Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நம்பகத்தன்மை வாய்ந்த விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்குவோம் : கனடாவில் சுமந்திரன்

Featured Replies

நம்பகத்தன்மை வாய்ந்த விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்குவோம் : கனடாவில் சுமந்திரன்
நம்பகத்தன்மை வாய்ந்த விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்குவோம் : கனடாவில் சுமந்திரன்

போரினால் பெரிதும் பாதிக்கப்பட்டவர்களின் முழு சம்மதத்தோடு, அவர்களை நியாயப்படுத்தும் வகையில் நம்பகத்தன்மை வாய்ந்த விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்குவோம் என, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

கனடாவுக்கு நேற்று  விஜயம் செய்த சுமந்திரன், கூட்டமைப்பின் கனடா கிளை தலைமையகத்தில் இடம்பெற்ற ‘கலப்பு குற்றவியல் விசாரணை கோரி அமெரிக்கா இலங்கை கூட்டாக ஐ.நா மனித உரிமை பேரவையில் முன்மொழிந்துள்ள தீர்மானமும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடும்’ என்ற தலைப்பில் உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அமெரிக்காவின் குறித்த தீர்மானத்திற்கு சார்பாக இலங்கையும் கையெழுத்திட்டுள்ளதால், இவ்விசாரணை இலங்கையின் இறையாண்மைக்கு பாதிப்பை ஏற்படுத்தாதெனவும், போர்க்குற்ற விசாரணை தொடர்பில் இலங்கையில் உள்ள சிங்கள மக்களுக்கு நியாயப்படுத்த வேண்டிய ஒரு தேவை அரசாங்கத்திற்கு உள்ளதால் அதில் பொதுநலவாய நாடுகளின் நீதவான்கள் மற்றும் ஏனைய நாடுகளின் நீதவான்கள் என்ற சொற்பதம் பாவிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

எனினும், போர்க்குற்ற விசாரணையை தனியே இலங்கை அரசாங்கத்திடம் மட்டும் கொடுத்தால், பாதிக்கப்பட்டவர்களுக்கு அநீதி இழைக்கப்படுகின்றதென, பலத்த குரலில் சொல்வோம் என தாம் ஜெனீவாவில் தெரிவித்ததாக சுமந்திரன் இதன்போது குறிப்பிட்டார்.

பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயத்தைப் பெற்றுக்கொள்ள இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொள்வோம் என குறிப்பிட்ட அவர், பாதிக்கப்பட்டவர்கள் தொடரபில் பொறுப்புக்கூற வேண்டியவர்கள் பொறுப்புக்கூற வேண்டுமென்றும், உண்மைகள் வெளிக்கொணரப்பட வேண்டுமெனவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு பெற்றுக் கொடுக்கப்பட வேண்டுமெனவும் அவர் தெரிவித்தார்.

http://onlineuthayan.com/news/667

  • கருத்துக்கள உறவுகள்

சுமந்திரன் சொன்னபடியால் இதை கண்ணை மூடிக்கொண்டு குரைக்கவேண்டும் மன்னிக்கவும் எதிர்க்கவேண்டும்!

சுமந்திரன் சொன்னபடியால் இதை கண்ணை மூடிக்கொண்டு குரைக்கவேண்டும் மன்னிக்கவும் எதிர்க்கவேண்டும்!

நீங்க முதல்ல குரைச்சிட்டீங்க வாலி சார். சுப்பர். 

வலு கிளீனாக சொல்கிறார் ... கேளுங்கள் ..

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையிலே சொல்லுகிறேன் .....இவரிண்ட லெவலுக்கு வர முடியாது தான் ....இவரிண்ட லெவல் வேற ... 

Edited by அக்னியஷ்த்ரா

  • கருத்துக்கள உறவுகள்

நிலவில் பூமிக்கு அனுப்ப ஆயா  சூடும் வடைக்கு நாங்கள் ஆதரவளிப்போம்!

அது சரீங்க ...... நிலவில ஆயா வடை சுடுதா ?
இந்த கோமாளி கதையை கேட்க ஒரு கோமாளி கூட்டம் உங்களுக்கு பின்னாலும் இருக்கிறது.
நீங்க கொடுத்து வைச்சவர்.

வடை சட்டியை அப்படியே இனி செவ்வாய்க்கே ஷிப் பண்ணலாம்.
வெகு கோமாளி கூட்டம் உங்களுடன் இருக்கும் போது 
எதற்கும் தயங்க தேவை இல்லை. 

