Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அண்ணல் கலாம் மறைந்தார்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணல் கலாம் மறைந்தார் அவனி அழுகிறது.

காலா கலாமைக் கவர்ந்தது ஏன் எங்களுக்கம்
மேலாம் அறிஞனினி வேண்டாமென்றெண்ணினையோ!

கண்ணிழந்த காலன் கலாமை எடுத்து விட்டான்
அண்ணலை எங்கள் அரிய தமிழுறவை
எண்ணியிருந்து எண்பத்தி மூன்றகவை
காணப்பறித்த தறு கண்ணாளன் தோற்கானா?

எத்தனை பேர் இன்னும் இப்புவியில் தொண்ணூறை
தாண்டியும் வாழ்கின்றார் தறி கெட்ட காலனுக்கேன்
இத்தனை வன்மம் எம் தமிழத்தாய் பெற்றெடுத்த
சொத்தினை எங்கள் சோதியைப் போயேன் பறித்தான்

அறிவியலே உந்தன் ஆற்றல் இதுதானா?
குறிவைத்து இந்தக் குவலயத்தில் நல்லோரை
தட்டிப் பறிக்கும் தரம் பாராக் காலனை ஏன்
எட்டியுதைக்க இன்னும் வழிகாணாய்

ஐஸாக் நியூட்டனைப்போல் ஐன்ஸ்டீன் அறிஞனைப்போல்
அறிவியலுக்காய் வாழ்ந்த அப்துல் கலாம் எங்கள்
அன்னை தமிழின் அருமை மகனன்றோ!

ஏன் தமிழர் வாழ்வில் இடிவிழுத்தப் பார்த்திருந்தாய்?

குரு ஆனை மேலாம் குறளை மனதிருத்தி
அருவாம் திருவருளை அன்புடனே நேசித்து

ஆக்கம் பல கண்ட அப்துல் கலாம் என்றும்
நீக்கமற நிறைந்தெம் நெஞ்சில் நிலை நிற்பார்.

அன்னவரின் ஆன்மா அண்டவனின் சன்னிதியில்
உன்னதமாம் சுவன ஒளியில் கலக்கட்டும்.

ஈஸ்வர அல்லா தேரே நாம் !
சப்கோ சன்மதி தே பகவான் !

Edited by karu
Corrected a spelling mistake

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அப்துல் கலாம் விடயத்தில் இந்தியர்கள் கவலைப்படுகிறார்கள் நியாயமிருக்கின்றது...ஒருசில நாடுகள் வருத்தத்தை தெரிவிக்குது அதிலையும் நியாயமிருக்குது.

ஆனால் எங்கடை டமிள் பேஷ்புக்கு சனமும் அனுதாபம் தெரிவிச்சு விழுந்து விழுந்து அழுகினம். கவிதை எல்லாம் எழுதுகினம்...கண்ணீர் வடிக்கினம்....எந்த விதத்திலை எங்களுக்கும் அவர் பெரியவர் ஆனார்?

காந்தி தாத்தா நேரு மாமாவை எல்லாம் பள்ளி பாடங்களிலும் பாலர் வகுப்பிலும் படித்து கையை சுட்டுக்கொண்டது போதும். :innocent:

அப்துல் கலாம் அவர்கள் தன்னடக்கத்திற்கு எடுத்துக்காட்டாக இருக்கலாம். தமிழனாக இருக்கலாம். 
ஆனால் அவர் கற்ற கல்வியை வைத்து மனிதனுக்கு அழிவைத்தரும் செயல்களை செய்தவர்.

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் கரு!

பொதுவாக.. இரங்கல் திரிகளில்... அவர்களுக்கெதிரான கருத்துக்களைத் தெரிவிப்பதில் எனக்கு உடன்பாடு இருந்ததில்லை!

எனினும்.. உங்கள் கவிதையை ஆழமாக வாசித்தேன்!

கல்வி.. மாண்பு.. போன்றவை மனிதகுலத்துக்கான சேவையாக அமையும் போதே.. அவை சிறப்படைகின்றன என்று நினைக்கிறேன்!

ஆபிரிக்க அடிமைகளின் விடுதலைக்கு வித்திட்ட ஆபிரகாம் லிங்கனும்....அனாதைகளின் அல்லல்களைத் துடைக்கத் தனது வாழ்வை அர்ப்பணித்த அன்னை திரேசா போன்றவர்களும் அதிகம் படித்தவர்கள் அல்ல! ஆயினும் அவர்களது மரணங்களுக்கு உலகம் கண்ணீர் சிந்தியது!

மகாத்மா காந்தியையும்... நேருவையும் .. இலங்கைத் தமிழர்கள் மதித்ததைப் போல யாருமே மதித்ததில்லை! காவோலையால் வேய்ந்த வீடுகளின், மண் சுவர்களின் ஆணிகளில் கூட அவர்களது படங்களே தொங்குவதைக் கண்டிருக்கிறேன்! 

ஆயினும்.. முள்ளி வாய்க்கால் சம்பவங்களின் பிறகு.. எதையுமே ஏற்றுக்கொள்ள முன்னர் ஆயிரம் கேள்விகள் மனதில் தோன்றுகின்றன!

மரணங்களுக்குள்ளும்.. மனிதத்தைத் தேடும் மனநிலையிலேயே இப்போது வாழ்கிறோம்!

அப்துல் கலாம் அவர்களுக்கு  ஆழ்ந்த அஞ்சலிகள்! 

Edited by புங்கையூரன்

  • கருத்துக்கள உறவுகள்

..ஆனால் எங்கடை டமிள் பேஷ்புக்கு சனமும் அனுதாபம் தெரிவிச்சு விழுந்து விழுந்து அழுகினம். கவிதை எல்லாம் எழுதுகினம்...கண்ணீர் வடிக்கினம்....எந்த விதத்திலை எங்களுக்கும் அவர் பெரியவர் ஆனார்?

