Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

"சேமிப்பு" எமக்குத் தெரிந்த சேமிப்பு வழி முறைகள்

Featured Replies

இங்கு புலம் பெயர் நாடுகளில் நாம் பல்வேறு நாட்டவர்களுடன் வாழ்கின்றோம். மற்றய நாட்டவர்களுடன் ஒப்பிடும் போது ஈழத்தமிழர்கள் நாம் சற்று செலவாளிகள் என்பது எனது அனுபவம். நாம் சற்றுத் திட்டமிட்டால் பல வகைகளில் பணத்தை மிச்சப் படுத்த முடியும் என்பது எனது கருத்து (அனுபவம்), 
எமக்கு சில சேமிப்பு வழிமுறைகள் தெரிந்திருக்கும் அவற்றில் சில நாம் வாழும் நாடுகளுக்கு மட்டுமே உரியவை, சில எல்லோருக்கும் பொதுவானவை

இவற்றை நாம் எம்மிடையே பகிர்ந்து கொள்வோம் . எமக்கு தெரிந்தவற்றை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது கூட ஒருவகை தானம் தானே.

இங்கு சுவிஸ் பத்திரிகைகளில் பல டிப்ஸ் கள் வருகின்றன அவை பெரும்பாலும் சக்தி சேமிப்பு தொடர்பாக இருக்கும். அவை  மிகவும் பயணுள்ளதாக இருக்கும் முடிந்தவரை நானும் அவற்றை இங்கு இணைக்க முயற்சிக்கிறேன்.

(இத்திரியை வாசிக்கும் யாழ் கள உறவுகள் ஒவ்வொருவரும் ஆகக்குறைந்தது ஒரு டிப்ஸ் ஆவது பதிய வேண்டும் என்பது கண்டிப்பாண உத்தரவு)

  • கருத்துக்கள உறவுகள்

இன்று "மதர்ஸ் டே" யில் நல்ல விடயத்தைத் தொடங்கி இருக்கிறீங்கள் அதற்கு முதல் பாராட்டுக்கள்....!

--- இந்த எலக்ட்ரிக் , எலட்ரோனிக் பொருட்களை கண்டவுடன் வாங்கிற வேலையை நிறுத்த வேண்டும்.

--- மாதம் இருமுறை திட்டமிட்டு மளிகைப் பொருட்கள் பூரா வாங்கிவிட வேண்டும். ஒரு கிலோ பாண் வாங்க பத்து  கிலோமீட்டர் கார் எடுத்துக் கொண்டு ஓடக் கூடாது. அதைவிட அன்று பச்சைத் தண்ணியைக் குடிச்சுட்டு படுக்கலாம். (நல்ல சீவன் பத்துப் பண்ணிரண்டு நாளைக்கு கிடக்கும்).

--- ஒரு கலியாண வீட்டுக்கு உடுக்க புதுச் சேலை வாங்க முதல் ஒருமுறை அலுமாரியைத் திறந்து பார்த்திட்டு  முடிவெடுப்பது உசிதம். அப்படியும் வாங்கத்தான் வேண்டுமென்றால் முதலில் பிளவ்ஸ் துணியை எடுத்துப் போட்டு அதற்கு மாட்சாக சேலை எடுப்பது கால விரயத்தைப் போக்கும்.

இன்னும் ஏராளம் இருக்கு. மற்றவர்களும் கொஞ்சம் புலம்பி ஆறுதலடையட்டும் என மூக்கைச் சிந்தி கண்ணைத் துடைத்துக் கொண்டு ஒதுங்குகின்றேன்...!  tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்

மாணவர்களுக்கு:

யுனிக்கு காசு கட்டும் போது (அரசாங்கக் கடனில் படிப்பவர்களுக்குப் பொருந்தாது..) தவணை முறையில் கட்டுவதை தவிருங்கள். நிறைய பணம் மீதமாகும்.

அதேபோல் வாகன இன்ஸூரன்ஸ்.. கட்டும் போது மாத அடிப்படையில் கட்டுவது நட்டம். 

