Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்கு முதல்வருக்கு துணையாக களம் இறங்கும் முன்னாள் சட்ட மா அதிபர்! 

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கு முதல்வருக்கு துணையாக களம் இறங்கும் முன்னாள் சட்ட மா அதிபர்! 
[Saturday 2016-01-02 08:00]

அரசியல் தீர்வு சம்பந்தமாக ஆராய்வதற்கான தமிழ் மக்கள் பேரவையின் உப குழுவில் வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் சார்பாக இலங்கையின் முன்னாள் சட்ட மா அதிபரும் விடுதலைப்புலிகளின் அரசியல் விவகார குழுவின் உறுப்பினராக பணியாற்றியவருமான சிவா பசுபதி நியமிக்கப்படுவார் என்று நம்பகமாக அறியவருகிறது. தமிழ் மக்கள் பேரவையின் 2 ஆவது கூட்டம் கடந்த வாரம் யாழ்ப்பாணத்தில் நடைபெற்றபோது அரசியல் தீர்வு சம்பந்தமாக ஆராயும்பொருட்டு அமைக்கப்பட்ட உபகுழுவில் 15 பேர் இடம்பெறுவர் என்றும் அதில் இருவர் வட மாகாண முதலமைச்சர் சார்பாக நியமிக்கப்படுவர் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. அரசியல் கட்சிகள் சார்பாக ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் இருவரை இக்கூட்டத்தில் முன்மொழிந்திருந்தார்கள்.

   இந்த நிலையிலேயே முன்னாள் சட்ட மா அதிபர் சிவா பசுபதியை தனது பிரதிநிதிகளில் ஒருவராக நியமிக்க முதலமைச்சர் விக்னேஸ்வரன் நடவடிக்கைகளை எடுத்துள்ளார். இதேவேளை, தனது இரண்டாவது பிரதி நிதியையும் நியமிக்கும் பொருட்டு விக்னேஸ்வரன் பல தமிழ் தேசிய புத்திஜீவிகளுடன் தொடர்புகொண்டுள்ளார் என்றும் விரைவில் இந்த தெரிவும் இடம்பெறும் என்றும் அறிய முடிகிறது.

தற்போது 82 வயதுடைய சிவா பசுபதி இலங்கையின் 34 ஆவது சட்ட மா அதிபராக 13 வருட காலம் (1975 – 1988) பணியாற்றியுள்ளார். இவர் ஒரு ஜனாதிபதி சட்டத்தரணியும் ஆவர். ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்துக்கும் விடுதலைப்புலிகளுகும் இடையில் வெளிநாடுகளில் பேச்சுவார்த்தை நடைபெற்றபோது விடுதலைப்புலிகளின் பேச்சுவார்த்தை குழுவின் ஆலோசகராக இவர் பணியாற்றியிருந்துடன் விடுதலிப்புலிகளின் அரசியல் விவகார குழுவின் பிரதிநிதியாகவும் பணியாற்றியிருந்தார். விடுதலைப்புலிகள் இலங்கை அரசாங்கத்துக்கு இடைக்கால தீர்வாக முன்வைத்த இடைக்கால தன்னாட்சி அதிகார சபையை இந்த அரசியல் விவகார குழுவே தயாரித்திருந்தது.

கொழும்பு ஆனந்தா கல்லூரி மற்றும் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி ஆகியவற்றில் தனது பாடசாலை கல்வியை பயின்ற சிவா பசுபதி, சிலோன் பல்கலைக் கழகத்தில் தனது சட்ட பட்டப் படிப்பை பூர்த்தி செய்து பின்னர் இங்கிலாந்தின் கேம்பிரிஜ் பல்கலைக்கழகத்தில் தனது பட்ட பின்படிப்பை பூர்த்தி செய்திருந்தார்.

http://www.seithy.com/breifNews.php?newsID=148377&category=TamilNews&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல செய்தி...

"தற்போது 82 வயதுடைய சிவா பசுபதி இலங்கையின் 34 ஆவது சட்ட மா அதிபராக 13 வருட காலம் (1975 – 1988) பணியாற்றியுள்ளார் "

இந்த தகுதி ஒன்றே போதும் விக்கியருக்கு உதவிக்கு வர .

