Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விலகுவது கடினம் ஆனால் …

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

விலகுவது கடினம் ஆனால் …

IMG-20160720-WA0007திருமணமான தம்பதிகள் தங்கள் திருமண வாழ்வு உடைந்து போகும் விளிம்பில் நிற்கும்போது அல்லது ஏற்கனவே உடைந்துகொண்டிருப்பதைக் கவனிக்கும்போது, அதனை ஒரு முடிவுக்குக் கொண்டு வராமல் நீட்டிப்பதையே தங்கள் தேர்வாக வைத்திருக்கிறார்கள். சிலர் நிலையான பொருளாதார பலம் போன்ற சொகுசு வாழ்வு சார்ந்த காரணங்களாலும் மற்றும் சிலர் மணவிலக்கை சமூக மதிப்பீட்டில் வரும் களங்கமாகக் கருதுவதாலும் தொடர்ந்து அவ்வாழ்வை நிலைநிறுத்திக் கொள்கின்றனர். சிலர் குழந்தைகள் பொருட்டு மகிழ்ச்சியற்ற திருமண வாழ்வில் தொடர்ந்து இருக்கிறார்கள். இதன்மூலம் அவர்கள் தங்கள் குழந்தைகளை விவாகரத்து என்கிற அதிர்ச்சியிலிருந்து பாதுகாப்பதாக நம்புகிறார்கள். உண்மையில் இது மிகத் தவறான கருத்துநிலையாகும்.

நீங்களே உதாரணமாகி வழிநடத்துகிறீர்கள்

விவாகரத்து நமது சமூகத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கும் ஓர் உண்மைதான் என்றாலும், மல்லுக்கட்டிக்கொண்டு தொடர்ந்து வாழ்தல் என்பது மீதமுள்ள வாழ்வை சேதப்படுத்துவதோடு குழந்தைகளையும் பாதிக்கும். முதலில் மனம் ஒவ்வாத ஓர் உறவை உங்கள் குழந்தைகளுக்குக் காட்டுவதன் மூலம் நீங்கள் உங்கள் குழந்தைகளுக்கு மிகத்தவறான முன்மாதிரி ஆகிறீர்கள். இணையருடன் அன்பில்லாமல் இருப்பது, வெறுப்பைக் காட்டுவது போன்றவை திருமண வாழ்வில் சகஜமானது என உங்களது சிறு குழந்தைகள் நம்பத் தொடங்குவார்கள். இதன்மூலம் எதிர்பார்ப்பதைவிட குறைந்த அளவே மகிழ்ச்சி இவ்வுலகில் சாத்தியப்படும் என அவர்களுக்கு மறைமுகமாக நீங்கள் கற்பிக்கிறீர்கள். உங்கள் இணையர்மீது நீங்கள் செலுத்தும் உடல், மனம் அல்லது உணர்வு ரீதியிலான எவ்வகை துன்புறுத்தலாக இருந்தாலும் சரி, அதைப்பார்க்கும் உங்கள் குழந்தைகள் எப்போதும் வன்முறைக்கு எதிராக எழுந்து நிற்கக்கூடாதென மறைமுகமாகப் பயிற்றுவிக்கப்படுகிறார்கள். இதன்மூலம் உறவுகள் சார்ந்தும் திருமண வாழ்வு சார்ந்தும் ஆரோக்கியமற்ற, நம்பிக்கையற்ற தன்மையையும் அவர்களுக்குள் கொண்டுவந்து விடுவீர்கள்.

 

நீங்கள் ஒரு கொடிய பெற்றோராக மாறுகிறீர்கள்

மகிழ்ச்சியற்ற திருமண வாழ்வில் இருப்பது உங்கள் மன அழுத்தத்தை உயர்த்தி, உங்கள் ஊக்கத்தைக் கொன்றுவிடும். காரணம் உங்கள் திருமண வாழ்வு இனியும் மகிழ்வளிப்பதாக இல்லாததுதான்.