  • கருத்துக்கள உறவுகள்

அதுசரி கூட்டமைப்பு மற்றும் ஏனையவர்களுக்குப் புலம்பெயர்நாடுகளில் என்ன வேலை. புலிகள் ௐஆலுத்தில துண்டைப்போட்டு காசுசேர்த்ததுபோக இப்ப இவர்களும் தண்டலுக்கு வந்திட்டினமோ. தாயகத்தில் உள்ளவர்களே உங்களைத் தெரிவுசெய்தவர்கள் தாயகத்தில் இருப்பவர்களுக்கே ஒரு இக்கட்டுகள் எதுவுமில்லாத வாழ்க்கை வெண்டும் நீங்கள் அவர்களுக்குப் போய்ச்சொல்லுங்கோவன் அடுத்ததாக நாங்கள் என்ன செய்யப்போறம் நீங்கள் என்னசெய்யவேண்டுமென பிறகெதுக்குக் கோட்டுச்சூட்டுப்போட்டுக்கொண்டு இங்கைவந்து மைக்கைப்பிடிச்சு கதைவிடுகிறியள். இமானுவல் ஐயா கிருபாகரன் பிரிட்டிஸ் தமிழ் போறும்காரர் இவர்கள் எல்லம் பாக்கிற வேலையைப் பாக்கப்போங்கள்.

சுமந்திரன் கூறுகிறார் தாயகத்தவரது உணர்வுகளுக்கு மதிப்புக்கொடுக்கவேண்டுமென, அதுதான் நூற்றுக்கன சிங்கக்கொடிக்கு இலங்கைத்தூதரகத்தில சொல்லிவைச்சிருக்கிறன் ஒரு பெரிய ஊர்வலம் ஒண்டு ஒழுங்குபடுத்தப்போறன் அப்பே லங்காவின் சுதந்திரதினத்தில.

நான் வாழும் நாடுதான் முதல் முதலில் தமிழ்மக்களை ஒருங்கிணைத்து சிறீலங்காவின் சுதந்திரதினத்தைக்கொண்டாடியது எனும் வரலாற்றை எதிர்வரும் 2016 மாசிமாதம் நான்காம்திகதி உலகுக்கு உணர்த்தப்போறன்.

  • கருத்துக்கள உறவுகள்

நிலவில் பூமிக்கு அனுப்ப ஆயா  சூடும் வடைக்கு நாங்கள் ஆதரவளிப்போம்!

அது சரீங்க ...... நிலவில ஆயா வடை சுடுதா ?
இந்த கோமாளி கதையை கேட்க ஒரு கோமாளி கூட்டம் உங்களுக்கு பின்னாலும் இருக்கிறது.
நீங்க கொடுத்து வைச்சவர்.

வடை சட்டியை அப்படியே இனி செவ்வாய்க்கே ஷிப் பண்ணலாம்.
வெகு கோமாளி கூட்டம் உங்களுடன் இருக்கும் போது 
எதற்கும் தயங்க தேவை இல்லை. 

58000 வாக்காளர்களைக் கோமாளிகள் என்கிறீர்களா? tw_cry:

  • கருத்துக்கள உறவுகள்

58000, 580000, 5800000 ஒரு பொருட்டல்ல. புலத்தில் இன்றும் பூப்போல மக்களால் பாதுகாக்கப்படும் ஒரு கட்சியோடு எந்த நார் சேர்ந்தாலும் கைலாசம்போகும்.

  • கருத்துக்கள உறவுகள்

58000 வாக்காளர்களைக் கோமாளிகள் என்கிறீர்களா? tw_cry:

என்னுடைய கருத்திற்கும் 
உங்களுடைய கேள்விக்கும் என்ன சம்மந்தமோ தெரியவில்லை.

மக்கள் வாக்கு போட்ட எவனும்...
 உலகில் இன்னமும் மக்களை ஏமாற்றவில்லை ?
நாட்டை காட்டிகொடுத்து நக்கி நாயிலும் கீழாக வாழவில்லை ?
மக்கள் பணத்தை கொள்ளையடிக்கவில்லை ....?

நான் எழுதியது இந்த பூமியோடு சம்மந்தபட்ட கருத்து 
நீங்கள் ஏதும் மேலோகம் சம்மந்தமாக கேள்வி கேட்கிறீர்களோ தெரியவில்லை. 

