Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இனச் சுத்திகரிப்பு என நான் கூறியது மெய்: சுமந்திரன்

Featured Replies

article_1446525384-aa.jpg

யாழ்ப்பாணத்திலிருந்து முஸ்லிம் மக்களை வெளியேற்றியமையானது சட்ட வரைவிலக்கணத்துக்கமைய, இனச் சுத்திகரிப்பே ஆகும் எனத் தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், பலவந்தமாக ஓர் இனத்தை ஒரு பிரதேசத்திலிருந்து வெளியேற்றியமையை, இனப் பாதுகாப்பு எனக் கூறுவது, அவர்களை மேலும் அவமானப்படுத்தும் செயலாகும் எனவும் குறிப்பிட்டார்.

யாழ்ப்பாணத்திலிருந்து முஸ்லிம் மக்கள் வெளியேற்றப்பட்டமையானது இனப்பாதுகாப்பு என, தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் ஆகியோர் தெரிவித்த கூற்றுக்களுக்கு மறுதலிக்கும் வகையில், நேற்று திங்கட்கிழமை, தமிழ்மிரருக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், 'யாழ். முஸ்லிம் மக்களை விடுதலைப் புலிகள், இனச்சுத்திகரிப்பு செய்யவில்லை, மாறாக இனப் பாதுகாப்புக்காகவே அவர்கள் பாதுகாப்பாக, எந்தத் தாக்குதலும் இல்லாமல் வெளியேற்றப்பட்டார்கள் எனக்கூறுவது, ஏற்றுக்கொள்ள முடியாத விடயமொன்றாகும்.

யாழ்ப்பாணத்திலிருந்து முஸ்லிம் மக்களை வெளியேற்றியமையானது, சட்ட வரைவிலக்கணத்துக்கமைய, இனச்சுத்திகரிப்பே ஆகும். அதில், எவ்வித மாற்றுக் கருத்துக்களுக்கும் இடமில்லை. இனச் சுத்திகரிப்புக்கென ஒரு சட்ட வரைவிலக்கணம் உள்ளது. அதாவது, ஓர் இனத்தை, ஓர் இடத்திலிருந்து முற்றாக வெளியேற்றினால் அது, இனச் சுத்திகரிப்பாகும். அதற்கமைவாகவே நான், இந்தக் கருத்தை முன்வைத்தேன்' என்றார்.

மேலும், 'இந்தக் கருத்து, நான் இப்போது கூறியது அல்ல. மாறாக, 2013ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம், வந்தாறுமூலையில்  நடைபெற்ற கூட்டமொன்றிலும், யாழ்ப்பாணத்திலிருந்து முஸ்லிம் மக்களை வெளியேற்றியமையானது இனச்சுத்திகரிப்பே ஆகும் எனக் கூறியிருந்தேன். அந்தக் கூட்டத்தில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரனும் பிரசன்னமாகியிருந்தார். அப்போது நான் கூறிய கருத்துத் தொடர்பில் அவர், மறுதலிப்பை வெளிப்படுத்தியிருக்கவில்லை. தற்போது நான் முன்வைத்த கருத்தை அவர், எவ்வாறு மறுதலிக்க முடியும்?

யாழ்ப்பாணத்திலிருந்து முஸ்லிம் மக்களை வெளியேற்றியமையானது இனப்பாதுகாப்பு எனக் கூறுவது நகைப்புக்குரிய விடயமாகும்.பலவந்தமாக ஓர் இனத்தை ஒரு பிரதேசத்திலிருந்து வெளியேற்றப்பட்டதை எவ்வாறு இனப்பாதுகாப்பு எனக் கூறுவது எனவும் அவர் கேள்வியெழுப்பினார்.

http://www.tamilmirror.lk/158183/இனச-ச-த-த-கர-ப-ப-என-ந-ன-க-ற-யத-ம-ய-ச-மந-த-ரன-#sthash.zyzdJUev.dpuf

 

  • கருத்துக்கள உறவுகள்

இவர் பெரிய சட்டம் படிச்சிட்டார். அப்ப மூதூரில் இருந்து தமிழ் மக்கள் விரட்டி அடிக்கப்பட்டது. கல்முனையில் இருந்து தமிழ் மக்கள் விரட்டப்பட்டது. கொழும்பில் இருந்து 1983 இல் தமிழர்கள் விரட்டி அடிக்கப்பட்டது.. இவற்றையும் தாங்கள் இனச்சுத்திகரிப்பு என்று சொல்லிக் கொள்ளலாம் தானே. தமிழ் மக்கள் மீதான அரசியல் தூண்டலுடன் நிகழ்ந்த சிங்கள.. முஸ்லீம் காடைப் படைகளின் படுகொலைகளை..இனப்படுகொலை என்பதையே உச்சரிக்க தயங்கும் இவருக்கு.. யாழில் இருந்து முஸ்லீம்கள் பாதுகாப்புக்காரணங்களுக்காக வெளியேற்றப்பட்டமை (1995 இல் யாழ் குடாவில் இருந்து தமிழ் மக்களும் பாதுகாப்புக் காரணங்களுக்காக வன்னிக்கு வெளியேற்றப்பட்டனர் - இதுவும் மிஸ்டர் சுமந்திரனின் சட்ட கண்ணாடியூடு இன சுத்திகரிப்பாகும்..) இனச் சுத்திகரிப்பாம். எங்க போய் முட்டிறது இவங்கட புலமையை நம்பி.. இதுங்களுக்கு வாக்குப் போடுற முட்டாள்களை தான் சொல்லனும். tw_angry::rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

ஜெனிவாவில் இனப்படுகொலை என்றதை மறுதலித்தவரிடம் இதை எப்படி எதிர் பார்க்க முடியும்??? இவர்கள் எல்லாம் குண்டு சட்டிக்குள் குதிரையோட்டத்தான் லாயக்கு!!