..

அப்துல் கலாம் அவர்கள் தன்னடக்கத்திற்கு எடுத்துக்காட்டாக இருக்கலாம். தமிழனாக இருக்கலாம். 
ஆனால் அவர் கற்ற கல்வியை வைத்து மனிதனுக்கு அழிவைத்தரும் செயல்களை செய்தவர்.

great_5.gif

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

great_5.gif

அப்துல் கலாம் விடயத்தில் இந்தியர்கள் கவலைப்படுகிறார்கள் நியாயமிருக்கின்றது...ஒருசில நாடுகள் வருத்தத்தை தெரிவிக்குது அதிலையும் நியாயமிருக்குது.

ஆனால் எங்கடை டமிள் பேஷ்புக்கு சனமும் அனுதாபம் தெரிவிச்சு விழுந்து விழுந்து அழுகினம். கவிதை எல்லாம் எழுதுகினம்...கண்ணீர் வடிக்கினம்....எந்த விதத்திலை எங்களுக்கும் அவர் பெரியவர் ஆனார்?

காந்தி தாத்தா நேரு மாமாவை எல்லாம் பள்ளி பாடங்களிலும் பாலர் வகுப்பிலும் படித்து கையை சுட்டுக்கொண்டது போதும். :innocent:

அப்துல் கலாம் அவர்கள் தன்னடக்கத்திற்கு எடுத்துக்காட்டாக இருக்கலாம். தமிழனாக இருக்கலாம். 
ஆனால் அவர் கற்ற கல்வியை வைத்து மனிதனுக்கு அழிவைத்தரும் செயல்களை செய்தவர்.

என்னங்க எங்க ஊரு வாத்தியாரு செத்துப்போனாருண்ணு கவிதையெழுதப் போனா நீங்க ஏதோ பினாத்துறீங்க. நாங்க ஆறுகோடிப் பேருங்க கலாம் போயிட்டாருண்ணு கவலையில கெடக்கிறம் நீங்க வேற. 

ஒங்க காமண்டுகள பேஸ்புக்குலயும் போடுங்க.  அப்ப தெரியும். சும்மா குண்டுச் சட்டிக்குள்ள இருந்து குதிரையோட்டாதீங்க.

l ''இதுவரை எத்தனையே உயர் தொழில்நுட்ப கருவிகளை பல விஞ்ஞானிகளோடு இணைந்து நாட்டுக்காக தயாரித்துள்ளீர்கள்.. இந்தத் தயாரிப்புகளிலேயே உங்களுக்கு மிகவும் பிடித்தது எது, எதைத் தயாித்ததற்காக நீங்கள் மிக அதிகமாக பெருமை அடைந்தீர்கள்...''? ஒரு சந்திப்பில் இது டாக்டர் அப்துல் கலாமிடம் கேட்கப்பட்ட கேள்வி. அக்னி, பிருத்வி, த்ரிசூல், ஆகாஷ், நாக் உள்ளிட்ட ஏவுகணைகள், பிஎஸ்எல்வி, ஜிஎஸ்எல்வி ரக ராக்கெட்டுகள், அர்ஜூன் ராணுவ டாங்கிகள், எல்சிஏ போர் விமானங்கள், செயற்கைக் கோள்கள், அணு குண்டு.... என வகை வகையான ஆயுதங்களைத் தயாரித்தவரிடம் இருந்து நாம் என்ன பதிலை எதிர்பார்த்திருப்போம்? ஏவுகணை, அணு குண்டு என்பதைத் தானே.. ஆனால், கலாம் சொன்னார்.

.. ''நான் மிகப் பெருமையாக கருதுவது ஊனமுற்ற குழந்தைகள் பயன்படுத்த எடையில்லாத காலிபர் ஷூக்களைத் தயாரித்ததைத் தான்'' என்றார். போலியோவால் பாதிக்கப்பட்டவர்களுக்காக பயன்படுத்தப்பட்டு வந்த இரும்பு caliperகள் முன்பு மிக எடையுடன் இருந்தன. இந் நிலையில் ஏவுகணைகளின் எடையைக் குறைக்க கார்பன்- கார்பன் பாலிமர்கள் மற்றும் glass filled polypropylene என்ற ரசாயனம் கொண்ட பல பகுதியை கலாம் தலைமையிலான Defence research and development organisation (DRDO) விஞ்ஞானிகள் தயாரித்தனர். இந்த எடை குறைவான அதே நேரத்தில் மிக வலுவான இந்த கார்பன் பாலிமர் மெட்டீரியல்களைக் கொண்டு காலிப்பர் ஷூக்களைத் தயாரித்தால் ஊனமுற்ற குழந்தைகளுக்கு மிக உதவியாக இருக்குமே என்ற கலாமுக்கு யோசனை எழ, உடனே அது குறித்து ஹைதராபாத்தில் உள்ள நிஜாம் இன்ஸ்டியூட் ஆப் மெடிக்கல் சயின்சஸ் அமைப்பின் தலைவரான டாக்டர் நரேந்திரநாத்தைக் கூப்பிட்டுச் சொன்னார்.

