Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மைத்திரிக்கு எதிராக மக்கள் ஆர்ப்பாட்டம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
fort_protest_president_01.jpg
கொழும்பு - புறக்கோட்டை பகுதியில் தேசிய சங்க சம்மேளனம் தற்போது பாரிய ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்து வருகின்றது.

தற்போதைய அரசாங்கத்தினால் மக்களுக்கு எவ்வித நன்மைகளும் கிடைக்கவில்லை எனவும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கிய வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை எனவும் தெரிவித்தே இந்த ஆர்ப்பாட்டம் நடாத்தப்படுவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

அத்துடன், அரசாங்கம் இராணுவத்தினரை விசாரணைக்கு உட்படுத்தி வருவதாகவும், அதற்கு தாம் எதிர்ப்பு தெரிவிப்பதாகவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

அரசாங்கத்திற்கு எதிராக போராட்டங்கள் எதிர்வரும் நாட்களிலும் தொடரும் என அறிவித்துள்ள தேசிய சங்க சம்மேளனம், இந்த ஆர்ப்பாட்டங்கள் பருத்தித்துறை முதல் தேவேந்திரமுனை வரை நடாத்த திட்டமிட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுக் கொண்டிருந்த தருணத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக பிரசன்னமாகியுள்ளதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளோர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் படங்களை ஏந்தியவாறு உள்ளதாக அவர் கூறினார்.

மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக பதவியேற்று ஒரு வருட பூர்த்தி நிகழ்வுகள் இன்றைய தினம் நடாத்தப்பட்டு வருகின்ற நிலையில் இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டமும் முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. 

fort_protest_president_001.jpg

fort_protest_president_003.jpg

fort_protest_president_006.jpg

fort_protest_president_009.jpg

fort_protest_president_012.jpg

கொழும்பில் பாரிய வாகன நெரிசல்

இதேவேளை, ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படுகின்ற பகுதிக்கு ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பிலுள்ள பாராளுமன்ற உறுப்பினர்களான பிரசன்ன ரணதுங்க, விமல் வீரவங்ச, மஹிந்தானந்த அளுத்கமகே உள்ளிட்ட மேலும் பல அரசியல்வாதிகள் பிரசன்னமாகியுள்ளனர்.

அத்துடன், ஆர்ப்பாட்டக்காரர்கள் பேரணியாக முன்னோக்கி வருகைத் தந்து, அரச மரத்தடி சந்தியில் சத்தியாகிரக போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.

இதனால் குறித்த பகுதியில் பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

fort_protest_president_013.jpg

fort_protest_president_014.jpg

fort_protest_president_015.jpg

fort_protest_president_016.jpg

fort_protest_president_018.jpg

  • Replies 66
  • Views 3.4k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

மக்களைவிட பிக்குகள் அதிகம் போலத்தெரியுது???

இப்போ மைத்திரியை எதிப்பவர்கள் 

கடும்போக்கு சிங்களவர்களும் தமிழர்களும் தான் .

பிரச்சனை தீரக்கூடாது என்பதில் மிக கவனமாக இருக்கின்றார்கள் .

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, arjun said:

இப்போ மைத்திரியை எதிப்பவர்கள் 

கடும்போக்கு சிங்களவர்களும் தமிழர்களும் தான் .

பிரச்சனை தீரக்கூடாது என்பதில் மிக கவனமாக இருக்கின்றார்கள் .

கடும் போக்காளர்கள்  எங்கும் இருப்பார்கள் அண்ணா

அது பிரான்சானாலும் அமெரிக்காவானாலும்..

ஆனால் அவர்கள் சார்ந்து உங்களுடைய கடைசி வரிகள் தப்பானது

17 minutes ago, விசுகு said:

கடும் போக்காளர்கள்  எங்கும் இருப்பார்கள் அண்ணா

அது பிரான்சானாலும் அமெரிக்காவானாலும்..

ஆனால் அவர்கள் சார்ந்து உங்களுடைய கடைசி வரிகள் தப்பானது

அந்த வரிதான் அரசியல்

நான் பலரை அரசியல் தெரியாது என்று நக்கல் அடிப்பதற்கு இதுதான் காரணம் .

