Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

லண்டனில் TCC இன் வன்முறையுடன் ஆரம்பமான முள்ளிவாய்க்கால் நிகழ்வு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

லண்டனில் TCC இன் வன்முறையுடன் ஆரம்பமான முள்ளிவாய்க்கால் நிகழ்வு

BTF இன் நிகழ்வு BTF இன் நிகழ்வு

லண்டனில் முள்ளிவாய்க்கால் நினைவுதினம் இரு வேறு போட்டி அமைப்புக்களால் ‘கொண்டாடப்பட்டது’. வழமையாக பீ.ரீ.எப்(BTF) முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தையும், ரீ.சீ.சீ (TCC) மாவீரர் தினத்தையும் நடத்துவதுண்டு, இந்த முறை முள்ளிவாய்க்கால் நினைவுதினத்தை பீ.ரீ.எப் இற்குப் போட்டியாக ரீ.சீ.சீ ஏற்பாடு செய்திருந்தது. அருகருகான இரு பகுதிகளில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த நிகழ்வுகள் ஆரம்பமாவதற்கு முன்பதாகவே பீ.ரீ.எப் இன் மேடை அமைந்திருந்த பகுதிக்குள் புகுந்த ரீ.சீ.சீ உறுப்பினர்கள் வன்முறையில் ஈடுபட ஆரம்பித்தனர். பீ.ரீ.எப் இன் மேடையை ரீ.சீ.சீ கலைக்க முற்பட்ட போது அங்கு குழுமியிருந்த மக்களின் தலையீட்டால் வன்முறை முடிவிற்கு வந்தது. இந்த நிகழ்வைத் தொடர்ந்து ரீ.சீ.சீ இன் ஊதுகுழல் ஊடங்கள் வழமை போல பொய்யான செய்திகளை வெளியிட ஆரம்பித்தன.

பீ.ரீ.எப் புலிக்கொடி ஏந்தி முள்ளிவாய்க்கால் நினைவுதினத்தை நடத்தவில்லை என்பதே ரீ.சீ.சீ இன் வன்முறைக்குக் காரணம் என அதன் உறுப்பினர்கள் கூறினார்கள். முள்ளிவாய்க்கால் மனிதப் படுகொலைகளை சிறீ லங்கா பேரினவாத அரசு நடத்திமுடித்து ஏழு வருடங்களாக புலிக் கொடி வியாபாரச் சின்னமாகப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

image (6)மக்களுக்காக யார் என்ன செய்கிறார்கள் என்பதெல்லாம் இந்தக் கும்பல்களுக்கு பொருட்டல்ல. தமது வியாபாரத்திற்குப் பயன்படும் அடையாளங்களை முதன்மைப்படுத்த வேண்டும் என்பதே அவர்களின் ஒரே நோக்கம். தமது வியாபாரத்திற்கான உள்ளூர் மற்றும் வெளியூர் முகவர்களை நியமித்து உலகளாவிய வலைப்பின்னலை ஏற்படுத்தியிருக்கும் ரீ.சீ.சீ, கடந்த ஏழு வருடங்களில் தமது பணப்பையை மட்டுமே நிரப்பிக்கொண்டார்கள்.
மறு புறத்தில் பீ.ரீ.எப் இன் நடவடிக்கைகள் மக்கள் சார்ந்ததல்ல. ரீ.சீ.சீ கும்பலுக்கு மாற்றாக பீ.ரீ.எப் ஐக் கருத முடியாது. தமக்கான அரசியல் திட்டங்களும், எதிர்காலம் குறித்த மக்கள் சார்ந்த நடவடிக்கைகளுமற்று இந்த இரண்டு அமைப்புக்களும், ஏனைய புலம்பெயர் பிழைப்புவாத அமைப்புக்களும் வட கிழக்கில் வாழும் மக்களிலிருந்து முற்றாக அன்னியப்பட்டு அரசியல் நீக்கம் செய்யப்படுவார்கள்.

 

http://inioru.com/mullivaikkaal-remembrance-day-started-with-tccs-violence/

  • Replies 52
  • Views 5.4k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

இன்னொருவைச் சேர்ந்த ********* எங்க சேறு கிடைக்கும் என்று அலையுறதுகள் போல.

அங்க ஒருத்தர் தமிழீழத்தைக்  கைவிட்டிட்டு.. இந்தா 2016 இல் அதிசயம் நடக்குப் போகுது என்று காத்துக்கிடக்கிறார்.

இங்க பாதிரி கூட்டம் பி ரி எவ்.. எப்ப தங்களுக்கு அழைப்பு வரும் என்றிட்டு.. புலிக்கொடியை கடாசிச்சு காத்துக்கிடக்கினம்.

இதில இன்னொரு இன்னொரு வியாபாரம் பார்க்க கதைவிடுகுது. அதில ஒரு வியாபாரக் கதை வேற.

