Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

திருமதி மங்கையற்கரசி அமிர்தலிங்கம் காலமானார்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கோஷான் நான் சொல்ல வந்ததை அப்படியே அச்சொட்டாக எழுதியிருக்கிறீர்கள். 

இவருக்கான எனது அனுதாபம் அரசியலுக்கு அப்பால் மனித நேயம் சார்ந்து விடுக்கப்படுவது. அவ்வளவுதான்.

1987 இல் இந்திய ஆக்கிரமிப்பு ராணுவத்துடனான புலிகளின் யுத்தத்தில் அமிர் நடந்துகொண்டவிதம் எனக்கு இன்னும் நினைவிலிருக்கிறது.

இனி எழுத வேண்டாம்............., இத்துடன் முடிக்கிறேன். 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மரணம் என்பது அனைத்து பாவங்களையும் கழுவிப் போகும் புனித நிலையல்ல ..

விரல் கீறிய ஆயிரமாயிரம் இளையோரின் குருதியால் வைத்த நெற்றிப் பொட்டு ..

கரை தெரியாது கரைந்து போன வரலாறு எம்முடையது ..

இவர் போன்றவர்கள் மீண்டும் எம்மிடையே பிறக்க வேண்டாம்..

இவர் போன்றவர்களுக்கு ஈழத் தமிழினம் தொடர்ந்தும் அஞ்சலி செலுத்தும் நிலை இனி வேண்டாம் எனவே ...

இறுதி அஞ்சலிகள் .

படித்ததில் பிடித்தது.

1 hour ago, குமாரசாமி said:

உது சாத்திரி எழுதியது.

அமிர் பற்றி இந்த திரியில் வேண்டாம் வேறு இடத்தில எழுதுகின்றேன் 

அமீர் என்ற ஒரு பாவி இல்லாதிருந்திருந்தால் இத்தனை இளம் வீரர்களை நாங்கள் இழந்திருக்க தேவை இல்லை ஈனமானவர்களை இங்கே பேச தேவை இல்லை ....அதுக்கு சில .....உள்ளார்கள் 

On 3/11/2016 at 10:12 AM, arjun said:

உது சாத்திரி எழுதியது.

அமிர் பற்றி இந்த திரியில் வேண்டாம் வேறு இடத்தில எழுதுகின்றேன் 

என்ன அமெரிக்காவை இவர் தான் கண்டு பிடித்தாரா 

1977 ஆம் ஆண்டு சிறுவயதில் தமிழரசுக் கட்சி தேர்தல் கூட்டங்களுக்குப் போனது  இப்பவும் ஞாபகமாய் இருக்கிறது.... திரு திருமதி அமிர்தலிங்கத்தின் உணர்ச்சி மிக்க பேச்சுக்கள்,.... இளைஞர்கள் கைகளில் பிளேட்டால் வெட்டி இரத்தத் திலகம் இட்டவை.... 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 11.3.2016 at 3:12 AM, arjun said:

உது சாத்திரி எழுதியது.

அமிர் பற்றி இந்த திரியில் வேண்டாம் வேறு இடத்தில எழுதுகின்றேன் 

அப்பாபிள்ளை அமிர்தலிங்கம் அவர்கள் இறக்கும் வரைக்கும் ஈழத்தமிழினத்திற்கு  உசுப்பேத்தியதை தவிர வேறு எதுவுமே செய்யவில்லை.

தமிழீழ தலைநகர் மாமன்னன் சம்பந்தன்! சொல்லி வேலையில்லை :cool:

சகோதர படுகொலை தொடக்கம் ராஜீவை கொலை செய்தது வரை அமிரும் மனைவியும் தான் காரணம் என்று சொல்லாத வரைக்கும் புண்ணியம் .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
6 minutes ago, arjun said:

சகோதர படுகொலை தொடக்கம் ராஜீவை கொலை செய்தது வரை அமிரும் மனைவியும் தான் காரணம் என்று சொல்லாத வரைக்கும் புண்ணியம் .

அவ்வளவிற்கு மண்டைகிறுக்கர்கள் இங்கும் எங்கும் இல்லை.:cool:

எல்லாம் அமீரால் தான் வந்தது என்று இன்றும் பலர் கொட்டி முழக்குகின்றார்கள் ,

நாங்கள் எல்லாம் அமிர் பேச்சு கேட்டா போராட போனோம் .

