Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கள்ளக் காதலருக்கு ஒரு இணையத் தளம் - வந்த சோதனை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கள்ளக் காதலருக்கு ஒரு இணையத் தளம் - வந்த சோதனை

ஆஷ்லி மேடிசன் டாட் காம் என்ற ஒரு இணையத் தளம் கள்ள காதலருக்கானது. www.ashleymadison.com/ :cool:

Life is short - Have an affiar எனும் கோஷத்துடன் வரும் இந்த தளத்தில் ஆண்கள் உறுப்பினராக பணம் கட்டவேண்டும். அதே வேலை பெண்களுக்கு இலவசம். ஒருவர் உணமையான பெயருடனே அங்கே உறுப்பினராக முடியும் என்பதால், அடுத்தவர்களுக்கும் பாதுகாப்பு. மேலும் உயர் ரகசியம் பேணப் படும் என்பது தனிச் சிறப்பு.

இது ஒரு டொரோண்டோ நகரத்தில் இருந்து இயங்கும்  இணையத் தளம்.

குடும்பம் நடாத்தும், ஒரு ஆண் அல்லது பெண்,  தனது பார்ட்னருடன் அவ்வப்போது செக்ஸ் வாழ்க்கை, போர் அடிக்கும் போது  தமது பார்ட்னருக்கு தெரியாமல், அதேவேளை ரகசியமாக, பாதுகாப்பாக இன்னுமொரு தொடர்பினைப் பேண இந்த தளம் வழி செய்து கொடுக்கிறது.

சும்மா சொல்லக் கூடாது. நல்ல பணம் பார்க்கிறது.

உதாரணமாக Mr A வியாபார விசயமாக லண்டனில் இருந்து நியூயார்க் போகிறார். அவரது கள்ளக் காதல் அம்மணி டொராண்டோவில் இருந்து, கலிபோர்னியா போகிறார் என்றால், நியூ யார்க் வழியாக கலிபோர்னியா போவார். இரு கள்ளக் காதலர்களும் ஒரே ஹோட்டலில் தனித்தனி ரூமைப் போட்டாலும், ஒரு ரூமில் தங்குவார்கள். மறுநாள் தத்தமது வேலை பார்க்க கிளம்பி விடுவார்கள்.

இது பெரிய லெவல். ஆனால் ஒவ்வொரு ஜோடியும் ஒவ்வொரு விதமாக, தந்திரமாக சந்தித்துக் கொள்வார்கள்.

இரு ஜோடிகளும், தத்தமது வழக்கமான குடும்ப உறவுகளில் இருப்பதால், உயர் ரகசியம் பேணப் படுவதால், வழக்கமான, வைப்பு, கீப்பு பிரச்சனையோ வேறு வகை பணப் பிடுங்கல் பிரச்சனையோ இருப்பதில்லை  ஆகையால் இது தலைவலி இல்லாத ஒரு கள்ளத்தொடர்பு முறைமை. 

ஆகையால் இது உலகளாவிய ரீதியில் புகழ் அடைந்து வருகிறது.

வேதனை, வேதனை, இந்த தளத்துக்கு வந்த சோதனை.

அண்மையில் உலகப் புகழ் மிக்க ஹக்கர்கள் இந்த தளத்தின் database உள் புகுந்து ஆயிரக் கணக்கான கள்ளக் காதல்  உறுபினர்களின் தகவல்களை திருடி விட்டனர்.

அது மட்டுமல்ல, தம்மிடம் பலரின் தகவல் உள்ளதாகவும், அவைகளை வெளியிடப் போவதாகவும் அறிவிக்க,  அவ்வளவு  தான் அரண்டு போய் விட்டனர் கள்ளக் காதல் உறுப்பினர்கள்.

அப்படி ஒன்றும் தகவல் திருட்டு நடக்க வில்லை, பொய் செய்தி என்றது அந்த தளம். தம்மிடம் 37மில்லின் ஈமெயில் அட்ரஸ் சிக்கி விட்டது என்பதுடன் சில உள்வீட்டு தகவல்களை அனுப்பி எவ்வளவு தூரம் தாம் ஹக் பண்ணி உள்ளோம் என புரிய வைத்து அலற வைத்து உள்ளனர்.

அவ்வாறான தகவல்களில், தள CEO , நோயல் பேர்ட்மன் என்பவருக்கு கடனாக கொடுக்கப் பட்ட $3 மில்லியன் குறித்த உள் வீட்டு  விபரமே முக்கியமாக ஹக்கர்கள் சொல்வது உண்மை தான் என புரிய வைத்தது. :rolleyes:

இப்போது, அந்த கள்ளக் காதல் மன்மதர்களை நேரடியாக அந்த ஹக்கர்ஸ் தொடர்ப்பு கொண்டு பணம் கேட்டு பிளக்மாயில் செய்யக் கூடும் என்பதால் நொந்து போய் இருக்கிறார்கள் கள்ளக் காதல் கோஸ்டிகள்.

