Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பொருத்து வீடுகள் தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது

Featured Replies

பொருத்து வீடுகள் தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது
 
article_1464607949-aaaaaaaaaaaaaa.jpg

-எஸ்.ஜெகநாதன்

அரசாங்கத்தின் 65 ஆயிரம் வீட்டுத்திட்டங்கள் அமைக்கும் செயற்றிட்டத்தின் கீழ் அமைக்கப்படவிருந்த பொருத்து வீடுகள் தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளதாக சிறுவர் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்தார்.

வலிகாமம் வடக்கு (தெல்லிப்பழை) பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று திங்கட்கிழமை (30) நடைபெற்றது. இதன்போது இணைத்தலைவர்களில் ஒருவராகக் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர்,

'ஆட்சேபனைகள் தெரிவிக்கப்பட்ட இந்தப் பொருத்து வீடுகள் தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளன. இதனால் அதனைப் பற்றி கதைக்க வேண்டிய அவசியம் இல்லை. மக்களுக்கு சரியான வீட்டுத்திட்டங்கள் கிடைக்கும். இதன் மூலம் மீள்குடியேறிய அனைவருக்கும் வீடுகள் கிடைக்கும்' என்றார்.

மீள்குடியேற்ற அமைச்சால் அமைக்கப்படவிருந்த இந்த பொருத்து வீடுகள் ஒவ்வொன்றும் தலா 2.1 மில்லியன் ரூபாய் பெறுமதியுடையவை. இந்த பொருத்து வீடுகள் யாழ்ப்பாண சூழ்நிலைக்கு பொருத்தமில்லாத மற்றும் தரமில்லாத வீடுகள் என வடமாகாண சபையால் நிராகரிக்கப்பட்டது. எனினும், இது நடைமுறைப்படுத்தப்படும் என மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் கூறியிருந்தார். இழுபறி நிலையில் இருந்த இந்த வீட்டுத்திட்டம் தற்போது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக சிறுவர் இராஜாங்க அமைச்சர் கூறியிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

- See more at: http://www.tamilmirror.lk/173374#sthash.3BG1jRMh.dpuf
45 minutes ago, நவீனன் said:

பொருத்து வீடுகள் தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது

பூனைக்கு விளையாடு சுண்டெலிக்கு சீவன் போகுதாம்.

இவர்கள் இவ்வளவு கத்தியும் இந்த 65.000 வீடுகளிற்கு, வீடுகளற்ற 95,000 இடம்பெயர்ந்த குடும்பங்கள் விண்ணப்பித்திருந்தார்கள். அவர்கள் கதி - அதோ கதிதானா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

செய்வன திருந்தச்செய்....

two+frogs.bmp

ஒரு குளத்தில் இரண்டு தவளைகள் இருந்தன.வெயில் காலம் வந்தபோது அந்த குளத்தில் நீர் வற்றத் தொடங்கியது.

ஆகவே அத்தவளைகள் குளத்திலிருந்து வெளியேறி வேறு இடம் தேடிச்சென்றன.

வழியில் தண்ணீர் நிறைந்திருந்த கிணற்றைப் பார்த்தன.உடன் ஒரு தவளை " நாம் இக்கிணற்றில் இறங்கி...இதிலேயே இருப்போம்.தண்ணீர் நிறைய இருக்கிறது" என்றது.

உடன் இரண்டாவது தவளை ...'வெயில் அதிகமாக அதிகமாக ...இக்கிணற்று நீரும் வற்றிவிட்டால் இந்த ஆழமான கிணற்றிலிருந்து நாம் எப்ப்டி வெளியே வருவது' என்று கேட்டது.

இரண்டாவது தவளை....புத்திசாலித்தனமாக யோசித்து ...ஒரு காரியத்தில் ஈடுபடும்போது ....அதற்குப்பின்னால் ஏற்படும் விளைவுகளைப்பற்றியும் யோசித்தது.

