Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார் .......!

தமிழ்

பாடகர்கள் : தேவி ஸ்ரீ பிரசாத், எம்.எல்.ஆர். கார்த்திகேயன்

இசையமைப்பாளர் : தேவி ஸ்ரீ பிரசாத்

ஆண் : உன்ன மட்டும்
நெஞ்சுக்குள்ள வச்சிருக்கான்
இந்தப் புள்ள வீணாக இவன்
மனச கிள்ளாத மூணு மாசம்
ஆறு மாசம் காத்திருக்கும்
பயபுள்ள நீயாக இவன் மனச
கொல்லாத நீ கொல்லாத ஓ
ஓ ஹோ ஓ கொல்லாத

ஆண் : என்ன சொல்ல
போற நீ என்ன சொல்ல
போற எப்ப சொல்ல
போற நீ எப்ப சொல்ல
போற

ஆண் : காத்திருப்பேன்
காத்திருப்பேன் ஆறு மாசம்
தான் கண்முழிச்சு படுத்திருந்தேன்
மூணு மாசம் தான் என்னமோ
நடக்குது இதயம் வலிக்குது
மனசு தவிக்குது உன்னோடைய
வார்த்தைக்காக

ஆண் : ஹ்ம்ம் சின்னபுள்ள
நேசம் இது பச்சபுள்ள பாசம்
இது என் மனசு தாக்கியது
உன்னால உன்னால

ஆண் : ஹ்ம்ம் ஜாதி மதம்
பாா்க்கலையே சம்மதத்த
கேட்கலையே காதலுன்னு
ஆயிருச்சு தன்னால தன்னால

ஆண் : நெசமா நெசமா
நெஞ்சுக்குள்ள நான்
அழுதேன் உன்னுடைய
வார்த்தைக்காக

ஆண் : ஹோ வெட்டருவா
தூக்கிகிட்டு வெட்டிப்பய
போலிருந்தேன் வெட்கப்பட்டு
நான் நடந்தேன் உன்னால
உன்னால கட்டகம்பி தூக்கிகிட்டு
கண்ட படி நான் திரிஞ்சேன் கட்டுப்பட்டு
நான் நடந்தேன் பின்னால உன் பின்னால
புதுசா புதுசா மாறிருக்கேன் தேறிருக்கேன்
உன்னோடைய பார்வையால ......!

--- உன்ன மட்டும் நெஞ்சுக்குள்ள ---

  • Replies 5.9k
  • Views 327k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • வல்வை சகாறா
    வல்வை சகாறா

  • Ahasthiyan
    Ahasthiyan

    35 வருடங்களுக்கு முன்…* 1. செருப்பு பிய்ந்தால் தைத்து போட்டு க்கொண்டோம்.. 2. காதலித்து திருமணம் செய்தாலும் கணவனை , "என்னப்பா, மெய்யே" என மனைவி அழைப்பாள். 3. ஆணியில் மாட்டி கிழிந்த துணியை தைத்து

  • இணையவன்
    இணையவன்

    எல்லோருக்கும் வணக்கம். சில காலமாகத் தனிப்பட்ட பிரச்சனைகளால் யாழில் முழுமையாக இணைந்திருக்க முடியவில்லை. இன்றுமுதல் வழமைபோல் () வருகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

hhh.jpg

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார் . ............!

தமிழ்

பாடகா் : உன்னிகிருஷ்ணன்

இசையமைப்பாளா் : எஸ்.எ. ராஜ்குமாா்

ஆண் : { ஆனந்தம் ஆனந்தம்
பாடும் மனம் ஆசையில்
ஊஞ்சலில் ஆடும் } (2)
ஆயிரம் ஆயிரம் காலம்
இந்த ஞாபகம் பூமழை தூவும்

ஆண் : காற்றினில் சாரல்
போல பாடுவேன் காதலைப்
பாடிப் பாடி வாழ்த்துவேன்
நீ வரும் பாதையில்
பூக்களாய்ப் பூத்திருப்பேன்

ஆண் : மனதில் நின்ற
காதலியே மனைவியாக
வரும்போது சோகம் கூட
சுகமாகும் வாழ்க்கை இன்ப
வரமாகும்

