Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் மக்களின் பிரதிநிதிகள் கூட்டமைப்பு என்பதனை மக்கள் நிரூபித்துள்ளனர்! தீர்வுக்காக உழைப்போம்!- இரா.சம்பந்தன

Featured Replies

  • தொடங்கியவர்

என்ன சிரிப்பு சூறாவளி சார். கிழக்கு மாகாண மக்கள் 1977 பல ஆண்டிலேயே முன்மாதிரியாக தேவநாயம் அவர்களுக்கு வாக்களித்து வெற்றி பெறசெய்தார்கள். அவரை துரோகியாக்கி இந்த கூட்டணி பயன் பெற்றது. அன்று கிழக்கு மாகாண கல்குடா தொகுதி மக்களின் முன்மாதிரியைப் அனைத்து பின்பற்றி இருந்தால் தமிழ் பிரதேசங்கள் அபிவிருத்தி அடைந்திருக்கும். பாழாய்போன தமிழரசு கூட்டணிகள் தமது உணர்ச்சிப்பேச்சுகளால் அதை கெடுத்து பதவிகளை பெற்று எதை சாதித்தார்கள். 

சைக்கிள் ஒட்டி களைத்தாத்து, இனி தேசியகட்சிகள், இனி எப்பவும் திருந்த போறதில்லை. 

இப்பவந்த முடிவையே விளங்க முடியாத நீங்கள் 77ம் ஆண்டுக்கு போவது சிரிப்பாய் இருக்கு. 

எடுக்கவிருக்கும் அரசியல் நடவடிக்கைகள் எவை என்பதை கொஞ்சம் விளக்க முடியுமா சூறாவளி.
அப்போதான் எங்களுக்கு அந்த ஆறாவதின் தாக்கம் விளங்கும்.

வாத்தியார், உங்களுக்கு பாடம் எடுக்கும் பக்குவம் எனக்கு இருக்கோ தெரியாது.

உண்மையை சொன்னால் அந்த அரசியல் நடவடிக்கை என்பது என்று ஒன்றும் இல்லை, அனாலும் அதுதான் தெரிவு.

அறுதியா தீர்வு என்று எதுவும் இல்லை.. சமஸ்டி கூட வெறும் வார்தை ஜாலம்தான், இருந்தாலும் கூட்டமைப்பு எடுத்து தரும் தீர்வே நடைமுறையில் எடுக்க முடிந்ததும் சாத்தியமானதும்.

இதுக்குமேல என்னால் உங்களுக்கு விளங்கபடுத்த முடியாது.

  • Replies 67
  • Views 2.4k
  • Created
  • Last Reply

சைக்கிள் ஒட்டி களைத்தாத்து, இனி தேசியகட்சிகள், இனி எப்பவும் திருந்த போறதில்லை. 

இப்பவந்த முடிவையே விளங்க முடியாத நீங்கள் 77ம் ஆண்டுக்கு போவது சிரிப்பாய் இருக்கு. 

போங்க சூறாவளி நாம் சைக்கிள்  என நினைச்சீங்களா? நம்ம குடும்பமே பரம்பரையாக வீட்டுக்கு போட்ட பரம்பரை. சைக்கிளை எண்ணி ஒன்று இருக்கென்றே  அறிஞ்சதே சமீபத்தில் தான், 

  • தொடங்கியவர்

போங்க சூறாவளி நாம் சைக்கிள்  என நினைச்சீங்களா? நம்ம குடும்பமே பரம்பரையாக வீட்டுக்கு போட்ட பரம்பரை. சைக்கிளை எண்ணி ஒன்று இருக்கென்றே  அறிஞ்சதே சமீபத்தில் தான், 

பாருங்க அண்ணாச்சி, எனக்கு பர்சனலா புடிச்சது என்னுடைய சைக்கிள் தான், இருந்தாலும் இருக்க வீடு இருந்ததானே சைக்கிளை வைச்சிருக்கலாம். 

இல்லன சைக்கிளை திருடிட்டு போயிட மாட்டாங்க? 

  • கருத்துக்கள உறவுகள்

சைக்கிள் ஒட்டி களைத்தாத்து, இனி தேசியகட்சிகள், இனி எப்பவும் திருந்த போறதில்லை. 

இப்பவந்த முடிவையே விளங்க முடியாத நீங்கள் 77ம் ஆண்டுக்கு போவது சிரிப்பாய் இருக்கு. 

வாத்தியார், உங்களுக்கு பாடம் எடுக்கும் பக்குவம் எனக்கு இருக்கோ தெரியாது.

