Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அநுராதபுரத்தில் தமிழ் மொழி கற்பிக்கும் வண.விமலசார தோரர்

Featured Replies

158DSC07849.jpg

“பிற மொழி­யையும் தெரிந்து வைத்­தி­ருங்கள். அது பிற­ரோடு பழக உதவும். அடுத்­த­வரை அணுக உதவும். வெறும் மொழிப்­பித்து என்­பது உங்­களைக் கிணற்றுத் தவ­ளை­யாக்­கி­விடும். கிணற்றுத் தவ­ளையும் நீந்தும் உயிர்­வாழும். ஆனால், உல­கத்தின் அனு­ப­வமும் அளவும் அதற்குச் சிறி­ய­தாகத் தெரியும்” என முகம் கொள்­ளாத சிரிப்­புடன் எம்­மோடு பேசத் தொடங்­கினார் வணக்­கத்­துக்­கு­ரிய குட்­டிக்­கு­ளமே விம­ல­சார தேரர். 
 
“இந்த இனிப்­பான தரு­ணத்தில் சில விட­யங்­களை உங்­க­ளோடு பகிர்ந்து கொள்ள விரும்­பு­கிறேன்” என இலக்­கணத் தமி­ழில் தேன் சுவை­யாக கூறினார் 32 வய­தான தேரர்.
 
“மொழிப்­பற்று என்­பது மரத்தின் வேரைப் போன்­றது. வேர் மண்ணை ஊன்­றி­யி­ருப்­பதே எமக்குத் தேவை. அம்­ம­ரத்தின் கிளைகள் எண்­ணிக்கை எமக்கு அவ­சி­ய­மற்­றது.
 
இங்கு நான் கிளைகள் எனச் சொல்­வது நாம் கற்­ற­றிந்த சில மொழி­களே. மொழி­களை தங்­க­ளுக்குள் வளர விடுங்கள். அது உங்­களை வளர்த்து விடும். நாடும் இனமும் வளரும்” என ஒரு போடு போட்டார் தேரர். அவ­ரது அரு­மை­யான தமிழ் கேட்டு ஆடிப்போய் விட்டோம்.
 
ஆழ­மான தமிழ் மொழி அறிவு அவ­ருக்குள் இருப்­பதை தெரிந்து நாமும் சொக்­கிப்போய் விட்டோம்.
 
அண்­மையில் அநு­ரா­த­புரம் புனித நக­ரத்தில் உள்ள பஞ்­சா­ரா­நந்த மஹா பிரி­வெ­னா­வுக்கு சென்­றி­ருந்தோம். பௌத்த மத குரு­கு­லத்தில் குரு­கு­லக்­கல்வி கற்றுக் கொடுக்கும் கட்­டடப் பிரிவில் தமிழ் மொழியை இளம் பிஞ்­சு­க­ளான பௌத்த மத சிறு­வ­யது தேரர்­க­ளுக்கு கற்­றுக்­கொ­டுக்கும் தரு­ணத்­தி­லேயே விம­ல­சார தேரர் எமது பார்­வைக்கு தென்­பட்டார். 
 
அப்­போதே அவரின் தமிழ் மொழி பற்­றிய உணர்வை தெரிந்து வியந்தோம். அவர் எம்­மோடு உரை­யாடும் போது சகோ­தர சிங்­கள மொழியின் ஒரு வார்த்­தையைக் கூட கலக்­காமல் சுத்த தமிழில் அவர் பேசி­யதைக் கண்டு வியந்துப் போனோம் அதி­ர­டி­யாக.
 
“நான் சிங்­கள பௌத்த குடும்­பத்தில் பிறந்­தவன். அநு­ரா­த­புரம் குட்­டிக்­கு­ளமே எனது ஊர். எனது அம்­மாவின் குடும்­பத்­தா­ருக்கு தமிழில் ஒரு வார்த்­தையும் தெரி­யாது. அப்­பாவின் குடும்­பத்­தி­ன­ருக்கு தமிழ் மொழியில் நல்ல பரிச்­சயம் உண்டு.
 