ஆண் : உன் வாழ்வில்
செல்வங்கள் எல்லாம்
ஒன்றாகச் சோ்ந்திட
வேண்டும் பூவே உன்
புன்னகை என்றும்
சந்தோஷம் தந்திட
வேண்டும்

ஆண் : { ஆசைக் காதல்
கைகளில் சோ்ந்தால்
வாழ்வே சொா்க்கம் ஆகுமே } (2)

ஆண் : இன்னும் நூறு ஜென்மங்கள்
சேர வேண்டும் சொந்தங்கள்
காதலோடு வேதங்கள்
ஐந்து என்று சொல்லுங்கள்

ஆண் : தென் பொதிகை சந்தனக்
காற்று உன் வாசல் வந்திட
வேண்டும் ஆகாய கங்கைகள்
வந்து உன் நெஞ்சில் பொங்கிட
வேண்டும்

ஆண் : { கண்கள் கண்ட
கனவுகள் எல்லாம்
நிஜமாய் இன்று ஆனதே } (2)

ஆண் : காற்றினில் சாரல்
போல பாடுவேன் காதலைப்
பாடிப் பாடி வாழ்த்துவேன்
நீ வரும் பாதையில்
பூக்களாய்ப் பூத்திருப்பேன் .......!

--- ஆனந்தம் ஆனந்தம் ---

  • கருத்துக்கள உறவுகள்

common-sense.jpg

  • கருத்துக்கள உறவுகள்

அது சரி, வாத்தியார் என்று வாய்க்கு வாய் விளித்து எழுதுகிறீர்கள், யார் அவர்? அவர் ஏன் ஏதும் பேசாமல் இருக்கிறார்? அவர் இதை பார்ப்பதில்லையா, அல்லது பார்த்துவிட்டு கடந்து போகிறாரா??

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, satan said:

அது சரி, வாத்தியார் என்று வாய்க்கு வாய் விளித்து எழுதுகிறீர்கள், யார் அவர்? அவர் ஏன் ஏதும் பேசாமல் இருக்கிறார்? அவர் இதை பார்ப்பதில்லையா, அல்லது பார்த்துவிட்டு கடந்து போகிறாரா??

கடவுளே சனீஸ்வரா நீங்கள் இடையில நிண்டு பார்க்கிறீங்கள் ........ முதல் பக்கத்தில் சென்று பார்த்தால் உங்கள் கேள்விக்குப் பதில் நிழல் ஆகத் தெரியும் . ...... முன்பு பல கிரகங்கள் சுற்றிக்கொண்டு இருந்தன, இப்ப இராகுதான் தனி ஆவர்த்தனம் . ....... இடைக்கிடை உங்களையும் காண்பது மகிழ்ச்சி . ......! 😂

வணக்கம் வாத்தியார் . ...........!

தமிழ்

பாடகர் : டி. சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன்

ஆண் : உள்ளதை சொல்வேன்
சொன்னதை செய்வேன்
வேறொன்றும் தெரியாது
ஆண் : உள்ளத்தில் இருப்பதை
வார்த்தையில் மறைக்கும்
கபடம் தெரியாது

ஆண் : பள்ளிக்கு சென்று படித்ததில்லை
ஒரு எழுத்தும் தெரியாது
பள்ளிக்கு சென்று படித்ததில்லை
ஒரு எழுத்தும் தெரியாது
நான் பார்த்த உலகத்தில் பாசத்தை தவிர
எதுவும் கிடையாது எதுவும் கிடையாது

ஆண் : அடிப்பது போலே கோபம் வரும்
அதில் ஆபத்து இருக்காது
நீ அழுதால் நானும் அழுவேன்
அதற்கு காரணம் புரியாது காரணம் புரியாது

ஆண் : நன்றியய் மறந்தால் மன்னிக்க மாட்டேன்
பார்வையில் நெருப்பாவேன்
நல்லவர் வீட்டில் நாய்போல் உழைப்பேன்
காலுக்கு செருப்பாவேன்

ஆண் : பிறந்தேன் பிறந்தது தெரியும்
ஆனால் அன்னையைக் கண்டதில்லை
பிறந்தேன் பிறந்தது தெரியும்
ஆனால் அன்னையைக் கண்டதில்லை
பெரியவர் அத்தை இருவரைத் தவிர
தெய்வத்தைக் பார்த்ததில்லை
நான் தெய்வத்தைக் பார்த்ததில்லை

ஆண் : திருமணம் என்றார் நடக்கும் என்றேன்
திருமணம் என்றார் நடக்கும் என்றேன்
கொண்டு வந்தார் உன்னை
சிரிக்க வைப்பாயோ கலங்க வைப்பாயோ
கொடுத்து விட்டேன் என்னை .........!