 

இந்த இன்னொருவை விட IBC எவ்வளவோ திறம் எல்லாரையும் கூப்பிட்டு வைச்சு மக்களுக்கு ஆக்களை இனங்காட்டினார்கள். பி ரி எவ் வை தவிர இளையோர் அமைப்பினர் உட்பட பிற எல்லா அமைப்பினரும் தேசியக் கொடியை தமிழர்களின் அடையாளமாகப் பயன்படுத்தனும் என்பதை ஏற்றுக் கொண்டார்கள். பி ரி எவ் சொன்ன காரணத்தை இளையோர் அமைப்பினர் அவர்களுக்கு முன்னாலேயே போட்டுடைத்த போது.. பி ரி எவ்விடம் இருந்து கோபம் தான் வெளிப்பட்டதே தவிர நியாயம் இல்லை.

இப்ப பி ரி எவ் வுக்கு இன்னொரு ******** . பூமாலை சூடுவது ஏனெனில்.. புலிக் காய்ச்சல் போய்.. புலிக்கொடிக் காய்ச்சலில்.

எப்படியாவது தமிழனை தமிழன் அடையாளம்..இல்லாமல் ஆக்கிடுவான். அதுக்கு உந்தச் ******** போதும். tw_angry::rolleyes:

Edited by நியானி
வசை

  • கருத்துக்கள உறவுகள்

லண்டனில்.....

TCC,  பீ.ரீ.எப்(BTF) ரீ.சீ.சீ (TCC) ,   பீ.ரீ.எப்(BTF) .....

இதெல்லாம்..... விற்றமின் குளிசைகள்....?
சாப்பிட்டால்.... நல்ல, தூக்கம் வருமா.....?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நடந்து 7 ஆண்டுகள் ஆகியும் இன்னும் தமிழர் ஒற்றுமை அடையாமல் இருப்பது வருத்தமாக உள்ளது

‘கொண்டாடப்பட்டது’

What?

11 hours ago, தமிழ் சிறி said:

லண்டனில்.....

TCC,  பீ.ரீ.எப்(BTF) ரீ.சீ.சீ (TCC) ,   பீ.ரீ.எப்(BTF) .....

இதெல்லாம்..... விற்றமின் குளிசைகள்....?
சாப்பிட்டால்.... நல்ல, தூக்கம் வருமா.....?

 

முப்பது வருடமாக உந்த பில்சுகளை போட்டுத்தான் புலிகள் தாக்குதல்கள் செய்தார்கள்.

இப்ப தங்களுக்க தாக்குதல்கள் செய்யினம் .

தாக்குதல் செய்யாமல் உந்த இரசாயனங்கள் இருக்காது .

உலகம் முழுக்க உந்த நச்சு இராசயனங்களை தெளித்துவிட்டு நாட்டில இல்லாமல் போயிட்டினம் 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

2014 இல் BTF ஒழுங்குசெய்த முள்ளிவாய்க்கால் நினைவுதினத்தில் TCC ஐச் சேர்தவர்கள் புலிக்கொடி ஏந்தவேண்டும் என்று வாக்குவாதப்பட்டதைப் பார்த்து வெறுத்துப்போய் அதன் பின்னர் இக்குழுக்களால் ஒழுங்குசெய்யப்படும் ஒரு நிகழ்வுகளுக்கும் போவதில்லை.

தமிழர்களுக்காக தன்னையும், தனது குடும்பத்தையும் பலிகொடுத்த தலைவனுக்கு வெளிப்படையாக அஞ்சலி செய்யும் நிகழ்வை ஏற்பாடு செய்தால் கட்டாயம் போவேன்.

  • கருத்துக்கள உறவுகள்
On 5/20/2016 at 4:39 PM, nedukkalapoovan said:

இன்னொருவைச் சேர்ந்த ********* எங்க சேறு கிடைக்கும் என்று அலையுறதுகள் போல.

அங்க ஒருத்தர் தமிழீழத்தைக்  கைவிட்டிட்டு.. இந்தா 2016 இல் அதிசயம் நடக்குப் போகுது என்று காத்துக்கிடக்கிறார்.

இங்க பாதிரி கூட்டம் பி ரி எவ்.. எப்ப தங்களுக்கு அழைப்பு வரும் என்றிட்டு.. புலிக்கொடியை கடாசிச்சு காத்துக்கிடக்கினம்.

இதில இன்னொரு இன்னொரு வியாபாரம் பார்க்க கதைவிடுகுது. அதில ஒரு வியாபாரக் கதை வேற.

 

இந்த இன்னொருவை விட IBC எவ்வளவோ திறம் எல்லாரையும் கூப்பிட்டு வைச்சு மக்களுக்கு ஆக்களை இனங்காட்டினார்கள். பி ரி எவ் வை தவிர இளையோர் அமைப்பினர் உட்பட பிற எல்லா அமைப்பினரும் தேசியக் கொடியை தமிழர்களின் அடையாளமாகப் பயன்படுத்தனும் என்பதை ஏற்றுக் கொண்டார்கள். பி ரி எவ் சொன்ன காரணத்தை இளையோர் அமைப்பினர் அவர்களுக்கு முன்னாலேயே போட்டுடைத்த போது.. பி ரி எவ்விடம் இருந்து கோபம் தான் வெளிப்பட்டதே தவிர நியாயம் இல்லை.

