Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ராஜிவ்காந்திக்கு இடப்பட்ட சாபம் இது 

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

1988ஆம் ஆண்டு மார்ச் மாதம் பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்களால் ராஜிவ்காந்திக்கு இடப்பட்ட சாபம் இது 
அவர் அறம் பாடியது போலவே ராஜிவ்காந்தி உடல் சிதறி இறந்தார்.

'இட்ட சாபம் முட்டுக' என்ற பாடலை இங்கே இணைக்கிறேன். இப்பாடல் ராஜீவ் காந்தி கொலைசெய்யப்படுவதற்கு சுமார் மூன்று ஆணடுகளுக்கு முன்பே, ராஜீவ் அவர்களின் சாவு இப்படித்தான் இருக்கவேண்டும் என்ற சினத்துடன் பாவலரேறு அவர்களால் அறம் பாடப்பட்டது என்பதைக் கவனிக்க. மே 21, 1991 அன்று இன்றைக்குச் சரியாக இதே நாளில் ராஜீவ் கொலை நடைபெற்றது. 
வரலாறுகள் என்றும் மறப்பதற்கு அல்ல.

சிங்களக் கொலைஞன் செயவர்த்தனன் எனும் 
வெங்கணன் விரித்த வலையினில் விழுந்து 
செந்தமிழ் இனத்தைச் சீரழித்திடவே 
முந்து 'இரா சீவ்' எனும் முன்டையின் மகனே!
உலகப் பந்தின் உயிர்ச்செறி எம்மினம் 
விலகாக் குறியினன் ஆகி, விதிர்ப்புற 
யாழ்த்தமிழ் மக்களின் யாக்கைகள் எல்லாம் 
போழ்த்துயர் குடிக்கும் அரக்கப் பூதனே!
நீயுநின் துணையும் நின்னிரு மக்களும் 
ஏயுமிவ் வுலகத்து இருக்குநாள் தோறும் 
என்தமிழ் நல்லினத் தேற்றம் குலைதலால்
வெந்தழியும் நாள் விரைந்துனக் கெய்துக!
இடும்பைப் பிறப்பே! ஏழிரு கோடிக் 
குடும்பம் அழிக்கும் கொடியனே! நின்னைக் 
கடும்புலி வரியெனச் சாவு கவ்வுக! 
திடுமென நினையொரு தீச்சுழல் சூழ்க!
சூழ்ச்சியும் அரக்கமும் அதிகாரச் சூழலும் 
வீழ்ச்சி யுறுக! நின்னுடல் வெடித்துச்
சுக்குநூ றாகச் சிதறுக! சூதனே! 
திக்கி நா விழுக்க! நெஞ்சு தெறிக்க!
என்தமிழ் இளையரும் ஏழைப் பெண்டிரும் 
நொந்துயிர் துடிக்கையில் உளக்குலை நொய்ந்தே 
இட்ட சாவங்கள் இணைந்து கூடி 
முட்டுக நின்னுயிர்! மூளி, நீ யாகுக!
தமிழினம் தகைக்கும் தருக்கனே! நின்குடி 
அமிழுக! ஆங்கோர் அணுவின்றி அழிக!
தணலும் எம் நெஞ்சின் தவிப்பை 
மணல், நீர், தீ, வளி, வானம் - ஆற்றுகவே!//

  • கருத்துக்கள உறவுகள்

ஆயிரத்தை செய்தாலும் அவர் .... ராசீவுகாந்தி 
அவரை எப்படி கொல்ல முடியும் ?

அவரை கொன்ற புலிகள் நிச்சயம் பயங்கரவாதிகளே ......!!

2 minutes ago, Maruthankerny said:

ஆயிரத்தை செய்தாலும் அவர் .... ராசீவுகாந்தி 
அவரை எப்படி கொல்ல முடியும் ?

அவரை கொன்ற புலிகள் நிச்சயம் பயங்கரவாதிகளே ......!!

ஜெயின் கமிசன் அறிக்கை முழுமையா வாசிச்சிட்டியளோ?

  • கருத்துக்கள உறவுகள்

ஈழம் என்றால் புலிகள், புலிகள் என்றால் ராஜீவ் கொலை, எனவே ஈழத்தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைக்காகக் குரல் கொடுப்போர் அனைவரும் புலி ஆதரவாளர்கள். எனவே அது தேசத்துரோகம் அல்லது ராஜத்துரோகம் அல்லது பிரிவினைவாதம்” – 1991 முதல் இன்று வரை ஈழத்தமிழர்கள் மீதான எல்லா அடக்குமுறைகளையும் நியாயப்படுத்த இந்த எளிய வாய்ப்பாடுதான் தமிழகத்தில் பயன்படுத்தப்படுகிறது.

ஈழத்தமிழினத்தின் சுயநிர்ணய உரிமையை மறுப்பதற்கு மட்டுமின்றி, தமிழக மக்களின் மொழி, இன உரிமைகளை நசுக்குவதற்கும் பார்ப்பனக் கும்பலின் கையில் கிடைத்திருக்கும் ஆயுதம் ‘ராஜீவ்’. “பயங்கரவாத எதிர்ப்பு” என்ற பெயரில் தனது உலக மேலாதிக்க நடவடிக்கைகளை நியாயப்படுத்துவதற்கு புஷ்ஷுக்குக் கிடைத்த 9/11 கூட இன்று கிழிந்து கந்தலாகிவிட்டது. ஆனால் ராஜீவ் எனும் இந்த ஆயுதம் மட்டும் 17 ஆண்டுகள் கடந்த பின்னரும் முனை மழுங்காமல் தமிழ் மக்களுக்கு எதிராகப் பாய்ந்து கொண்டே இருக்கிறது. காரணம், அதனை யாரும் எப்போதும் திருப்பித் தாக்கியதில்லை என்பதுதான்.

இன்று கூட (21.05.09) ராஜீவின் இறந்த நாள் என்பதற்காக நாளிதழ்களில் பல பக்க விளம்பரம், அவரது கனவை நனவாக்குவோம் என்ற உறுதி மொழியோடு வந்திருக்கிறது. ஈழத்தை சுடுகாடாக்கிவிட்டு மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியிருக்கும் காங்கிரசு கயவாளிகள், இப்போது புலிகளை முற்றாக இலங்கை அரசுடன் இணைந்து வீழ்த்திவிட்டோம் என்ற இறுமாப்பு இந்த விளம்பரங்களில் துருத்துகிறது.

ராஜீவ் கொலை குறித்த பிரச்சினை எழுப்பப் படும்போதெல்லாம், “அதனை மறந்து விடக்கூடாதா, மன்னித்து விடக்கூடாதா” என்று மன்றாடுகிறார்கள் பல தமிழுணர்வாளர்கள். ஆனால் இந்த ராஜதந்திரம் பார்ப்பனக் கும்பலிடம் இதுவரை பலிக்கவில்லை. பிரபாகரன் மரணமடைந்து விட்டதாக கொழும்பில் சிங்கள மக்கள் கொண்டாடிக் கொண்டிருந்த வேளையில் இங்கே ஆங்கில செய்தி சேனல்களும் அதே உணர்வுடன் கொண்டாடினர். ராஜீவ் காந்தியைக் கொன்றவர்கள் தண்டிக்கப்பட்டார்கள் என்றும், இனி அந்த வழக்கு முடிகிறது என்றெல்லாம் மகிழ்ச்சியுடன் அலசினர். ராஜீவ் கொலை வழக்கு முடிந்துவிட்டதாக அவர்கள் கருதுவது சட்டப்படியும், அறத்தின்படியும் சரியானாதா? இந்தியாவில் ராஜீவ் ஆட்சி செய்தபோதும், இலங்கையில் ராஜீவ் அமைதிப்படை அனுப்பியபோதும் நடந்த படுகொலைகளுக்கு யார் காரணம்?

இந்திய அமைதிப்படையால் கொல்லப்பட்ட ஆயிரக்கணக்கான ஈழத்தமிழ் மக்களுக்காக தண்டிக்கப்பட்டவர்கள் யார்? அந்தக் கொலைமுயற்சியில் உயிரிழந்த 1300 இந்திய சிப்பாய்களின் மரணத்துக்காகத் தண்டிக்கப்பட்டவர்கள் யார்? போபால் விசவாயுப் படுகொலைக்காக, டெல்லி சீக்கியர்கள் மீது நடத்தப்பட்ட இனப்படுகொலைக்காக தண்டிக்கப்படாதவர்கள் யார்? அயோத்தியைக் கிளறி இந்துப் பாசிசப் பேய்க்கு உயிர் கொடுத்தது யார்? இந்தக் குற்றங்களுக்காகத் தண்டிக்கப்பட வேண்டியது யார்?

