Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முதலமைச்சரை நீக்க முடியாது: சுமந்திரனுக்கு செல்வம் எம்பி

Featured Replies

வடக்கு முதல்வரை நீக்குமாறு கூறும் கருத்துக்களை ஏற்க முடியாது: செல்வம் எம்.பி. காட்டம்
 
வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை கட்சியில் இருந்து நீக்குமாறு சிலர் தெரிவித்து வரும் கருத்துகளை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் அவர் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் பிரதிநிதியே தவிர தமிழரசுக்கட்சியை சேர்ந்தவர் அல்ல என வன்னி நாடாளுமன்ற உறுப்பினரும் குழுக்களின் பிரதி தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
 
வடக்கு முதலமைச்சரை நீக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்த கருத்தை மறுதலித்து வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
 
அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 
வடக்கு முதலமைச்சரை நீக்குமாறு அண்மையில் நாடாளுமன்ற உறுப்பினரான எம்.ஏ.சுமந்திரன் தமிழரசுக்கட்சிக்கு தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியிருந்தன.
 
வடக்கு முதலமைச்சர் வட மாகாணசபை தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பினால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய தேர்தலில் போட்டியிட்டாரே தவிர தமிழரசுக்கட்சி என்ற முத்திரையை குத்திக்கொண்டு தேர்தலில் போட்டியிட வரவில்லை. இந் நிலையில் அவரை ஒரு கட்சிக்குள் கட்டுப்படுத்தி அவரை கலங்கப்படுத்தும் செயற்பாடுகளை சிலர் நிறுத்தவேண்டும்.
 
அதேவேளை தமிழர் தரப்புக்கு பல்வேறான பிரச்சினைகள் தற்போது காணப்பட்டு வரும் நிலையில் வடக்கு முதலமைச்சரை நீக்குவது கட்சியில் வைத்திருப்பது போன்ற சிறு விடயங்களை வெளியிட்டு தமிழர்கள் முன்னுள்ள பாரிய பிரச்சினைகளை சிறுமையாக்க வேண்டாம் என்பதனையும் கோரி நிற்கின்றோம்.
 
அத்துடன் வடக்கு முதலமைச்சர் தொடர்பான விடயங்களை தமிழ்த் தேசியக்கூட்டமைப்புக்குள் பேசி தீர்ப்பதற்கு வழி வகைகளை தேடாது பகிரங்கமாக பத்திரிகைகளில் அறிக்கை விடுத்து தம்மை பெரியவர்களாக காட்டுவதை நிறுத்த வேண்டும் எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • கருத்துக்கள உறவுகள்

எல்லாம் சம்பந்தன் **** கற்றுக் கொடுத்த திருகுதாளத்தில் ஆடுறார் சுமந்திரன். கூட்டாட்டம்.. அதற்கு கூட்டமைப்பு பலிக்கடா. tw_blush::rolleyes:

Edited by நியானி
ஒரு சொல் தணிக்கை

... யார் பின்வாசலினூடாக உள்நுளைத்தார்களோ ... அவர்களில் விரலசைவுகளுக்கு ஏற்ப ஆடுகிறார் ... அவ்வளவுதான்!

selvam-adaikalanathan-01

வடக்கு முதலமைச்சரை கட்சியிலிருந்து நீக்குமாறு சிலர் கோரி வருவதை ஏற்றுக்கொள்ள முடியாதென வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
வடக்கு முதலமைச்சரை நீக்கக் கோரிக்கை விடுப்பதாக அண்மையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் கருத்து வெளியிட்டிருந்தார். இதற்கு மறுப்பறிக்கை விடுத்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், வடக்கு முதலமைச்சர் விக்கினேஸ்வரனை நீக்குமாறு நாடாறுமன்ற உறுப்பினர் சுமந்திரன் கட்சியிடம் கோரியுள்ளதாக அண்மையில் செய்திகள் வெளியாகியிருந்தன. வடக்கு முதலமைச்சரை தெரிவு செய்வதற்கான தேர்தலில், தமிழ் தேசிய கூட்டமைப்பு விடுத்த கோரிக்கைக்கு அமைவாகவே முன்னாள் நீதியரசர் சி.வி.விக்கினேஸ்வரன் போட்டியிட்டார். மாறாக தமிழரசு கட்சியின் முத்திரையைக் குத்திக்கொண்டு தேர்தலில் போட்டியிடவில்லை. இவ்வாறான நிலையில் அவரை ஒரு கட்சிக்குள் கொண்டுவந்து, களங்கப்படுத்தும் முயற்சிகளைக் கைவிட வேண்டும். தற்போது தமிழர்களுக்கு பல்வேறு பிரச்சினைகள் உண்டு. அதையெல்லாம் விடுத்து முதலமைச்சர் விவகாரத்தைப் பூதாகரப்படுத்தி, தமிழர்களின் பொது பிரச்சினைகளை சிறுமைப்படுத்த வேண்டாம் எனவும் அவ்வறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

http://www.colombomirror.com/tamil/?p=6253#more-6253

வடமாகாண சபையின் நிர்வாகதிற்குட்பட்ட அரசதிணைக்களங்களின் சில நேர்மையான அதிகாரிகளுடன் பேசுகின்ற பொழுது எல்லோரும் சொல்லிவைத்தால் போல கூறுவது முதலமைச்சர் விக்னேஸ்வரன் அவர்கள் முதலைமைச்சர் பதவிக்கு தகுதி அற்றவர் என்பதுதான்.

தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை அவர்கள் தன்னிடம் நெருக்கமானவர்களிடம் தமிழ் மக்களுக்கு கிடைத்த சாபக்கேடுதான் முதலமைச்சர் விக்னேஸ்வரன் என்று சொல்லித்திரிகின்றார்.
விக்னேஸ்வரன் வருகைதரும்போது அவர்காலில் விழுந்து மரியாதை செய்யும் கம்பன் கழகத்தினரும், விக்னேஸ்வரனை அரசியலுக்கு கொண்டுவருவதில் பெரும் பங்காற்றிய கம்பவாருதி ஜெயராஜ் அவர்களும் முதலமைச்சரின் தற்போதைய நடவடிக்கைகளில் பாரிய அதிருப்திகொண்டு அறிக்கைவிடுகின்றனர்.
இதைவிட மக்களால் தெரிவுசெய்யப்பட்ட பல மாகாண சபை உறுப்பினர்கள் முதலமைச்சர் மீது காழ்ப்புணர்வையே காட்டுகின்றனர்.

இவற்றின் உச்சகட்டமாக தமிழ் தேசியக்கூட்டமைப்பின் முக்கிய உறுப்பினர் ஒருவர் முதலமைச்சர் விக்னேஸ்வரன் கட்சிக்கு கட்டுப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டை முன்வைத்து அவரின் அண்மைக்கால நடவடிக்கைகளுக்காக கூட்டமைப்பு அவரிடம் விளக்கம் கோரவேண்டும் என்று வெளிப்படையாகவே தெரிவித்துள்ளார்.
இவ்வாறு முதலமைச்சர் மீது குறை கூறுவது வேறு யாருமல்ல. 
அவர்மீது மதிப்பும் மரியாதையும் கொண்டிருந்தவர்கள் தான்.

அவரை அரசியலுக்கு கொண்டுவருவதில் தீவிர ஆர்வம் காட்டியவர்கள் தான்.
திடீரென எல்லோரும் இவர்மீது குற்றம் சுமத்துவதற்கான காரணம் என்ன?
இவர் செய்த பாரிய தவறுகள்தான் என்ன?
ஒரு நல்ல மனிதன், 
ஒரு அப்பழுக்கில்லாத ஆன்மீகவாதி, 
ஒரு தலைசிறந்த இலக்கியவாதி, 
ஒரு துறைபோன சட்ட அறிவாளர், 
ஒரு தீவிர தமிழ் ஆர்வலர். 
இவ்வாறாக அனைத்து ஆற்றலும் நிறைந்த ஓர் கல்விமானை எதிர்ப்பது என்பது பாரிய கேள்விக்குரிய ஒன்றாகும்.
உண்மையில் மேலேசொன்ன அனைத்து தகைமைகளும் நிறைந்த அற்புத மனிதர் விக்னேஸ்வரன் என்பதில் இருவேறுபட்ட கருத்துக்கே இடம் இல்லை.
பிரச்சினைக்குரிய தளங்கள் இரண்டுதான் .
1) அவரின் அரசியல் நடவடிக்கைகள்.
2) அவருடைய நிர்வாகத்திறன்.

அரசியல் நடவடிக்கைகள்.

