வேண்டிய தேவையின் தாற்பரியம், யாழ்பாணத்தாருக்கு புரிய நியாயமில்லைத் தான்.

உங்களைச் சொல்லிக் குற்றமில்லை.

மணி,

நீங்கள் கூறிய அத்தனையும் ஒரு தமிழ் எம்பி செய்தால் - நீங்களே துரோகிப் பட்டம் கொடுத்து கழு ஏற்றுவீர்களே.

தவறு கோசான். 

முதலாவதாக இவற்றைச் செய்தவர்களுக்கு முதலில் துரொகிப் பட்டம் சூட்டியவர்கள் அமிர்தலிங்கம் சிவசிதம்பரம் சம்பந்தன் மாவை சேனாதிராஜா சூசைதாசன் உள்ளிட்டவர்களே 

துரையப்பாவிற்கு பொத்துவில் கனகரத்தினத்திற்கு என்று இந்தப் பட்டியல் நீளும்

அடுத்ததாக அரசாங்கத்தை எதிர்த்து சர்வதேசத்தின் உதவியுடன் உரிமைகளைப் பெறப் போகிறோமா அல்லது அரசுடன் இணங்கி இணக்க அரசியல் செய்யப் போகிறோமா என்பதில் மதில் மே;ல பூனையாகவே தமிழரசுக் கட்சியினர் இருக்கிறார்கள். இனிமேல் அமையும் அரசாங்கத்துடனும் இணையப் போவதில்லை அமைச்சர் பதவிகளைப் பெறப் பொவதில்லை என்பதை மேடைகளில் சொல்கிறார்கள்.

ஆனால் இனப்பிரச்சினை விடயத்தில் அரசுக்கு அழுத்தம் குடுக்கவும் தயாராயில்லை. உங்களை நம்புகிறோம் என்பதைத் தான் திரும்பத் திரும்பக் கூறுகிறார்கள். சிங்கள தொலைக்காட்சியான சிரச தொலைக்காட்சிக்கு வந்த சுமந்திரன் நல்லாட்சியையும் மைத்திரிபால சேனவையும் தாங்கள் முழுவதுமாக நம்புவதாக ஒரு பத்துத் தடவையாவது குறிப்பிட்டிரு;பபார்.

இந்த இரண்டும் கெட்டான் போக்கை விட்டு விட்டு நாமத் அரசுடன் இணங்கி அரசியல் செய்யப் போகிறோமா அல்லது சர்வதேசத்திற்கு எமது பிரச்சினையைக் கொண்டு செல்லப் போகிறோமா என சரியான முடிவொன்றை எடுத்து அதை மக்களிடம் சொல்லி வாக்குக் கேட்டு வெற்றி பெற்றபின் அதைப் பின்பற்றுவதே சரியான அணுகுமுறையாக இருக்கும்.

ஆனாலும் சோறா சுதந்திரமா என்று மக்களையும் இளைஞர்களையும் உசுப்பி விட்டு 1977 இல் செய்த  அரசியலையே தமிழரசுக் கட்சியினர் அதே அரசியலைத் தான் தொடரப் போகின்றனர் போலத் தெரிகிறது.

  • கருத்துக்கள உறவுகள்
 

சரி பிழைகளுக்கு அப்பால் முஸ்லீம்களிடம் இணக்கமாய் போக வேண்டிய தேவையின் தாற்பரியம், யாழ்பாணத்தாருக்கு புரிய நியாயமில்லைத் தான்.

அந்த கருத்துக்கும் யாழ்ப்பாணத்தருக்கும் என்ன சம்பந்தம்.......

Edited by putthan

  • கருத்துக்கள உறவுகள்

முஸ்லீம்கள் யாழ்பாணத்தில் ஒரு பாதிப்பை ஏற்படுத்தும் சக்தி அல்ல. ஆகவே யாழ்பாணத்தை மட்டும் மனதில் நிறுத்தி தீர்வை தேடுவோர், எப்போதும் முஸ்லீம்களை புறம்தள்ளியே யோசிப்பர்.

ஆனால் மன்னார், கிழக்கில் அப்படி அல்ல. கிழக்கில் இனப்பரம்பல் மூவினத்துகுமிடையே சரிசமனாக பிரிகிறது. அங்கே முஸ்லீம்கள் சிங்களவருடன் சேர்ந்தால் தமிழர்தான் சிறுபான்மை.

ஆகவே முஸ்லீம்களை சரிக்கட்டி போக வேண்டிய தேவை கிழக்கில் தவிர்க முடியாதது.

இந்த சமன்பாடு பல யாழ்பாணத்த்வருக்கு உறைப்பதில்லை என்பது மேலே அவர்களின் கருத்துகளை வாசித்தாலே புரியும்.

அண்ணை கிழக்கில தமிழருக்கு சிங்களவனை விட உந்த முசுலீம்கள் மீது தான் அதிகம் கோபம்....அதுவும் மூதூர் குறிப்பிட்ட காலத்திற்குள் முசுலீம்கள் கைபட்டிய ஊர்

முசுலீம்களை சம்பந்தருடன் உறவு கொண்டாட வைத்து தமிழரின் வாக்கை UNPக்கு பெறுவதே குள்ளநரி ரணிலின் திட்டம்....

அதுவிளங்காமல் தேவையில்லாத விண்ணானங்கள் கதைச்சு பலனில்லை

தமிழருக்கும் முசுலீம்களுக்கும் ஒருபோதும் ஒட்டாது என்பதே நிஜம்

இதில பெரிய காமடி என்னவென்றால்....சந்திக்க போன முசுலீமுகள் கூறியிருக்கினம...தங்களுக்கு பொன் பொருளைவிட தமிழர் முசுலீம் ஒற்றுமை தான் முக்கியமாம்.......நம்பிட்டம்  

  • கருத்துக்கள உறவுகள்

அங்கே முஸ்லீம்கள் சிங்களவருடன் சேர்ந்தால் தமிழர்தான் சிறுபான்மை.

ஆகவே முஸ்லீம்களை சரிக்கட்டி போக வேண்டிய தேவை கிழக்கில் தவிர்க முடியாதது.

இந்த சமன்பாடு பல யாழ்பாணத்த்வருக்கு உறைப்பதில்லை என்பது மேலே அவர்களின் கருத்துகளை வாசித்தாலே புரியும்.

முஸ்லீம்கள் எப்பொழுதும் சிங்களவருடன் தான் சேர்வார்கள் இதில் எந்த மாற்றுக்கருத்தும் எனக்கு இல்லை....அவர்கள் அப்படி சேர்ந்தால்தான் அவர்களுக்கு நன்மை.கடந்த 50 வருடத்தில்  அவர்களின் அரசியல் பாதை மூலம் அடைந்த நன்மைகள் பல ....தமிழர்களுடன் சேர்ந்து பேரம் பேசினார்கள் என்றால் அவர்களுக்கு ஒன்றும் கிடைக்க போவதில்லை .......தனித்து நின்று முஸ்லிம் தேசியத்தை அவர்கள் நிலைநாட்டவேண்டும்...இதற்கு சம்பந்தனும் தமிழ் தேசியமும் தடையாக இருக்க கூடாது....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.