உண்மையை சொன்னால் அந்த அரசியல் நடவடிக்கை என்பது என்று ஒன்றும் இல்லை, அனாலும் அதுதான் தெரிவு.

அறுதியா தீர்வு என்று எதுவும் இல்லை.. சமஸ்டி கூட வெறும் வார்தை ஜாலம்தான், இருந்தாலும் கூட்டமைப்பு எடுத்து தரும் தீர்வே நடைமுறையில் எடுக்க முடிந்ததும் சாத்தியமானதும்.

இதுக்குமேல என்னால் உங்களுக்கு விளங்கபடுத்த முடியாது.

சூறாவளி அண்ணை 
இதிலிருந்து நம்மட  அறிவற்ற மூளைக்கு விளங்குவது என்னவென்றால் ......இருக்கு ஆனால் இல்லை ...அதுதானே 
அதை அப்படியே சொல்வது தானே ஏன் குறுக்கால ,மறுக்கால எல்லாம் ஓடி எங்களையும் ஓட விடுகிறீர்கள் 

வரும் அனால் வராது...

  • கருத்துக்கள உறவுகள்

வரும் அனால் வராது...

ஆக நீங்களும் ஒத்துக்கொள்கிறீர்கள் 2016 எல்லாம் வெறும் புறுடா என்று ......Why Blood Same Blood .....
 
  • தொடங்கியவர்

ஆக நீங்களும் ஒத்துக்கொள்கிறீர்கள் 2016 எல்லாம் வெறும் புறுடா என்று ......Why Blood Same Blood .....
 
இல்லை நிச்சயம் ஒரு தீர்வு கிடைக்கும், அனால் அது சமஸ்டியாக இருக்குமா என்பதை என்னால் சொல்ல முடியாது.

நீங்கள் ஒரு திரியில் இன்னும் நன்கு மாசம் என எழுதியதாக வாசித்த நினைவு, அது உங்கள் புரிதலில் உள்ள தவறு என நீனைக்கிறேன்.

இன்னும் நான்கு மாதங்களில் எந்த தீர்வையும் எட்ட முடியாது, போக தீர்வுக்கான புரிந்துணர்வு ஏற்கனவே திட்டமிடப்பட்ட ஒன்று.

இதுக்கு மேல் என்னால் எதையும் சொல்ல முடியாது, உங்கள் முடிவும் தெரிவும் உங்கள் கைகளில். 

சுதந்திரத்தின் பின் தொடங்கிய இனப்பிரச்னைக்கெதிரான போராட்டம் வெவ்வேறு பரிணாமங்களை அவ்வப்போது கடந்து இலங்கை தீவில் அரசியல் தீர்வு ஒன்று வரும் சாத்தியம்  நெருங்கிக்கொண்டே வருகின்றது .

சர்வதேச அரசியலும் நிலைமைகளிலும் பெரிய மாற்றம் வந்திருகின்றது அதனால் தான் ஒன்றுபட்டு ஒரு யதார்த்தமான தீர்விற்கு தமிழர்கள் முன் வரவேண்டும்.

குறிப்பு -இன்று இந்த நிலைமைக்கு தமிழர்  போராட்டம் வந்திருக்கின்றதென்றால் சரி பிழைகளுக்கு அப்பால் சுதந்திரம் பெற்ற காலத்தில் இருந்து இன்று வரை அதற்காக போராடிய அனைவரும் தான் காரணம் .  

அர்ஜுன்
யதார்த்தத்தை மிக அழகாக எழுதியுள்ளீர்கள். நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்

அர்ஜுன்
யதார்த்தத்தை மிக அழகாக எழுதியுள்ளீர்கள். நன்றி.

யதார்த்த தீர்வு என்றால் ஏதாவது ஒன்றைச்சொல்லுங்களேன். சிங்களவருக்கு முகம் சுழிக்காமல்....

யதார்த்த தீர்வு என்றால் ஏதாவது ஒன்றைச்சொல்லுங்களேன். சிங்களவருக்கு முகம் சுழிக்காமல்....

