Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தரைமட்டமான முகாமின் படங்கள் வெளியானது : இன்னமும் சிறிய வெடிப்புச் சத்தங்கள் : 7500 பேர் இடம்பெயர்வு : தீவிர விசாரணைக்கு ஜனாதிபதி, பிரதமர் பணிப்பு

Featured Replies

தரைமட்டமான முகாமின் படங்கள் வெளியானது : இன்னமும் சிறிய வெடிப்புச் சத்தங்கள் : 7500 பேர் இடம்பெயர்வு : தீவிர விசாரணைக்கு ஜனாதிபதி, பிரதமர் பணிப்பு

 

அவிசாவளை கொஸ்கம - சலாவ இராணுவ முகாமில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தால் முகாம் தரைமட்டமாகியுள்ளது. தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ள போதும் குறித்த பகுதியில் இன்னமும் சிறு சிறு வெடிப்புச் சம்பவங்கள் இடம்பெறுவதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் ஜெயனாத் ஜெயவீர தெரிவித்தார்.2016-06-06_at_12-00-15.jpg

இதுதொடர்பில் கருத்து தெரித்த அவர்,

சிறிய வெடிப்புச் சம்பவங்கள்

முகாமில் ஆயுதங்கள் இருந்த பகுதிகள் முற்றாக சேதமடைந்துள்ளன. இன்னமும் குறித்த பகுதியில் சிறிய வெடிப்புச் சம்பவங்கள் இடம்பெற்று கொண்டிருக்கின்றன. எனினும் முழுமையாக கட்டுபாட்டுக்குள் கொண்டுவர படை வீரர்கள் முயற்சி செய்து வருகின்றனர்.

விஷேட ரோந்து நடவடிக்கை

சலாவ இராணுவ முகாமின் உட்பகுதியிலும் கொஸ்கம பிரதேசத்திலும் இராணுவத்தினர் விஷேட ரோந்து நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் குறித்த பிரதேசத்திற்கு விசேட பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

2016-06-06_at_11-55-19.jpg

வெளியேறுங்கள்

முகாமை அண்மித்த பகுதிகளில் வசிக்கும் மக்கள் தமது பொருட்களுடன் அங்கிருந்து வெளியேறுமாறு இராணுவத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் பிரதேசங்களில் சிதறுண்டு காணப்படும் வெடிப்பொருட்களை எக்காரணம் கொண்டும் கையில் எடுக்க வேண்டாம் என முக்கய வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. 

வெடிப்பொருட்கள் கிடக்கும் இடத்திலிருந்து மிக நீண்ட தூரத்திற்கு அப்பால் இருக்குமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அவசர தேவைகளுக்கு

கொஸ்கம பிரதேசத்தில் உள்ள மக்களுக்கு அவசர தேவைகள் இருக்குமாயின் 0112434251இ 0113818609  என்ற இராணுவத்தினரின் தொலைபேசி எண்களுக்கு தொடர்பு கொள்ளவும்.

 

7500 பேர் இடம்பெயர்வு

சலாவ இராணுவ முகாமை அண்மித்த பகுதிகளிலிருந்து 7500 பேர் இடம்பெயர்ந்து பாதுகாப்பான 5 முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கான உணவு, தண்ணீர் உட்பட அனைத்து தேவைகளும் வழங்கப்பட்டுள்ளதாக  அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்தார்.13254579_797544843714126_380040605166135

அனர்த்த முகாமைத்துவ நிலையம்

கொஸ்கம மக்கள் யாருக்காவது அவசர தேவைகள் ஏற்படுமாயின் 117 என்ற இலக்கத்துக்கு தொடர்பு கொள்ளுமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் கோரிக்கை விடுத்துள்ளது.

ஜனாதிபதி பிரதமர் பணிப்பு

சலாவ இராணுவ முகாமில் ஏற்பட்ட வெடிப்பு சம்பவம் தொடர்பில் தீவிர விசாரணைகளை மேற்கொள்ளுமாறு குற்றப் புலனாய்வு பிரிவிற்கு ஜனாதிபதி மற்றும் பிரதமர் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

13406767_797544620380815_136710395141192

13330907_797544593714151_648156705718971

13335545_10157024531980525_4590921309661

13346953_797544687047475_854373349449496

13330907_797544593714151_648156705718971

13315377_797544893714121_158956182421647

13322035_797544717047472_351970305567498

13254579_797544843714126_380040605166135

CkPQVOrWgAA_Zgl.jpg

13407022_797544550380822_377311488362909

13394123_797544393714171_838265054658229

13343068_797544740380803_869071710122664

13325711_797544670380810_364443091776476

http://www.virakesari.lk/article/7218

மிக அருமையான காட்சிகள்!

வலியும், வேதனையும் அவனவனுக்கு வந்தால் தான் விளங்கும்.

5 minutes ago, நவீனன் said:

முகாமை அண்மித்த பகுதிகளில் வசிக்கும் மக்கள் தமது பொருட்களுடன் அங்கிருந்து வெளியேறுமாறு இராணுவத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் பிரதேசங்களில் சிதறுண்டு காணப்படும் வெடிப்பொருட்களை எக்காரணம் கொண்டும் கையில் எடுக்க வேண்டாம் என முக்கய வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. 

