Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜனாதிபதியின் விஜயத்தை முன்னிட்டு பாதுகாப்பு அதிகரிப்பு

Featured Replies

ஜனாதிபதியின் விஜயத்தை முன்னிட்டு பாதுகாப்பு அதிகரிப்பு
 
article_1450598955-aaaaaaaaa.jpg

-எம்.றொசாந்த்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் யாழ்ப்பாணத்துக்கான விஜயத்தை முன்னிட்டு இன்று ஞாயிற்றுக்கிழமை யாழ்.நகர் பகுதி, பலாலி வீதி மற்றும் யாழ்.நகரில் இருந்து  யாழ்.மாவட்ட செயலகம் வரையிலான கண்டி வீதி என்பவற்றில் பெருமளவான இராணுவத்தினர், விசேட அதிரடிப்படையினர் மற்றும் பொலிஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தபட்டுள்ளது.

யாழ்பாணத்துக்கு விஜயம் மேற்கொள்ளும் ஜனாதிபதி யாழ். ஆயர் இல்லத்தில் சந்திப்பு ஒன்றினை மேற்கொள்ளவுள்ளார். அடுத்து வட மாகாண ஆளுநர் வாசஸ்தலத்தில் சந்திப்பு ஒன்றினை மேற்கொள்ளவுள்ளார். இவ்விரண்டு சந்திப்புக்கும் ஊடகங்களுக்கு அனுமதி மறுக்கபட்டுள்ளது.

அதனை அடுத்து மாலை 3 மணியளவில் யாழ். நகரில் தனியார் வங்கி ஒன்றினை திறந்து வைக்கவுள்ளார்.அடுத்து யாழ். மாநகர சபை மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ள தேசிய கிறிஸ்மஸ் கரோல் தின நிகழ்வில் பங்கேற்கவுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேனா யாழ். வருகையை முன்னிட்டு முன்னரை விட இம்முறை பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

- See more at: http://www.tamilmirror.lk/161964#sthash.63qBrXui.dpuf
  • கருத்துக்கள உறவுகள்

இப்ப தெரியும் எவ்வளவு சிங்களப் படை வடக்கில் இருக்கென்று. :rolleyes:

1 hour ago, நவீனன் said:

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் யாழ்ப்பாணத்துக்கான விஜயத்தை முன்னிட்டு இன்று ஞாயிற்றுக்கிழமை யாழ்.நகர் பகுதி, பலாலி வீதி மற்றும் யாழ்.நகரில் இருந்து  யாழ்.மாவட்ட செயலகம் வரையிலான கண்டி வீதி என்பவற்றில் பெருமளவான இராணுவத்தினர், விசேட அதிரடிப்படையினர் மற்றும் பொலிஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தபட்டுள்ளது.

இதை வாசித்ததும் சரி போய்த்தான் பார்ப்பமே. நானும் பலமாதங்களாக இராணுவத்தை ஆயுதத்துடன் வீதியில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபடுவதைப் பார்க்கவில்லை. யாழ் நகருக்கு போனால் அங்கு ஆச்சரியம்தான் கிடைத்தது. அங்கு ஒரு இராணுவத்தைக்கூட காணமுடியவில்லை. மாலை 3மணி முதல் 3:30 வரை நகரில்தான் நின்றேன். சரி திறப்பு விழா நடக்கும் Cargills square போனால் கொமேர்சல் வங்கியிலிருந்து மணிக்கூட்டு வீதிவரை ஒருபக்க வீதியை வாகனங்களுக்கு மூடியிருந்தார்கள், துவிச்சக்கர வண்டி, நடந்து செல்வோர் மீது தடை எதுவுமில்லை. மற்றய வீதி வாகனப் போக்குவரத்திற்கு திறந்திருந்தது. இன்றுதான் பார்க்கும் பலன் கிடைத்தது - 4 இராணுவத்தினர் ஆயுதத்துடன் Cargills square வாசலில் நின்றிருந்தார்கள். உள்ளே ஜனாதிபதி + பிரதமர். அப்படியே ஆஸ்பத்திரி வீதியூடாக வந்து பருத்தித்துறை வீதி வழியே பயணித்தேன். வேம்படிச் சந்தியிலும், ஆரியகுளச் சந்தியிலும் வழமையாக நிற்கும் ஆயுதமற்ற போக்குவரத்து பொலிஸ் இருவர் கடமையில். ஆனால் ஆரியகுளச் சந்தியில் வாகனங்களை வேம்படி நோக்கிச் செல்ல விடாது ஸ்ரான்லி வீதிவழியாக திருப்பினர். 