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் முஸ்லிம்களுக்கு எதிரான ஆதரவான கருத்துக்கள் திடீரென முளைத்துள்ளன? புலிகள் அதற்காக மன்னிப்பு கேட்டு பல வருடங்கள் ஆகி விட்டது. இப்போ தூசி தட்டுவதற்கு அரசியல் லாபம் காரணமாக இருக்கலாம்.

சுமந்திரன் நீங்கள் உண்மையில் நன்றி  உள்ள ஒரு ஜீவன். அதை கூட புரிந்து கொள்ள முடியாத சில  மனிதர்கள் உங்கள் மீது கல்லெறிகின்றார்கள். நீங்கள் அதைப்பற்றி சிறிதும்  கவலைப்படாமல் உங்கள் விசுவாசத்தைக்,  காட்டவேண்டிய வீட்டுக்கு காட்டுவீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு.   நன்றி வணக்கம்.  ஓ நன்றி என்ற சொல்லுக்கே இலக்கணமான உங்களுக்கு நன்றியா? திருப்பதிக்கே லட்டா என று கேட்கிறீர்கள்? மன்னித்து கொள்ளுங்கள். 

  • கருத்துக்கள உறவுகள்

அதொன்னுமில்ல.. எதிர்க்கட்சி தலைவர் பதவி எதிர்கட்சி நிலை ஊசலாடுது. இப்படியே அதை நம்பிக்கிட்டு இருக்க முடியாது. நல்லாட்சியில் ஒரு அங்கமாக வேணாமோ.. அமைச்சர் பதவி வகிக்க வேணாமோ.. அதுக்கு வக்காளத்து வாங்க ஆக்களை சேர்க்கிறார். கிழக்கில் முதலமைச்சர் பதவியை தாரை வார்க்கல்ல.. எல்லாம் ஒரு நோக்கோடு தான்.. நகருது. அது சம் சும் கும்பலுக்கு இலாபநோக்கு. மக்களைப் பற்றியோ மண்ணின் விடுதலைக்காகப் போராடியவர்கள் பற்றியோ இந்தக் கும்பலுக்கு கிஞ்சித அக்கறையும் இல்லை. ஆனால் சிங்களவன் தன் ஆமியை பாதுகாக்கிறான். முஸ்லீம் தன்னட்ட காடைப்படை இருந்ததை ஒத்துக் கொள்ளவே இல்லை. தமிழன் மட்டும் அம்மணமா நிற்கனுமாம். சம் சும் கும்பல் ஆதாயம் அடைய. tw_angry::rolleyes:

தேவாரம் பாடாமல் உண்மையை பேசும் தலைவர்கள் தான் எமக்கு தேவை .

துணிந்து உண்மையை பேசும் சுமந்திரனுக்கு வாழ்த்துக்கள் .

  • கருத்துக்கள உறவுகள்

சுமந்திரன் சொல்வதில் எந்த உண்மையும் இல்லை என்று அவருக்கு தேவாரம் பாடுறவைக்கு தெரிய வாய்ப்பில்லை. :rolleyes:tw_blush:

இது ஏலவே பிரபா - ஹக்கீம் உடன்படிக்கையின் கீழ் தீர்க்கப்பட்ட ஒரு விடயம். இரு தலைவர்களும் சரிவர விளங்கிக் கொண்ட விடயம். இதில் சுமந்திரன்.. வெறும்.. தமிழ் மக்கள் மீது குற்றம் சுமத்தி சில போலி சமநிலைப்படுத்தல்களுக்குள் (இதற்கான அடித்தளம் கனடாவில் சில எட்டப்பர்களால் அமைத்துக் கொடுக்கப்பட்டது.) சொந்த அரசியல் ஆதாயம் தேட விளைகிறார் என்பது தான் முக்கியம். இது சுமந்திரனுக்கு தேவாரம் பாடுவோர் அறிந்திருக்க வாய்ப்பில்லை. காரணம் அவர்களுக்கு ஒரு பக்க நியாயம் மட்டும் தான் கண்ணுக்குத் தெரியும் வியாதி வியாபித்துள்ளது. tw_blush:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

யார்ரா அவன் சுமந்திரன் பொய் சொன்னார் என்று சொன்னது ......?

  • கருத்துக்கள உறவுகள்

இப்படிப் பட்ட.... அல்லக்கைகளால், தமிழனுக்கு அவமானம். 
இன்னும் இதுகளின், வாயால்.... என்ன இழவுகள்  வந்து விழப் போகுதோ......tw_angry:

  • கருத்துக்கள உறவுகள்

 ஐயா வக்கீலாரே!

முஸ்லீம்கள் வெளியேற்றப்படும் போது இலங்கையில் தானே இருந்தீர்கள்? அப்போ உங்கள் எதிர்ப்பை ஏன் காட்டவில்லை? தமிழினம் அழியும்போதும் அங்கேதானே இருந்தீர்கள்?அப்போ  எங்கே போனது உங்கட சட்ட வரவிலக்கணம்? அவர்களை வெளியேற்றியது தவறு, எம்மினத்தை கூண்டோடு அழித்ததைப்பற்றி உங்கட சட்டம் என்ன சொல்லுது? நீங்கள் ஒரு பச்சோந்தி. நடந்தது என்ன எண்டு  தெரியாததுகளை கொண்டுவந்து சேர்த்தவையும், வாக்குப் போட்டவையும் பதில் சொல்லவேண்டும். பாலாய் வாத்து தேனாய் ஊத்தினாலும் பாம்பு கடிச்சுத்தான் கொல்லும், யானை அடிச்சுதான் கொல்லும். மக்கள் வாக்கு பெற்று வந்தவர், அந்த மக்களுக்கு சேவை செய்யிறதை விட்டிட்டு. எங்கட வாக்குப் பிச்சையில தெரிவாகி, எங்களுக்கே சவால் விடுறார்.

