Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிள்ளையான் கைது

Featured Replies

பிள்ளையான் கைது
[ ஞாயிற்றுக்கிழமை, 11 ஒக்ரோபர் 2015, 01:00.28 PM GMT ]
1431029846images.jpg
கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் என்றழைக்கப்படும் சிவனேசதுரை சந்திரகாந்தன் கைது செய்யப்பட்டுள்ளார்.

குற்றப்புலனாய்வு பிரிவினரிடம் வாக்குமூலமளித்த பின்னரே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலதிக தகவல்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.

http://www.tamilwin.com/show-RUmtzASVSVhwzG.html

  • கருத்துக்கள உறவுகள்

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் என்றழைக்கப்படும் சிவனேசதுரை சந்திரகாந்தன் கைது செய்யப்பட்டுள்ளார். குற்றப்புலனாய்வு பிரிவினரிடம் வாக்குமூலமளித்த பின்னரே இவர் கைது செய்யப்பட்டுள்ளார். தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலை தொடர்பான வாக்குமூலத்தின் பின்னரே இவர் கைது செய்யப்பட்டதாக, சட்டதரணி தெரிவித்துள்ளார்.   -

See more at: http://www.tamilmirror.lk/156254/tamil-mirror-stock#sthash.cYqIMzQw.dpuf

நல்லவிடயம், இவரை தொடர்ந்து மிஸ்டர் கருநாய் கைதுசெய்யப்படுவார் எனநினைக்கிறன்

  • கருத்துக்கள உறவுகள்

Pillay-2.jpg

Pillay-1.jpg

கூப்பிட்டு ஒரு statement வாங்கிப் போட்டு அனுப்பி விடுவினம் எண்டு ஒரு கெத்தா வந்து இறங்கின ஆளை தூக்கி உள்ளார போட்டு விட்டினம்.

கையில பாக் உடன் ரெடியாத் தான் போறார். :grin:

இனி ஆர்டர் எங்க இருந்து வந்தது என்று சொல்லப்போறார்...

Edited by Nathamuni

...... சிங்களத்தின் வேள்விக் கடாக்கள் (கிடாய்கள்) ... வரிசையாக வரப் போகின்றன ... நமோ நமோ மாதா!

jaffna_vairavar_tempel_02.jpg

image_handle-2.jpg

... வளர்க்கும் போது இந்தக்கடாக்கள் வளர்த்தவன் மார்பிலும் சிலவேளை பாயுமாம், அவனும் நல்லாக பருக்கி/தீத்தி வளர்தெடுத்து ... இறுதியாக ... சதக்!

கேள்வி ... இனி வரிசையாக வரப்போகிற கிடாய்களை ஒழுங்கு படுத்துக?

டக்கு, கருணாமான், சித்தர்

கேள்விக்கு சரியாக பதிலளிப்போருக்கு வேள்விக்கடாக்களில் ஒவ்வொன்றிலும், ஓர் பங்கு இறைச்சி இனாமாக வழங்கப்படும்!

Edited by no fire zone

DSC04800.JPG

மிஸ்ஸிஸ் மண்ணெண்ணை ... இப்ப அரச அமைச்சர் ... ஏன், மிஸ்ரர் மண்ணெண்ணையின் கொலைக்கு நீதி கேட்டு கண்ணகி வேடம் போடவில்லை???? ... ஆச்சரியம்தான்!!!!!!!!

பிள்ளையானிடம் தொடர்ந்து விசாரணை
பிள்ளையானிடம் தொடர்ந்து விசாரணை

கைது செய்யப்பட்ட கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரான பிள்ளையான் எனப்படும் சிவனேசத்துரை சந்திரகாந்தனிடம், தொடர்ந்தும் விசாரணை நடைபெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் கொலை தொடர்பில், பிள்ளையானிடம் நேற்று மாலை விசாரணை நடத்திய குற்றப்புலனாய்வு பிரிவினர் பின்னர் கைது செய்தனர்.

நேற்றைய விசாரணையின் போது ஆரம்பகட்ட வாக்குமூலம் பெறப்பட்டதாக குறிப்பிட்ட பொலிஸார், தொடர்ந்து அவரிடம் மேலதிக விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாக குறிப்பிட்டுள்ளார்.

ஜோசப் பரராஜசிங்கம் கொலை தொடர்பில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் முன்னாள் தேசிய அமைப்பாளர் பிரதீப் மாஸ்டர் மற்றும் ரங்கசாமி கனகநாயகம் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையிலேயே பிள்ளையான் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

http://onlineuthayan.com/news/1140

  • தொடங்கியவர்

Pillay-2.jpg

முதுகு பையோ வந்ததை பார்த்தால், நிண்டு ஆறுதலா போகலாம் எண்டுதான் வந்தவர் மாதிரி கிடக்கு. :)

Edited by Sooravali

  • கருத்துக்கள உறவுகள்

  • கருத்துக்கள உறவுகள்

பிள்ளையானின், வலது கை, பிரதீப் மாஸ்டரை ஒரு மீடியா பேட்டி எடுத்தது.

எங்கள் கட்சித் தலைவர், கைது செய்யப் படவில்லை. தடுத்து வைக்கப்பட்டுள்ளார், என்றார்.