இப்ப பி ரி எவ் வுக்கு இன்னொரு ******** . பூமாலை சூடுவது ஏனெனில்.. புலிக் காய்ச்சல் போய்.. புலிக்கொடிக் காய்ச்சலில்.

எப்படியாவது தமிழனை தமிழன் அடையாளம்..இல்லாமல் ஆக்கிடுவான். அதுக்கு உந்தச் ******** போதும். tw_angry::rolleyes:

புலிக்கொடியை உருவும் எண்ணத்தில் சிங்களவன் பின்னின்றாலும் 

நக்கிற கூட்டம் நன்றியுடனேயே இருக்கிறது !


புலிக்கொடியை போட்டால் அவன் இனி தமிழனே இல்லை.
அடித்து கலைக்க வேண்டும்.

இனி அது வெறும் கொடியல்ல ...
45ஆயிரம்  உயிர்களின் இரத்த வடு அது !

எனக்கு இந்த கட்டுரையில் பிடித்தது
எழுதியவரின் நடுநிலமைதான்!

தொடக்கும் போது .....
தொடங்கிய விதம் இருக்கே 

ஆஸ்கார் விருதே கொடுக்கலாம்!

  • கருத்துக்கள உறவுகள்
49 minutes ago, Maruthankerny said:

புலிக்கொடியை உருவும் எண்ணத்தில் சிங்களவன் பின்னின்றாலும் 

நக்கிற கூட்டம் நன்றியுடனேயே இருக்கிறது !


புலிக்கொடியை போட்டால் அவன் இனி தமிழனே இல்லை.
அடித்து கலைக்க வேண்டும்.

இனி அது வெறும் கொடியல்ல ...
45ஆயிரம்  உயிர்களின் இரத்த வடு அது !

எனக்கு இந்த கட்டுரையில் பிடித்தது
எழுதியவரின் நடுநிலமைதான்!

தொடக்கும் போது .....
தொடங்கிய விதம் இருக்கே 

ஆஸ்கார் விருதே கொடுக்கலாம்!

உந்த இன்னொரு கின்னொரு ஆக்கள் தான் புலிக் கொடி காய்ச்சலில்... அரசியல் நீக்கம்.. ஊக்கம் என்று கொண்டு பித்தலாட்டம் காட்டினம். அதுவும் தாயக மக்கள் அடக்குமுறைக்குள் இருப்பதை சாட்டாக வைச்சு.

ஆனால் தாயக மக்கள் அந்த அடக்குமுறைக்குள்ளும்.. தமிழீழம்.. கார்த்திகைப் பூன்னு எது எது சாத்தியமோ அதை அதை எல்லாம் அடையாளமா முன்னிறுத்தத் தவறவில்லை. குறிப்பாக சிவப்பு மஞ்சள் கொடி கூட. அதைக் கூட பி ரி எவ் காரர் கடாசிட்டு தான்.. காத்திருக்கினம்.. சிங்களவனட்ட இருந்து அழைப்பு வருமுன்னு. வந்ததாக் காணேல்ல. tw_blush:

இதில.. இன்னொரு கனவு காணுது தாயக மக்கள்.. அரசியல் நீக்கம் செய்திடுவினமாம்.. சிவப்பு மஞ்சள் கொடியையும்.. தமிழீழத்தையும்.. புலிக்கொடியையும்.. கார்த்திகைப் பூவையும் என்று. இந்த புலிக்காய்ச்சல் பேர்வழிகளுக்கு ஒரு நல்ல குளுசை கண்டிபிடிக்கத்தான் வேண்டி இருக்கு. இல்ல உதுகள் தங்களைத் தாங்களே மக்களா பாவனை பண்ணிக்கிட்டு.. பைத்தியக் கதை பேசிக்கிட்டு.. பைத்தியங்களா அலையப் போகுதுங்க. tw_blush:

Jaffna_Univ_00.jpg

Jaffna_Univ_01.jpg

 

படங்கள்.. யாழ் பல்கலைக்கழக முன்றத்தில் இருந்து...

TNPF_mullivaaykkaal_02.jpg

TNPF_mullivaaykkaal_02.jpg

முள்ளிவாய்க்கால் மண்ணில் இருந்து.. தமிழ் தேசிய மக்கள் முன்னணி நடத்திய பிரார்த்தனையில் இருந்து. 

தாயக மக்கள் கடந்த காலம் குறித்து எப்படி நடக்கனும் என்பதில்... தெளிவான.. மனநிலையில் தான் இருக்கினம்.