மேற்சொன்ன கேள்விகளை யாரும் எப்போதும் எழுப்பியதில்லை. எனவே மகாத்மா காந்தி, இந்திரா காந்தி ஆகியோருடன் தேசியப் புனிதர்களின் படவரிசையில் ராஜீவ் காந்தியும் சேர்ந்து விட்டார்.

‘மரித்தவர்களைக் குறைகூறுதல் மனிதப் பண்பில்லையாம்’. ‘அரசியல் நாகரீகம்’ எனும் பட்டாடைக்குள் ஒளிந்து கொண்டிருப்பதால், இந்த அரசியல் பிழைப்புவாதத்தைப் பலர் அடையாளம் காண்பதில்லை.

1991 மே 21 அன்று தமிழகம் முழுவதும் திமுகவினர் தாக்கப்பட்டார்கள். 2 இலட்சம் திமுகவினரின் உடைமைகள் எரிக்கப்பட்டன. ராஜீவுக்காக கண்ணீர் சிந்துமாறு தமிழகமே அச்சுறுத்தப்பட்டது. அன்று தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காக கண்ணீர் விட்டவர்கள் இன்றும் ஈழத்தமிழ் மக்களுக்காக கண்ணீர் விடுகிறார்கள் – இதுவும் ஒரு வகை அரசியல் நிர்ப்பந்தம்தான். பிரணாப் முகர்ஜி கலைஞர் சந்திப்புடன் தமிழகத்தின் “கண்ணீர் விடும் போராட்டம்” முடிவுக்கு வருகிறது. ஈழத்திலோ அழுவதற்கு கண்ணீர் வற்றிய நிலையில் அவலம் தொடர்கிறது.

இனியும் கண்ணீர் விடுவதை யாரேனும் தொடர்ந்தால் அது தீவிரவாத நடவடிக்கையாகக் கருதப்படும். அவர்களுக்கெதிராக ராஜீவின் ஆவியோ, ராஜத்துரோகச் சட்டமோ ஏவப்படலாம்.

அன்று தமிழகமே கண்ணீர்க் கடலில் அமிழ்த்தப்ப்பட்ட சூழ்நிலையில், தமிழகத்திலிருந்து வெளிவரும் புதிய கலாச்சாரம், புதிய ஜனநாயகம் ஆகிய இரு இதழ்கள் மட்டுமே எதிர்ப்புக் குரல் எழுப்பின. அதன் விளைவாக போலீசின் அடக்குமுறைகளையும் எதிர்கொண்டன. “இவர்கள் ராஜீவுக்காக அழமாட்டார்கள்” என்ற தலைப்பில் ஜூன் 1991 புதிய கலாச்சாரம் இதழில் வெளியான உரைவீச்சினை இங்கே பதிவு செய்கிறோம்.

80 களுக்குப் பின் பிறந்த இளைய தலைமுறை அந்த வரலாற்றை அறிந்து கொள்ளவும், மீண்டும் மீண்டும் அரங்கேறும் கேலிக்கூத்துகளை பழைய தலைமுறை புரிந்து கொள்ளவும் இது உதவக் கூடும்

இவர்கள் ராஜீவுக்காக

அழமாட்டார்கள்!

ரோவா. எகிப்திய மன்னன்.
தான் இறந்தவுடன் தனது பட்டத்தரசியையும்,
ஆசை நாயகிகளையும், மந்திரிப் பிரதானிகளையும்,
தனது ஆடை ஆபரணங்களையும்,
பொக்கிஷங்களையும், அடிமைகளையும்
தன்னுடன் சேர்த்துப் புதைக்கச் சொன்னான் அந்த மன்னன்.
பூவுலக வாழ்வைச்
சுவர்க்கத்திலும் தொடரவேண்டுமென்பது அவன் ஆசை.
ஆசை நிறைவேற்றப்பட்டது.
பிறகு அவனுடைய வாரிசுகளும்
அவனைப் போலவே ஆசைப்பட ஆரம்பித்தார்கள்.
அவர்களுடைய ஆசைகளும் நிறைவேற்றி வைக்கப்பட்டன.
இது பொய்யல்ல, புனை கதையல்ல – வரலாறு;
சாட்சி – எகிப்திய பிரமிடுகள்.

ராஜீவின் இறுதி ஆசையைப் பற்றி நமக்குத் தெரியாது.
ஒருவேளை
பரோவாவைப் போல ராஜீவும் ஆசைப்பட்டிருந்தால்,
நாமே அதை முன்னின்று நிறைவேற்றியிருக்கலாம்.
சிதைந்து, அழுகி நாட்டின் அரசியல் பண்பாட்டு அரங்கில்
நாற்றத்தையும், நோயையும் பரப்பியபடி
இறக்கவிருக்கும் காங்கிரசு என்னும்
அருவெறுக்கத்தக்க மிருகத்தை
அவ்வாறு அடக்கம் செய்ய வாய்ப்பில்லாமல் போய்விட்டது.

ஒரு வகையில் பரோவா நல்லவன்.
தனது அதிகாரக் குடையின் நிழலில் ஆட்டம் போட்டவர்கள்
தன்னுடன் சேர்ந்து அடங்குவதே நியாயம்
என்று கருதியிருக்கிறான் போலும்!
தன்னுடன் குடிமக்களையும் சேர்த்துப் புதைக்குமாறு
அவன் உயில் எழுதவில்லை;
ஊரைக் கொளுத்திவிடுமாறு
உத்தரவிட்டதாகத் தகவல் இல்லை.

ராஜீவின் இறுதி ஆசையைப் பற்றி நமக்குத் தெரியாது.
ஆனால், பீரங்கி வண்டியில் ராஜீவின் உடல் ஏறுமுன்னே
நாடெங்கும் பல அப்பாவிகளின் பிணங்கள்
பச்சை மட்டையில் ஏறியது தெரியும்.
ராஜீவின் சிதைக்கு ராகுல் தீ மூட்டும் முன்னே
‘தொண்டர்கள்’ ஊருக்குத் தீ மூட்டியது தெரியும்.
மறைந்த தலைவனுக்கு மரியாதை செய்யுமுகந்தான்
ஊரைச் சூறையாடியது தெரியும்.

இருப்பினும் பேசக்கூடாது.

மரித்தவர்களைக் குறை கூறுதல் மனிதப் பண்பல்ல;
கருணாநிதியைக் கேளுங்கள் விளக்கம் சொல்வார்.
இருபத்தொன்றாம் தேதி இரவு 10.19 வரை
“ஆட்சியைக் கவிழ்த்த சூழ்ச்சிக்காரன்,
கோடிக்கணக்கில் லஞ்சம் வாங்கிய கொள்ளைக்காரன்,
அக்கிரகாரத்தின் ஆட்சிக்கு அடிகோலும்
அவாளின் ஆள்”
ஆனால் 10.20-க்குப் பின் அமரர்,
அமரரைப் பழித்தல் தமிழ்ப் பண்பல்ல.
பாவத்தின் சம்பளம் மரணம்.
பாவமேதும் செய்யாதிருந்தும்
‘சம்பளம்’ பெற்றவர்கள் பற்றி….?

பேசக்கூடாது. இது கண்ணீர் சிந்தும் நேரம்.
உங்களுக்கு கருத்து வேறுபாடுகள் இருக்கலாம்.
ஆனால், கண்ணீர் சிந்தும் விஷயத்தில்
கருத்து வேறுபாடுகளை அனுமதிக்க இயலாது.
கண்ணீர் சிந்துங்கள். இல்லையேல்
கண்ணீர் சிந்த நேரிடும்.

சிரிக்காவிட்டால், சிறைச்சாலை;
கைதட்டாவிட்டால் கசையடி – இட்லரின்
ஆட்சியில் இப்படி நடந்ததாகக்
கேள்விப்பட்டிருக்கிறோம்.
அது பாசிசம்.

பேசாதே என்றால் பொறுத்துக் கொள்ளலாம்!
சிரிக்காதே என்றால் சகித்துக் கொள்ளலாம்,
அழாதே என்றால் அடக்கிக் கொள்ளலாம்.
ஆனால்
அழு‘ என்று ஆணை பிறப்பித்தால் அழ முடியுமா?
அச்சத்தில் பிரிவது சிறுநீர். கண்ணீரல்ல.
அடிமைச் சாம்ராச்சியத்தின் அதிபதி
பரோவா கூடத் தன் அடிமைகளுக்கு
இப்படியொரு ஆணை பிறப்பித்ததில்லையே!

ஆத்திரத்தையும் அழுகையையும் மட்டுமே
தன் மக்களுக்குப் பரிசாகத் தந்த
ஆட்சியாளனின் மறைவுக்கு
ஏன் கண்ணீர் சிந்த வேண்டும்?
அரசியல் சட்டக் காகிதங்களில் மட்டுமே இருந்த
உயிர் வாழும் உரிமையும்
தன் குடிகளுக்குத் தேவையில்லை என்று
கிழித்தெறிந்த கொடுங்கோலனின்
உயிர் பிரிந்ததற்காக
எதற்குக் கண்ணீர் சிந்த வேண்டும்?
இப்படியெல்லாம் கேட்கத்
தெரியாமலிருக்கலாம் மக்களுக்கு.
இருப்பினும் அவர்கள் கண்ணீர் சிந்தவில்லை.