அவரும் இந்த யோசனையை செயல்படுத்தலாம் என ஆர்வம் தெரிவிக்க, உடனடியாக மத்திய அரசிடம் பேசி டி.ஆர்.டி.ஓவிடம் இருந்த அந்தத் தொழில்நுட்பத்தை நிஜாம் இன்ஸ்டியூட்டுக்கு இலவசமாக வழங்கினார். கூடவே சில டிஆர்டிஓ விஞ்ஞானிகளையும் அங்கே அனுப்பி மருத்துவர்களுடன் இணைந்து அந்த காலிப்பர்களை வடிவமைக்க வைத்தார். இதையடுத்து மேலும் பல காலிப்பர்கள் தயாரிக்கும் நிறுவனங்களுக்கும் இந்தத் தொழில்நுட்பம் தரப்பட்டது. இதனால் இந்த காலிப்பர்களின் எடை 3 கிலோவில் இருந்து 300 கிராம் ஆனது. அதே நேரம் இது இரும்பை விட அதிக உறுதியானது. இப்போது பெரும்பாலான போலியோ பாதித்த குழந்தைகள் பயன்படுத்தும் இந்த காலிப்பர்கள் அக்னி ஏவுகணையின் முனைப் பகுதியில் பயன்படுத்தப்படும் அதே பொருளால் தான் செய்யப்படுகின்றன. நாட்டின் பாதுகாப்புக்காக உருவாக்கப்படும் ஆயுதங்களில் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பத்தை போலியோ தாக்குதலால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு தந்து காலிப்பர்களின் எடையைக் குறைத்து அந்தக் குழந்தைகளின் சிரிப்பில் பேரானந்தம் அடைந்த மனிதர் தான் அப்துல் கலாம். அதே போல இதயத்திலிருந்து ரத்தத்தை எடுத்துச் செல்லும் முக்கிய ரத்தக் குழாய்களில் ஏற்படும் அடைப்பை நீக்க உதவும் ஸ்டென்ட்களை இந்தியாவிலேயே மிகக் குறைந்த விலையில் தயாரிக்க வைத்தவரும் கலாம் தான். 1990களில் ஒரு ஸ்டென்ட்டின் விலை ரூ. 1.5 லட்சம் என்ற நிலை இருக்க, ஆயுத தயாரிப்புக்காக உருவாக்கப்பட்ட ஒரு தொழில்நுட்பம் மூலம் இதை மிகக் குறைத்த விலையில் தயாரிக்கலாமே என்ற யோசனையை ஹைதராபாத்தைச் சேர்ந்த கேர் குரூப் ஆப் ஹாஸ்பிடல்ஸ் தலைவர் டாக்டர் சோமராஜூவுடன் இணைந்து செயல்படுத்தினார் கலாம்.

இதன் மூலம் வெறும் ரூ. 10,000க்கு ஸ்டென்ட்டை உருவாக்கினார் கலாம். 'K-R stent' (Kalam-Raju-Stent) என அழைக்கப்படும் இந்த விலை குறைவான ஸ்டென்ட் மூலம் இப்போது நாட்டில் லட்சக்கணக்கான இதயங்கள் துடித்துக் கொண்டிருக்கின்றன. ஒடிஸ்ஸாவின் பாலாசூர் மாவட்டத்தை ஒட்டி வங்கக் கடலில் அமைந்துள்ள சிறிய தீவு வீலர் ஐலண்ட். நமது ஏவுகணைகளின் சோதனை நடப்பது இங்கே தான். இந்தத் தீவில் உள்ள டிஆர்டிஓ மையத்தில் தங்கியபடி விஞ்ஞானிகளுடன் இணைந்து ஏவுகணைகள் ஆராய்ச்சியில் ஈடுபடுவதில் கலாமுக்கு அலாதி பிரியம். இந்தத் தீவுக்கு ஏராளமான வகை குருவிகள் வந்து செல்வதை பார்த்த கலாம் அங்கே ஆயிரக்கணக்கான மரங்களை நட வைத்து தீவையே பச்சை பசேல் என்று மாற்றியும் காட்டினார். இப்போது அங்கு வழக்கத்தை விட அதிகமான குருவிகள் சத்தம். கலாம் அண்ட் டீம் உருவாக்கிய ஏவுகணைகளில் மிக மிக முக்கியமானது பிரமோஸ் ஏவுகணை. இந்திய- ரஷ்ய கூட்டுத் தயாரிப்பான இந்த ஏவுகணைக்கு இணையான ஏவுகணை இதுவரை இல்லை. ஏவுகணைகளில் இருவகை உண்டு. Cruise missile, Ballistic missile. க்ரூயிஸ் மிசைல்கள் குறைந்த தூரம் சென்று தாக்குபவை. புறப்பட்ட இடத்திலிருந்து குறி வைக்கப்பட்ட இடம் நோக்கி செல்பவை. இவற்றின் வேகம் குறைவு.

பாலிஸ்டிக் மிசைல்கள் நெடுந்தூரம் சென்று தாக்குபவை. முதலில் வானை நோக்கி எழும்பி, பூமிக்கு சில நூறு கி.மீ. தூரம் மேலே சென்று பின்னர் குறி வைக்கப்பட்ட இடம் நோக்கி அதி வேகத்தில் பாய்பவை. இவை கண்டம் விட்டு கண்டம் பாயும் ரகத்தை சேர்ந்தவை. ஆனால், பிரமோஸ் ஏவுகணை தான் உலகிலேயே மிக அதி வேகத்தில் செல்லக்கூடிய க்ரூயிஸ் மிசைல். 290 கி.மீ. தூரம் வரை சென்று தாக்கும் இந்த ஏவுகணை மணிக்கு 1225 கி.மீ. வேகத்தில் செல்லக் கூடியது. அதாவது 290 கி.மீ. தூரத்தை 15 நிமிடங்களில் சென்று தாக்கும். இந்த ஏவுகணையை வீழ்த்தக்கூடிய Anti-Missile defence system ஏதும் இதுவரை இல்லை என்பது இதன் சிறப்பம்சம். டாக்டர் அப்துல் கலாம் தலைமையில் டாக்டர் சிவதாணு பிள்ளை, ரஷ்ய ஏவுகணை ஆராய்ச்சி மையத்தின் டாக்டர் யெவ்ரமோவ், டாக்டர் லியோநோவ் ஆகிய நால்வரும் இணைந்து உருவாக்கியது தான் பிரமோஸ். இந்தியாவின் பிரமபுத்திரா, ரஷ்யாவின் மாஸ்கோ நதி ஆகிய பெயர்களை சேர்த்துத் தான் 'பிரமோஸ்' என இதற்கு பெயர் சூட்டினார் அப்துல் கலாம். (இந்த ஏவுகணையின் வேகத்தை அதிகப்படுத்தி இதை Supersonic Cruise missile என்ற நிலையில் இருந்து Hypersonic Cruise missile என்ற நிலைக்கு தரம் உயர்த்த வேண்டிய நேரம் வந்துவிட்டதாக கூறியிருந்தார் கலாம். அவரது யோசனைப்படி இதன் வேகத்தை அதிகப்படுத்தும் சோதனைகள் கடந்த சில காலமாக நடந்து வருகிறது. கடந்த மே மாதம் 8 மற்றும் 9ம் தேதிகளில் வீலர் ஐலண்ட் தீவில் நடந்த இந்தச் சோதனைகள் பெரும் வெற்றி அடைந்தன.