  • கருத்துக்கள உறவுகள்

ஆயிரம் ஆயிரம் தமிழர்கள் கொல்லப்பட்டு அவர்கள் நிலங்களில் இருந்து  அவர்கள் வெளியேற்றப்பட்டு அந்தக் காணிகளில் இராணுவம் குடியிருந்தபோதும் அதனை இனப்படுகொலை என நிரூபிக்க முடியாது என்று சொன்ன சுமத்திரன் எந்த உயிர்ச்சேதமுமில்லாமல் முஸ்லிம் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு அவர்கள் மீண்டும் வரலாம் என்று பகிரங்க மன்னிப்புக் கேட்ட பின்பும்  முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டது இனச்சுத்திகரிப்பு என்பது ஏதோ உள்நோக்கத்துடன் கூறப்பட்ட கூற்றாகவே பார்க்க வேண்டும்.ஐயாவுக்கு சுன்னத்துச் செய்ய வேண்டியதுதான் .

  • கருத்துக்கள உறவுகள்

ஆயிரம் ஆயிரம் தமிழர்கள் கொல்லப்பட்டு அவர்கள் நிலங்களில் இருந்து  அவர்கள் வெளியேற்றப்பட்டு அந்தக் காணிகளில் இராணுவம் குடியிருந்தபோதும் அதனை இனப்படுகொலை என நிரூபிக்க முடியாது என்று சொன்ன சுமத்திரன் எந்த உயிர்ச்சேதமுமில்லாமல் முஸ்லிம் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு அவர்கள் மீண்டும் வரலாம் என்று பகிரங்க மன்னிப்புக் கேட்ட பின்பும்  முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டது இனச்சுத்திகரிப்பு என்பது ஏதோ உள்நோக்கத்துடன் கூறப்பட்ட கூற்றாகவே பார்க்க வேண்டும்.ஐயாவுக்கு சுன்னத்துச் செய்ய வேண்டியதுதான் .

வார்த்தைகளின் கடினத்தை பார்க்கும்போது .....
எல்லாம் ஏற்கனவே ஆகிட்டுது போலதான் இருக்கு. 

  • கருத்துக்கள உறவுகள்

ஏற்கனவே சுமந்திரன் சொல்லியிருப்பது இது: "தமிழர்களுக்கு நடந்தது இனப்படுகொலை என்பதை நான் உட்பட தமிழர்கள் எல்லாரும் ஏற்றுக் கொள்கிறோம். ஆனால், சர்வதேசம் வகுத்த நியமங்களின் படி அதை இப்போது நிறுவ இயலாது. அப்படி முயன்று நாம் நிறுவ இயலாது போனால் அது இனப்படுகொலை செய்த அரசை exonerate பண்ணுவது போல ஆகி விடும்! அதனாலேயே இனப்படுகொலை என்ற பதத்தை முன்னிறுத்துவது இப்போது எமக்கு நல்லது அல்ல!"

"சும்" மின் இந்த விளக்கத்தை விளங்கிக் கொள்ள தமிழ் அறிவு மட்டும் போதும் என்று நினைக்கிறேன். ஆனால், "சும்" என்றாலே பிளட் பிரஷர் எகிறும் நபர்களிடம் எல்லா வகையான அறிவும் மங்கி மறைந்து விடுவதால் எவ்வளவு தான் சொன்னாலும் பயன் இருக்கப் போவதில்லை!

மேலும்  எங்களுக்குப் புரிய மறுக்கும் இன்னொரு விடயம்: வன்னியில் தமிழர்களை சிங்கள அரசு கொன்று குவித்த போது பக்கத்து யாழ்ப்பாணத்திலும், கிழக்கிலும், கொழும்பிலும், மலையகத்திலும் தமிழர்கள் அன்றாட வாழ்க்கையைக் கிட்டத்தட்ட சாதாரணமாக வாழ்ந்து கொண்டிருந்தார்கள். கொழும்பில் லொட்ஜுகளில் தங்கியிருந்த தமிழர்களை சிங்கள அரசு வெளியேற்ற முயன்ற போது, கொழும்பில் பல லட்சம் தமிழர்கள் வெளியேற்றப் படுவோம் என்ற அச்சம் இன்றி வீடுகளில் வாழ்ந்து கொண்டிருந்தார்கள். இதனாலேயே தமிழர் என்ற இனத்தைக் குறி வைத்து சிங்கள அரசு இனச்சுத்திகரிப்பில் ஈடுபட்டது என்று நிறுவுதல் சட்ட ரீதியாகக் கடினமாக இருக்கிறது. இந்த நிலையை, முஸ்லிம் என்ற இன/மத அடையாளத்தை மட்டும் வைத்துக் கொண்டு ஒரு பிரதேசத்தில் இருந்து சில மணிநேர அவகாசத்தில் வெளியேற்றப் பட்ட முஸ்லிம்களுடன் ஒப்பிட முடியாது. "அவர்களைக் கொல்லாமல் விட்டது பெருந்தன்மை" என்ற தொனியில் சிலர் வாதிடுவது வரலாற்றறிவின் வறுமை. முதல் உலகப் போர் காலத்தில், பெரும்பாலான ஆர்மேனியர்களை துருக்கியர்கள், நேரடியாகக் கொல்லவில்லை. கடுங்குளிருக்குள் விரட்டி விட்டார்கள், ஆர்மேனியர்கள் பட்டினியால் மடிந்தார்கள். ஆனால், அது இன்று இன அழிப்பு என்று பார்க்கப் படுகிறது.