புகழ் பெற்ற நான்கு உபாயங்களைத்
தலைகீழாகவே பயன்படுத்திப் பழகிய
எதிரிகள் – காங்கிரசுக்காரர்கள்
நான்காவது ஆயுதம் – தண்டம் –
தோற்றவுடனே மூன்றாவது ஆயுதத்தை
பேதம் – ஏவினார்கள். வீதிகள் தோறும்
சுடுகாடுகள். பயனில்லை. இரண்டாவது
ஆயுதம் – தானம் – பிரயோகிக்கப்பட்டது.
கூலிக்கு மாரடிக்கும் கூட்டம்
ஒலிபெருக்கிகளில் ஒப்பாரி வைத்தது.
மக்கள் கண்ணீர் சிந்தக் காணோம்.
முதல் ஆயுதம்
வன்மத்துடன் களத்தில் இறங்கியது.

ஒவ்வொரு வீட்டுக்குள்ளும்
வண்ணச் சுடுகாடு,
கறுப்பு வெள்ளைச் சுடுகாடு;
வானொலியில் முகாரி;
பத்திரிக்கைகளில் இரங்கற்பா…
“பார்… பார்… சிரித்த முகத்துடன்
எங்கள் தலைவனைப் பார்!
சூது வாது தெரியாமல்
மாலைக்குத் தலை நீட்டிய மன்னவனைப் பார்!
மக்களைத் தழுவ விரும்பியவன்
மரணத்தைத் தழுவிய கொடுமையைப் பார்!
அன்பு மனைவியும் அருமைச் செல்வங்களும்
அநாதையாக நிற்பதைப் பார்!
அமெரிக்க அதிபர் அழுகிறார்; ரசிய அதிபர் அழுகிறார்;
உலகமே அழுகிறது.
நீ மட்டும் ஏன் அழ மறுக்கிறாய்?
அழு… அழு…!”

 

ழுதார்கள்; அழுதீர்கள். அழுது
முடித்துவிட்டு அடுத்த வேலையைப்
பார்க்கலாம் என்று நகர்வதற்கு
இது ‘பாசமலர்’ அல்ல;
நீங்கள் அழுத பின்னால் அடுத்த வேலையை
அவர்கள் தொடங்குவார்கள்.
அவர்கள் கண்ணீரைக் கனியவைத்து
வாக்குகளாக்கும் ரசவாதிகள்.
உங்கள் கண்ணீர்த் துளிகளை மூட்டம்
போட்டிருக்கிறார்கள்.
காலம் கடந்துவிடவில்லை. கொஞ்சம்
சிந்தித்துப் பாருங்கள்.
இறந்தவரெல்லாம் நல்லவரென்றால்
இட்லரும் நல்லவனே.
கொலையுண்டவர்கள் எல்லாம் கோமான்களென்றால்
கொடுங்கோலன் என்ற சொல்லுக்கு
அகராதியில் இடமில்லை.

 

நினைவிருக்கிறதா? இப்படித்தான்,
இப்படியேதான் நடந்தது
ஏழு ஆண்டுகளுக்கு முன்பும்.
கையில் கொள்ளியுடன்
தாயின் பிணத்தருகே தலைமகன்
உங்கள் வாக்குகளைக் கொள்ளையிட்டான்.
அந்த ஐந்தாண்டு அரசாட்சியைக் கொஞ்சம்
அசை போட்டுப் பாருங்கள்!

இந்த நேரு குலக்கொழுந்து, அபூர்வ சிந்தாமணி
அரியணை ஏறும்போதே
ஐயாயிரம் தலைகளைக் காவு வாங்கியதே
மறந்து விட்டீர்களா?
குப்பை கூளங்களைப் போல
அப்பாவிச் சீக்கியர்களின் உடல்கள்
குவித்து வைத்துக் கொளுத்தப்பட்டனவே!
அவர்களது சாம்பலுக்கு
அஸ்திக்கலசமும் திரிவேணி சங்கமமும் வேண்டாம்;
ஆறுதலாக ஒரு வார்த்தை…
சொன்னதா அந்த அரசு?

ஐயாயிரம் கொலைகள் – ஐம்பதாயிரம் அகதிகள்.
அகதிகள் பெரும்பான்மையோர்
கைம்பெண்கள், குழந்தைகள்.
பிழைப்பதற்காகச் சொந்த மண்ணை விட்டு வந்து
வியர்வையும், ரத்தமும் சிந்தி
ஆசையாகக் கட்டி வளர்த்த வாழ்க்கையை
ஒரே நாளில்
குதறி எறிந்தன காங்கிரசு மிருகங்கள்.
நீதி கிடைக்கும் நிவாரணம் கிடைக்கும் என
ஏழு ஆண்டுகள் காத்திருந்து
குழந்தைகளையும், துயரத்தையும் மட்டுமே சுமந்து
சொந்த மண்ணுக்குத் திரும்பினார்கள்
அந்த இளம் விதவைகள்.
இன்று சோனியாவுக்காகக் கண்ணீர் சிந்துபவர்கள்
இவர்களுக்கு என்ன பதில் சொல்கிறார்கள்?
கேளுங்கள்.

இந்திராவின் கொலையாளியைக் கண்டுபிடித்துத்
தூக்கிலேற்றியாகி விட்டது.
ஐயாயிரம் கொலைகளுக்கு
எத்தனை பேர் தண்டிக்கப்பட்டனர்?
தண்டிப்பது கிடக்கட்டும்; கொலையாளிகளைக்
கண்டுபிடிக்க கூட முடியாது என்று
கைவிரித்தார் ராஜீவ்.
நாடே காறி உமிழ்ந்த பின்
ஒரு கமிஷன் அமைக்கப்பட்டது.
“கண்டு பிடிக்க முடியவில்லை” –
கமிஷனும் அதையே சொல்லியது.

தூக்கிலேற்றப்பட வேண்டிய பிரதான குற்றவாளிகள்
ராஜீவின் தளகர்த்தர்கள் –
எச். கே. எல். பகத், ஜகதீஷ் டைட்லர்.
இன்று சோனியாவைப் பிரதமராக்க விழையும்
ராஜீவின் நண்பர்கள்.
அடுக்கடுக்காய் ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்பட்டன;
விளைவு, குற்றம் சாட்டியவர்களுக்குக்
கொலை மிரட்டல் வந்தது.
கமிஷன் கண்டுபிடித்த ஒன்றிரண்டு
கொலைகாரர்களின் பெயர்களையும்
அரசாங்க ரகசியமாக்கி
ஆணை பிறப்பித்தார் ராஜீவ்.

“இந்திரா நினைவு நாளோ,
குடியரசு தினமோ, சுதந்திர தினமோ எது வந்தாலும்
எங்களுக்கு நடுக்கமாக இருக்கிறது.
மீண்டும் தாக்கப்படுவோமோ என்று அச்சமாக இருக்கிறது.
அவர்கள் குற்றவாளிகளைத் தண்டிக்க வேண்டாம்;
“வருந்துகிறோம் என்று ஒரு வார்த்தைகூட
இன்று வரை அவர்கள்
வாயிலிருந்து வரவில்லையே”
அங்கலாய்த்தாள் ஒரு இளம்விதவை.

குடிமக்கள் நலம் பேணும் கொற்றவன் –
ராஜீவ் சொன்னார்.
“மரம் விழுந்தால் மண் அதிரத்தான் செய்யும்”.
சொன்ன மரமும் இப்போது விழுந்துவிட்டது.
டில்லி மாநகரமே கண்ணீர் விட்டுக்
கதறியது என்கிறார்களே,
அந்தச் சீக்கியப் பெண்களின்
கண்கள் கலங்கினவா என்று
விசாரித்துப் பாருங்களேன்.

 

போபால். இந்திய வரலாற்றின் மறைக்க முடியாத
தேசிய அவமானம்.
ராஜீவ் பதவிக்கு வந்தவுடனே
நடைபெற்ற பயங்கரப் படுகொலை.
ஒரே இரவில் பத்தாயிரம் பேரைப் பிணங்களாகவும்,
ஒரு லட்சத்திற்கு மேற்பட்ட உழைப்பாளி மக்களை
நடைப்பிணங்களாகவும் ஆக்கிய குண்டு வெடிப்பு;
அமெரிக்க இராணுவத்தின் விஷவாயுக் குண்டுக்கு
இந்தியாவில் நடத்திப் பார்த்த சோதனை.