விசுகு
யதார்த்தமான தீர்வு என்பது தமிழர்களது அபிலாசைகள ஓரளவு பூர்த்தி செய்வதாகவும் (நிச்சயமாக இங்கு விட்டுக்கொடுப்புகள் அவசியம்) சிங்களவர்களாலும் ஏற்றுக் கொள்ளக்கூடியதான நடைமுறையில் சிக்கலற்ற ஒரு தீர்வு. இங்கு தாயகத்தில் இப்போதுள்ள நிலைமைகளைப் பார்க்கையில் - இவை தொடருமாயின் தமிழர்களிற்கென்று ஒரு தீர்வு தேவையில்லை என்ற நிலை சில 10 வருடங்களில் வந்தாலும் வரலாம். ஆனாலும் எமது இருப்பை அடையாளத்தையும் எதிர்காலத்திலும் தக்க வைக்க காணி, காவல்துறை, முதலீடு போன்றவற்றில் தன்னிச்சையாக செயற்படக்கூடிய ஒரு தீர்வு முறை தேவை. இத் தீர்வானது சுதந்திர இலங்கைக்குள் ஒரு சுயநிர்ணய உரிமையற்ற அலகாக இருக்கும் என்பது எனது கருத்து.

எமக்குத் தேவை தனிநாடு இல்லை இப்போது. எமது மக்கள் சகல உரிமைகளுடன் சுதந்திரமாக இந்த தீவில் வாழ ஒரு தீர்வு மட்டுமே. 
அதற்கான காலம் கனிந்துள்ளதாகவே தெரிகின்றது.

நீங்கள் எல்லோரும் இரண்டு விடயங்களை மறந்து விடுகின்றீர்கள்

1- நீங்கள் எழுதியவை 60 வருடங்களாக தமிழரும் சிங்களவரும் பேசி வருபவைதான்

2- ஆட்சியில் மகிந்த இருந்தாலென்ன? மைத்திரி இருந்தாலென்ன? ரணில் இருந்தாலென்ன?

அதிகாரமும் தீர்ப்புக்களும் சிங்கள பௌத்தமகா சங்கத்திடமே...

இதைத்தாண்ட வழி சொல்லுங்கள்...

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

இல்லை நிச்சயம் ஒரு தீர்வு கிடைக்கும், அனால் அது சமஸ்டியாக இருக்குமா என்பதை என்னால் சொல்ல முடியாது.

நீங்கள் ஒரு திரியில் இன்னும் நன்கு மாசம் என எழுதியதாக வாசித்த நினைவு, அது உங்கள் புரிதலில் உள்ள தவறு என நீனைக்கிறேன்.

இன்னும் நான்கு மாதங்களில் எந்த தீர்வையும் எட்ட முடியாது, போக தீர்வுக்கான புரிந்துணர்வு ஏற்கனவே திட்டமிடப்பட்ட ஒன்று.

இதுக்கு மேல் என்னால் எதையும் சொல்ல முடியாது, உங்கள் முடிவும் தெரிவும் உங்கள் கைகளில். 

அது எனது புரிதலின் தவறு அல்ல ஆனால் நீங்கள் விரும்பாவிட்டாலோ  நான் விரும்பாவிட்டாலோ  2016 இற்கு இருப்பது மேலும் நான்கு மாதங்கள் மட்டுமே 
காலச்சக்கரம் எதற்காகவும் யாருக்காகவும் நிற்பதில்லை ....2016 உம் கடந்து போகலாம் , ஆனால் தீர்வுக்கான இடை வெளி சற்றும் குறையாது என்பதே யதார்த்தம் . ஒருவேளை எனது கருத்தும் போய்த்துபோகலாம் ,,உங்களுடைய அபிலாசையும் நீர்த்து போகலாம் ஆனால் உங்களுடைய அபிலாசைகள் பொய்த்து போனால் எம்மிடமுள்ள மாற்று உபாயம் என்ன....?  கூத்தமைப்பிட்கு இன்னுமோர் 6 வருட கால ஒதுக்கீடு இல்லாவிடின் அப்போது தான் மாற்று சக்தி ஒன்றை யோசிக்கப்போகிறோமா  ....ஏற்க்கனவே கொள்கையளவில் உச்சகட்ட விட்டுகொடுப்பு , எந்த எதிர்பார்ப்பும் இல்லாத நிபந்தனையற்ற ஆதரவு ...இப்போதே வெள்ளம் தலைக்கு மேல் ......திருமுருகன் சொன்னது போல் யாருக்கோ உள்ள வருத்தத்திற்கு தமிழருக்கு மருந்து கொடுக்கப்படுகிறது 

தீர்வு என்ன?   -கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்தை வாசியுங்கள்.

அதை அடைவது எப்படி ? -  அதற்குத்தான்  கூட்டமைப்பை தெரிவு செய்து இருக்கின்றோம் .அவர்கள் செய்யும் அரசியலும் அடுத்த கட்ட  நடவடிக்கைகளும் தான்  அதற்கான பதில் .