ஏன் வாகனம் வாங்கும் போது கடனடிப்படையில் வாங்குவது நட்டம். நம்ம வசதிக்கேற்ப தேவைக்கு ஏற்ப.. ஓரு வாகனத்தை.. முழுத்தொகையையும் கொடுத்து வாங்கினால் நிறையப் பணம் மீதமாகும்.

சும்மா பந்தாவுக்கு ரெஸ்டோரன்ஸ் போய் கண்டதையும் ஓடர் கொடுக்காமல்.. நமக்கு சாப்பிடப் பிரியாமனதில்.. மீடியம் அல்லது சிமால் ஓடர் கொடுத்து வாங்கிச் சாப்பிடுங்கள். உடம்புக்கும் நல்லது காசும் செலவு குறைவாக இருக்கும்.

வீட்டில் சமைச்சுச் சாப்பிடுவது நிறையக் காசை மீதப்படுத்தும். ஆசைக்கு மாதத்தில் 4 தரம் வெளில வாங்கிச் சாப்பிட்டாலும்.. மிச்சம் வீட்டில் சமைக்கும் படி பார்த்துக் கொள்ளுங்கள். மாதம் 20 தொடக்கம் 30 பவுனுக்குள் சீவியம் நடத்தலாம். 

சும்மா வெட்டிக்கு பெரிய ரூமை யுனில வாடகைக்கு எடுத்து தூசு படிய விடுற நேரம்.. நமக்கு அளவான சிறிய ரூமை கொஞ்ச விலைக்கு எடுத்து செளகரியமாக வாழ்வது சிறப்பு.

பப் கிளப் பார்ட்டிக்குப் போக.. வாரத்துக்கு ஒரு உடுப்பு வாங்குவதிலும்.. வாங்கின உடுப்பை வாரத்துக்கு ஒன்றாகப் பாவிக்கும் வகையில் தயார் பண்ணி வைத்துக் கொண்டால்.. பணமும் மீதமாகும்.. கெளரவமாகவும் இருக்கும். பழையதை களையனுன்னு தோன்றப்போ.. பழைய உடுப்புகளை கிலோவுக்கு வாங்குபவர்களிடம் பத்திரமாகக் கொடுத்துவிட்டு.. புதிசை வாங்கிக்குங்க. அடிக்கடி புதிசை வாங்குவது நல்லதல்ல. காரணம் அடிக்கடி ஸ்ரைல்.. அல்லது டிசைன் மாறாது. 

போன்.. ராப்லட்.. கம்பியூட்டர் வாங்கும் போது விலைக்கூடியதை வாங்கி.. இரண்டு வருடத்தின் பின் அது மேசையில் கிடந்த் இழுபட.. இன்னொரு புதிது வாங்க வேண்டி ஆசை தூண்டும். அதனால்.. ஒருபோதும்... ரெம்ப சீப்பான போனும் வாஙக் கூடாது. ரெம்ப விலையானதும் வாங்கக் கூடாது. வாங்கும் போது நடுத்தர விலையில் குறைந்தது.. 2 - 3 ஆண்டுகளுக்குப் பாவிக்கக் கூடிய வகையில் வாங்கனும். அதன் மூலம் செலவு செய்த பணத்தை மீதப்படுத்த முடியாதுன்னு பார்க்கனும்.

கிரடிட் கார்ட். கிரடிட் ஸ்கோர் உயரனுன்னு சொல்லிக்கிட்டு கூடிய வட்டி வீதத்தில் உள்ள காட்டுகளையும் வாங்கி வைச்சு பாவிக்கிறாய்ங்க. குறைந்த வட்டி வீதத்தில் உள்ளதை பாவிப்பதே நல்லது. மேலும் தவணை மறவாது கட்டுத்தொகை கட்டனுன்னா.. டிரக் டாபிட் செய்து விடுங்கள். அல்லது உங்கள் கிரடிட் கார்ட்டில் உங்களிடம் பணமுள்ள போது ஒரு 50 - 100 பவுன்சை மேலதிகமாகப் போட்டு வையுங்கள். அவசரத்திற்கு அவை உதவும். வட்டி கட்டி காசை இழக்கத் தேவையில்லை.