இதைப்பற்றி அதிகம் நான் எழுதவிரும்பவில்லை. எனது முந்தய கட்டுரைகளில் இவரின் அரசியல் செயல்பாடுகள் பற்றி அதிகமாகவே எழுதியிருக்கிறேன்.
ஆனாலும் சுருக்கமாக சொல்வதென்றால் தோற்றுப்போன ஒரு அரசியல் வாதியாகத்தான் நான் இவரை கருதுவேன். 
கற்பனையான, காலத்துக்கு ஒவ்வாத, நடைமுறைக்கு அப்பாற்பட்ட,மக்களின் உணர்வுகளைத் தூண்டிவிடுகின்ற அரசியல் கொள்கையைத்தான் முதலமைச்சர் அவர்கள் பின்பற்றுகின்றார். 
அரசியல் தெளிவோ, ராஜதந்திரமோ சிறிதளவு கூட இல்லாத சிறு மாணவனாகவே அறிக்கைகளை விடுகின்றார். தன்னை நியாயப்படுத்துவற்காக அவர் கையில் எடுத்துள்ள ஆயுதம் தமிழ் தேசியம். 
தன்னை ஒரு தீவிர தமிழ் தேசியவாதியாக காட்டிக்கொள்ளவே அதிகம் விரும்புகிறார். 
தமிழினிக்காக இவர் எழுதிய ஒருபக்க கட்டுரையும் அதையே சொல்லுகிறது. உண்மையிலேயே தமிழினி பட்ட கஷ்டங்கள் எண்ணிலடங்காதவை. தமிழினியின் விடுதலைக்காக கடைசிவரை ஒருதமிழ் வழக்கறிஞர் கூட வாதிடவில்லை . சிங்கள வழக்கறிஞர்களே தமிழினியை விடுவித்தார்கள். அப்போதெல்லாம் நீதித்துறையிலும் சட்டத்துறையிலும் பழம் தின்று கொட்டைபோட்ட விக்னேஸ்வரன் என்ன செய்தார்?. அப்போது வராத தமிழ்தேசிய உணர்வு தமிழினியின் மரணதிற்குபின்புதான் முதலமைச்சருக்கு வந்ததா? 
இந்த இரட்டை வேடம்தான் முதலமைச்சரின் இன்றைய அரசியல் நிலைப்பாடு. 
சிங்கள மக்களையும் தென்னிலங்கை அரசியலையும் ஆணிவேறு அக்குவேறாக அறிந்திருப்பவர் முதலமைச்சர். அவர்களோடு தனிப்பட்ட ரீதியில் மிகமிக நெருக்கமானவர். 
அவருக்கு தென்னிலங்கையின் அரசியல் நிலைப்பாடு தெளிவாகவே தெரியும். 
தென்னிலங்கையில் இருந்து நாம் பெறக்கூடியவை எவை ,பெறமுடியாதவை எவை ,பேசித்தீர்த்துகொள்ளக்கூடியவை எவையென அவருக்கு மிகமிக துல்லியமாக தெரியும். 
தெரிந்தும் பெறமுடியாதவை என தெளிவாக தெரிந்தவற்றுக்காகதான் முதலமைச்சர் குரல் கொடுக்கின்றார். 
இது சந்திரனில் இருந்து அரிசியை கொண்டுவருவதற்கு ஒப்பானது.
யாரை ஏமாற்றுவதற்கு இந்த அறிக்கைகள். 
உண்மையில் முதலமைச்சர் தன்னை தானே ஏமாற்றுகின்றார் என்பதே உண்மை.
கடந்த தேர்தலில் இவர் ஆடிய நடுநிலை நாடகம் இவருடைய அரசியல் முதிர்ச்சியின்மைக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. 
இவர் விட்ட அறிக்கைகளில் இவரின் அரசியல் தெளிவின்மையும் தடுமாற்றமும் அப்பட்டமாக தெரிகிறது.
இவரின் அண்மைக்கால அறிக்கைகளையும் பேச்சுக்களையும் அவதானிக்கும் பொழுது ஒன்று தெளிவாக தெரிகிறது. பெரும்பான்மை இனத்துடனான நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவதை தவிர்த்து மீண்டும் மீண்டும் இன முரண் பாட்டுக்கு தூபமிடுவதாகவே இவரின் நடவடிக்கைகள் அமைகின்றது. 
அரச எதிர்ப்பு மூலம் தன்னை ஒரு தீவிர தமிழ் தேசியவாதியாக காட்ட முற்படுவது தெளிவாக தெரிகிறது. 
அரச பதவி வேண்டும், 3 லட்சம் வாடகையில் டெம்பில் ரோட்டில் வாசஸ்தலம் வேண்டும், அரச சொகுசு வாகனம் வேண்டும், வேண்டிய பொழுது கொழும்பு-யாழ்ப்பாணம் இலவச விமான டிக்கெட் வேண்டும், மத்திய அரசின் போலிஸ் பாதுகாப்பு வேண்டும் இவையெல்லாம் அரச செலவில் வேண்டும் , ஆனால் மக்களுக்கான நல்ல திட்டங்கள் வரும்போது மட்டும்தான் மத்திய அரசு வேண்டத்தகாதது ஆகின்றது. 
போலிஸ் அதிகாரம் மாகாண சபையிடம் வரும்வரை தனக்கான மத்திய அரசின் போலிஸ் பாதுகாப்பை இவர் வேண்டாம் என சொல்லலாம் அல்லவா? 
தனக்கான எல்லாத்தேவைகளுக்கும் மத்திய அரசு தேவை, மக்களுக்கான தேவைகளுக்கு மட்டும் மத்திய அரசுடனான எதிர்ப்பு அரசியல். 
ஏன் இந்த இரட்டை வேடம்.? 
இதன் அர்த்தம் மத்திய அரசிடம் சரணாகதி அடைவது என்பதல்ல. 
மத்திய அரசிடம் இருந்து பெறக்கூடிய உச்சக்கட்ட பலன்களை மக்களுக்கு பெற்றுகொடுக்கும் அதேவேளை தீர்க்கப்படாது இருக்கும் பிரச்சனைகளுக்காக ராஜதந்திர ரீதியில் செயல்படுவதே ஒரு முதிர்ந்த அரசியல்வாதியின் வெற்றி. 
இந்த வகையில் விக்னேஸ்வரன் அவர்கள் ஒரு தோற்றுப்போன அரசியல் வாதியே.

நிர்வாக நடவடிக்கைகள்

உண்மையில் யாழ்பாணத்தை கொழும்பு,கண்டி,போன்று ஒரு mega city ஆக கட்டியெழுப்புவற்கான பூர்வாங்க நடவடிக்கையில் மத்திய அரசு இறங்கியிருக்கிறது. 
இது உயர் மட்டத்தில் இருக்கும் பலருக்கும் தெரிந்த ஒரு விடயம். 
எத்தனையோ ஆயிரம் மில்லியன் ரூபாய்கள் செலவிடப்படவிருக்கிறது. 
இதற்காக உலகவங்கி ,ஆசிய அபிவிருத்தி வங்கி போன்ற சர்வதேச நிதிநிறுவனங்கள் எப்போதுவேண்டுமென்றாலும் நிதியைத்தர தயாராகவே இருக்கின்றன. 
இந்த mega project ஐ எதிர்கொள்ளகூடிய நிலையில் வடமாகாண சபையும் அதன் அமைச்சர்களும் அதன் தலைமைப் பொறுப்பதிகாரியுமான முதலமைச்சரும் தயாராக இருக்கின்றார்களா என்றால் இல்லை என்பதே மிகத்தெளிவான பதில்.
நிர்வாக மட்டத்திலுள்ள அனைவருக்கும் இது தெரியும்.
இதற்கான அடிப்படையான சில தயார் படுத்தல்களையாவது வடமாகணசபையும் முதலமைச்சரும் செய்கின்றார்களா என்றால் அதுவுமில்லை.
Pro-Active ஆனா எந்த செயல் பாட்டையும் முதலமைச்சர் செய்வதில்லை.

மக்களாலும், வடமாகாண சபை mp களாலும் எழுப்பப்படும் கேள்விகளுக்கு இதுவரைக்கும் முதலமைச்சர் அவர்கள் constructive ஆனா எந்த பதிலையும் சொல்லவில்லை. 
அரச திணைக்கள உயர் அதிகாரின் ஊழல்களை வடமாகாண சபை MP கள் வடமாகணசபை அமர்வுகளில் சம்பந்தபட்ட அமைச்சர்களிடம் கேட்கும்போது அதற்கான சரியான பதிலோ /நடவடிக்கையோ அளிக்கப்படுவதில்லை /எடுக்கப்படுவதில்லை . மாறாக இந்த முறைகேடுகளை MP க்களுக்கு தெரியப்படுத்தும் சில நேர்மையான அதிகாரிகள் துரோகிகளாகவே கருதப்படுகின்றார்கள்.இவற்றையெல்லாம் முதலமைச்சர் வேடிக்கை மட்டுமே பார்க்கின்றார். வினைத்திறன் மிக்க எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை.