நாமும் எந்தக் காரியத்தை செய்தாலும் அதன் பின் விளைவுகள் எப்படி இருக்கும் என்பதை யோசித்து....செய்யும் காரியத்தை திருந்தச் செய்யவேண்டும். 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, நவீனன் said:
பொருத்து வீடுகள் தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது

article_1464607949-aaaaaaaaaaaaaa.jpg

'ஆட்சேபனைகள் தெரிவிக்கப்பட்ட இந்தப் பொருத்து வீடுகள் தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளன. இதனால் அதனைப் பற்றி கதைக்க வேண்டிய அவசியம் இல்லை. மக்களுக்கு சரியான வீட்டுத்திட்டங்கள் கிடைக்கும். இதன் மூலம் மீள்குடியேறிய அனைவருக்கும் வீடுகள் கிடைக்கும்' என்றார்.

மக்கள் தெரிவித்த, ஆட்சேபனைகளை..... ஏற்றுக் கொண்ட. 
அமைச்சர்  விஜயகலா மகேஸ்வரனுக்கு நன்றி.

1 hour ago, குமாரசாமி said:

செய்வன திருந்தச்செய்....

two+frogs.bmp

ஒரு குளத்தில் இரண்டு தவளைகள் இருந்தன.வெயில் காலம் வந்தபோது அந்த குளத்தில் நீர் வற்றத் தொடங்கியது.

ஆகவே அத்தவளைகள் குளத்திலிருந்து வெளியேறி வேறு இடம் தேடிச்சென்றன.

வழியில் தண்ணீர் நிறைந்திருந்த கிணற்றைப் பார்த்தன.உடன் ஒரு தவளை " நாம் இக்கிணற்றில் இறங்கி...இதிலேயே இருப்போம்.தண்ணீர் நிறைய இருக்கிறது" என்றது.

உடன் இரண்டாவது தவளை ...'வெயில் அதிகமாக அதிகமாக ...இக்கிணற்று நீரும் வற்றிவிட்டால் இந்த ஆழமான கிணற்றிலிருந்து நாம் எப்ப்டி வெளியே வருவது' என்று கேட்டது.

இரண்டாவது தவளை....புத்திசாலித்தனமாக யோசித்து ...ஒரு காரியத்தில் ஈடுபடும்போது ....அதற்குப்பின்னால் ஏற்படும் விளைவுகளைப்பற்றியும் யோசித்தது.

நாமும் எந்தக் காரியத்தை செய்தாலும் அதன் பின் விளைவுகள் எப்படி இருக்கும் என்பதை யோசித்து....செய்யும் காரியத்தை திருந்தச் செய்யவேண்டும். 

அதுசரி அதுவரை வெய்யிலிலும்  மழையிலும் இந்த அரசியல்வாதிகளா வேதனைப்பட போகின்றார்கள். 

தவளைகளுக்கு அடுத்த  நீர் நிலை கிடைக்கும்  வரை அவை இருந்தாலென்ன மடிந்தாலென்ன. எமக்கு தேவை எமது பிடிவாதங்களே. தவளைகள் இறந்தாலும் அழ யாருமில்லைதானே.

இந்தியா வாக்கு கொடுத்த 50,000 வீடுகளிற்கும், அரசு வீடுகட்ட கொடுத்த பணத்திற்கும் கடந்த 6 வருடங்களில்  நடந்தததை கொஞ்சம் பின்னோக்கி பாருங்கள் - எல்லாமே புரியும்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

போராடிய புலிகளை அழிப்பதற்குத் துணைபோன தமிழர்களும் இந்தத் தவளைபோல் புத்திசாலித்தனமாக யோசித்துப் போராட்டத்திற்குத் துணைபோயிருந்தால், இன்று தமிழனுக்கென்று ஒரு நாடு உலகத்தில் தோன்றியிருக்கும். தமிழன் யாரிடமும் பிச்சைக்குப் போகவேண்டிய நிலை வந்திராது. :(

  • கருத்துக்கள உறவுகள்

Temple_T_Maheswaran.jpgBildergebnis für mahesvaran shot dead in templeSri_Lankan_government_investigators.jpg

விஜயகலா  மகேஸ்வரன், அவர்கள்.... 
ஒட்டுக் குழுக்களின்..... செயல்களால் அவரின் கணவரை,  கோவிலில் சென்று தரிசனம் செய்த போது, இரத்தம் சிந்த... சுட்டுக் கொன்றவர்கள்  இதே.... ஒட்டுக் குழுக்கள். அவரின் கணவர் மகேஸ்வரன் அப்போது.... ஐ. தே. க. கட்சியின் முக்கிய அமைச்சர். அந்த நேரம் புலிகளும் ஒரு உறவுப் பாட்டை இவர்களுடன் வைத்திருந்தது  எல்லாருக்கும் தெரியும். அது... ஒரு அரசியல்.

