Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted

13879261_1856148524606055_37283148501143

  • Like 6
  • கருத்துக்கள உறவுகள்
Posted

 

 

சம்பளம் வாங்கியாச்சு.!!!!(SUNDAY SPECIAL )

13913764_700228556795038_392939243643660

  • Like 3
  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம்  வாத்தியார் ....!

மயங்கும் அந்தியில் விளக்கிடுவோம் ,உயர் மணவாளன் புகழ் விளக்கிடுவோம் 

காதல் வேளையில் கனியாவோம் ,  அதி  காலை எழுந்ததும் தாயாவோம் ....!

--- இல்லாள்---- 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

13895259_1038873879559963_33309596480991

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம்  வாத்தியார் ....!

நெஞ்சை  மறைத்தாலும் விழியோடு வருகின்றதே 

நெற்றி வியர்வை என் நிலை கூறி வழிகின்றதே 

கொஞ்சம் பதமாக நடந்தாலும் தெரிகின்றதே ....!

---பதட்டம்---

  • கருத்துக்கள உறவுகள்
Posted

13921148_1039811786132839_12836484573198

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் வாத்தியார்.....!

காரிருளில் அகல் விளக்கைத்  தூதுவிட்டு நின்றேன், காற்றினில் ஒளியிழந்து திரும்பிடக் கண்டேன்  

ஓருயிரை உனக்கெனவே வழியனுப்பி வைத்தேன். அது உன்னிடமே தங்கியதால் உயிரிழந்து நின்றேன்...!

---ஏமாந்த காதல்---

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மரணம் சம்பவிக்காத வாழ்வு கிடையாது 
வாழ்வை ஏற்பது போல் மரணத்தை ஏற்பது 
அத்துனைக்கு முடியாத காரியமானாலும் 
வாழ்வின் நியதியே அதுதான் 
தொடக்கம் ஒன்று இருந்தால் - முடிவு 
ஒன்று இருந்து தானே தீரும் 

அகஸ்தியன் 

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம்  வாத்தியார்....!

அனைத்து வளர்ப்பவளும் தாயல்லவோ,அணைப்பில் அடங்குவதும் அவளல்லவோ 

கவிஞர் பாடுவதும், கலைஞர் நாடுவதும்,இளைஞர் கூடுவதும் பெண்ணல்லவோ 

பெண் இயற்கையின் சீதனப் பரிசல்லவோ ....!

--- அத்தை பெற்ற ரத்தினம்---

  • கருத்துக்கள உறவுகள்
Posted

டாப்பு வருகைப் பதிவேட்டில், உள்ளேன் ஐயா...! என்று பதியுங்கள் என்றவாறுதான் நிழலி அவர்களின் வேண்டுகோள் இருந்தது. ஆனால் வருகை தருபவர்களோ! உள்ளத்தையே அள்ளும் கருத்துக்களையும் வண்ணப் படங்களுடன் பதிந்து அசத்துகிறார்களே!!   Bild in Originalgröße anzeigen

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 28/01/2016 at 1:44 AM, நிழலி said:

உள்ளேன் சார்..

 

 

 

ஒவ்வொருவரும் டாப்பு பதியும் போது, ஒரு விடுகதை அல்லது இன்று ஒரு தகவல், அல்லது ஒரு புதினம்..அப்படி ஒன்றும் இல்லாவிடின் ஒரு பாட்டாவது போட்டு விட்டுப் போகலாமே

4 ம் பக்கத்தில் தலைவர்தான் இப்படி ஒரு குண்டைத் தூக்கிப் போட்டார் ...., அதிலிருந்து இப்படியே  போய்க்கொண்டிருக்கு.... நன்பரே ...!!  tw_blush:

Posted

ஒரு சர்கஸ் குழுவிடம் சிக்கி கூண்டில் அடைபட்டுக் கிடந்த அந்த சிங்கத்துக்கு தினமும் சாப்பிட ஒரு கிலோ கரி மட்டுமே கொடுத்தார்கள். கட்டில் சுதந்திரமாக சுற்றி திரிந்து மான்களை கணக்கில்லாமல் வேட்டையாடித்திரிந்த நாட்கள் அதன் நினைவுகளில் வந்து ஏக்கத்தைக் கூட்டியது. அந்த நாட்கள் திரும்பவும் வராதா என்று இறைவனை அது வேண்டியது.