இரசாயன, நச்சு ஆயுதங்களும் இருந்திருப்பது உறுதியாகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

அநெ சிங்கள மினிசு பவ்.....

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, putthan said:

அநெ சிங்கள மினிசு பவ்.....

உடன ஒரு கப்பல் நிவாரணம் அனுப்பி வைக்கிறது. ரெம்ப பவ்.................................. இழுக்குது. tw_blush::rolleyes:

முள்ளிவாய்க்காலில் நிகழ்த்தப்பட்ட அழிவில் இது எத்தனை சதவீதம் இருக்கும்....  0.0000000000000000001%  :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, nedukkalapoovan said:

உடன ஒரு கப்பல் நிவாரணம் அனுப்பி வைக்கிறது. ரெம்ப பவ்.................................. இழுக்குது. tw_blush::rolleyes:

முள்ளிவாய்க்காலில் நிகழ்த்தப்பட்ட அழிவில் இது எத்தனை சதவீதம் இருக்கும்....  0.0000000000000000001%  :rolleyes:

விமானத்தில் அனுப்பிற பிளான்........:rolleyes:இதெல்லாம் அழிவு என்று சொன்னால் எங்களுடையதை எப்படி சொல்லுறது

சலாவ பகுதியில் மக்கள் குடியிருப்புக்களை குறி வைக்காத 6 - 7 மணிநேர வெடிப்புக்கள் ஏற்படுத்திய தாக்கத்தை, அழிவுகளை  நேரடியாக பார்த்த சிங்களவனுக்கு, சிங்கள பௌத்த இன-மத வெறியர்களுக்கு, 25 வருடங்களாக தமிழ் மக்களை குறிவைத்துத் தாக்கியதால் ஏற்பட்ட சேதங்களை உணருமளவுக்கு கொஞ்சமாவது புத்தி வருமா தெரியவில்லை.

மற்றவன் சொத்துக்களை அபகரித்து வாழும் சிங்கள பௌத்த இன-மத வெறிபிடித்த மக்கள் இவற்றை எல்லாம் பார்த்து திருந்துவார்களா?  

இதைப் போன்ற பல்லாயிரம் மடங்கு சேதங்கள், அழிவுகள்  ஏற்படும்போது தான் நேர்மையற்ற, மனச்சாட்சியற்ற சிங்கள பௌத்த இனத்திடமிருந்து சிறிது மாற்றங்களை எதிர்பார்க்க முடியும். 

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையிலேயே இது விபத்துத் தானா அல்லது ஏதாவது அரசியல் நோக்கம் உள்ளதா என்று ஒரு அரசியல்  கட்டுரை யாராவது எழுதுவார்கள்

51 minutes ago, வாத்தியார் said:

உண்மையிலேயே இது விபத்துத் தானா அல்லது ஏதாவது அரசியல் நோக்கம் உள்ளதா என்று ஒரு அரசியல்  கட்டுரை யாராவது எழுதுவார்கள்

பிரபல கனவுலக ஆய்வாளர்கள் சுதர்மா, நிலாப்தீன் போன்றவர்கள் ஏற்கனவே தங்கள் கற்பனைக் குதிரைகளை தட்டிவிட்டிருப்பார்கள்.  

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
6 hours ago, நவீனன் said:

தரைமட்டமான முகாமின் படங்கள் வெளியானது : இன்னமும் சிறிய வெடிப்புச் சத்தங்கள் : 7500 பேர் இடம்பெயர்வு : தீவிர விசாரணைக்கு ஜனாதிபதி, பிரதமர் பணிப்பு

என்னப்பா உந்த சின்ன விசயத்துக்குப்போய் காட்டுக்கத்து கத்துறாங்கள். Hihi

7 hours ago, putthan said:

விமானத்தில் அனுப்பிற பிளான்........:rolleyes:

கனடாவில் இருந்து முதல் flight வெளிக்குடுதம் :cool:

43 minutes ago, குமாரசாமி said:

என்னப்பா உந்த சின்ன விசயத்துக்குப்போய் காட்டுக்கத்து கத்துறாங்கள். Hihi

மனிதர் இறக்கும் போது எனக்கு கவலைதான் - யாராக இருந்தாலும். ஆனால் எம்மினமே அழியும்போது எதையும் சொல்லாத டெய்லி மிரர் இப்ப எப்படி படம் காட்டுது எண்டு பாக்கத்தான் - கொதி வருகுது.

CkP7VngVAAARGL-.jpg

  • கருத்துக்கள உறவுகள்

கொஞ்சம் அதிகமாக திட்டிப்போட்டன் போல....

  • கருத்துக்கள உறவுகள்

A taste of Mulliwaikkal

என்கென்னவோ, மகிந்த கோஸ்டி, வாங்கின புதுச் சாமான்களை அவன்ற் கம்பனி மூலம் வித்துப்போட்டு, பழசுகளை போட்டு எரிச்சுப் போட்டு கணக்கை குளோஸ் பண்ண போட்ட பக்கா ஐடியா போல கிடக்குது.

Edited by Nathamuni

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.