தொடர்ந்து பலாலி வீதியினூடாக பயணித்தபோது ஒவ்வொரு சந்தியிலும் இரு ஆயுதமற்ற பொலிசாரும் இரு ஆயுதம் தரித்த இராணுவமும் நின்றதைக் கண்டேன்.

யாழ் நகரில் மாலை 3 மணிக்கும் 3:30க்கும் இடையே எடுத்த சில படங்கள்.

யாழ் நகரில் மாலை 3 மணிக்கும் 3:30க்கும் இடையே எடுத்த சில படங்கள். ஏதோ யதார்த்தைப் புரியவைக்க நம்மளால முடிந்தது இதுதான். 

ஸ்ரான்லி வீதி - ஆரியகுளம் நோக்கி.

1zogcb8.jpg

ஸ்ரான்லி வீதி - வின்சர் தியேட்டர் நோக்கி.

mif380.jpg

ஆஸ்பத்திரி வீதி - வேம்படிச்சந்தி நோக்கி

dgqrnb.jpg

ஆஸ்பத்திரி வீதி - கே.கே.எஸ் வீதி நோக்கி

25qabsx.jpg

நவீன சந்தை கட்டடங்களின் நடுவே கஸ்தூரியார் வீதி

hv9rtv.jpg

மின்சார நிலைய வீதி - பஸ் நிலையம் நோக்கி

kcx91s.jpg

மின்சார நிலைய வீதி - மலேயன் கபே நோக்கி

2qiaiq8.jpg

மின்சார நிலைய வீதி - கஸ்தூரியார் வீதி சந்தி

egs9bp.jpg

ஏதோ யதார்த்தைப் புரியவைக்க நம்மளால முடிந்தது இதுதான்.

  • கருத்துக்கள உறவுகள்

டெயிலிமிரரின் வாரிசு தமிழ்மிரர் பொய் சொல்லிப் போட்டுது. சிங்கள சனாதிபதி சும்மா வந்திட்டு போயிருக்கிறார். அங்க இராணுவமே இல்லை... இராணுவம் எல்லாம் முடங்கிட்டுது. நம்புங்கோ.. நவீன சந்தையைச் சுத்தி படம் எடுத்துப் போட்டிருக்கிறம்... பாருங்கோ.. நோ இராணுவம். :rolleyes:tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்

ஜனாதிபதியின் யாழ்.வருகையை முன்னிட்டு யாழில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு உள்ளது.

ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேனா ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொள்கின்றார். அதனை முன்னிட்டு யாழ்.நகர் பகுதி , பலாலி வீதி மற்றும் யாழ்.நகரில் இருந்து  யாழ்.மாவட்ட செயலகம் வரையிலான கண்டி வீதி என்பவற்றில் பெருமளவான இராணுவத்தினர் ,பொலிஸ் விஷேட அதிரடிப்படையினர் மற்றும் பொலிசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்த பட்டுள்ளது.

யாழுக்கு விஜயம் மேற்கொள்ளும் ஜனாதிபதி யாழ். ஆயர் இல்லத்தில் சந்திப்பு ஒன்றினை மேற்கொள்ள வுள்ளார். அதனை அடுத்து வடமாகாண ஆளூநர் வாசஸ்தலத்தில் சந்திப்பு ஒன்றினை மேற்கொள்ள உள்ளார். இவ்விரண்டு சந்திப்புக்கும் ஊடகங்களுக்கு அனுமதி மறுக்க பட்டு உள்ளது.