இவர்தான்  பயங்கரவாத தடை சட்டதையும் தயாரித்தவர்.

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல செய்தி; நல்ல கூட்டு

விக்கி மற்றும் பசுபதி இருவரும் நல்ல கூட்டு. தமது பதவிக்காலம் முடியும் வரை இருவரும் சிங்கள அரசின் நீதித்துறையின் இரு உயரிய பதவிகளை அலங்கரித்தவர்கள். இருவரில் விக்கி இன்னும்ருபடி மேலானவர் இனப்படுகொலையாளி மகிந்தவுக்கு விசுவாசமானவர். 

  • கருத்துக்கள உறவுகள்

விடுதலைப்புலிகளுக்கு சார்பாக செய்தால் படிக்காத ஆட்கள்(படித்தாலும்). வி.புலிகளுக்கு எதிராக செயற்பட்டால் படித்த ஆட்கள். நல்ல கொள்கை. நல்ல அரசியல். ஞானம்.

  • கருத்துக்கள உறவுகள்

இவ்வளவுகாலமும் புலிகள் படிச்சவங்களை அரசியல் செய்யவிடாமல் தடுத்தார்கள் என்று குற்றஞ்சாட்டினார்கள். இப்ப படிச்சவங்கள் அரசியல் செய்ய வந்திருக்கிறார்கள் அதற்கும் எதிர்ப்பா?அவர்களுக்கு ஒரு சந்தர்ப்பம் கொடுத்துப் பார்த்தால் என்ன? தங்களைவிட சட்ட நுணுக்கம் தெரிந்தவர்கள் அரசியல் தீர்வு பற்றி ஒரு கருத்துருவாக்கம் செய்வது சம்சும் மாவை  கும்பலுக்கும் அவர்களின் வாலுகளுக்கும் ஏன் பிடிக்கவில்லை?

Edited by புலவர்

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, kalyani said:

விடுதலைப்புலிகளுக்கு சார்பாக செய்தால் படிக்காத ஆட்கள்(படித்தாலும்). வி.புலிகளுக்கு எதிராக செயற்பட்டால் படித்த ஆட்கள். நல்ல கொள்கை. நல்ல அரசியல். ஞானம்.

இங்க வந்து சும்மா யாரையாவது சொறியணும்...

எதிரிக்கு எதிரி நண்பன் 

அவ்வளவு தான்

மற்றும்படி

கொள்கை

மக்கள் நலன்

தமிழருக்கான தீர்வு

இதெல்லாம் இங்கு எமது கருத்தை எதிர்த்து கருத்து எழுதுபவர்கள்

ஆதரித்தால் எதிர்

எதிர்த்தால் ஆதரவு..

எப்பவும் நாங்க வந்தால்

வந்திட்டம் என்று தெரியணும்...

படிச்சவங்க படிக்காதவங்க யாரும் வாருங்கோ அரசியல் செய்யுங்கோ எதுவித பிரச்சனையுமில்லை .

இலங்கை  கொலை அரசுடன் பலவருடங்கள் ஒட்டி இருந்தவர்கள் வரும்போது சற்று கோவமும் வருகின்றது .கதிர்காமார் உயிருடன் இருந்திருந்தால் அவரும் வருவார் போல .

அரசுடன் அவர்கள் இருந்தார்கள் என்றே தெரியாதவர்கள் தான் இங்கு அதிகம் என்று நினைக்கின்றேன் அல்லது

தாமும் அப்படியானவர்கள் தானே என்ற நினைப்பும் இருக்கலாம் .

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, kalyani said:

விடுதலைப்புலிகளுக்கு சார்பாக செய்தால் படிக்காத ஆட்கள்(படித்தாலும்). வி.புலிகளுக்கு எதிராக செயற்பட்டால் படித்த ஆட்கள். நல்ல கொள்கை. நல்ல அரசியல். ஞானம்.

