Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எத்தனோல் கடத்தல்: நட்சத்திர வீரரின் சகோதரனுக்கு தொடர்பு: அரசாங்கம் புது தகவல்

Featured Replies

எத்தனோல் கடத்தல்: நட்சத்திர வீரரின் சகோதரனுக்கு தொடர்பு: அரசாங்கம் புது தகவல்

இலங்கைக்கு சட்டவிரோதமாக எத்தனோல் இறக்குமதி செய்யப்பட்ட விவகாரம் தொடர்பில் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரரின் சகோதரனுக்கு நெருங்கிய தொடர்பு உள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.ethanol-in-sri-lanka.jpg

நிதி ஒதுக்கீட்டு சட்ட மூலத்தை நிறைவேற்றுவது தொடர்பான விவாதம் பாராளுமன்றத்தில் நேற்று நடைபெற்றது. இந்த விவாதத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க இத்தகவலை தெரிவித்தார்.

இது தொடர்பில் அமைச்சர் ரவி கருணாநாயக்க தொடர்ந்து கூறுகையில்,

இலங்கைக்கு எத்தனோல் கொண்டுவரப்பட்ட விடயம் தொடர்பில் ஊடகங்களில் அடிக்கடி பேசப்பட்டது. எனினும் தற்போது அடிக்கடி பேசப்படுவதில்லை.

அரசியல்வாதிகளுடன் நெருக்கமாக செயற்பட்டு இலங்கைக்கு எத்தனோல் கொண்டு வந்த இருவரின் பெயரை நான் இங்கு குறிப்பிடுகிறேன். ஜயலத் பீரிஸ் என்பவரும் சசிதரன் என்பவருமே எத்தனோல் கடத்தி வந்துள்ளனர் என்பது விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

சசிதரன் என்பவர் இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரராக விளங்கிய பிரபல வீரரின் சகோதரராவார். அவரது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் அவரது சகோதரார் செயற்படுவது வருந்தத்தக்கது.

எமது 100 நாள் வேலைத்திட்ட ஆட்சிக்காலத்தின்போது இது தொடர்பில் என்னோடு ஒப்பந்தம் செய்ய அவர்கள் முயற்சித்தனர். 

இப்போதும் முயற்சிக்கின்றனர். எனினும் அவர்களுடைய முயற்சி தோல்வியிலேயே முடிவடையும். ஏனென்றால் குற்றவாளிகளுக்கு ஆதரவாக நான் எப்போதும் துணைநிற்க மாட்டேன்.

இந்த விவகாரத்துடன் தொடர்புடைய இருவரும் சுங்க அதிகாரிகளுக்கு தொலைபேசியூடாக அச்சுறுத்தல் விடுத்து வருகின்றனர். விரைவில் விசாரணைகளை நடத்தி குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுக்கொடுப்போம் எனத் தெரிவித்தார்.

http://www.virakesari.lk/articles/2015/09/24/எத்தனோல்-கடத்தல்-நட்சத்திர-வீரரின்-சகோதரனுக்கு-தொடர்பு-அரசாங்கம்-புது-தகவல்

  • கருத்துக்கள உறவுகள்

இதாலதான் அந்தப் பன்னாடை, மகிந்தருக்கு குலை அடிச்சுக் கொண்டு கமரோண்ட 'பேக்கதை' கதைச்சதோ? :oO:

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் எத்தோனலை கடத்த வேண்டும் ?
இலங்கையில் எத்தொனலுக்கு தடையா ? 

யாருக்காவது இது பற்றி தெரியுமா ? 

கூகிள்ளில் தேடினேன் ....
அவர்கள் வரி எய்ப்பு வேலை செய்திருக்கிறார்கள்.
வரி கட்டாது சுங்கத்திட்குள்ளால் வெளியே கடத்தி இருக்கிறார்கள். 

  • கருத்துக்கள உறவுகள்

 எதனோல் இருந்தால் அதிலை கள்ள சாராயம் வடிக்கலாம் - சும்மா கிக்கு ஏறுமல்ல !!!

  • கருத்துக்கள உறவுகள்

அதிகாரி :-"How's that?

கடத்தல் காரார்:-"Not out"

இவர் சனல் 4 இல் குத்தி முறிந்ததுக்கு இதுவும் ஒரு காரணம்!! ... அடுத்தது ...??? 

  • கருத்துக்கள உறவுகள்

அதென்ன நட்சத்திர வீரர் ? முத்தையா முரளீதரன் என்று சொல்லுறது ????? மகிந்தவுக்கு விழுந்து விழுந்து கழுவினதுக்கு இதுதான் காரணம் என்று முன்னமே சொல்லப்பட்டதே????? இவரோட ஒப்பிடக்குள்ள சங்கக்கார எவ்வளவோ பரவாயில்லை ! (உடனேயே சண்டைக்கு வரப்படாது...சொல்லீட்டன்)

அதென்ன நட்சத்திர வீரர் ? முத்தையா முரளீதரன் என்று சொல்லுறது ????? மகிந்தவுக்கு விழுந்து விழுந்து கழுவினதுக்கு இதுதான் காரணம் என்று முன்னமே சொல்லப்பட்டதே????? இவரோட ஒப்பிடக்குள்ள சங்கக்கார எவ்வளவோ பரவாயில்லை ! (உடனேயே சண்டைக்கு வரப்படாது...சொல்லீட்டன்)

நானும் இதைத்தான் நினைச்சனான்... முரளிதரன் என்று வெளிப்படையாக சொல்வதுக்கு என்னவாம்

இவர் தம்பி என்னுடன் NIIT யில் படிச்சவர்...படு கள்ளத்தனம் மிகுந்தவர்... இவரும் டி.எம். ஜெயரட்னவும் கூட்டு என்று நம்புகின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்த முரளீதரனும், ஜெயசூரியாவும்  எப்பவோ அவுட்.
 சங்கக்காரவும், ஜெயவர்தனாவும் மகிந்த விரிச்ச வலையில் சிக்காமல் சாதுரியமாக இப்பவும் அவுட் ஆகாமல்  விளையாடுகிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

எங்களுக்கு மாட்டும் சொல்லி கொள்ளுவார்கள் ...
விளையாட்டை விளையாட்ட பாருங்கள் என்று.

அதை போய் சுங்க அதிகாரிகளுக்கும் சொல்றது ....?? 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.