கறுப்பு வெள்ளை அல்ல அரசியல் இடையில் பலருக்கு விளங்காத ஒன்று இருக்கு .

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, arjun said:

அந்த வரிதான் அரசியல்

நான் பலரை அரசியல் தெரியாது என்று நக்கல் அடிப்பதற்கு இதுதான் காரணம் .

கறுப்பு வெள்ளை அல்ல அரசியல் இடையில் பலருக்கு விளங்காத ஒன்று இருக்கு .

ஒரு சிலர் இதனால் பயனடைபவர்களாக

அரசியல் செய்பவர்களாக இருக்கலாம்

ஆனால் என்னைப்பொறுத்தவரை

அவர்கள் தம் தேசம் சார்ந்து அதிக அக்கறை எடுப்பதாகவே பார்க்கின்றேன்

அது பிரான்சானாலும் சரி

சிறீலங்கா ஆனாலும் சரி...

ஒரு தீர்வு வரும் போது நிச்சயம் இவர்களது தேசம் சார்ந்த விருப்பங்கள் கணக்கில் எடுக்கப்படும்.

தீர்வு வரும்போது  குழப்ப முடியாது  அது அவர்களுக்கு நன்கு தெரியும் .

அவர்கள் தம் தேசம் சார்ந்து அதிக அக்கறை எடுப்பதாகவே பார்க்கின்றேன் ***

தேர்தலில்  வென்றிருந்தால்  குமாரும் சுரேசும் இப்போ செய்வதை கடைசிவரையும் செய்திருக்கமாட்டார்கள் .

தீர்வு என்னவென்று தெரிய முதலே அதுதான்  குழப்ப தொடங்குகின்றார்கள் .

Edited by இணையவன்

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, arjun said:

தீர்வு வரும்போது  குழப்ப முடியாது  அது அவர்களுக்கு நன்கு தெரியும் .

அவர்கள் தம் தேசம் சார்ந்து அதிக அக்கறை எடுப்பதாகவே பார்க்கின்றேன்  ***

தேர்தலில்  வென்றிருந்தால்  குமாரும் சுரேசும் இப்போ செய்வதை கடைசிவரையும் செய்திருக்கமாட்டார்கள் .

தீர்வு என்னவென்று தெரிய முதலே அதுதான்  குழப்ப தொடங்குகின்றார்கள் .

சிறீலங்காவின் வரலாற்றில் தீவிரகடும் போக்காளர்களே ஆதிக்கம் செலுத்துகிறார்கள்

இது வரலாறு

அவர்களைத்தாண்டி எதுவுமே வரமுடியவில்லை

வராது.

இனி எழுதினால் நிர்வாகத்துக்கு வேலையாகிவிடும்

எனது நேரமும்  மிச்சம்

இவர்கள் தங்களை கடும் தீவிரவாளர்களாக காட்டி கொள்பவர்களே ஒழிய இவர்கள் ஒதுக்கி வைப்பது ஒரு அலுவலே அல்ல .

இலங்கை இந்திய ஒப்பந்தபின் போது எத்தனையோ ஆட்டம் போட்டார்கள் பிக்குகள் ஒரு விமானம் வந்து சாப்பாடு போட அடங்ககிவிட்டார்கள் .

ஏன் யுத்த நாயகன் மகிந்தா கோஸ்டி ,பொதுபலசெனா எல்லாம் சர்வதேசத்தின் அரசு மாற்றத்தின் போது என்ன செய்தார்கள் .தங்களை தாண்டிய விடயம் அது என்று அவர்களுக்கு நன்கு தெரியும் .

எம்மவரில் பலர்  மக்களிடம் இருந்து  எதுவித அங்கீகாரமும் இல்லாமல் எதுவித செயற்பாடும்  இல்லாமல் போலி தேசியம் பேசுபவர்கள் போல் தான் இவர்களும் . 

நாட்டில் மக்களால் தெரிவு செய்யபட்டு சர்வதேசத்துடன் பேச்சுகளை நடத்தி யதார்த்தமாக ஒரு தீர்வை கொண்டுவர முயற்சிக்கும் நேரத்தில் அவர்களை விட தங்களுக்கு தேசம் சார்ந்து அக்கறை அதிகம் என்று ஒருவர் சொன்னால் அது வெறும் வார்த்தை ஜாலமும்  நடிப்பும் தான். 