கொலிடே போக விருப்பம் என்றால்.. பக்கேஜ் மலிவாங்க உள்ள போது புக் செய்து விடுங்கள். ஒன்றுக்கு இரண்டு முறை தரப்படும் வசதிகள் ஹொட்டல் இடம்.. வசதிகளை சரி பார்த்துக் கொண்டு புக் செய்யுங்கள். விமான ரிக்கெட் பதியும் போது.. லக்கேஜ் கையாளப்படும் பணம்.. மற்றும் லக்கேஜ் அளவில் கண்ணும் கருத்துமாக இருங்கள். மேலும்.. சில மலிவு விலை விமானங்கள் சொன்ன நேரத்துக்கு 15.. 20 நிமிசம் முன் வரவில்லை என்றால்.. போடிங் கேட்டை மூடிவிடுவார்கள். இது அவர்களின் தந்திரம். பின் நீங்கள் பெருந்தொகை கட்டி விமானம் பிடிக்க வேண்டி வரும். அதனால்... மலிவு விமான ரிக்கெட் வாங்கும் போது.. லக்கேஜ் ரொப் நேரம்.. போடிங் கேட் மூடும் நேரம் எல்லாத்தையும் கவனத்தில் எடுத்து உங்கள் பயணத்தை பயண நேரத்தை திட்டமிடுங்கள். மேலும் சரியான விமான நிலையத்தையும் பிக் பண்ணுங்கள். சிலவேளை ரிக்கெட் மலிவாக இருக்கும் ஆனால் விமான நிலையத்தில் இருந்து போக வேண்டிய இடத்துக்கு போக ரக்ஸிக்கு.. அல்லது கோச்சுக்கு விமான ரிக்கெட்டை விட 4 அல்லது 5 மடங்கு அதிகம் பணம் செலுத்த வேண்டி வரலாம். இதெல்லாம் அவங்க ஆளுக்காள் பேசி செய்து கொள்லுற விடயம். நாங்க.. ஏமாந்திரக் கூடாது.

அடிக்கடி செல்லும் இடங்களுக்கு குறிப்பாக சுப்பர் மார்கெட்.. போன் பில்.. சந்தா அட்டையில் சேமிக்கும் பழக்கம் வைச்சுக் கொள்ளுங்கள். பொயின்ஸ் காட் ஆக இருந்தாலும் கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்ந்தால்.. நிறைய வரும். 

எப்பவும் லோயலாக இருங்கள். அடிக்கடி போன் கம்பனி.. பாங்.. இன்ஸூரன்ஸ் கம்பனி.. வாகனக் கம்பனி.. மாத்துவது நல்லதல்ல. லோயலாக இருந்தால்.. சில கழிவுகள் கிடைக்கும். தமிழ் போன் கம்பனிகளில்.. கடைகளில்.. வாடிக்கையாளர்களாக இருப்பது வேஸ்டு. 

(உ+ம்) ஒரே போன் கம்பனியில் தொடர்ந்து 10 வருடம் இருப்பதால்... மாதம் சுமார் 20 பவுன்ஸ் கழிவுடன் பக்கேஷ் தருகிறார்கள்.

வங்கியில் CASH ISA  வில் பணத்தை சேமிப்பிடுங்கள். மாதம் அல்லது ஆண்டுக்கு சிறிய வட்டியவாவது வந்து சேரும். 

இதில பலது நாங்க கடைப்பிடிக்கும் வழிமுறைகளும் ஆகும். மாணவர்களுக்கு நல்லது. tw_blush:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

எதுக்கு சேமிக்கணும்

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, நந்தன் said:

எதுக்கு சேமிக்கணும்

மகளுக்கு சீதனத்துக்கு... மகனுக்கு வீடு வாங்கிக் கொடுக்க... அப்பா, அம்மா தல யாத்திரை போக செலவுக்கு.. அப்புறம் இவ்வளவு காசு பாங்கில இருக்கு என்று பீலா விட்டு, கடன் கேட்டு நண்பர் வர, அட வீடு ஒன்று வாங்கிறன்... உன்னிடம் தான் ஒரு இரண்டாயிரம் மாறுவம் எண்டு வெள்ளன தான் யோசித்தனான்.... என்று இறுக்க....