(சுமந்திரந்தான் எமக்கு வேண்டும் என்று 58 ஆயிரம் பேர் பட்டினி போர் இருந்து சுமந்திரனை கொண்டு வந்து அமைச்சர் ஆக்கினார்களா?
தேர்தலில் இரண்டு பேர் நின்றால் ஒருவர் வெல்லுவார். தவிர வாக்கு எண்ணியவர்கள் என்ன குளறுபடி பண்ணினார்கள் என்பது யாருக்கும் தெரியாது) 

சுமந்திரன் எமக்கு வேண்டாம் என்று புலத்தில் ஒரு பட்டினி போர் நடந்தது. :grin:

உண்மைதான், வாககு எண்ணியதில் பிழை, வாக்கு போட்டவங்கள் கோமாளிகள், நேர்மையான தேர்தல் என்று அறிக்கை விட்ட சர்வதேச கண்காணிப்பாளர்கள் பக்க சார்பு. 

ஒரு தோத்துப்போன கொள்கைக்கு இவ்வளவு சாக்கு போக்கா? 

Edited by Sooravali

எந்த காப்பில் உங்கள் வண்டியை தள்ளிவிடலாம் என்று பார்க்குமுன்னர் 
முதலில் எழுதியதை சரியாக முறையாக வாசிக்க பாருங்கள் 
முறையாக வாசித்தாலே ....... இங்கு பாதி புடுங்கு பாடு தேவை இல்லாதது.

எனது கருத்து முழுமையாக எழுதி இருக்கு 
பின்புதான் அடைப்பு குறி இட்டு இதை எழுதி இருக்கு ... இது என்னுடைய கருத்தும்  இல்லை நிலை பாடும் இல்லை.
அப்படி என்றால். அடைப்பு குறி இல்லாமலேயே எழுதி இருக்க வேண்டும்.

இப்படியும் ஒரு கோணம் இருக்கிறது என்ற சுட்டி காட்டல் வேறு இருக்கும்போது 
எனது ஆரம்ப கருத்துக்குள் வாக்குபோட்ட மக்களை புகுத்தியதியே சுட்டி காட்டினேன். 

இப்போ வாக்கு போட்டவர்களை நான் கோமாளி என்றேன் என்ற திரிப்பு முழுமை அடைந்து முழுநிலவாகி விட்டது.
எனது ஆரம்ப கருத்துக்கு எந்த சம்மந்தமுமில்லாத மக்களை கொண்டு வந்து அவர் புகுத்தினார் 
அதற்கு கொடுத்த விளக்கத்தை விளங்க கூட உங்களிடம் வசதி இல்லை ... இந்த நிலையில் 
என்ன வறுமையில் இப்படி எழுதுகிறீர்கள் என்றே புரியவில்லை.

சுமந்திரன் மக்களுக்கு விமோசனம் வேண்டி கொடுத்தால் கொடுக்கட்டுமே .... யார் வேண்டாம் என்றார்?
சுமந்திரன் ஜெனிவா சென்று இங்கு நடந்தது இனபடுகொலை இல்லை என்று சொல்லி பரப்புரை செய்யவேண்டும் 
என்று கூறியா மக்கள் வாக்கு போட்டார்கள் ???

இவர் வாக்கு போடுங்கள் என்று ஊர் ஊராக பிச்சை எடுத்தார் 
வெட்டுவேன் புடுங்குவேன் என்றார் ..
மக்கள் வாக்கு போட்டார்கள் இவர் வென்றார் இப்போ இவர் அமைச்சர்.
அதோடு அது முடிந்துவிட்டது.......

இப்போ இவர் என்ன 58 ஆயிரம் மக்கள் எடுத்த முடிவுடனா இங்கு வந்து குரைத்து  கொண்டு திரிகிறார் ??

திட்டமிட்ட இன அழிப்பு 1948இல் இருந்தே நடக்கிறது 
இப்போ நாம் ஊர் மொழி உடமை அனைத்தும் இழந்து அடிமைகளாக எந்த அதிகாரமும் அற்று இருக்கும் நிலையில் 
நடந்தது இன போர் இல்லை என்று நாமே கூறுவதில் ஏதும் லாபம் இருந்தால் 
அதை எழுதுங்களேன் ......
நாங்களும் வாசித்து அறிவை வளர்க்கலாம்.
ஏன் நான் எழுதாத வற்றை உருவாக்கி பின்பு வாய்ப்பன் மா மாதிரி வைச்சு இழுக்குறீர்கள் ? 