மேலும் விளக்கம் கேட்டபோது, பொலிசார் கைவிலங்கு போட்டு இழுத்துப் போனால் கைது. அவராகப் போய் விசரனைக்கு ஒத்துழைத்தால்.... கைது என்று சொல்ல முடியாது, என்றார்.

இப்படியான அறிவுக் கொழுந்துகள் நண்பராக இருந்தால், எதிரிகள் எதற்கு?

Edited by Nathamuni

பிள்ளையார் பிடித்து வழிபட்டால் எல்லா சௌபாக்கியங்களும் கிடைக்கும். இதை பிழையாக விளங்கி இவங்க பிள்ளையானை பிடிச்சுட்டாங்க. :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்
பிள்ளையானின் கைது அரசியல் பழிவாங்கல்
பிள்ளையானின் கைது அரசியல் பழிவாங்கல்

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரான பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் கைது செய்யப்பட்டமை, அரசியல் பழிவாங்கல்களுக்காகவே இடம் பெற்றுள்ளது என்று தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச்செயலாளர் பூ.பிரசாந்தன் தெரிவித்துள்ளார்.

கடந்த பொதுத்தேர்தல் காலத்திலும் தமது கட்சிக்குப் பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் பிள்ளையானிடம் விசாரணைகள் நடத்தப்பட்டன என்று சுட்டிக்காட்டியுள்ள அவர், அரசு ஒருபுறம் நல்லாட்சி  எனக் கூறிக் கொண்டு மறுபுறத் தில் அரசில் பழிவாங்கலை முன் னெடுக்கின்றது என்றும் குற்றஞ்சாட்டியுள்ளார்.

பிள்ளையான் தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி கடந்த பொதுத்தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தது.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் கொலை தொடர்பில் கடந்த ஞாயிற்றுக்கிழமை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணை மேற்கொண்டிருந்தனர். அதன்முடிவில் அவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் தொடர்ந்தும் விசாரணைகள் மேற்கொள்ளப்படுகின்றன என்று  பொலிஸார் கூறியுள்ளனர்.

ஜோசப் பரராஜசிங்கம் கொலை வழக்கின் பிரதான சந்தேகநபர்களாகக் கருதப்படும் இருவர் கடந்தவாரம் கைது செய்யப்பட்டிருந்தனர்.

http://onlineuthayan.com/news/1235

  • கருத்துக்கள உறவுகள்

:grin: :grin: :grin:

நவம்பர் 4ம் திகதி வரை உள்ளார இருக்கப் போறார், பிள்ளையான். கொழும்பு பிரதம நீதிவான், CID யினரின் மனுவை அனுமதித்து இதற்கான உத்தரவை இன்று பிறப்பித்தார்.

Edited by Nathamuni

பிள்ளையானின் விளக்கமறியல் காலம் நவம்பர் மாதம் 4ம் திகதி வரையில் நீடிப்பு
பிள்ளையானின் விளக்கமறியல் காலம் நவம்பர் மாதம் 4ம் திகதி வரையில் நீடிப்பு

கிழக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சரும், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளருமான சிவநேசத்துரை சந்திரகாந்தன் எனப்படும் பிள்ளையானின் விளக்கமறியல் காலம் எதிர்வரும் நவம்பர் மாதம் 4ம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

 பிள்ளையானிடம் தொடர்ந்தும் விசாரணை நடத்த வேண்டியிருப்பதனால் அவரை தடுத்து வைத்து விசாரணை செய்ய அனுமதிக்குமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நிதவானிடம் கோரியிருந்தனர்.

 இந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட கொழும்பு நீதிமன்ற பிரதம நீதவான் கிஹான் பிலப்பிட்டிய, நவம்பர் மாதம் 4ம் திகதி வரையில் விளக்கமறியல் உத்தரவினை நீடித்துள்ளார்.

 தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலை தொடர்பான விசாரணைகளுக்காக சென்றிருந்த போது பிள்ளையான் கைது செய்யப்பட்டிருந்தார்.

 இந்தக் கொலை தொடர்பில் ஏற்கனவே இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  பிள்ளையானின் மற்றுமொரு நெருங்கிய சகாவான சரன் என்பவர் தற்போது சுவிட்சர்லாந்தில் தஞ்சமடைந்துள்ளதாகவும் அவரும் இந்தக் கொலையின் முக்கிய சூத்தரதாரி எனவும் தெரிவிக்கப்படுகிறது.

 2005ம் ஆண்டு நத்தார் பண்டிகை விசேட ஆராதனையின் போது ஜோசப் பரராஜசிங்கம் இனந்தெரியாதவர்களினால் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

http://onlineuthayan.com/news/1244

http://www.onlineuthayan.com/news/1244

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தியாகி குட்டிமணி அண்ணன் ஜெயிலுக்கு போன மாதிரி இவர் போஸ் கொடுத்துக்கொண்டு போறார் ...பாவம்.
கடைசியில் இந்த விளையாட்டிலும் தண்டிக்கப்படப் போறது என்னவோ தமிழ் குற்றவாளிகள் தான் ..

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.