நிற்க.... 
இப்போது....  விஜயகலா  மகேஸ்வரன், செய்வதை.... விமர்சிக்க, எந்த உரிமையும் உங்களுக்கில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

மக்கள் இவ்வளவு துன்பங்களை இவ்வளவு காலமும் அனுபவிக்க விட்டுவிட்டு.. இப்ப பொருத்துவீடு கொடுத்து சமாளிக்கினமாம். முறையான அபிவிருத்தி திட்டத்தின் கீழ் நிரந்தர வீடுகள் சகல வசதிகளோடும் கட்டுக்கொடுக்கப்படுவதே... அந்த மக்களின் இன்னலில் பங்கெடுத்தவர்கள் செய்ய வேண்டிய காரியம். 

அங்கால நாவற்குழியில்.. நிரந்தர கல்வீடுகளோடு சிங்களக் குடியேற்றம் தடல்புடலா நடக்குது. இங்கு எம் மக்களுக்கு பொருத்து இரும்பு வீடு கிடைக்கல்லைன்னு சிலர் கவலைப்படுகினம். அவை ஏதோ கென்ரெயினர் வீடுகளில் வாழ்வது போல. 

இது நாவற்குழியில் அமைந்து வரும்..

சிங்களக் குடியேற்றமான.. சிங்கள ராவய.. குடியேற்றத்திட்டத்தில் அமையும் வீடுகளும் கட்டுமானங்களும்...

‘Sinhala Ravaya’ colony in Jaffna

Naavatkuzhi_03.jpg

Naavatkuzhi_02.jpg

http://www.tamilnet.com/art.html?catid=79&artid=38271

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

சொந்த நிலங்களைப் பாதுகாப்பு வலயம் எனும் பேரில் பறித்து விட்டு எங்கோ ஒரு வரண்ட தேசத்தில் பொருத்து வீடு அல்ல எதைக் கொடுத்தாலும் மக்களுக்கு நிம்மதி இருக்காது.
சொந்தக்காணியைத் திருப்பிக் கொடுங்கள் அதில் அவர்கள் ஒரு கொட்டிலைப் போட்டாவது நிம்மதியாகவும் சந்தோசமாகவும் வாழ்வார்கள்

ஏதோ ஒரு வளர்ந்த நாட்டில்  இருந்து கருத்து கந்தசாமிமாதிரி அலட்டாமல், வெள்ளத்துக்குள்ளும், மழைக்குள்ளும், வெக்கைக்குள்ளும் தகர டப்பாக்குள்ள வாழும் இந்த மனிதரை பற்றி நான் எழுதுகிறேன். சென்றலைஸ்ட் வேண்டிலேசனுக்க இருந்து கதைப்பவருக்கு இது புரியாது. புரிய வேண்டுமென்று எதிர்பார்க்க நானும் இல்லை. இதைத்தானே 30 வருடமா செய்தீர்கள் . இனியாவது  அவர்களை வாழ விடுங்கள்.

3 hours ago, Paanch said:

போராடிய புலிகளை அழிப்பதற்குத் துணைபோன தமிழர்களும் இந்தத் தவளைபோல் புத்திசாலித்தனமாக யோசித்துப் போராட்டத்திற்குத் துணைபோயிருந்தால், இன்று தமிழனுக்கென்று ஒரு நாடு உலகத்தில் தோன்றியிருக்கும். தமிழன் யாரிடமும் பிச்சைக்குப் போகவேண்டிய நிலை வந்திராது. :(

புத்திசாலித்தனமா யோசித்த தவளைகளை போட்டு தள்ளியதுதான் எமது போராட்டமே - அப்புறம் எப்படி?