கள்ள மௌனம், உணர்ச்சியூட்டும் பேச்சு, மக்கள் கேட்க விரும்புவதை மட்டும் பேசுதல் என்று இருக்கும் தலைவர்களை தலையில் தூக்கி வைத்திருக்கிறோம். ஒருவர் உண்மையை, சட்டத்தைப் பேசினால் அவரையும் திட்டி, அவருக்கு வாக்களித்தவர்களையும் முட்டாள்கள் என்று திட்டும் அளவில் இருக்கிறோம்! சந்தேகமேயில்லாமல் நாங்க நல்லா வருவோம்!  :rolleyes: 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இலங்கையில் இனசுத்திகரிப்பு நடக்கவில்லை. இனப்படுகொலை நடக்கவில்லை. 
பயங்கரவாதிகள் மட்டுமே அழிக்கப்பட்டார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

ஜஸ்ரின் செய்வது சப்பைக்கட்டு. ஏலவே டப்ளின் தீர்ப்பாயத்தில் உலகத்தரம் வாய்ந்த அரசியல் சட்ட வல்லுனர்கள் கூடி ஆராய்ந்து இலங்கையில் நடந்தது இனப்படுகொலை தான் என்று அறிவிக்க காரணங்கள் இருக்கக் காணப்படுகிறது. அது குறித்து இன்னும் ஆராயனும் என்று அறிவிக்க முடியுதுன்னா.. .. சுமந்திரனுக்கு மட்டும்.. அவரது சட்ட புத்தகத்தில் காரணம் இல்லாமல் போனது எப்படி..??!

சர்வதேச ஆதரவு பிரகடனங்கள் என்பது சட்டரீதியானவை அல்ல. தேவைகளின் பாற்பட்டவை என்பதை அண்மையில்.. ஈராக் மீதான யுத்தத்தில் தனது முடிவுக்கு வருத்தம் தெரிவித்த பிளேயரின் செயலே சாட்சி. 

சும்மா சும்மா சுமந்திரனுக்கு தேவாரம் பாடாமல் நியாயத்தைப் பேச யாழுக்கு வரும் படித்தவர்கள் பழகிக் கொள்வது இனத்துக்கு நல்ல அறிவுரைகள் வந்து சேர வழி சேர்க்கும். 

Between 14 and 16 January 2010 the Permanent Peoples' Tribunal held a Tribunal on Sri Lanka in DublinIreland to investigate allegations that the Sri Lankan armed forces committed war crimes and crimes against humanity during its final phase of the war, and to examine violations of human rights in the aftermath of the war and the factors that led to the collapse of the 2002 ceasefire.[69] The tribunal's 11-member panel of judges consisted of François Houtart (chair), Daniel Feierstein, Denis HallidayEren Keskin, Mary Lawlor, Francesco Martone, Nawal El SaadawiRajinder SacharSulak Sivaraksa, Gianni Tognoni and Oystein Tveter. The tribunal received reports from NGOs and human rights groups, victims’ testimony, eye-witness accounts including from members of the Sri Lankan armed forces, expert testimony, journalistic reports, video footage and photographs. Parts of the tribunal were held in camera to protect the identity of witnesses. The tribunal found the Sri Lankan government guilty of war crimes and crimes against humanity.[70]

The tribunal could not find enough evidence to justify the charge of genocide but it requested that a thorough investigation be held as some of the evidence it had received indicated "possible acts of genocide".[71] 

https://en.wikipedia.org/wiki/Alleged_war_crimes_during_the_final_stages_of_the_Sri_Lankan_Civil_War

Edited by nedukkalapoovan

இலங்கையில் இனசுத்திகரிப்பு நடக்கவில்லை. இனப்படுகொலை நடக்கவில்லை. 
பயங்கரவாதிகள் மட்டுமே அழிக்கப்பட்டார்கள்.

இலங்கையில் இனப்படுகொலை இலங்கை சுதந்திரம் அடைந்ததில் இருந்து திட்டமிட்டு நடைமுறைப்படுத்தப்படுகின்றது ஆனால் முள்ளிவாய்க்காலில் பயங்கரவாதிகள் அழிப்பு என்ற பெயரில் பல அப்பாவி பொதுமக்களும் அழிக்கப்பட்டார்கள் அதானால் தான் உலகம் பார்த்துக்கொண்டுஇருந்தது .

  • கருத்துக்கள உறவுகள்

அஸ்ரின் செய்வது சப்பைக்கட்டு. ஏலவே டப்ளின் தீர்ப்பாயத்தில் உலகத்தரம் வாய்ந்த அரசியல் சட்ட வல்லுனர்கள் கூடி ஆராய்ந்து இலங்கையில் நடந்தது இனப்படுகொலை தான் என்று அறிவிக்க காரணங்கள் இருந்ததாயின்.. சுமந்திரனுக்கு மட்டும்.. அவரது சட்ட புத்தகத்தில் காரணம் இல்லாம போனது.

சர்வதேச ஆதரவு பிரகடனங்கள் என்பது சட்டரீதியானவை அல்ல. தேவைகளின் பாற்பட்டவை என்பதை அண்மையில்.. ஈராக் மீதான யுத்தத்தில் தனது முடிவுக்கு வருத்தம் தெரிவித்த பிளேயரின் செயலே சாட்சி. 

சும்மா சும்மா சுமந்திரனுக்கு தேவாரம் பாடாமல் நியாயத்தைப் பேச யாழுக்கு வரும் படித்தவர்கள் பழகிக் கொள்வது இனத்துக்கு நல்ல அறிவுரைகள் வந்து சேர வழி சேர்க்கும். 

நான் சொன்ன அதே தமிழ் பிரச்சினை தான் உங்களுக்கும்: டப்ளின் தீர்ப்பாயத்தை அங்கீகரித்திருக்கும் நாடுகள் எவை? இதற்கு முதல் டப்ளின் தீர்ப்பாயத்தில் கொடுக்கப் பட்ட தீர்ப்புகளுக்கு என்ன மாதிரியான முடிவுகள் ஏற்பட்டது? பதில் இருக்கிறதா உங்களிடம்?