பெரும்பாலானவர்கள் தங்களது மன அழுத்தத்தைச் சமாளிக்க குடும்பத்திலிருந்து தங்களை விலக்கிக்Arunan கொள்கிறார்கள். அதிக நேரம் வேலை இடத்தில் இருப்பதன் மூலமாகவோ அல்லது வெளியில் நண்பர்களுடன் நேரத்தைச் செலவிடுவதன் மூலமாகவோ – இன்னும் என்னவெல்லாம் செய்ய முடியுமோ அதன் மூலம் தங்களது இணையரைத் தவிர்க்கிறார்கள்.  இப்படியே படிப்படியாக தங்களது குடும்பப் பொறுப்புகளையும் இழக்கிறார்கள். இதில் பெரிதும் பாதிப்படைவது குழந்தைகளே. காரணம் குழந்தை வளர்ப்பு என்பது பெற்றோர்களின் ஒன்றுசேர்ந்த கடமையாகும்.

பெற்றோர்களிடையே ஒத்துழைக்க மறுப்பு உண்டாகும்போது, சரியான பேச்சுவார்த்தை இல்லாதபோது தொடர்ந்து அவர்கள் நல்ல பெற்றோர்களாக இருப்பது எப்படி சாத்தியமாகும்?

நீங்கள் உங்கள் குழந்தைகளை வளர்க்கும் விதமே அவர்கள் என்னவாக வளர்கிறார்கள் என்பதில் மிக முக்கியப் பங்காற்றுகிறது. அவர்கள் வளரும் சூழலே அவர்களை உருவாக்குகிறது. எனவே, உங்கள் இணையருக்கும் உங்களுக்கும் இடையே ஏற்படும் கடுமையான மோதல்களும் சண்டைச்சச்சரவுகளும்  குழந்தை வளர்ப்பில் ஆரோக்கியமான சூழலை உருவாக்காது. மாறாக, குழந்தைகளின் வளர்ச்சியில் பாதகத்தையே உண்டுபண்ணும். வெளிப்படையாக சொல்வதென்றால் இம்மாதிரியான சூழலில் உங்கள் குழந்தை நம்பிக்கை, சுயமரியாதை குன்றியவராகவுமே வளருவர்.

வீடு என்பது இல்லமல்ல

தம்பதிகளுக்கு இடையில் காதல் வற்றிவிடும்போது அவர்கள் குடும்பத்தில் முழுமனிதராய் இருப்பதில்லை. பேச்சு, காதல், மரியாதை என அனைத்தும் குறைந்து விடுகிறது. குடும்பம் என்பதற்கான உண்மையான அர்த்தம் நீர்த்துப்போய் குழந்தைகளும் தங்கள் பெற்றோரிடமிருந்து இணக்கமான உறவை உணராமல் போகின்றனர். இது அவர்களுக்குள் குழப்பம், அழுத்தம் மற்றும் காயத்தை உண்டாக்கி உணர்வுக்குள் தீராத வடுக்களையும் கொடுத்துவிடும்.

உங்கள் திருமண வாழ்வின் தொடக்கத்தில் நிலையற்ற தன்மையை உணர்ந்தால், முதல் வேலையாக அதனை அபாயச் சூழலிலிருந்து மீட்டெடுக்க வேண்டும். ஆனால், அதன் பாதிப்பு எல்லைமீறிப் போய்விடும் சூழலில், விவாகரத்து செய்துகொள்வது உங்களையும் உங்கள் குடும்பத்தையும் தேவையற்ற வலிகளிலிருந்தும் துன்பங்களிலிருந்தும் காப்பாற்றும் எனும் உண்மையையும் மறக்க வேண்டாம்.

அப்படி என்றால் இதைத் தவிர்ப்பதற்கு வழியேதும் இல்லையா? கணவன் மனைவிக்கிடையே தோன்றும் சிக்கல்களுக்கு விவாகரத்துதான் தீர்வா என்றால், அப்படி இல்லை. உங்கள் மணவாழ்க்கையைச் சீராக அமைத்துக் கொள்வதன் மூலம் நீங்கள் இப்படிப்பட்ட சூழல்களைத் தவிர்க்க முடியும். பின்வரும் கருத்துகளைப் படியுங்கள்:

உங்கள் திருமண வாழ்வை வளமாக்குங்கள்:

Arunan 3ஒருவேளை உங்கள் திருமணவாழ்வு தோல்வியில் முடியக்கூடும் என்பதை நினைத்து நீங்கள் கலங்கலாம். அதேநேரம் சிலர் தங்கள் திருமண வாழ்வைத் தக்கவைத்துக்கொள்ளப் போராடலாம் இன்னும் சிலர் அதை பொருட்படுத்தாமல்கூட இருக்கலாம். நம்மில் பலரும் திருமண வாழ்வென்பது வாழ்க்கையில் ஒருமுறை மட்டும் நடப்பது என ஏற்றுக்கொள்வதால் உங்கள் முழுக் காதலையும் இணையருக்கானதாக அங்கீகரியுங்கள். வளமான திருமண வாழ்வுக்கு இதுமட்டும் போதாது. இதனுடன் சேர்த்து, கணவன் மனைவி இருவருக்குமே தொடர்ச்சியான முயற்சி, ஊக்கம் மற்றும் நிலைத்தன்மை போன்றவை தேவைப்படுகின்றது.