--- உள்ளதை சொல்வேன் ---

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, satan said:

அது சரி, வாத்தியார் என்று வாய்க்கு வாய் விளித்து எழுதுகிறீர்கள், யார் அவர்? அவர் ஏன் ஏதும் பேசாமல் இருக்கிறார்? அவர் இதை பார்ப்பதில்லையா, அல்லது பார்த்துவிட்டு கடந்து போகிறாரா??

கடவுளே கடவுளே என்று உலகமே கதறுகிறதே

எப்பவாவது கடவுள் வந்து வாயை மூடப்பண்ணி இருக்கிறாரா?

  • கருத்துக்கள உறவுகள்
On 18/1/2016 at 03:15, நிழலி said:

தினம் தினம் யாழ் கள உறவுகள் பல நூறு வந்து  ஒரு பதிவு கூட போடாமல், சத்தமில்லாமல் யாழை வாசித்து விட்டுப் போகின்றார்கள்.

ஆகக் குறைந்தது, இந்த டாப்பிலாவது வந்து உங்கள் வருகையை தெரிவியுங்கள்.

உதாரணத்துக்கு

"நான் உள்ளேன் .. நிழலி"

இது கட்டாயம் அல்ல. ஆனால் யாழின் முன்னேற்றத்துக்கு உங்களால் செய்யக் கூடிய ஒரு பங்களிப்பில் இதுவும் ஒன்றாகும்.

நன்றி

உண்மையில் இதன் அர்த்தம் யாழில் உறுப்பினராக இணைந்து பதிவு எதனையும் இணைக்காமலும் சுய ஆக்கங்கங்கள் இடாதவர்கள் இத்திரியில் வந்து வருகையை பதிவு செய்யவேண்டும் என்பதா அண்ணை?!

டாப்பு கூப்பிடும்போது பிரசன்ஸ் சேர் என்பது போல இங்க யாரும் கூப்பிடாது விட்டாலும் நாமாக{பதிவு எதனையும் இணைக்காமலும் சுய ஆக்கங்கங்கள் இடாதவர்கள்} வந்து வருகையை அறிவிக்கவேண்டும் அப்படியா?!.

8 hours ago, satan said:

அது சரி, வாத்தியார் என்று வாய்க்கு வாய் விளித்து எழுதுகிறீர்கள், யார் அவர்? அவர் ஏன் ஏதும் பேசாமல் இருக்கிறார்? அவர் இதை பார்ப்பதில்லையா, அல்லது பார்த்துவிட்டு கடந்து போகிறாரா??

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ஈழப்பிரியன் said:

கடவுளே கடவுளே என்று உலகமே கதறுகிறதே

அட, அவரையா வாத்தியார் என குறிப்பிடுகிறார் சுவியர்? இது தெரியாமல் நான் வேறு யாரையோ தேடுகிறேன். சும்மா பகிடிக்கு சுவியர். இவ்வளவு எழுதுகிறீர்கள், இடையில் வந்து, மரியாதைக்காகவாவது ஏதாவது கருத்து சொன்னால் குறைந்தா போவார் அந்த வாத்தியார்?

4 hours ago, ஏராளன் said:

தினம் தினம் யாழ் கள உறவுகள் பல நூறு வந்து  ஒரு பதிவு கூட போடாமல், சத்தமில்லாமல் யாழை வாசித்து விட்டுப் போகின்றார்கள்.

ஆகக் குறைந்தது, இந்த டாப்பிலாவது வந்து உங்கள் வருகையை தெரிவியுங்கள்.

இவருந்தான் தேடுகிறார்.

  • கருத்துக்கள உறவுகள்

இருக்கின்றேன் ..அய்யா

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, satan said:

அட, அவரையா வாத்தியார் என குறிப்பிடுகிறார் சுவியர்? இது தெரியாமல் நான் வேறு யாரையோ தேடுகிறேன். சும்மா பகிடிக்கு சுவியர். இவ்வளவு எழுதுகிறீர்கள், இடையில் வந்து, மரியாதைக்காகவாவது ஏதாவது கருத்து சொன்னால் குறைந்தா போவார் அந்த வாத்தியார்?