உங்களிடம் ஏதும் எழுத இருந்தால் எழுதுங்கள் .....
சுமந்திரனை பற்றி கவிதை எழுதுங்கள் கட்டுரை எழுதுங்கள் ...
முடிந்தால் பச்சை குத்தி விடுகிறேன்.
எழுதாத விடயங்களை சோடிச்சு ஏன் தேவை இல்லாத விவாதத்தை தூண்டுகிறீர்கள்?

இனி தனிமனித தாக்குதல் ....
தண்டவாள தாக்குதல் ..
என்று மட்டுறுத்தினர் இதுக்க குதிக்க 
இதெல்லாம் தேவையா ?
எழுதியதை விட்டுவிட்டு ..... அடைப்பு குறிக்குள் அடைச்சு வைச்சதை போய் தூக்கி வருகிறீர்கள்?

நிலவில் பூமிக்கு அனுப்ப ஆயா  சூடும் வடைக்கு நாங்கள் ஆதரவளிப்போம்!

அது சரீங்க ...... நிலவில ஆயா வடை சுடுதா ?
இந்த கோமாளி கதையை கேட்க ஒரு கோமாளி கூட்டம் உங்களுக்கு பின்னாலும் இருக்கிறது.
நீங்க கொடுத்து வைச்சவர்.

வடை சட்டியை அப்படியே இனி செவ்வாய்க்கே ஷிப் பண்ணலாம்.
வெகு கோமாளி கூட்டம் உங்களுடன் இருக்கும் போது 
எதற்கும் தயங்க தேவை இல்லை. 

தமிழ் கூட்டமைப்பின் வரவேற்பு ஏகமனதாக விடுக்கப்படவில்லை- பங்காளிக் கட்சிகள் அதிருப்தி

எந்த காப்பில் உங்கள் வண்டியை தள்ளிவிடலாம் என்று பார்க்குமுன்னர் 
முதலில் எழுதியதை சரியாக முறையாக வாசிக்க பாருங்கள் 
முறையாக வாசித்தாலே ....... இங்கு பாதி புடுங்கு பாடு தேவை இல்லாதது.

எனது கருத்து முழுமையாக எழுதி இருக்கு 
பின்புதான் அடைப்பு குறி இட்டு இதை எழுதி இருக்கு ... இது என்னுடைய கருத்தும்  இல்லை நிலை பாடும் இல்லை.
அப்படி என்றால். அடைப்பு குறி இல்லாமலேயே எழுதி இருக்க வேண்டும்.

இப்படியும் ஒரு கோணம் இருக்கிறது என்ற சுட்டி காட்டல் வேறு இருக்கும்போது 
எனது ஆரம்ப கருத்துக்குள் வாக்குபோட்ட மக்களை புகுத்தியதியே சுட்டி காட்டினேன். 

இப்போ வாக்கு போட்டவர்களை நான் கோமாளி என்றேன் என்ற திரிப்பு முழுமை அடைந்து முழுநிலவாகி விட்டது.
எனது ஆரம்ப கருத்துக்கு எந்த சம்மந்தமுமில்லாத மக்களை கொண்டு வந்து அவர் புகுத்தினார் 
அதற்கு கொடுத்த விளக்கத்தை விளங்க கூட உங்களிடம் வசதி இல்லை ... இந்த நிலையில் 
என்ன வறுமையில் இப்படி எழுதுகிறீர்கள் என்றே புரியவில்லை.

சுமந்திரன் மக்களுக்கு விமோசனம் வேண்டி கொடுத்தால் கொடுக்கட்டுமே .... யார் வேண்டாம் என்றார்?
சுமந்திரன் ஜெனிவா சென்று இங்கு நடந்தது இனபடுகொலை இல்லை என்று சொல்லி பரப்புரை செய்யவேண்டும் 
என்று கூறியா மக்கள் வாக்கு போட்டார்கள் ???

இவர் வாக்கு போடுங்கள் என்று ஊர் ஊராக பிச்சை எடுத்தார் 
வெட்டுவேன் புடுங்குவேன் என்றார் ..
மக்கள் வாக்கு போட்டார்கள் இவர் வென்றார் இப்போ இவர் அமைச்சர்.
அதோடு அது முடிந்துவிட்டது.......