திரும்ப திரும்ப 60 வருடங்கள் என்று கதைப்பதில் எதுவித பயனுமில்லை இனி அடுத்தது என்ன என்று தான் பார்க்கவேண்டும் .

ராஜபக்சாவை பதவி இறக்கும் போது சிங்கள பௌத்த மகாசங்கம் என்ன செய்தது .மக்களின் ஆதரவும் சர்வதேச அனுசரணையும் இருந்தால் எவரும் ஒன்றும் புடுங்கமுடியாது .

நல்ல உதாரணம் இலங்கை -இந்திய ஒப்பந்தம் . ஒரு பிளேனில் சுற்றியடித்து  அனைவரினதும் வாயை மூட வைத்துவிட்டார்கள் . 

அதை குழப்பியது விடுதலை புலிகள். அவர்களையும் கட்டுக்குள் கொண்டுவர தான் அந்த படையெடுப்பு .மிச்சம் எல்லோருக்கும் தெரியும் .

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் எல்லோரும் இரண்டு விடயங்களை மறந்து விடுகின்றீர்கள்

1- நீங்கள் எழுதியவை 60 வருடங்களாக தமிழரும் சிங்களவரும் பேசி வருபவைதான்

2- ஆட்சியில் மகிந்த இருந்தாலென்ன? மைத்திரி இருந்தாலென்ன? ரணில் இருந்தாலென்ன?

அதிகாரமும் தீர்ப்புக்களும் சிங்கள பௌத்தமகா சங்கத்திடமே...

இதைத்தாண்ட வழி சொல்லுங்கள்...

இதைத் தாண்ட ஒரே வழி சிங்கள மகாசங்கத்திடம் தொடர்பில்லாமல் இருக்கும் ஒரு தனி தேசமாக தமிழ் பிரதேசம் வருவது மட்டும் தான். இது உங்களுக்கும் எனக்கும் முழு ஏற்புடைய தீர்வு.

ஆனால், ஜீவன் சிவா சொல்வது போல தனி நாடு இப்போது சாத்தியமில்லை. நிலம் இல்லாமையும், வெளி நாட்டு சக்திகள் விரும்பாமையும் இதன் பிரதான தடைகள். அதனால் விட்டுக் கொடுப்புகளுடனான ஒரு தீர்வு தான் ஒரே வழி. சிங்கள மகாசங்கம் உறுமய இவை எல்லாம் மகிந்தவால் இனித் தடவி வளர்க்கப் படும். ஆனால், ரணிலின் முதலாளித்துவம் சார்பான தலைமையை அமெரிக்காவும் இந்தியாவும் விரும்புவதால், கடந்த அரசுகளுக்கு இல்லாத சர்வதேச ஆதரவு தீர்வு விடயத்தில் இந்த அரசுக்கு இருக்கும். ரணிலுக்கும் இன்னொரு கிளர்ச்சி வருவதில் ஆர்வம் இருக்காது, எனவே மகிந்தவை விட அதிகம் தமிழர் தரப்புடன் நெகிழ்வுப் போக்கைக் கடைப்பிடிக்கக் கூடும். அமெரிக்காவில் கறுப்பர் உரிமை விடயத்தில்  60 களின் counter culture  எப்படி நல்ல விளைவுகளைக் கொண்டு வந்து  சில தீர்வுகளைத் தந்ததோ, அது போல வெளியுலகுடன் தொடர்புகள் கூடிய இந்தக் காலம் சிங்கள இளையோரை மகிந்தவின் தலைமுறையை விட குறைந்த இனக்கிலேசம் உடையோராக மாற்றவும் கூடும். இது நீண்ட கால தீர்வுக்கு வழி வகுக்கலாம். 

  • கருத்துக்கள உறவுகள்

நிச்சயம் தீர்வு வரும். சிலருக்கு தாங்களுடைய நாட்டுப்பற்று விளம்பரத்துக்கு நன்றாகப் பாடுபடுகிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