ஒரு நாள் அமெரிக்காவிலிருந்து வந்த மிருகைக்கட்சிசாலை உரிமையாளார் அதை விலைக்கு வாங்கினார். சிங்கம் கப்பலில் ஏற்றப்பட்டு அமரிக்காவுக்கு பயணமானது. தனது பிரார்த்தனைகள் பலித்து விட்டதாக சந்தோசப்பட்டது அது. தனக்கு ஏ.சி அறை கொடுத்து, தினமும் ஒன்றிரண்டு ஆடுகளையாவது சாப்பிட கொடுப்பார்கள் என்று நாக்கை சப்பு கொடிக்கொண்டது.

my_lion.jpg

அமெரிக்காவில் சென்று இறங்கிய முதல் நாள் காலையில் அதற்கு அழகாக பேக் செய்யப்பட்ட ஒரு பார்சலில் டிபன் கொடுத்தார்கள். ஆசையோடு அதை பிரித்த சிங்கம், உள்ளே வாழைப்பழங்கள் மட்டுமே இருபத்தை பார்த்து ஏமாந்து போனது. நாடு விட்டு நாடு மாறி வந்திருக்கும் நேரத்தில், கறி கொடுத்தால் வயிறு கெட்டுவிடும் என்ற கவலையில் தருகிறார்கள் என நினைத்தது அது.

ஆனால் அடுத்த நாளும் வாழைப்பழம்தான் கொடுத்தார்கள். மூன்றாவது நாள் பார்சல் கொண்டு வந்து கொடுத்தவனை கொஞ்சம் நிற்கச் சொல்லிவிட்டு பிரித்துப்பார்த்தது. அன்றும் அதே! பார்சல் கொடுத்த ஆசாமியை கோபத்தோடு ஓங்கி அறைந்துவிட்டு, நான் யார் தெரியுமா? காட்டுக்கே ராஜாவான சிங்கம், எத்தனை விலங்குகளை வேட்டையாடி சாப்பிடுவேன் தெரியுமா? கேவலம் எனக்கு வாழைப்பழம் தருகிறீர்கள். என்ன ஆச்சு உங்கள் நிர்வாகத்துக்கு! என்று சத்தம் போட்டது.

பார்சல் கொடுத்தவன் பணிவாக சொன்னான் ...ஐயா ! தாங்கள் சிங்கம் என்பது எனக்கு தெரியும் ஆனால் நீங்கள் இங்கு வந்திருப்பது குரங்கின் விசாவில் அதனால் குரங்குக்கான உணவைத்தான் உங்களுக்கு தரமுடியும்!.

கருத்து:- 

தெரியாத இடத்தில் டீம் மெம்பராக அவதிப்படுவதைவிட சொந்த மண்ணில் "பி.எம்"மாக இருப்பது நல்லது-ன்னு சொல்லுவேன்னு நினைக்க கூடாது. தெரியாத இடத்தில் குரங்கு மாதிரி அவதிப்படுவதைவிட, சொந்த மண்ணில் சிங்கமாக இருப்பது நல்லது. 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