அதனை அடுத்து மாலை 3 மணியளவில் யாழ்.நகரில் தனியார் வங்கி ஒன்றினை திறந்து வைக்கவுள்ளார் அதனை அடுத்து யாழ்.மாநகர சபை மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ள தேசிய கிறிஸ்மஸ் கரோல் தின நிகழ்வில் பங்கேற்கவுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேனா யாழ்.வருகையை முன்னிட்டு முன்னரை விட இம்முறை பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்த ப்பட்டு உள்ளது.

கடந்த வாரம் கட்டு நாயக்க பண்டார நாயக்க சர்வதேச விமான நிலையத்தில் ஜனாதிபதியை கைத்துப்பாக்கியை காலில் கட்டிய படி நெருங்க முற்பட்ட ஒருவரை பொலிசார் கைது செய்து இருந்தனர்.

பின்னர் குறித்த நபர் சிவில் விமான சேவைகள் அதிகார சபையை சேர்ந்த ஊழியர் எனவும் பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆராய்வதற்கே குறித்த நபர் அனுப்பப்பட்டதாகவும்இ அவரது காலில் கட்டப்பட்டு இருந்தது போலி துப்பாக்கி எனவும் அறிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/127062/language/ta-IN/article.aspx

Edited by nedukkalapoovan

7 minutes ago, nedukkalapoovan said:

ஜனாதிபதியின் யாழ்.வருகையை முன்னிட்டு யாழில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு உள்ளது.

இப்படம் 2014 ஒக்ரோபரில் எடுத்தது. வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

உந்தப் படத்தை இணைத்த குறித்த செய்தி நிறுவத்தின் படம் சார் விடயம் தொடர்பாக.. செய்தி இணைக்கப்படவில்லை. அப்படிப் பார்த்தால்.. நீங்கள் இணைத்த படங்களுக்கும் தான் தேதியில்லை. அது கூட பிறிதொரு சந்தர்ப்பத்தில் எடுக்கப்பட்டிருக்க வாய்ப்புள்ளது தானே.

செய்தி இணைக்கப்பட்டது யாழ் நகரில் இருந்து அல்ல.. யாழ் நகர் பகுதியில் இருந்து யாழ் செயலகம் நோக்கிய கண்டிவீதி எங்கனும் பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் பலாலி வீதியிலும் இராணுவம்.. மற்றும் சிங்களப் படைகள் குவிப்பு. இதுதான் செய்தி.

தாங்கள்.. யாழ் நகரில்..நவீன சந்தையைச் சுற்றி படம் எடுத்துப் போட்டிட்டு... அங்கு இராணுவம் இல்லை என்று காட்ட விளைவது யாழ் நகர் பற்றி அறிவில்லாதவர்களை கவரலாம்.. உண்மை என்று அவர்களை நம்ப வைக்கலாம்.. . ஆனால்.. உந்தப் படங்காட்டல்கள் உண்மை நிலவரம் அறிய போதுமானவை அல்ல என்பது தான் எங்கள் நிலைப்பாடு இங்கு. tw_blush::rolleyes:

4 hours ago, ஜீவன் சிவா said:

இதை வாசித்ததும் சரி போய்த்தான் பார்ப்பமே. நானும் பலமாதங்களாக இராணுவத்தை ஆயுதத்துடன் வீதியில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபடுவதைப் பார்க்கவில்லை. யாழ் நகருக்கு போனால் அங்கு ஆச்சரியம்தான் கிடைத்தது. அங்கு ஒரு இராணுவத்தைக்கூட காணமுடியவில்லை. மாலை 3மணி முதல் 3:30 வரை நகரில்தான் நின்றேன். சரி திறப்பு விழா நடக்கும் Cargills square போனால் கொமேர்சல் வங்கியிலிருந்து மணிக்கூட்டு வீதிவரை ஒருபக்க வீதியை வாகனங்களுக்கு மூடியிருந்தார்கள், துவிச்சக்கர வண்டி, நடந்து செல்வோர் மீது தடை எதுவுமில்லை. மற்றய வீதி வாகனப் போக்குவரத்திற்கு திறந்திருந்தது. இன்றுதான் பார்க்கும் பலன் கிடைத்தது - 4 இராணுவத்தினர் ஆயுதத்துடன் Cargills square வாசலில் நின்றிருந்தார்கள். உள்ளே ஜனாதிபதி + பிரதமர். அப்படியே ஆஸ்பத்திரி வீதியூடாக வந்து பருத்தித்துறை வீதி வழியே பயணித்தேன். வேம்படிச் சந்தியிலும், ஆரியகுளச் சந்தியிலும் வழமையாக நிற்கும் ஆயுதமற்ற போக்குவரத்து பொலிஸ் இருவர் கடமையில். ஆனால் ஆரியகுளச் சந்தியில் வாகனங்களை வேம்படி நோக்கிச் செல்ல விடாது ஸ்ரான்லி வீதிவழியாக திருப்பினர். 