1 hour ago, வாத்தியார் said:

சொந்த நிலங்களைப் பாதுகாப்பு வலயம் எனும் பேரில் பறித்து விட்டு எங்கோ ஒரு வரண்ட தேசத்தில் பொருத்து வீடு அல்ல எதைக் கொடுத்தாலும் மக்களுக்கு நிம்மதி இருக்காது.
சொந்தக்காணியைத் திருப்பிக் கொடுங்கள் அதில் அவர்கள் ஒரு கொட்டிலைப் போட்டாவது நிம்மதியாகவும் சந்தோசமாகவும் வாழ்வார்கள்

இந்த வீட்டை அவர்களது சொந்த காணியில்தான் கட்டிக்கொடுக்க போறாங்கள். சொந்தமா காணி இல்லாதவருக்குதான் காணியும் கொடுத்து வீட்டையும் கட்டி கொடுக்க முயற்சி செய்யுறாங்கள் அண்ணை. கொஞ்சமாவது இதை பற்றி வாசித்துவிட்டு பதிலை தரவும். 

Edited by ஜீவன் சிவா
எழுத்துப்பிழை

  • கருத்துக்கள உறவுகள்

மக்கள் கடந்த 35 வருசமா உரிமையையும் இழந்து உடமையையும் இழந்து.. ஊரையும் இழந்து.. இவ்வளவு கஸ்டப்படுகினம்.. அது யாரால்... அந்த மக்களை ஆளுகிறம் என்று சொல்லும் அரசின் நடவடிக்கையால் தான். ஜே வி பி யுத்தம் செய்த போது தெற்கில்.. ஒரு பாதுகாப்பு வலயம் இருக்கவில்லை. சிங்கள மக்கள் அகதிகளாக விரட்டி அடிக்கப்படவில்லை. செல் அடிக்கவில்லை. விமானத்தாக்குதல் நடத்தவில்லை. ஆனால் ஜே வி பி பொலிஸ் நிலையங்கள்.. இராணுவ முகாம்களை கூட தாக்கி இருந்தது. 

எமது மக்களின் நிரந்தரக் கஸ்டம் நீக்கப்பட வேண்டும்.. அதற்கு அவர்களுக்கு சரியான திட்டமிடலுடன் கூடிய நிரந்தர அபிவிருத்தியே தேவை. சும்மா பொருத்து வீடுகள் அல்ல.

எனி பொருத்து வீட்டை விட்டிட்டு கென்ரயினர் வீடு வைச்சாலும் சிலர் வக்காளத்துக்கு வாங்குவினம்.. தகரம் கொட்டகை என்று.

அந்த மக்களை வாழ்விடங்களை விட்டு இராணுவத்தை ஏவி அடித்துக் கலைத்துவிட்டு தகரமும் கொட்டகைகளும் வெக்கை.. வெப்பம்... கொடுத்ததும் இவர்களே தான்.  எனி கென்ரயினர் வீடு கொடுப்பார்கள்.

guest-cargo-720x480-c.png

இந்தக் கென்ரயினர் வீடாவது நல்லா ஏசி எல்லாம் போட்டு சூப்பரா இருக்கு. இதை கொடுக்கலாம்.. என்று சொல்ல இங்க ஆக்கள் இருக்கினம். அந்தளவுக்கு சிங்கள  விசுவாச வெறி தலைக்கேறிப் போய் இருக்கிறார்கள். இவை தற்காலிக பொழுதுபோக்கிற்கானவையே தவிர நிரந்தர வதிவிடங்கள் அல்ல. அதற்காக இவை வடிவமைக்கப்பட்டவையும் அல்ல. பொருத்து வீடுகளுக்கும் இது பொருந்தும். 