அது எனது புரிதலின் தவறு அல்ல ஆனால் நீங்கள் விரும்பாவிட்டாலோ  நான் விரும்பாவிட்டாலோ  2016 இற்கு இருப்பது மேலும் நான்கு மாதங்கள் மட்டுமே 
காலச்சக்கரம் எதற்காகவும் யாருக்காகவும் நிற்பதில்லை ....2016 உம் கடந்து போகலாம் , ஆனால் தீர்வுக்கான இடை வெளி சற்றும் குறையாது என்பதே யதார்த்தம் . ஒருவேளை எனது கருத்தும் போய்த்துபோகலாம் ,,உங்களுடைய அபிலாசையும் நீர்த்து போகலாம் ஆனால் உங்களுடைய அபிலாசைகள் பொய்த்து போனால் எம்மிடமுள்ள மாற்று உபாயம் என்ன....?  கூத்தமைப்பிட்கு இன்னுமோர் 6 வருட கால ஒதுக்கீடு இல்லாவிடின் அப்போது தான் மாற்று சக்தி ஒன்றை யோசிக்கப்போகிறோமா  ....ஏற்க்கனவே கொள்கையளவில் உச்சகட்ட விட்டுகொடுப்பு , எந்த எதிர்பார்ப்பும் இல்லாத நிபந்தனையற்ற ஆதரவு ...இப்போதே வெள்ளம் தலைக்கு மேல் ......திருமுருகன் சொன்னது போல் யாருக்கோ உள்ள வருத்தத்திற்கு தமிழருக்கு மருந்து கொடுக்கப்படுகிறது 

அக்கினி, 2016 ஜனவரிக்குள் தீர்வு என்று கூட்டமைப்பு சொன்னது முட்டாள்தனம். ஆனால், அந்த வாசகத்தை தேர்தல் நேர சவுண்டாக எடுத்துக்  கொண்டு கடந்து போகாமல் அவர்களுக்கு இப்பவே மாற்றீடு தேடுவது அதை விட முட்டாள்தனம். இந்த முறை புலத்தில் இருந்து நாம் எடுத்துக் கொடுத்த மாற்றீடு தாயக மக்களில் ஒரு பகுதியினரைத் தடுமாறச் செய்ததைத் தவிர வேறெதையும் சாதிக்கவில்லை. கூட்டமைப்பின் விட்டுக் கொடுப்புக்கு மாற்றீடாக புலம் பெயர் தமிழர் மனதில் இருப்பது முரண்டு பிடித்தல். முரண்டு பிடித்தல் 2016 ஜனவரிக்குள் தீர்வைத் தந்து விடப் போகிறது என்று நீங்கள் ஒரு 10% நிகழ்தகவோடு நிரூபித்தால் நானும் த.தே.கூ வை மாற்றீடு செய்வதை ஆதரிப்பேன்!   

  • கருத்துக்கள உறவுகள்

ஜஸ்டின் 
நானும் தாயகத்திலிருந்து எழுதுபவன் தான் ...எமது முரண்டுபிடிப்பே எமது பிரச்சினையை சர்வதேச பேசுபொருளாக்கியது(இழப்பினை நீங்கள் கூறலாம் ஆனால் அந்த இழப்பே எமது மூல தனம். ஒன்றரை இலட்சம் மக்களது உயிர்கொடையே எமது துருப்புசீட்டு )....இந்த மனமாற்றம் அப்போதே இருந்திருந்தால் இன்று சிறிலங்கா சிங்கள பௌத்த ரட்ட ...அவர்களது நோக்கம் ...தெளிவு என்பவற்றை நாம் சரியாக அறியாமல்  இந்த நிமிடம் வரை போடும் தப்பு கணக்குகளே தீர்வு என்ற மூன்றெழுத்து அதற்க்கு உப்பு புளி காரமே 2016 .....உச்ச கட்ட விட்டுகொடுப்புடன் பாதை தெரியாதவர் பின்னே பயணிக்கப்போகிறோம் ..அதிலும் மிகக்கொடுமை வழிகாட்டிக்கே எங்கே போவதென்று தெரியாது ....முரண்டு பிடித்தல் தொடர்பான உங்கள் கருத்துடன் உடன் படுகிறேன் ....இவ்வளவு கால முரண்டு பிடிப்பு தீர்வை தரவில்லை எனவே மென்போக்குடன்(மென்போக்கு என்று கூட சொல்லமுடியாது ...நிபந்தனையற்ற ..எவ்வித எதிபார்ப்புமற்ற ) பயணிக்கப்போகிறோம் இது தீர்வை தருமா  என்பதற்கு இதுவரை யாருக்கும் பதில் தெரியாது 
இந்த முயற்சி தோல்வியுறும் பட்ச்சத்தில் எமக்கு மீட்ச்சியே இல்லை ....ஏற்கனவே கைவிட்ட முரண்டு பிடித்தலுக்கும் திரும்ப முடியாது ...இதை விட கீழிறங்குவதை விட தீர்வே தேவையில்லை ...எதுவோ இனி கூத்தமைப்பு விட்ட வழி ...முரண்டு பிடித்தல் தொடர்பாக 10 % நிகழ்தகவு கேட்டீர்கள் 
தற்போதைய நிலையில் கூத்தமைப்பிடம் தீர்வு தொடர்பான 1% நிகழ்தகவு கூட இல்லை 

  • கருத்துக்கள உறவுகள்

ஐயா

இருக்கக்கூடும்

வரலாம்

இதெல்லாம்  கேட்டு

வாசித்து 

அனுபவித்து

மரத்துப்போச்சையா... 