இல்லை. உங்கள் நாட்டுத்
தொழிலாளிகளின் அலட்சியத்தால்
நேர்ந்த விபத்து இது என்றது
யூனியன் கார்பைடு.

ஆமோதித்தது ராஜீவ் அரசு.
“விஷ வாயுவைத் தயாரிக்க
உனக்கு உரிமம் கொடுத்தது யார்?” என்று
சீறினார்கள் இந்திய விஞ்ஞானிகள்.
காங்கிரசை ஓரக்கண்ணால் பார்த்துச்
சிரித்தது கார்பைடு.
ஆத்திரம் கொண்டு அமெரிக்க முதலாளிகளைத்
தாக்கத் துணிந்தது மக்கள் கூட்டம்.
முதலாளிகளுக்கு அரணாய் நின்றது
ராஜீவ் அரசு.

நீதி எங்கே, நிவாரணம் எங்கே என
அமெரிக்க நீதிமன்றங்களில் வழக்கு
தொடர்ந்தனர் மக்கள். நீதி கேட்பதும்,
நிவாரணம் பெறுவதும் “நீங்கள் தேர்ந்தெடுத்த”
எங்கள் அரசின் உரிமை என்று
அதையும் பிடுங்கிக் கொண்டது ராஜீவ் அரசு.
அந்தச் சுடுகாட்டின் நடுவில்
ஒரு சொர்க்கபுரியை நிறுவி
அதில் கவியரங்கம் நடத்தியது;
களியாட்டம் போட்டது.

ஆறு ஆண்டுகள் கடந்து விட்டன.
இறந்தவர்கள் மறக்கப்பட்டார்கள்.
இருப்பவர்களோ குருடரானார்கள், முடமானார்கள்.
பிறப்பவையும் சப்பாணிகள், சதைப் பிண்டங்கள்.
போபால் அழுது கொண்டிருக்கிறது.
அதன் கண்ணீருக்கு ராஜீவின்
மரணம்தான் காரணமோ?
கேட்டுத்தான் பாருங்கள்.

பதில் சாட்டையாய் உரிக்கும் – அது ராஜீவின்
மரணம் தோற்றுவித்த கண்ணீரல்ல,
துரோகம் தோற்றுவித்த கண்ணீர்.

 

னால், ஸ்ரீபெரும்புதூரில் குண்டு வெடித்தவுடனே
வெடிக்கிறார்கள் காங்கிரசுக்காரர்கள்.
“நன்றி கொன்றவர்கள், எங்கள் தலைவனைக்
கொன்று விட்டார்கள்! நயவஞ்சகர்கள்,
முதுகில் குத்திவிட்டார்கள்!
ஒவ்வொருவரையும் சோதனை போடுங்கள்!
எல்லோரையும் விரட்டுங்கள்!
ஈழத்தமிழன் எவனையும் நம்ப முடியாது!”
ஈழத் தமிழினத்திற்குத் துரோகத் தமிழினம்
என்று பெயர் சூட்டுகிறார்கள்.

யார் துரோகி? எவன் நயவஞ்சகன்?
விடுதலைப் போராளிகளைக்
கூலிப் பட்டாளமாக உருமாற்றியது யார்?
ஆதரவுக் கரம் என்று நம்பியவர்கள்
மத்தியிலே ஐந்தாம் படையை
உருவாக்கியது எந்தக் கை?
முகத்தில் சிரிப்பும், கைகளில் இனிப்புமாக
வரவேற்ற ஈழத்தைப் பெண்டாள முனைந்தது
யாருடைய ஆட்சி?
புறாக்களைக் காட்டி ஏமாற்றிக்
கழுகுகளைப் பறக்கவிட்டு அமைதியை
நிலைநாட்டியது யாருடைய படை?
“ஆத்தாள் சிக்கிம் வென்றாள், மகன்
ஈழம் கொண்டான்” என்று
கல்வெட்டில் பொறித்துக் கொள்வதற்காக
பாக். ஜலசந்தியில் குறுக்கு மறுக்காக
அடித்து விளையாட
ஈழத்தமிழன் என்ன பூப்பந்தா?

எது துரோகம்? யார் துரோகிகள்? ஆனந்த
பவனத்திலும், சத்தியமூர்த்தி பவனத்திலும்
பொருள் கேட்காதீர்கள்.
யாழ்ப்பாண மக்களிடம் கேளுங்கள்.
துரோகம் என்ற
சொல்லின் பொருள் ராஜீவ் என்பார்கள்;
வங்காள தேசத்தில் கேளுங்கள் – இந்திரா
என்று விளக்குவார்கள்;
பஞ்சாபில் விசாரித்துப் பாருங்கள் – மோகன்தாஸ்
கரம்சந்த் என்று வரலாறு சொல்வார்கள்
பகத்சிங்கின் வாரிசுகள்.
இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, கரம்சந்த் காந்தி –
ஒரே சொல்லுக்கு
ஒவ்வொரு இடத்திலும் ஒரு பொருள்!
ஆனால், வேற்றுமையிலும் ஒரு ஒற்றுமை –
துரோகம் என்றால் காந்தி!
சோரத்தில் பிறந்து
துரோகத்தில் வளர்ந்த தங்கள் கட்சித்
தலைவனுக்காக உங்களைக்
கண்ணீர் சிந்தக் கோருகிறது.
சிந்தியுங்கள்!

 

தள்ளாத வயதில் ‘தலாக்’ என்று
கணவனால் தள்ளிவைக்கப்பட்ட ஷாபானு
என்ற முசுலீம் பெண்ணைக் கேளுங்கள்.
தான் போராடிப் பெற்ற நீதியை ஒரே நொடியில்
ராஜீவ் கொன்று புதைத்த கதையைச் சொல்வாள்.
திமிர் பிடித்த கணவனுடனும்,
வெறி பிடித்த முல்லாக்களுடனும்
சேர்ந்து கொண்டு ராஜீவ் தனக்கிழைத்த
கொடுமையைச் சொல்லி அழுவாள்.
ஊன்றிக் கவனியுங்கள்.
அவள் மட்டுமல்ல; பர்தாவுக்குள்ளே
முகம் புதைத்த இசுலாமியப் பெண்கள் பலர் விசும்புவதும்
கேட்கும்.

 

அயோத்தி நகர மக்களைக் கேளுங்கள்.
அவர்கள் சீந்தாமல் ஒதுக்கி வைத்த
பாபர் மசூதிப் பிரச்சினையை
ராஜீவ் தூண்டிவிட்ட கொடுமையைச்
சொல்லி அழுவார்கள்.
அருண் நேருவிடம் தனியே
விசாரித்துப் பாருங்கள். கோர்ட்டில்
உறங்கிக் கிடந்த வழக்கைத் தூசு தட்டி எடுத்து
மசூதியின் பூட்டைத் திறந்துவிட்டு
‘இந்து’ ஓட்டைப் பிடிக்கத்
தானும் ராஜீவும் போட்ட திட்டத்தைக்
குதூகலமாய் வர்ணிப்பார்.

ராஜீவின் உடலடக்கத்திற்கு வந்திருந்த
அமிதாப்பையும் வராத இந்துஜாவையும்
கேட்டுப் பாருங்கள்.
பீரங்கிப் பேரக் கமிஷனை ஒளிக்க
‘உடுக்கை இழந்தவன் கை போல’ வந்து உதவிய
திருவாளர் பரிசுத்தத்தை நாவாரப் புகழ்வார்கள்.

வச குண்டலம் போல ராஜீவை
விட்டுப் பிரியாதிருந்த அவரது
மெய்க்காவலர்களைக் கேளுங்கள்;
தண்டி யாத்திரை என்ற பெயரில்
ராஜீவ் நடத்திய கோமாளிக் கூத்தைச்
சொல்லிச் சிரிப்பார்கள்;
துப்பாக்கியைச் சட்டைக்குள் ஒளித்து
கதர்க்குல்லாய் மாட்டிக் கொண்டு
காங்கிரசுத் தியாகிகளாகத் தாங்கள் அவதாரம்
எடுத்ததைச் சொல்வார்கள்; ஒருமைப்பாட்டு ஓட்டத்தில்
தாங்களும் விளையாட்டு வீரர்களாக உருமாறி
ஓடிய கதையைச் சொல்வார்கள்.

ராஜீவின் பாதம் பட்ட இந்திய நகரங்களின்
மக்களைக் கேளுங்கள்.
அவரது பாதுகாப்பை உத்தேசித்துச்
சிறையிலடைக்கப்பட்ட தொழிலாளிகளை,
நடைபாதை வியாபாரிகளை, இளைஞர்களை
ஆயிரக்கணக்கில் அடையாளம் காட்டுவார்கள். அவர்களில்
எத்தனைப் பேர் ராஜீவின் மரணத்திற்காகக்
கண் கலங்கினார்கள் என்று கேட்டுத்
தெரிந்து கொள்ளுங்கள்.