யாருக்கும் அறிவுரை கூற எனக்குத் தகுதியில்லை, ஆனால் ஒரு விடயத்தை அதுவாகவே அணுக என்னால் முடியும் (see things as they are!). உங்களுக்கு அது இயலாது என நினைக்கிறேன். ஒரு விடயத்தில் உணர்வையும் preconceived ideas ஐயும் கலந்து பார்க்கும் போது மிஞ்சுவது வெறும் செயல் வடிவம் பெறமுடியாத கோஷங்கள் (rhetoric) மட்டுமே! அந்த கோஷங்கள் இனத்தை வழி நடத்தும் அறிவுரைகளா என்ற கேள்விக்குக் காலம் தான் பதில் சொல்லும்! பார்க்கலாம்!  

Edited by Justin
சில கருத்துகள் சேர்க்கப் பட்டன

  • கருத்துக்கள உறவுகள்

நான் சொன்ன அதே தமிழ் பிரச்சினை தான் உங்களுக்கும்: டப்ளின் தீர்ப்பாயத்தை அங்கீகரித்திருக்கும் நாடுகள் எவை? இதற்கு முதல் டப்ளின் தீர்ப்பாயத்தில் கொடுக்கப் பட்ட தீர்ப்புகளுக்கு என்ன மாதிரியான முடிவுகள் ஏற்பட்டது? பதில் இருக்கிறதா உங்களிடம்?

சுமந்திரன் என்னமாதிரியான ஆய்வுகளின் அடிப்படையில்.. இனசுத்திகரிப்பு என்பதை வெளியிடுகிறார் என்று ஏதாவது ஆதாரங்கள் உள்ளனவா உங்களிடம்..??!

டப்ளின் அறிக்கை.. சட்ட வல்லுனர்களால் தயாரானது ஒன்று. அவர்கள் சுமந்திரனை விட அனுபவம் வாய்ந்தவர்கள் என்பது உறுதி. tw_blush:

யாருக்கும் அறிவுரை கூற எனக்குத் தகுதியில்லை, ஆனால் ஒரு விடயத்தை அதுவாகவே அணுக என்னால் முடியும் (see things as they are!). உங்களுக்கு அது இயலாது என நினைக்கிறேன். ஒரு விடயத்தில் உணர்வையும் preconceived ideas ஐயும் கலந்து பார்க்கும் போது மிஞ்சுவது வெறும் செயல் வடிவம் பெறமுடியாத கோஷங்கள் (rhetoric) மட்டுமே! அந்த கோஷங்கள் இனத்தை வழி நடத்தும் அறிவுரைகளா என்ற கேள்விக்குக் காலம் தான் பதில் சொல்லும்! பார்க்கலாம்!  

இதனை நீங்கள் எழுதுவது வேடிக்கையாக உள்ளது. எந்த ஆய்வுகளும் அடிப்படைகளும் ஆதாரத் தேடல்களும் இன்றி தன் சட்டப்புத்தகத்தில் இருக்கு என்று ஒருவர் சொல்ல அதனை நியாயயித்து கருத்து எழுதும் நீங்கள்.. rhetoric செய்வதாக எங்களைப் பார்த்துச் சொல்வது உங்களுக்கு அடுக்குதா...?! பதிலுக்கு இதையே உங்களுக்கு நாங்கள் எழுதலாம். அது பிரயோசனம் இல்லை யாருக்கும். tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்

சுமந்திரன் என்னமாதிரியான ஆய்வுகளின் அடிப்படையில்.. இனசுத்திகரிப்பு என்பதை வெளியிடுகிறார் என்று ஏதாவது ஆதாரங்கள் உள்ளனவா உங்களிடம்..??!

டப்ளின் அறிக்கை.. சட்ட வல்லுனர்களால் தயாரானது ஒன்று. அவர்கள் சுமந்திரனை விட அனுபவம் வாய்ந்தவர்கள் என்பது உறுதி. tw_blush:

‘Ethnic Cleansing’ versus Genocide?  

Benjamin Lieberman (

Edited by Donald Bloxham and A. Dirk Moses

 
Subject:
History, Genocide and Ethnic Cleansing
 

This article compares ethnic cleansing with genocide. Since the 1990s, ethnic cleansing has become one of the most widely known forms of violence directed against groups. Ethnic cleansing is related to genocide, but ethnic cleansing is focused more closely than genocide on geography and on forced removal of ethnic or related groups from particular areas. The greatest overlap between ethnic cleansing and genocide takes place when forced removal of population leads to a group's destruction. Ethnic cleansing is often a policy carried out by strong states to mould the population map, especially of border zones, but the breakup of such states also generates power struggles that can lead to ethnic cleansing. Another paradox is that partition or division of ethnically or religiously mixed states has been identified both as a cause of ethnic cleansing and as a possible remedy for ethnic cleansing.

"சும்" இந்த வரைவிலக்கணத்திலேயே பேசுகிறார் என நம்புகிறேன்.

டப்ளின் தீர்ப்பாய அறிஞர்கள் "சும்" ஐ விடத் திறமானோர் என்பதில் விவாதமில்லை. தீர்ப்பாயத்தின் தீர்ப்பினால் எமக்கு ஒரு செயல்முறை நன்மையும் இல்லை என்பதே சும்மின் வாதம்! நான் அதை ஏற்றுக் கொள்கிறேன். அப்படி ஒரு நன்மை உண்டென்று சொல்லும் நீங்கள் தான் ஆதாரம் காட்ட வேண்டியிருக்கிறது!