அதாவது 8ம் தேதி முதல் ஏவுகணை தாக்கிய அதே இடத்தை 9ம் தேதி ஏவப்பட்ட பிரமோஸ் ஏவுகணை அட்சரம் பிசகாமல் மிகத் துல்லியமாகத் தாக்கியது) செயற்கைக் கோள்கள் தொழில்நுட்பத்திலும் கலாமுக்கு அதீத ஆர்வம் உண்டு. ஐஆர்எஸ், இன்சாட் செயற்கைக் கோள்களில் ஆரம்பித்து சமீபத்தில் இந்தியா நிலவுக்கு அனுப்பிய சந்திரயான், செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பிய மங்கள்யான் வரை கலாமுக்கும் பங்கு உண்டு. செவ்வாய் கிரகத்துக்கு 2018ம் ஆண்டில் இந்தியா அனுப்ப திட்டமிட்டுள்ள மங்கள்யான் 2 விண்கலத்துக்கு அப்துல் கலாமின் பெயரை சூட்டலாமே!

Read more at: http://tamil.oneindia.com/editor-speaks/abdul-kalam-was-very-proud-making-lightweight-calipers-polio-patients-232302.html

அவரின் வாழ்க்கை வரலாறு ஒவ்வொரு இளைஞனுக்கும் ஒரு  உந்துசக்தி,    

நமது காலத்தில் வாழ்ந்த ஒரு எளிமையான நேர்மையானஅறிவியலாளர் ,

தமிழன் என்பதில்  எமக்கே பெருமை   

Edited by அபராஜிதன்

FB_IMG_1438266278560.jpg

FORMER PRESIDENT ABDUL KALAM L ...
FORMER PRESIDENT ABDUL KALAM LAID TO REST IN RAMESHWARAM
FORMER PRESIDENT ABDUL KALAM LAID TO REST IN RAMESHWARAM
 
மதுரை: மக்கள் மனங்களில் நிறைந்த அப்துல் கலாம், சமூக வலைத்தளங்களிலும் உன்னத மனிதராக உயர்த்தப்பட்டார். அப்துல் கலாம் இறந்த தகவல் கிடைத்தததில் இருந்து சமூக வலைதளங்கள் அவரை ஆக்கிரமித்துக் கொண்டன. கடந்த 27ம் தேதியில் இருந்து சமூக வலைதளங்களான, பேஸ்புக், வாட்ஸ்அப், டுவிட்டரில் அப்துல் கலாம் சிறிய வயது புகைப்படங்கள் தொடங்கி இறப்பதற்கு முன் மாணவர்களிடம் பேசிய போது எடுத்தப்படம், கொடுக்கப்பட்ட பட்டங்கள், அவர் எழுதிய புத்தகங்கள், பொன் மொழிகள் என அனைத்து புகைப்படங்களும் அடுத்தடுத்து பதிவிடப்பட்டன. குறிப்பாக, வாட்ஸ்அப், பேஸ் புக்கில், ஏராளமானோர் தங்களது புரபைல் (முகப்பு) படத்தை கலாம் படமாக மாற்றி வைத்தனர். சிலர் கருப்பு பேட்ச், கண்ணீர் அஞ்சலி படத்தை வெளியிட்டு தங்கள் துக்கத்தை வெளிப்படுத்தினர். சமூக வலைத்தளங்களில் வலம் வந்த கலாம் குறித்த வாசிப்புகள் இதோ...

* எழுத படிக்க தெரியாதவர்களில் எமனும் ஒருவன்... அழகான அறிவியல் புத்தகத்தை கிழித்து எறிந்து விட்டான்...

* ஒரு மனிதன் பிரியும் போது அவன் தாய் அழுதால், அவன் ஒரு நல்ல மகன். அவன் பிள்ளை அழுதால் அவன் ஒரு நல்ல தகப்பன். ஆனால், அவன் பிரிவுக்காக ஒரு நாடே அழுதால் அவன் ஒரு நல்ல தலைவன். நீங்கள் ஒரு நல்ல தலைவர் ஐயா! என்றும் மக்கள் மனதில் நீங்கள் குடியரசுத் தலைவர்.

* இந்தியாவின் தேசியக் கொடியை சந்திரனில் நிலை நிறுத்த வேண்டும் என ஆசை கண்டவர் கலாம். அந்த ஆசை சந்திரயான் விண்கலம் ராக்கெட் மூலம் நிறைவேறியது.

* கனவு காண சொன்னாய்... இதுவும் கனவாகவே இருக்‘கலாம்’ என்று மனம் ஏங்குதே!