சில மக்கள் சந்திப்புகளின்போது மக்களின் கோரிக்கைகளுக்கான பொறுப்புணர்வுள்ள பதிலை முதலமைச்சர் அளிப்பதில்லை. அண்மையில் புங்குடுதீவில் நடந்த மக்கள் சந்திப்பின் பொது அம்மக்கள் புங்குடுதீவிற்கு தனியான காவல் நிலையம் வேண்டுமென்று முதலமைச்சரிடம் கோரிக்கை வைத்தனர். இதற்கான முதலமைச்சரின் பதில் வேடிக்கையானது. போலிஸ் அதிகாரத்தை வடமாகாண சபைக்கு பெற்றுக்கொள்ளுவதற்காக நாம் போராடிக் கொண்டு இருக்கும் இவ்வேளையில் புதிய போலிஸ் நிலையத்தை மத்திய அரசிடம் கேட்கமுடியாது என்ற கருதுப்படவே முதலமைச்சர் பதிலளித்தார். போலிஸ் அதிகாரம் மாகாண அரசிடம் வரும்வரை அப்பகுதி மக்கள் அல்லல்படவேண்டும் என்பதா முதலமைச்சரின் வாதம் ?

இதைபோல மக்கள் பிரச்சினைகளுக்கு தீர்வை கண்டறிவதை விட அவை தீர்க்கப்பட முடியாது என்பதற்கான காரணங்களையே முதலமைச்சர் சொல்கின்றார்.
அண்மையில் மணல் பிரச்சினை சம்பந்தமான கரவெட்டி ஒன்றியம் முன்வைத்த கோரிக்கைக்கும் முதலமைச்சர் இவ்வாறே பதிலளித்தார்.

மக்களின் எந்த பிரச்சினைக்கும் இவர் தீர்வுகண்டதாக தெரியவில்லை.
இவரின் ஆணைக்குட்பட்ட திணைக்களங்களில் நடக்கும் முறைகேடுகளுக்கு எதிராக இவர் எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை.
மாகாண சபையின் வினைத்திறனை அதிகரிப்பதற்காக இவர் எந்தவிதமான நடவடிக்கைகளையும் இதுவரை எடுக்கவில்லை.
இவருடன் சந்திக்க வரும் பிறநாட்டு அமைச்சர்களிடமும் அதிகாரிகளிடமும் இவர் சொல்வது ஒன்றே ஒன்றுதான்.
முதலில் இனப்பிரச்சினையை தீருங்கள்.
பின்னர் அபிவிருத்தியை பற்றி பேசுங்கள் என்பதேயாகும். 
இது எவ்வளவு பிற்போக்கு சிந்தனை. 
இனப்பிரைச்சினைக்கான தீர்வு முயற்சிகளோடு சமாந்தரமாக அபிவிருத்திக்கான முயற்சிகளுக்கு முதலமைச்சர் தயாரில்லை. இதனால் பெரு அளவிலான பணம் தடுக்கப்படுகிறது. இதற்கு முதலமைச்சர் சொல்லும் காரணம் சிரிப்புக்கிடமானது. அபிவிருத்திஎன்ற போர்வையில் தென்னிலங்கை நிறுவனங்களுக்கும் பணத்தை வாரிவழங்கும் வெளிநாட்டு சூழ்ச்சிதான் இந்த அபிவிருத்தி நாடகம் என்பதே அவர்பதில். அவருக்கு ஒன்று தெரியவில்லை. MEGA PROJECTS ஐ முன்னேடுப்பதற்கான வளங்கள் எதுவுமே எம்மிடம் இல்லை. 
மனிதவளம், தொழில்சார் வல்லுனர்கள், அங்கீகரிக்கப்பட்ட கட்டுமான நிறுவனங்கள், உபகரணங்கள் , இயந்திரங்கள், கட்டமைக்கப்பட்ட நிர்வாகம் என எதுவுமே எம்மிடம் இல்லை. 
இவை எல்லாவற்றிற்கும் நாம் தென்னிலங்கையையே சார்ந்திருக்க வேண்டும். 
இதுவே உண்மை. 
இதைவிடுத்து தென்னிலங்கைக்கு பணம் சென்றுவிடும் என்று அபிவிருத்தி திட்டங்களை பிற்போடுவது முதலமைச்சரின் அனுபவமின்மையும் தவறான எடுகோள்களையுமே எடுத்துக்காட்டுகின்றது.
இது மக்களுக்கு செய்யும் மிகப்பெரிய துரோகமாகும்.

விக்னேஸ்வரன் அவர்கள் வினைத்திறன் இல்லாத ஒரு முதலமைச்சர் என்பதற்கு பின்வரும் காரணங்களை முன்வைக்கிறேன் .
1) அரசியல் தெளிவின்மை 
2) இராஜ தந்திர அனுபவமின்மை
3) நிர்வாக திறனின்மை 
4) மக்கள் பிரச்சினைக்கு தீர்வு காணும் ஆளுமையின்மை 
5) Pro-Active சிந்தனையின்மை 
6) இனப்பிரச்சினையையும் அபிவிருத்தியையும் ஒரே தட்டில் இட்டு அளவிடுதல் 
7) தன்னுடனான உட்கட்சி முரண்பாட்டை முறையாக கையாளாமை .

இறுதியாக ஒன்றை சொல்கின்றேன். 
முதலமைச்சர் ஒரு பழுத்த ஆன்மீகவாதி.
இந்து மதகொள்கைகளை தன் வாழ்வின் அடிப்படையாக கொண்டவர். 
பாவங்களுக்கு அஞ்சுபவர். 
மனிதநேயம் மிக்கவர். 
அவருடைய மதக்கொள்கைக் கொள்கைகளில் ஒன்று யோகநெறி. 
யோகம் என்பது ஒருவன் தனக்கு விதிக்கப்பட்ட கடைமையை சரிவர செய்தல் ஆகும்.
பலன் மீது பற்றுக்கொள்ளாது ஒருவன் தன் கடமையை தொடர்ச்சியாக ஆற்ற வேண்டும். 
இவர்களே தர்மவான்கள்.
இவர்களே இறைவனின் விருப்புக்குரியவர்கள். 
இவர்களே பிறவிப்பெரும் கடலை தாண்டக்கூடியவர்கள்.
கடைமையில் தவறுபவர்கள் இவற்றிற்கு தகுதியற்றவர்கள்.
கடைமையை செய்யாதவர்களில் முதலமைச்சரும் ஒருவர் .
வினைத்திறன் இல்லாதவர் விக்னேஸ்வரன். 
அரசியலைவிட்டு விலகிவிடுங்கள் ஐயா !

இந்த கட்டுரையை எழுதுவற்கு மூலகாரணமான நண்பர்களுக்கு நன்றி

நவாதரன் My Thoughts

12208764_1638551223092579_81399033912922

நானும் தேடுகிறேன் ...

1. 2008இற்கு முன் சும் எங்கிருந்தார்?

2 எவ்வாறு தமிழரசுக்கட்சிக்குள் உள்நுளைக்கப்பட்டார்?

3. யார் இவரை உள் நுளைத்தது?

4. 2008இற்கு முன், தமிழ் மக்களின் உரிமை போராட்டங்களில் ... சாத்வீகமோ, என்னவோ ... பங்கு என்ன?

5. எவ்வாறு குறுகிய காலத்தில் தலைமையை கைப்பற்றும் அளவிற்கு முன்னுக்கு வந்தார்?

... பல பல கேள்விகள் ... விடைகள் இல்லாமல் ....

புலி திட்டிச் சாமியார் இங்கு இணைத்த கட்டுரையை எழுதிய நவாதரன் கஷ்ரப்பட்டு விக்கினேஸ்வரன்  ஐயாவைப்பற்றி நீட்டி முழக்காமல் சம்பந்தன் சுமந்திரனின் வாலாக விக்கினேஸ்வரன் இருக்காததால் அவர் செய்வதெல்லாம் பிழை என்று ஒரு வசனத்தில் முடித்திருக்கலாம் . 

இன்று சம்சும்ம்மின் மீது ஏற்பட்ட திடீர்க்காதலில் நுனியில் பிடித்தபடி குதிக்கும் புலம்பெயர் ஒட்டுக்குழு மாமணிகள், விக்கியரின் மீது வாந்தி எடுப்பதற்கு முன் ... அதே தமிழரசு கட்சி சிறிதரன் சொல்வதை ... சில வினாடிகள் உங்கள் நேரத்தை செலவிட்டு பாருங்கள் ... இதையும் விளங்கிக்கொள்ள மேலை இல்லாவிடில் ஒன்றும் செய்ய முடியாது!

Edited by no fire zone

  • கருத்துக்கள உறவுகள்

சனிக்கிழமை இரவு உங்களுக்கு கொண்டாட்டம்தான் போங்கள்.

ஆளுக்காள் அடிபட்டு மறுபடியும் Back to the square one வாழ்த்துக்கள்.