அவ்வாறு செய்வது பொலிசாரை இழுக்கும் சட்ட விரோத செயல். ஆயினும் போலீசாரை அழைக்க முடியாத நிலைமையில் இருகின்றனர், இந்த கள்ளக் காதல், குடும்பஸ்தர்கள்.  போலிசை கூப்பிட்டால், குடுப்பம் பனால், டிவோர்சில் தான் முடியும்.

அதேவேளை, வங்கிகள், அரச உயர் பீடங்களில் இருப்போர் இந்த தளத்தில் இருந்தால், அவர்கள் sensitive information தருமாறு கோரி பிளக்மாயில் செய்யப் படலாம் என லண்டன் கார்டியன் பத்திரிகை, கடந்த வெள்ளியன்று எச்சரிக்கை செய்துள்ளது.

இதனால் உங்கள், உங்கள் ஊழியர்களை கண்காணித்து கொள்ளுங்கள் என எச்சரிக்கை செய்கிறது இந்த பத்திரிகை.

அரண்டு போய் கிடக்கும்  கள்ளக் காதல் கோஸ்டிகள், மிக வேகமாக,  தமது கணக்குகளை, இந்த தளத்தில் இருந்து குளோஸ் பண்ணி வருகின்றனர். விரைவில் இந்த கள்ளக் காதல் தளம் இழுத்து மூடப் படும் என்கிறார்கள்.

துண்டைக் காணோம், துணியை காணோம் என்று இவர்கள் ஓட்டம் பிடித்தாலும், இவர்களது, கள்ளத் தொடர்பு விடயங்கள் எங்கோயோ சிக்கி விட்டதே.

தேவையா இது ? :grin:

யாரவது நம்ம யாழ் கள உறுப்பினர்கள் பெயர் சிக்கி விட்டதா என்று, ஹகர்களிடம் விசாரிக்கிறோம். நாமளா பெயர்களை போட முன்னம், நீங்களாகவே வந்து சொல்லி விடுங்கள். :grin::grin:

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

ஐயா நாங்க உங்கால பக்கமே போறதில்லை. இப்ப எல்லாம் குக்கீயை களவெடுத்து வைச்சிட்டு எங்க விசிட் அடிச்சீங்களோ.. அந்தப் பக்க விசயம் சார்ந்த அட் எல்லாம் நல்ல தளங்களுக்கு விசிட் அடிச்சு நடிக்கிறவைக்கு..  கூகிள் குட்டுப் போட்டு குடும்பத்தில பெரிய பிரச்சனைகளை எல்லாம் உருவாக்குவதாகக் கேள்வி. tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்

யாரவது நம்ம யாழ் கள உறுப்பினர்கள் பெயர் சிக்கி விட்டதா என்று, ஹகர்களிடம் விசாரிக்கிறோம். நாமளா பெயர்களை போட முன்னம், நீங்களாகவே வந்து சொல்லி விடுங்கள்

நாங்கள் சுழியங்கள் ....காசு கொடுக்காமல், அட்ரஸ் கொடுக்காமல்,பெயர் கொடுக்காமல் விசயத்தை முடிச்சுபோடுவோம்.......

Edited by putthan

  • கருத்துக்கள உறவுகள்

ஆனாலும் குக்கீயை கொடுத்திடுறீங்களே பாஸ். அது எல்லாத்தையும் திறந்து பார்க்கிற கீ ஆச்சே. சுழியங்களை சுழிக்கவும் ஆக்கள் இருக்கிறாங்கள் உலகத்தில. tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்

நாதம்,,,,தகவல் பழையது என்றாலும்...செய்தியைப் பிறசென்ட் பண்ணின விதத்துக்காக..ஒரு பச்சை!

ரெய்ட் இன் என்ரப்பி ..நினைவில் வந்து போவதைத் தடுக்க முடியவில்லை!:rolleyes:  

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஐயா நாங்க உங்கால பக்கமே போறதில்லை. இப்ப எல்லாம் குக்கீயை களவெடுத்து வைச்சிட்டு எங்க விசிட் அடிச்சீங்களோ.. அந்தப் பக்க விசயம் சார்ந்த அட் எல்லாம் நல்ல தளங்களுக்கு விசிட் அடிச்சு நடிக்கிறவைக்கு..  கூகிள் குட்டுப் போட்டு குடும்பத்தில பெரிய பிரச்சனைகளை எல்லாம் உருவாக்குவதாகக் கேள்வி. tw_blush:

உதாரிது நெடுக்கரே...

