Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பலாலி விமானநிலையத்தை பூநகரி நோக்கி நகர்த்த முடியும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
பலாலி விமானநிலையத்தை பூநகரி நோக்கி நகர்த்த முடியும்
[ சனிக்கிழமை, 20 பெப்ரவரி 2016, 08:40.39 PM GMT ]
palale_plit01.jpg
மக்கள் சொந்த இடங்களில் மீளக்குடியேற வேண்டும். அவர்களின் தேவைகள் ஓரளவு நிறைவேற்றப்பட பின்னரே அபிவிருத்தி தொடர்பில் ஆராய வேண்டும்

இவ்வாறு கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் விமான நிலையத்தை வேறுபகுதிக்கு மாற்றி அப்பகுதியை அபிவிருத்தி செய்யமுடியும் எனத் தெரிவித்தார்.

வலி. வடக்கு மீள்குடியேற்றம் மற்றும் பலாலி விமான நிலையம், மயிலிட்டி துறைமுகம் அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல் அன்மையில் நடைபெற்ற போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அங்கு மேலும் தெரிவிக்கையில்,

பலாலி விமானநிலையம் தொடர்பில் கடந்த 15 வருடங்களுக்கு முன்பாகவே யாழ். பல்கலைக்கழக துணைவேந்தராக இருந்த பேராசிரியர் துரைராஜா அவர்களால் முன்மொழிவு செய்யப்பட்டது.
குறிப்பாக பலாலி விமானநிலையத்தை பூநகரியில் உள்ள கௌதாரிமுனை வினாசிஓடை, மண்ணித்தலை போன்ற பரந்த நிலப்பரப்பில் அமைக்கமுடியும்.

இத்தகைய இடங்களில் விமானநிலையம் அமைக்கும் போது வடக்கு கிழக்கிற்கான மத்திய நிலையமாகவும் யாழ்ப்பாணத்தில் இருந்து குருநாகலில் இருந்து மண்ணித்தலைக்கு 300 மீற்றர் வரை பாலம் அமைப்பதன் ஊடாகவும் ஏற்கனவே கேரதீவு சங்குப்பிட்டி பாதை இருக்கிறது.

இதன்மூலம் மன்னாரில் இருந்து வருபவர்களுக்கு மட்டக்களப்பு, திருகோணமலையில் இருந்து வருபவர்களுக்கு முல்லைதீவின் ஊடாக வருவதற்கு ஆரம்பத்தில் இருந்தே ஆய்வு செய்யப்பட்டது. குறிப்பாக முன்னாள் பேராசிரியர் துரைராஜா மண் தொடர்பான ஆய்வை மேற்கொண்டே இந்த ஆய்வை முன்வைத்தார்.

அந்த எண்ணக்கருவின் படி பலாலி விமானநிலைய பிரதேசம் செம்மண் பிரதேசமாகும். இது யாழ்ப்பாணத்தின் பொருளாதாரத்தினுடைய முக்கியமான முதுகெலும்பாகும்.

குறிப்பாக மரக்கறி செய்கை, முந்திரிகை, வெற்றிலை செய்கைகளுக்கு உகந்த இடம். இங்கு மண், நீர் வளமான பிரதேசமாகும். இத்தகைய பிரதேசத்தை விமானநிலைய விஸ்தரிப்பு எனக்கூறி அரசு சுவீகரிக்குமானால் யாழ். மாவட்டத்தின் பொருளாதாரத்தின் முதுகெலும்பு இல்லாமலே போய்விடும் சூழல் ஏற்படும்.

அதற்காகவே பூநகரி அடையாளம் காணப்பட்டது. இது கூட நெருக்கடி ஏற்படுமானால் ஊர்காவற்துறை பகுதியில் உள்ள சுருவில் பகுதி பரந்த பகுதியாகவும் தட்டையானதும் கல்பூமியாகவும் காணப்படுகிறது.

இந்த இடத்திலும் விமானநிலையத்தை அமைப்பது சாலப்பொருத்தமாகும் என்ற விடயமும் அன்று ஆராயப்பட்டது. அதந்கான காரணம் அராலித்துறை பாலம் அமைக்கும்போது 15 நிமிடத்திலும் செல்லமுடியும்.

அதேபோல் பண்ணைப்பாலத்திந்கும் செல்ல முடியும். அதேபோல் மண்டைதீவிற்கும் கௌதாரிமுனைக்கும் ஏற்படுத்தும் பாதைகூட மிக விரைவாக தீவுப்பகுதிக்கு செல்ல முடியும்.
இவ்வாறு ஊர்காவற்துறை சுருவில் பகுதியில் விமானநிலையம் அமையும் போது தீவகம் முழுமையாக அபிவிருத்தி அடையும். அங்கு மீள்குடியேற்றம், விவசாயம் அதிகரிக்கும்.
மண்டைதீவிலும் அமைக்கலாம். ஆனால் போதிய இடம் அங்கு இல்லை.

எனினும் பூநகரி, சுருவில் பகுதிகளில் விமானநிலையம் அமைப்பது காலத்தின் தேவையாக இருக்கும். நாம் எத்தகைய அபிவிருத்தி செய்தாலும் மக்கள் சொந்த இடங்களில் மீளக்குடியமர்த்தப்படவேண்டும் என்றார்.

http://www.tamilwin.com/show-RUmuyCRUSWfv4B.html

  • கருத்துக்கள உறவுகள்

என்ன சுருவிலில் விமானத்தளமா?அப்ப நான் வீட்டிற்கு நடந்தே போயிடலாம்!!!!