14indrd.jpg

Edited by ஜீவன் சிவா

  • கருத்துக்கள உறவுகள்

குழந்தைப் போராளியாக அறிமுகமாகி வரலாற்றில் கிழக்கு மாகாணத்தின் முதல் முதல்வரான பிள்ளையான் செய்தவற்றில் ஒரு சிறு துரும்பத் தன்னும் வடக்க்கின் முதல்வரான முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதியால் செய்யமுடியவில்லை. அதற்கு ஆயிரத்துப் பதின்மூன்று காரணங்கள் அவர்கள் செய்யவிடவில்லை இவர்கள் செய்யவிடவில்லை. ஆனால் தேர்தல் நேரத்தில் நரித்தனமாக உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்யுமாற்போன்று கஜே கோஸ்டிக்கு ஆதரவு வழங்க மட்டும் அவருக்கு கட்டுப்பாடுகள் எதுவும் இருக்கவில்லை. அமைச்சர் அய்ங்கரநேசன் அவர்கள் செய்யும் பணிகளைக் கூட இவரால் செய்யமுடியவில்லை. சும்மா இருந்துகொண்டு தீர்மானம் இயற்றுவாராம் இந்த மகிந்தவின் வால்பிடி வாசுதேவநாணயக்காரவின் சம்பந்தி. 

1 hour ago, வாலி said:

சரி சரி இன உங்க சம்பந்தன், சுமந்திரனின் திருகுதாளத்திற்கெல்லாம் அவர் ஆமா போடுவார்.அவரைத் திட்டாதீங்க. 

  • கருத்துக்கள உறவுகள்
On 14.11.2015, 23:54:04, trinco said:

சரி சரி இன உங்க சம்பந்தன், சுமந்திரனின் திருகுதாளத்திற்கெல்லாம் அவர் ஆமா போடுவார்.அவரைத் திட்டாதீங்க. 

உள்ளத்தின் கண்ணாடி முகம். அதுபோல், மனிதர்களையும் அவர்கள் கருத்துக்கள் வெளிப்படுத்துகின்றன.:D:

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Paanch said:

ஓம் அதுதான் நாடாளுமன்றத் தேர்தல் காலத்தில் வெளையிட்ட கருத்துக்கள் முதல்வரின் அங்கிடுதத்தித் தனத்தை பறைசாற்றி நின்றன!

On 11/14/2015, 8:44:14, arjun said:

வடமாகாண சபையின் நிர்வாகதிற்குட்பட்ட அரசதிணைக்களங்களின் சில நேர்மையான அதிகாரிகளுடன் பேசுகின்ற பொழுது எல்லோரும் சொல்லிவைத்தால் போல கூறுவது முதலமைச்சர் விக்னேஸ்வரன் அவர்கள் முதலைமைச்சர் பதவிக்கு தகுதி அற்றவர் என்பதுதான்.

தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை அவர்கள் தன்னிடம் நெருக்கமானவர்களிடம் தமிழ் மக்களுக்கு கிடைத்த சாபக்கேடுதான் முதலமைச்சர் விக்னேஸ்வரன் என்று சொல்லித்திரிகின்றார்.
விக்னேஸ்வரன் வருகைதரும்போது அவர்காலில் விழுந்து மரியாதை செய்யும் கம்பன் கழகத்தினரும், விக்னேஸ்வரனை அரசியலுக்கு கொண்டுவருவதில் பெரும் பங்காற்றிய கம்பவாருதி ஜெயராஜ் அவர்களும் முதலமைச்சரின் தற்போதைய நடவடிக்கைகளில் பாரிய அதிருப்திகொண்டு அறிக்கைவிடுகின்றனர்.
இதைவிட மக்களால் தெரிவுசெய்யப்பட்ட பல மாகாண சபை உறுப்பினர்கள் முதலமைச்சர் மீது காழ்ப்புணர்வையே காட்டுகின்றனர்.

இவற்றின் உச்சகட்டமாக தமிழ் தேசியக்கூட்டமைப்பின் முக்கிய உறுப்பினர் ஒருவர் முதலமைச்சர் விக்னேஸ்வரன் கட்சிக்கு கட்டுப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டை முன்வைத்து அவரின் அண்மைக்கால நடவடிக்கைகளுக்காக கூட்டமைப்பு அவரிடம் விளக்கம் கோரவேண்டும் என்று வெளிப்படையாகவே தெரிவித்துள்ளார்.
இவ்வாறு முதலமைச்சர் மீது குறை கூறுவது வேறு யாருமல்ல. 
அவர்மீது மதிப்பும் மரியாதையும் கொண்டிருந்தவர்கள் தான்.

அவரை அரசியலுக்கு கொண்டுவருவதில் தீவிர ஆர்வம் காட்டியவர்கள் தான்.
திடீரென எல்லோரும் இவர்மீது குற்றம் சுமத்துவதற்கான காரணம் என்ன?
இவர் செய்த பாரிய தவறுகள்தான் என்ன?
ஒரு நல்ல மனிதன், 
ஒரு அப்பழுக்கில்லாத ஆன்மீகவாதி, 
ஒரு தலைசிறந்த இலக்கியவாதி, 
ஒரு துறைபோன சட்ட அறிவாளர், 
ஒரு தீவிர தமிழ் ஆர்வலர். 
இவ்வாறாக அனைத்து ஆற்றலும் நிறைந்த ஓர் கல்விமானை எதிர்ப்பது என்பது பாரிய கேள்விக்குரிய ஒன்றாகும்.
உண்மையில் மேலேசொன்ன அனைத்து தகைமைகளும் நிறைந்த அற்புத மனிதர் விக்னேஸ்வரன் என்பதில் இருவேறுபட்ட கருத்துக்கே இடம் இல்லை.
பிரச்சினைக்குரிய தளங்கள் இரண்டுதான் .
1) அவரின் அரசியல் நடவடிக்கைகள்.
2) அவருடைய நிர்வாகத்திறன்.

அரசியல் நடவடிக்கைகள்.