விடுங்கோ கல்யாணி இதுகளுக்கு தெரிஞ்சதெல்லாம் ஒன்றில் புலி வாந்தி அல்லது விக்கி ஐயாவை வசைபாடுவது. இந்த இரண்டையும் வச்சே காலத்தை ஓட்டுதுகள்.

29 minutes ago, புலவர் said:

இவ்வளவுகாலமும் புலிகள் படிச்சவங்களை அரசியல் செய்யவிடாமல் தடுத்தார்கள் என்று குற்றஞ்சாட்டினார்கள். இப்ப படிச்சவங்கள் அரசியல் செய்ய வந்திருக்கிறார்கள் அதற்கும் எதிர்ப்பா?அவர்களுக்கு ஒரு சந்தர்ப்பம் கொடுத்துப் பார்த்தால் என்ன? தங்களைவிட சட்ட நுணுக்கம் தெரிந்தவர்கள் அரசியல் தீர்வு பற்றி ஒரு கருத்துருவாக்கம் செய்வது சம்சும் மாவை  கும்பலுக்கும் அவர்களின் வாலுகளுக்கும் ஏன் பிடிக்கவில்லை?

சம்சும் ன்ற குட்டுகள் வெளிப்பட்டிடுமேல்லோ

Edited by Eppothum Thamizhan

  • கருத்துக்கள உறவுகள்

சிவா பசுபதி முன்னர் எப்படி இருந்தாலும் இருந்திட்டு போகட்டும்.. அதனால தமிழ் மக்களுக்கு ஒரு நன்மையும் இல்லை. ஆனால் அவரா திருந்தி விடுதலைப்புலிகளின் இடைக்கால நிர்வாக அரச முறை வடிவமைப்பு உட்பட பல விடயங்களை இனத்துக்காக ஆற்றவும் முற்பட்டிருக்கிறார். பொறுத்திருந்து பார்ப்போம்.. எப்படியான ஆலோசனைகளை முன்வைக்கப் போகிறார்கள் என்று. tw_blush:

தியரி ரொம்ப சிம்பிள் -

உண்மையை சொல்லுகின்றார்கள் நியாயத்தை தட்டி கேட்கின்றார்கள் பிழையை பிழை என்று எழுதுகின்றார்கள் .

-அதற்கு நீங்கள் எந்த பெயரையும் வைக்கலாம் .

  • கருத்துக்கள உறவுகள்
Just now, arjun said:

தியரி ரொம்ப சிம்பிள் -

உண்மையை சொல்லுகின்றார்கள் நியாயத்தை தட்டி கேட்கின்றார்கள் பிழையை பிழை என்று எழுதுகின்றார்கள் .

-அதற்கு நீங்கள் எந்த பெயரையும் வைக்கலாம் .

கூட்டமைப்பு பற்றி இங்கு எழுதப்படுபவை பற்றித்தானே எழுதுகின்றீர்கள்??

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, arjun said:

படிச்சவங்க படிக்காதவங்க யாரும் வாருங்கோ அரசியல் செய்யுங்கோ எதுவித பிரச்சனையுமில்லை .

இலங்கை  கொலை அரசுடன் பலவருடங்கள் ஒட்டி இருந்தவர்கள் வரும்போது சற்று கோவமும் வருகின்றது .கதிர்காமார் உயிருடன் இருந்திருந்தால் அவரும் வருவார் போல .

அரசுடன் அவர்கள் இருந்தார்கள் என்றே தெரியாதவர்கள் தான் இங்கு அதிகம் என்று நினைக்கின்றேன் அல்லது

தாமும் அப்படியானவர்கள் தானே என்ற நினைப்பும் இருக்கலாம் .

