Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரான்சில் மாவைக்கு அடி விழுந்ததா! மக்களுக்கு தீர்வு பெற்று கொடுக்காமல் வரவேண்டாம்!

Featured Replies

5437_1473659195_PhototasticCollage-2016-09-12-07-43-03.jpg

பரிசில் இடம்பெற்ற உலகத்தமிழர் பண்பாட்டு மாநாடு மாவை சேனாதிராசாவின் ஆரம்பப் பேச்சோடு, பொதுமக்களின் கேள்விக்கணைகளோடு ஏற்பட்ட சலசலப்பின் காரணமாக இடைநிறுத்தப்பட்டது.

பிரான்சு தலைநகர் பரிசில் இடம்பெற்ற உலகத்தமிழர் பண்பாட்டு மாநாட்டில் மேடையேறி உரையாற்றத்தொடங்கிய மாவை சேனாதிராசா 2009ல் ஜேர்மனியிலே கொண்டாடிய பின் இப்படியொரு நிகழ்வு இப்போதுதான் இடம்பெறுவதாக கூறியதைத் தொடர்ந்து, மண்டபத்தில் இருந்த இளைஞர்கள் எழுந்து, இனம் கொத்துக் கொத்தாக கொல்லப்பட்ட வேளை யாரடா கொண்டாடினோம், நீ எங்கடா இருந்தாய் என்று கேள்வி கேட்கவே மாநாடு பெரும் குழப்பத்திற்குள்ளாகி நிகழ்வுகள் இரத்துச்செய்யப்பட்டது.

இக்குழப்பத்தின் போது கண்ணீர்ப்புகையும் வீசப்பட்டதாகவும் தகவல்கள் தொிவிக்கின்றன.

மாநாடு நடைபெறப்போகின்றது எனவும் சம்பந்தப்பட்டவர்கள் மாநாட்டுக்கு வரப்போகின்றார்கள் எனவும் அறிவிக்கப்பட்டதில் இருந்து அம்மாநாட்டுக்காக அழைக்கப்பட்டவர்கள் தொடர்பாக எதிர்ப்புக்கள் பலமட்டத்தில் இருந்தும் அரசியல் செயற்பாட்டாளர்களிடமும் இருந்து வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

http://battinaatham.com/description.php?art=5437

மாவை போன்ற கேவலமான அரசியல்வாதிகளை விழாக்களுக்கு அழைப்பதை நிறுத்த வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

பிரான்சில் நடப்பதால் இது பற்றி எழுதவேண்டியுள்ளது.
கூட்டமைப்பினர் தமது மக்கள் தமக்கு இட்ட ஆணையை அதாவது தீர்வை பெறுதலை 31/12/2016க்குள் கொண்டு வந்துவிட்டு இது போன்ற விடயங்களில் மற்றும் புலம் பெயர் தேசங்களுக்கு வந்து உறவுகளை சந்திப்பதை செய்வது நல்லது. அல்லது தேவையற்ற இடைஞ்சல்களும் மனக்கசப்புக்களும் தான் வரும். இது புலத்துக்கும் தாயக மக்களுக்குமான இடைவெளியை அதிகரித்து எமக்குள் பிரிவுகளையும் மேலும் பிளவுகளையும் கொண்டு வந்துவிடும். எனவே தலைவர்கள் நிதானமாக தூரநோக்கோடு சிந்தித்து செயற்படணும்.

இது எனது முகநூலில் 09-09-2016 இல் எழுதியது.

2 hours ago, விசுகு said:

இது புலத்துக்கும் தாயக மக்களுக்குமான இடைவெளியை அதிகரித்து எமக்குள் பிரிவுகளையும் மேலும் பிளவுகளையும் கொண்டு வந்துவிடும். 

கூட்டமைப்பின் நோக்கமே அது தானே!!!