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களமும் இந்த உலக வல்லாதிக்க சக்திகளும் பொதுமக்களினதும் தமிழரதும் தேவைக்கான விமான  நிலையம் அமைப்பதாயின் அவர்களது கருத்துகளுக்குச் செவிசாய்ப்பர். இது தமது இராணுவ பொருண்மிய நலன்நோக்கிலான ஒரு ஆக்கிரமிப்புத் திட்டமாகவுள்ளதால் தமிழரது பொருண்மியவள இழப்பு  மீள்குடியேற்றம் மக்களின் வாழ்வாதார நலன் குறித்து அக்கறை கொள்ளும் அவசியம் அவர்களுக்கில்லை. அழுதும் பிள்ளை அவளே பெறவேண்டும் என்ற முதுமொழி இங்கும் பொருந்துகிறது. 

  • கருத்துக்கள உறவுகள்

அப்படி அரசு சிந்தித்து செயற்படுமாயின் சிங்கப்பூருக்கு முன்னல்லோ போய் நிற்கும். இப்படி கடனாக வாங்க வேண்டி வராது..

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, புலவர் said:

என்ன சுருவிலில் விமானத்தளமா?அப்ப நான் வீட்டிற்கு நடந்தே போயிடலாம்!!!!

நானும்,புளியங்கூடல் ..,சின்னமடு தாண்டி வயல்வெளிக்க இறங்கினா வீட்ட போயிடலாம்.ஆனா வீடு இல்ல அட அத்திவாரமே இல்ல

  • கருத்துக்கள உறவுகள்

புளியங்கூடல் சின்னமடு தாண்டினா  என்னுடைய ஊர்தானே (நாரந்தனை)வரும் நீங்களும் நானும் ஓரே ஊரா?

4 hours ago, நந்தன் said:

நானும்,புளியங்கூடல் ..,சின்னமடு தாண்டி வயல்வெளிக்க இறங்கினா வீட்ட போயிடலாம்.ஆனா வீடு இல்ல அட அத்திவாரமே இல்ல

புளியங்கூடல் சின்னமடு தாண்டினா  என்னுடைய ஊர்தானே (நாரந்தனை)வரும் நீங்களும் நானும் ஓரே ஊரா?

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, புலவர் said:

புளியங்கூடல் சின்னமடு தாண்டினா  என்னுடைய ஊர்தானே (நாரந்தனை)வரும் நீங்களும் நானும் ஓரே ஊரா?

புளியங்கூடல் சின்னமடு தாண்டினா  என்னுடைய ஊர்தானே (நாரந்தனை)வரும் நீங்களும் நானும் ஓரே ஊரா?

பக்கத்து ஊர் சரவணை

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, நந்தன் said:

பக்கத்து ஊர் சரவணை

சரி இப்போது சின்ன வயது ரகசியங்களை எல்லாம் (சரவணைபுளியங்கூடல் சின்னமடு) பகிர்ந்து கொள்ளுங்கள் நண்பர்களே...
கல்யாணி டீச்சர், O/L எடுத்துக் கொண்டு இருந்த நந்தினி, சைக்கில் கடை சின்ன ராசு, பரியார் வீட்டு மாமரம், கிரைண்டிங் மில் ஆனந்தன் ...  :)

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, Sasi_varnam said:

சரி இப்போது சின்ன வயது ரகசியங்களை எல்லாம் (சரவணைபுளியங்கூடல் சின்னமடு) பகிர்ந்து கொள்ளுங்கள் நண்பர்களே...
கல்யாணி டீச்சர், O/L எடுத்துக் கொண்டு இருந்த நந்தினி, சைக்கில் கடை சின்ன ராசு, பரியார் வீட்டு மாமரம், கிரைண்டிங் மில் ஆனந்தன் ...  :)

நானும் காரைநகரிலிருந்து ஊர்காவற்துறையூடாக நாரந்தனை, சரவனை எல்லாம் வாறனான். இதில்தான் சுவாரஸ்யம் நிறைய இருக்கு.

இப்ப அதிகமான விமானங்கள் எல்லாம் கடலில்தான் இறங்குகின்றன. விரும்பினால் அவை ஏழாற்றுப் பிரிவில் இறங்கட்டும். ஊர்மனைக்குள் சத்தமும் இருக்காது.நயினாதீவு, அனலைதீவு எல்லாம் பக்கம்...!

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியப் படைகள் யாழ் நகரை பிடிக்க நகர்ந்த போது காரைநகர் ஊடாக.. தீவகம் சென்று அடைக்கலம் தேடிய போது இந்த ஊர்களுக்கு எல்லாம் போக முடிந்தது. சுருவிலில் இருந்த ஒரேஒரு பேக்கரி தான் அன்று அத்தனை ஆயிரம் மக்களுக்கு சாப்பாடு.. பாண் போட்டது.  சிறிய வயதில் நடந்த நிகழ்வுகள் என்பதால் இப்போதும் பசுமையாக உள்ளன.

சுருவில் ஒரே மணல் நிறைந்த பகுதியாக இருந்தது. சுருவில் கடற்கரை சுற்றுலாவுக்கு சிறந்த இடம்.

இன்று தீவகம்... சுடுகாடாக்கப்பட்டு விட்டது என்று கேள்விப்பட்ட போது கவலையே எஞ்சியது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நவீன தொழில்நுட்பத்தை வைத்து குட்டிக்குட்டி நாடுகள் எல்லாம் பொதுமக்களுக்கு பங்கம் வரக்கூடாது என்று கடலில் விமானநிலையங்களை உருவாக்குகின்றன.

ஆனால் வல்லரசுகளின் கடைக்குட்டிக்கு...........தமிழர்களின் விவசாய பூமிகள்தான் தன் படைகளை இறக்க வசதியாய் இருக்கின்றதோ?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.