உங்களுக்கு பெண்கள் எண்டாலே அலேர்ஜி....

அப்புறம், கள்ளக் காதல் எண்டால்..... tw_confused:

நீங்கள் சொல்லும் விளம்பரங்கள் எல்லாம் வர முடியாது என்பது பிரிட்டிஷ் அரசும், கூகுளும் செய்த உடன்படிக்கை. அப்பர் அந்தமாதிரி தளம் பாத்து விட்டுப் போக, பிள்ளை வேற தளம் பார்க்கும் போது, அப்படி விளம்பரம் வந்து துளைத்ததால் இந்த நடவடிக்கை. 

நாதம்,,,,தகவல் பழையது என்றாலும்...செய்தியைப் பிறசென்ட் பண்ணின விதத்துக்காக..ஒரு பச்சை!

ரெய்ட் இன் என்ரப்பி ..நினைவில் வந்து போவதைத் தடுக்க முடியவில்லை!:rolleyes:  

தகவல் பழையதா? ஒரு மாதம் கூட இல்லையே..

கள்ளக் காதல் தளத்தில் இருந்து துண்டுகள், கோவணங்களை கழட்டி எறிஞ்சு போட்டு, எம்மையும் யாரும் பிடிக்க முடியுமோ எண்டு இருந்தவயளுக்கு இந்த நாசமாப் போன ஹக்கர்கள், செய்த வேலையால, துண்டக் காணம், கோவணத்தைக் காணம் எண்டு ஓடினாலும், விடாது கறுப்பு எண்ட நிலை.

http://www.theguardian.com/technology/2015/aug/22/ashley-madison-adultery-hacking-technology-blackmail

Edited by Nathamuni

எல்லாரும் என்னைப் போல ஏகபத்தினியா விரதனாக இருந்து விட்டால் ஏன்  பிரச்சனை வரபோகுது ?

  • கருத்துக்கள உறவுகள்

எல்லோரும் என்னை மாதிரி இருப்பாங்க எண்டு நினைச்சது என்னோட தப்பு! :innocent: அடுத்தவன் மனைவியைப் பார்க்கலாம் ரசிக்கலாம் லுக்குவிடலாம் பேசலாம் ஜொள்ளுவிடலாம் ஆனா தொட்டு மட்டும் விளையாடக்கூடாது!:rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

உதாரிது நெடுக்கரே...

உங்களுக்கு பெண்கள் எண்டாலே அலேர்ஜி....

அப்புறம், கள்ளக் காதல் எண்டால்..... tw_confused:

நீங்கள் சொல்லும் விளம்பரங்கள் எல்லாம் வர முடியாது என்பது பிரிட்டிஷ் அரசும், கூகுளும் செய்த உடன்படிக்கை. அப்பர் அந்தமாதிரி தளம் பாத்து விட்டுப் போக, பிள்ளை வேற தளம் பார்க்கும் போது, அப்படி விளம்பரம் வந்து துளைத்ததால் இந்த நடவடிக்கை. 

அப்ப அதெப்படி.. நெடுக்கரை சிங்கிள் என்று கண்டுபிடிச்சு.. முஸ்லீம் சிங்கிள்.. இந்தியன் சிங்கிள்.. வெள்ளைச் சிங்கிள் அட் எல்லாம் போடுது கூகிள். நாங்க கேட்டமா.. புரோக்கர் வேலை பார்க்கச் சொல்லி. கடுப்பேத்திறாங்க மைலாட். 

உந்த அட் போட வேணாம் என்று சொன்னாலும் இரண்டு நாள் விட்டிட்டு.. 3ம் நாள் திருப்பி வடிவ வடிவான முஸ்லீம் சிங்கிள் வந்து சிரிச்சுக்கிட்டு நிற்குதுங்க. ரன்டமா வருகுதா.. இல்ல திட்டம் போட்டு வருகுதான்னு தான் புரியல்ல.  நம்ம பாட்சிலர் லைவுக்கு..  சோதனை வைச்சிடுவாங்க போல இருக்கே. அதுவும் வடிவான பெட்டையள் மட்டும் தான் வருகுது. கூகிள் எங்கையோ உளவு பார்க்குது. கண்டுபிடிச்சன்.. தொலைச்சுப்புடுவன் தொலைச்சு. tw_angry::unsure:

Edited by nedukkalapoovan

இதோ நீங்கள் சொன்னது?