இலங்கை  கொலை அரசுடன் பலவருடங்கள் ஒட்டி இருந்த சித்தார்தனே கூட்டமைப்பில் இருக்கும்போது சட்டவல்லுனர்கள் ஒரு தீர்வு திட்டத்தை உருவாக்க உதவுவதில் தப்பில்லையே:unsure:

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, nedukkalapoovan said:

சிவா பசுபதி முன்னர் எப்படி இருந்தாலும் இருந்திட்டு போகட்டும்.. அதனால தமிழ் மக்களுக்கு ஒரு நன்மையும் இல்லை. ஆனால் அவரா திருந்தி விடுதலைப்புலிகளின் இடைக்கால நிர்வாக அரச முறை வடிவமைப்பு உட்பட பல விடயங்களை இனத்துக்காக ஆற்றவும் முற்பட்டிருக்கிறார். பொறுத்திருந்து பார்ப்போம்.. எப்படியான ஆலோசனைகளை முன்வைக்கப் போகிறார்கள் என்று. tw_blush:

பசுபதியர் மீதான கோபம்

அவர் புலிகளால் ஏற்றுக்கொள்ளப்பட்டு  இடைக்கால நிர்வாக சபைக்கு ஆலோசகராக நியமிக்கப்பட்டமை

விக்கியர் மீதான கோபம்

அவர் இப்ப புலிகளின் நிலைப்பாட்டோடு பயணிப்பது...

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, விசுகு said:

பசுபதியர் மீதான கோபம்

அவர் புலிகளால் ஏற்றுக்கொள்ளப்பட்டு  இடைக்கால நிர்வாக சபைக்கு ஆலோசகராக நியமிக்கப்பட்டமை

விக்கியர் மீதான கோபம்

அவர் இப்ப புலிகளின் நிலைப்பாட்டோடு பயணிப்பது...

உவைட கோபம் தண்ணி அடிக்கும் வரையும் அடுத்த சினிமாப் படத்துக்கு முன்னால குந்தும் வரையும் தான். இப்ப மக்களுக்கு தேவை.. அவர்களின் இத்தனை ஆண்டு கால.. அகிம்சை மற்றும் ஆயுதப் போராட்டங்களின் போது கொடுக்கப்பட்ட விலைக்கான.. விடை. இவர்களுக்கு அந்த அக்கறை கொஞ்சமும் இல்லை என்பது இவர்கள் ஆயுதம் தூக்கிட்டு.. அதனை தூக்கி எறிஞ்சிட்டு... வெளிநாடுகளுக்கு ஓடியாந்த வேகமே காட்டிக்கொடுக்குது. அதுக்கு அப்புறமும்... இவைட கோபத்தை எல்லாம் கணக்கில் எடுத்தால் பாவம்.. விலை கொடுத்த மக்கள்... என்ன செய்வார்கள். மீண்டும் மீண்டும் அவர்களின் சந்ததிகள் அடிமைகளாகக் கிடப்பதா..??! :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, arjun said:

படிச்சவங்க படிக்காதவங்க யாரும் வாருங்கோ அரசியல் செய்யுங்கோ எதுவித பிரச்சனையுமில்லை .

இலங்கை  கொலை அரசுடன் பலவருடங்கள் ஒட்டி இருந்தவர்கள் வரும்போது சற்று கோவமும் வருகின்றது .கதிர்காமார் உயிருடன் இருந்திருந்தால் அவரும் வருவார் போல .

அரசுடன் அவர்கள் இருந்தார்கள் என்றே தெரியாதவர்கள் தான் இங்கு அதிகம் என்று நினைக்கின்றேன் அல்லது

தாமும் அப்படியானவர்கள் தானே என்ற நினைப்பும் இருக்கலாம் .

உங்களது கொள்கை என்ன என எழுதினால் புரிந்து கொள்ளலாம்

ஒரு அரச உத்தியோகராக இருப்பது குற்றமா?

அரசுடன் இருந்தவர்கள் என்றால் சித்தார்த்தன்??

விக்கி ஐயா

சித்தார்த்தன்அவர்கள் தாயக தமிழரால் ஏற்றுக்கொள்ளப்பட்ட பின் உங்களுக்கு என்ன கடுப்பு??

3 minutes ago, விசுகு said:

பசுபதியர் மீதான கோபம்

அவர் புலிகளால் ஏற்றுக்கொள்ளப்பட்டு  இடைக்கால நிர்வாக சபைக்கு ஆலோசகராக நியமிக்கப்பட்டமை

விக்கியர் மீதான கோபம்

அவர் இப்ப புலிகளின் நிலைப்பாட்டோடு பயணிப்பது...