இதைப்பற்றி அதிகம் நான் எழுதவிரும்பவில்லை. எனது முந்தய கட்டுரைகளில் இவரின் அரசியல் செயல்பாடுகள் பற்றி அதிகமாகவே எழுதியிருக்கிறேன்.
ஆனாலும் சுருக்கமாக சொல்வதென்றால் தோற்றுப்போன ஒரு அரசியல் வாதியாகத்தான் நான் இவரை கருதுவேன். 
கற்பனையான, காலத்துக்கு ஒவ்வாத, நடைமுறைக்கு அப்பாற்பட்ட,மக்களின் உணர்வுகளைத் தூண்டிவிடுகின்ற அரசியல் கொள்கையைத்தான் முதலமைச்சர் அவர்கள் பின்பற்றுகின்றார். 
அரசியல் தெளிவோ, ராஜதந்திரமோ சிறிதளவு கூட இல்லாத சிறு மாணவனாகவே அறிக்கைகளை விடுகின்றார். தன்னை நியாயப்படுத்துவற்காக அவர் கையில் எடுத்துள்ள ஆயுதம் தமிழ் தேசியம். 
தன்னை ஒரு தீவிர தமிழ் தேசியவாதியாக காட்டிக்கொள்ளவே அதிகம் விரும்புகிறார். 
தமிழினிக்காக இவர் எழுதிய ஒருபக்க கட்டுரையும் அதையே சொல்லுகிறது. உண்மையிலேயே தமிழினி பட்ட கஷ்டங்கள் எண்ணிலடங்காதவை. தமிழினியின் விடுதலைக்காக கடைசிவரை ஒருதமிழ் வழக்கறிஞர் கூட வாதிடவில்லை . சிங்கள வழக்கறிஞர்களே தமிழினியை விடுவித்தார்கள். அப்போதெல்லாம் நீதித்துறையிலும் சட்டத்துறையிலும் பழம் தின்று கொட்டைபோட்ட விக்னேஸ்வரன் என்ன செய்தார்?. அப்போது வராத தமிழ்தேசிய உணர்வு தமிழினியின் மரணதிற்குபின்புதான் முதலமைச்சருக்கு வந்ததா? 
இந்த இரட்டை வேடம்தான் முதலமைச்சரின் இன்றைய அரசியல் நிலைப்பாடு. 
சிங்கள மக்களையும் தென்னிலங்கை அரசியலையும் ஆணிவேறு அக்குவேறாக அறிந்திருப்பவர் முதலமைச்சர். அவர்களோடு தனிப்பட்ட ரீதியில் மிகமிக நெருக்கமானவர். 
அவருக்கு தென்னிலங்கையின் அரசியல் நிலைப்பாடு தெளிவாகவே தெரியும். 
தென்னிலங்கையில் இருந்து நாம் பெறக்கூடியவை எவை ,பெறமுடியாதவை எவை ,பேசித்தீர்த்துகொள்ளக்கூடியவை எவையென அவருக்கு மிகமிக துல்லியமாக தெரியும். 
தெரிந்தும் பெறமுடியாதவை என தெளிவாக தெரிந்தவற்றுக்காகதான் முதலமைச்சர் குரல் கொடுக்கின்றார். 
இது சந்திரனில் இருந்து அரிசியை கொண்டுவருவதற்கு ஒப்பானது.
யாரை ஏமாற்றுவதற்கு இந்த அறிக்கைகள். 
உண்மையில் முதலமைச்சர் தன்னை தானே ஏமாற்றுகின்றார் என்பதே உண்மை.
கடந்த தேர்தலில் இவர் ஆடிய நடுநிலை நாடகம் இவருடைய அரசியல் முதிர்ச்சியின்மைக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. 
இவர் விட்ட அறிக்கைகளில் இவரின் அரசியல் தெளிவின்மையும் தடுமாற்றமும் அப்பட்டமாக தெரிகிறது.
இவரின் அண்மைக்கால அறிக்கைகளையும் பேச்சுக்களையும் அவதானிக்கும் பொழுது ஒன்று தெளிவாக தெரிகிறது. பெரும்பான்மை இனத்துடனான நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவதை தவிர்த்து மீண்டும் மீண்டும் இன முரண் பாட்டுக்கு தூபமிடுவதாகவே இவரின் நடவடிக்கைகள் அமைகின்றது. 
அரச எதிர்ப்பு மூலம் தன்னை ஒரு தீவிர தமிழ் தேசியவாதியாக காட்ட முற்படுவது தெளிவாக தெரிகிறது. 
அரச பதவி வேண்டும், 3 லட்சம் வாடகையில் டெம்பில் ரோட்டில் வாசஸ்தலம் வேண்டும், அரச சொகுசு வாகனம் வேண்டும், வேண்டிய பொழுது கொழும்பு-யாழ்ப்பாணம் இலவச விமான டிக்கெட் வேண்டும், மத்திய அரசின் போலிஸ் பாதுகாப்பு வேண்டும் இவையெல்லாம் அரச செலவில் வேண்டும் , ஆனால் மக்களுக்கான நல்ல திட்டங்கள் வரும்போது மட்டும்தான் மத்திய அரசு வேண்டத்தகாதது ஆகின்றது. 
போலிஸ் அதிகாரம் மாகாண சபையிடம் வரும்வரை தனக்கான மத்திய அரசின் போலிஸ் பாதுகாப்பை இவர் வேண்டாம் என சொல்லலாம் அல்லவா? 
தனக்கான எல்லாத்தேவைகளுக்கும் மத்திய அரசு தேவை, மக்களுக்கான தேவைகளுக்கு மட்டும் மத்திய அரசுடனான எதிர்ப்பு அரசியல். 
ஏன் இந்த இரட்டை வேடம்.? 
இதன் அர்த்தம் மத்திய அரசிடம் சரணாகதி அடைவது என்பதல்ல. 
மத்திய அரசிடம் இருந்து பெறக்கூடிய உச்சக்கட்ட பலன்களை மக்களுக்கு பெற்றுகொடுக்கும் அதேவேளை தீர்க்கப்படாது இருக்கும் பிரச்சனைகளுக்காக ராஜதந்திர ரீதியில் செயல்படுவதே ஒரு முதிர்ந்த அரசியல்வாதியின் வெற்றி. 
இந்த வகையில் விக்னேஸ்வரன் அவர்கள் ஒரு தோற்றுப்போன அரசியல் வாதியே.

நிர்வாக நடவடிக்கைகள்

உண்மையில் யாழ்பாணத்தை கொழும்பு,கண்டி,போன்று ஒரு mega city ஆக கட்டியெழுப்புவற்கான பூர்வாங்க நடவடிக்கையில் மத்திய அரசு இறங்கியிருக்கிறது. 
இது உயர் மட்டத்தில் இருக்கும் பலருக்கும் தெரிந்த ஒரு விடயம். 
எத்தனையோ ஆயிரம் மில்லியன் ரூபாய்கள் செலவிடப்படவிருக்கிறது. 
இதற்காக உலகவங்கி ,ஆசிய அபிவிருத்தி வங்கி போன்ற சர்வதேச நிதிநிறுவனங்கள் எப்போதுவேண்டுமென்றாலும் நிதியைத்தர தயாராகவே இருக்கின்றன. 
இந்த mega project ஐ எதிர்கொள்ளகூடிய நிலையில் வடமாகாண சபையும் அதன் அமைச்சர்களும் அதன் தலைமைப் பொறுப்பதிகாரியுமான முதலமைச்சரும் தயாராக இருக்கின்றார்களா என்றால் இல்லை என்பதே மிகத்தெளிவான பதில்.
நிர்வாக மட்டத்திலுள்ள அனைவருக்கும் இது தெரியும்.
இதற்கான அடிப்படையான சில தயார் படுத்தல்களையாவது வடமாகணசபையும் முதலமைச்சரும் செய்கின்றார்களா என்றால் அதுவுமில்லை.
Pro-Active ஆனா எந்த செயல் பாட்டையும் முதலமைச்சர் செய்வதில்லை.

மக்களாலும், வடமாகாண சபை mp களாலும் எழுப்பப்படும் கேள்விகளுக்கு இதுவரைக்கும் முதலமைச்சர் அவர்கள் constructive ஆனா எந்த பதிலையும் சொல்லவில்லை. 
அரச திணைக்கள உயர் அதிகாரின் ஊழல்களை வடமாகாண சபை MP கள் வடமாகணசபை அமர்வுகளில் சம்பந்தபட்ட அமைச்சர்களிடம் கேட்கும்போது அதற்கான சரியான பதிலோ /நடவடிக்கையோ அளிக்கப்படுவதில்லை /எடுக்கப்படுவதில்லை . மாறாக இந்த முறைகேடுகளை MP க்களுக்கு தெரியப்படுத்தும் சில நேர்மையான அதிகாரிகள் துரோகிகளாகவே கருதப்படுகின்றார்கள்.இவற்றையெல்லாம் முதலமைச்சர் வேடிக்கை மட்டுமே பார்க்கின்றார். வினைத்திறன் மிக்க எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை.

சில மக்கள் சந்திப்புகளின்போது மக்களின் கோரிக்கைகளுக்கான பொறுப்புணர்வுள்ள பதிலை முதலமைச்சர் அளிப்பதில்லை. அண்மையில் புங்குடுதீவில் நடந்த மக்கள் சந்திப்பின் பொது அம்மக்கள் புங்குடுதீவிற்கு தனியான காவல் நிலையம் வேண்டுமென்று முதலமைச்சரிடம் கோரிக்கை வைத்தனர். இதற்கான முதலமைச்சரின் பதில் வேடிக்கையானது. போலிஸ் அதிகாரத்தை வடமாகாண சபைக்கு பெற்றுக்கொள்ளுவதற்காக நாம் போராடிக் கொண்டு இருக்கும் இவ்வேளையில் புதிய போலிஸ் நிலையத்தை மத்திய அரசிடம் கேட்கமுடியாது என்ற கருதுப்படவே முதலமைச்சர் பதிலளித்தார். போலிஸ் அதிகாரம் மாகாண அரசிடம் வரும்வரை அப்பகுதி மக்கள் அல்லல்படவேண்டும் என்பதா முதலமைச்சரின் வாதம் ?

இதைபோல மக்கள் பிரச்சினைகளுக்கு தீர்வை கண்டறிவதை விட அவை தீர்க்கப்பட முடியாது என்பதற்கான காரணங்களையே முதலமைச்சர் சொல்கின்றார்.
அண்மையில் மணல் பிரச்சினை சம்பந்தமான கரவெட்டி ஒன்றியம் முன்வைத்த கோரிக்கைக்கும் முதலமைச்சர் இவ்வாறே பதிலளித்தார்.