மணி சங்கர் ஐயர், சுமன் துபே, ராஜீவ் சேத்தி,
சாம் பித்ரோடா, சதீஷ் சர்மா, எம். ஜே. அக்பர்… ராஜீவின்
நண்பர்களாகவும், ஆலோசகர்களாகவும்
இருந்த இந்த மேட்டுக்குடிக்
குலக் கொழுந்துகளைக் கேளுங்கள்.
கலாச்சாரத் திருவிழா, கம்ப்யூட்டர் மயமாக்கல்,
இருபத்தொன்றாம் நூற்றாண்டை விரட்டிப் பிடித்தல் –
எத்தனை கனவுகள்!
இதமான மாலை நேரங்களிலும், கிளர்ச்சியூட்டும்
பின்னிரவுகளிலும் நட்சத்திர விடுதிகளில் அமர்ந்து
இந்தியாவின் எதிர்காலத்தைத் திட்டமிட்டதை
அவர்கள் நினைவு கூறுவார்கள்.
அவர்களது கண்கள் பனித்திருக்கும் –
பிரிவாற்றாமையினால் அல்ல;
தங்களின் எதிர்காலம் இருண்டு விடுமோ
என்ற அச்சத்தினால்.

எதை நினைவுபடுத்துவது? எதை விடுவது?
ஐந்தாண்டு ஆட்சிக் காலத்தில்
இத்தனை அநீதிகளை
இழைக்க முடியுமா?
அதிர்ச்சியாயிருக்கிறது.
கொடுங்கோன்மைக்கு இரையானவர்கள்
கோடிக்கணக்கானோர்,
வகைக்கு ரெண்டு எழுதினால் கூட
வளர்ந்து கொண்டே போகிறது.

இன்னும் சொற்களில் அடக்க முடியாத
சோகங்களைக் காண வேண்டுமெனில்
காஷ்மீருக்கும் பஞ்சாபுக்கும்
அஸ்ஸாமிற்கும் சென்று பாருங்கள்.
இறந்தவர்கள் கதையை நான் கூறலாம் –
இன்னும் உயிரோடிருப்பவர்களை
நீங்களே விசாரித்தறியலாம்.
கருப்பு வெள்ளையில்
அச்சாகிக் கிடக்கும் வரலாற்றைப்
புரட்டிப் பார்க்கலாம்.
எதுவும் இயலாவிட்டால் உங்கள்
வாழ்க்கையையே உரைத்துப் பார்க்கலாம்.

அதன் பிறகு முடிவு செய்யலாம் – ராஜீவின் மரணத்திற்குக்
கண்கலங்குவது சரியா என்று!

புதிய கலாச்சாரம் – ஜூன் 1991

புதிய கலாசாரம் ,வினவு வாசித்து எமது கண் முன்னே நாங்கள் கண்டவற்றை புனை கதை ஆக்கமுடியாது

நல்லவேளை ஈழத்தமிழ் இனம் இவர்கள் கையில் இருந்தது தப்பிவிட்டது .

இனி புல்லே அவர்கள் பெயரில் முளைக்க விடமாட்டோம் . 

  • கருத்துக்கள உறவுகள்

கிட்டுவின் குரலைஒலிபெருக்கியில்  கேட்டவுடன் 

இயக்கத்தை கலைக்கிறோம் 
உயிர்பிச்சை தாருங்கள் என்று போய் காலில் வீழ்ந்த 

வரலாற்று வீர்கள் 
சவுண்டு விட்டால் 
மக்கள் நாங்கள் 
நம்பாமல் இருப்போமா என்ன ????

உயிரோட இருக்கிறதே கிட்டு போட்ட பிச்சை 

அப்பட்டா எமக்கே நடுங்குது .......

30 வருடமா சிங்கள ஆமியின் கக்குசுக்குள் 
புல்லு புடுங்கியவர்கள் .......

பொட்டரை சங்கிலி தனிய போய் சாக்கில் கட்டி கொண்டுவதுவிட்டார் ,

எம் ஜி ஆரிடம் போய் அழுது தான் ஆளை விட்டது .

முடிக்கும் எண்ணம் இருந்தால் தமிழ் நாட்டிலேயே எல்லோரையும்,போட்டு தள்ளியிருக்கலாம் அவர்களும் போராட வந்தவர்கள் என்ற எண்ணம் தான் எல்லாவற்றையும் கெடுத்தது 

அந்த துரோகம் தான் அந்திரடிக்கும் சாம்பல் இல்லாமல் எதிரியின் காலில் போய் விழுந்தார்கள் 

வாழ்க்கை முழுக்க நடுங்கி பங்கருக்குள் இருந்தவர் ஒரே ஆள் தான் .

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் நாட்டில் வெள்ளை சேட்டுடன் நின்ற 
பொட்டரை பிடிப்பது 
நோட்டிஸ் ஓட்ட போன போராளிகளை சுடுவது 
தாள்ப்பது இதெல்லம் பெருந்தன்மையோடு செய்தீர்கள் ஆக்கும்.

இந்த நக்குண்ட வேலை செய்ய அவர்கள் எலிகள் இல்லை 
புலிகள்.

ஒலிபெருக்கியில் அறிவித்து விட்டு வருவதுதான் புலி!
முடிந்தால் அப்ப மோதி பார்த்திருக்கலாமே ???

சங்கிலி கிங்கிலி 
மற்ற இந்திய சிங்கள ஆமிக்கு கழுவின வீர சூரர்கள் 
ஒரு வெடி வைத்து பார்த்திருக்கலாம்.

செய்யிறது நக்கிற வேலை 
இதிலை ....
கட்டபொம்பன் ரேஞ்சில வார்த்தைகள் வேறு.

தங்களுக்கு வெறி என்றால் ...
அடுத்தவனுக்கும் வெறி என்று எண்ணுவார்களோ என்னமோ?

  • கருத்துக்கள உறவுகள்

உலகமே இதை இந்தியப் படைகள் ஈழத்தில் செய்த அநியாயங்களுக்கான ஒரு அரசியல் பழிவாங்கலாகத் தான் பார்க்குது. (ஆனால் உண்மை வேறாகக் கூட இருக்கலாம்.).. ஆனால் எங்களில் சிலது.. இன்னும் பங்கர் காலத்தில நிற்குது. 

ஒரு ஆள் பங்கருக்க இருக்க.. மற்றவை எல்லாம்.. ஓடிப்போய் சிங்களவனோடு ஒட்டி இருந்தவை. இதுங்களின்ட சிந்தனையும்.. காமடித்தான் போல. நல்ல காலம் சனம் உதுகளை நம்பி.. நாட்டைக் கையாளிக்காமல் விட்டது. இப்ப இந்தளவுக்கும் நாடு இருந்திருக்காது. எல்லாம் சிங்கள மயமா இருந்திருக்கும்.. புலிகேசி வடிவேலு ஆட்சி போல. tw_blush:

Edited by nedukkalapoovan

என்னத்தை சொன்னாலும் வெள்ளை கொடியை அடிக்க முடியாது .

எதிரியிடம் சரணடைய சென்ற தமிழர் வரலாற்று கேவலம்  

பலவந்தமாக பிடித்துகொண்டு போய் போராட விட்டவர்களை சயனைட் அடிக்க சொல்லிவிட்டு தமக்கு என்று வரும்போது உலகம் முழுக்க கெஞ்சி கூத்தாடி தாங்கள் உயிர் தப்ப பட்ட பாடு இருக்கே இது தான் இவர்களின் வீரம் .

  • கருத்துக்கள உறவுகள்

என்ன சொன்னாலும்.. தமிழீழத்தை.. கைவிட்டிட்டு.. தாங்கள் பொண்டில் பிள்ளைகளோடு உலகமெல்லாம் ஓடி ஒளிஞ்சு கொண்டு சில அப்பாவிகளைக் கொன்று.... மாலைதீவில கூலிக்கு மாரடிக்கப் போய்..  ஹிந்தியாவின் கையாலையே அடிவாங்கிச் செத்தது போல வராது. அந்தப் பழக்கம் இன்று வரை தொடருது. கூலிக்கு எதிரிகளுக்கு மாரடித்தல். tw_blush:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

ஐயோ ஐயோ .....
வல்லரசு கில்லரசு ....
என்று நின்று ஆடினவர்களையே 
பதம் பார்த்து 
அனுப்ப வேண்டிய இடங்களுக்கு அனுப்பியவன் பொட்டு !


இதுக்குள்ளே ....
இந்த கொசு சத்தம் வேற .

கேட்கத்தான் யாரும் இல்லை.

தமிழ் மக்களே !
இந்த கொசு சத்தத்தையும் ஒருக்கா கேளுங்கள் !

 

பார்த்தா பாவமா இருக்கு!