இருண்டவன் கண்ணுக்கு அருண்டதேல்லாம் பேய் .

இதற்குள் புலி எங்கு வந்தது .இது உங்கள் கற்பனை மட்டுமே .

கூட்டமைப்பு ஒன்றும் சுத்தமானவர்கள் இல்லை வெளிப்படியானவர்களும் இல்லை .தீர்வு பற்றி ,அரசுடன் பேச்சுவார்த்தை பற்றி ,தமது ஒற்றுமை பற்றி வாயை திறக்காதவர்கள் ஆனால் மக்களால் தெரிவு செய்யபட்டு ,புதிய அரசுடன் சேர்ந்து இந்த வருடம் ஒரு மாற்றம் வரும் என்கின்றார்கள் .

அதற்குள் இந்த பேரவையின் தொடக்கம் அதை தொடங்கிய விதம் அதில் உள்ளவர்கள் தான் சற்று பயத்தை வரவழைகின்றார்கள் .

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, arjun said:

அவர்களுக்கு அவர்களது கடமைகளைச்செய்ய 5 வருடங்கள் எந்த தடையும் வராது

அதற்கு பேரவையால் எந்த இடைஞ்சலுமில்லை

இடைஞ்சல் தரவும் முடியாது

அவர்கள் நாலு பேர் கூடி தமிழருக்:கான தீர்வு பற்றி பேசுவதில்

இவர்களுக்கு என்ன கடுப்பு???

அதிலும் 

சுத்தமில்லாத

வெளிப்படையில்லாத

வாய் திறக்காத இவர்களுக்கு...???

பேரவை தொடங்கபட்ட விதமும் கூட்டமைபில் இருந்துகொண்டு கூட்டமைபில் இருப்பவர்களும் இதில் வந்து இணையலாம் என்ற விக்கியரின் சின்னத்தனமான பேச்சும் குமார் பொன்னம்பலம் அவர்கள் அரசுடன் அல்லோ நிற்கின்றார்கள் என்பதும் தான் பேரவையில் சந்தேகத்தை தருகின்றது . 

சிவா பசுபதி ஒரு விதானை அல்லது வாத்தியாக இருந்திருந்தால் பிரச்சனையில்லை அவர் அரசில் வகித்த பதவி அப்படி .

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, arjun said:

மிகவும் மட்டமான பதில்

தமிழர்கள் இன்ன பதவிக்குத்தான் லாயக்கு என்பது போலிருக்கு...

ஒரு அளவுக்கு மேல் போவதானால் அவர் சிங்களவரின் வாரிசாகிவிடுவாரா???

கூட்டமைப்பை தவிர்த்து என அழைத்திருந்தால்

உங்கள் பதில் எப்படி இருக்கும் என்பது யாழுக்கு தெரியும்....

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, arjun said:

பேரவை தொடங்கபட்ட விதமும் கூட்டமைபில் இருந்துகொண்டு கூட்டமைபில் இருப்பவர்களும் இதில் வந்து இணையலாம் என்ற விக்கியரின் சின்னத்தனமான பேச்சும் குமார் பொன்னம்பலம் அவர்கள் அரசுடன் அல்லோ நிற்கின்றார்கள் என்பதும் தான் பேரவையில் சந்தேகத்தை தருகின்றது . 

சிவா பசுபதி ஒரு விதானை அல்லது வாத்தியாக இருந்திருந்தால் பிரச்சனையில்லை அவர் அரசில் வகித்த பதவி அப்படி .

இப்ப பிரச்சனை சிவா பசுபதி, விக்கி ஐயா ஆகியோரின் சட்டப்படிப்பு சம்சும்மின் அறிவைவிட கூடுதலாக இருப்பதே.

இதுக்குத்தானே முதலே சொன்னம் ஒரு தீர்வு திட்டத்தை முன் வைக்கும்போது மற்றவர்களையும் கலந்தாலோசியுங்கள் என்று.