இது நான் மேலே குறிப்பிட்டது:

"முஸ்லிம் என்ற இன/மத அடையாளத்தை மட்டும் வைத்துக் கொண்டு ஒரு பிரதேசத்தில் இருந்து சில மணிநேர அவகாசத்தில் வெளியேற்றப் பட்ட முஸ்லிம்களுடன்..."

சுமந்திரன் என்னமாதிரியான ஆய்வுகளின் அடிப்படையில்.. இனசுத்திகரிப்பு என்பதை வெளியிடுகிறார் என்று ஏதாவது ஆதாரங்கள் உள்ளனவா உங்களிடம்..??!

டப்ளின் அறிக்கை.. சட்ட வல்லுனர்களால் தயாரானது ஒன்று. அவர்கள் சுமந்திரனை விட அனுபவம் வாய்ந்தவர்கள் என்பது உறுதி. tw_blush:

இதனை நீங்கள் எழுதுவது வேடிக்கையாக உள்ளது. எந்த ஆய்வுகளும் அடிப்படைகளும் ஆதாரத் தேடல்களும் இன்றி தன் சட்டப்புத்தகத்தில் இருக்கு என்று ஒருவர் சொல்ல அதனை நியாயயித்து கருத்து எழுதும் நீங்கள்.. rhetoric செய்வதாக எங்களைப் பார்த்துச் சொல்வது உங்களுக்கு அடுக்குதா...?! பதிலுக்கு இதையே உங்களுக்கு நாங்கள் எழுதலாம். அது பிரயோசனம் இல்லை யாருக்கும். tw_blush:

மேலே வரைவிலக்கணம் ஒரு மதிப்பிற்குரிய இன அழிப்பு/சுத்திகரிப்புத் தொடர்பான நிபுணரிடம் இருந்து, விக்கிபீடியாவில் இருந்தல்ல என்பதைக் கவனிக்கவும்! முஸ்லிம்களின் வெளியேற்றம் எப்படி இந்த வரைவிலக்கணத்தில் அடங்கவில்லை எனக் கூறுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

இது தப்பு. நடந்த சம்பவங்கள்.. ஆதாரங்கள்.. நிகழ்வுகளின் தன்மை.. நோக்கம்.. இவை குறித்து எந்த ஆய்வும் ஆதாரமும் இன்றி வரைவிலக்கணத்தை நிகழ்வுக்குள் திணித்து.. சுமந்திரன் செய்வது சுத்த போலிப் பித்தலாட்டம்.

அந்த நிகழ்வின் நேரடிச் சாட்சி நாங்கள்... 

அங்கு வெளியிடப்பட்ட அறிவிப்பு இதுதான்...

கிழக்கில் தமிழ் - முஸ்லீம் மக்களிடையே தூண்டிவிடப்பட்ட இன பதட்டம் வடக்கிலும் தொடராமல் இருக்க.. கிழக்கில் இருந்து தமிழ் மக்கள் வகைதொகையின்றி விரட்டி அடிக்கப்படும் நிலை போல் ஒன்று நிகழாமல் இருக்கவும்.. முஸ்லீம் மக்களின் பாதுகாப்பை முன்னிட்டும்.. அவர்கள் முக்கிய உடமைகளோடு குறிப்பிட்ட கால வெளிக்குள் யாழ் குடாவை விட்டு பத்திரமாக வெளியேறவும்.. அவர்களின் உடமைகளுக்கு சொத்துக்களின் பாதுகாப்புக்கு விடுதலைப்புலிகள் பொறுப்பு என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. நிலமைகள் சீரடைந்ததும் நீங்கள் மீண்டும் உங்கள் வாழிடத்துக்கு திரும்பி வர உத்தரவாதம் அளிக்கப்படுகிறீர்கள். இதுதான் அப்போது வெளியிடப்பட்ட ஒலி பெருக்கிகள் அறிவிக்கப்பட்ட செய்தியின் சாரம். 

இதற்கும் வரைவிலக்கணம் செல்வதற்கும் இடையில் பாரிய இடைவெளி உண்டு. 

சமந்திரன் செய்வது எந்த ஆதாரமும்... சாட்சியங்களும்.. ஆய்வும் அற்ற விசமப் பொருத்தல்கள். நாங்களே நேரடி சாட்சியங்கள். எங்கள் வீட்டில் வைத்து முஸ்லீம் ஆசிரியர்கள் சிலர் கூடி இந்த முடிவை வரவேற்றதை அவதானித்தவர்கள். நாங்கள் சந்தோசமாகவே போகிறோம்.. வீட்டைப் பார்த்துக் கொள்ளுங்கள் என்று சொல்லிச் சென்றார்கள். இன்று வரை அவர்கள் யாரும் தாம் விரட்டி அடிக்கப்பட்டதாக.. அச்சுறுத்தி அனுப்பப்பட்டதாகச் சொன்னதில்லை. ஆனால் கொழும்பில் வாழ்ந்த சுமந்திரன்.. என்ன அடிப்படையில் இந்த நிகழ்வுக்குரிய ஆதாரங்களை சேகரித்து பக்கச் சார்ப்பு இல்லாமல் ஆய்வு செய்து இந்த இனச் சுத்திகரிப்பு பிரகரனத்தை வெளியிட்டார் என்பதுதான் கேள்வி..??!  tw_blush:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

இது தப்பு. நடந்த சம்பவங்கள்.. ஆதாரங்கள்.. நிகழ்வுகளின் தன்மை.. நோக்கம்.. இவை குறித்து எந்த ஆய்வும் ஆதாரமும் இன்றி வரைவிலக்கணத்தை நிகழ்வுக்குள் திணித்து.. சுமந்திரன் செய்வது சுத்த போலிப் பித்தலாட்டம்.

அந்த நிகழ்வின் நேரடிச் சாட்சி நாங்கள்... 

அங்கு வெளியிடப்பட்ட அறிவிப்பு இதுதான்...