  • கருத்துக்கள உறவுகள்

அவுஸ்திரேலியாவில் சுமந்திரன், பிரான்சில் மாவை.....
ஒரு அரசியல் வாதிக்கு, அடி விழுகுது என்றால்.....
மக்கள் அவரின் மீது, எவ்வளவு வெறுப்பில் உள்ளார்கள் என்பதை... அவரும், அவரின் கட்சியும்  உணர வேண்டும்.

பிரான்சில் தமிழ் சிறார்கள் மீது தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் படம் வெளியானது!!! அச்சத்தில் ஈழத்தமிழர்கள்…?

 

 

 
 
fr1

உலக தமிழ் பண்பாட்டு இயக்கம் பிரான்ஸ் தலைநகர் பரிசில் நடத்திய உலக தமிழ் பண்பாட்டு மகாநாட்டில் கலந்து கொண்டவர்கள் மீது பிரான்ஸில் உள்ள சிலர் நச்சுவாயு கலந்த கண்ணீர்ப்புகை வீசியதால் சிறுவர்கள் பெண்கள் உட்பட பொதுமக்கள் பலரும் பாதிக்கப்பட்டனர். சுமார் 40பேர் பாதிக்கப்பட்டனர் என்றும் சிலர் மயக்கம் அடைந்தனர் என்றும் மகாநாட்டில் கலந்து கொண்டவர்கள் தெரிவித்தனர்.

தமிழரசுக்கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா பேசிக்கொண்டிருந்த போதே அங்கு வந்திருந்த நான்கு பேர் நச்சுவாயு கலந்த சக்தி வாய்ந்த கண்ணீர்புகையை பிரயோகித்து பொதுமக்கள் மீது தாக்குதல்களை நடத்தினர்.

இச்சம்பவம் தொடர்பாக மாவை சேனாதிராசாவின் சகோதரரும், இம்மகாநாட்டு ஏற்பாட்டாளர்களில் ஒருவருமான தங்கராசாவிடம் தொடர்பு கொண்டு கேட்ட போது இந்த வன்முறையில் ஈடுபட்ட நான்கு பேரும் பிரான்ஸில் உள்ள ஒரு நபரின் ஏற்பாட்டில் தான் மண்டபத்திற்குள் நச்சுவாயு கலந்த கண்ணீர்புகை கருவையை தமது உடைகளுக்குள் மறைத்து கொண்டுவந்தார்கள் என்று தெரிவித்தார்.

இம்மாகாநாட்டை குழப்ப போவதாக ஏற்கனவே கஜன் என்ற நபர் முகநூல்களிலும் சில இணையத்தளங்களிலும் வீடியோக்களையும் செய்திகளையும் வெளியிட்டு வந்தார் என்றும் இதனால் மகாநாடு நடக்கும் மண்டபத்திற்குள் வன்முறையை மேற்கொள்வார்கள் என நாம் எச்சரிக்கையுடன் இருந்தாக அவர் தெரிவித்தார்.

மகாநாடு ஆரம்பமாகி கடசி நேரத்தில் கார் ஒன்றில் ஒரு நபர் நான்கு பேரை அழைத்துக்கொண்டு இறக்கி விட்டு அந் நபர் காருக்குள் இருந்தார் என மகாநாட்டில் கலந்து கொண்ட பலரும் தெரிவித்தனர்.

மண்டபத்திற்குள் வந்திருந்த நான்கு பேரிலும் சந்தேகம் ஏற்பட்டதால் அவர்களை அவதானித்து கொண்டிருந்ததாகவும் மாவை சேனாதிராசா பேச ஆரம்பித்ததும் அந்த நான்கு நபர்களும் கூச்சல் இட்டவாறு பொதுமக்கள் மீது கண்ணீர்புகையை பிரயோகித்ததாகவும் தங்கராசா தெரிவித்தார்.

நஞ்சுவாயு கலந்த கண்ணீர்புகையால் கண்கள் திறக்க முடியாது பாதிக்கப்பட்டிருந்த வேளையில் அந்நான்கு நபர்களும் மண்டபத்தை விட்டு வெளியில் ஓடினர்.