புலிகள் ,ஆதரவாளர்கள் அரசியல் அறிவு பற்றி சொல்லிதெரியவேண்டியதில்லை .போராட்டம் நடக்கும் போது அங்கே என்ன நடக்கின்றது என்று தெரியாமல் காசை தாருங்கள் தலைவர் தமிழ் ஈழம் பிடிப்பார் என்றவர்கள் 

பேரவை தொடங்கப்பட்ட்பின் நாட்டில் நடக்கும் நிகழ்வுகள் மகிழ்சி தரக்கூடியவைகளாக இல்லை .அதைவிட்டு புலிகள் ஆதரவு அதனால் தான் பேரவை மேல் குற்றசாட்டு வைக்கின்றார்கள் என்பது அபத்தத்திலும் அபத்தம் 

நேற்று மட்டக்களப்பில் நடந்த கூட்டம் அதற்கு நல்லொதொரு சாட்சி .புலிகளின் ஆதரவாளர்கள் பலரே பேரவை மேலே விமர்சனம் வைக்கின்றார்கள் .

கஜேந்திரகுமார் ,சுரேஷின் பங்கு இதில் அதிகம் என்று நம்புகின்றேன் .

எழுதி வைத்துக்கொள்ளுங்கள் மீண்டும் நாங்கள் சொன்னதுதான் சரி என்று அனைவரும் உணரும் காலம் வரும் .

26 minutes ago, விசுகு said:

மிகவும் மட்டமான பதில்

தமிழர்கள் இன்ன பதவிக்குத்தான் லாயக்கு என்பது போலிருக்கு...

ஒரு அளவுக்கு மேல் போவதானால் அவர் சிங்களவரின் வாரிசாகிவிடுவாரா???

கூட்டமைப்பை தவிர்த்து என அழைத்திருந்தால்

உங்கள் பதில் எப்படி இருக்கும் என்பது யாழுக்கு தெரியும்....

கொஞ்சம் அடுத்த நிலைக்கு வாருங்கள் .இவர் இன்ன பதவிக்கு லாயக்கு என்று யார் சொன்னார் .இது ஆளைப்பற்றியது அல்ல பதவியை பற்றியது ,

சும்மா பெயர் தெரியாத விதானையார் அரசு வேலையில் இருப்பதற்கும் கதிர்காமர் செய்த வேலைக்கும் நிரம்ப வித்தியாசம் இருக்கு .

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, arjun said:

கொஞ்சம் அடுத்த நிலைக்கு வாருங்கள் .இவர் இன்ன பதவிக்கு லாயக்கு என்று யார் சொன்னார் .இது ஆளைப்பற்றியது அல்ல பதவியை பற்றியது ,

சும்மா பெயர் தெரியாத விதானையார் அரசு வேலையில் இருப்பதற்கும் கதிர்காமர் செய்த வேலைக்கும் நிரம்ப வித்தியாசம் இருக்கு .

எடுத்ததுக்கெல்லாம் சம்சும்க்கு செம்பு தூக்குவதை விட்டுவிட்டு நீங்களும் அடுத்த நிலைக்கு வாருங்கள்.

கதிர்காமர் தமிழினத்திற்கு என்ன செய்தார் என்பது எல்லோருக்கும் தெரியும். அரசின் தீர்வுப்பொதி வந்தபின்தான் தெரியும் சம்சும் அதற்கும் மேலா கீழா என்பது.:unsure:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மேலுள்ள கருத்துக்களை வைத்து எனது கருத்து....

முள்ளிவாய்க்கால் முடிவை கண்டு குதுகாலித்தவர்கள்........மகிந்தவை திட்டுகின்றார்கள்......
கருணாவை வாழ்த்தியவர்கள்......கருணா விக்கியருடன் சேரப்போகின்றார் என்றவுடன்  கருணாவை வசைபாடுகின்றார்கள்.
மாணிக்கங்களின் தியறி எங்கையோ இடிக்குது....எண்டாலும் பரவாயில்லை.

தமிழுக்கு ஒரு நாடு வேண்டும் என்ற கொள்கையுடையவர்கள் இன்றும் அதே கொள்கையுடனே இருக்கின்றார்கள்.

Edited by குமாரசாமி
எழுத்து திருத்தம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.