உங்களுக்குள்ளேயே முதலீடு செய்துகொள்ளுங்கள்

உங்கள் திருமண வாழ்வை வலுவாக்குவதற்கு முன்பு உங்களை நீங்கள் அங்கீகரித்துக் கொள்ளுங்கள். உங்கள் இணையரிடம் காதலையும் மரியாதையையும் பொழியும் முன்னர் உங்களை நீங்களே மதிக்கவும் நேசிக்கவும் செய்யுங்கள். உங்களை நீங்களாய் ஏற்றுக்கொள்ளுங்கள். ‘உங்களுக்கான நேரம்’ என்பதை தினமும் உருவாக்கிச் செலவிடுங்கள். உங்கள் பொழுதை நல்ல வழியில் கடைப்பிடிப்பது, பிடித்த வேலைகளைச் செய்வது என உங்களை நீங்களே முழுமையாய் உணர வாய்ப்பளியுங்கள். காரணம், உங்களுக்குள் உங்கள் மீதான நேசம் அதிகமாக இருக்கும்போதே அதை உங்களால் இணையருக்கும் வழங்க முடியும்.

ஒருவருக்கொருவர் சரி என அங்கீகரியுங்கள்:

சிந்தனை, சொல், செயல் அனைத்தையும் நல்லவையாக வைத்துக் கொள்ளுங்கள். காதலே திருமண வாழ்வின் சாரமாகின்றது. பேரன்பையும் இரக்கத்தையும் ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்ளுங்கள். மனிதர்களான நாம் தவறுகள் செய்வது இயல்பே. நீங்கள் தவறு செய்துவிடும்போது உங்கள் இணையரிடம் அதனை ஒப்புக்கொள்வது முக்கியம். உடனடியாக உங்கள் மன்னிப்பையும் அவரிடம் சொல்லிவிடுங்கள். உங்கள் இணையர் தவறு செய்தால் உடனடியாக மன்னித்து அத்தவறை அத்துடன் மறந்தும் விடுங்கள். உங்கள் இணையரை நீங்கள் எப்படி நடத்துகிறீர்களோ நாளை உங்கள் குழந்தைகளும் அவர்தம் இணையரை அப்படியே நடத்துவார்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

உங்கள் எல்லை எது என்பதை தெரிந்துகொள்ளுங்கள்

எதிர்ப்பாலினருடன் நட்பு கொள்வது தவறில்லை, ஆனால் அவர்களுடன் எவ்வாறு உறவாடுகிறீர்கள் என்பதில் கவனம் தேவை. உங்கள் இணையருடன் பகிர்ந்துக்கொள்ளாத ஒரு விடயத்தை எதிர்பாலின நண்பருடன் பகிர்கிறீர்கள் என்றால் அவர் பார்வையில் நீங்கள் ஏதோ தவறு செய்கிறீர்கள் என்பது தெளிவு. சொன்ன விடயம் சாதாரணமானது அல்லது சில நிமிட உரையாடல்தானே என்று நாம் நினைத்துவிடலாம். ஆனால், இதுமாதிரியான விடயங்களே தவறான உறவுக்கு கொண்டு செல்லும் எனும் அச்சம் நிகழ்வதால் உங்கள் திருமண வாழ்வை இதுபோன்ற சம்பவங்கள் பாதிக்கலாம்.

காதலின் திறவுகோல் முழுமையாக ஏற்றுக்கொள்வதே

ஒவ்வொரு மனிதனும் தன்னளவில் தனித்தன்மை மிக்கவன், புத்தாக்க சிந்தனையாளன். உங்கள் இணையரின் இவ்வேறுபாடுகளுக்கு மதிப்பளியுங்கள், அவர் தனித்தன்மை மிக்கவர் என்பதை ஏற்றுக் கொள்ளுங்கள். உங்கள் இணையரை யாருடனும் ஒப்பிடாதீர்கள். அவர்களது குறைகளை வெளியிலிழுத்துக் கொண்டே இருக்காதீர்கள். அவரது ஆளுமையைப் பாராட்டுங்கள். எப்போதெல்லாம் பாராட்டுகள் குறைவதாக தோன்றுகிறதோ அப்போதெல்லாம் தொடர்ந்து பாராட்டுங்கள். உங்களது பலவீனங்களில் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளுங்கள். நீங்கள் நீங்களாகவும் அவரை அவராகவும் இருக்க விடுங்கள்.