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Nathamuni said:

மகளுக்கு சீதனத்துக்கு... மகனுக்கு வீடு வாங்கிக் கொடுக்க... அப்பா, அம்மா தல யாத்திரை போக செலவுக்கு.. அப்புறம் இவ்வளவு காசு பாங்கில இருக்கு என்று பீலா விட்டு, கடன் கேட்டு நண்பர் வர, அட வீடு ஒன்று வாங்கிறன்... உன்னிடம் தான் ஒரு இரண்டாயிரம் மாறுவம் எண்டு வெள்ளன தான் யோசித்தனான்.... என்று இறுக்க....

சுருக்கமா சொன்னா போலி வாழ்க்கை

  • கருத்துக்கள உறவுகள்
48 minutes ago, நந்தன் said:

எதுக்கு சேமிக்கணும்

இல்லாவிட்டால் வயதான காலத்தில் இன்னோருவரில் தங்கி வாழ வேண்டி எற்படும்.

  • கருத்துக்கள உறவுகள்

உடுப்புக்களை வாங்கும் போது... குளிர்காலம்   முடியும் நேரத்தில், நல்ல தரமான  குளிர்கால உடைகளை பாதி விலையில் வாங்கலாம்.... அடுத்த வின்ரருக்கு பயன்படும். அதே போல.... கோடைகால உடைகளை, அது முடியும் தருணம் வாங்கலாம்.

வாகனத்துக்கு எரிபொருள் நிரப்பும் போது... செவ்வாய் மாலை, புதன் கிழமை நாட்களில் எரிபொருள் விலை மற்றைய நாட்களை விட குறைந்திருக்கும். 

கடையில் உணவுப்  பொருட்கள்  வாங்கச் செல்லும் போது... வீட்டில் என்ன பொருட்கள்  இல்லை என்பதை அறிந்து, அதனை ஒரு துண்டில் எழுதிக் கொண்டு போய் அதன்படி வாங்குங்கள். சகட்டு மேனிக்கு... வாங்கப் போவதால், ஏற்கெனவே... வீட்டில் உள்ள உணவுப் பொருட்களையும் வாங்கி  வீணாக்காதீர்கள். இதற்கு அவ்வப் போது.... முடியும் பொருட்களை, ஒரு துண்டில் உடனேயே... எழுதி வைத்து விட்டால், மறந்து போக மாட்டீர்கள்.

வார விடு முறையில்.... வீட்டிற்கு வரும் விளம்பரங்களை வடிவாக பார்த்து, எந்தக் கடையில் என்ன பொருள் மலிவு என்பதை குறித்து வைத்துக் கொண்டு... அந்தக் கடையில், அந்தப் பொருட்களை வாங்குங்கள்.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, colomban said:

இல்லாவிட்டால் வயதான காலத்தில் இன்னோருவரில் தங்கி வாழ வேண்டி எற்படும்.

நீங்கள் சேமித்து வைத்து விட்டால், உங்கள் பிள்ளைகள் தாங்கோ தாங்கெண்டு தாங்குவார்களா

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, நந்தன் said:

நீங்கள் சேமித்து வைத்து விட்டால், உங்கள் பிள்ளைகள் தாங்கோ தாங்கெண்டு தாங்குவார்களா

பிள்ளைகள் அந்தியேட்டி செய்வார்களோ தெரியாது.. அங்காளி, திவசம்?

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
Just now, Nathamuni said:

பிள்ளைகள் அந்தியேட்டி செய்வார்களோ தெரியாது..