இதற்­கான காரணம் எனது அப்­பாவின் கிரா­மத்தில் சகோ­தர இஸ்­லா­மிய சமூ­கத்தைச் சேர்ந்தோர் பரம்­ப­ரை­யாக வாழ்­கின்­றனர். இதன் கார­ண­மாக தமிழ் மொழி தொடர்பு எனது அப்­பாவின் குடும்­பத்­திற்குள் ஊடு­ரு­வி­யது. 
 

  158DSC07861.jpg
எனக்கு சிறு­வ­யதில் தமிழில் ஒரு வார்த்தை கூட தெரி­யாது வாழ்ந்தேன். இக்­கு­ரு­கு­லத்தில் எனது சின்­னஞ்­சிறு வயதில் இணைந்தேன். இக்­கு­ரு­கு­லத்தில் தான் நான் தமிழ் மொழியைக் கற்றுக் கொண்டேன்.
 
மிகவும் இனி­மை­யான செம்­மொழி தமிழ். இத்­தமிழ் மொழியை முதன் முதலில் வண. தேவா­னந்த தேர­ரிடம் கற்றேன். பின்னர் உடு­நு­வர வண. இந்­த­ரத்­தன தேர­ரிடம் தமிழ் மொழியைக் கற்ற நான், களனி பல்­க­லைக்­க­ழ­கத்தில் இணைந்து தமிழ் மொழியில் டிப்­ளோமா கற்­கையைக் கற்று முடித்­துள்ளேன். இன்னும் கற்க வேண்டும்.
 
இது மிகவும் ஆழ­மான மொழி. அதற்குள் குதித்து கற்க வேண்டும். வார­வாரம் தமிழ்  பத்­தி­ரி­கை­களை படிப்பேன். வாசிப்பே ஒரு மனி­தனை முழு­மை­யா­ன­வ­னாக வெளி­உ­ல­குக்கு அடை­யாளம் காட்­டு­கின்­றது” என அவர் கூறினார்.
 
தேரரை இடை மறித்து “தமிழ் மொழியை எவ்­வாறு சகோ­தர சிங்­கள சமூக உறுப்­பி­னர்­க­ளுக்கு கற்றுத் தரு­கின்­றீர்கள்?” என்ற வினாவை எழுப்­பினோம்.
“இன்று இக்­கு­ரு­கு­லத்தின் பௌத்த இளம் சீடர்­க­ளுக்கு தமிழ் கற்­றுத் ­த­ரு­கின்றேன். அநு­ரா­த­புரம் பிர­தே­சத்து பல பிரி­வெ­னாக்­களில் தமிழ் மொழியை கற்றுத் தரு­கின்றேன்.

  158DSC07852.jpg
சிங்­கள ஆசி­ரியர் சமூ­கத்தைச் சேர்ந்த பலரும் ஆர்­வத்­துடன்  தமிழ் மொழியை என்­னிடம் கற்று வரு­கின்­றனர். எங்கும் எதிர்ப்பு எழு­வ­­தில்லை. சிங்­கள மக்­களின் இளம் சமூ­கத்­தினர் இன்று தமிழ் மொழியைக் கற்றுக் கொள்­வதில் பெரும் ஆர்­வ­மாக உள்­ளனர்.
 
நூற்றி இரு­ப­துக்கும் மேற்­பட்ட பௌத்த சீடர்கள் தமிழ் மொழியைக் கற்று வரு­கின்­றனர். இவர்கள் 12 முதல் 20 வயதைக் கொண்­ட­வர்கள். தமிழ் தீண்­டப்­ப­டாத மொழி அல்ல. இதை அனை­வரும் உணர வேண்டும்” என உணர்ச்சி மேலிட சொன்னார் தேரர்.
 
இவற்­றுக்கும் மேலாக தங்­களின் தமிழ் பணி எவ்­வாறு செயற்­ப­டு­கி­றது எனவும் அவ­ரிடம் கேள்­வியை தொடுத்­ததும் மீண்டும் துளிர்க்கும் புன்­ன­கை­யோடு நெற்றி சுருக்கி பதில் கொடுத்தார்.
 