நான் சொன்னது, நீலப் படங்கள் விளம்பரம்...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எல்லாரும் என்னைப் போல ஏகபத்தினியா விரதனாக இருந்து விட்டால் ஏன்  பிரச்சனை வரபோகுது ?

21ம் நூற்றாண்டிலை உதெல்லாம் ஒரு வாழ்க்கையே????? :grin:

அதுக்கை வேறை அதை வெளியிலை சொல்லிக்காட்டிக்கொண்டு...tw_glasses:

  • கருத்துக்கள உறவுகள்

இதோ நீங்கள் சொன்னது?

நான் சொன்னது, நீலப் படங்கள் விளம்பரம்...

ஆமா.. பின்ன என்னத்தை என்று நினைச்சியள். tw_blush::unsure:

21ம் நூற்றாண்டிலை உதெல்லாம் ஒரு வாழ்க்கையே????? :grin:

அதுக்கை வேறை அதை வெளியிலை சொல்லிக்காட்டிக்கொண்டு...tw_glasses:

ஹலோ.. யாழை அவருடைய வைவ் உம் பார்கிறால்ல.. அதனால தான் அந்தப் பிரகடனம். அண்மையில் கார் கழுவவிட்டு போட்ட படங்களப் பார்த்தீங்கல்ல.. ஏகபத்தினி விரதனின் ரசிப்புக்களின் ரகசியங்களை. :rolleyes:tw_blush:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவில, டெல்லி, பாம்பே, சென்னை உட்பட பல ஆயிரக்கணக்கில் உறுப்பினர்கள் இருக்கினமாம். எல்லோரும் க்ளோஸ் பண்ணிப் போட்டு ஓடுகினம்.

சென்னையில் விபசார கெடுபிடி அதிகம் இருப்பதால், பெரிய இடத்து ஆக்கள் இந்த தளத்தினை பாவித்தார்கள். வசதி தான். :rolleyes:

ஆமா.. பின்ன என்னத்தை என்று நினைச்சியள். tw_blush::unsure:

உங்களுக்கு வருவது, நீங்கள் 'சிங்கிள்' என்று எதாவது போம் நிரப்பி அனுப்பிய போது, அந்த விபரத்தினை வைத்து அவர்கள் அனுப்பும் விளம்பரங்கள். (முஸ்லீம் சிங்கிள்.. இந்தியன் சிங்கிள்.. வெள்ளைச் சிங்கிள்)

நான் சொன்ன அரச, கூகிள் ஒப்பந்தம் நீலப் படங்களுக்கானது. 

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

உங்களுக்கு வருவது, நீங்கள் 'சிங்கிள்' என்று எதாவது போம் நிரப்பி அனுப்பிய போது, அந்த விபரத்தினை வைத்து அவர்கள் அனுப்பும் விளம்பரங்கள். (முஸ்லீம் சிங்கிள்.. இந்தியன் சிங்கிள்.. வெள்ளைச் சிங்கிள்)

நான் சொன்ன அரச, கூகிள் ஒப்பந்தம் நீலப் படங்களுக்கானது. 

நானும் அப்படித் தான் நினைத்தேன். நன்றி முனி உங்கள் விளக்கத்திற்கு. tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்

தன் கையே தனக்கு உதவி.

  • கருத்துக்கள உறவுகள்

தன் கையே தனக்கு உதவி.

அதுவும் தேவையில்லை. இயற்கையாகவே நல்ல நித்திரையில் கனவுகள் வரும். எல்லாம் அதோடு கழியும். தொந்தரவில்லாத இயற்கை. உயிர்களை உருவாக்கிய இயற்கைக்கு தெரியும் என்னென்ன பரிகாரம் தேடனுன்னு. மனுசரா எதுக்கு கள்ளப் புத்தி வைச்சு அம்புட்டு.. அழுது புலம்பி..??! tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்

தற்போதைய செய்தியின் படி இரண்டு கள்ளக் காதல் உறுப்பினர்களின் தற்கொலை மேற்படி சம்பவத்தால்... நிகழ்ந்துள்ளதாக பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது. tw_anguished:தேவையா இது..??! ஹக்கேர்சும் இல்லைன்னா.. இந்த உலகத்தில் மனிதர்கள் செய்யும் தில்லுமுல்லுகளை.. அவ்வளவு இலகுவாக அடையாளம் காட்ட ஏலாது.tw_blush:

Two individuals associated with the leak of Ashley Madison customer details are reported to have taken their lives, according to police in Canada.

http://www.bbc.co.uk/news/technology-34044506

இருவர் தற்கொலை செய்ததை அடுத்து கனடிய பொலிசார் இந்த விடயம் தொடர்பில் நடவடிக்கை எடுகின்றனர். ஹக்கர்கள் குறித்த தகவல்களுக்கு $500,000 வெகுமதி அளிப்பதாக அறிவித்து உள்ளனர்.