* அடுத்தவருக்கு மட்டும் கிடைத்தது என பொறாமை படாத விஷயம் மரணம்! ஆனால், இன்று இது போன்ற மரணம் கிடைக்காதா! என்று பொறாமை பட வைத்த விஷயம்! கலாமின் மரணம்...

* கலாம் கல்லறையில் இப்படியும் எழுதலாம் ‘வானத்தை அளந்து முடித்து ஓய்வு எடுக்கிறது ஓர் அக்னி பறவை’.

* இனி சொர்க்கத்துக்கு நீங்கள் தான் ஜனாதிபதி, சென்று வாருங்கள் ஐயா...சொர்க்கமும் உங்களால் பெருமைப்படட்டும்.

* ராமேஸ்வரத்தில் தினந்தோறும் பாவங்கள் கழிக்கப்படுவது வழக்கம். முதல் முறையாக புண்ணியம் விதைக்கப்படுகிறது.

* ‘இருந்தாலும் மறைந்தாலும் பெயர் சொல்ல வேண்டும். இவர் போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும்’.

* ‘பெருமிதம் கொள்கிறேன்! நீங்கள் நேசித்த பாரத நாட்டில் நானும் ஒரு குடிமகன் என்று. உறுதி மொழி கொள்கிறேன்! நீங்கள் கண்ட கனவு பாரதத்தை நிஜத்தில் உருவாக்கிட உழைப்பேன் என்று’.

* பஸ் கண்ணாடி உடையவில்லை, கடையடைக்க நிர்பந்தமில்லை, பள்ளிக்கூடம், கல்லூரிகளை மூட கட்டாயம் இல்லை, தற்கொலை நாடகமில்லை, கட்சி பேனர்கள் கட்டப்படவில்லை இத்தனையும் இல்லை.. கலாம் மறைவுக்கு.

* கலாமுக்காக அவரது குடும்பம் வருந்துகிறது குடும்பத்திற்கு பேரிழப்பு என்று. மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் வருந்துகிறார்கள் நம் தேசத்திற்கு வழி காட்டி இல்லை என்று. அதுவே, ஒரு குழந்தை கதறி அழுகிறது. இனி நம்மை அன்போடு கொஞ்சும் அப்துல் கலாம் இல்லையே என்று.!

* இந்தியாவின் கடைக் கோடியில் கடைசி குடிமகனாகப் பிறந்து இந்தியாவின் முதற் குடிமகனாக உயர்ந்தது சந்தர்ப்பத்தால் வந்தது அல்ல... சாதனையால் வந்தது.

* நிற்‘‘கலாம் ’’ நடக்‘‘கலாம் ’’ உடுக்‘‘கலாம் ’’ உறங்‘‘கலாம்’’ என இருக்‘‘கலாம் ’’ என்றிருந்த இந்தியனை விழிக்‘‘கலாம்’’. என தட்டி எழுப்பி இனி... உழைக்‘‘கலாம்’’ சிந்திக்‘‘கலாம்’’ பறக்‘‘கலாம்’’ ஜெயிக்‘‘கலாம்’’ சாதிக்‘‘கலாம்’’ எனச் சொன்னவர் ஐயா...அப்துல்‘‘கலாம்’’.

இது தவிர, ‘‘எதற்கும் தயாராக இரு, சம்மட்டியாக இருந்தால் அடி, பட்டறையாக இருந்தால் அடி வாங்கு ’’ நமது பிறப்பு ஒரு சம்பவமாக இருக்கலாம்...ஆனால், இறப்பு சரித்திரமாக இருக்க வேண்டும்... உள்ளிட்ட கலாமின் பல்வேறு பொன் மொழிகள் அதிகளவில் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டன. மேலும், ஆந்திர மாநில சிறுமி அப்துல் கலாம் படத்திற்கு முத்தமிட்டு தனது இரங்கலை தெரிவிப்பது போன்ற புகைப்படம், அப்துல் கலாமின் நினைவாக ஆளுக் கொரு மரக்கன்றுகளை நடுவதால் மட்டுமே கலாமின் ஆத்மா சாந்தியடையும் என்பது போன்ற பலவசனங்கள் அதிகளவில் பகிரப்பட்டன.

இத்துடன், 96 வயது வயதான முன்னாள் விமான படை தளபதி மார்ஷல் அர்ஜூன் சிங் தனது உடல் நலிவையும் பொருட்படுத்தாமல் கலாம் உடலுக்கு சல்யூட் வைத்தது, கலாம் பிறந்த நாளான அக்டோபர் 15ஐ மாணவர் தினமாக அரசு அறிவித்திட வேண்டும் போன்றவையும் வாட்ஸ் அப்பில் அதிகளவில் வலம் வந்து கொண்டிருக்கின்றன. இன்னும் ஒருபடியாக, கலாமுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் நேற்று காலை 10 மணி முதல் 11 மணி வரை ஏராளமான இளைஞர்கள் வாட்ஸ் அப், பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களை பயன்படுத்தவில்லை.

- See more at: http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=159008#sthash.TOP2aPV8.dpuf

எங்கட ஆட்களின் பிரச்சனை என்றால் எமது பிரச்சனையை தாமே முகம் கொடுக்காமல் நாட்டை விட்டு ஓடிவிட்டு ஆயுத போராட்டம்   தோல்வியில் முடிய வந்தவன் போனவன் நின்றவன் எல்லோரையும் திட்டிதீர்ப்பதுதான்.

சினிமா சம்பந்தமானவர்கள் ,இலக்கியவாதி ,அரசியல்வாதி ,விளயாட்டு வீரர்கள் ,பொதுமகன்  எவர் வந்தாலும் எங்கட பிரச்னை பற்றி கேட்டின்றது அவர்களுக்கு ஆர்வம் இல்லாவிட்டால் திட்டுகின்றது .