ஆனால் இன்னொரு போன்ற புலிக்காய்ச்சல் புலிக்கொடிக் காய்ச்சல் பேர்வழிகள் தான்.. இன்னும் அந்தக் காய்ச்சல்கள்..தீராத ஆக்கள் தான் இன்னும் பைத்தியப் பிடிச்சு எழுதிக்கிட்டு தமிழர்களின் ஒற்றுமையை சிதைப்பதில் எதிரிக்கு சார்ப்பாக இருந்து தொழிற்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

மக்கள் உங்க புலம்பித் திரியும்.. எதிரியோடு ஒட்டி ஒட்டுண்ணி வாழ்க்கை வாழும்.. வாழத்துடிக்கும்.. உந்த ஒட்டுக்குழு கூத்தாடிகளைப் பற்றி பலமுறை பாடம் படித்து விட்டார்கள்.  இவற்றை எல்லாம் கடந்து மக்கள் பயணிப்பார்கள்.. நல்ல தெளிவோடு. 

http://www.tamilnet.com/art.html?catid=79&artid=38264

Edited by nedukkalapoovan

தேசிய தலைவரின் படத்தையும் காணோம் புலி கொடியையும் காணோம் மறந்து போனார்களோ என்னவோ ?

கட்டு காசும் கிடைக்காத கோஸ்டிகள் தான் இப்போ உங்கள் தெரிவு .

நாங்கள் நக்குற கோஸ்டிகள் தான் மற்றவர்களின் இரத்தத்தை அல்ல .

13238978_10208737606253822_7439016229230

13233146_10208737599333649_8217419249333

13239335_10208737599773660_3648640444125

13240691_10208737599813661_4616300424386

13220839_10208737600693683_8971926332765

இதுதான் இனி நாட்டில் நடக்க போகுது .

 

  • கருத்துக்கள உறவுகள்

நாங்க வவுனியாவில் நின்று கட்டுக்காசென்ன எல்லாத்தையும் இழந்து காட்டிக்கொடுத்து சொந்த இனத்தை கருவழிச்சிட்டு.. இப்ப தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குள் வந்து பதுங்கிக் கொண்டு.. வெள்ளை வேட்டிக் கட்டுக்கொண்டு.. பூஞ்சிப் போன கண்ணோட வந்து பூத்தூவினாப் போல..  புனிதர்கள் ஆகிட முடியாது.

சித்தார்த்தன் முள்ளிவாய்க்கால் மண்ணில்.. அமைதியாக நின்று அகவணக்கம் செலுத்தக் கூட முடியாத மனப்புழுக்கத்தில் மனச்சாட்சியின் குத்தலில்..இருந்தார் என்பதை காணொளிகள் சாட்சி பகன்றன.

சித்தார்த்தன்.. முள்ளிவாய்க்காலில் அஞ்சலி செலுத்துவதும் சரி.. கோத்தபாய அங்கு அஞ்சலி செலுத்துவதும் ஒன்று தான். 

நாட்டில்.. நடக்கும் அரசியல் என்பது.. இன்று.. தூய அரசியலுக்குள் ஒட்டிக் கொண்டுள்ள ஒட்டுண்ணிகளும்.. அரசியல் விபச்சாரிகளும் கொண்ட ஒரு போலி அரசியல்... பிளவு அரசியல் என்பது மட்டும் விளங்குது.

ஆமாம்.. புலிக்கொடி.. தேசிய தலைவரின் படம் இவை.. அங்கு வர சிங்கள ஆக்கிரமிப்பு இடமளிக்கும் என்றால்.. சித்தார்த்தனும் என் தம்பியின் படமுன்னு.. சொல்லிக்கிட்டு பிடிச்சிருப்பார். நாம் அதையும் கடந்து வந்திட்டம். ஆனால் சில ஒட்டுக்குழுக்களுக்கு சித்தரின் சித்து அரசியல் செய்யக் கூட லாய்க்கில்ல.. அந்தளவுக்கு வன்மம்.. மனதெங்கும். tw_blush:

Mullivaaykkaal_Genocide_Remembrance_Ecua

Mullivaaykkaal_Genocide_Remembrance_Ecua

Ecuadorian indigenous people universalise Tamil genocide remembrance

 http://www.tamilnet.com/art.html?catid=79&artid=38266

உலகம் அகன்றது அண்ணன்களா.. கிணற்றுக்குள் இருந்து கனவு காண்பதை விட்டு வெளில வாங்க. tw_blush:

ஈழத்தில் இருந்து ஈக்குவடோர் வரை சிவப்பு மஞ்சள்.. மலர்ந்திருக்குது. அது எம் மக்களும் மாவீரரும் சிந்திய இரத்தத்தின் அடையாளம்.. அவர்களின் தியாகத்தின் கொள்கையின் அடையாளம். அது பேசும் எல்லாம். அதையே கடாசிற சில நக்கிப் பிழைக்க நினைக்கும் கூட்டம் மக்களுக்கு பிரதிநிதிகள் ஆகவே முடியாது. கூட இருந்து.. சூழ்ச்சி தான் செய்யலாம்..! tw_warning:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

