Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாலர் போதினி

Featured Replies

13680758_1073898806021223_8466777468037813879316_1073898852687885_78295684248588

13686488_1073898876021216_5719095719429813876548_1073898899354547_54418127097028

Edited by தமிழினி

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் பதிவு  மீண்டும் .... பழைய நினைவுகளை கொண்டு வந்து விட்டது, தமிழினி.
நான்... ஆரம்பக் கல்வியை கற்ற போது,  "பால போதினி" என்ற பாடப் புத்தகம் இருந்தது.
(அதே.... புத்தகத்தில் வந்த, பக்கங்கள்.... இவை என நினைக்கின்றேன்.) :love:
அந்த வயதில்.... அதில் உள்ள படங்களே..... புத்தகத்தை படிக்கத் தூண்டும்.:)

Edited by தமிழ் சிறி

  • தொடங்கியவர்

எனக்கும் முகநூலில் இந்த பக்கங்களை பார்த்தபோது பழைய ஞாபங்களும் எனக்கு படிப்பித்த

ஆசிரியர்கள், என்னுடன் படித்த நண்பிகள் நினைவுக்குள் வந்து சென்றார்கள். நீங்கள் எழுதிய பின்பு தான் "பாலர் போதினி"

என்ற ஞாபகம் வந்தது. நன்றி சிறி அண்ணா!

Edited by தமிழினி

  • கருத்துக்கள உறவுகள்

ஹா...ஹா...ஹா.....!நாங்கள் உதுக்கும் மேலே......! 

அம்மா... ஆடு.... இலை... ஈ.....!  :rolleyes:  tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, suvy said:

ஹா...ஹா...ஹா.....!நாங்கள் உதுக்கும் மேலே......! 

அம்மா... ஆடு.... இலை... ஈ.....!  :rolleyes:  tw_blush:

ம்மா,  ஆடு,  லை,  ஈ,  ரல்,  ஊஞ்சல்..... 
எல்லாம் படிச்சு, கிளிச்சு.... பாஸ் பண்ணிணாப் பிறகு தான்.....
பால போதினி படிக்கலாம்... சுவியர். :grin:

  • கருத்துக்கள உறவுகள்

இதிலுள்ள பாடல்கள் நான் படிக்கவில்லை சிறீயர்...! 

பாரதியார் பாடல்கள்...! கன்னன் பாட்டுக்கள்.....! போன்றவை....!!

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, suvy said:

இதிலுள்ள பாடல்கள் நான் படிக்கவில்லை சிறீயர்...! 

பாரதியார் பாடல்கள்...! கன்னன் பாட்டுக்கள்.....! போன்றவை....!!

தலைப் பாகை  கட்டிய....... பாரதியாரை,   படித்திருக்கின்றோம்  சுவியர்,
ஆனால்.... கன்னன், என்பவரை பற்றி... இதுவரை ,  படிக்கவேயில்லை.
கன்னன்...  யார்? எங்கு அவர் வசித்தவர்?   47.gif

  • கருத்துக்கள உறவுகள்

பாலா பாலா ஓடி வா படம் விடுவோம் ஓடி வா.....

நிலா நிலா ஓடி வா நில்லாமல் ஓடி வா
மலை மேலே ஏறி வா மல்லிகைப்பூக் கொண்டு வா.....

எப்படி எல்லாம் படித்த நாங்கள் இப்படி  ஆயிட்டொமே.... 

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, வாத்தியார் said:

பாலா பாலா ஓடி வா படம் விடுவோம் ஓடி வா.....

நிலா நிலா ஓடி வா நில்லாமல் ஓடி வா
மலை மேலே ஏறி வா மல்லிகைப்பூக் கொண்டு வா.....

எப்படி எல்லாம் படித்த நாங்கள் இப்படி  ஆயிட்டொமே.... 