தொடர்ந்து பலாலி வீதியினூடாக பயணித்தபோது ஒவ்வொரு சந்தியிலும் இரு ஆயுதமற்ற பொலிசாரும் இரு ஆயுதம் தரித்த இராணுவமும் நின்றதைக் கண்டேன்.

யாழ் நகரில் மாலை 3 மணிக்கும் 3:30க்கும் இடையே எடுத்த சில படங்கள்.

யாழ் நகரில் மாலை 3 மணிக்கும் 3:30க்கும் இடையே எடுத்த சில படங்கள். ஏதோ யதார்த்தைப் புரியவைக்க நம்மளால முடிந்தது இதுதான். 

ஏதோ யதார்த்தைப் புரியவைக்க நம்மளால முடிந்தது இதுதான்.

நன்றி ஜீவன்! வெளியில் இருந்து பூச்சாண்டி காட்ட முயல்பவர்களின் முகத்திரை கிழிந்து பல நாட்கள் ஆகி விட்டது. சிலர் இன்னமும் 1990 களில் இருக்கிறார்கள். அவர்களுக்கு சமகால யதார்த்தத்தை புரிய வைப்பது மிகவும் கடினம். நாட்டில் எப்பவும் அமைதியின்மை நீடிக்க வேண்டும்..அது மட்டும் தான் அவர்களது ஆசை. 

2 hours ago, nedukkalapoovan said:

உந்தப் படத்தை இணைத்த குறித்த செய்தி நிறுவத்தின் படம் சார் விடயம் தொடர்பாக.. செய்தி இணைக்கப்படவில்லை. அப்படிப் பார்த்தால்.. நீங்கள் இணைத்த படங்களுக்கும் தான் தேதியில்லை. அது கூட பிறிதொரு சந்தர்ப்பத்தில் எடுக்கப்பட்டிருக்க வாய்ப்புள்ளது தானே.

செய்தி இணைக்கப்பட்டது யாழ் நகரில் இருந்து அல்ல.. யாழ் நகர் பகுதியில் இருந்து யாழ் செயலகம் நோக்கிய கண்டிவீதி எங்கனும் பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் பலாலி வீதியிலும் இராணுவம்.. மற்றும் சிங்களப் படைகள் குவிப்பு. இதுதான் செய்தி.

தாங்கள்.. யாழ் நகரில்..நவீன சந்தையைச் சுற்றி படம் எடுத்துப் போட்டிட்டு... அங்கு இராணுவம் இல்லை என்று காட்ட விளைவது யாழ் நகர் பற்றி அறிவில்லாதவர்களை கவரலாம்.. உண்மை என்று அவர்களை நம்ப வைக்கலாம்.. . ஆனால்.. உந்தப் படங்காட்டல்கள் உண்மை நிலவரம் அறிய போதுமானவை அல்ல என்பது தான் எங்கள் நிலைப்பாடு இங்கு. tw_blush::rolleyes:

4 hours ago, nedukkalapoovan said:

யாழ்.நகர் பகுதி , பலாலி வீதி மற்றும் யாழ்.நகரில் இருந்து  யாழ்.மாவட்ட செயலகம் வரையிலான கண்டி வீதி என்பவற்றில் பெருமளவான இராணுவத்தினர் ,பொலிஸ் விஷேட அதிரடிப்படையினர் மற்றும் பொலிசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்த பட்டுள்ளது.
 