புலிக்கொடி பிடிப்பதை பிரித்தானிய அரசாங்கமோ அல்லது வேறெந்த நாடுகளோ எதிர்க்கவில்லை.அப்படி இருக்க பிரிஎப் காரர் எதிர்க்கினம் எண்டா அதுவும் அதன் அமைப்பாளர்கள்  10 போர் எதிர்க்கினம் எண்டா அதுக்கு வேற ஏதோ காரணம் இருக்க வேண்டும்.பிரிஎப்இன் அழைப்பின் பேரில் வந்த மக்களே புலிக்கொடி கொண்டு வந்திருக்கினம்.சிறிலங்காவின் சுதந்திரதினத்தில் கலந்து கொண்டு ஆனந்தக் கண்ணீர் விட்ட சம்சும் கோஸ்டியை தமிழ்மக்களின் பேரவலத்தில் ஒப்புக்கு முதலைக் கண்ணீர் வடிக்கக்கூட வராமல் இருக்கினம். மாவையும்,சரவணபவனும்,சித்தரும் தங்களின் அரியலை கொண்டு நடத்த வந்து முதலைக்கண்ணீர் வடிக்கினம் 

  • கருத்துக்கள உறவுகள்

புலிக்கொடியில்லாமல் தமிழர் தேசியத்தை அடையாளப்படுத்தப்பட முடியாது.  ஆனால் குறுக்கேயிருக்கும் இரண்டு துவக்குகளையும் தற்காலிகமாக நீக்குவதையிட்டுச் சற்றுக் கருத்திலெடுப்பதில் தவறில்லையென எண்ணுகிறேன். 

Edited by karu
சிறு வசனப்பிழை.

  • கருத்துக்கள உறவுகள்

புலிக்கொடி தமிழர் தேசியக் கொடியாக வடிவமைக்கப்படவில்லை. தமிழீழ தேசியக் கொடியாகவே வடிவமைக்கப்பட்டுள்ளது. சிலதுக்கு ஒரு அடிப்படையும் தெரியுதில்லை... ஆனால்.. துவக்கு புலி சிவப்பு என்றதும் உதறல் எடுக்குது. ஏன்னா சிங்களவன் உதை தூக்கி வைச்சிருந்தால் எலும்பு போடமாட்டானுன்னு போல.

தமிழீழத் தேசியக் கொடிக்கு உலகில் எங்கும் (சொறீலங்கா தவிர) தடையில்லை. தமிழீழ மக்கள் அதனை பிடிக்க முடிகிறது.. முடியும். தமிழீழ தேசத்தின் தமிழினத்தின்  அடையாளம் தான்.. தமிழீழத் தேசியக் கொடி. அதனை மாற்றி அமைக்க வேண்டிய அவசியம் தற்போதைக்கு இல்லை. அதனை மாற்றியமைக்க வேண்டின் அது மக்களின் கருத்தறிதலோடு தான் நடக்க முடியும். ஒட்டுக்குழுக்களின் தேவைக்கும்.... பல்வேறுபட்ட எதிரிகளின் அடிவருடிகளின் தேவைகளுக்காகவும் அதனை  மாற்றியமைக்க முடியாது. 

அப்படி ஆக்களின் குழுக்களின் தேவைகளுக்காக எல்லாம் உலகில் எங்கும் தேசியக் கொடி மாற்றி அமைக்கப்படுவதில்லை. மக்களின் தேவை ஒன்று தான்.. அங்கு பிரதானம். தமிழீழ.. தமிழ் மக்களைப் பொறுத்தவரை அவர்களுக்கு புலிக்கொடியாகிய தேசியக் கொடியை மாற்றியமைக்க அவர்கள் எப்போதும் விரும்பியதில்லை. காரணம்.. அந்தக் கொடி பல்லாயிரக் கணக்கானோரின் உயிர்தியாகத்தில் முளைத்த கொடி. வரலாற்றுப் பின்னணி நிறைந்த கொடி. 

உலகத்தை ஆள்வதே கழுகும்.. துவக்கும்.. அணு குண்டும் தான். tw_blush:

Edited by nedukkalapoovan

புலிக்கொடி புலிகளின் கொடி மட்டுமே .

பிரபா புலிகளின் தலைவர் மட்டுமே 

அம்புட்டும் தான் .:cool:

 

  • கருத்துக்கள உறவுகள்

இப்படிச் சொல்லி சுய திருப்தி அடைஞ்சு கொள்ள வேண்டியான். 

எனி புலிகளின் கொடிக்கும் தமிழீழ தேசியக் கொடிக்கும் வித்தியாசம் இருக்கென்று திரும்ப அ னாவில் இருந்து ஆரம்பிக்க ஏலாது. சொல்லியும் விளங்காது.. விளங்கத்தக்க அறிவும் இல்லை.. விளங்கிக் கொள்ளும் நோக்கமும் அற்றவர்களுக்கு அதை விளக்கிப் பயனும் இல்லை. 