சினிமா நடிகரின்  கட் அவுட்டுக்கு.....  பால் ஊத்துற நிலைமைக்கும், பேதைக்கும்,  போதைக்கும்......  
யாழ் மாணவர்கள் இருக்கிறார்கள். அந்த.. நிலைமைக்கு கொண்டு வந்தது,

தூர நோக்கு அற்ற..... கூட்டமைப்பின்  அரசியல் தலைமை தான்....

முஸ்லீம் மக்களின் தலைமையை பாராட்ட வேண்டும்.

எங்கள் ஆட்கள், எமக்கு..... குழி பறிப்பதில், குறியாக இருப்பதால்...... 
எம் இனத்தை, படு குழியில் தள்ளி விட்டு... வக்கீல் தொழில் பார்த்து, 
நியூஸ் பேப்பர் படிக்கிற.... கேவலம் கெட்ட  இனம்.

  • கருத்துக்கள உறவுகள்

இது யாருக்காவது தெரியுமா ,,,,,

கீச்சு மாச்சு தம்பலம்
கீயா  மாயா தம்பலம்
மாச்சு மாச்சு தம்பலம்
மாயா மாயா தம்பலம்

  • கருத்துக்கள உறவுகள்

வாத்தியார் கூறீய பாட்டுக்கள்... அடுத்து கீச்சு மாச்சு தம்பலம் (வினளயாட்டு) எல்லாம் படித்தனாங்கள்....!

அது ஒரு கனாக் காலம்.....! 

தவறூ: கண்ணன் பாடல்கள்....!

கன்னன் =  கர்ணன்....!

  • கருத்துக்கள உறவுகள்

23.jpgஞாபம் வருதே ஞாபகம் வருதே முதல் முதல் எழுதிய சிலேட்

6 minutes ago, putthan said:

23.jpgஞாபம் வருதே ஞாபகம் வருதே முதல் முதல் எழுதிய சிலேட்

ஆமா சிலேட்டில் தப்பா எழுதினதை எப்படி அழிப்பீர்கள்?

எச்சிலா? ஹா தூ.

றேசர் மாதிரி ஒரு சாமான் இருக்குது அது என்ன?

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ஜீவன் சிவா said:

ஆமா சிலேட்டில் தப்பா எழுதினதை எப்படி அழிப்பீர்கள்?

எச்சிலா? ஹா தூ.

றேசர் மாதிரி ஒரு சாமான் இருக்குது அது என்ன?

அதிகம் எச்சில்தான்:rolleyes:....அது ஞாபகம்  வ்ருதில்லை

48 minutes ago, putthan said:

அதிகம் எச்சில்தான்:rolleyes:....அது ஞாபகம்  வ்ருதில்லை

ஏதாவது கடற்கரைக்கு போய் கணவாய் கரை ஒதுங்கின கணவாய் ஓட்டை எடுத்து அதன் கோதை உடைத்துவிட்டு பாவிக்கலாம். அந்தக்காலத்தில் பண்ணையில் பொறுக்கின ஞாபகம்.

Edited by ஜீவன் சிவா

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, ஜீவன் சிவா said:

ஏதாவது கடற்கரைக்கு போய் கணவாய் கரை ஒதுங்கின கணவாய் ஓட்டை எடுத்து அதன் கோதை உடைத்துவிட்டு பாவிக்கலாம். அந்தக்காலத்தில் பண்ணையில் பொறுக்கின ஞாபகம்.

ஓம் ஓம் ஞாபகம் வந்திட்டு.......எனக்கும்நினைவிருக்கு....

Edited by putthan

  • கருத்துக்கள உறவுகள்

பழைய நினைவுகளுக்கு கொண்டு போன தமிழினிக்கு பாராட்டுக்கள்.

அறம் செய்ய விரும்பு

ஆறுவது சினம்

இவைகள் எந்த புத்தகத்தில் வந்தன?

3 minutes ago, ஈழப்பிரியன் said:

அறம் செய்ய விரும்பு

ஆறுவது சினம்

இவைகள் எந்த புத்தகத்தில் வந்தன?

இது வயதோ போய் 
தலையும் நரையாகி
சும்மா இருக்கெக்கே
பொழுது போகாம 
அந்த கிழவி கிறுக்கினது.