ஏற்கனவே காரில் இருந்த அந் நபர் அவர்களை ஏற்றிக்கொண்டு தப்பி சென்றுவிட்டார் என மகாநாட்டு ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

பொதுமக்கள் மீது நச்சு வாயு கலந்த கண்ணீர்புகையை பிரயோகித்து குழந்தைகள் சிறுவர்கள் பெண்கள் பொதுமக்கள் பாதிப்படைய காரணமாக இருந்தவர்களின் அடையாளங்கள் அங்கு எடுக்கப்பட்ட காணொளியில் பதிவாகியுள்ளதாகவும் அந்த நான்கு நபர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்றும் இது பற்றி பொலிஸில் முறைப்பாடு செய்திருப்பதாகவும் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

இந்த மகாநாட்டு ஏற்பாடுகளில் சில சதிகள் இடம்பெற்றிருக்கலாம் என்றும் சிலர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

இம்மகாநாட்டில் இவ்வாறான சம்பவம் நடைபெறும் என ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்ட ஒன்றுதான்.

கஜன் என்ற நபர் இம்மாகாநாட்டை நடத்த விடமாட்டோம், குழப்புவோம் என வெளிப்படையாக சமூக வலைத்தளங்களிலும் இணையத்தளங்களிலும் செய்திகளை வெளியிட்டிருந்தார்.

இப்படி ஒரு சம்பவம் நடைபெறும் என தெரிந்திருந்தும் சரியான பாதுகாப்பு ஏற்பாடுகளை ஏன் செய்யவில்லை என்ற கேள்வி எழுகிறது.

பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படும் என தெரிந்திருந்தும் அதனை தடுப்பதற்கான முன் ஏற்பாடுகளை மண்டபத்தை ஏற்பாடு செய்தவர்கள் ஏன் செய்யவில்லை.

சிலர் மகாநாட்டை குழப்புவார்கள் என அறிந்த தமிழ் மக்கள் மீது அக்கறை கொண்ட தமிழ் இளைஞர்கள் சிலர் தாம் அங்கு வந்து பாதுகாப்பிற்கு நிற்கிறோம் என கேட்ட போது ஏற்பாட்டாளர்கள் அதனை நிராகரித்து விட்டனர் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

கைக்குழந்தையுடன் யாராவது இருந்திருந்தால் அக்குழந்தை நச்சுவாயுவினால் மூச்சு திணறி இறந்திருக்கும்.

கொலைவெறியுடன் கூடிய பாதக செயலை செய்தவர்களும் பொதுமக்கள் பற்றி சிந்திக்கவில்லை, ஏற்பாட்டாளர்களுக்கும் இச்சம்பவம் நடக்கும் என தெரிந்திருந்தும் இதனை தடுக்க முன்னேற்பாடுகளை அவர்கள் செய்யவில்லை.

இச்சம்பவங்களின் பின்னணியில் தமிழின விரோத சக்திகள் இருந்துள்ளார்கள் என்பதற்காக ஆதாரங்களும் கிடைத்துள்ளன.

அன்மையில் ஜெனிவாவில் வைத்து மகிந்தவின் ஆதரவு பாராளுன்ற உறுப்பினர்கள் பிரான்ஸ் கஜனைச் சந்தித்து தமிழர்கள் ஆதரவாக செயற்படுகிறன்ற இடங்களில் இப்படிப்பட்ட குழப்பங்களை செய்ய வேண்டும் எனவும் அதற்காக மாதாந்தம் பணமும் ஐ.நா கூட்டத் தொடர் இடம் பெறுகிறன்ற காலத்தில் கஜன் ஆதரவாளர்கள் இருவர் அல்லது அதற்கு மேற்பட்டவர்களை ஜெனிவாவிற்கு அழைப்பதற்கு பயணத்திற்கான பணமும் ஒழுங்கு செய்து தரப்படும் என கூறப்பட்டதன் பிரகாரம் கஜன் குழுவின் முதல் தாக்குதல் இடம் பெற்றுள்ளது.