அட எரிப்பாங்களோ , புதைப்பாங்களோ  ..அதுவே தெரியல

  • கருத்துக்கள உறவுகள்
Just now, நந்தன் said:

அட எரிப்பாங்களோ , புதைப்பாங்களோ  ..அதுவே தெரியல

புதைக்கிறது செலவு கூட... ஆகவே எரிப்புதான்...

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, Nathamuni said:

புதைக்கிறது செலவு கூட... ஆகவே எரிப்புதான்...

ஆகவே எதுக்கு சேமிக்கணும், வாழ்க்கையை வாழுங்கள் சார்.கவுன்சிலிட்ட முற்கூட்டியே சொன்னால் எரிச்சிட்டு போறாங்க

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, நந்தன் said:

ஆகவே எதுக்கு சேமிக்கணும், வாழ்க்கையை வாழுங்கள் சார்.கவுன்சிலிட்ட முற்கூட்டியே சொன்னால் எரிச்சிட்டு போறாங்க

இல்லை, கவுன்சிலிட்டை, நீங்களே முதலே சொல்ல ஏலாது. பிள்ளைகள் தான் கவுன்சிலிட்டை சொல்ல வேண்டும்... உவர் அப்பர் நந்தன் ஒரு பொருக்கும் வைக்காமல் போட்டார். எங்களிட்ட காசில்லை. நீங்களா பார்த்து ஏதும் செய்யுங்க....

அந்திம செலவுக்கு, ஒரு இன்சூரன்ஸ் எடுத்து மாதம் மாதம் கட்டினால், குடும்பத்துக்கு செலவு இல்லை. 

  • கருத்துக்கள உறவுகள்

என்ன சொல்ல வருகின்றேன் என்றால், சேமிப்பு இருந்தால்தான் உழைக்கேலாத காலத்தில் வாழலாம் என.

சேமித்து வைப்பதால் பிள்ளைய்கள் கவனிப்பார்கள் என நான் நம்பவில்லை.

மேலும் இந்த  social benefit போன்றன மேலைத்தேய நாடுகளில் வாழ்பவர்களுக்கு சரி. இலங்கையில் இப்படி எதுவுல் இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, colomban said:

என்ன சொல்ல வருகின்றேன் என்றால், சேமிப்பு இருந்தால்தான் உழைக்கேலாத காலத்தில் வாழலாம் என.

சேமித்து வைப்பதால் பிள்ளைய்கள் கவனிப்பார்கள் என நான் நம்பவில்லை.

மேலும் இந்த  social benefit போன்றன மேலைத்தேய நாடுகளில் வாழ்பவர்களுக்கு சரி. இலங்கையில் இப்படி எதுவுல் இல்லை.

அதத்தான் நந்தனுக்கு சொல்ல வந்தேன்.

சேமிப்பு என்பது வாயைக் கட்டி, வகித்தைக் கட்டி, கருமித்தனமாக செய்வதல்ல.

அதுவே உழைப்பின் முதல் செலவாக இருக்க வேண்டும்.

இலங்கையில், சமூக அமைப்பில் பிள்ளைகளில் தங்கி இருக்க முடியும் - வயோதிபத்தில்.

இங்கே அது முடியாது. ஆகவே சேமிப்பு முக்கியம். என்றாவது கை கொடுக்கும். அதே வேளை சேமிப்பு என்பது பணத்தினை வங்கியில் சேமிப்பது இல்லை. உங்கள் வீட்டு கடனை முன்னதாக கட்டி முடிப்பதும் சேமிப்பு தான். கிரெடிட் காட்டினை திட்டமிட்டு கட்டி முடிப்பது ஒரு சேமிப்பு தான்.

மேற்கே, பெற்றோர் பிள்ளைகளை நம்புவது இல்லை. அதனால், வாழும் காலத்தில் தாம் சேமித்ததை கொடுபதில்லை....

இறந்த பின்னர் கிடைக்கும் அதனையே குறிவைத்து inheritance tax அடிக்கிறார்கள்....

ஆகவே பெத்த கடமைக்கு பிள்ளைகளுக்கு சிறந்த கல்வியினையும் வழங்கவும், நம்பி இருக்கும் துணைக்காகவும், இரண்டு பேரது வயோதிபதுக்கும் சேமிப்போம்.