இவ்வளவுக்கும் எம்மவர் எத்தனயோ  கொலைகளை செய்து தள்ளும் போது அதை ஆதரித்தவர்களும் மௌனமாக இருந்தவர்கள் தான் அதிகம் .

இது ஒரு மனோவியாதி அடுத்த தலைமுறைக்கு தொடரவில்லை என்பதுதான் நல்லவிடயம் .

  • கருத்துக்கள உறவுகள்

என்னங்க எங்க ஊரு வாத்தியாரு செத்துப்போனாருண்ணு கவிதையெழுதப் போனா நீங்க ஏதோ பினாத்துறீங்க. நாங்க ஆறுகோடிப் பேருங்க கலாம் போயிட்டாருண்ணு கவலையில கெடக்கிறம் நீங்க வேற. 

ஒங்க காமண்டுகள பேஸ்புக்குலயும் போடுங்க.  அப்ப தெரியும். சும்மா குண்டுச் சட்டிக்குள்ள இருந்து குதிரையோட்டாதீங்க.

ஆமா நாங்க ஆறு கோடிபேரும் உண்ணாமல், உறங்காமல் பட்டினி கெடக்கோம், அட போங்க சார்.. அரசாங்கத்துக்கு ஜிங்குசா போட்ட ஆளுக்கு இது ரொம்ப ஜாஸ்தி..! :love::(

அன்றாடங்காய்ச்சிகளின் வயிற்றிலடித்ததினால் எழுந்த திட்டுகளை கேட்காமல் கணணி, பேஸ்புக்கை கட்டியழும் "வெள்ளை மேதாவிகள்" தான் குண்டுசட்டியைவிட்டு வெளியே வரவேணும்.

சரி, பேசுபுக்கு என்ன உலக உன்னத சாத்திரமாயென்ன..? கண்ட குப்பைகளின் அடைக்கலமே அதுதான்!

Edited by ராசவன்னியன்

  • கருத்துக்கள உறவுகள்

காந்தி தாத்தா நேரு மாமாவை எல்லாம் பள்ளி பாடங்களிலும் பாலர் வகுப்பிலும் படித்து கையை சுட்டுக்கொண்டது போதும். :innocent:

குமாரசாமி அண்ணைக்கே உரிய..... அருமையான, சொல்லாடல்.
இந்த வரியை.... மிக ரசித்து வாசித்தேன்.:)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆமா நாங்க ஆறு கோடிபேரும் உண்ணாமல், உறங்காமல் பட்டினி கெடக்கோம், அட போங்க சார்.. அரசாங்கத்துக்கு ஜிங்குசா போட்ட ஆளுக்கு இது ரொம்ப ஜாஸ்தி..! :love::(

அன்றாடங்காய்ச்சிகளின் வயிற்றிலடித்ததினால் எழுந்த திட்டுகளை கேட்காமல் கணணி, பேஸ்புக்கை கட்டியழும் "வெள்ளை மேதாவிகள்" தான் குண்டுசட்டியைவிட்டு வெளியே வரவேணும்.

சரி, பேசுபுக்கு என்ன உலக உன்னத சாத்திரமாயென்ன..? கண்ட குப்பைகளின் அடைக்கலமே அதுதான்!

பேசு புக்கு குப்பை கொட்டிற இடமுன்னா அதுக்கு நீங்க ஏன் சார் போறீங்க?  படிக்கிறது பன்னாடைன்னா வடிக்கிறது சக்கையாத்தான் இருக்கும். அதுக்கு யார் என்ன பண்ணமுடியும்.

  • கருத்துக்கள உறவுகள்

பேசு புக்கு குப்பை கொட்டிற இடமுன்னா அதுக்கு நீங்க ஏன் சார் போறீங்க?  படிக்கிறது பன்னாடைன்னா வடிக்கிறது சக்கையாத்தான் இருக்கும். அதுக்கு யார் என்ன பண்ணமுடியும்.

'பேசுபுக்கு'க்கு யார் போறது?

அங்கே செல்லும் ,மேதாவிகள், 'அறிவாலிகள்', 'பன்னாடைகள்', 'சக்கைகள்' சொல்லும் அனுபவ விடயத்தை வைத்துதான் சொல்கிறேன்.. இந்த திரிக்கு "பேசுபுக்கு" என்று சம்மந்தமில்லாமல் நீங்கள் எழுதியதால் இவற்றை சொல்லவந்தது..

நன்றி!

  • கருத்துக்கள உறவுகள்

கரு... கவிதை வடித்ததையும், சூடு ஏறி.... கருத்து எழுதியதையும் இன்று தான் பார்த்தேன். Smiley
திரி.... சூடு பிடிக்கும், நேரம்... வன்னியன்  சார் , நன்றி சொல்லி விட்டு... போவது  நல்லது அல்ல....:)
வாங்க வன்னியன் சார்... சும்மா உரையாடுங்க,  நமக்கும்... பொழுது போக வேண்டாமா? :grin: Smiley

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பேஸ் புக் விடயத்தை ஆரம்பித்து வைத்தது நானில்லங்க.  மிஸ்டர் குமாரசாமியப் பாருங்க.  தமிழ் சிறி இதுக்கு முன்னாடி பல கவிதைகளை நான் எழுதியிருக்கிறேனே! ஒன்றும் உங்கள் கண்ணில் படவில்லையா?  நீங்கள் கருத்துக்கூட எழுதிருக்கீங்க சார்.