இத் தாக்குதல் தடுத்து நிறுத்தப்படும் என முன்னர் கஜன் செய்தி வெளியிட்டிருந்த நிலையில் இத் தாக்குதல் இடம் பெற்றமை குறிப்பிடத் தக்கது.

விடுதலைப் புலிகளின் தலைவரையும் போராளிகளையும் முன்னிறுத்தி தம்மை ஒரு புலி ஆதரவாளர் என காட்டி வரும் கஜன் போராட்டத்திற்கும் தமிழ் தேசியத்திற்கும் எதிராக செயற்பகின்றார்.

இத்தாலியில் உள்ள கோத்தபாயவின் முன்னிய ஆதரவாளர் பாரிய அளவிலான நிதியயினை கஜனிற்கு வழங்கியுள்ளமை குறிப்பிடத் தக்கது.

இத் தாக்குதலின் பின்னனியில் இலங்கையில் உள்ள அரசியல் வாதிகள் தொடர்பு பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது முழுமையான விபரம் விரையில்..

 

fr1fr2fr3fr4

இவர்கள் தொடர்பில் அனுப்பி வைக்கப்பட்ட படங்கள் இவர்கள் யார் என புரிய வைக்கும்….frp

 

http://kathiravan.com/119736

46 minutes ago, தமிழ் சிறி said:

அவுஸ்திரேலியாவில் சுமந்திரன், பிரான்சில் மாவை.....
ஒரு அரசியல் வாதிக்கு, அடி விழுகுது என்றால்.....
மக்கள் அவரின் மீது, எவ்வளவு வெறுப்பில் உள்ளார்கள் என்பதை... அவரும், அவரின் கட்சியும்  உணர வேண்டும்.

ஆனால் எங்கட தாயக அறிவாளிகள் இவர்களுக்கு தானே
வாக்கு போடியினம்.....!!!!!!

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, நவீனன் said:

பிரான்சில் தமிழ் சிறார்கள் மீது தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் படம் வெளியானது!!! அச்சத்தில் ஈழத்தமிழர்கள்…

http://kathiravan.com/119736

இது போன்ற அநாமதேய செய்திகளை எல்லாம் யாழில் இணைக்கலாமா? தற்பொழுது???

 

இதில் யார் அடிதடியில் முதலில் இறங்குகிறார் என்று பாருங்கள்.

அதற்காக மட்டுமே இந்த இணைப்பு.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எல்லாம் கவலை தரும் செயல்கள்.:(
விசுகர் கூறியது போல்  குறித்த தேதிக்குள் வரும் முடிவுகளை பார்த்து விட்டு தமிழ் அரசியல் தலைவைர்கள் வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்ளலாம் என நினைக்கின்றேன்.

அரசியலில் வெட்டுவன் புடுங்குவன் என மேடைக்கு மேடை ஆவேசம் காட்டி மக்களை மந்தைகளாக்கிவிட்டு......... உங்கள் ஆடம்பர வாழ்க்கையின் உல்லாச காலமெல்லாம் மேடையேறி விட்டது.

4 hours ago, Dash said:

ஆனால் எங்கட தாயக அறிவாளிகள் இவர்களுக்கு தானே
வாக்கு போடியினம்.....!!!!!!

மாவைக்கும் சுமந்திரனுக்கும் சரவணபவனுக்கும் மக்கள் வாக்களிக்கவில்லை  என்ற உண்மை தெரியாதா? அவர்கள் ஏனைய கூட்டமைப்பினருக்கு கிடைத்த விருப்பு வாக்குகளை மாற்றி வென்றவர்கள்.

11 minutes ago, போல் said:

மாவைக்கும் சுமந்திரனுக்கும் சரவணபவனுக்கும் மக்கள் வாக்களிக்கவில்லை  என்ற உண்மை தெரியாதா? அவர்கள் ஏனைய கூட்டமைப்பினருக்கு கிடைத்த விருப்பு வாக்குகளை மாற்றி வென்றவர்கள்.

அந்த சந்தேகம் எனக்கும் இருக்கு !!!