Edited by Nathamuni

  • தொடங்கியவர்

உங்கள் அணைவரதும் கருத்துகளுக்கு மிக்க நன்றி, பயணுள்ள டிப்ஸ் களைத் தந்த சுவி, நெடுக்ஸ், தமிழ்சிறி ஆகியோருக்கு நன்றிகள் பல

  • கருத்துக்கள உறவுகள்

கஸ்டப்பட்டு உழைச்சு அனுபவிக்க விரும்பாதவர்கள் தான் சேமித்து வைக்கிறது. இங்கு வருத்தம் வந்தால் போய் ஆஸ்பத்திரியில் படுக்கிறது. செத்தால் எடுத்துப் போட கவுன்சில் இருக்கிறது. பிறகு யாருக்கு சேர்த்து வைக்கிறது. இருக்கும் போதே அனுபவித்துப் போட்டு சாக வேண்டியது தான்.

  • கருத்துக்கள உறவுகள்

பலர் இன்னமும் பழைய தமிழ் சிந்தனையில் இருக்கிறார்கள் என்று நினைக்கிறேன்.
சேபிப்பு 
சேர்த்து வைப்பு 
இரண்டும் ஒரே அர்த்தம் உடையதனாலும் வேறு வேறு எண்ணம் கொண்டவை.

சேமிப்பு என்பதை  உழைப்பு என்று பொருள் கொள்ளலாம் 
என்று உழைத்ததை நீங்கள் சேமித்தால் நாளைக்கு உழைக்க தேவை இல்லை.

தவிர முதலீடு என்பது உங்கள் சேமிப்பை விருத்தி பண்ணுவது 
அதன் இன்னொரு பொருள் உங்கள் உழைப்பை உண்டுபண்ணுவது =வருமானம் 

தவிர உலகில் உழைப்பின்றி உடையின்றி உணவின்றி பலர் வாடுகிறார்கள்.
நாம் எல்லோரும் மூன்றாம் தர உலகில் இருந்து இங்கு வந்தவர்கள்.
மூன்றாம் உலகில் இன்னமும் பசி பஞ்சம் இருக்கத்தான் செய்கிறது 
எமக்கு கிடைத்த இந்த அரிய அதிர்ஸடத்தை வீணடிக்காது .
எமது உழைப்பின் ஒரு பகுதியை அவர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம். 
இவை எல்லாம் சேமிப்பால் மட்டுமே சாத்தியம்.

மற்றது உதாரிதனம் என்பது ....
இது ஒரு மனிதனை பாழ்அடிக்கும் எண்ணம் கொண்டது 
அதில் இருந்து தப்பி கொள்ள எம்மை பாதுக்காக்க சேமிப்பு ஒன்றே ஒரே வழி.

உங்கள் உழைப்பில் 3இல் 1பகுதியை நீங்கள் முதலீடு செய்து வந்தால் 
உங்கள் வாழ்வின் 3இல் 1 பகுதி வாழ்நாளில் நீங்கள் இன்னொருவருக்கு 
தொழிலாளியாக இருக்க வேண்டிய தேவை இல்லை.
நீங்களே உங்களுக்கு முதலாளியாக வாழாலாம்! 

பிள்ளைகளுக்கு நீங்கள் கொடுக்க கூடிய அதிஉயர் செல்வம் 
"கல்வி"தான் அதை போதும் போதும் என்று நீங்கள் கொடுத்து விட்டால் 
ஒன்றுமில்லாது வந்த நாமே இப்படி இருக்கும்போது .....
அவர்கள் வாழ்வு எப்படி இருக்கும் ?
தவிர நல்ல கல்வி உடைய பிள்ளளைகள் உங்களிடம் இருந்து ஒரு பைசா கூட 
வாங்க மாட்டார்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Maruthankerny said:

------

பிள்ளைகளுக்கு நீங்கள் கொடுக்க கூடிய அதிஉயர் செல்வம் 
"கல்வி"தான் அதை போதும் போதும் என்று நீங்கள் கொடுத்து விட்டால் 
ஒன்றுமில்லாது வந்த நாமே இப்படி இருக்கும்போது .....
அவர்கள் வாழ்வு எப்படி இருக்கும் ?
தவிர நல்ல கல்வி உடைய பிள்ளளைகள் உங்களிடம் இருந்து ஒரு பைசா கூட 
வாங்க மாட்டார்கள். 