மக்களின் எந்த பிரச்சினைக்கும் இவர் தீர்வுகண்டதாக தெரியவில்லை.
இவரின் ஆணைக்குட்பட்ட திணைக்களங்களில் நடக்கும் முறைகேடுகளுக்கு எதிராக இவர் எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை.
மாகாண சபையின் வினைத்திறனை அதிகரிப்பதற்காக இவர் எந்தவிதமான நடவடிக்கைகளையும் இதுவரை எடுக்கவில்லை.
இவருடன் சந்திக்க வரும் பிறநாட்டு அமைச்சர்களிடமும் அதிகாரிகளிடமும் இவர் சொல்வது ஒன்றே ஒன்றுதான்.
முதலில் இனப்பிரச்சினையை தீருங்கள்.
பின்னர் அபிவிருத்தியை பற்றி பேசுங்கள் என்பதேயாகும். 
இது எவ்வளவு பிற்போக்கு சிந்தனை. 
இனப்பிரைச்சினைக்கான தீர்வு முயற்சிகளோடு சமாந்தரமாக அபிவிருத்திக்கான முயற்சிகளுக்கு முதலமைச்சர் தயாரில்லை. இதனால் பெரு அளவிலான பணம் தடுக்கப்படுகிறது. இதற்கு முதலமைச்சர் சொல்லும் காரணம் சிரிப்புக்கிடமானது. அபிவிருத்திஎன்ற போர்வையில் தென்னிலங்கை நிறுவனங்களுக்கும் பணத்தை வாரிவழங்கும் வெளிநாட்டு சூழ்ச்சிதான் இந்த அபிவிருத்தி நாடகம் என்பதே அவர்பதில். அவருக்கு ஒன்று தெரியவில்லை. MEGA PROJECTS ஐ முன்னேடுப்பதற்கான வளங்கள் எதுவுமே எம்மிடம் இல்லை. 
மனிதவளம், தொழில்சார் வல்லுனர்கள், அங்கீகரிக்கப்பட்ட கட்டுமான நிறுவனங்கள், உபகரணங்கள் , இயந்திரங்கள், கட்டமைக்கப்பட்ட நிர்வாகம் என எதுவுமே எம்மிடம் இல்லை. 
இவை எல்லாவற்றிற்கும் நாம் தென்னிலங்கையையே சார்ந்திருக்க வேண்டும். 
இதுவே உண்மை. 
இதைவிடுத்து தென்னிலங்கைக்கு பணம் சென்றுவிடும் என்று அபிவிருத்தி திட்டங்களை பிற்போடுவது முதலமைச்சரின் அனுபவமின்மையும் தவறான எடுகோள்களையுமே எடுத்துக்காட்டுகின்றது.
இது மக்களுக்கு செய்யும் மிகப்பெரிய துரோகமாகும்.

விக்னேஸ்வரன் அவர்கள் வினைத்திறன் இல்லாத ஒரு முதலமைச்சர் என்பதற்கு பின்வரும் காரணங்களை முன்வைக்கிறேன் .
1) அரசியல் தெளிவின்மை 
2) இராஜ தந்திர அனுபவமின்மை
3) நிர்வாக திறனின்மை 
4) மக்கள் பிரச்சினைக்கு தீர்வு காணும் ஆளுமையின்மை 
5) Pro-Active சிந்தனையின்மை 
6) இனப்பிரச்சினையையும் அபிவிருத்தியையும் ஒரே தட்டில் இட்டு அளவிடுதல் 
7) தன்னுடனான உட்கட்சி முரண்பாட்டை முறையாக கையாளாமை .

இறுதியாக ஒன்றை சொல்கின்றேன். 
முதலமைச்சர் ஒரு பழுத்த ஆன்மீகவாதி.
இந்து மதகொள்கைகளை தன் வாழ்வின் அடிப்படையாக கொண்டவர். 
பாவங்களுக்கு அஞ்சுபவர். 
மனிதநேயம் மிக்கவர். 
அவருடைய மதக்கொள்கைக் கொள்கைகளில் ஒன்று யோகநெறி. 
யோகம் என்பது ஒருவன் தனக்கு விதிக்கப்பட்ட கடைமையை சரிவர செய்தல் ஆகும்.
பலன் மீது பற்றுக்கொள்ளாது ஒருவன் தன் கடமையை தொடர்ச்சியாக ஆற்ற வேண்டும். 
இவர்களே தர்மவான்கள்.
இவர்களே இறைவனின் விருப்புக்குரியவர்கள். 
இவர்களே பிறவிப்பெரும் கடலை தாண்டக்கூடியவர்கள்.
கடைமையில் தவறுபவர்கள் இவற்றிற்கு தகுதியற்றவர்கள்.
கடைமையை செய்யாதவர்களில் முதலமைச்சரும் ஒருவர் .
வினைத்திறன் இல்லாதவர் விக்னேஸ்வரன். 
அரசியலைவிட்டு விலகிவிடுங்கள் ஐயா !

இந்த கட்டுரையை எழுதுவற்கு மூலகாரணமான நண்பர்களுக்கு நன்றி

நவாதரன் My Thoughts

மிகச்சரியான கட்டுரை ,அங்குள்ள அமைச்சுக்களின் செயலாளர்களுடன் எனது நெருங்கிய நண்பன் கதைக்கும் போது இதில் உள்ளதுகளை விட மிகவும் பாரதுரமான குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றார்கள் .

Arjun னுக்கு ஒரு பச்சை .

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, வாலி said:

ஓம் அதுதான் நாடாளுமன்றத் தேர்தல் காலத்தில் வெளையிட்ட கருத்துக்கள் முதல்வரின் அங்கிடுதத்தித் தனத்தை பறைசாற்றி நின்றன!

முதல்வரைப்பற்றி உங்கள் மூலம் அறிந்துகொண்டது மட்டற்ற மகிழ்ச்சியைத் தருகிறது. அப்படியே தலைவர் பிரபாகரன்பற்றியும் உங்களிடமிருந்து அறிந்துகொள்ள ஆவல்.:grin: 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Paanch said:

முதல்வரைப்பற்றி உங்கள் மூலம் அறிந்துகொண்டது மட்டற்ற மகிழ்ச்சியைத் தருகிறது. அப்படியே தலைவர் பிரபாகரன்பற்றியும் உங்களிடமிருந்து அறிந்துகொள்ள ஆவல்.:grin: 

அதுக்கு டைம் இருக்கு காலம் கடைசி  முடிவை சீக்கிரமே விளம்பி நிக்கும். அதுக்கு முந்தினதுகள் எல்லாம் உலகம் அறிஞ்சதுதானே! உதாரணம்:- ராஜீவ்

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, வாலி said:

அதுக்கு டைம் இருக்கு காலம் கடைசி  முடிவை சீக்கிரமே விளம்பி நிக்கும். அதுக்கு முந்தினதுகள் எல்லாம் உலகம் அறிஞ்சதுதானே! உதாரணம்:- ராஜீவ்

யார் இந்த ராஜீவ்?.. இந்தியனா??... மனிதரைக் காவு கொள்பவன் எருமையில்தான் சவாரி செய்வானாம். 

  • கருத்துக்கள உறவுகள்
Just now, Paanch said:

யார் இந்த ராஜீவ்?.. இந்தியனா??... மனிதரைக் காவு கொள்பவன் எருமையில்தான் சவாரி செய்வானாம். 

இதையும் கண்கூடாகவே பார்த்தோமே!

  • கருத்துக்கள உறவுகள்

இந்தத் திரியில் பற்றிய கருத்துக்களை நுகர்ந்தபோது எனக்குள் ஒரு கவிதை பிறந்தது.:)

மேகம் கருகி வானம் நெருப்பாகத் தணலைக் கொட்டியபோதும் நான் கருகிவிடவில்லை. என்னுள் இருக்கும் காழ்ப்புணர்வுத் தணல் அந்த வானத் தணலைவிடவும் வீரியமானது. tw_rage:

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, வாலி said:

இதையும் கண்கூடாகவே பார்த்தோமே!

ஏன் மகிந்தவுக்கு இது பொருந்தவில்லை என சிலருக்கு சிந்திக்கவே தெரியவில்லை.

On 11/14/2015, 8:44:14, arjun said:

வடமாகாண சபையின் நிர்வாகதிற்குட்பட்ட அரசதிணைக்களங்களின் சில நேர்மையான அதிகாரிகளுடன் பேசுகின்ற பொழுது எல்லோரும் சொல்லிவைத்தால் போல கூறுவது முதலமைச்சர் விக்னேஸ்வரன் அவர்கள் முதலைமைச்சர் பதவிக்கு தகுதி அற்றவர் என்பதுதான்.

தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை அவர்கள் தன்னிடம் நெருக்கமானவர்களிடம் தமிழ் மக்களுக்கு கிடைத்த சாபக்கேடுதான் முதலமைச்சர் விக்னேஸ்வரன் என்று சொல்லித்திரிகின்றார்.
விக்னேஸ்வரன் வருகைதரும்போது அவர்காலில் விழுந்து மரியாதை செய்யும் கம்பன் கழகத்தினரும், விக்னேஸ்வரனை அரசியலுக்கு கொண்டுவருவதில் பெரும் பங்காற்றிய கம்பவாருதி ஜெயராஜ் அவர்களும் முதலமைச்சரின் தற்போதைய நடவடிக்கைகளில் பாரிய அதிருப்திகொண்டு அறிக்கைவிடுகின்றனர்.
இதைவிட மக்களால் தெரிவுசெய்யப்பட்ட பல மாகாண சபை உறுப்பினர்கள் முதலமைச்சர் மீது காழ்ப்புணர்வையே காட்டுகின்றனர்.