  • கருத்துக்கள உறவுகள்

உயிர் வருக்கம்தொகு

1. அறம் செய விரும்பு
தருமம் செய்ய ஆசைப்படு.

2. ஆறுவது சினம்
கோபம் தணியத் தகுவதாம்.

3. இயல்வது கரவேல்
கொடுக்க முடிந்த பொருளை இரப்பவர்க்கு ஒளியாமல் கொடு.

4. ஈவது விலக்கேல்
ஒருவர் மற்றொருவர்க்குக் கொடுப்பதைக் கொடுக்க வேண்டாமென்று தடுக்காதே.

5. உடையது விளம்பேல்
உன்னுடைய பொருளை அல்லது கல்வி முதலிய சிறப்பை நீயே புகழ்ந்து பேசவேண்டா.

6. ஊக்கமது கைவிடேல்
எத்தொழில் செய்யும்பொழுதும் மனவலிமை யினைக் கைவிடாதே.

7. எண் எழுத்து இகழேல்
கணிதத்தையும், இலக்கணத்தையும் இகழாமல் நன்றாகக் கற்றுக்கொள்.

8. ஏற்பது இகழ்ச்சி
இரந்துண்டு வாழ்வது பழிப்பாகையால் ஒருவரிடத்தும் சென்று ஒன்றை வேண்டாதே.

9. ஐயம் இட்டு உண்
இரப்பவர்க்குப் பிச்சையிட்டுப் பின்பு உண்ணு.

10. ஒப்புரவு ஒழுகு
உலகத்தோடு பொருந்த நடந்துகொள்.

11. ஓதுவது ஒழியேல்
அறிவு தரும் நல்ல நூல்களை எப்பொழுதும் படித்துக்கொண்டிரு.

12. ஔவியம் பேசேல்
ஒருவரிடத்தும் பொறாமைகொண்டு பேசாதே.

13. அஃகம் சுருக்கேல்
மிகுந்த இலாபத்துக்கு ஆசைப்பட்டுத் தானியங்களைக் குறைத்து விற்காதே.

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, ஜீவன் சிவா said:

இது வயதோ போய் 
தலையும் நரையாகி
சும்மா இருக்கெக்கே
பொழுது போகாம 
அந்த கிழவி கிறுக்கினது.

தகவலுக்கு நன்றி ஜீவன்.

எந்த புத்தகம் என்று ஞாபகம் இருக்கா?

10 hours ago, ஈழப்பிரியன் said:

தகவலுக்கு நன்றி ஜீவன்.

எந்த புத்தகம் என்று ஞாபகம் இருக்கா?

ஆத்திசூடி by ஔவையார்

Edited by ஜீவன் சிவா

  • கருத்துக்கள உறவுகள்

13884516_1391030204259370_270082181_n.jp

  • கருத்துக்கள உறவுகள்

13876523_1730518417203756_46241050980103

பாலர் வகுப்பில்..... இதனையும் இலகுவில் மறக்க முடியாது.:grin:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 எனக்கு பாலர் வகுப்பிலை படிச்சதெல்லாம் துண்டற மறந்து போச்சுது.....இருந்தாலும் பாட்டி வடைசுட்டகதை , சோனகனும் குரங்கும் , சிங்கம் கிணத்துக்கை விழுந்த கதை கொஞ்சம் கொஞ்சம் ஞாபகத்திலை இருக்கு. tw_glasses:

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, குமாரசாமி said:

 எனக்கு பாலர் வகுப்பிலை படிச்சதெல்லாம் துண்டற மறந்து போச்சுது.....இருந்தாலும் பாட்டி வடைசுட்டகதை , சோனகனும் குரங்கும் , சிங்கம் கிணத்துக்கை விழுந்த கதை கொஞ்சம் கொஞ்சம் ஞாபகத்திலை இருக்கு. tw_glasses:

அப்போ இன்னும் வயது போகல போல ம்கும் :rolleyes:

இளமை ஊஞ்சல் ஆடுகிறதோtw_blush:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.