“பௌத்த மத போத­னை­களை தமிழ் சமூ­கத்­தினர் மற்றும் என்­னிடம் தமிழ் கற்கும் சிங்­க­ள­வர்கள் மத்­தி­யிலும் முன்­னெ­டுக்­கின்­றனர். சகோ­தர இஸ்­லா­மிய சமூ­கத்தின் புனித நோன்பு காலத்தின் இப்தார் நிகழ்­வு­களின் அழைப்பை ஏற்று அங்கு தமிழ் மொழியில் உரை­யாற்­று­கின்றேன். இதுவே தமி­ழுக்கு நான் வழங்கும் சிறு தொண்­டாகும்.
 
 தமிழ்  மொழியைக் கற்றுக் கொள்­வ­தோடு அம்­மொழி பேசும் தமிழ் மக்­களின் கலை, கலா­சாரம், பண்­பா­டுகள் பற்றி கற்­பதும் அவ­சியம். எந்­த­வொரு மொழியின் அழி­வுக்கும் நாம் துணை­போகக் கூடாது. பாவங்­க­ளி­லேயே இச்­செ­ய­லா­னது பெரும் பாவ­மாகும். மக்­களின் மத்­தியில் நல்­லி­ணக்கம், புரிந்­து­ணர்­வுக்கு பிற மொழிக் கல்வி அவ­சியம். தமி­ழர்கள் சிங்­க­ளத்­தையும், சிங்­க­ள­வர்கள் தமி­ழையும் கற்­றுக்­கொள்ள வேண்டும். வள­மான வாழ்­விற்கு பிற­மொழி அறிவுத் தேவை.
 
பிற மொழியை கற்று அதனை பிற­ருக்கும் வழங்க வேண்டும். இதுவே கல்வி தானம் என்­கின்றோம். தனது தாய் மொழிக்கு வழங்கும் கௌர­வத்­தையும் கண்­ணி­யத்­தையும் அனை­வரும் ஏனைய மொழி­க­ளுக்கும் வழங்க வேண்டும்” என அவர் தெரி­வித்தார்.
 
“மற்­றொரு மொழியை தாய் மொழி­யாகக் கொண்ட நீங்கள் தமிழ் மொழியின் மீது பெரும் ஆர்­வமும் கௌர­வமும் கொண்­டுள்­ளீர்கள். நீங்கள் எமது நாட்டு மக்­க­ளுக்கு கூற விரும்­பு­வது என்ன?” எனவும் கேள்வி எழுப்­பினோம்.
 
இது குறித்து இங்கு மனம் திறந்து பேசினார் தேரர், “முப்­பது வருட யுத்தம் எமது இரு சமூ­கத்­திலும்  பல கோணல்­களை ஏற்­ப­டுத்தி விட்­டது. இனி இவ்­வா­றான நிலை ஏற்­பட வாய்ப்பு வழங்க எவரும் முனையக் கூடாது.
 
எனக்கு அர­சியல் தெரி­யாது. மனி­தர்­க­ளுக்­காகத் தான் நாடு, மொழி, இனம், சமூகம் மற்றும் அதன் பிரி­வுகள் அனைத்தும். பிற மொழியை கற்­பது புரி­தலில் வேர் விட்டு வளர்த்து விடும். அது மலர்ந்து மணம் பரப்பும். மலரும் மணமும் புதிய உலகை புதிய குழலை புதிய புரி­தலை புதிய உணர்வை எம்­மைச்­சுற்றி வலம் வர வைக்கும்.
 
அப்போது எம்மை  அனைவரும் புரிந்து கொள்வார்கள். அவ்வாறு இன்றி அமைப்புகளின் எதிரியாக உறவுகளின் எதிராக, சாதி, மதம், சமூகம் ஆகியவைகளின் விரோதிகளாக மாறி வாழப்பழக வேண்டாம்.
 
வாழ்க்கை சிக்கல் இல்லாது வாழ தர்மத்துடன் வாழ வேண்டும். அனைவரையும் நேசிக்க வேண்டும். விழிப்புணர்வோடு உங்களது வாழ்வை ஆராய்ந்து பாருங்கள். விடை கிடைக்கும்”  என்றார் வண. குட்டிக்குளமே விமலசார தேரர். இதுவும் நிஜம் தானே!
 