இவற்றின் உச்சகட்டமாக தமிழ் தேசியக்கூட்டமைப்பின் முக்கிய உறுப்பினர் ஒருவர் முதலமைச்சர் விக்னேஸ்வரன் கட்சிக்கு கட்டுப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டை முன்வைத்து அவரின் அண்மைக்கால நடவடிக்கைகளுக்காக கூட்டமைப்பு அவரிடம் விளக்கம் கோரவேண்டும் என்று வெளிப்படையாகவே தெரிவித்துள்ளார்.
இவ்வாறு முதலமைச்சர் மீது குறை கூறுவது வேறு யாருமல்ல. 
அவர்மீது மதிப்பும் மரியாதையும் கொண்டிருந்தவர்கள் தான்.

அவரை அரசியலுக்கு கொண்டுவருவதில் தீவிர ஆர்வம் காட்டியவர்கள் தான்.
திடீரென எல்லோரும் இவர்மீது குற்றம் சுமத்துவதற்கான காரணம் என்ன?
இவர் செய்த பாரிய தவறுகள்தான் என்ன?
ஒரு நல்ல மனிதன், 
ஒரு அப்பழுக்கில்லாத ஆன்மீகவாதி, 
ஒரு தலைசிறந்த இலக்கியவாதி, 
ஒரு துறைபோன சட்ட அறிவாளர், 
ஒரு தீவிர தமிழ் ஆர்வலர். 
இவ்வாறாக அனைத்து ஆற்றலும் நிறைந்த ஓர் கல்விமானை எதிர்ப்பது என்பது பாரிய கேள்விக்குரிய ஒன்றாகும்.
உண்மையில் மேலேசொன்ன அனைத்து தகைமைகளும் நிறைந்த அற்புத மனிதர் விக்னேஸ்வரன் என்பதில் இருவேறுபட்ட கருத்துக்கே இடம் இல்லை.
பிரச்சினைக்குரிய தளங்கள் இரண்டுதான் .
1) அவரின் அரசியல் நடவடிக்கைகள்.
2) அவருடைய நிர்வாகத்திறன்.

அரசியல் நடவடிக்கைகள்.

இதைப்பற்றி அதிகம் நான் எழுதவிரும்பவில்லை. எனது முந்தய கட்டுரைகளில் இவரின் அரசியல் செயல்பாடுகள் பற்றி அதிகமாகவே எழுதியிருக்கிறேன்.
ஆனாலும் சுருக்கமாக சொல்வதென்றால் தோற்றுப்போன ஒரு அரசியல் வாதியாகத்தான் நான் இவரை கருதுவேன். 
கற்பனையான, காலத்துக்கு ஒவ்வாத, நடைமுறைக்கு அப்பாற்பட்ட,மக்களின் உணர்வுகளைத் தூண்டிவிடுகின்ற https://www.youtube.com/watch?v=recjWSgurRYஅரசியல் கொள்கையைத்தான் முதலமைச்சர் அவர்கள் பின்பற்றுகின்றார். 

அரசியல் தெளிவோ, ராஜதந்திரமோ சிறிதளவு கூட இல்லாத சிறு மாணவனாகவே அறிக்கைகளை விடுகின்றார்.

தன்னை நியாயப்படுத்துவற்காக அவர் கையில் எடுத்துள்ள ஆயுதம் தமிழ் தேசியம். 
தன்னை ஒரு தீவிர தமிழ் தேசியவாதியாக காட்டிக்கொள்ளவே அதிகம் விரும்புகிறார். 
தமிழினிக்காக இவர் எழுதிய ஒருபக்க கட்டுரையும் அதையே சொல்லுகிறது. உண்மையிலேயே தமிழினி பட்ட கஷ்டங்கள் எண்ணிலடங்காதவை. தமிழினியின் விடுதலைக்காக கடைசிவரை ஒருதமிழ் வழக்கறிஞர் கூட வாதிடவில்லை . சிங்கள வழக்கறிஞர்களே தமிழினியை விடுவித்தார்கள். அப்போதெல்லாம் நீதித்துறையிலும் சட்டத்துறையிலும் பழம் தின்று கொட்டைபோட்ட விக்னேஸ்வரன் என்ன செய்தார்?. அப்போது வராத தமிழ்தேசிய உணர்வு தமிழினியின் மரணதிற்குபின்புதான் முதலமைச்சருக்கு வந்ததா? 
இந்த இரட்டை வேடம்தான் முதலமைச்சரின் இன்றைய அரசியல் நிலைப்பாடு. 
சிங்கள மக்களையும் தென்னிலங்கை அரசியலையும் ஆணிவேறு அக்குவேறாக அறிந்திருப்பவர் முதலமைச்சர். அவர்களோடு தனிப்பட்ட ரீதியில் மிகமிக நெருக்கமானவர். 
அவருக்கு தென்னிலங்கையின் அரசியல் நிலைப்பாடு தெளிவாகவே தெரியும். 
தென்னிலங்கையில் இருந்து நாம் பெறக்கூடியவை எவை ,பெறமுடியாதவை எவை ,பேசித்தீர்த்துகொள்ளக்கூடியவை எவையென அவருக்கு மிகமிக துல்லியமாக தெரியும். 
தெரிந்தும் பெறமுடியாதவை என தெளிவாக தெரிந்தவற்றுக்காகதான் முதலமைச்சர் குரல் கொடுக்கின்றார். 
இது சந்திரனில் இருந்து அரிசியை கொண்டுவருவதற்கு ஒப்பானது.
யாரை ஏமாற்றுவதற்கு இந்த அறிக்கைகள். 
உண்மையில் முதலமைச்சர் தன்னை தானே ஏமாற்றுகின்றார் என்பதே உண்மை.
கடந்த தேர்தலில் இவர் ஆடிய நடுநிலை நாடகம் இவருடைய அரசியல் முதிர்ச்சியின்மைக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. 
இவர் விட்ட அறிக்கைகளில் இவரின் அரசியல் தெளிவின்மையும் தடுமாற்றமும் அப்பட்டமாக தெரிகிறது.
இவரின் அண்மைக்கால அறிக்கைகளையும் பேச்சுக்களையும் அவதானிக்கும் பொழுது ஒன்று தெளிவாக தெரிகிறது. பெரும்பான்மை இனத்துடனான நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவதை தவிர்த்து மீண்டும் மீண்டும் இன முரண் பாட்டுக்கு தூபமிடுவதாகவே இவரின் நடவடிக்கைகள் அமைகின்றது. 
அரச எதிர்ப்பு மூலம் தன்னை ஒரு தீவிர தமிழ் தேசியவாதியாக காட்ட முற்படுவது தெளிவாக தெரிகிறது. 
அரச பதவி வேண்டும், 3 லட்சம் வாடகையில் டெம்பில் ரோட்டில் வாசஸ்தலம் வேண்டும், அரச சொகுசு வாகனம் வேண்டும், வேண்டிய பொழுது கொழும்பு-யாழ்ப்பாணம் இலவச விமான டிக்கெட் வேண்டும், மத்திய அரசின் போலிஸ் பாதுகாப்பு வேண்டும் இவையெல்லாம் அரச செலவில் வேண்டும் , ஆனால் மக்களுக்கான நல்ல திட்டங்கள் வரும்போது மட்டும்தான் மத்திய அரசு வேண்டத்தகாதது ஆகின்றது. 
போலிஸ் அதிகாரம் மாகாண சபையிடம் வரும்வரை தனக்கான மத்திய அரசின் போலிஸ் பாதுகாப்பை இவர் வேண்டாம் என சொல்லலாம் அல்லவா? 
தனக்கான எல்லாத்தேவைகளுக்கும் மத்திய அரசு தேவை, மக்களுக்கான தேவைகளுக்கு மட்டும் மத்திய அரசுடனான எதிர்ப்பு அரசியல். 
ஏன் இந்த இரட்டை வேடம்.? 
இதன் அர்த்தம் மத்திய அரசிடம் சரணாகதி அடைவது என்பதல்ல. 
மத்திய அரசிடம் இருந்து பெறக்கூடிய உச்சக்கட்ட பலன்களை மக்களுக்கு பெற்றுகொடுக்கும் அதேவேளை தீர்க்கப்படாது இருக்கும் பிரச்சனைகளுக்காக ராஜதந்திர ரீதியில் செயல்படுவதே ஒரு முதிர்ந்த அரசியல்வாதியின் வெற்றி. 
இந்த வகையில் விக்னேஸ்வரன் அவர்கள் ஒரு தோற்றுப்போன அரசியல் வாதியே.