4 hours ago, ஜீவன் சிவா said:

இதை வாசித்ததும் சரி போய்த்தான் பார்ப்பமே. நானும் பலமாதங்களாக இராணுவத்தை ஆயுதத்துடன் வீதியில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபடுவதைப் பார்க்கவில்லை. யாழ் நகருக்கு போனால் அங்கு ஆச்சரியம்தான் கிடைத்தது. அங்கு ஒரு இராணுவத்தைக்கூட காணமுடியவில்லை. மாலை 3மணி முதல் 3:30 வரை நகரில்தான் நின்றேன். சரி திறப்பு விழா நடக்கும் Cargills square போனால் கொமேர்சல் வங்கியிலிருந்து மணிக்கூட்டு வீதிவரை ஒருபக்க வீதியை வாகனங்களுக்கு மூடியிருந்தார்கள், துவிச்சக்கர வண்டி, நடந்து செல்வோர் மீது தடை எதுவுமில்லை. மற்றய வீதி வாகனப் போக்குவரத்திற்கு திறந்திருந்தது. இன்றுதான் பார்க்கும் பலன் கிடைத்தது - 4 இராணுவத்தினர் ஆயுதத்துடன் Cargills square வாசலில் நின்றிருந்தார்கள். உள்ளே ஜனாதிபதி + பிரதமர். அப்படியே ஆஸ்பத்திரி வீதியூடாக வந்து பருத்தித்துறை வீதி வழியே பயணித்தேன். வேம்படிச் சந்தியிலும், ஆரியகுளச் சந்தியிலும் வழமையாக நிற்கும் ஆயுதமற்ற போக்குவரத்து பொலிஸ் இருவர் கடமையில். ஆனால் ஆரியகுளச் சந்தியில் வாகனங்களை வேம்படி நோக்கிச் செல்ல விடாது ஸ்ரான்லி வீதிவழியாக திருப்பினர். 

தொடர்ந்து பலாலி வீதியினூடாக பயணித்தபோது ஒவ்வொரு சந்தியிலும் இரு ஆயுதமற்ற பொலிசாரும் இரு ஆயுதம் தரித்த இராணுவமும் நின்றதைக் கண்டேன்.

2 hours ago, nedukkalapoovan said:

உந்தப் படத்தை இணைத்த குறித்த செய்தி நிறுவத்தின் படம் சார் விடயம் தொடர்பாக.. செய்தி இணைக்கப்படவில்லை. அப்படிப் பார்த்தால்.. நீங்கள் இணைத்த படங்களுக்கும் தான் தேதியில்லை. அது கூட பிறிதொரு சந்தர்ப்பத்தில் எடுக்கப்பட்டிருக்க வாய்ப்புள்ளது தானே.

:D::D:

2 hours ago, nedukkalapoovan said:

செய்தி இணைக்கப்பட்டது யாழ் நகரில் இருந்து அல்ல..

:D::D::D:

  • கருத்துக்கள உறவுகள்

ஜீவன், நீங்கள் இணைத்த படங்கள் இயல்பாக இருக்கின்றது, நன்றி!

  • கருத்துக்கள உறவுகள்

செய்தி: யாழ் நகரப் பகுதி மற்றும் அங்கிருந்து கண்டிவீதி மற்றும் பலாலி வீதியில் சிங்களப் படைக்குவிப்பு.

இங்கு ஒருவர் இணைத்த படம்: யாழ் நகர மத்தி.. நவீன சந்தையைச் சுற்றி.. மற்றும் ஸ்ரான்லி வீதியின் ஒரு பகுதி.

படம் இணைத்தவரால்.. இன்னொரு சொல்லப்பட்ட சங்கதி.. பலாலி வீதியில் சந்திக்கு நாலு படை. ஆனால் அதனை படம் எடுக்க கருவி வேலை செய்யல்ல.. அல்லது பயம்... அல்லது அச்சம்.

பொதுமக்களின் கேள்வி என்னவென்றால்.. யாழ் நகரில் படைக்குவிப்பு என்று செய்தி எங்கும் இல்லை. யாழ் நகர் பகுதி என்பது பொதுவில் சுற்றயலைக்குறிக்கும். சொறீலங்கா சனாதிபதி வரவும் போகவும் பாவிக்கப்படும்.. குறிப்பிட்ட வீதிகளைக் குறிக்கும். அப்பகுதியில் இருந்து ஏன் படங்கள் வரவில்லை....??! ஏன் எடுக்க முடியவில்லை...??!