மருதங்கேணி......  அண்ணே.......
பூவை..... 
மலர் என்றும்,
புட்பம் என்றும்,
புஸ்பம்  என்றும், 
புஷ்பம் என்றும்.......
அல்லது நீங்கள் சொல்வது மாதிரியும்... சொல்லலாம்.

அங்கை தான்.... "கலோரி"  சேமிப்பு இருக்குது.
"கலோரி .... கிலோ என்ன விலை விக்குது" என்ற நிலையில் தான்... நாம் வாழுகின்ற சமுதாயம். 

  • கருத்துக்கள உறவுகள்

எங்களைக் கேட்டால்.. யாரிடமும் கடனாளியாக வாழாமல்... நிம்மதியா வாழனுன்னா.. ஒவ்வொரு வருவாயிலும் குறிப்பிட்ட சதவீதத்தை சேமிக்கனுன்னு தான் சொல்லுவம். அது எங்களுக்கான சேமிப்பே அன்றி அடுத்தவைக்காக அல்ல. அப்பா அம்மா சகோதரங்களுக்கு நல்ல நண்பர்களுக்கு கொடுக்கலாம். மிகவும் அவதிப்படும் மக்களுக்கும் கொடுக்கலாம்.. அவ்வளவும் தான். tw_blush:

பொண்டாடி மாருக்கு கொடுத்துப் பழக்கவே கூடாது. சுயமா உழைக்க விடனும். அவைட தேவையை அவையே பூர்த்தி செய்யச் சொல்லனும். அதுவும் சேமிப்புக்கு மிக முக்கியம். (உப்படியான கடும் நிபந்தனைகள் தமிழ் பொம்பிளைகளுக்கு கண்ணிலும் காட்டக் கூடாது.. தமிழ் பொம்பிளையள் கூர்ப்படைய நிறையக் கிடக்குது.)  tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்

வெளி நாடுகளில் 20 30 வருடங்கள் வாழும் நம்மவர்களில்  இன்றும் பதிவு  இல்லாமல் வேலை செய்துகொண்டு அகதிக் காசில் வாழ்பவர்கள் நிறைய இருக்கின்றனர்.
அவர்களிடம் அதிகமான அளவில் பணம் இருந்தும் அதைச் சட்ட பூர்வமாகச் சேமிக்க முடியாமல் அண்ணன் , தம்பி மாமன் மச்சானிடம் அவர்களை நம்பிக்  கொடுத்துவிட்டு மீளப் பெறமுடியாமல் அல்லல்ப்படுபவர்களும் உள்ளனர்.
பலர் சீட்டுக் கட்டி ஏமாற்றப்பட்டும் உள்ளனர்.
பிள்ளைகளின் கல்வியில் முதலிட்டு விட்டுப் பின்னர் அவர்கள் திருப்பித் தராவிட்டால் வழக்குப் போடும் நிலையும் வேண்டாம்.
எதுவும்   எங்கள் பிடியில் இருந்தால் தான் மற்றவர்கள் எங்களை ஏமாற்றுவதைத் தடுக்கலாம்.
காணி நிலம் வீடு போன்றவற்றில் முதலிட்டால் தேவைப்படும் போது அவற்றைக்  காசாக்கலாம். வாடகை கட்டிக் காசை வீணாக்குவதை விட அந்த வாடகையையே முதலாக்கலாம்.