உண்மையில்... மறந்து விட்டேன், கரு.... மன்னிக்க வேண்டும்.
இப்போ, எனக்கு  வயது போட்டுதில்லையா..... ஞாபக மறதி அதிகம்.
நான்.... உங்கள் கவிதைக்கு, கருத்து எழுதிய .... பதிவின், இணைப்பை... 
உங்களால்... எடுத்து தர முடியுமாக இருந்தால், அதனை வாசித்து... மிகவும் சந்தோசப் படுவேன், கரு.:)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஐ ஆம் சாரி சார்!  யாழ் டாட் காமில் புதிய கட்டமைப்பு வந்த பிறகு
நான் தொடக்கிய திரிகளே முகப்பில் வரவில்லை ஏனென்று தெரியாது. முடிந்தால் முயற்சிசெய்து உங்களுக்குத் தெரியப்படுத்துகிறேன்.  எனக்கும் ஞாபக மறதியுண்டு.  நீங்கள் கருத்தெழுதியது கவிதைக்கா> கட்டுரைக்கா என்பது இப்போது குழப்பமாக இருக்கிறது.

உண்மையில்... மறந்து விட்டேன், கரு.... மன்னிக்க வேண்டும்.
இப்போ, எனக்கு  வயது போட்டுதில்லையா..... ஞாபக மறதி அதிகம்.
நான்.... உங்கள் கவிதைக்கு, கருத்து எழுதிய .... பதிவின், இணைப்பை... 
உங்களால்... எடுத்து தர முடியுமாக இருந்தால், அதனை வாசித்து... மிகவும் சந்தோசப் படுவேன், கரு.:)

சிறி அண்ணா ..இந்த இணைப்பை பாருங்கள் ( ஏதோ என்னால் முடிந்தது) :)

http://www.yarl.com/forum3/topic/144910-தமிழ்-ஹைகூ/#comment-1037370

  • கருத்துக்கள உறவுகள்

சிறி அண்ணா ..இந்த இணைப்பை பாருங்கள் ( ஏதோ என்னால் முடிந்தது) :)

http://www.yarl.com/forum3/topic/144910-தமிழ்-ஹைகூ/#comment-1037370

மிக்க... நன்றி, தமிழினி. 
இதனைப் பார்த்தால்.... எனக்கே.... சிரிப்பாக உள்ளது.
கருவும்... தான், தேடிய.... கவிதையை, நீங்கள்... "மின்னல்" வேகத்தில் கண்டு பிடித்ததை இட்டு... மிகவும் சந்தோசப் படுவார் என நம்புகின்றேன். :)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தங்கை தமிழினிக்கு மிகவும் நன்றி!  சொல்லாமற் செய்வர் பெரியரே!
"செய்யாமற் செய்த உதவிக்கு வையகமும் வானகமும் ஆற்றல்அரிது"

  • கருத்துக்கள உறவுகள்

தங்கை தமிழினிக்கு மிகவும் நன்றி!  சொல்லாமற் செய்வர் பெரியரே!
"செய்யாமற் செய்த உதவிக்கு வையகமும் வானகமும் ஆற்றல்அரிது"

கரு...., தங்கை தமிழினியிடம் அபரிதமான... ஆற்றல் உள்ளது.
கால் பந்தாட்டப் போட்டியோ, கிரிக்கெட் போட்டியோ, அரசியல் போட்டியோ, 
வாலி சார் இன்று ஆரம்பித்த.... புதிய வகையான குறுக்கெழுத்துப் போட்டியோ...
எதனையும்.... நிதானமாக, அவதானித்து, சரியான பதிலை அளிப்பார்.
இது..... எமக்கு பெருமையாகவும், ஆச்சரியாமாகவும் உள்ள விடயம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எங்கட ஆட்களின் பிரச்சனை என்றால் எமது பிரச்சனையை தாமே முகம் கொடுக்காமல் நாட்டை விட்டு ஓடிவிட்டு ஆயுத போராட்டம்   தோல்வியில் முடிய வந்தவன் போனவன் நின்றவன் எல்லோரையும் திட்டிதீர்ப்பதுதான்.

சினிமா சம்பந்தமானவர்கள் ,இலக்கியவாதி ,அரசியல்வாதி ,விளயாட்டு வீரர்கள் ,பொதுமகன்  எவர் வந்தாலும் எங்கட பிரச்னை பற்றி கேட்டின்றது அவர்களுக்கு ஆர்வம் இல்லாவிட்டால் திட்டுகின்றது .

இவ்வளவுக்கும் எம்மவர் எத்தனயோ  கொலைகளை செய்து தள்ளும் போது அதை ஆதரித்தவர்களும் மௌனமாக இருந்தவர்கள் தான் அதிகம் .

இது ஒரு மனோவியாதி அடுத்த தலைமுறைக்கு தொடரவில்லை என்பதுதான் நல்லவிடயம் .

எல்லா திரிகளிலும் ஓடிவந்தவர்கள் ஓடிவந்தவர்கள் என வரிக்குவரி புலம்பும் நீங்கள் எந்த வகையை சார்ந்தவர்????

என்னைப்போன்றவர்கள் தமிழீழ கொள்கையுடன் மட்டுமே புலம் பெயர்ந்தவர்கள். சிங்கள இனத்துடன் ஒன்றாக வாழ முடியாது என புலம்பெயர்ந்தோம். தனியாட்சி கொள்கையுடன் இன்றுவரைக்கும் இருக்கின்றோம்.

ஆனால் நீங்கள் என்ன செய்கின்றீர்கள்?

உங்களைப்பொறுத்தவரைக்கும் இலங்கையில் பிரச்சனை முடிந்து விட்டதே!!!

ஏன் இன்னும் தாமதம்?

அங்கே போய் உங்கள் நல்ல புத்திகளை வெளிக்காட்ட வேண்டியதுதானே?

நீங்களெல்லாம் படித்தவர்கள் தானே?