13891896_10154037036138579_9916219331358

  • கருத்துக்கள உறவுகள்
Posted

எதிரியை எதிரே வை 
துரோகியை தூர வை 

உன்னை எதிர்க்க எவரும் இல்லை எனில் 
உன் பலம் உனக்கே தெரியாது 

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

13886311_677770092380116_775542339947201

  • Like 1



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Posts

    • லலித் அதுலத் முதலி முடுக்கிவிட்ட பாரிய கைதுகளும் சித்திரவதைகளும் 1985 ஆம் ஆண்டு ஜெயார் - லலித் கூட்டு தமிழர்கள் மீது மேற்கொண்டு வந்த வகைதொகையற்ற கைதுகள், சித்திரவதைகள், படுகொலைகள், தாயகத்திலிருந்து தமிழ்மக்களைப் பலவந்தமாக வெளியேற்றியமை போன்றவற்றினால் தமிழ் மக்கள் தாம் இவற்றிற்கெதிராகப் போராட வேண்டும் என்கிற உத்வேகத்தை ஏற்படுத்தியிருந்ததுடன் போராளி அமைப்புக்களுக்கான புதிய உறுப்பினர்களைத் தேடும் களத்தையும் விரிவுபடுத்தியிருந்தது.  சித்திரையில் இனப்பிரச்சினையின் இன்னொரு வடிவமான முஸ்லீம் தரப்பு ஏற்படுத்தப்பட்டதுடன் இனப்பிரச்சினையினை அது மேலும் சிக்கலாக்கியிருந்தது.  வடக்குக் கிழக்கில் வாழ்ந்த தமிழர்களின் அனைத்துக் குடும்பங்களிலும் அரசால் முடுக்கிவிடப்பட்ட கைது நடவடிக்கைகள் கடுமையான தாக்கத்தினை ஏற்படுத்தியிருந்தன. இளவயது ஆண்களைக் குடும்பங்களில் வைத்துப் பாதுகாப்பதென்பதே அவர்களுக்குப் பெரும் சுமையாகிப் போனது. கிராமம் கிராமமாகச் சுற்றிவளைப்புக்களை மேற்கொண்டுவந்த இராணுவம், ஒலிபெருக்கிகள் ஊடாக 18 முதல் 35 வயது வரையான இளைஞர்களை தாம் கட்டளையிடும் இடங்களுக்கு வந்து கூடுமாறு கூறியதுடன், அவர்களை கைதுசெய்து விசாரணைகளுக்கென்று இழுத்துச் செல்வதை வழமையாகக் கொண்டிருந்தது. இவ்வாறு கைதுசெய்யப்பட்டு விசாரிக்கப்பட்ட ஆண்களில் சிலர் கடுமையான சித்திரவதைகளுக்குப் பின்னர் விடுவிக்கப்பட இன்னும் பலர் காணமலாக்கப்பட்டிருந்தனர்.  திருகோணமலை மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய பகுதிகளுக்கு அக்காலப்பகுதியில் என்னால் செல்வதற்கான வாய்ப்புக் கிடைத்திருந்தது. என்னுடன் பேசிய பல தமிழப் பெற்றோர்கள் தமது ஆண் பிள்ளைகளை வீட்டில் வைத்திருப்பதைக் காட்டிலும் அவர்கள் புலிகள் இயக்கத்தில் இணைவதன் மூலமோ அல்லது வெளிநாடு செல்வதன் மூலமோ பாதுகாத்துக் கொள்ள முடியும் என்று கூறியிருந்தனர். ஜெயவர்த்தனவின் அரசு மீதும் அவரது இராணுவம் மீதும் கடுமையான வெறுப்பினைத் தமிழர்கள் கொண்டிருந்தனர்.  1985 ஆம் ஆண்டு தை மற்றும் மாசி மாதங்கள் கடுமையான சுற்றிவளைப்புக்களையும், பெருமளவிலான தமிழ் இளைஞர்கள் கைதுசெய்யப்படுவதையும் வழமையாகக் கொண்டிருந்தது. தை மாதம் 2 ஆம் திகதி வடமராட்சியின் அல்வாய், திக்கம், நாவலடி, இறுப்பிட்டி ஆகிய பகுதிகளைச் சுற்றிவளைத்துக்கொண்ட இராணுவத்தினர் 18 முதல் 35 வயது வரையான ஆண்களை பொது இடமொன்றில் கூடுமாறு ஒலிபெருக்கியில் அறிவித்துவிட்டு அப்படிக் கூடியவர்களில் 200 பேரை தம்முடன் இழுத்துச் சென்றனர். மூன்று நாட்களுக்குப் பின்னர் தை 5 ஆம் திகதி யாழ்ப்பாணத்தின் கரையோரப் பகுதிகளைச் சுற்றிவளைத்துக்கொண்ட இராணுவத்தினர் மேலும் 500 இளைஞர்களை கைதுசெய்து விசாரணைகளுக்கென்று அழைத்துச் சென்றனர். மட்டக்களப்பில் 1000 இளைஞர்களும், திருகோணமலையில் 2000 இளைஞர்களும், அக்கரைப்பற்றில் 400 இளைஞர்களும் இதே காலப்பகுதியில் இராணுவத்தால் கைதுசெய்யப்பட்டிருந்தனர். 1985 ஆம் ஆண்டின் முதற்காற்ப்பகுதியில் மட்டும் 52 சுற்றிவளைப்புக்களை மேற்கொண்டிருந்த இராணுவத்தினர் குறைந்தது 10,000 தமிழ் இளைஞர்களைக் கைதுசெய்து தம்முடன் இழுத்துச் சென்றிருந்தனர்.  