இறந்தவர்களில் ஒருவர் அமெரிக்காவின் டெக்ஸ்டஸ் மாநில போலீஸ் அதிகாரி கப்டன் மைகேல் கொரும் என்பவராவர்.

  • கருத்துக்கள உறவுகள்

நான் என்னுடைய கணக்கை குளோஸ் பண்ணிவிட்டேன்..!tw_cold_sweat: 

  • கருத்துக்கள உறவுகள்

நான் என்னுடைய கணக்கை குளோஸ் பண்ணிவிட்டேன்..!tw_cold_sweat: 

இனி க்ளோஸ் பண்ணி என்ன செய்யிறது ......?
எல்லா விபரமும் விலாவாரியா போட்டிருக்கு 

கனக்க தமிழ் ஈமெயில் முகவரி இருக்கு ....
நான் தனியாக வெளியிட போகிறேன். 

முற்கூட்டியே $150.00 செலுத்தினால் தவிர்க்கப்படும் 

இவ் இணைய தகவல்கள் வெளியாகுவது , ஒருவரின் தனிப்பட்ட விடயங்கள் இப்படி hackers ஆள் பகிர்வது சட்டம் சார்ந்து , நீதித்துறை சார்ந்து  பிழையாக  இருக்கலாம். சட்ட மீறலாக இருக்கலாம். ஆனால் என்னைப் பொறுத்தவரைக்கும் இதில் அறம் சார்ந்த தவறுகள் இல்லை என்றே நினைக்கின்றேன்

தன்னுடன் கூடவே பயணிக்கும் தன் வாழ்க்கை துணைக்கு தெரியாமல் கள்ளத்தனமாக வெளியே தொடர்பு வைப்பது என்பது நம்பிக்கை சார்ந்த ஒரு துரோகம். வெளியே கள்ளத்தனமாக உறவு வைத்து விட்டு வீட்டில் நல்ல பிள்ளையாக நடித்து துரோகம் புரிகின்றவர்கள்  மேல் அனுதாபப்பட தேவை இல்லை என்று நினைக்கின்றேன்.

ஹலோ.. யாழை அவருடைய வைவ் உம் பார்கிறால்ல.. அதனால தான் அந்தப் பிரகடனம். அண்மையில் கார் கழுவவிட்டு போட்ட படங்களப் பார்த்தீங்கல்ல.. ஏகபத்தினி விரதனின் ரசிப்புக்களின் ரகசியங்களை. :rolleyes:tw_blush:

நெடுக்கு என் சொந்தப் பெயரில் இருக்கும் முகனூலில் அப் படங்களைப் போட்டு 2 நாட்களின் பின் தான் யாழில் பகிர்ந்தேன். எனக்கு என்னைப்பற்றி தெரிவதை விட 3 மடங்கு என் மனைவிக்கு என்னைப் பற்றி தெரியும்

நான் சும்மா தமாசுக்கு தான் எழுதி இருந்தேன். உங்களை அக்கருத்து நோகடித்திருந்தால்.. மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். !!tw_dissapointed:

நான் சும்மா தமாசுக்கு தான் எழுதி இருந்தேன். உங்களை அக்கருத்து நோகடித்திருந்தால்.. மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். !!tw_dissapointed:

என்னாச்சு உங்களுக்கு.... நீங்கள் எழுதியது மனசை நோகடிக்கவில்லை ...நானும் சீரியசாக எழுதவில்லை ..

  • கருத்துக்கள உறவுகள்

புரிந்துணர்வுக்கு நன்றி நிழலி. 

  • கருத்துக்கள உறவுகள்

எனது கருத்தும் நிழலியினது போலத் தான்!

திருமணம் என்பது வெறும் சடங்கு மட்டுமல்ல.. அது ஒரு பரஸ்பர ஒப்பந்தம்!

இரகசியமாக மீறப்பட்டாலும்... வலிகள் இன்றி மீறப்பட்டாலும்... அது ஒரு ஒப்பந்த மீறலே!

இந்தத் தகவல்களைப் பகிரங்கப் படுத்துவதில்...எந்த விதமான அந்தரங்க மீறலும் கிடையாது!

இதே போல அரசியல் வாதிகளும் சொத்துக்களும், வருமானங்களும் கூடப் பகிரங்கப் படுத்தப் பட வேண்டும்!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.