கருத்தாளரை சீண்டாமல்

கருத்தாளர் யார் என்று பாராமல்

தனிப்பட கருத்தாளரை இழுக்காமல் எழுதப்பழகுங்கள்

உங்கள் கருத்தை நான் மதிக்கின்றேன்

அதையே உங்களிடமும்  எதிர்பார்க்கின்றேன்

கன்னத்தில் அறைந்துவிட்டு கருணையை எதிர்பாராதீர்கள்.

நன்றி வணக்கம்..

  • கருத்துக்கள உறவுகள்

அந்த நாளிலிருந்து இந்த கூட்டத்தினை உசுப்ப ஒரு அரசியல் வாதி பின்னால் இருப்பார்.

இந்த கூட்டத்துக்கு பின்னால் இருப்பவர்கள் மகிந்த சகோதரர்கள்.

தமக்கு வரக் கூடிய கைது பிரச்சனைகளை சமாளிக்க, கூட்டம் கூடுமா என்று ஆழம் அறிந்து பார்க்கும் முயற்சி.

இருப்பினும் இவர்கள் ஒவ்வொருவராக தனித்தனியான, சுய திட்டம் உண்டு. அதிக கூச்சல் போட்டால், பதிவி கிடைக்கும்.  மகிந்தவை விட்டு நகருவர்.  

எல்லாமே அரசியல் தான். இன்று நண்பன், நாளை எதிரி.

  • உவையல் இரண்டுபேரும் படுற பாடு சொல்லி வேலை இல்லை. (விசுகருக்கும், அர்ஜுனருக்கும், இனி யாழ் உறுப்பினர்கள் வெத்திலை, பாக்கு, பாக்குரல், பாக்குவெட்டி தான் அனுப்பி வைக்க வேண்டும்) :grin:

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ம்....சும்மா சொல்லக்கூடாது. பல பிரபல்யங்கள் கலந்து கொண்ட ஆர்ப்பாட்ட ஊர்வலம் மாதிரித்தான் தெரிகின்றது. மாற்றுக்கருத்து மாணிக்கங்கள் அங்கேயும் மிளிர்கின்றன.:cool:

  • கருத்துக்கள உறவுகள்

மைத்திரிக்கு எதிரா ஆர்ப்பாட்டமெண்டோண்ண அண்ணக்களிண்ட சந்தோசத்தைப் பாருங்கவன். எப்படி எண்டாலும் சந்தோசமா இருந்தாச் சரிதான்!tw_blush:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
23 minutes ago, வாலி said:

மைத்திரிக்கு எதிரா ஆர்ப்பாட்டமெண்டோண்ண அண்ணக்களிண்ட சந்தோசத்தைப் பாருங்கவன். எப்படி எண்டாலும் சந்தோசமா இருந்தாச் சரிதான்!tw_blush:

தமிழன் ஒருத்தனும் மைத்திரிக்கு எதிராய் ஆர்ப்பாட்டமே செய்யல... மூச்......:cool:

ஆனால் சிங்களவன் விடுறான் இல்லையே!!!!!   ஏன் அத்தான் tw_smiley:

hqdefault.jpg

31 minutes ago, குமாரசாமி said:

தமிழன் ஒருத்தனும் மைத்திரிக்கு எதிராய் ஆர்ப்பாட்டமே செய்யல... மூச்......:cool:

ஆனால் சிங்களவன் விடுறான் இல்லையே!!!!!   ஏன் அத்தான் tw_smiley:

hqdefault.jpg

வடிவா பாருங்கோ அண்ணை..மகிந்த திரும்ப வரவேணும் என்று குரல் குடுத்த புலம்பெயர் தூண்கள் சிலபேர் நிற்க கூடும். 

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, arjun said:

அந்த வரிதான் அரசியல்

நான் பலரை அரசியல் தெரியாது என்று நக்கல் அடிப்பதற்கு இதுதான் காரணம் .