மற்றவனைப் பார்த்து நக்கலடிக்கும் போது தங்கள் நிலையையும் ஒருகணம் சிந்திக்க வேண்டும். கடையில் தானே வேலை செய்கின்றீர்கள்.  அங்கேயும் பலசரக்கு கடைகள் ஏராளமாக இருக்கின்றன. பழகிய தொழில் செய்வதற்கு இலகுவாக இருக்கும். அல்லது இருக்கவே இருக்கின்றது சினிமா தியேட்டர்கள் ரிக்கற் கிழிக்கலாம். ஏனினெல் நீங்களும் அகில சினிமா அனுபவம் உள்ளவரல்லவா!!!

மற்றவனை சுட்டுவிரல் காட்டி குற்றம் சாட்டும் போது இதர விரல்கள் உங்களைத்தான் காட்டுகின்றது.

 fingerpoint.jpg

  • கருத்துக்கள உறவுகள்

எங்கட ஆட்களின் பிரச்சனை என்றால் எமது பிரச்சனையை தாமே முகம் கொடுக்காமல் நாட்டை விட்டு ஓடிவிட்டு ஆயுத போராட்டம்   தோல்வியில் முடிய வந்தவன் போனவன் நின்றவன் எல்லோரையும் திட்டிதீர்ப்பதுதான்.

சினிமா சம்பந்தமானவர்கள் ,இலக்கியவாதி ,அரசியல்வாதி ,விளயாட்டு வீரர்கள் ,பொதுமகன்  எவர் வந்தாலும் எங்கட பிரச்னை பற்றி கேட்டின்றது அவர்களுக்கு ஆர்வம் இல்லாவிட்டால் திட்டுகின்றது .

இவ்வளவுக்கும் எம்மவர் எத்தனயோ  கொலைகளை செய்து தள்ளும் போது அதை ஆதரித்தவர்களும் மௌனமாக இருந்தவர்கள் தான் அதிகம் .

இது ஒரு மனோவியாதி அடுத்த தலைமுறைக்கு தொடரவில்லை என்பதுதான் நல்லவிடயம் .

வாழ்க்கையில் எதையுமே இழந்து போகாமல்... ஊரிலிருந்த  இருந்த அவ்வளவத்தையும் அப்படியே வெளிநாட்டுக்குத் தூக்கி வந்தவர்களுக்கு.. இழப்பின் வலியோ அல்லது இழப்பின் வலிகளை ஆற்றுவதற்கான அப்துல் கலாம் போன்ற பெரியவர்கள் சிந்தும் கண்டனங்களின் வலிமையோ புரிந்திருக்க நியாயமில்லை!அப்துல் கலாம் கூடத் தான் கண்டுபிடித்த மகத்தான போராயுதங்களையிட்டுப் பெரு மிதமடையவில்லை! அவயவங்களை இழந்தவர்களுக்காகத் தந்து கண்டுபிடிப்புகள் பயன்படுவதையே பெருமையாகக் கருதுகின்றார்! தற்போதைய தொழில் நுட்பங்களை வைத்துத் தஞ்சைப் பெரிய கோவிலை இடித்து விட்டு.. அதை விட அழகிய கோவிலைக் கட்ட முடியும் தானே என்ற மாதிரியே உங்கள் கருத்துக்கள் அமைகின்றன! எனினும் பெரிய கோவிலின் பின்னாலுள்ள வரலாறும் சரித்திரமும் அந்தப் புதிய கோவிலுக்கு இருக்காது தானே!

புலிகள் புரிந்த கொலைகளுக்கு நியாயம் கற்பிக்க நான் வரவில்லை! அப்படிப் பார்த்தால் சிங்கள இராணுவம் செய்த அத்தனை கொலைகளுக்கும் நீங்கள் நியாயம் கற்பிக்க முடியாது! 

சில கொலைகளை மனிதர்கள்..குறிப்பாக நாம் அண்ணார்ந்து பார்க்கும் அப்துல் கலாம் போன்றவர்கள் கண்டிக்காமல் விடுவதானது.. அந்தக் கொலைகளை அவர்கள் நியாயப் படுத்துவது போன்றே அமைகின்றது! 

ஸிம்பாப்வேயில் கொல்லப்பட்ட 'சிஸில்' என்ற சிங்கத்தின் மரணத்துக்கும்.. முள்ளி வாய்க்காலில் கொல்லப்பட்ட எமது உறவுகளின் மரணங்களுக்கும் என்ன வித்தியாசத்தைக் காண்கிறீர்கள்?

நான் புலிகளின் மரணங்களை இங்கு இழுக்கவில்லை!

ஒரு வேளை ..அந்தச் சிங்கத்தின் கொலையை நிச்சயம் அப்துல் கலாம் இருந்திருந்தால் நிச்சயம் கண்டித்திருப்பார்!

உலகம் முழுக்க அந்தச் சிங்கத்தின் கொலையைக் கண்டிக்கிறதே.. அதையே தான் நாமும் உலகத்திடம் எதிர்பார்த்தோம்!

உங்கள் கருத்துப் படி எமது இனத்தவரின் கொலைகள்.. கண்டங்களுக்குக் கூடத் தகுதியற்றவையா?

 புராணங்கள் இதிகாசங்களையும் தாண்டி உலகத்தின் இன்றையை செய்தியை வைத்து எமது விடுதலையின் ஏளனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டீர்கள்.
உண்மை நிலைக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

ம்ம்.... என்ன செய்வது,  புங்கை.
புலி, செய்ததை..... எல்லாம், பாராட்ட முடியாவிட்டாலும்...
நக்கல், அடிக்காமல்... இருக்குமா.... நம் சனம்.
அதற்குப் பெயர் தான்.. தமிழன்.
உதுகள்... எங்கை.... போனாலும், திருந்தாத இனம்.

எமது வாழ்வில், நெடுக அலுப்புத் தந்து கொண்டிருக்கும்,
தலைவர்கள் இறந்தால்..... 
கீரிமலையில், அவர்களது சாம்பலும், கரையாது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.