கிழக்கில் தமிழ் - முஸ்லீம் மக்களிடையே தூண்டிவிடப்பட்ட இன பதட்டம் வடக்கிலும் தொடராமல் இருக்க.. கிழக்கில் இருந்து தமிழ் மக்கள் வகைதொகையின்றி விரட்டி அடிக்கப்படும் நிலை போல் ஒன்று நிகழாமல் இருக்கவும்.. முஸ்லீம் மக்களின் பாதுகாப்பை முன்னிட்டும்.. அவர்கள் முக்கிய உடமைகளோடு குறிப்பிட்ட கால வெளிக்குள் யாழ் குடாவை விட்டு பத்திரமாக வெளியேறவும்.. அவர்களின் உடமைகளுக்கு சொத்துக்களின் பாதுகாப்புக்கு விடுதலைப்புலிகள் பொறுப்பு என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. 

இதற்கும் வரைவிலக்கணம் செல்வதற்கும் இடையில் பாரிய இடைவெளி உண்டு. 

சமந்திரன் செய்வது எந்த ஆதாரமும்... சாட்சியங்களும்.. ஆய்வும் அற்ற விசமப் பொருத்தல்கள். நாங்களே நேரடி சாட்சியங்கள். எங்கள் வீட்டில் வைத்து முஸ்லீம் ஆசிரியர்கள் சிலர் கூடி இந்த முடிவை வரவேற்றதை அவதானித்தவர்கள். நாங்கள் சந்தோசமாகவே போகிறோம்.. வீட்டைப் பார்த்துக் கொள்ளுங்கள் என்று சொல்லிச் சென்றார்கள். இன்று வரை அவர்கள் யாரும் தாம் விரட்டி அடிக்கப்பட்டதாக.. அச்சுறுத்தி அனுப்பப்பட்டதாகச் சொன்னதில்லை. ஆனால் கொழும்பில் வாழ்ந்த சுமந்திரன்.. என்ன அடிப்படையில் இந்த நிகழ்வுக்குரிய ஆதாரங்களை சேகரித்து பக்கச் சார்ப்பு இல்லாமல் ஆய்வு செய்து இந்த இனச் சுத்திகரிப்பு பிரகரனத்தை வெளியிட்டார் என்பதுதான் கேள்வி..??!  tw_blush:

வரைவிலக்கணப்படி சும் சொன்னார் என்றால் உங்கள் வீட்டில் கூடிய முஸ்லிம் நபர்கள் (ஒரு நாலு பேர் இருக்குமா?) சொன்னதும் செய்ததும் அதை நீங்கள் பார்த்ததும் வரைவிலக்கணத்தை விட உறுதியான ஆதாரம் என்கிறீர்கள்!

என் சிங்கள நண்பர் ஒருவனும் சொன்னான்: "நீ என்ன தமிழனை அடிக்கிறோம் வெட்டுறோம் என்கிறாய், நீ என்னோட தானே றூம் மேற்றாக இருக்கிறாய், உன்னை வெட்டியா போட்டம்?" என்று. அவன் உண்மையை தான் சொல்லியிருக்கிறான் என்று இப்ப வெளிச்சிட்டுது எனக்கு! :rolleyes: 

உங்கள் நேரத்திற்கு நன்றி நெடுக்கர்!

  • கருத்துக்கள உறவுகள்

 

வரைவிலக்கணப்படி சும் சொன்னார் என்றால் உங்கள் வீட்டில் கூடிய முஸ்லிம் நபர்கள் (ஒரு நாலு பேர் இருக்குமா?) சொன்னதும் செய்ததும் அதை நீங்கள் பார்த்ததும் வரைவிலக்கணத்தை விட உறுதியான ஆதாரம் என்கிறீர்கள்!

என் சிங்கள நண்பர் ஒருவனும் சொன்னான்: "நீ என்ன தமிழனை அடிக்கிறோம் வெட்டுறோம் என்கிறாய், நீ என்னோட தானே றூம் மேற்றாக இருக்கிறாய், உன்னை வெட்டியா போட்டம்?" என்று. அவன் உண்மையை தான் சொல்லியிருக்கிறான் என்று இப்ப வெளிச்சிட்டுது எனக்கு! :rolleyes: 

உங்கள் நேரத்திற்கு நன்றி நெடுக்கர்!

என்ன முட்டாள் தனமான வாதம். ஒரு வரவிரைக்கலணம் என்பதை எமது தேவைக்குப் பொருத்துவதல்ல. நிகழ்வுகளின் நோக்கங்கள்.. அவை நிகழ்ந்த சூழல்கள்.. அங்கு நிகழ்ந்த உண்மைச் சம்பவங்கள்.. சாட்சியங்களின் பதிவுகள்.. அரசியல் சாராத மக்களின் கருத்துக்கள்.. ஒரு நடுநிலையான விசாரணையின் பின் வரும் முடிவை வரவிலக்கணத்தோடு ஒத்து தான் இன சுத்திகரிப்பா.. இன அழிப்பா என்பதை சொல்லனும். அதைவிடுத்து சுமந்திரன் தன் இஸ்டத்துக்கு எந்த ஆதாரமும் இன்றி முஸ்லீம்கள் மக்கள் வெளியேற்றப்பட்டார்கள் என்பதை இன சுத்திகரிப்பு என்று சொல்ல இயலாது. அது பொருந்தாது.

இப்போ மூதூரில் இருந்து தமிழ் மக்கள் முஸ்லீம்களால்.. உடமைகள் அழிக்கப்பட்டு.. வெட்டி கொல்லப்பட்டு.. அச்சுறுத்தப்பட்டு.. திரும்பி செல்ல முடியாத நிலைக்கு அந்த இடத்தில் இருந்து துரத்தி அடிக்கப்பட்டது தான்.. இனச் சுத்திகரிப்புக்குள் அப்பட்டமாகப் பொருந்துகிறது.  இன்று வடக்கில் பல ஊர்களில் சிங்கள இராணுவம் மக்களை மீளக் குடியேற அனுமதிக்காமல்.. விரட்டி அடித்துள்ளமை இன சுத்திகரிப்பு.