ஆனால் சிங்களவர்களுக்கு கல் வீடும்.. மாட மாளிகைகளும் கட்டிக் கொடுக்கப்படும்.. அரச நிதியில்.. அதுவும் அவர்கள் எப்போதுமே வாழ்ந்திராத ஒரு நிலத்தில்.. புதிய புத்தகோவில்களோடு. அதை கேட்கப் பேச தடுக்க ஒரு மனுசரில்லை. tw_blush:

Edited by nedukkalapoovan

22 minutes ago, nedukkalapoovan said:

:grin:

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஜீவன் சிவா said:

இந்த வீட்டை அவர்களது சொந்த காணியில்தான் கட்டிக்கொடுக்க போறாங்கள். சொந்தமா காணி இல்லாதவருக்குதான் காணியும் கொடுத்து வீட்டையும் கட்டி கொடுக்க முயற்சி செய்யுறாங்கள் அண்ணை. கொஞ்சமாவது இதை பற்றி வாசித்துவிட்டு பதிலை தரவும். 

அப்படியா
அப்ப பலாலி படைத்தளத்தைச் சுற்றியும் இந்த வீடுகளை சிங்கள அரசு கட்டிக்கொடுக்கின்றதா??

8 minutes ago, வாத்தியார் said:

அப்படியா
அப்ப பலாலி படைத்தளத்தைச் சுற்றியும் இந்த வீடுகளை சிங்கள அரசு கட்டிக்கொடுக்கின்றதா??

காங்கேசந்துரையில் உள்ள நடேஸ்வரா கல்லூரியே 2ம் திகதிதான் திறக்கீனமாம். அதுவும் மாவிட்டபுரத்தில இருந்து பஸ்சில கூட்டிக்கொண்டு போய் விடுவினமாம்,  அப்புறம் கூட்டிக்கொண்டு வந்து மறுபடியும் மாவிட்டபுரத்தில விடுவினமாம். உங்களுக்கு அதுக்குள்ள இந்த கேள்வி.அந்த இடத்தை சேர்ந்த நாங்களே பாடசாலயாவது திறக்கப்படுகுதேன்று சந்தொசப்படுரம், உங்களுக்கு அதுவும் பிடிக்கவில்லையா?  

36 minutes ago, nedukkalapoovan said:

இந்தக் கென்ரயினர் வீடாவது நல்லா ஏசி எல்லாம் போட்டு சூப்பரா இருக்கு. இதை கொடுக்கலாம்.. என்று சொல்ல இங்க ஆக்கள் இருக்கினம். அந்தளவுக்கு சிங்கள  விசுவாச வெறி தலைக்கேறிப் போய் இருக்கிறார்கள். இவை தற்காலிக பொழுதுபோக்கிற்கானவையே தவிர நிரந்தர வதிவிடங்கள் அல்ல. அதற்காக இவை வடிவமைக்கப்பட்டவையும் அல்ல. பொருத்து வீடுகளுக்கும் இது பொருந்தும். 

இது கொண்டைனர் வீடு இல்லை எண்டதுகூட புரியாமல் ஒருவர். இதற்குத்தான் சிரித்தேன். :grin::grin::grin:

18 minutes ago, ஜீவன் சிவா said:

எனி பொருத்து வீட்டை விட்டிட்டு கென்ரயினர் வீடு வைச்சாலும் சிலர் வக்காளத்துக்கு வாங்குவினம்.. தகரம் கொட்டகை என்று.

:grin:

  • கருத்துக்கள உறவுகள்

கென்ரெயினர் வீடுகள்..

http://containers4saleuk.com/container-homes-inspiration.html

நிறையப் பேர் தங்கள் அறியாமைகளை தான் மக்களின் மீது திணிக்கப்பாடுபடுகிறார்கள். மக்களை முதலில் இதில் இருந்து காக்கனும். இதில சிங்களவனுக்கு வாக்காளத்து வேற. tw_blush:

Edited by nedukkalapoovan

5 minutes ago, nedukkalapoovan said:

நிறையப் பேர் தங்கள் அறியாமைகளை தான் மக்களின் மீது திணிக்கப்பாடுபடுகிறார்கள். மக்களை முதலில் இதில் இருந்து காக்கனும். இதில சிங்களவனுக்கு வாக்காளத்து வேற. tw_blush:

நான் எழுதியது மக்கள் படும் கஷ்டங்களை, உங்களுக்கு அவர்களுக்கு அவர்கள் படும் கஷ்டங்கள் புரிவதில்லை என்பது ஏற்கனவே தெரிந்த விடயம்தான். இங்கும் மக்களின் கஷ்டங்களை விட உங்கள் பிடிவாதங்களே + வாந்திகளே மேல்.