ஆனால் மக்கள் எல்லாம் அறிவார்கள். குறிப்பாக இளைய சமூகமும் அறியும். அதுதான் முக்கியம். tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்

வேல்ஸ் வெள்ளையின முதியவரிடம் வழி கேட்க்க வழியை சொன்னப்பின் சிரித்தபடியே சகஜமாக 

எங்கிருந்து எந்த நாட்டில் இருந்து  வருகிறாய் ? ஸ்ரீ லங்கா 

வாட் ?

மீண்டும் சொல்கிறன் தெரியவில்லை 

அது எங்கிருக்கிறது? ஆசியாவில் இந்தியாவுக்கு அருகில் .

அப்படியா எனது காரை கடந்த அந்த வேல்ஸ் பகுதி முதியவர் காரின் உள்ளே கிடந்த ஒரு பேப்பரில் (ஓசி பேப்பர் ?) பழசு அதில் உள்ள புலிக்கொடி படத்தை பார்த்து விட்டு நீ தமிழா ?  கேள்வி ஆம் என்று தலயை ஆட்ட "எனக்கு நன்றாக தெரியும் " 

இதுதான் யதார்த்தம் இதுக்கு மேல் வேறு ஒன்றும் எழுத வேண்டிஇங்கு  இருக்காது .

 

Edited by பெருமாள்

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nedukkalapoovan said:

இப்படிச் சொல்லி சுய திருப்தி அடைஞ்சு கொள்ள வேண்டியான். 

எனி புலிகளின் கொடிக்கும் தமிழீழ தேசியக் கொடிக்கும் வித்தியாசம் இருக்கென்று திரும்ப அ னாவில் இருந்து ஆரம்பிக்க ஏலாது. சொல்லியும் விளங்காது.. விளங்கத்தக்க அறிவும் இல்லை.. விளங்கிக் கொள்ளும் நோக்கமும் அற்றவர்களுக்கு அதை விளக்கிப் பயனும் இல்லை. 

ஆனால் மக்கள் எல்லாம் அறிவார்கள். குறிப்பாக இளைய சமூகமும் அறியும். அதுதான் முக்கியம். tw_blush:

30 வருடமா சுய இன்பத்தில் வாழ்ந்து பழகினவர்களை 
திடீரென நிறுத்த சொன்னால் அவர்களும் என்ன செய்வார்கள் ...........?

இப்ப ஒரு 50 -60 க்குள் நிற்கிறார்கள் 
65 வயது வர நரம்பு தளர்ச்சியால் 
நல்ல மருத்துவர்கள் கிடைத்தால் 
அவர்கள் புத்திமதி சொல்வார்கள் என்று நினைக்கிறேன்!

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பெருமாள் said:

வேல்ஸ் வெள்ளையின முதியவரிடம் வழி கேட்க்க வழியை சொன்னப்பின் சிரித்தபடியே சகஜமாக 

எங்கிருந்து எந்த நாட்டில் இருந்து  வருகிறாய் ? ஸ்ரீ லங்கா 

வாட் ?

மீண்டும் சொல்கிறன் தெரியவில்லை 

அது எங்கிருக்கிறது? ஆசியாவில் இந்தியாவுக்கு அருகில் .

அப்படியா எனது காரை கடந்த அந்த வேல்ஸ் பகுதி முதியவர் காரின் உள்ளே கிடந்த ஒரு பேப்பரில் (ஓசி பேப்பர் ?) பழசு அதில் உள்ள புலிக்கொடி படத்தை பார்த்து விட்டு நீ தமிழா ?  கேள்வி ஆம் என்று தலயை ஆட்ட "எனக்கு நன்றாக தெரியும் " 

இதுதான் யதார்த்தம் இதுக்கு மேல் வேறு ஒன்றும் எழுத வேண்டிஇங்கு  இருக்காது .

 

இப்படி வேற்று இன மக்கள் இவர்களையும் பார்த்து சொல்வதுதான் இவர்களின் பிரச்சனை,

 

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, nedukkalapoovan said:

புலிக்கொடி தமிழர் தேசியக் கொடியாக வடிவமைக்கப்படவில்லை. தமிழீழ தேசியக் கொடியாகவே வடிவமைக்கப்பட்டுள்ளது. சிலதுக்கு ஒரு அடிப்படையும் தெரியுதில்லை... ஆனால்.. துவக்கு புலி சிவப்பு என்றதும் உதறல் எடுக்குது. ஏன்னா சிங்களவன் உதை தூக்கி வைச்சிருந்தால் எலும்பு போடமாட்டானுன்னு போல.