லலித் பாராளுமன்றத்தில் இக்கைதுகள் குறித்துப் பேசும்போது, "அவர்களைச் சந்தேகத்தின்பேரிலேயே கைதுசெய்கிறோம், ஆனால் விசாரணைகளின் பின்னர் அவர்களை விடுவித்துவிடுவோம்" என்று மிகச் சாதாரணமாகக் கூறினார்.  ஆனால் எதற்காக இவ்வாறான பாரிய எண்ணிக்கையில் தமிழ் இளைஞர்களைக் கைதுசெய்துவருகிறீர்கள் என்று கேட்கப்பட்ட போது "எமது பிரச்சினை என்னவென்றால் பயங்கரவாதிகளை அழிப்பதுதான். ஆனால் அவர்களைக் கண்டுபிடிப்பது எங்கணம்? நாட்டினை நேசிக்கும் பிரஜைகளிடமிருந்து பயங்கரவாதிகளைப் பிரித்தறிவது எங்கணம்? மொத்தத் தமிழர்களை கைதுசெய்து விசாரித்தால் ஒழிய பயங்கரவாதிகளை எம்மால் அடையாளம் கண்டுகொள்வது சாத்தியமில்லை" என்று அவர் கூறினார்.  பாரிய கைதுகளின் சூத்திரதாரியாகவிருந்த லலித் அதுலத் முதலி ஒவ்வொரு தமிழனையும் தான் சந்தேகிக்கப்படும் பயங்கரவாதி என்று எண்ணும் நிலையினை ஏற்படுத்தியிருந்தார். அதுமட்டுமல்லாமல் இவ்வாறு கைதுசெய்யப்படும் ஒவ்வொரு தமிழருக்கும் கைதுசெய்யப்பட்ட நாளிலிருந்து விடுவிக்கப்படும் நாள்வரைக்கும் விசாரணை என்கிற‌ பெயரில் நடத்தப்படவிருக்கும் கடுமையான சித்திரவதைகளும் கடுமையான அச்சத்தினை ஏற்படுத்திவந்தது. லலித் அதுலத் முதலியைப் பொறுத்தவரை கைதுசெய்து விசாரிப்பதென்பது மிகச் சாதாரணமான விடயமாகத் தெரிந்தது. "அவர்களை கைதுசெய்து கொண்டுவருகிறோம், விசாரணைகளின் பின்னர் விடுவித்து விடுவோம், அவ்வளவுதான்" என்று அவர் மிகச்சாதாரணமாக இந்த நடவடிக்கைகளை நியாயப்படுத்தி வந்தார். தமிழ் இளைஞர்கள் கைதுசெய்யப்படும் விதம், அவர்கள் மீது விசாரணை என்கிற பெயரில் கட்டவிழ்த்து விடப்பட்ட சித்திரவதைகள், அவர்கள் விடுவிக்கப்பட்ட போது அவர்கள் அனுபவித்த‌  இருந்த உடல், உளரீதியான பாதிப்புக்கள் என்பன தமிழர்களைப் பொறுத்தவரையில் மிகவும் கொடூரமானவையாகக் காணப்பட்டதுடன் அவர்களைப் பெரிதும் அச்சத்திலும் ஆழ்த்தியிருந்தன. மகேந்திரா கேசிவப்பிள்ளை எனும் 23 வயது இளைஞன் யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தின் விஞ்ஞான பிரிவில் கல்விபயின்று வந்தவர். தை மாதம் 14 ஆம் திகதி தனது பெற்றோருடன் தைப்பொங்கலைக் கொண்டாடுவதற்காக அவர் கிழக்கிற்கு வந்திருந்தார். பொங்கல் முடிவடைந்து மீளவும் யாழ்ப்பாணப் பக்கலைக் கழகத்திற்குத் திரும்புவதற்காக அனுமதிப் பத்திரம் ஒன்றினைப் பெற்றுக்கொள்ளும் நோக்கில் மட்டக்களப்புப் பொலீஸ் நிலையத்திற்கு அவர் சென்றார். பொலீஸ் நிலையத்தில் அவரை விசாரணைக்கென்று அழைத்துச் சென்ற விசேட அதிரடிப்படையினர் அவரை காலில் சுட்டுக் காயப்படுத்தியதுடன் களுவாஞ்சிக்குடி விசேட அதிரடிப்படை முகாமிற்கு இழுத்துச் சென்று கடுமையாகத் தாக்கிச் சித்திரவதை செய்தனர். பின்னர் அங்கிருந்து அவரை மட்டக்களப்பு விசேட அதிரடிப்படை முகாமிற்கு  இழுத்துச் சென்றனர். "என்னை அவர்கள் ஒரு பயங்கரவாதி என்றே அழைத்தனர். நான் என்னைப் பயங்கரவாதி என்று ஏற்றுக்கொண்டு இராணுவப் பயிற்சிக்காகவே யாழ்ப்பாணம் செல்வதாக ஒத்துக்கொள்ளுமிடத்து விடுதலை செய்வதாக அவர்கள் கூறினர். ஆனால் நான் பிடிவாதமாக நான் ஒரு பல்கலைக்கழக மாணவன் என்றும், பயங்கரவாதி அல்ல என்றும் கூறினேன்" என்று சர்வதேச மன்னிப்புச்சபைக்கு வழங்கிய தனது வாக்குமூலத்தில் கேசிவப்பிள்ளை கூறியிருந்தார்.
    • இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் நிழலி.
    • வரவேற்கத் தக்க கருத்து...  இலங்கையில் வேலை வாய்ப்புப் பெற இம்மொழி கற்கை அவசியம்.  
    • சத்தியமூர்த்தி ஐயா மேலுள்ள முறைப்பாடுகளையும் விரைவாகப் பொலிசில் வழக்கு பதிந்து நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்த வேண்டும். 
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.