சாதாரண தமிழ் சிறுவர்களே 
கடைசி காலத்தில் விளையாடியது வெடிக்காத குண்டுகளுடன்.
யாரும் இந்த கொசு சத்தத்தை கேடபர்களோ தெரியவில்லை.

பார்த்தா பாவமா இருக்கு!

  • கருத்துக்கள உறவுகள்

ஊர்மிளா புகழ்.. ஒருத்தர்.. கொழும்பில் அனாதைப் பிணாமகக் கிடந்ததை விட. (கழகம் நடத்தினவை வவுனியாவில் கலகம் நடத்துவதில் பிசி போல அப்ப)...  எதிரியே கண்டு நடுங்கிய.. மதித்த.. வீரனாக வாழ்ந்தவர்.. எவ்வளவோ மேல். tw_blush:

Edited by nedukkalapoovan

13241331_1187021954663557_55074565846685

13254293_1187023511330068_19516751488817

இது நேற்று வவுனியாவில் 

005

008

010

012

விதியானது வலியது .

  • கருத்துக்கள உறவுகள்

ஒட்டுக்குழு பயங்கரவாதிகள் பெயரையும் மாற்றி விட்டார்கள். (இதே பாணியில் தான் புலிக்கொடியையும் மாத்திடுவம் என்று நினைக்கிறார்கள் போல. பாவங்கள்.. நீங்கள் மாத்தினால் என்னா மரணித்தால் என்ன மக்கள் ஏன் என்றும் கேட்க மாட்டர்கள்). (இவ்வளத்துக்கும் சோறு போட போல் தான் கிடைச்சார் போல.) ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (பிராக்கட்டுக்குள் ஒட்டுக்குழு புளொட்.. தமிழீழ மக்கள் விடுதலை கழுத்தறுப்புக் கழகம் - வவுனியா) என்பதை மறைக்க இவ்வளவு கஸ்டப் பட வேண்டி இருக்குது. 

அங்கால வவுனியாவில்.. குரங்கும் மாநாடு போட்டிருக்கும் அந்தப் படங்களையும் இணைக்கலாம். tw_blush:

நாங்க வவுனியாவில தான் இன்னும் நிற்கிறம்.. வகுத்துப் பிழைப்புக்கு காட்டிக்கொடுப்பு அங்க தான். அரசியலுக்கு கூட்டமைப்புக்குப் பின்னாடி.. யாழ்ப்பாணத்தில நிற்பம்.:rolleyes:tw_blush:

Edited by nedukkalapoovan

 

நானும் உந்த மகாநாட்டில் கலந்து கொள்ளவேண்டியவன் தவிர்க்க முடியாத காரணங்களால் போக முடியாமல் போய்விட்டது .

வவுனியா இன்று வரை பெரும்பாலும்  தமிழர் பிரதேசமாக இருப்பதற்கு புளோட்டே காரணம் .

அன்று காந்தியம் தொடங்கி வைத்தது இன்றுவரை தொடருது .

 

வல்லரசுகளை பொட்டர் பதம் பாத்திருக்கலாம் ஆனால் சங்கிலியிடம் பாச்சா பலிக்கவில்லை .

  • கருத்துக்கள உறவுகள்

ஆமாம் வவுனியாவில் எவ்வளவு சிங்களக் குடியேற்றம் இருக்குது என்று தெரியாதவைக்கு கதை அளக்கலாம். வவுனியாவில் எவ்வளவு முஸ்லீம்கள் குடியேறியுள்ளார்கள் என்பதை அறியாதவர்களுக்கு கதை அளக்கலாம்.

வவுனியாவில் நடந்த அத்தனை சித்திரவதைகளுக்கும் பொறுப்பான புளொட்டோடு (அம்னாஸ்ரி வருடாந்த அறிக்கைகள் ஒவ்வொன்றிலும் இவர்களின் கொடூரங்கள் பதிவாகியுள்ளன. அதுவும் சொந்த இனத்திற்கு எதிராக குறிப்பாக பெண்களுக்கு எதிராக செய்த கொடுமைகள்.. அதுவும் எதிரிக்காக இவர்கள் செய்த கூலிச் செயற்பாடுகள்.. ) போல் போய் ஒட்டிக் கொண்டு போஸ் கொடுப்பது.. நல்ல அறிகுறியல்ல. 

அன்று எனக்கும் புளொட்டுக்கும் தொடர்பில்லை. இன்று.. நானும் புளொட் தான். முதலில் இந்த அம்னீசியாக்களுக்கு முடிவே இல்லைப் போல. tw_blush:

விதியானது வலியதல்ல... சோற்றுப் பாசலுக்கு வலியதை விதியாக்கிய..  இனத்துரோகிகள்.. கயவர்கள்.. தான் இவர்கள்.  நாலு பேரைக் கூட்டி வைச்சுக் கூட்டம் போட கருங்குரங்காலும் முடியும். ஆனால்.. இழந்த உரிமைகளை உயிர்களை.. சோற்றுப் பாசல்களுக்கு கூட்டம் போடுபவர்களால்.. எப்போதும் திரும்பப் பெறவே முடியாது. இந்தத் துரோகிகள் தாமே அழிந்து ஒளிவர். எத்தனை காலம் தான் கூட்டமைப்புக்குள் பதுங்கி அரசியல் செய்வார்கள் என்றும்  காலம் தீர்மானிக்கும். :rolleyes:

Edited by nedukkalapoovan

புளொட் செய்த பிழைகளை  நாங்களே வெளிகொண்டதும் எழுதியதும் இருக்கு ,அவற்றை ஒப்புகொண்டதும் உண்மை புலிகளை மாதிரி நியாயபடுத்தவில்லை .

தொடர்பு இல்லாமல் தான் இருந்தேன். மட்டு எம்பி வியாளேந்திரன் வருககையும் அதன் பின்னர் வந்த ஒரு தோழார் சந்திப்பும் காலத்தின் தேவை கருதியும்  சேர்ந்து பயணிக்கும் முடிவை எடுக்கவைத்தது .

தனிப்பட அழைப்பே அனுப்பியிருந்தார்கள் .நாலு பேர்கள் கனடாவில் இருந்து மட்டும் சென்றிருகின்றார்கள் .எல்லோருமே தொடர்பு இல்லாமல் இருந்தவர்கள் தான் .

அரசியலை விட பாதிக்க பட்ட மக்களுக்கு உதவி என்று வரும்போது எனக்கு அது பிழையாக தெரியவில்லை .

 

விதியானது மிக வலியது இல்லாவிடில் முன்னாள் புலி போராளிகளுக்கும் அவர்களால் துரோகிகள் ஆக்கபட்டவர்களின் உதவி  தேவைப்படுகின்றது . 

பொட்டர் கிட்டரின் வீரப்பிரதாபங்கள் பாடியோ இல்லை சங்கிலியின் சாகசங்கள் பாடியோ எதுவும் ஆகப்போவதில்லை. பழைய வன்ம மனநிலையை புதிப்பிக்கவே அவை வழிவகுக்கும். இயக்கங்கள் தங்களுக்குள் மோதியதற்கான அடிப்படை மன நிலை என்னும் உயிர்ப்புடன் இருக்கின்றது. அதற்குச் சாட்சியாக பல கருத்துக்கள் இத் திரியில் பிரதிபலிக்கின்றது. எமக்குள் இருக்கும் இறுக்கமும் பிடிவாதமுமமே எமது அழிவுகளின் பிரதான காரணம். அழிவுகளில் இருந்து நாம் கற்கவேண்டியபாடம் ஒன்றுதான் அது எமது இறுக்கத்தை தளர்த்துவது எப்படி என்பதே.

புளட்டோ புலியோ ரெலோவே எந்த இயக்கமோ நாம் தமிழர் .. நாம் ஓர் இனம் .. இதை உணராத பயித்தியக்காரத்தனத்தால் அழிந்துவிட்டோம் இனி அப்படி நடக்கக் கூடாது என்பதையே எஞ்சியவர்கள் முடிவுசெய்யவேண்டும். நாம் திரும்ப எமக்குள் வெட்டுப்பட்ட காயங்களை நோண்டப்பார்கின்றோம்.. இரத்தம் தான் வரும் நகம் பட புண் நாறி சீழ்ப்பிடிக்கும்.. காயங்கள் பெரிதகி மண்டையைபோடுவோம். 

தேரை இழுத்துக்கொண்டுபோய் சாக்கடை வாய்காலில் விட்டாச்சு. அதை வெளிய எடுக்கவேணும் தவிர சாக்கடைக்குள் நின்று கும்மியடிச்சு என்னாகப்போகின்றது. நடந்த தவறுகளை மீள் பரிசோதனை செய்வது திறனாய்வு செய்வது திருத்துவது புடுங்குவது எல்லாம் சல்லிக்சாசுக்குப் பிரயோசனம் கிடையாது.நடந்தது தவறு அவ்வளவுதான். முற்றுப்புள்ளி வைத்துவிட்டு எஞ்சியவர்கள் முன்னே செல்ல வேண்டியதுதான். புளட்டாவும் புலியாவும் என்னுமிருக்காமல் தமிழராய் இருக்கவேண்டியதுதான். 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 22/5/2016 at 2:45 AM, arjun said:

புதிய கலாசாரம் ,வினவு வாசித்து எமது கண் முன்னே நாங்கள் கண்டவற்றை புனை கதை ஆக்கமுடியாது

நல்லவேளை ஈழத்தமிழ் இனம் இவர்கள் கையில் இருந்தது தப்பிவிட்டது .