அதுசரி 2015இல் மீள் குடியேற்றத்திற்கு ஒதுக்கப்பட்ட 15 ஆயிரம் மில்லியன் ரூபாவில் 12 ஆயிரம் மில்லியன் ஏன் பாவிக்கப்படாமல் திறைசேரிக்கு திரும்பியது. உங்கட ஐயாவ கொண்டு 4 வீடாவது கட்டி கொடுத்திருக்கலாமே. சனம் கஷ்டப்பட்டாதான் உங்களுக்கு  கொண்டாட்டம் என்றால், அதற்கு இங்கு  யாரும் தயாரில்லை.

சென்ற டிசெம்பரில் கந்தரோடை இடம்பெயர்ந்தவர்கள்  முகாமிற்கு போயிருந்தேன் (மழை வெள்ளத்தின் போது) - உங்கிருந்து இன்னமும் கணனியில் வாந்தி எடுப்பவர்கள் வந்து பார்த்திருந்தால்  - மனசாட்சி உள்ளவனுக்கு வாந்தி உண்மையில் வந்திருக்கும். உங்களுக்கு வாராது.

வரும் ஆனா வேற வாந்தி.

Edited by ஜீவன் சிவா

  • கருத்துக்கள உறவுகள்

அந்த மக்கள் கேட்பது வீடல்ல. சொந்த இடத்தில்... நிரந்தர வதிவிடம்.  இதை தான் பிரித்தானிய பிரதமர் வந்த போதும் மக்கள் கேட்டார்கள். இந்தா எல்லாம் நடத்தி முடிக்கிறம் என்றான் சிங்களவன். இப்ப பொருத்து வீட்டை தனக்கு வசதியான இடத்தில் கட்டிவிச்சு மக்களை அதில் வலுக்கட்டாயமாக இருத்த நினைக்கிறான்.

ஏலவே இந்திய வீட்டுத்திட்டம் என்றார்கள். 50,000 வீடு என்றார்கள். 500 வீடு தன்னும் கையளிக்கப்பட்டதாகத் தெரியவில்லை. இதுக்கிடையில்...  பொருத்து வீடு நுழைஞ்சுது. இந்தக் கெடுபிடிகளால்... தான் வடக்கு மாகாண சபை ஒரு தெளிவான திட்டமிடலை செய்ய முடியாதுள்ளது. அதற்கு ஆயிரம் முட்டுக்கட்டைகள். கடைசியில் குற்றச்சாட்டு வேற.. வந்த காசை பாவிக்கல்லை. பாவிக்க விட்டால் தானே. அரசே அதுக்குள்ள தானும் தானும் என்று எல்லாத்தையும் குழப்பி அடிக்கும் போது.. மாகாண சபை என்ன செய்யும்.

இந்தத் திட்டங்களை மாகாண சபையோடு இணைந்து சர்வதேசமும்.. ஹிந்தியாவும்.. சொறிலங்கா அரசும் இணைந்து செய்ய வேண்டுமே தவிர ஆளாளுக்கு ஒரு ஆணியும் புடுங்க வேண்டாம் என்பது தான் மக்களின் தெளிவான நிலைப்பாடு. 

அது சிங்களக் காவடி தூக்கிகளுக்குப் புரியல்ல. இதில விக்கி ஐயா மீது பாய்ச்சல். இப்ப ஆளும் கட்சி இணையமைச்சரே இதை நிறுத்திட்டா. என்ன பண்ணப் போகினம். இதனை அமுலாக்கியே தீருவன் என்ற அமைச்சர் சுவாமிநாதன் என்ன பண்ணுவார். அவருடைய ஈகோவுக்கு.. மக்கள் பலிக்கடா. அதை ஒத்துக்கொள்ள ஒரு வக்கில்ல.  tw_blush:

Edited by nedukkalapoovan

9 minutes ago, nedukkalapoovan said:

அதுசரி 2015இல் மீள் குடியேற்றத்திற்கு ஒதுக்கப்பட்ட 15 ஆயிரம் மில்லியன் ரூபாவில் 12 ஆயிரம் மில்லியன் ஏன் பாவிக்கப்படாமல் திறைசேரிக்கு திரும்பியது.