உங்கள் திருமண வாழ்வில் முழுமையாக இருங்கள்

உங்கள் உடல் உங்கள் இணையரின் அருகில் இருப்பதைக் காரணம் காட்டி நீங்கள் திருமண வாழ்வில் முழுமையாக இருப்பதாகக் கூறிவிட முடியாது. கணவன் மனைவி ஆகியோருக்கு இடையேயான தொடர்பாடல் அவசியம். ஒருவருக்கொருவர் பேசிக் கொள்ளுங்கள். உங்கள் இணையர் பேசுவதை முழுவதும் செவிமடுப்பவராக இருங்கள். உங்கள் இணையருக்குத் தேவைப்படும்போதெல்லாம் அவருக்காக இருங்கள். திருமணத்திற்குப் பின்பு தம்பதிகள் செய்யும் மிகப்பெரிய தவறு ஒருவருக்கொருவர் தொட்டுக் கொள்ளாமல் இருப்பதுதான்.  உங்கள் இணையர்மீது இருக்கும் காதலையும் ஈர்ப்பையும் காட்டப் பயன்படும் சக்தி மிகுந்த ஒரே ஆயுதம் தொடுதல்தான். தொடுவது எப்போதும் காமத்தால்தான் இருக்க வேண்டும் என்பதில்லை. ஒருவர் கையை ஒருவர் பிடித்துக் கொள்ளுங்கள். அடிக்கடி முத்தமிட்டுக் கொள்ளுங்கள். இப்படியே கொஞ்சம் கொஞ்சமாக நெருக்கம் நீண்டு செல்லும்.

உங்கள் மனைவி மற்றும் குழந்தைகளுக்கு இடையேயான சமநிலையை நிலைநிறுத்துங்கள்

குழந்தைகளைப் பெற்றுக்கொண்ட பின்பு கணவன் மனைவி இருவரும் ஒருவரை ஒருவர் புறக்கணிக்க முயல்வது இயல்பாகிவிட்டிருக்கிறது. குழந்தைகளை நல்லமுறையில் வளர்த்தெடுக்க நேரத்தையும் ஆற்றலையும் முதலீடாக்குவது நல்லதே. ஆனால், உங்களது மொத்த ஆற்றலையும் அதிலேயே விரயம் செய்துவிடாதீர்கள். குழந்தைகளுடன் கூடியிருப்பதனால் உங்கள் இணையருக்குக் கொடுக்கவேண்டிய காதலையும் அன்பையும் தவறவிட்டு விடாதீர்கள். ஒரு பூச்செடியைப் போல உங்கள் திருமண வாழ்வுக்கும் அன்றாடம் நீர் ஊற்றுங்கள். இல்லையேல் அது கருகி மடிந்துபோகும்.

அன்புத் தீ உங்களுக்குள் எரிந்து கொண்டே இருக்கட்டும்

ஒவ்வொரு சிறு இடைவெளிக்குப் பின்னரும், இணையரிடம் உங்களது அன்பையும் கனிவையும் கொடுத்துக்கொண்டே இருங்கள். வெளியே உணவுக்கு அழைத்துச் செல்லுங்கள்; பூக்களை வாங்கிக் கொடுங்கள்; அவர்களுக்கு கடிதங்கள் எழுதுங்கள். எளிமையான முறையில் உங்கள் தீராத அன்பை காட்டிக்கொண்டே இருங்கள். இந்தச் சின்ன சின்ன விடயங்களே கவனத்திற்கு உரியனவாகின்றன.

உங்கள் வாழ்க்கையை இன்னொருவருடன் பகிர்ந்துக்கொள்ள முடிவது அவ்வளவு அழகானது. திருமணம் உங்கள் வாழ்க்கைக்குக் கொடுக்கப்பட்ட பரிசு. அதனை ஆரத் தழுவிக்கொள்ளுங்கள். ஒருவருக்கொருவர் என இன்னமும்கூட தொடர்ந்து வாழமுடிவதால், உங்கள் இணையை அங்கீகரியுங்கள்.