மற்றும் சிலருக்கு.. யாழ் நகருக்கு நினைத்த நேரத்தில் நினைத்த போது வேண்டிய பகுதிகளுக்கு மிகச் சுலபமாகவும் சுதந்திரமாகவும் போகக் கூடிய சூழல்.. 1990 மார்ச் தொடக்கம் 1995 ஒக்டோபர் வரை இருந்தது. அந்தச் சூழல் இன்றில்லை. அப்போதைய காலங்களில் விஜயம் செய்த சொறீலங்கா பிரதிநிதிகளை பாதுக்காக்க சந்திக்கு நாலு பேரை யாரும் நிறுத்தவும் இல்லை படைக்குவிப்பும் செய்யவில்லை. இரண்டு பஜிரோ முன்னப் பின்ன அவ்வளவு தான். யாரும் அவைக்கு தீங்கு செய்யல்லையே..! இந்த நிலையில் இன்று போர் ஓய்ந்து விட்டதாகவும் புலிகள் அழிக்கப்பட்டு விட்டதாகவும்.. புலிகளே ஆயுதத்தை மெளனித்து விட்டதாகவும் சொல்லும் நிலையில் வடக்குக் கிழக்கிற்கு வரும் சொறீலங்கா ஆட்களுக்கு எதுக்கு இராணுவப் பாதுகாப்பு..???!

இன்று நாட்டில் எங்கும் நிலவும் அதே சம அச்சுறுத்தல் தான் சொறிலங்கா பூராவும். அப்படி இருக்க.. வடக்கு கிழக்கில் மட்டும் ஏன்.. இந்தச் சந்தேகம்..???! இது தான் நல்லிணக்கத்திற்கான நல்லரசின் வெளிப்படை மனப்பான்மையா..?! இதனை தமிழ் மக்கள் நம்பனுமா..???!

யாரை திருப்திப்படுத்த இந்தப் படங்காட்டல்கள். இவை எதுவும் தமிழ் மக்களின் இதயங்களை வெல்லாது.. அவர்களிடம் சந்தேகங்களையே வளர்க்கும்.

உண்மையான தேவை.. இராணுவப் பிரச்சன்னம் முற்றாக நீங்கப்பட வேண்டியது மட்டும் தான். அதன் பின்னர் தான் வடக்கு மக்கள் ஓரளவு என்றாலும் சிவில் நிர்வாக உணர்வை அடைவார்கள். tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்

1933836_10153263187647944_63503664072213

இது இன்றைய விசயத்தின் போது எடுத்த படம்: நன்றி குளோபல் தமிழ்.

சாதாரண குடிபெயர்ந்த.. தமிழ் மக்களை சந்திக்க வரும் சிங்கள ஆட்சித் தலைமையின் நிலை...

சிறீலங்காவில் போர் ஓய்ந்து விட்டது. புலிகள் அழிந்து விட்டார்கள். தமிழ் மக்கள் ஐக்கிய இலங்கைக்குள் வாழ விரும்புகிறார்கள். நல்லிணக்கம் ஏற்பட்டுவிட்டது. நல்லாட்சி மலர்ந்து விட்டது. ஜனநாயகம் பூத்துக் குலுங்குகிறது. இவ்வளவும் நடந்திருக்க... ஏன் இந்த சந்தேகங்கப் பார்வை தமிழ் மக்கள் மத்தியில் வர சிங்களவர்களுக்கு..??! நிச்சயமாக சிங்களவர்களால் எப்போதும் தமிழர்களோடு நல்லிணக்கமாக வாழ முடியாது. அந்த வகையில் தமிழ் மக்கள் பிரிந்து போய் நிம்மதியாக வாழ வழி சமைக்க வேண்டும் சர்வதேசம். ( சிவப்பு வலயம் - சிங்களப் படை. மஞ்சள் வலயம் - சிங்களப் புலனாய்வுப்படை, ஒரேஞ் வலயம் - சிங்கள சிவில் படை - அரசியல்வாதிங்கள் உட்பட) tw_blush::rolleyes:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

nks%201_zpsuxuwseo4.jpg

கறுப்பு வலயத்தில் உள்ள மூதாட்டியை பார்த்தால் சிங்கள இனத்தவரை மாதிரி தெரிகின்றது.:rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

ஜீவன். இராணுவம்., பொலிஸ் எப்போ தொடக்கம்  ஆயுதமற்று கடமையில் ஈடுபடுகிறார்கள்?

