Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

லண்டன் பிரஜை மீது, சிறைச்சாலை அதிகாரிகள் தாக்குதல்

Featured Replies

லண்டன் பிரஜை மீது, சிறைச்சாலை அதிகாரிகள் தாக்குதல்
 
 

article_1465546799-Attack.jpg-செல்வநாயகம் கபிலன்

சாவகச்சேரி நீதிமன்றினால் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த லண்டன் பிராஜா உரிமைபெற்ற நபர் மீது, சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் கம்பியாலும் தடியாலும் தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது என மனித உரிமைகள் ஆணையகத்தின் யாழ்ப்பாணக் கிளை அலுவலக இணைப்பாளர் ரி.கனகராஜ், இன்று வெள்ளிக்கிழமை (10) தெரிவித்தார்.

தாக்குதலுக்குள்ளானவர் காயங்களுக்கு உள்ளாகி யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கடந்த திங்கட்கிழமை (06) இரவு, யாழ். சிறைச்சாலையில் இடம்பெற்றுள்ள இச்சம்பவத்தில் இலண்டனில் வசித்து வந்தவரும், குடமியன் வரணிப் பகுதியினைச் சேர்ந்த வேலாயுதம்பிள்ளை ரேணுகாரூபன் (வயது 35) என்ற நபரே தாக்குதலுக்குள்ளாகியுள்ளார்.

கடந்த ஜனவரி மாதம் குடமியன் பகுதியில் இடம்பெற்ற மோதல் சம்பவத்துடன் தொடர்புபட்ட நிலையில் ஏற்கெனவே நால்வர் கொடிகாமம் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருந்தனர்.

மேற்படி சம்பவத்துடன் ஐந்தாவது சந்தேகநபராக இவர் தேடப்பட்டு வந்திருந்தார். இந்நிலையில் வெளிநாட்டுக்குச் சென்று மீண்டும் திரும்பிய நிலையில், கடந்த 01ஆம் திகதி, பொலிஸார் இவரைக் கைது செய்திருந்தனர். மறுநாள் 02ஆம் திகதி, சாவகச்சேரி நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட போது 17ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையிலே சிறைச்சாலை அதிகாரிகளுடன் இவர் வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டிருந்ததுடன், அநாவசியமான சொற்களைப் பாவித்து முரண்பட்டுள்ளார். இதனால் சிறைச்சாலை அதிகாரிகள் தாக்குதல் மேற்கொண்டதாக சிறைச்சாலை வட்டாரத்தகவல்கள் தெரிவிக்கின்றன.

இச்சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட நபரின் உறவினர்கள் யாழ்.மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளனர்.

- See more at: http://www.tamilmirror.lk/174389/லண-டன-ப-ரஜ-ம-த-ச-ற-ச-ச-ல-அத-க-ர-கள-த-க-க-தல-#sthash.ixWG2YtD.dpuf
  • கருத்துக்கள உறவுகள்

லண்டனில் சிறைச்சாலை அதிகாரிகள் கைதிகளை நடத்தும் முறைகளையும் தொலைக்காட்சியில் காட்டுவார்கள். இவருக்கு லண்டன் சிறைச்சாலையில் இருந்த அனுபவமும் உள்ளது போலும். சிறிலங்கன் சிறைச்சாலையும் அப்படித்தான் இருக்கும் என எண்ணியிருப்பார்....:grin: 

  • கருத்துக்கள உறவுகள்

முதலில அடிபாட்டில் ஈடுபட்டு, தப்பி வந்தவர். மனம் கேக்காம திரும்பிப் போயிருக்கிறார். அதுக்காத் தன்னும் கெளரவமாக நடத்தி இருக்கலாம். 

இவரும் இங்கீலீசில தூசணத்தை சொல்லியிருக்கலாம்... தமிழில வெட்டி வீசியிருப்பார்.... இலண்டனில் தேமதுரத் தமிழ் பரப்புவராக இருச்கும். :grin:

சாவகச்சேரி நீதிமன்றினால் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பிரித்தானிய பிராஜா உரிமைபெற்ற நபர் மீது, சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் கம்பியாலும் தடியாலும் தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது என மனித உரிமைகள் ஆணையகத்தின் யாழ்ப்பாணக் கிளை அலுவலக இணைப்பாளர் ரி.கனகராஜ், தெரிவித்தார். தாக்குதலுக்குள்ளானவர் காயங்களுக்கு உள்ளாகி யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சாவகச்சேரி நீதிமன்றினால் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பிரித்தானிய பிராஜா உரிமைபெற்ற நபர் மீது, சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் கம்பியாலும் தடியாலும் தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது என மனித உரிமைகள் ஆணையகத்தின் யாழ்ப்பாணக் கிளை அலுவலக இணைப்பாளர் ரி.கனகராஜ், தெரிவித்தார். தாக்குதலுக்குள்ளானவர் காயங்களுக்கு உள்ளாகி யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
 
கடந்த திங்கட்கிழமை இரவு, யாழ். சிறைச்சாலையில் இடம்பெற்றுள்ள இச்சம்பவத்தில் இலண்டனில் வசித்து வந்தவரும், குடமியன் வரணிப் பகுதியினைச் சேர்ந்த வேலாயுதம்பிள்ளை ரேணுகாரூபன் (வயது 35) என்ற நபரே தாக்குதலுக்குள்ளாகியுள்ளார். கடந்த ஜனவரி மாதம் குடமியன் பகுதியில் இடம்பெற்ற மோதல் சம்பவத்துடன் தொடர்புபட்ட நிலையில் ஏற்கனவே நால்வர் கொடிகாமம் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருந்தனர். மேற்படி சம்பவத்துடன் ஐந்தாவது சந்தேகநபராக இவர் தேடப்பட்டு வந்திருந்தார்.