இவருந்தான் தேடுகிறார்.

இதென்ன நீங்கள் அவரின் நேரஅட்டவனை தெரியாமல் சொல்கிறீர்கள் என்று நினைக்கிறேன் . ........!

__ காலையில் இருந்து கந்தோர் வேலை ( பெரும்பாலும் work from home தான்).......!

___ மதியம் மீன் செதில்கள் சேகரித்து சுத்தம் செய்து அருமையான வறை செய்து வைப்பார் .......!

2af7cbf72f5c0c79fff3b2f57abed7c3.gif

___ மாலையில் கார் எடுத்துக் கொண்டு கழுவப்போய் விடுவார் . ......(அவரது கார் சுத்தமாய் இருந்தால், நண்பர்களின் காரை கழுவித்தாரன் என்று சொல்லி எடுத்துக் கொண்டு அந்த car washing center க்குப் போய் விடுவார்) . .......!

__Gq4P.gif

இப்போது சொல்லுங்கள் அவருக்கு எங்கே நேரம் இருக்கு .......! 😂

தகவல்கள் யாவும் அவரது டைரியில் இருந்து கசிந்தவை . ......!

இன்று நான் எஸ்கேப் ........!

  • கருத்துக்கள உறவுகள்

இன்னமும் சளைக்காமல், திரியை தொடர்வதற்கு அசாத்திய பொறுமை வேண்டும்..

சுவியின் பொறுமை கண்டு வியக்கேன்..

வாழ்த்துகள்..!

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, ராசவன்னியன் said:

இன்னமும் சளைக்காமல், திரியை தொடர்வதற்கு அசாத்திய பொறுமை வேண்டும்..

சுவியின் பொறுமை கண்டு வியக்கேன்..

வாழ்த்துகள்..!

வணக்கம் வன்னியரே. எப்படி இருக்கிறீர்கள்?

கட்சி மாறியதுடன் ஆளையே காண முடியவில்லையே?

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, suvy said:

இதென்ன நீங்கள் அவரின் நேரஅட்டவனை தெரியாமல் சொல்கிறீர்கள் என்று நினைக்கிறேன் . ........!

__ காலையில் இருந்து கந்தோர் வேலை ( பெரும்பாலும் work from home தான்).......!

___ மதியம் மீன் செதில்கள் சேகரித்து சுத்தம் செய்து அருமையான வறை செய்து வைப்பார் .......!

2af7cbf72f5c0c79fff3b2f57abed7c3.gif

___ மாலையில் கார் எடுத்துக் கொண்டு கழுவப்போய் விடுவார் . ......(அவரது கார் சுத்தமாய் இருந்தால், நண்பர்களின் காரை கழுவித்தாரன் என்று சொல்லி எடுத்துக் கொண்டு அந்த car washing center க்குப் போய் விடுவார்) . .......!

__Gq4P.gif

இப்போது சொல்லுங்கள் அவருக்கு எங்கே நேரம் இருக்கு .......! 😂

தகவல்கள் யாவும் அவரது டைரியில் இருந்து கசிந்தவை . ......!

இன்று நான் எஸ்கேப் ........!

அண்ணை, நீங்கள் @நிழலி அண்ணையைச் சொல்லேல தானே?!

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, suvy said:

தகவல்கள் யாவும் அவரது டைரியில் இருந்து கசிந்தவை . .....

ஏன் சுவி அவரது டைரியில் கிசுகிசு செய்திகள் எதுவும் இல்லையோ?

  • கருத்துக்கள உறவுகள்

thatuvam2.jpg

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, ராசவன்னியன் said:

இன்னமும் சளைக்காமல், திரியை தொடர்வதற்கு அசாத்திய பொறுமை வேண்டும்..

பொறுமையின் சிகரமே சுவியர்தானே!

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, ராசவன்னியன் said:

இன்னமும் சளைக்காமல், திரியை தொடர்வதற்கு அசாத்திய பொறுமை வேண்டும்..

சுவியின் பொறுமை கண்டு வியக்கேன்..