எதுக்கு எடுத்தாலும் அடுத்தவனை சாட்டுவதே பலருக்கு வேலையாய் போச்சு .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
37 minutes ago, arjun said:

எல்லாம் அமீரால் தான் வந்தது என்று இன்றும் பலர் கொட்டி முழக்குகின்றார்கள் ,

நாங்கள் எல்லாம் அமிர் பேச்சு கேட்டா போராட போனோம் .

எதுக்கு எடுத்தாலும் அடுத்தவனை சாட்டுவதே பலருக்கு வேலையாய் போச்சு .

ஓ.......அந்த நேரம் பின்னேரப்பாரிலை ஒரு தமிழ் ரேடியோ அலைவரிசையும் வேலை செய்தது....அதுவும் ஓடிப்போக காரணமாயிருந்திருக்கும். :cool:

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, arjun said:

எல்லாம் அமீரால் தான் வந்தது என்று இன்றும் பலர் கொட்டி முழக்குகின்றார்கள் ,

நாங்கள் எல்லாம் அமிர் பேச்சு கேட்டா போராட போனோம் .

எதுக்கு எடுத்தாலும் அடுத்தவனை சாட்டுவதே பலருக்கு வேலையாய் போச்சு .

உள்ளூரில் இதை வேறு செய்கிறார்களா ?
நம்பவே முடியவில்லை !

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, arjun said:

எல்லாம் அமீரால் தான் வந்தது என்று இன்றும் பலர் கொட்டி முழக்குகின்றார்கள் ,

நாங்கள் எல்லாம் அமிர் பேச்சு கேட்டா போராட போனோம் .

எதுக்கு எடுத்தாலும் அடுத்தவனை சாட்டுவதே பலருக்கு வேலையாய் போச்சு .

 குரு செய்தால் பாவமில்லை, சீடன் செய்தால் பாவம்.

  • கருத்துக்கள உறவுகள்

என்னதான் கொடூரர்களாக இருந்தாலும் இறந்தவர்களை இறைவனோடு இணைத்துவிடும் பண்பாட்டோடு வளர்ந்து வந்ததுதான் தமிழினம்.

இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்துவோம்! 

அதற்கு அப்பால் செல்லும் கருத்தாடல்களை வேறொரு திரி திறந்து மேற்கொள்ளலாமே!!  

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
13 hours ago, Paanch said:

என்னதான் கொடூரர்களாக இருந்தாலும் இறந்தவர்களை இறைவனோடு இணைத்துவிடும் பண்பாட்டோடு வளர்ந்து வந்ததுதான் தமிழினம்.

இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்துவோம்! 

அதற்கு அப்பால் செல்லும் கருத்தாடல்களை வேறொரு திரி திறந்து மேற்கொள்ளலாமே!!  

உண்மைதான் பாஞ்ச்!

உங்கள் கருத்தையே நானும் கடைப்பிடித்தவன். எந்த கொடுமையானவனும் இறந்தபின் கைகூப்பி வணக்கம் செலுத்துவதுதான் எம் இன பண்பாடு. ஏன் உலக பண்பாடும் அதுதான்.
ஆனால் இங்குள்ள சிலரின் நிஜத்திற்கு மாறுபட்ட கருத்து வேற்றுமைகள் இன்னும் எழுத வைக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
On 12/03/2016 at 3:07 PM, குமாரசாமி said:

ஓ.......அந்த நேரம் பின்னேரப்பாரிலை ஒரு தமிழ் ரேடியோ அலைவரிசையும் வேலை செய்தது....அதுவும் ஓடிப்போக காரணமாயிருந்திருக்கும். :cool:

you mean  voice of tamileelamtw_tounge_wink:

  • கருத்துக்கள உறவுகள்

மரண அறிவித்தலில் ஒரு அடைமொழி கூட இல்லை. இதுதான் யதார்த்தம் / உலகம். 

http://www.kallarai.com/ta/obituary-20160313212641.html

  • 4 weeks later...

மங்கை அக்கா மரணம்
என்னத்தைச் சொல்லி அஞ்சலி செலுத்துவது?