இனி புல்லே அவர்கள் பெயரில் முளைக்க விடமாட்டோம் . 

அண்ணா

இங்கே கருத்தாளர்களின் கருத்துக்களுக்கு சீண்டல் அல்லது மறு தாக்குதல் செய்வதற்காக

நீங்கள் இவ்வாறு எழுதுவது இது முதல் தடவையல்ல

ஆனால் 

நீங்களே இங்கே பலமுறை எழுதியவாறு பார்த்ததாலும்

புலிகளுக்கு முன்னால் மற்றைய இயங்கங்கள் வெறும் தூசு என்பதாகத்தான் இருந்தது.

எனவே  புல்லுக்கூட அவர்கள் பெயரில் வரமுடியாது செய்வதென்றால் அழிவுகள் சொல்லத்தேவையில்லை

எனவே அன்பான

தமிழர்களின் நலன்சார்ந்த வேண்டுகோளும் மன்றாட்டமும்

இப்படியான எண்ணத்துடன் தாயகத்தில் கால் வைக்காதீர்கள்.

43 minutes ago, சண்டமாருதன் said:

பொட்டர் கிட்டரின் வீரப்பிரதாபங்கள் பாடியோ இல்லை சங்கிலியின் சாகசங்கள் பாடியோ எதுவும் ஆகப்போவதில்லை. பழைய வன்ம மனநிலையை புதிப்பிக்கவே அவை வழிவகுக்கும். இயக்கங்கள் தங்களுக்குள் மோதியதற்கான அடிப்படை மன நிலை என்னும் உயிர்ப்புடன் இருக்கின்றது. அதற்குச் சாட்சியாக பல கருத்துக்கள் இத் திரியில் பிரதிபலிக்கின்றது. எமக்குள் இருக்கும் இறுக்கமும் பிடிவாதமுமமே எமது அழிவுகளின் பிரதான காரணம். அழிவுகளில் இருந்து நாம் கற்கவேண்டியபாடம் ஒன்றுதான் அது எமது இறுக்கத்தை தளர்த்துவது எப்படி என்பதே.

புளட்டோ புலியோ ரெலோவே எந்த இயக்கமோ நாம் தமிழர் .. நாம் ஓர் இனம் .. இதை உணராத பயித்தியக்காரத்தனத்தால் அழிந்துவிட்டோம் இனி அப்படி நடக்கக் கூடாது என்பதையே எஞ்சியவர்கள் முடிவுசெய்யவேண்டும். நாம் திரும்ப எமக்குள் வெட்டுப்பட்ட காயங்களை நோண்டப்பார்கின்றோம்.. இரத்தம் தான் வரும் நகம் பட புண் நாறி சீழ்ப்பிடிக்கும்.. காயங்கள் பெரிதகி மண்டையைபோடுவோம். 

தேரை இழுத்துக்கொண்டுபோய் சாக்கடை வாய்காலில் விட்டாச்சு. அதை வெளிய எடுக்கவேணும் தவிர சாக்கடைக்குள் நின்று கும்மியடிச்சு என்னாகப்போகின்றது. நடந்த தவறுகளை மீள் பரிசோதனை செய்வது திறனாய்வு செய்வது திருத்துவது புடுங்குவது எல்லாம் சல்லிக்சாசுக்குப் பிரயோசனம் கிடையாது.நடந்தது தவறு அவ்வளவுதான். முற்றுப்புள்ளி வைத்துவிட்டு எஞ்சியவர்கள் முன்னே செல்ல வேண்டியதுதான். புளட்டாவும் புலியாவும் என்னுமிருக்காமல் தமிழராய் இருக்கவேண்டியதுதான். 

 

உண்மைதான் .இது எனக்கு தெரியாமல் இல்லை ,

ஆனால் யாழில் இருக்கும் சில சருகுகளை கூட்டி குப்பையில் போடவேண்டிய தேவையும் இருக்கு .

உங்கள் கருத்துக்கு பச்சையை குற்றி விட்டு அடுத்து முழு மாறாக  கருத்து வைக்கும் பச்சோந்திகளை பார்த்தால் உண்மை புரியும் .

யுத்தம் முடிந்த பின்  ,மாற்று இயக்கங்களோ அல்லது அரசுடன் இருந்தவர்களோ பாதிக்கபட்ட மக்களளுக்கு எதையாவது செய்யவேண்டும் என்றே செயற்படுகின்றார்கள் .

புலிகளில் ஒரு சிலரை தவிர பெரும்பான்மையானோர் பெரும் பணத்தை வைத்திருப்பவர்கள் இன்றும் வெறும் குரோத மனபாங்கில் தான் செயற்படுகின்றார்கள் .இதற்குள் தங்களுக்குள் அடிபிடி வேறு .

அவர்கள் என்றுமே திருந்தப்போவதுமில்லை திருந்த இடமுமில்லை காரணம் முப்பது வருடங்களாக அவர்களை அப்படி விஷம் ஊட்டித்தான்  வளர்த்தார்கள் .

உதாரணத்திற்கு சுமந்திரன் ஆஸி சென்றார் .உங்களுக்கு அவரின் கருத்துக்கள் பிடிக்காவிட்டால் கூட்டத்திற்கு போகாமல் விடுங்கள் அதை விட்டு கூட்டத்தை குழப்பவுவது என்ன நியாயம் .

புலிகளில் முதல் பாடமே அடாத்துதான்  .முப்பது வருடங்களாக எத்தனை இடங்களில் எத்தனை தடவைகள் பார்த்துவிட்டோம் .அந்த அடாத்தை அவர்கள் பெருமையாக நினைகின்றார்கள் .அந்த அளவுதான் அவர்கள் அறிவு .

இவர்கள் திருந்துவார்கள் என்று நீங்கள் எதிர்பார்த்தால் அது வெறும் கனவு .

நாங்கள் அதை கடந்து சென்று பலவருடங்கள் ஆகிவிட்டது 

அதற்காக இந்த மனநிலையில் உள்ள இவர்களை இப்படியே விட்டு போகக்கூடாது முடிந்தவரை கூட்டி குப்பையில் போட்டுவிடவேண்டும் .இல்லாவிட்டால் அதுவும் எமது இனத்திற்கு நாம் செய்யும் துரோகம் தான் .

  • கருத்துக்கள உறவுகள்

முதலில் உங்களை சரி பாருங்கள் புலி என சொல்லும் எந்த ஒரு தமிழனையும் சிங்களவர்களை விட பெரும் எதிரியாக பார்க்கும் உங்களை போன்றோர் மீண்டும் புளொட்டில் அழைப்பு வந்தது அதனால் இணைந்தன் என்பது அங்கு வாழும் அப்பாவி தமிழர்களுக்கு பெரும் ஆபத்தே அத்துடன் இனி யாழில் உங்கள் கருத்துக்கள் அதிக விஷமுள்ள கருத்துகளாகவும் மாறும் இதோ ஒரு உதாராணம் 

17 minutes ago, arjun said:

யாழில் இருக்கும் சில சருகுகளை கூட்டி குப்பையில் போடவேண்டிய தேவையும் இருக்கு .

இதன் உண்மையான கருத்து என்ன ?

இப்படி வெருட்டல் உருட்டல் விட உங்களுக்கு மீள் இணைவு சக்தி தந்துள்ளது பதிலுக்கு நாங்களும்........ என்றால்? உண்மையில் மக்களுக்கு நல்லது செய்வது என்றால் பழசை மறக்கமுடியாமல் இருக்கும் உங்களை எங்களை போன்றவர்கள் அங்கு போகாமல் இருப்பதே அந்த மக்களுக்கு நாம் செய்யும் உதவி.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 22/5/2016 at 2:45 AM, arjun said:

புதிய கலாசாரம் ,வினவு வாசித்து எமது கண் முன்னே நாங்கள் கண்டவற்றை புனை கதை ஆக்கமுடியாது

நல்லவேளை ஈழத்தமிழ் இனம் இவர்கள் கையில் இருந்தது தப்பிவிட்டது .

இனி புல்லே அவர்கள் பெயரில் முளைக்க விடமாட்டோம் . 

நரி அரசியல் எல்லாம்  வேண்டாம்

துணிவிருந்தால்

நேர்மையிருந்தால்

இதை உங்களது கட்சியின் அறிக்கையாக மக்களுக்கு விட்டுவிட்டு

அரசியலை தொடங்குங்கள்  பார்க்கலாம்...