உந்த அடிப்படை ஒன்றும் றொக்கட் சயன்சல்ல.  பெரிய ஞானம் இதற்கு வேண்டியதில்லை.  தற்காலிகமாக தமிழர் தேசியத்தை முன்னெடுத்து அரசியல் ராஜதந்திர ரீதியில் நிலைப்படுத்துவதற்காக, தமிழீழ தேசக்கொடியை அடையாளப்படுத்தும் கொடியைவிட துவக்குகள் இல்லாத கொடியே கருத்தானதாயிருக்கும்.   அதையிட்டுச் சிந்திப்பது தவறில்லையென்றுதான் கூறியிருக்கிறேன்.  அந்தவகையில் இந்தப் பேரறிவை வைத்துக்கொண்டு மற்றவர்களை முட்டாளாக்க முயல்வதைவிடச் சற்று அறிஞர்கள் கூடி ஆராய்வது  பொருத்தமானதாகும்.  தமிழீழத்தை விடத் தற்போது தமிழ்த் தேசியத்திற்கான சர்வதேச அங்கீகாரத்தைப் பெற முயற்சிப்பதே  அரசியல், இராஜதந்திர ரீதியில் அவசியமானதும், முக்கியமானதும், யதார்த்தமானதுமாகும்.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் தேசியத்துக்கு சர்வதேசம் அங்கீகாரம் வழங்கன்னுன்னது காமடி. தமிழ் தேசியம் உலக அங்கீகாரம் பெற வேண்டிய ஒன்றல்ல. அது தமிழர் இனம் சார்ந்தது. தமிழ் தேசியத்துக்கு கொடி எல்லாம் அமைக்க முடியாது. ஒரு தேசத்துக்கு ஒரு அமைப்புக்குத் தான் கொடி. நீங்க தமிழ் தேசியம் என்றால்.. ஏதோ புதிசா புத்துக்குள்ளால வாறது என்று நினைக்கிறீங்க போல உங்கட ராக்கெட் சயன்சை வைச்சு. 

ஈழத்தமிழ் மக்களின் அடையாளம்.. தமிழீழம். அதன் தேசியக் கொடியே புலிக்கொடி. அதற்கு மாற்று எதுவும் இருக்க முடியாது... எனி.  ஏனெனில் உலகம் ஈழத்தமிழர் இனத்துக்கு புலிக்கொடியை அமைத்துக் கொடுத்துப் பார்த்துவிட்டது. உலகமே ஏற்று நிற்கும் கொடியை.. எதுக்கு சிலர் காழ்ப்புணர்ச்சியோடு பார்க்கிறார்கள்.

ஏலவே தமிழர் பிராந்தியக் கொடியாக.. ஒரு நந்திக்கொடிபறந்திட்டுத்தான் இருந்தது. அதற்கு உலக அரங்கில் யாரும் எப்போதும் அங்கீகாரம் தேடேல்ல. ஆனால் புலிக்கொடிக்கு தமிழீழ மக்கள் தான் ஒரு அங்கீகாரத்தை உலக அரங்கில் பெற்றுக் கொடுத்திருந்தனர். 

நாங்க உள்ளதைப் பாதுகாக்க வக்கில்லாமல்... இல்லாதத்திற்கு கனவு காண வேண்டிய அவசியமில்லை. tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்

இப்படித்தான் 90இன் இறுதியில் எமது வீட்டிற்கு அருகாமையில் உள்ள கடையில் புதிதாக ஒருவர் வேலைக்கு சேர்ந்தார். ஆள் புலிகளுக்கு எதிரானவர், கடையில் அடிக்கடி அரசியல் விவாதம் நடைபெறும். ஒருநாள் கடைக்கு வரும் கறுவல் இவரை பார்த்து "ஹலோ ரமில் ரைகர்" என்று சொல்லிவிட்டான், இவரும் எள்ளும் கொள்ளும் வெடிக்க செம சூட்டில் இருந்த வேளை கூட வேலை செய்யும் பெடியனும் இவரை செமநக்கல். அடுத்த நாள் அந்த கறுவலை இவர் றோட்டில் கண்டு "நீ எப்படி என்னை ரமில் ரைகர்" என்று சொல்லுவாய் என்று கேமை கேட்க அவன் பிரித்து மேய்ந்து விட்டான். 

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, karu said:

உந்த அடிப்படை ஒன்றும் றொக்கட் சயன்சல்ல.  பெரிய ஞானம் இதற்கு வேண்டியதில்லை.  தற்காலிகமாக தமிழர் தேசியத்தை முன்னெடுத்து அரசியல் ராஜதந்திர ரீதியில் நிலைப்படுத்துவதற்காக, தமிழீழ தேசக்கொடியை அடையாளப்படுத்தும் கொடியைவிட துவக்குகள் இல்லாத கொடியே கருத்தானதாயிருக்கும்.   அதையிட்டுச் சிந்திப்பது தவறில்லையென்றுதான் கூறியிருக்கிறேன்.  அந்தவகையில் இந்தப் பேரறிவை வைத்துக்கொண்டு மற்றவர்களை முட்டாளாக்க முயல்வதைவிடச் சற்று அறிஞர்கள் கூடி ஆராய்வது  பொருத்தமானதாகும்.  தமிழீழத்தை விடத் தற்போது தமிழ்த் தேசியத்திற்கான சர்வதேச அங்கீகாரத்தைப் பெற முயற்சிப்பதே  அரசியல், இராஜதந்திர ரீதியில் அவசியமானதும், முக்கியமானதும், யதார்த்தமானதுமாகும்.