முஸ்லீம்களின் வெளியேற்றம் இனப் பதட்டத்தை தணிக்க மேற்கொள்ளப்பட்ட ஒரு தற்காலிக நடவடிக்கை. பிரபா - ஹக்கிம் உடன்படிக்கையின் கீழ் முஸ்லீம்கள் மீண்டும் தமது இருப்பிடம் வந்து சேர அழைக்கப்பட்டும் விட்டார்கள். என்ன அறிவிப்பில் சொல்லப்பட்டதோ அது நிறைவேற்றப்பட்டது. அதுதான் முக்கியம். சாட்சியம் தொடர் நிகழ்வுகள்...முக்கியம்.. வரைவிலக்கணங்களைப் பொருத்த. சுமந்திரனின் அரசியல் நோக்கமல்ல...??!tw_blush:

முள்ளிவாய்க்காலிலும் பயங்கரவாதிகளிடம் இருந்து பொதுமக்களை காக்கத்தான்  சிங்கள அரசு அப்படி ஒரு தாக்குதலை மேற்கொண்டது ,

நெடுக்கர் சிங்களவராக இருந்தால் இப்படிதான் எழுதுவார் .

நெடுக்கரிடம் தான் முஸ்லிம்கள்  வீட்டை பத்திரமாக பார்க்க சொல்லிபோனார்கள் என்பதை கேட்கவே பெருமையாக இருக்கு .

ஒரு திரி திறந்து வாழ்த்து தெரிவிக்கத்தான் இருக்கு .

  • கருத்துக்கள உறவுகள்

பயங்கரவாதத்தை எதிர்கொண்ட வரலாறு சிறீலங்காவுக்கு உண்டு. ஜே வி பி பயங்கரவாதத்தை சிறீலங்கா பெரும் சிங்கள இனப்படுகொலையோடு அழித்துமுடிக்கவில்லை. மேலும் முள்ளிவாய்க்கால் என்பது சிறீலங்கா அரசால் பிரகடனப்பட்ட யுத்த தவிர்ப்பு வலயம். அதை அதுவே கடைப்பிடிக்க முடியாமல்.. மக்களை ஒன்று கூட்ட வைச்சு அவர்கள் மீது முப்படைகளும் கொண்டு குண்டு வீசி தாக்கியது.. இந்தியாவுடன் இணைந்து..அப்படி தாக்கவில்லை என்று போலி அறிக்கை தந்தது.. இப்படி பல.. விடயங்கள் சிங்கள அரசும் அதன் இராணுவ இயந்திரமும் செய்தவை மனிதப் பேரவலம்.. போர்க்குற்றம்.. மானுடத்துக்கு எதிரான குற்றங்கள்..இனப்படுகொலை என்பதைச் சொல்ல நிறைய ஆதாரங்கள் உள்ளன.

இதற்கும் விடுதலைப்புலிகள் கிழக்கில் தமிழ் முஸ்லீம் மக்களிடையே பிரேமதாச அரசு தூண்டிவிட்ட பதட்டம் வடக்கிற்கும் பரவி இரு இன மக்களும் தொடர்ந்து துருவமாவதை தடுத்து.. முஸ்லீம்களின் பாதுக்காப்புக்கு உத்தரவாதம் அளித்து.. அவர்களின் மீள் வருகைக்கு உத்தரவாதம் அளித்து செய்யப்பட்ட குடிபெயர்வு என்பது.. எந்த ஒரு கொடிய வரைவிலக்கணங்களையும் தன்னகத்தே கொள்ள முடியாத வெளிப்படையானது. இதனை ஏற்றுத்தான் அன்று ஹக்கீம் - பிரபாவுடன் உடன்படிக்கை செய்து.. முஸ்லீம் மக்களின் மீள் வருகைக்கு புலிகள் காட்டி சமிக்சையை ஏற்றுக் கொண்டார். புலிகள் என்னத்தை சொன்னார்களோ அதை செய்தார்கள். முஸ்லீம் மக்களை விரட்டி யாழ்ப்பாணத்தை விட்டே நிரந்தரமாகக்.. கலைக்கவில்லை. ஆனால் கிழக்கில் பல இடங்களில் தமிழ் மக்கள் நிரந்தரமாக முஸ்லீம்களால் அடித்து விரட்டப்பட்டுவிட்டார்கள். அது கிழக்கில் புலிகளுக்கு பாதகமான சூழலை உருவாகியது. கருணா பிரிவை பலப்படுத்தவும் செய்தது. அத்தனை விலை கொடுத்தும் புலிகள்.. முஸ்லீம்களின் வடக்கு வருகையை முன்னிலைப்படுத்தினார்கள். 

முஸ்லீம்களை புலிகள் வடக்கை விட்டே துரத்தி விட்டதாக.. அப்படி காட்டியது சிங்களமும்.. முஸ்லிம் மதவாத அரசியல்வாதிகளும்.. புலி எதிர்ப்பாளர்களும் மட்டும் தான். தீவிர புலி எதிர்ப்பாளரான சுமந்திரனின் இலக்கணப் பொருத்தப்பாடுகள்.. அவரின் உள்ளூர் அரசியலுக்கு உதவலாம்.. ஆனால்.. யதார்த்தத்தை தொட்டு நிற்க நாதியற்றது என்பதை அவருக்கு தேவாரம் படிப்போர் உணர்ந்து கொள்வது அவசியம். tw_blush:

Edited by nedukkalapoovan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.