பலர் திரும்ப திரும்ப சிங்களம் என்ன செய்யும் என்று எமக்கு தெரியும் எமது வரலாறு அதை தெளிவாக சொல்லி நிற்கின்றது என்கின்றார்கள் .அனைத்து தமிழர்களுக்கும் அது தெரியும் எமது அரசியல்வாதிகள் உட்பட .

வெள்ளையன் விடுதலை தரான் என்று தொடர்ந்து போராடாமல் இருந்திருந்தால் வெள்ளையர்களிடம் இருந்து விடுதலை அடைந்த நாடுகள் எதுவும் விடுதலை அடைத்திருக்க மாட்டாது .

வாக்கே இல்லாமல் இருந்த பெண்கள் ஆண்கள் எம்மை காலம் பூராக இப்படியே தான் வைத்திருப்பார்கள் என்று போராடாமல் விட்டிருந்தால் பெண்களுக்கு வாக்குரிமை கிடைத்தே இருக்க மாட்டாது .இன்றும் பெண்கள் தங்கள் முழு விடுதலைக்கு போராடிக்கொண்டே இருக்கின்றார்கள்

அமெரிக்காவில் இருந்த கருப்பர்கள்  நினைத்தே பார்த்திருக்கமாட்டார்கள் நிறவெறிக்கு எதிராக போராடி தாம் இன்று இப்படி ஒரு நிலைக்கு வருவார்கள் என்று இன்றும் நிறவெறிக்கு எதிராக தொடர்ந்தும் போராடித்தான் வருகின்றார்கள் .

இந்த வெற்றியடைந்த போராட்டங்களுடன் ஒப்பிடும் போது எமது எதிரி ஒரு கால் தூசு.

எம்மில் சிலர் நாங்கள் இயன்ற மட்டும் போராடிவிட்டோம் இனி எதுவும் சரிவராது என்பது போல கருத்துக்கள் வைக்கின்றார்கள், இந்த சலிப்பு ஆயுத போராட்டம் தந்த தோல்விதான் காரணம் .

இலங்கையில் இன அடக்குமுறை இருக்கு மட்டும் அடக்கப்படுபவர்கள் வெற்றி பெறமட்டும் ஏதோ விதத்தில் அதற்கு எதிராக போராடிக்கொண்டு தான் இருக்கபோகின்றார்கள் .

இது சிங்களத்திற்கும் மிக தெளிவாக தெரியும் ஆனால் அட்சியில் உள்ளவர்கள் அதிகாரமும் ஆணவமும் அடுத்த தேர்தல் வெற்றி பற்றிய அரசியலும் இருக்கமட்டும் ஒரு தீர்வை கொடுக்க மறுத்துக்கொண்டே இருப்பார்கள் .நடந்து முடிந்த யுத்தமும் ஆணவத்தில் ஆடியவர்களின் அரசியலும் அவர்களுக்கும்  மிக பெரியதொரு  பாடம்.

சுதந்திரத்தின் பின் தொடங்கிய இனப்பிரச்னைக்கெதிரான போராட்டம் வெவ்வேறு பரிணாமங்களை அவ்வப்போது கடந்து இலங்கை தீவில் அரசியல் தீர்வு ஒன்று வரும் சாத்தியம்  நெருங்கிக்கொண்டே வருகின்றது .

சர்வதேச அரசியலும் நிலைமைகளிலும் பெரிய மாற்றம் வந்திருகின்றது அதனால் தான் ஒன்றுபட்டு ஒரு யதார்த்தமான தீர்விற்கு தமிழர்கள் முன் வரவேண்டும்.

குறிப்பு -இன்று இந்த நிலைமைக்கு தமிழர்  போராட்டம் வந்திருக்கின்றதென்றால் சரி பிழைகளுக்கு அப்பால் சுதந்திரம் பெற்ற காலத்தில் இருந்து இன்று வரை அதற்காக போராடிய அனைவரும் தான் காரணம் .  