வாழ்த்துகள்..!

வணக்கம் வன்னியர் .....உங்களைக் கண்டது சந்தோசம் ........ சென்னை மேம்பாலம் எல்லாம் எந்த மட்டில் இருக்கின்றது ....... கொஞ்சம் தகவல்களைப் போடுறது ..........! 🙂

16 hours ago, ஏராளன் said:

அண்ணை, நீங்கள் @நிழலி அண்ணையைச் சொல்லேல தானே?!

16 hours ago, ஈழப்பிரியன் said:

ஏன் சுவி அவரது டைரியில் கிசுகிசு செய்திகள் எதுவும் இல்லையோ?

"அதிகமாய் குரைக்கிற நாயும் அதிகமாய் பேசுற வாயும் அடி வாங்காமல் போகாது (நான்தான் )" ....... நீங்கள் இருவரும் எனக்கு இருட்டடி வாங்கித் தராமல் ஓய மாட்டீங்கள் என்று நினைக்கிறேன் . ......... அதுவும் அவர் ஒரு மட்டு, குட்டு குட்டென்று குட்டப்போறார் ..........! 😂

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, suvy said:

வணக்கம் வன்னியர் .....உங்களைக் கண்டது சந்தோசம் ........ சென்னை மேம்பாலம் எல்லாம் எந்த மட்டில் இருக்கின்றது ....... கொஞ்சம் தகவல்களைப் போடுறது ..........! 🙂

"அதிகமாய் குரைக்கிற நாயும் அதிகமாய் பேசுற வாயும் அடி வாங்காமல் போகாது (நான்தான் )" ....... நீங்கள் இருவரும் எனக்கு இருட்டடி வாங்கித் தராமல் ஓய மாட்டீங்கள் என்று நினைக்கிறேன் . ......... அதுவும் அவர் ஒரு மட்டு, குட்டு குட்டென்று குட்டப்போறார் ..........! 😂

அவர் நல்லவர், வல்லவர், நாலுந்தெரிஞ்சவர், அப்பிடியெல்லாம் செய்யமாட்டார் அண்ணை.

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார் . .......!


Englishதமிழ்

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம்,

எஸ். ஜானகி மற்றும் பி. சுசீலா

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : நான் ஒரு பொன்னோவியம்
கண்டேன் எதிரே
பெண் குழு : இளமை……இளமை……இனிமை
இது புதுமை

ஆண் : நான் ஒரு பொன்னோவியம்
கண்டேன் எதிரே
போதை தரும் நாதஸ்வரம்…..
பாடிடும் செந்தேன் மழை உந்தன் மொழியோ…..
பார்வையில் ஆயிரம் கவிதைகள்
எழுதிடும் அபி நயம்….

ஆண் : பார்வை அழைப்பதும்
பாவை தவிப்பதும்
ஏனடி ஏனடி பைங்கிளியே…..

பெண் : மேகலை வாட்டியது
அதை மேனியில் காட்டியது

ஆண் : சிறு ஊடல் விளையாடல்
ஒரு கூடல் உறவாடல்
குறி போடல் சுவை தேடல் கவி பாடல்
புதுவித அனுபவமே

பெண் : அறிமுகம்…..அனுபவம்…..அது சுகம்
அழகன் மடியில் எனது உலகம்

பெண் : மாலை வரும் வரும்…….
மாலை தரும் தரும்…..
மாவிலை பின்னிய தோரணங்கள்……

ஆண் : மங்கல வாத்தியங்கள்
எங்கும் எங்களின் ராஜ்ஜியங்கள்….
பெண் : ஒரு வானம் கரு மேகம்…..
மழை போலும் மலர் தூவும்
மயில் ஆடும் குயில் கூவும்
இவை யாவும் திருமண எதிரொலிகள்…..

குழு : முதல் முதல் இரவென்ன வருவது
மகிழ மனது நெகிழ வருக

ஆண் : தந்தோம் தனம் தனம்…
தந்தோம் தனம் தனம்
என்றொரு மெல்லிசை கேட்பதென்ன….
தந்தோம் தனம் தனம்…
தந்தோம் தனம் தனம்
என்றொரு மெல்லிசை கேட்பதென்ன….