(படங்கள்: கே.பி.பி. புஷ்பராஜா)  
http://metronews.lk/feature.php?feature=158&display=0#sthash.DLe6AU2F.dpuf

  • கருத்துக்கள உறவுகள்

லட்ச்சத்தில் ஒரு நல்ல பிக்கு போல் உள்ளது.:)

பல தமிழ் சிறுவர்கள் மலையகத்தில் இருந்து கடத்தப்பட்டு பிக்குகளாக்கப்பட்டனர்.
அவர்களில் ஒருவராகவும் இருக்கலாம். 

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Athavan CH said:


நான் சிங்­கள பௌத்த குடும்­பத்தில் பிறந்­தவன். அநு­ரா­த­புரம் குட்­டிக்­கு­ளமே எனது ஊர். எனது அம்­மாவின் குடும்­பத்­தா­ருக்கு தமிழில் ஒரு வார்த்­தையும் தெரி­யாது. அப்­பாவின் குடும்­பத்­தி­ன­ருக்கு தமிழ் மொழியில் நல்ல பரிச்­சயம் உண்டு.
 
இதற்­கான காரணம் எனது அப்­பாவின் கிரா­மத்தில் சகோ­தர இஸ்­லா­மிய சமூ­கத்தைச் சேர்ந்தோர் பரம்­ப­ரை­யாக வாழ்­கின்­றனர். இதன் கார­ண­மாக தமிழ் மொழி தொடர்பு எனது அப்­பாவின் குடும்­பத்­திற்குள் ஊடு­ரு­வி­யது."

இது அவர் தன்னை பற்றி சொன்ன தகவல். 

5 hours ago, போல் said:

பல தமிழ் சிறுவர்கள் மலையகத்தில் இருந்து கடத்தப்பட்டு பிக்குகளாக்கப்பட்டனர்.
அவர்களில் ஒருவராகவும் இருக்கலாம்

இது அவரை வைத்து இவர் கட்டும் கதை. 

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல தேஜஸுடன் கூடிய வசீகரமான இளம் துறவியாக இருக்கிறார்.  அவரின் தமிழ்ப்பற்றுக்குத் தலைவணங்குகிறேன்.  எதிர்காலத்தில் தமிழை சிங்கள மக்களிடத்தில் வெற்றிகரமாக எடுத்துச்செல்ல வாழ்த்துகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

பிக்குவின் சிந்தனை சரியானது என்றாலும் .....

இனவாத அரசு இதையும் தனக்கு சாதகமாகவே பார்க்கும்.
இவரை இவரிடம் தமிழ் கற்போரை வைத்து 
தமிழரிடத்தில் புத்த மதத்தை பரப்பலாம் என்றுதான் அவர்கள் யோசிப்பார்கள். 

  • கருத்துக்கள உறவுகள்

நடுசாமத்தில் பேயொண்டு வந்து அகிம்சை பற்றி கதைச்சாலும்  நம்பலாம் ஆனால் இந்த இனவாத சொறிலன்காவின் மதவெறி பிடிச்ச கூட்டத்தில் இருந்து வந்தது சந்தேகமாத்தான் இருக்கு .

 

Edited by பெருமாள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

158DSC07861.jpg

பிக்கு தமிழ் படிப்பிச்சாலும் கரும்பலகையிலை எழுதின எழுத்துக்களிலை  இரத்தம் சிவப்பு எண்டு பயங்கரமாய்த்தான் கிடக்கு :cool:

5 hours ago, Jude said:

இது அவர் தன்னை பற்றி சொன்ன தகவல். 

இது அவரை வைத்து இவர் கட்டும் கதை. 

சிங்கள-பௌத்தனைக் கண்மூடித் தனமாக நம்பும் பேர்வழிகள் சிலர் இன்னமும் இருக்கிறார்கள்.  
இந்த அவலட்சணத்தில திருக்குறள் மேற்கோள் வேறு. சொல்வதொன்று செய்வதொன்று.
உருப்பட்ட மாதிரி தான்.

  • கருத்துக்கள உறவுகள்

பிக்குவின் தமிழ் தொண்டுக்கு பாராட்டுக்கள். வட அமெரிக்காவில் உள்ள 50 வீதத்துக்கும் அதிகமான தமிழ் குழந்தைகளுக்கு தமிழ் பேச தெரியாது.

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, போல் said:

பல தமிழ் சிறுவர்கள் மலையகத்தில் இருந்து கடத்தப்பட்டு பிக்குகளாக்கப்பட்டனர்.
அவர்களில் ஒருவராகவும் இருக்கலாம். 