இதையே  நான் எழுதினால் அண்ணை

செவ்விந்தியர்களிலிருந்து

பஞ்சாபியர்கள்வரை

தோற்ற வரலாறுகளைக்கிண்டுவார்

இது தான் வழமையாக அண்ணை செய்வது..

இன்றைக்கு என்ன நடந்ததோ....??

இசை

நேரம் பொன்னாது காண்..

  • கருத்துக்கள உறவுகள்

ஜஸ்டின் 
நானும் தாயகத்திலிருந்து எழுதுபவன் தான் ...எமது முரண்டுபிடிப்பே எமது பிரச்சினையை சர்வதேச பேசுபொருளாக்கியது(இழப்பினை நீங்கள் கூறலாம் ஆனால் அந்த இழப்பே எமது மூல தனம். ஒன்றரை இலட்சம் மக்களது உயிர்கொடையே எமது துருப்புசீட்டு )....இந்த மனமாற்றம் அப்போதே இருந்திருந்தால் இன்று சிறிலங்கா சிங்கள பௌத்த ரட்ட ...அவர்களது நோக்கம் ...தெளிவு என்பவற்றை நாம் சரியாக அறியாமல்  இந்த நிமிடம் வரை போடும் தப்பு கணக்குகளே தீர்வு என்ற மூன்றெழுத்து அதற்க்கு உப்பு புளி காரமே 2016 .....உச்ச கட்ட விட்டுகொடுப்புடன் பாதை தெரியாதவர் பின்னே பயணிக்கப்போகிறோம் ..அதிலும் மிகக்கொடுமை வழிகாட்டிக்கே எங்கே போவதென்று தெரியாது ....முரண்டு பிடித்தல் தொடர்பான உங்கள் கருத்துடன் உடன் படுகிறேன் ....இவ்வளவு கால முரண்டு பிடிப்பு தீர்வை தரவில்லை எனவே மென்போக்குடன்(மென்போக்கு என்று கூட சொல்லமுடியாது ...நிபந்தனையற்ற ..எவ்வித எதிபார்ப்புமற்ற ) பயணிக்கப்போகிறோம் இது தீர்வை தருமா  என்பதற்கு இதுவரை யாருக்கும் பதில் தெரியாது 
இந்த முயற்சி தோல்வியுறும் பட்ச்சத்தில் எமக்கு மீட்ச்சியே இல்லை ....ஏற்கனவே கைவிட்ட முரண்டு பிடித்தலுக்கும் திரும்ப முடியாது ...இதை விட கீழிறங்குவதை விட தீர்வே தேவையில்லை ...எதுவோ இனி கூத்தமைப்பு விட்ட வழி ...முரண்டு பிடித்தல் தொடர்பாக 10 % நிகழ்தகவு கேட்டீர்கள் 
தற்போதைய நிலையில் கூத்தமைப்பிடம் தீர்வு தொடர்பான 1% நிகழ்தகவு கூட இல்லை 

சில கேள்விகள்:

1. ஏன் இது தான் கடைசி பஸ் என உறுதியாக நம்புகிறீர்கள்?

2. கூட்டமைப்பு விஞ்ஞாபனம் உடனடி நிவாரணங்களையாவது சொல்லியிருக்கும் போது, 1% கூட தீர்வுக்கான வாய்ப்பில்லை என்று எதை வைத்துச் சொல்கிறீர்கள்?

3. முப்பது வருடம் உயிர்களை விலையாகக் கொடுத்துக் கொண்டிருந்த போது தீர்வுக்கு காலவரையறை, மாற்று வழி, உறுதிப் பாடு எல்லாம் கேட்டீர்களா? ஏன் த.தே.கூவிடம் மட்டும் இதையெல்லாம் எதிர் பார்க்கிறீர்கள்?

அண்ணை அப்படி எழுத கொஞ்சம் அரசியல் தெரியவேண்டும் .

நீங்கள் தேவாரம் பாடுவதை மட்டுமே தொழிலாக கொண்டவர் .

ஆயுதப் போரட்டத்திற்கு முழு ஆதரவு கொடுத்து  அது தோல்வியில் முடிந்தபின் உங்களுக்கு மரத்து விட்டதற்காக உயிர்ப்புடன் இருப்பவர்களையும் மரத்துப்போகவேண்டும் என்று நினைகின்றீர்கள் .ஆயுத போராட்டத்தால் தான் அனைத்தும் நடந்ததாகாகவும் நினைகின்றீர்கள் .அவர்கள் செய்தது மட்டும் சரி என்ற நினைப்பில் மட்டும் வாழ்கின்றீர்கள் .