 

  • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, nedukkalapoovan said:

எங்களைக் கேட்டால்.. யாரிடமும் கடனாளியாக வாழாமல்... நிம்மதியா வாழனுன்னா.. ஒவ்வொரு வருவாயிலும் குறிப்பிட்ட சதவீதத்தை சேமிக்கனுன்னு தான் சொல்லுவம். அது எங்களுக்கான சேமிப்பே அன்றி அடுத்தவைக்காக அல்ல. அப்பா அம்மா சகோதரங்களுக்கு நல்ல நண்பர்களுக்கு கொடுக்கலாம். மிகவும் அவதிப்படும் மக்களுக்கும் கொடுக்கலாம்.. அவ்வளவும் தான். tw_blush:

பொண்டாடி மாருக்கு கொடுத்துப் பழக்கவே கூடாது. சுயமா உழைக்க விடனும். அவைட தேவையை அவையே பூர்த்தி செய்யச் சொல்லனும். அதுவும் சேமிப்புக்கு மிக முக்கியம். (உப்படியான கடும் நிபந்தனைகள் தமிழ் பொம்பிளைகளுக்கு கண்ணிலும் காட்டக் கூடாது.. தமிழ் பொம்பிளையள் கூர்ப்படைய நிறையக் கிடக்குது.)  tw_blush:

நெடுக்ஸ்......
பெண்டாட்டிமார்,  தீண்டத் தகாவதர்கள் அல்ல,
அவர்கள்... உங்கள்..... தாயாகவும்,  சகொதரியாவாகவும், மகளாகாவும் இருக்கலாம்.
அது... பார்க்கும், கண்களிலே தான் உள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ரதி said:

கஸ்டப்பட்டு உழைச்சு அனுபவிக்க விரும்பாதவர்கள் தான் சேமித்து வைக்கிறது. இங்கு வருத்தம் வந்தால் போய் ஆஸ்பத்திரியில் படுக்கிறது. செத்தால் எடுத்துப் போட கவுன்சில் இருக்கிறது. பிறகு யாருக்கு சேர்த்து வைக்கிறது. இருக்கும் போதே அனுபவித்துப் போட்டு சாக வேண்டியது தான்.

வருத்தம் வந்து கட்டிலோட ஒரு பத்து வரியம் கிடந்தால்.... யார் பார்க்கிறதாம்?

செத்தால் எடுத்துப் போட கவுன்சில் வருமா?

இதைத்தான் நந்தனும் சொன்னார்.

எனக்கு தெரிந்து கவுன்சில் அவ்வாறு செய்வது, தமது பராமரிப்பில் இருந்து இறந்து போன அனாதைப் பிணங்களைத் தான்.

கவுன்சில் (டவுன்) தூக்கும் என்று கூலா செத்துத் துளைத்து, பிள்ளைகளை, சொந்தக் காரர்களிடம் கையேந்த வைக்காதீர்கள்...

பொருள் இல்லாருக்கு இவ்வுலகு இல்லை.
அருள் இல்லாருக்கு அவ்வுலகு இல்லை. 

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, Nathamuni said:

பொருள் இல்லாருக்கு இவ்வுலகு இல்லை.
அருள் இல்லாருக்கு அவ்வுலகு இல்லை. 

செத்தால் எடுத்துப் போட கவுன்சில் வருமா?

இதைத்தான் நந்தனும் சொன்னார்.

எனக்கு தெரிந்து கவுன்சில் அவ்வாறு செய்வது, தமது பராமரிப்பில் இருந்து இறந்து போன அனாதைப் பிணங்களைத் தான்.

கவுன்சில் (டவுன்) தூக்கும் என்று கூலா செத்துத் துளைத்து, பிள்ளைகளை, சொந்தக் காரர்களிடம் கையேந்த வைக்காதீர்கள்...

கவுன்சில்..... கண்ணீர், விடாது.
எமது  அந்த, அந்திம  இறுதி யாத்திரையின் போது.... 
எம்  உறவுகளின், கண் கலங்கிளால்... ... 
வாழ்க்கையில், வெற்றி பெற்று விட்டேன்,என்பது.... அர்த்தம். 
இதற்காக நான் வள்ளுவன், விவேகானந்தன்  வாழ்க்கை வாழுபவனும் அல்ல.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.