1 hour ago, nunavilan said:

ஜீவன். இராணுவம்., பொலிஸ் எப்போ தொடக்கம்  ஆயுதமற்று கடமையில் ஈடுபடுகிறார்கள்?

எப்போதிலிருந்து என்பது தெரியாது.

இவ்வருடம் ஏப்பிரலில் இங்கு 1 மாதம் வந்திருந்தேன். பின்னர் ஜூலை இறுதியிலிருந்து இங்கிருக்கின்றேன். நேற்றுத்தான் முதற் தடவையாக இவ்வருடத்தில் இலங்கையில் (யாழில் மட்டுமல்ல) இராணுவத்தை ஆயுதத்துடன் கண்டேன். அல்லது நேற்றுத்தான் இராணுவத்தை வீதியில் தனது கடமையிலிருக்கும்போது பார்த்தேன். சென்ற வருடத்தில் இப்படி இருக்கவில்லை. ஓமந்தை சாவடி ஆகஸ்ட்டில் முழுமையாகப் பூட்டப்பட்டது. முன்பு அங்கும் ஓட்டுனர் மட்டுமே பதிவை மேற்கொள்ள வேண்டியிருந்தது. பயணிகளுக்கு எந்த அசௌகரியமும் இருக்கவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
Quote

சென்ற வருடத்தில் இப்படி இருக்கவில்லை

சென்ற வருடம் நான் அங்கிருந்தேன். றோட்டில் புல்லு புடுங்கும்(ஒரு வகை செடி) இராணுவமும் ஆயுதத்துடன் காணப்பட்டார்கள்.

4 hours ago, குமாரசாமி said:

nks%201_zpsuxuwseo4.jpg

கறுப்பு வலயத்தில் உள்ள மூதாட்டியை பார்த்தால் சிங்கள இனத்தவரை மாதிரி தெரிகின்றது.:rolleyes:

குமாரசாமி அண்ணை இது மல்லாகத்திலுள்ள இடம் பெயர்ந்தவர்களிற்கான முகாமில் எடுக்கப்பட்டிருக்கு போலிருக்கு. அப்புறம் ஏன் இந்த சந்தேகம்.

19 hours ago, ஜீவன் சிவா said:

ஏதோ யதார்த்தைப் புரியவைக்க நம்மளால முடிந்தது இதுதான்.

.

ஜீவன் 60 வருடங்களாக தமிழ் மக்களுக்கு எதிராக  தொடர்ந்துவரும் திட்டமிட்ட இன அழிப்பு அநீதிகளின்  பின்னரும் நல்ல உள்ளத்தோடு  சிங்கள ஜனாதிபதிக்காக இவ்வளவு பல இடங்கள் திரிந்து  கஷ்ரப்பட்டு போட்டோக்கள் எடுத்து  இணைத்துள்ளீர்கள். நீங்கள் மிவும் நல்லவர். உங்கள் ஒருவருக்காகவேனும்  சிங்கள ஜனாதிபதி தமிழ்மக்களின் பிறப்பு உரிமையான சுயாட்சியை அங்கீகரிக்கவேண்டும்.அங்கீகரிப்பார். எதிர்காலத்தில் தமிழ் மக்கள் சுதந்திர காற்றை சுவாசிப்பார்கள்.