ஆண் : அது என்ன நூதனமோ……..
உங்கள் ஆசையின் சாதனமோ……
அது என்ன நூதனமோ……..
உங்கள் ஆசையின் சாதனமோ……

ஆண் : மனம் தந்தும் தனம் தந்தும்
இதழ் சிந்தும் ரசம் தந்தும்
தரும் இன்பம் பல தந்தும்
வரும் சொந்தம் இவள் சீதனமோ

பெண் : பலவித சுகங்களின் தரிசனம்
விழியும் மனமும் உருக வருக

ஆண் : போதை தரும் நாதஸ்வரம்…..
பாடிடும் செந்தேன் மழை உந்தன் மொழியோ…..
பெண் : பார்வையில் ஆயிரம் கவிதைகள்
எழுதிடும் அபி நயம்…......!

--- நான் ஒரு பொன்னோவியம் ---

  • கருத்துக்கள உறவுகள்

sattam.jpg

  • கருத்துக்கள உறவுகள்

586714633_4359131657640276_2482511421848

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார் . .........!


தமிழ்

பாடகர் : சீர்காழி கோவிந்தராஜன்

இசையமைப்பாளர் : எஸ். எம். சுப்பையா நாய்டு

ஆண் : அரியதாய் பெரியதாய்
வணக்கத்திற்குரியதாய்
எளியதாய் வலியதாய் என்றுமே இனியதாய்
மலர்ந்ததாய் கனிந்ததாய்
மனதிலே நிறைந்ததாய்
வளர்ந்ததாய் வாழ்வதாய் வந்த தாய்
எங்கள் தாய்……எங்கள் தாய்……

ஆண் : தொட்ட இடம் துலங்க வரும்
தாய்க்குலமே வருக
தொட்ட இடம் துலங்க வரும்
தாய்க்குலமே வருக

ஆண் : கண் பட்ட இடம் பூ மலரும்
பொன் மகளே வருக
பொன் மகளே வருக…..நீ வருக

ஆண் : கருணை என்ற தீபம்
இரு கண்களில் ஏந்திய தாயே
காலங்கள்தோறும் நெஞ்சில் வந்து
கோவில் கொண்ட நீயே

ஆண் : பூ முகத்தாமரை மேலே
அருள் பொழிகின்ற தெய்வத்தாயே
பூ முகத்தாமரை மேலே
அருள் பொழிகின்ற தெய்வத்தாயே
வானம் பார்த்த பூமிக்கெல்லாம்
மாரியென்பது நீயே
முத்து மாரியென்பது நீயே
முத்து மாரியென்பது நீயே….

ஆண் : தொட்ட இடம் துலங்க வரும்
தாய்க்குலமே வருக

ஆண் : இதயம் உன்னைப்பாடும்
நல்ல எண்ணங்கள் மாலைகள் போடும்
இன்னல் வந்த நேரம் உந்தன்
புன்னகை ஆறுதல் கூறும்

ஆண் : வாவென வேண்டிடும்போது
எதிர் வருகின்ற செல்வம் நீயே
நாலும் கொண்ட பெண்மைக்கெல்லாம்

தலைவியாகிய தாயே
ஒரு தலைவியாகிய தாயே……..

--- தொட்ட இடம் துலங்க வரும் ---


  • கருத்துக்கள உறவுகள்

lllds.jpg

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார் . .......!

Paranji Sankar ·

கவிஞர் கண்ணதாசன் நாத்தீகத்திலிருந்து மீண்டு, ஆன்மீகத்திற்கு மாறி, அர்த்தமுள்ள இந்துமதம் படைத்து பெறும் புகழ் பெற்றிருந்த நேரம். இதை பொறுக்க முடியாத சில நாத்தீக அன்பர்கள் ஒரு அதிகாலையில் கவிஞரை சந்தித்து "கடவுள் இருக்கிறானா? இருந்தால் எங்களுக்கு காட்டமுடியுமா?" என கிண்டலாக கேட்டனர். அதற்கு கவிஞரோ அடுத்த நொடியே எந்தக் குறிப்புமின்றி காட்டாற்று வெள்ளமென கரைபுரண்டோடிய கவிதை வடிவான பதிலடி கண்டு வந்தவர்கள் வாயடைத்து திரும்பினர். இறைவன் குறித்த கவிஞரின் அற்புதமான தத்துவம் இதோ....