Balan tholar's photo.
Balan tholarLike Page

•மங்கை அக்கா மரணம்
என்னத்தைச் சொல்லி அஞ்சலி செலுத்துவது?

தரப்படுத்தலுக்கு எதிராக தமிழ் மாணவர்களை போராட தூண்டிவிட்டு தன் மகன் பகிரதனுக்கு இந்தியாவில் மருத்துவ கல்வி பெற்றுக் கொடுத்ததை சொல்லி அஞ்சலி செலுத்துவதா? அல்லது,

தமிழ் இளைஞர்களை உசுப்பேற்றி போராட வைத்தவிட்டு தன் மகன் காண்டீபனை பாதுகாப்பாக லண்டன் அனுப்பி வைத்ததைச் சொல்லி அஞ்சலி செலுத்துவதா? அல்லது,

தன் மகன் பகிரதன் தன் கல்வியை நிறுத்தாமலே மற்ற தமிழ் இளைஞர்களின் கல்வியைப் பாழாக்கி TENA என்ற இயக்கம் நடத்தியபோது அதற்கு ஆதரவாக மலேசியா சென்று பணம் சேகரித்ததைச் சொல்லி அஞ்சலி செலுத்துவதா? அல்லது,

சிங்களவனின் தோலை உரித்து செருப்பு தைக்க வேண்டும் என உணர்ச்சிப் பேச்சு பேசி இளைஞர்களை தூண்டிவிட்டதை சொல்லி அஞ்சலி செலுத்துவதா? அல்லது,

அகதிகளாக சென்ற தமிழ்மக்கள் முகாம்களில் வாடியபோது இவர் சென்னையில் விருந்தினர் மாளிகையில் ஏசி அறையில் வாழ்ந்ததைச் சொல்லி அஞ்சலி செலுத்துவதா? அல்லது

துரையப்பா, அருளம்பலம், தியாகராசா, கனகரத்தினம் ஆகியோரை துரோகி என்று முத்திரை குத்தி அவர்களை இளைஞர்கள் மூலம் சுட்டுக்கொல்லத் தூண்டியதை சொல்லி அஞ்சலி செலுத்துவதா? அல்லது,

இலங்கை ராணவம் தமிழ் மக்களை தாக்கிய போது அதனைக் கண்டித்து கவிதை பாடியவர் இந்திய ராணுவம் தாக்கியபோது கண்டிக்கவே மறுத்துவிட்டதைச் சொல்லி அஞ்சலி செலுத்துவதா? அல்லது,

தன் கையால் புட்டு வாங்கித் தின்ற பிரபாகரன் நன்றி மறந்து தன் கணவர் அமிர்தலிங்கத்தைச் சுட்டுக் கொன்றார் என்று லண்டனில் மேடையில் பேசியதை சொல்லி அஞ்சலி செலுத்துவதா? அல்லது,

தன் கணவரை தலையில் சுட்டுக் கொன்றவர் இறுதியில் தன் தலையில் வெடி வாங்கி செத்தார் என்று பிரபாகரன் மரணத்தை மேடையில் பகிரங்கமாக பேசினாரே அதைச் சொல்லி அஞ்சலி செலுத்துவதா? அல்லது,

முள்ளிவாய்க்காலில் பல்லாயிரம் தமிழ் மக்கள் கொல்லப்பட்ட நிலையில் அதுகறித்து கவலையின்றி தனது பிறந்தநாளை ஆடம்பரமாக கொண்டாடினாரே, அதைச் சொல்லி அஞ்சலி செலுத்துவதா? அல்லது,

பல வருடங்களுக்கு பின்னர் அவர் இலங்கை திரும்பிச் சென்ற போது முள்ளிவாய்க்கால் சென்று அஞ்சலி செலுத்தாமல் தனக்கு காவல் இருந்த சிங்கள பொலிஸ்காரர் வீடு சென்று பாராட்டினாரே, அதைச் சொல்லி அஞ்சலி செலுத்துவதா?

எனக்கு எதைச் சொல்லி அஞ்சலி செலுத்தவது என்று தெரியவில்லை.

அவருடைய இழப்பு தமிழ் மக்களுக்கு பேரிழப்பு என்பவர்கள் எந்த வித்தில் அது பேரிழப்பு என்பதை தயவு செய்து கொஞ்சம் கூறுங்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.