ல்லோர் ஒருவர் உளரேல் அவர்பொருட்டு எல்லோருக்கும் பெய்யும் மழை

                                                                                                                       - ஒளவையார்

28 minutes ago, trinco said:

இது ஜனாதிபதிக்காக பதியப்பட்டதல்ல. எமது புலம் பெயர்ந்த சகோதரர்களிற்கானது. யதார்த்தத்தை புரிந்து கொள்வதற்காக பதியப்பட்டதே தவிர வேறு நோக்கங்கள் எதுவுமில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

புலம்பெயர் சகோதர்களுக்கு சொறீலங்கா சிங்கள ஆட்சியாளர்களின் அவர்களின் இராணுவ இயந்திரத்தின் இருப்பு செயற்பாடுகள் பற்றி நல்லாவே தெரிந்திருக்கிறது. சிலர் இன்னும் அதை அறியாமல் படங்காட்டுவது தான்.. தேவையற்றது. இராணுவப் பிரச்சன்னம் என்பது போர் ஓய்ந்த பின்னும் அந்தப் பிராந்தியத்தில் அளவுக்கு அதிகமான இராணுவ இருப்பு. அது நிலங்களை வளங்களை அபகரிப்பது ஆக்கிரமிப்பு. இந்த நிலையில் அது தேவையான போது ஆயுதங்களோடு வந்து பொதுமக்களின் இயல்பு வாழ்வுக்கு அச்சுறுத்தலாக அமைவது சிவில் நிர்வாகம் அன்று.

போரற்ற காலத்தில்.. ஒரு ஆட்சித் தலைவரின் வருகைக்கு இராணுவத்தை அழைத்துக் கொண்டு வருவது நம்பிக்கையீனத்தின் வெளிப்பாடு. மைத்திரி.. இராணுவம்.. புலனாய்ப்படை.. பொலிஸ்படை.. சிவில் உடை பாதுகாப்புப்படை.. புடை சூழத்தான் வந்து போயுள்ளார். இணைக்கப்பட்டுள்ள வீடியோக்கள் சாட்சி.

ஆனால் மகிந்த காலத்தில் வந்த கம்ரூன் இவை எதுவும் இல்லாமல் மக்களை சென்று பார்த்துள்ளார். தமிழ் முஸ்லிம் தலைவர்கள் தென்னிலங்கைக்கு இராணுவ பாதுகாப்பின்றி போய் வருகிறார்கள்.. மக்களை சந்திக்கிறார்கள். ஏன் சிங்களத் தலைவர்கள் மட்டும் இந்தப் படங்காட்டல் காட்டுகிறார்கள். மிகை இராணுவத் தேடல் என்பது மிகை நம்பிக்கையீனத்தின் வெளிப்பாடு. இந்த நிலையில் அமைதி.. நல்லிணக்கம்.. சக வாழ்வு.. எதுவுமே சாத்தியமில்லை. பேச்சளவில் அமையலாம் அவ்வளவே. :rolleyes:tw_blush:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

தாயகத்தில் அமைதி நிலவுகிறது என்றால் எல்லோருக்கும் சந்தோசம் தானே

அது உண்மையான  அமைதியாக

மக்களை மீண்டும் மீண்டும்  ஏமாற்றாத அமைதியாக இருக்கணும்

அதுவே விருப்பமும் வேண்டுதலும்..

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, ஜீவன் சிவா said:

இது ஜனாதிபதிக்காக பதியப்பட்டதல்ல. எமது புலம் பெயர்ந்த சகோதரர்களிற்கானது. யதார்த்தத்தை புரிந்து கொள்வதற்காக பதியப்பட்டதே தவிர வேறு நோக்கங்கள் எதுவுமில்லை.

ஜீவன் நீங்கள் எப்போதாவது இரவு 11 மணிக்குப்பின்னர் வீதியில் இறங்கவில்லைப் போலிருக்கின்றது.
காங்கேசந்துறை  வீதி, மானிப்பாய் வீதி, கல்லுண்டாய் வெளி, பலாலி வீதி, இத்தியாதி வீதியெல்லாம்   இரவு நேரங்களில் ஆயுதம் ஏந்திய ராணுவம் சைக்கிளில் உலா வருவார்கள். நீங்கள் காணவில்லையா? அல்லது வடக்கில் வசந்தம் வீசுகின்றது வாருங்கள் என அழைக்கும் மைத்திரி ரணிலின் பொய்யான அறிக்கைகளை உண்மையாக்க முயற்சிக்கின்றீர்களா ?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.