பூஜ்ஜியத்துக்குள்ளே ஒரு ராஜ்ஜியத்தை ஆண்டு கொண்டு புரியாமலே இருப்பான் ஒருவன் - அவனைப் புரிந்து கொண்டால் அவன்தான் இறைவன்.

ஒன்பது ஓட்டைக்குள்ளே

ஒருதுளிக் காற்றை வைத்து சந்தையில் விற்று விட்டான் ஒருவன் -அவன் தடம் தெரிந்தால் அவன்தான் இறைவன்.

முற்றும் கசந்ததென்று

பற்றறுத்து வந்தவர்க்கு சுற்றமென நின்றிருப்பான் ஒருவன் - அவனைத் தொடர்ந்து சென்றால் அவன்தான் இறைவன்.

தென்னை இளநீருக்குள்ளே

தேங்கியுள்ள ஓட்டுக்குள்ளே

தேங்காயைப் போலிருப்பான் ஒருவன் - அவனைத் தெரிந்து கொண்டால் அவன்தான் இறைவன்.

வெள்ளருவிக் குள்ளிருந்து

மேலிருந்து கீழ்விழுந்து

உள்ளுயிரைச் சுத்தம் செய்வான் ஒருவன் - அவனை உணர்ந்து கொண்டால் அவன்தான் இறைவன்.

வானவெளிப் பட்டணத்தில்

வட்டமதிச் சக்கரத்தில் ஞானரதம் ஓட்டிவரும் ஒருவன் - அவனை நாடிவிட்டால் அவன்தான் இறைவன்.

அஞ்சுமலர்க் காட்டுக்குள்ளே

ஆசைமலர் பூத்திருந்தால் நெஞ்சமலர் நீக்கிவிடும் ஒருவன் - அவனை நினைத்துக் கொண்டால் அவன்தான் இறைவன்.

கற்றவர்க்குக் கண் கொடுப்பான்

அற்றவர்க்குக் கை கொடுப்பான்

பெற்றவரைப் பெற்றெடுத்த ஒருவன் - அவனை பின்தொடர்ந்தால் அவன்தான் இறைவன்.

பஞ்சுபடும் பாடுபடும்

நெஞ்சுபடும் பாடறிந்து

அஞ்சுதலைத் தீர்த்துவைப்பான் ஒருவன் - அவன்தான் ஆறுதலைத் தந்தருளும் இறைவன்.

கல்லிருக்கும் தேரைகண்டு

கருவிருக்கும் பிள்ளை கண்டு உள்ளிருந்து ஊட்டி வைப்பான் ஒருவன் - அதை உண்டுகளிப் போர்க்கவனே இறைவன்.

முதலினுக்கு மேலிருப்பான்

முடிவினுக்குக் கீழிருப்பான்

உதவிக்கு ஓடிவரும் ஒருவன் - அவனை உணர்ந்து கொண்டால் அவன்தான் இறைவன்.

நெருப்பினில் சூடு வைத்தான்

நீரினில் குளிர்ச்சி வைத்தான்

கறுப்பிலும் வெண்மை வைத்தான் ஒருவன் - உள்ளம் கனிந்து கண்டால் அவன்தான் இறைவன்.

உள்ளத்தின் உள் விளங்கி

உள்ளுக் குள்ளே அடங்கி

உண்டென்று காட்டிவிட்டான் ஒருவன் - ஓர் உருவமில்லா அவன்தான் இறைவன்.

கோழிக்குள் முட்டை வைத்து முட்டைக்குள் கோழி வைத்து

வாழைக்கும் கன்று வைத்தான் ஒருவன் - அந்த ஏழையின் பேர் உலகில் இறைவன்.

சின்னஞ்சிறு சக்கரத்தில்

ஜீவன்களைச் சுற்ற வைத்து தன்மை மறந்தே இருக்கும் ஒருவன் - அவனைத் தழுவிக் கொண்டால் அவன்தான் இறைவன்.

தான் பெரிய வீரனென்று

தலை நிமிர்ந்து வாழ்பவர்க்கும்

நாள் குறித்துக் கூட்டிச்செல்லும் ஒருவன் - அவன்தான் நாடகத்தை ஆடவைத்த இறைவன்.

Voir la traduction

582434490_122262021560037466_55065142712

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.