மூலம்: டத்தோ டாக்டர் அருணன் செல்வராஜ்

தமிழில் : விஜயலட்சுமி

http://vallinam.com.my/version2/?p=2991

  • கருத்துக்கள உறவுகள்

இந்த உபத்திரபம் வேணான்னு தான்.. பாச்சிளரா இருக்கனுன்னு பிரியப்படுறாங்க. வாரிசு வேணுன்னா.. IVF இல் வாடகைக்கு ஒருத்தியை அமர்த்தி பெத்துக்கிட்டு அதை நீங்க வளர்க்கலாம். இல்ல தத்தெடுக்கலாம். 

சும்மா.. இரு உடல்.. ஒரு மனம்.. காதல்.. கல்யாணம்.. எல்லாம் வெற்று டப்பா. மனிதன் தனது சமூகக் கட்டமைப்புக்குள் புகுத்தி வைத்துள்ள மாயைகள். இதே மற்ற உயிரினங்களில் இல்லவே இல்லை. அவையும் இவை இன்றி பூமியில் இனப்பெருக்கி வாழ்க்கின்றன தாம்.  tw_blush: 

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, nedukkalapoovan said:

இந்த உபத்திரபம் வேணான்னு தான்.. பாச்சிளரா இருக்கனுன்னு பிரியப்படுறாங்க. வாரிசு வேணுன்னா.. IVF இல் வாடகைக்கு ஒருத்தியை அமர்த்தி பெத்துக்கிட்டு அதை நீங்க வளர்க்கலாம். இல்ல தத்தெடுக்கலாம். 

சும்மா.. இரு உடல்.. ஒரு மனம்.. காதல்.. கல்யாணம்.. எல்லாம் வெற்று டப்பா. மனிதன் தனது சமூகக் கட்டமைப்புக்குள் புகுத்தி வைத்துள்ள மாயைகள். இதே மற்ற உயிரினங்களில் இல்லவே இல்லை. அவையும் இவை இன்றி பூமியில் இனப்பெருக்கி வாழ்க்கின்றன தாம்.  tw_blush: 

இவங்கள் விசரங்கள்  யாரோ கலியாணம் முடிக்காத காலி 
பைசங்கள் எழுதி இருக்கிறான்கள்.


ஊடலும் ......பின் கூடலும் 
இரு வேறு பக்கங்கள்.

ஒரே கூடி கொண்டு இருந்தால் போரடிக்கும் 
ஊடிவிட்டு .........பின் கூடினால் ஒரு இறுக்கம் இருக்கும்.

வாழ்க்கையை போக போக லூசாகும் அப்போ ஒரு இறுக்கம் தேவை! 

  • கருத்துக்கள உறவுகள்

என்னோட வேலை செய்கின்ற ஒருத்தி சொன்னால் மருத்துவத் துறையில் இருக்கின்ற ஆட்களை திருமணம் செய்யக் கூடாது. அவர்கள் மனித உறுப்புக்களைப் பார்த்து,பார்த்து ஜடமாகி இருப்பார்கள். அவர்களுக்கு உணர்ச்சியே இருக்காது என்று உண்மை போல தான் இருக்கு.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ரதி said:

என்னோட வேலை செய்கின்ற ஒருத்தி சொன்னால் மருத்துவத் துறையில் இருக்கின்ற ஆட்களை திருமணம் செய்யக் கூடாது. அவர்கள் மனித உறுப்புக்களைப் பார்த்து,பார்த்து ஜடமாகி இருப்பார்கள். அவர்களுக்கு உணர்ச்சியே இருக்காது என்று உண்மை போல தான் இருக்கு.

அப்படி சொல்ல முடியாது அக்கா.

போலீஸ்காரர், கொலை, வன்முறைகளை பார்க்கிறார்.

பிணவறை காரர் தினமும்......

வெட்டியார்.....

ஒரு துறையினை மட்டும் குறித்து சொல்ல முடியாதே. 

அவரவர் மனங்களைப் பொறுத்தது. 

chilid genius என்னும் டிவி நிகழ்வில், வென்ற இந்திய சிறுமியின் தாய், குழந்தை வைத்திய நிபுணர். 

பிள்ளைகளுக்காக வேலையினை உதறி இருக்கிறார். யடமா? 