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, arjun said:

உண்மைதான் .இது எனக்கு தெரியாமல் இல்லை ,

ஆனால் யாழில் இருக்கும் சில சருகுகளை கூட்டி குப்பையில் போடவேண்டிய தேவையும் இருக்கு .

உங்கள் கருத்துக்கு பச்சையை குற்றி விட்டு அடுத்து முழு மாறாக  கருத்து வைக்கும் பச்சோந்திகளை பார்த்தால் உண்மை புரியும் .

யுத்தம் முடிந்த பின்  ,மாற்று இயக்கங்களோ அல்லது அரசுடன் இருந்தவர்களோ பாதிக்கபட்ட மக்களளுக்கு எதையாவது செய்யவேண்டும் என்றே செயற்படுகின்றார்கள் .

புலிகளில் ஒரு சிலரை தவிர பெரும்பான்மையானோர் பெரும் பணத்தை வைத்திருப்பவர்கள் இன்றும் வெறும் குரோத மனபாங்கில் தான் செயற்படுகின்றார்கள் .இதற்குள் தங்களுக்குள் அடிபிடி வேறு .

அவர்கள் என்றுமே திருந்தப்போவதுமில்லை திருந்த இடமுமில்லை காரணம் முப்பது வருடங்களாக அவர்களை அப்படி விஷம் ஊட்டித்தான்  வளர்த்தார்கள் .

உதாரணத்திற்கு சுமந்திரன் ஆஸி சென்றார் .உங்களுக்கு அவரின் கருத்துக்கள் பிடிக்காவிட்டால் கூட்டத்திற்கு போகாமல் விடுங்கள் அதை விட்டு கூட்டத்தை குழப்பவுவது என்ன நியாயம் .

புலிகளில் முதல் பாடமே அடாத்துதான்  .முப்பது வருடங்களாக எத்தனை இடங்களில் எத்தனை தடவைகள் பார்த்துவிட்டோம் .அந்த அடாத்தை அவர்கள் பெருமையாக நினைகின்றார்கள் .அந்த அளவுதான் அவர்கள் அறிவு .

இவர்கள் திருந்துவார்கள் என்று நீங்கள் எதிர்பார்த்தால் அது வெறும் கனவு .

நாங்கள் அதை கடந்து சென்று பலவருடங்கள் ஆகிவிட்டது 

அதற்காக இந்த மனநிலையில் உள்ள இவர்களை இப்படியே விட்டு போகக்கூடாது முடிந்தவரை கூட்டி குப்பையில் போட்டுவிடவேண்டும் .இல்லாவிட்டால் அதுவும் எமது இனத்திற்கு நாம் செய்யும் துரோகம் தான் .

உலகமகா டீசண்டு ஆள் பேசுறார் ...........
எல்லோரும் ஓட்டிவந்து ஒருக்கா கேளுங்கள்!!! 

மக்கள் யுத்த தாண்டவம் சிங்கள கொடுரம் இன அலிப்பிட்குள் இருந்த போது 
செய்த வேலை மக்களை கடத்துவது சுடுவது கப்பம் பெறுவது 

எஜமானி நீங்கள் நக்கின  எலும்பு போடுங்கோ 
நாங்க புலி காட்டிதாறம் என்ற வாழ்வுக்கு முற்று புள்ளி வைச்சாச்சு.

எஜமானி இனி புலியுமில்லை எலியுமில்லை எல்லாரும் ஓடுங்கோ 
என்று கக்கூசை திறந்தவுடன் ஓடிவந்தவர்கள் 

மக்களுக்கு உழைக்கிறார்களாம்.
எதோ நக்கிட்டு போங்கோ என்று விட்டிருக்கிறார்கள்.

அவர்கள் சாவின் விளிம்பில் நின்றால் 
அவர்கள் பிழையானவர்கள் 
மேடை போட்டு கதிரை போட்டால் ...
நாங்களும் வாறாம் 

1500ஆம் நூற்றாண்டில் எங்கள் பூட்டனுக்கு உங்களுடன் ஒரு தொடர்பு இருந்தது....
இந்த கேவலம் கேட்ட பிழைப்பிலும் விட 
நக்குண்டு  சாகலாம். 
இந்த கேவலத்தில் ......
எதோ தத்துவம் பேசுறதா நினைப்பு.

எதோ பிழைச்சிட்டு போங்க .....
இந்த  தத்துவாதங்களை அங்கினேயே வைத்து கொள்ளலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் வீரமக்கள் தினமும் கொண்டாட்டிக்கிட்டு தான்.. எதிரிக்காக..சொந்த மக்களை கொன்றும் குவிச்சும்.. வந்தனாங்கள். தேர்தலில் நின்று கட்டுக்காசும் இல்லாமல் தான்.. கடைசியா.. கூட்டமைப்பிடம் சரணாகதி அடைஞ்ச நாங்கள்.

இப்ப மீண்டும் பழைய குருடி கதவைத் திறவடி கணக்கா.. சருக்கு.. குப்பை என்று கொண்டு.. தங்களைத் தாங்களே வைரம் என்று நினைக்கப் போய் தான் ஒரு தடவை அழிவின் விழிம்புக்குப் போய் வந்தார்கள். எதுக்கும் அடக்கி வாசிக்கவும். ஏனெனில் எனி சனம் சோத்துப் பார்சலும் தராது.. ஊர்மிளாவும் தராது. வாலாட்ட வெளிக்கிட்டால்.. ஒட்ட நறுக்கி அனுப்பும். மீண்டும் ஜோசப் சிங்கள இராணுவ முகாம் தான் வாழ்விடமாகும்.

அதுசரி.. இப்ப மாநாடுகள் எல்லாம்.. கோல் நாடுகளாகத்தான் நடத்தினம் போல. அதுசரி.. விலை வைச்சுக் கூப்பிட்டாலும்.. ஒன்றிரண்டு வேலை வெட்டி இல்லாததுகள் தானே உதுகளில் மிணக்கட்டு போய் கொலிடேயும் என்யாய் பண்ணிட்டு வரும். 

ஆனால் வவுனியாவில் இதனைக் கூட்டத்தான் வேண்டும்.. ஏனெனில்.. இன்னும் எதிரிக்கு.. அடிவருடி புளொட் கும்பலுக்கு சாப்பாடு போட காசு திரட்டித்தானே ஆகனும். புலி கிலி என்று காட்டிக்கொடுத்தும் பிழைக்க வழியில்லை.... எனி இப்படிப் பிழைச்சால் தான் உண்டு.

சண்டமாருதன்..

வசனம் எல்லாம் நல்லாத்தான் இருக்கு.. ஆனால் முள்ளிவாய்க்காலுக்குப் பின்னும் சரணடைந்த தமிழ் மக்கள் மீது கொடிய வன்முறையைப் பிரயோகித்த கும்பல்களில் புளொட் ஒட்டுக்குழு கும்பல் முதன்மையானது. இது எமது கருத்தல்ல.. சர்வதேச மன்னிப்புச் சபை.. (அம்னாஸ்ரி இன்ரநஷனல்)... மனித உரிமைகள் காப்பகம்.. என்பவை தந்த அறிக்கைகளில் சொல்லப்பட்டுள்ளது. 

போல் சந்தியநேசன்  சர்வதேசக் கண்டனத்தைப் பெற்ற.. இப்படியான ஒரு மனிதப் படுகொலைக்குக் காரணமான கும்பலின் நிகழ்வில் கலந்து கொண்டது பற்றி.. அவர் சார்ந்த.. பிரித்தானிய தொழில்கட்சிக்கு தெரியுமா.. ?! தெரியப்படுத்தனும். எம்மவர்கள் மீனுக்கு தலையும் பாம்புக்கு வாலும் காட்டி அரசியல் போலித்தனம் செய்து... சனநாயகத்தை மதிக்கும் மக்களை ஏமாற்றி அரசியல் செய்ய அனுமதிக்கவே கூடாது. 

இன்று சில அரசியல் ஆதாயங்களுக்காக தமிழ் தேசியக் கூட்டமைப்பில்.. சம்பந்தனின் தயவால் குடியிருக்கும் இவர்கள்.. இன்னொரு சந்தர்ப்பம் கிடைத்தால்.. சொந்தச் சுயநலனுக்காக.. சொந்த மக்களுக்கு துரோகம் செய்ய ஒருபோதும் தயங்கமாட்டார்கள். இவர்களை எல்லாம் மக்கள் நம்புவதிலும்.. நம்பாமல் தமது இன்றைய சந்ததிதை எதிர்கால இனத்துரோகமற்ற.. தூய அரசியல் நோக்கி பலப்படுத்துவதே சிறந்தது.tw_blush:

Edited by nedukkalapoovan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.