சிந்தனையில் மாற்றம் வேண்டும் அண்ணை .

இன்று நான் எழுதியது உங்களுக்கு புதிது மாதிரி தெரிவதற்கு காரணம் தேர்தலில் கூட்டமைப்பு பெற்ற வெற்றி .

இதே கருத்தைதான் யாழில் காலகாலமாக எழுதிவருகின்றேன் .

ஆறு மாத்த்தில் தீர்வுகாண வருகுதோ பத்து மாத்த்தில் தீர்வு வருகுதோ தெரியாது. ஆனால்  அடுத்த ஆறு வருடத்திற்கு 16 பேருக்கும் ஒழுங்கா சம்பளம் வரும். 

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணை அப்படி எழுத கொஞ்சம் அரசியல் தெரியவேண்டும் .

நீங்கள் தேவாரம் பாடுவதை மட்டுமே தொழிலாக கொண்டவர் .

ஆயுதப் போரட்டத்திற்கு முழு ஆதரவு கொடுத்து  அது தோல்வியில் முடிந்தபின் உங்களுக்கு மரத்து விட்டதற்காக உயிர்ப்புடன் இருப்பவர்களையும் மரத்துப்போகவேண்டும் என்று நினைகின்றீர்கள் .ஆயுத போராட்டத்தால் தான் அனைத்தும் நடந்ததாகாகவும் நினைகின்றீர்கள் .அவர்கள் செய்தது மட்டும் சரி என்ற நினைப்பில் மட்டும் வாழ்கின்றீர்கள் .

சிந்தனையில் மாற்றம் வேண்டும் அண்ணை .

இன்று நான் எழுதியது உங்களுக்கு புதிது மாதிரி தெரிவதற்கு காரணம் தேர்தலில் கூட்டமைப்பு பெற்ற வெற்றி .

இதே கருத்தைதான் யாழில் காலகாலமாக எழுதிவருகின்றேன் .

நாங்க தேவாரம் மட்டும் தான் பாடினோம்

நீங்கள் தேவாரத்திலிருந்து திருப்புகழ் வரை பாடுகிறீர்கள்

என்ன ஏற்கனவே பயணம் செய்த பாதைதான்

அது தான் நம்பிக்கை வரவில்லை

அதற்காக எங்களுக்கு நீங்க போட்ட தடைகளையோ

தடக்குதலையோ

ஒரு போதும் நான் செய்யமாட்டேன்

தொடருங்கோ

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

இன்னும் 4 மாதம் தான் இருக்குது. உழைப்போம் உழைப்போம் என்று பேசிக் கொண்டிராமல்.. ஒற்றுமையுடன் இதர தமிழ் அரசியல் சக்திகளையும் ஒருங்கிணைத்து ஒரு வலுவான தமிழ் மக்கள் விரும்பக் கூடிய தீர்வை அடையிற வழியை பார்க்கவும். :grin:

நாங்க தேவாரம் மட்டும் தான் பாடினோம்

நீங்கள் தேவாரத்திலிருந்து திருப்புகழ் வரை பாடுகிறீர்கள்

என்ன ஏற்கனவே பயணம் செய்த பாதைதான்

அது தான் நம்பிக்கை வரவில்லை

அதற்காக எங்களுக்கு நீங்க போட்ட தடைகளையோ

தடக்குதலையோ

ஒரு போதும் நான் செய்யமாட்டேன்

தொருங்கோ

ஏற்கனவே பயணம் செய்த பாதைதான் ஆனால் வாகனம் வேறு .

இப்போ நீங்கள் தடை போட்டாலும் கூட பரவாயில்லை ஏனெனில் உயிர் ,உடைமை இழப்புகள் வராது.

நாங்கள் தடை போட்டதிற்கு காரணம் வெல்ல முடியாத போராட்டம் தினமும் எவ்வளோ உயிர்பலிகளை பலி எடுத்ததுதான் .உங்களுக்கு வெற்றிக்கான வெறியில் அந்த வலி தெரியவில்லை.ஒரு பிள்ளை போராட போயிருந்தால் தெரிந்திருக்கும்  என்று நம்புகின்றேன் . 

உங்களது கணக்குப்படி பார்த்தால்

எனது பிள்ளைகள் போராடப்போகும் வயது வரும் முன் போராட்டம் முடிந்தது என்று நான் சந்தோசப்படணும் அண்ணை.

உங்களது பிள்ளைகள்

 உங்களது இந்த உயிர்பலியற்ற போராட்டத்தில் முன்னின்று உழைப்பார்கள் என நம்புகின்றேன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.