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, ரதி said:

என்னோட வேலை செய்கின்ற ஒருத்தி சொன்னால் மருத்துவத் துறையில் இருக்கின்ற ஆட்களை திருமணம் செய்யக் கூடாது. அவர்கள் மனித உறுப்புக்களைப் பார்த்து,பார்த்து ஜடமாகி இருப்பார்கள். அவர்களுக்கு உணர்ச்சியே இருக்காது என்று உண்மை போல தான் இருக்கு.

அந்த நண்பிக்கு அவர்கள் மனித உறுப்புக்களின் தேவை.. பெறுமதி உணர்ந்தவர்கள்.. லேசில் இதயங்களை உடைக்கவோ.. காயப்படுத்தவோ மாட்டார்கள் என்று ஏன் புரியல்லை. பிரச்சனை மனிதர்களைப் புரிந்து கொள்வதிலும் அதற்கு மனிதர்களிடம் உள்ள அணுகுமுறையிலும் நேரகால அவகாசத்திலும் பகுத்தறிவிலும் உள்ளது. tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்

நமக்கும் இந்த திரிக்கும் சம்மந்தமில்லை என்பதை தெரிவித்து கொண்டு விடைபெறுகிறேன் நன்றி:unsure: 

கட்டுறதும் இல்லாமல் விட்டு பிரியுறதும் இல்லாமல் குழந்தைக்கு வாழ்வார்களாம் கெகே கெகேtw_blush:

  • கருத்துக்கள உறவுகள்

நாதமுனி,நான் சொல்ல வந்தது ஒரு ஆண் வைத்தியர் எந்த நேரம்,பெண்களது மர்ம உறுப்புக்களைப் பார்த்து,பார்த்து அவருக்கு சலிச்சுப் போய் இருக்கும்.அதனால குடும்ப வாழ்க்கையில அவர்களது மனைவியோட தாம்பத்தியத்தை ரசிச்சு,அனுபவித்து வாழ மாட்டார்கள்.என்பது என்னோட கருத்து.

நீங்கள் சொன்ன குழந்தை வைத்திய நிபுணர் கூட தொழிலையும்,குடும்பத்தையும் சமப்படுத்த முடியாமல் தான் வேலையை விட்டு இருப்பார்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 7.8.2016 at 9:39 PM, ரதி said:

என்னோட வேலை செய்கின்ற ஒருத்தி சொன்னால் மருத்துவத் துறையில் இருக்கின்ற ஆட்களை திருமணம் செய்யக் கூடாது. அவர்கள் மனித உறுப்புக்களைப் பார்த்து,பார்த்து ஜடமாகி இருப்பார்கள். அவர்களுக்கு உணர்ச்சியே இருக்காது என்று உண்மை போல தான் இருக்கு.

தங்கச்சி! :(

நான் வந்து 24 மணித்தியாலத்திலை 13 மணித்தியாலம் 68 சாப்பாடு சக்கட்டையெண்டு அளைஞ்சு வேலை செய்யுறவன். இருந்தாலும் வீட்டை வந்து என்ரை சோறு என்ரை சுவையிலை கறி  எண்டு வரேக்கை அதின்ரை பீலிங்கே தனி...

அதோடை எல்லாம் மனம் தான்....மனம் தான் எல்லாத்தையும் தீர்மானிக்குது......:rolleyes:

உப்புடி பாக்கப்போனால் கக்கூஸ் எடுக்கிறவை/கழுவுறவை  எல்லாரும் பருப்புக்கறி சாம்பார் சாப்பிட மாட்டினம் எல்லோ

அது மாதிரி.......

வேண்டாம் தங்கச்சியோடை கனக்க கதைக்க கூடாது....அது வடிவுமில்லை :cool:

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, ரதி said:

நாதமுனி,நான் சொல்ல வந்தது ஒரு ஆண் வைத்தியர் எந்த நேரம்,பெண்களது மர்ம உறுப்புக்களைப் பார்த்து,பார்த்து அவருக்கு சலிச்சுப் போய் இருக்கும்.அதனால குடும்ப வாழ்க்கையில அவர்களது மனைவியோட தாம்பத்தியத்தை ரசிச்சு,அனுபவித்து வாழ மாட்டார்கள்.என்பது என்னோட கருத்து.

நீங்கள் சொன்ன குழந்தை வைத்திய நிபுணர் கூட தொழிலையும்,குடும்பத்தையும் சமப்படுத்த முடியாமல் தான் வேலையை விட்டு இருப்பார்.