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ஜீவன் சிவா said:

அதுசரி 2015இல் மீள் குடியேற்றத்திற்கு ஒதுக்கப்பட்ட 15 ஆயிரம் மில்லியன் ரூபாவில் 12 ஆயிரம் மில்லியன் ஏன் பாவிக்கப்படாமல் திறைசேரிக்கு திரும்பியது.

இதற்கான விளக்கத்தை ஏலவே.. முதலமைச்சரே ஊடக சந்திப்பொன்றில் வழங்கிட்டார். மேலும்.. அமைச்சர் ஐங்கரநேசனும் வழங்கினவர். அறியாமையில் இருப்பது மக்களோ மாகாண சபையோ அல்ல.. சிங்கள விசுவாசிகள் மட்டுமே. tw_blush:

12 minutes ago, nedukkalapoovan said:

இதற்கான விளக்கத்தை ஏலவே.. முதலமைச்சரே ஊடக சந்திப்பொன்றில் வழங்கிட்டார். மேலும்.. அமைச்சர் ஐங்கரநேசனும் வழங்கினவர். அறியாமையில் இருப்பது மக்களோ மாகாண சபையோ அல்ல.. சிங்கள விசுவாசிகள் மட்டுமே. tw_blush:

மீள் குடியேற்றத்திற்கு ஒதுக்கப்பட்ட 15000,743,574 ரூபாயில் 3000,563,668 ரூபாய்கள் மட்டும் செலவழிக்கப்பட்ட மர்மம் என்ன தலைவா? அரசு காசை தந்திட்டு செலவழிக்க விடவில்லையா அல்லது நிர்வாக திறமை  இல்லாத மாகானசபையா? பத்திரிகையாளர்கள் கேட்டபோது எனக்கு உரிய காலத்தில் திட்டங்களுக்கான வரைபு கிடைக்கவில்லை என்றாராம். அப்புறம் எப்படி 2014இல் 2015இக்குரிய பாதீட்டை (பட்ஜெட்) தயாரித்து இருப்பார்கள்.

Edited by ஜீவன் சிவா

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, ஜீவன் சிவா said:

கம்ரூன் வந்தார்.. எல்லாம் செய்யுறம்.

மோடி வந்தார்... 50,000 கட்டி முடிக்கிறம்.

சுவாமிநாதன் வந்தார் 65,000 பொருத்தி முடிக்கிறம்.

மக்கள் - அதிருப்தி.

முதலமைச்சர் - அதிருப்தி

விஜயகலா வந்தார் - எல்லாம் நிற்பாட்டி இருக்குது.

முதலமைச்சர்  மாகாண சபை சும்மா பெயருக்கு. முன்னர் டக்கிளசும்... மகிந்தவும்.. இப்ப சுவாமிநாதனும்.. விஜயகலாவும் ரணிலும் மைத்திரியும் தான் எல்லாம் தீர்மானிக்கினம். 

முதலமைச்சர் வெறும் பொம்மையாக.

இந்த நிதிப்பயன்பாடு பற்றி ஐங்கரநேசன் விளக்கமளித்துள்ளார். இந்த நிதி மீளக்குடியேறிய மக்களின் விவசாய நடவடிக்கைகளுக்கு பெரிதும் பயன்படுத்தப்பட்டுள்ளது. அதன் பெறுதியை பார்க்கிறோம்.. வடக்கு வெங்காய உற்பத்தியில் தன்னிறைவு.

ஆனால் மத்திய அரசு எடுத்த எந்தக் காரியமும் இன்னும் முடியல்ல. ஹிந்திய வாலுகளும் கூடச் சேர்ந்து.. எல்லாத்தையும் கெடுப்பது தான் நடக்குது. இதனை சர்வதேசம் தட்டிக்கேட்டு திருத்தினால் அன்றி... ஹிந்திய - சிங்கள கூட்டு.. தமிழரை உய்ய விடாது. :rolleyes:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
5 hours ago, ஜீவன் சிவா said:

அதுசரி அதுவரை வெய்யிலிலும்  மழையிலும் இந்த அரசியல்வாதிகளா வேதனைப்பட போகின்றார்கள். 