 

2 hours ago, போல் said:

சிங்கள-பௌத்தனைக் கண்மூடித் தனமாக நம்பும் பேர்வழிகள் சிலர் இன்னமும் இருக்கிறார்கள்.  
இந்த அவலட்சணத்தில திருக்குறள் மேற்கோள் வேறு. சொல்வதொன்று செய்வதொன்று.
உருப்பட்ட மாதிரி தான்.

கடத்தப்பட்ட தமிழ் சிறுவன் என்று முதலில் சொல்லி பின்னர் சிங்கள பௌத்தன் என்று தடுமாறும் உங்கள் திருகுதாளம் பகிரங்கம் ஆனது அவமானமாக இருக்கிறதா? அல்லது சூடு சுரணை எல்லாம் கடந்த நிலையா?

24 minutes ago, Jude said:

 

கடத்தப்பட்ட தமிழ் சிறுவன் என்று முதலில் சொல்லி பின்னர் சிங்கள பௌத்தன் என்று தடுமாறும் உங்கள் திருகுதாளம் பகிரங்கம் ஆனது அவமானமாக இருக்கிறதா? அல்லது சூடு சுரணை எல்லாம் கடந்த நிலையா?

கடத்தப்பட்டது விபரம் அறியாத தமிழ்ச் சிறுவர்கள். இன்று அவர்கள்  பௌத்த-சிங்களவர்களாகவே தம்மை அடையாளம் காண்கின்றனர்.

சிலாபம் பகுதியில் இன்று தம்மை பௌத்த-சிங்களவர்களாக கருதும் மாற்றப்பட்ட தமிழர் உள்ளதை அறியாதவர்கள் தான் சூடு சொரணை அற்றவர்கள்.

பொய்களை, கட்டுக்கதைகளை அவிழ்த்துவிடும் அமெரிக்க நாசகாரக் கும்பலுக்கு கைக்கூலி அரசியல் செய்து   உங்கள் திருகுதாளம் பகிரங்கம் ஆனது அவமானமாக இருக்கிறதா? அல்லது சூடு சுரணை எல்லாம் கடந்த நிலையா?

 

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, Athavan CH said:

“பௌத்த மத போத­னை­களை தமிழ் சமூ­கத்­தினர் மற்றும் என்­னிடம் தமிழ் கற்கும் சிங்­க­ள­வர்கள் மத்­தி­யிலும் முன்­னெ­டுக்­கின்­றனர். சகோ­தர இஸ்­லா­மிய சமூ­கத்தின் புனித நோன்பு காலத்தின் இப்தார் நிகழ்­வு­களின் அழைப்பை ஏற்று அங்கு தமிழ் மொழியில் உரை­யாற்­று­கின்றேன். இதுவே தமி­ழுக்கு நான் வழங்கும் சிறு தொண்­டாகும்.

 

7 hours ago, Maruthankerny said:

பிக்குவின் சிந்தனை சரியானது என்றாலும் .....

இனவாத அரசு இதையும் தனக்கு சாதகமாகவே பார்க்கும்.
இவரை இவரிடம் தமிழ் கற்போரை வைத்து 
தமிழரிடத்தில் புத்த மதத்தை பரப்பலாம் என்றுதான் அவர்கள் யோசிப்பார்கள். 

அதை அவரே சொல்லியிருக்கின்றார் ....எங்களுக்குத்தான் விளக்கம் கொஞ்சம் குறைவு.......
தமிழ் மூலம் சைவம்,இந்து ,கிறிஸ்தவம்,இஸ்லாம் எல்லாம் ஒரு இனத்திடம் புகுந்து கொண்டது ...இப்பொழுது பெளத்தமும் இணைந்து கொள்ளப்போகுது.....
சிங்களம் தெரிந்த பிக்குகள் இராணுவ உதவியுடன் விகாரைகளை கட்ட தமிழ் தெரிந்த பிக்குகள் அகிம்சைமுறையில் புத்தரின்ட போதனைகளை தமிழர்களுக்கு போதிப்பார்கள் நூறு வருடங்களின் பின்பு தமிழ் பெளத்தர் பா.உறுப்பினராக தெரிவு செட்டப்படுவார்.....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.