இந்நிலையில் வெளிநாட்டுக்குச் சென்று மீண்டும் திரும்பிய நிலையில், கடந்த 01ஆம் திகதி, பொலிஸார் இவரைக் கைது செய்திருந்தனர். மறுநாள் 02ஆம் திகதி, சாவகச்சேரி நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட போது 17ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டிருந்தார். இந்நிலையிலே சிறைச்சாலை அதிகாரிகளுடன் இவர் வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டிருந்ததுடன், அநாவசியமான சொற்களைப் பாவித்து முரண்பட்டுள்ளார். இதனால் சிறைச்சாலை அதிகாரிகள் தாக்குதல் மேற்கொண்டதாக சிறைச்சாலை வட்டாரத்தகவல்கள் தெரிவிக்கின்றன. இச்சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட நபரின் உறவினர்கள் யாழ்.மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளனர்.
http://www.seithy.com/breifNews.php?newsID=159279&category=TamilNews&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்
On 10.6.2016 at 1:23 PM, Nathamuni said:

முதலில அடிபாட்டில் ஈடுபட்டு, தப்பி வந்தவர். மனம் கேக்காம திரும்பிப் போயிருக்கிறார். அதுக்காத் தன்னும் கெளரவமாக நடத்தி இருக்கலாம். 

இவரும் இங்கீலீசில தூசணத்தை சொல்லியிருக்கலாம்... தமிழில வெட்டி வீசியிருப்பார்.... இலண்டனில் தேமதுரத் தமிழ் பரப்புவராக இருச்கும். :grin:

முனி.... இவர்,  லண்டன்  பி.பி.சி. தமிழோசையில் வேலை செய்பவரா? 14.gif

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

முனி.... இவர்,  லண்டன்  பி.பி.சி. தமிழோசையில் வேலை செய்பவரா? 14.gif

இல்லை ..... வெள்ளைகளுடனும் தமிழ் கதைக்கும் கோஸ்டி ஒன்று இருக்குதெல்லே.... சுட்டுப் போட்டாலும் ஆங்கிலம் வராத, கோஸ்டிகளை, லண்டனில் தேமதுரத் தமிழ் பரப்பும் கோஸ்டிகள் என்போம்...tw_confused:

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப காலம் மாறிபோச்சு முனியர்  இப்ப பிள்ளைகள் திரீவே லைனில் மொழிபெயர்ப்பு செய்யிதுகள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தவறுக்கு மன்னிக்கவும்.

Edited by குமாரசாமி
தவறுக்கு மன்னிக்கவும்.

  • கருத்துக்கள உறவுகள்
திருமணத்துக்கு யாழ். வந்த பிரித்தானியப் பிரஜை கைது செய்யப்பட்டு சித்திரவதை! Top News 
[Sunday 2016-06-12 08:00]
திருமணத்துக்காக யாழ்ப்பாணம் வந்த பிரித்தானிய பிரஜை சித்திரவதை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக யாழ். மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.  இந்த சித்திரவதை சம்பவம் தொடர்பில் வடமாகாண முதலமைச்சர் சி.விவிக்னேஸ்வரன், தம்மை சந்தித்த பிரித்தானிய உயர்ஸ்தானிகரிடமும் முறையிட்டிருந்தார் என்று லண்டனில் இருந்து வெளியாகும் டெய்லி மெயில் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

திருமணத்துக்காக யாழ்ப்பாணம் வந்த பிரித்தானிய பிரஜை சித்திரவதை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக யாழ். மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த சித்திரவதை சம்பவம் தொடர்பில் வடமாகாண முதலமைச்சர் சி.விவிக்னேஸ்வரன், தம்மை சந்தித்த பிரித்தானிய உயர்ஸ்தானிகரிடமும் முறையிட்டிருந்தார் என்று லண்டனில் இருந்து வெளியாகும் டெய்லி மெயில் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

   

36 வயதான வேலாயுதப்பிள்ளை ரேணுகருபன் என்பவர் இந்த மாதம் முதலாம் திகதி யாழ்ப்பாணத்தில் உள்ள தமது வீட்டுக்கு சென்றிருந்த வேளையில் மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் அவர் மீது தாக்குதல் நடத்திய பின்னர் யாழ்ப்பாண சிறைச்சாலைக்கு அழைத்து சென்று தடுத்து வைத்துள்ளனர். ரேணுகருபனுக்கு பேசிமுடித்த திருமணம் ஜூன் 8ஆம் திகதி நடைபெறவிருந்தது. இதனையடுத்து மனைவியுடன் ஜூன் 23 ஆம் திகதி அவர் லண்டனுக்கு புறப்படத் திட்டமிட்டிருந்தார். இந்தநிலையில், அவர் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

லண்டனில் இருந்து தாயகத்துக்கு திரும்புவோர் துரோகிகளாக பார்க்கப்பட்டு சித்திரவதைக்கு உள்ளாக்கப்படுவதராக டெய்லி மெயிலுக்கு கருத்துரைத்த மனித உரிமைகள்ஆர்வலர் ஒருவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

 

london-touture-120616-seithy.jpg

http://www.seithy.com/breifNews.php?newsID=159380&category=TamilNews&language=tamil

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.