தவளைகளுக்கு அடுத்த  நீர் நிலை கிடைக்கும்  வரை அவை இருந்தாலென்ன மடிந்தாலென்ன. எமக்கு தேவை எமது பிடிவாதங்களே. தவளைகள் இறந்தாலும் அழ யாருமில்லைதானே.

இந்தியா வாக்கு கொடுத்த 50,000 வீடுகளிற்கும், அரசு வீடுகட்ட கொடுத்த பணத்திற்கும் கடந்த 6 வருடங்களில்  நடந்தததை கொஞ்சம் பின்னோக்கி பாருங்கள் - எல்லாமே புரியும்.

படம்போட்டு காட்டுவதற்காக அவசரம் அவசரமாக கட்டி கொடுக்கிறார்கள். யாழ்ப்பாணத்து காலநிலைக்கு ஒவ்வாத வீடுகள்.

  • கருத்துக்கள உறவுகள்

இது புரியாமல் சிலர் தங்கள் அறியாமைகளை மக்களின் கஸ்டத்தின் பெயரால் மக்களிடம் புகுத்தப்பார்க்கிறார்கள். 

12 minutes ago, குமாரசாமி said:

படம்போட்டு காட்டுவதற்காக அவசரம் அவசரமாக கட்டி கொடுக்கிறார்கள். யாழ்ப்பாணத்து காலநிலைக்கு ஒவ்வாத வீடுகள்.

இதில் சில பிரச்சனைகள் உண்டு அண்ணை. இல்லை என்று சொல்லவில்லை. 

1: எமது காலநிலைக்கு ஒரு விறாந்தை வேணும் - அது இல்லை.
2: விறகு வைத்து எரித்து சமைக்க ஒரு குசினி வேணும் - அதுவும் இல்லை.
3: காஸ் சிலிண்டெர் ஒன்று குடுக்கிறார்கள், விலை 1500. முடிந்தபின் அவர்களிடம் வசதி இருக்குமா அடுத்தது வாங்க ?
4: உள்ளூர் மூலப் பொருட்கள், தொழிலாளிகள், பாவிக்கப்படப் போவதில்லை.

ஆனால்
மின்சாரம் - சூரிய  ஒளியில் இருந்து
கட்டில், டிவி, கதிரைகள், என்று சகல உபகரணங்களுடனும் இந்த வீடு உள்ளது.

கடலில் தத்தளிப்பவனுக்கு துரும்பாவது கிடைக்கட்டுமே கரையேற  என்பது எனது நோக்கம். இல்லை துரும்பு  வேண்டாம் கப்பல் வரும்வரை தண்ணியில தத்தளித்துக்கொண்டிரு என்பவர்களைத்தான் நான் சாடினேன்.

34 minutes ago, nedukkalapoovan said:

இந்த நிதிப்பயன்பாடு பற்றி ஐங்கரநேசன் விளக்கமளித்துள்ளார். இந்த நிதி மீளக்குடியேறிய மக்களின் விவசாய நடவடிக்கைகளுக்கு பெரிதும் பயன்படுத்தப்பட்டுள்ளது. அதன் பெறுதியை பார்க்கிறோம்.. வடக்கு வெங்காய உற்பத்தியில் தன்னிறைவு.

விவசாயத்துறைக்கு 305 திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட 221.651 மில்லியன் ரூபாயில் 147.547 மில்லியன் ரூபாய்கள் மட்டும்தான் செலவு செய்யப்பட்டுள்ளதே. ஆனாலும் ஒரு விடயம் ஐங்கரநேசனின் அமைச்சு மட்டும்தான்  இவ்வளவாவது செய்ததது. அதுக்குதான் இப்போது புடுங்குப்பாடு - மற்றவர்களுடன் கலந்தாலோசிக்காமல் தன்னிச்சையாய் செயல்படுகின்றார் என்று.

Edited by ஜீவன் சிவா

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.