கறுப்பு வெள்ளை அல்ல அரசியல் இடையில் பலருக்கு விளங்காத ஒன்று இருக்கு .

அது உங்களுக்கு மாத்திரம்தான் விளங்குமாக்கும்..

நெடுக கறுப்பு வெள்ளை காலத்திலேயே  இருக்காமல் கெதியா கலருக்கு மாறப்பாருங்கோ. அப்பத்தான் வெளியுலகம் புரியும்.

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, arjun said:

நாட்டில் மக்களால் தெரிவு செய்யபட்டு சர்வதேசத்துடன் பேச்சுகளை நடத்தி யதார்த்தமாக ஒரு தீர்வை கொண்டுவர முயற்சிக்கும் நேரத்தில் அவர்களை விட தங்களுக்கு தேசம் சார்ந்து அக்கறை அதிகம் என்று ஒருவர் சொன்னால் அது வெறும் வார்த்தை ஜாலமும்  நடிப்பும் தான். 

எதை யதார்த்தமான தீர்வு என்று நினைக்கிறீர்கள் . காணி, காவல்துறை அதிகாரம் இல்லாத ஒரு தீர்வு  வந்தாலென்ன, வராவிட்டாலென்ன. :unsure:

17 hours ago, விசுகு said:

கருத்தாளரை சீண்டாமல்

கருத்தாளர் யார் என்று பாராமல்

தனிப்பட கருத்தாளரை இழுக்காமல் எழுதப்பழகுங்கள்

உங்கள் கருத்தை நான் மதிக்கின்றேன்

அதையே உங்களிடமும்  எதிர்பார்க்கின்றேன்

கன்னத்தில் அறைந்துவிட்டு கருணையை எதிர்பாராதீர்கள்.

நன்றி வணக்கம்..

விசுகு ஒருமையில சீன்டினால்தானாம் பிழை. பொதுவாக சொல்லலாமாம். இன் நாங்களும் எழுதுவம் பொதுவா

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, Eppothum Thamizhan said:

எதை யதார்த்தமான தீர்வு என்று நினைக்கிறீர்கள் .

காணி, காவல்துறை அதிகாரம் இல்லாத ஒரு தீர்வு  வந்தாலென்ன, வராவிட்டாலென்ன. :unsure:

விசுகு ஒருமையில சீன்டினால் தானாம் பிழை. பொதுவாக சொல்லலாமாம். இன் நாங்களும் எழுதுவம் பொதுவா

அவரைப்பொறுத்தவரை

அங்குள்ளவர்கள்  பேசட்டும்

மக்களால் தெரிவு செய்யப்பட்டவர்கள் பேசட்டும் என்பது சம்பந்தரும் சுமேந்திரனும் பேசட்டும் என்பதாகும்..

எமக்கு அப்படியல்ல

மக்கள் மீது கரிசனை கொண்ட எவரும்

எங்கிருந்தாலும் பேசலாம்..

அவருடைய வரிகளின்படி பார்த்தாலும்

விக்கியரும் பேசலாம்

அனந்தியும் பேசலாம்

ஏன் அவருக்கு புலத்திலிருந்து இதை எழுத உரிமை இருக்கு என்றால்

எனக்கும் எனக்குப்படுவதை எழுது எந்த தடையும் இருக்கப்படாதே..

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, தெனாலி said:

வடிவா பாருங்கோ அண்ணை..மகிந்த திரும்ப வரவேணும் என்று குரல் குடுத்த புலம்பெயர் தூண்கள் சிலபேர் நிற்க கூடும். 

அண்ணை, மைத்திரியைவிட  சிங்களவர்களின் ஆதரவு  மகிந்தாவுக்குத்தான்   என்பது ஜனாதிபதி தேர்தல் முடிவுகளைப்பார்த்தாலே தெரியுமே.

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, Eppothum Thamizhan said:

அண்ணை, மைத்திரியைவிட  சிங்களவர்களின் ஆதரவு  மகிந்தாவுக்குத்தான்   என்பது ஜனாதிபதி தேர்தல் முடிவுகளைப்பார்த்தாலே தெரியுமே.