 

பணமாக இருக்கலாம்

சொத்தாக  இருக்கலாம்

சாப்பாடாக இருக்கலாம்

ஏன் மதுபானமாகக்கூட இருக்கலாம்

அனுபவித்தவர்கள் 

பார்த்தவர்கள் தானே அதிகம் ஆசைப்படுகிறார்கள்

அலைகிறார்கள்?

அடுத்ததற்கு தாவுகிறார்கள்

பல வைத்தியர்கள் தம்மிடம் வரும் பெண்களிடம் தவறாக நடந்துள்ளமையை நாமும் அறிந்துள்ளோமே..

 

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, ரதி said:

நாதமுனி,நான் சொல்ல வந்தது ஒரு ஆண் வைத்தியர் எந்த நேரம்,பெண்களது மர்ம உறுப்புக்களைப் பார்த்து,பார்த்து அவருக்கு சலிச்சுப் போய் இருக்கும்.அதனால குடும்ப வாழ்க்கையில அவர்களது மனைவியோட தாம்பத்தியத்தை ரசிச்சு,அனுபவித்து வாழ மாட்டார்கள்.என்பது என்னோட கருத்து.

நீங்கள் சொன்ன குழந்தை வைத்திய நிபுணர் கூட தொழிலையும்,குடும்பத்தையும் சமப்படுத்த முடியாமல் தான் வேலையை விட்டு இருப்பார்.

அக்கோய் ஒவ்வொன்றும் ஒவ்வொரு ரகம், இதில் சலிப்பேது? பல மொடல் கார்களை பார்த்தாலும் சொந்தமாக கார் வைத்து ஓட்டுவதில் உள்ள சுகத்திற்கு ஈடாகாது.

 

✂️ (வேண்டாமே)

Edited by MEERA

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, விசுகு said:

 

பணமாக இருக்கலாம்

சொத்தாக  இருக்கலாம்

சாப்பாடாக இருக்கலாம்

ஏன் மதுபானமாகக்கூட இருக்கலாம்

அனுபவித்தவர்கள் 

பார்த்தவர்கள் தானே அதிகம் ஆசைப்படுகிறார்கள்

அலைகிறார்கள்?

அடுத்ததற்கு தாவுகிறார்கள்

பல வைத்தியர்கள் தம்மிடம் வரும் பெண்களிடம் தவறாக நடந்துள்ளமையை நாமும் அறிந்துள்ளோமே..

 

இப்படி எல்லாம் சொல்லிவியள் என்று தெரிஞ்சு தான்.. நாங்க எல்லாம் தொட்டுப் பார்க்கிற கிலினிக்கல் செக்சன் பக்கம் போகாமல்.. ஆராய்ச்சிப் பக்கம் வந்திட்டம்.  கிலினிக்கல் பிடிப்பில்லை.. கண்ட கண்ட அசிங்கங்களை தொட்டுக் கொள்ளனுமேன்னு. tw_blush:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, nedukkalapoovan said:

இப்படி எல்லாம் சொல்லிவியள் என்று தெரிஞ்சு தான்.. நாங்க எல்லாம் தொட்டுப் பார்க்கிற கிலினிக்கல் செக்சன் பக்கம் போகாமல்.. ஆராய்ச்சிப் பக்கம் வந்திட்டம்.  கிலினிக்கல் பிடிப்பில்லை.. கண்ட கண்ட அசிங்கங்களை தொட்டுக் கொள்ளனுமேன்னு. tw_blush:

நீங்க இதுக்குள் தான் முன்னேறணும் என்பதும் எமது வரம்பு கட்டலின் குறியாக இருக்கலாம் அல்லவா ராசா..

(யாரிட்ட?tw_blush:)

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, விசுகு said:

நீங்க இதுக்குள் தான் முன்னேறணும் என்பதும் எமது வரம்பு கட்டலின் குறியாக இருக்கலாம் அல்லவா ராசா..

(யாரிட்ட?tw_blush:)

வரம்போ வாய்க்காலோ.. அசிங்கத்துக்க குடித்தனம் நடத்த முடியாது நம்மால. tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nedukkalapoovan said:

வரம்போ வாய்க்காலோ.. அசிங்கத்துக்க குடித்தனம் நடத்த முடியாது நம்மால. tw_blush:

நம் நிலை கொஞ்சம் மோசமான நிலையில் தான் போகிறது 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.