உங்களுடைய சிந்தனையில் தவறு ஏதும் இல்லை 
இன்னமும் சொல்லபோனால் விட்ட தவறுகளில் இருந்து கற்றுகொள்வது என்று கூட சொல்லலாம்.

ஆனால் இதை ஒரு சிறு வட்டத்திற்குள் நின்றுதான் நீங்கள் பார்கிறீர்கள்.
உலக வெளியில் குனிய குனிய குட்டுவார்களே தவிர 
குனிந்தவனை தட்டி எழுப்பியதாக உதாரனத்திட்கு சொல்ல கூட ஒரு உவமை இல்லை.

கோவில்களில் ஆடுகளைத்தான் கொண்டு சென்று வெட்டுகிறார்கள் 
சிங்கங்களை யாரும் வெட்டுவதில்லை.
ஆடு இன்னமும் குனி குறுகினால் அவர்கள் தமது வேலை இயல்பாகி விட்டது என்றுதான் 
எண்ணுவார்கள் இது ஒரு இயல்பு நிலை. 

பலஸ்தீனத்தை ஐநாவில் ஏற்கும் நிலைமை அமெரிக்க எதிர்ப்பையும் தாண்டி 
வந்ததற்கு காரணம் தொடர்ந்த விட்டுகொடாமைதான்.
அதை காரணம் காட்டி ஓவரு நாளும் கொல்கிறார்கள் என்பது மறுக்க முடியாத ஒன்று.

எதை விடுகிறோம் ...?
விடுவதால் இந்த பலன் என்று எப்படி உறுதியாக கூற முடியும்?

இவளவு காலமும் புலிகள் 
சர்வதிகாரி பிரபாகரன் என்றார்கள் 
எம்மிலும் ஒரு 50 வீதம் அதை நம்பித்தான் இருக்கிறது.
இப்போ அவர்கள் இல்லை ..... 

இனி நாங்கள் தமிழை விட்டால் 
அடையலாம் என்றும் தொடங்குவார்கள் 
அப்பட்டமான பொறுக்கித்தனம் என்பதால் வெளியில் சொல்கிறார்கள் இல்லை. 

*********


அடுத்தவன் என்ன எழுதுவான்
 கொப்பி அடிக்கலாம் என்று திரிவார்கள். 

இந்த லட்சணத்தில் .......
அரசியல் வேறு ..

Edited by மோகன்

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, nedukkalapoovan said:

தமிழ் தேசியத்துக்கு சர்வதேசம் அங்கீகாரம் வழங்கன்னுன்னது காமடி. தமிழ் தேசியம் உலக அங்கீகாரம் பெற வேண்டிய ஒன்றல்ல. அது தமிழர் இனம் சார்ந்தது. தமிழ் தேசியத்துக்கு கொடி எல்லாம் அமைக்க முடியாது. ஒரு தேசத்துக்கு ஒரு அமைப்புக்குத் தான் கொடி. நீங்க தமிழ் தேசியம் என்றால்.. ஏதோ புதிசா புத்துக்குள்ளால வாறது என்று நினைக்கிறீங்க போல உங்கட ராக்கெட் சயன்சை வைச்சு......

உலக அங்கீகாரமென்பது ஐநா போன்ற யாராவது தரும் சேட்டிபிக்கேற் அல்ல.  உலக அரங்கில் அதற்குக் கிடைக்கக்கூடிய மதிப்பு மரியாதை.  இங்கு  புலி அடையாளத்தைப் பற்றி எதையும் கூறவில்லையே!  புலி புலியாகவேயிருக்கும்.  அதற்குமுன் இரண்டு துவக்குகளைப் போட்டுவிடுவதைப் பற்றித்தான் சிந்திக்க வேண்டுமென்கிறேன்.  தமிழீழமென்னும் நாடு மலரும்போது அதன்கொடியாக அந்த இரண்டுதுவக்கும் புலியும் இருக்கட்டுமென்று வேண்டுமானால் முடிவு செய்யலாம்.  இது வீட்டு மதிலில் கள்ளர்கள் ஜாக்கிரதையென்று போட்டு இரண்டு காவல்காரர்களைத் துவக்கோடு வரைந்து வைப்பதைப் போன்றது.  திருடர்கள் அதைப் பார்த்துப் பயப்படமாட்டார்கள்.   தமிழர்களின் அடையாளத்தை உலகில் நிறுவியவர்கள் புலிகளே!   அவர்கள் போட்டிருந்த துவக்குகள் தமிழீழத்தை அடைவதற்கான வழியைக் காட்டுவனவேயன்றி அதில் பெரிய கருத்தேதுமில்லை.  இன்றைய அரசியல், ராஜதந்திர அணுகுமுறைகளுக்குள் இந்தத் துவக்குகள் பெரிதாக எந்தவொரு அர்த்தத்தையும் தரப்போவதில்லை.    தற்காலிகமாக அதையிட்டுச் சிந்திப்பதில் தவறேதுமில்லை யென்று நான் குறிப்பிட்டதன் அர்த்தம் அதுதான்.

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.