நிர்வாக நடவடிக்கைகள்

உண்மையில் யாழ்பாணத்தை கொழும்பு,கண்டி,போன்று ஒரு mega city ஆக கட்டியெழுப்புவற்கான பூர்வாங்க நடவடிக்கையில் மத்திய அரசு இறங்கியிருக்கிறது. 
இது உயர் மட்டத்தில் இருக்கும் பலருக்கும் தெரிந்த ஒரு விடயம். 
எத்தனையோ ஆயிரம் மில்லியன் ரூபாய்கள் செலவிடப்படவிருக்கிறது. 
இதற்காக உலகவங்கி ,ஆசிய அபிவிருத்தி வங்கி போன்ற சர்வதேச நிதிநிறுவனங்கள் எப்போதுவேண்டுமென்றாலும் நிதியைத்தர தயாராகவே இருக்கின்றன. 
இந்த mega project ஐ எதிர்கொள்ளகூடிய நிலையில் வடமாகாண சபையும் அதன் அமைச்சர்களும் அதன் தலைமைப் பொறுப்பதிகாரியுமான முதலமைச்சரும் தயாராக இருக்கின்றார்களா என்றால் இல்லை என்பதே மிகத்தெளிவான பதில்.
நிர்வாக மட்டத்திலுள்ள அனைவருக்கும் இது தெரியும்.
இதற்கான அடிப்படையான சில தயார் படுத்தல்களையாவது வடமாகணசபையும் முதலமைச்சரும் செய்கின்றார்களா என்றால் அதுவுமில்லை.
Pro-Active ஆனா எந்த செயல் பாட்டையும் முதலமைச்சர் செய்வதில்லை.

மக்களாலும், வடமாகாண சபை mp களாலும் எழுப்பப்படும் கேள்விகளுக்கு இதுவரைக்கும் முதலமைச்சர் அவர்கள் constructive ஆனா எந்த பதிலையும் சொல்லவில்லை. 
அரச திணைக்கள உயர் அதிகாரின் ஊழல்களை வடமாகாண சபை MP கள் வடமாகணசபை அமர்வுகளில் சம்பந்தபட்ட அமைச்சர்களிடம் கேட்கும்போது அதற்கான சரியான பதிலோ /நடவடிக்கையோ அளிக்கப்படுவதில்லை /எடுக்கப்படுவதில்லை . மாறாக இந்த முறைகேடுகளை MP க்களுக்கு தெரியப்படுத்தும் சில நேர்மையான அதிகாரிகள் துரோகிகளாகவே கருதப்படுகின்றார்கள்.இவற்றையெல்லாம் முதலமைச்சர் வேடிக்கை மட்டுமே பார்க்கின்றார். வினைத்திறன் மிக்க எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை.

சில மக்கள் சந்திப்புகளின்போது மக்களின் கோரிக்கைகளுக்கான பொறுப்புணர்வுள்ள பதிலை முதலமைச்சர் அளிப்பதில்லை. அண்மையில் புங்குடுதீவில் நடந்த மக்கள் சந்திப்பின் பொது அம்மக்கள் புங்குடுதீவிற்கு தனியான காவல் நிலையம் வேண்டுமென்று முதலமைச்சரிடம் கோரிக்கை வைத்தனர். இதற்கான முதலமைச்சரின் பதில் வேடிக்கையானது. போலிஸ் அதிகாரத்தை வடமாகாண சபைக்கு பெற்றுக்கொள்ளுவதற்காக நாம் போராடிக் கொண்டு இருக்கும் இவ்வேளையில் புதிய போலிஸ் நிலையத்தை மத்திய அரசிடம் கேட்கமுடியாது என்ற கருதுப்படவே முதலமைச்சர் பதிலளித்தார். போலிஸ் அதிகாரம் மாகாண அரசிடம் வரும்வரை அப்பகுதி மக்கள் அல்லல்படவேண்டும் என்பதா முதலமைச்சரின் வாதம் ?

இதைபோல மக்கள் பிரச்சினைகளுக்கு தீர்வை கண்டறிவதை விட அவை தீர்க்கப்பட முடியாது என்பதற்கான காரணங்களையே முதலமைச்சர் சொல்கின்றார்.
அண்மையில் மணல் பிரச்சினை சம்பந்தமான கரவெட்டி ஒன்றியம் முன்வைத்த கோரிக்கைக்கும் முதலமைச்சர் இவ்வாறே பதிலளித்தார்.

மக்களின் எந்த பிரச்சினைக்கும் இவர் தீர்வுகண்டதாக தெரியவில்லை.
இவரின் ஆணைக்குட்பட்ட திணைக்களங்களில் நடக்கும் முறைகேடுகளுக்கு எதிராக இவர் எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை.
மாகாண சபையின் வினைத்திறனை அதிகரிப்பதற்காக இவர் எந்தவிதமான நடவடிக்கைகளையும் இதுவரை எடுக்கவில்லை.
இவருடன் சந்திக்க வரும் பிறநாட்டு அமைச்சர்களிடமும் அதிகாரிகளிடமும் இவர் சொல்வது ஒன்றே ஒன்றுதான்.
முதலில் இனப்பிரச்சினையை தீருங்கள்.
பின்னர் அபிவிருத்தியை பற்றி பேசுங்கள் என்பதேயாகும். 
இது எவ்வளவு பிற்போக்கு சிந்தனை. 
இனப்பிரைச்சினைக்கான தீர்வு முயற்சிகளோடு சமாந்தரமாக அபிவிருத்திக்கான முயற்சிகளுக்கு முதலமைச்சர் தயாரில்லை. இதனால் பெரு அளவிலான பணம் தடுக்கப்படுகிறது. இதற்கு முதலமைச்சர் சொல்லும் காரணம் சிரிப்புக்கிடமானது. அபிவிருத்திஎன்ற போர்வையில் தென்னிலங்கை நிறுவனங்களுக்கும் பணத்தை வாரிவழங்கும் வெளிநாட்டு சூழ்ச்சிதான் இந்த அபிவிருத்தி நாடகம் என்பதே அவர்பதில். அவருக்கு ஒன்று தெரியவில்லை. MEGA PROJECTS ஐ முன்னேடுப்பதற்கான வளங்கள் எதுவுமே எம்மிடம் இல்லை. 
மனிதவளம், தொழில்சார் வல்லுனர்கள், அங்கீகரிக்கப்பட்ட கட்டுமான நிறுவனங்கள், உபகரணங்கள் , இயந்திரங்கள், கட்டமைக்கப்பட்ட நிர்வாகம் என எதுவுமே எம்மிடம் இல்லை. 
இவை எல்லாவற்றிற்கும் நாம் தென்னிலங்கையையே சார்ந்திருக்க வேண்டும். 
இதுவே உண்மை. 
இதைவிடுத்து தென்னிலங்கைக்கு பணம் சென்றுவிடும் என்று அபிவிருத்தி திட்டங்களை பிற்போடுவது முதலமைச்சரின் அனுபவமின்மையும் தவறான எடுகோள்களையுமே எடுத்துக்காட்டுகின்றது.
இது மக்களுக்கு செய்யும் மிகப்பெரிய துரோகமாகும்.

https://www.youtube.com/watch?v=7W4282M2okc

On 11/14/2015, 8:44:14, arjun said:

விக்னேஸ்வரன் அவர்கள் வினைத்திறன் இல்லாத ஒரு முதலமைச்சர் என்பதற்கு பின்வரும் காரணங்களை முன்வைக்கிறேன் .
1) அரசியல் தெளிவின்மை 
2) இராஜ தந்திர அனுபவமின்மை
3) நிர்வாக திறனின்மை 
4) மக்கள் பிரச்சினைக்கு தீர்வு காணும் ஆளுமையின்மை 
5) Pro-Active சிந்தனையின்மை 
6) இனப்பிரச்சினையையும் அபிவிருத்தியையும் ஒரே தட்டில் இட்டு அளவிடுதல் 
7) தன்னுடனான உட்கட்சி முரண்பாட்டை முறையாக கையாளாமை .

இறுதியாக ஒன்றை சொல்கின்றேன். 
முதலமைச்சர் ஒரு பழுத்த ஆன்மீகவாதி.
இந்து மதகொள்கைகளை தன் வாழ்வின் அடிப்படையாக கொண்டவர். 
பாவங்களுக்கு அஞ்சுபவர். 
மனிதநேயம் மிக்கவர். 
அவருடைய மதக்கொள்கைக் கொள்கைகளில் ஒன்று யோகநெறி. 
யோகம் என்பது ஒருவன் தனக்கு விதிக்கப்பட்ட கடைமையை சரிவர செய்தல் ஆகும்.
பலன் மீது பற்றுக்கொள்ளாது ஒருவன் தன் கடமையை தொடர்ச்சியாக ஆற்ற வேண்டும். 
இவர்களே தர்மவான்கள்.
இவர்களே இறைவனின் விருப்புக்குரியவர்கள். 
இவர்களே பிறவிப்பெரும் கடலை தாண்டக்கூடியவர்கள்.
கடைமையில் தவறுபவர்கள் இவற்றிற்கு தகுதியற்றவர்கள்.
கடைமையை செய்யாதவர்களில் முதலமைச்சரும் ஒருவர் .
வினைத்திறன் இல்லாதவர் விக்னேஸ்வரன். 
அரசியலைவிட்டு விலகிவிடுங்கள் ஐயா !

இந்த கட்டுரையை எழுதுவற்கு மூலகாரணமான நண்பர்களுக்கு நன்றி

நவாதரன் My Thoughts

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.