இப்போ இவர் என்ன 58 ஆயிரம் மக்கள் எடுத்த முடிவுடனா இங்கு வந்து குரைத்து  கொண்டு திரிகிறார் ??

திட்டமிட்ட இன அழிப்பு 1948இல் இருந்தே நடக்கிறது 
இப்போ நாம் ஊர் மொழி உடமை அனைத்தும் இழந்து அடிமைகளாக எந்த அதிகாரமும் அற்று இருக்கும் நிலையில் 
நடந்தது இன போர் இல்லை என்று நாமே கூறுவதில் ஏதும் லாபம் இருந்தால் 
அதை எழுதுங்களேன் ......
நாங்களும் வாசித்து அறிவை வளர்க்கலாம்.
ஏன் நான் எழுதாத வற்றை உருவாக்கி பின்பு வாய்ப்பன் மா மாதிரி வைச்சு இழுக்குறீர்கள் ? 

உங்களிடம் ஏதும் எழுத இருந்தால் எழுதுங்கள் .....
சுமந்திரனை பற்றி கவிதை எழுதுங்கள் கட்டுரை எழுதுங்கள் ...
முடிந்தால் பச்சை குத்தி விடுகிறேன்.
எழுதாத விடயங்களை சோடிச்சு ஏன் தேவை இல்லாத விவாதத்தை தூண்டுகிறீர்கள்?

இனி தனிமனித தாக்குதல் ....
தண்டவாள தாக்குதல் ..
என்று மட்டுறுத்தினர் இதுக்க குதிக்க 
இதெல்லாம் தேவையா ?
எழுதியதை விட்டுவிட்டு ..... அடைப்பு குறிக்குள் அடைச்சு வைச்சதை போய் தூக்கி வருகிறீர்கள்?

தமிழ் கூட்டமைப்பின் வரவேற்பு ஏகமனதாக விடுக்கப்படவில்லை- பங்காளிக் கட்சிகள் அதிருப்தி

நீங்கள் நிறைய விடயங்களை ஒன்றா போட்டு இருக்கிறிங்க, இதை உங்க கருத்து என்று என்னால் எடுக்கமுடியாது.

உங்களோடு கண்டமாதிரி வாதிக்க என்ற அழைப்பாக எடுக்கலாம், இருந்தாலும் முடிந்தவரை சுருக்கமாக சொல்ல முயகிறேன்.

58 மக்கள் இவருக்கு என்று மட்டும் வைத்து கொள்வோம்... இவர் எடுக்கும் முடிவு எதுவாக இருந்தாலும் என்று ஏன் வாக்களித்திருக்க முடியாது?. 

அண்ணா! பங்காளி கட்சியென்று எதுவும் இல்லை வெறும் அன்ன காவடிகளே இருக்கு. இதை உறுதிப்படுத்த அடுத்த தேர்தல் வரை காத்திருக்க நீங்களுமா? 

Edited by Sooravali

58000 வாக்காளர்களைக் கோமாளிகள் என்கிறீர்களா? tw_cry:

முந்தி .. அப்பாப்பிள்ளை தொடங்கி, வரதராசபெருமாள், டக்லசு, பிள்ளையான், ... இப்ப சித்தார்த்தன், சும் வரை ... வாக்காளர்கள் கோமாளிகளா??

அங்காலை தமிழகத்தை பார்க்கேலையா ... அன்று ரயிலுக்கு ரிக்கட் எடுக்க வக்கிலாத கருணாநிதி  ... இன்று இந்தியாவிலேயே விரல் எண்ணிக்கையில் அடங்கக்கூடிய கோடீஸ்வர குடும்பத்தை வளர்த்திருக்கிறார் .. இன்றும் அக்குடும்பத்துக்கு லட்சம் என்ன கோடிக்கணக்கில் வாக்குகள் விழவில்லையா? அங்காலை அம்மா ... கம்பி எண்ணத்தொடங்கி, மோடியால் வெளியே வந்தவ .. தேர்தல் வரட்டும் ... யாராவது அம்மாவை அசைக்கட்டும் பார்ப்பம்? ... வாக்களர்கள் கோமாளிகளா???

உலகம் முழுக்க பல பல சும் .. சம் ... மாவைக்கள்! ... வாக்களர்கள் கோமாளிகளா?? 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.