தமிழரின் வாக்குகள் தான் சிங்களத்தின் தலைமைகளை தீர்மானிக்கும் சக்தியாக உள்ளன என நான் எழுதியதற்கு

அறிவு ஆராய்ச்சி நடந்தது இங்கே..

இனி உங்களுக்கும் நடக்கும்.

கொஞ்சப்பேர் வைத்தியராகும் கனவு சிதைந்து திரிகிறார்கள் போலும்...

2 hours ago, Eppothum Thamizhan said:

அண்ணை, மைத்திரியைவிட  சிங்களவர்களின் ஆதரவு  மகிந்தாவுக்குத்தான்   என்பது ஜனாதிபதி தேர்தல் முடிவுகளைப்பார்த்தாலே தெரியுமே.

மகிந்தவுக்கு சிங்களன் ஆதரவு தெரிவிப்பது அதிசயம் இல்லை..ஆனால் மகிந்த இவ்வளவு கொடுமைகள் செய்த பின்னரும் மறுபடியும் அவன் வரட்டும்..இன்னும் கொஞ்சம் தாயக தமிழரை கொடுமைப்படுத்தினால் அதை வைச்சு நாங்கள் வெளிநாட்டில காரியம் சாதிக்கலாம் என்று கேவலமாக சிந்தித்த பு.பெ தேசிய தூண்களை என்னவென்று சொல்வது? 

அமைதி என்ற சொல்லே பலர் வயிற்றில் புளியை கரைக்குது .

  • கருத்துக்கள உறவுகள்

மைத்திரி தீர்வு தர நினைத்தாலும், மகிந்த போன்ற சிங்களக் கடும்போக்காளர்களை கட்டுப்படுத்த தமிழர்களுக்கு நியாயமான தீர்வை அவரால் தரமுடியாது. மகாவம்சக் காலத்தில் இருந்து ஊட்டி வளர்க்கப்பட்ட சிங்கள மேலாண்மைத்துவம் மேற்கு நாடுகளின் சொல் கேட்கும் மைத்திரியாலும் ரணிலாலும் மாற்ற முடியாததொன்று.

முதலில் தமிழர்களுக்கு குறைந்த பட்ச தீர்வாக என்ன கிடைக்கும் என்பதிலாவது தெளிவு வேண்டும். இது இப்போது இருக்கும் பிரிக்கப்பட்ட மாகாணசபைகளுக்கு மேலாக இருக்குமா?

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, arjun said:

அமைதி என்ற சொல்லே பலர் வயிற்றில் புளியை கரைக்குது .

அர்யுன் அவர்களே! உங்களை ஒரு நல்ல மனிதராக மதித்து உறவுகள் கருத்தெழுதி வருவதையும் யாழில் காணமுடிகிறது. அதனைத் தக்கவைத்துக்கொள்வது தங்களிடமே தங்கியுள்ளது.  

33 minutes ago, கிருபன் said:

மைத்திரி தீர்வு தர நினைத்தாலும், மகிந்த போன்ற சிங்களக் கடும்போக்காளர்களை கட்டுப்படுத்த தமிழர்களுக்கு நியாயமான தீர்வை அவரால் தரமுடியாது. மகாவம்சக் காலத்தில் இருந்து ஊட்டி வளர்க்கப்பட்ட சிங்கள மேலாண்மைத்துவம் மேற்கு நாடுகளின் சொல் கேட்கும் மைத்திரியாலும் ரணிலாலும் மாற்ற முடியாததொன்று.

முதலில் தமிழர்களுக்கு குறைந்த பட்ச தீர்வாக என்ன கிடைக்கும் என்பதிலாவது தெளிவு வேண்டும். இது இப்போது இருக்கும் பிரிக்கப்பட்ட மாகாணசபைகளுக்கு மேலாக இருக்குமா?

மினக்கெட்டு எழுதியதை காணவில்லை .

கிருபன் இப்பவும் பழைய அரசியல்வாதிகள் மாதிரி மகாவம்சம் கதையுடன் நிற்கிறார் .

இந்திய -இலங்கை ஒப்பந்தம் காலத்தில் உந்த கடும் போக்காளர்கள் ,பிக்குகள் ,மகாவம்சம் எல்லாம் எங்கே போனது .

உலகம் மாறிவிட்டது 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.