ஆனால் அது எப்படி சாத்தியம் ஆனது ???

4 minutes ago, Dash said:

அந்த சந்தேகம் எனக்கும் இருக்கு !!!

ஆனால் அது எப்படி சாத்தியம் ஆனது ???

இது இலங்கையில் எழுதப்படாத தேர்தல் நீதி! பல வருடங்களாக நடக்கும் கூத்து. ராவூப் ஹக்கீம் என்பவரும், டக்ளஸ் என்பவரும் தேர்தலில் "நியாயமாக" வென்றது சில தேர்தல்களின் முன்னர் மட்டுமே.

கட்சிக்கு விழுந்த வாக்குகளை முதலில் பிரித்துவிடுவர். அதில் தவறுகள் நடப்பதில்லை. அது போலவே வெல்லும் வேட்பாளர்களின் மொத்த எண்ணிக்கையிலும் தவறுகள் நடப்பதில்லை. அங்கு பிரசன்னமாகி இருக்கும் ஒவ்வொரு கட்சியின் அனுமதிக்கப்பட்ட முகவர்களும் தவறுகள் நடக்க அனுமதிக்கமாட்டார்கள்.   

பின்னர் கட்சிகளின் வேட்பாளர்கள் பெற்ற விருப்பு வாக்குகள் எண்ணப்படும். இதன் போது ஒவ்வொரு கட்சியின் அனுமதிக்கப்பட்ட முகவர்களும் தத்தமது கட்சிகளின் விருப்பு வாக்குகளில் மட்டுமே கவனம் செலுத்துவர். மக்கள் 1 முதல் 3 வேட்பாளர்களுக்கு வாக்களித்து இருப்பர். இவை பல்வேறு தொகுதிகளாக பிரிக்கப்பட்டு எண்ணப்படும். இதில் தான் கட்சியின் அனுமதிக்கப்பட்ட முகவர்கள் முன்னரே கட்சியால் தீர்மானிக்கப்பட்ட சிலர் வெல்லத்  தேவையான வாக்குகளை மாற்றி வைப்பர். இதற்காக உண்மையில் வென்ற சிலர் பலிக்கடா ஆவர்.

கடந்த தேர்தலில் சுமந்திரன் தோற்பது உறுதி என்றபடியால் அவரை வெல்லவைக்க முதலே சம்பந்தன், அரச தரப்பினரால் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் மாவை தோற்பதை யாரும் எதிர்பார்க்கவில்லை. சுரேஷ் பிரேமச்சந்திரன், அருந்தவபாலன் போன்றவர்களுக்கு கிடைத்த விருப்பு வாக்குகள் மாற்றப்பட்டு வெல்ல வைக்கப்பட்டனர். இந்த கூத்துக்களை அறிந்த சரவணபவன் முகவர்களை பிளாக் மெயில் செய்து வாக்குகள் மாற்றப்பட்டு வென்றார்.

இது இலங்கையில் நடக்கும் போலி ஜனநாயகக் கூத்துக்கள்.

39 minutes ago, போல் said:

இது இலங்கையில் எழுதப்படாத தேர்தல் நீதி! பல வருடங்களாக நடக்கும் கூத்து. ராவூப் ஹக்கீம் என்பவரும், டக்ளஸ் என்பவரும் தேர்தலில் "நியாயமாக" வென்றது சில தேர்தல்களின் முன்னர் மட்டுமே.

கட்சிக்கு விழுந்த வாக்குகளை முதலில் பிரித்துவிடுவர். அதில் தவறுகள் நடப்பதில்லை. அது போலவே வெல்லும் வேட்பாளர்களின் மொத்த எண்ணிக்கையிலும் தவறுகள் நடப்பதில்லை. அங்கு பிரசன்னமாகி இருக்கும் ஒவ்வொரு கட்சியின் அனுமதிக்கப்பட்ட முகவர்களும் தவறுகள் நடக்க அனுமதிக்கமாட்டார்கள்.   

பின்னர் கட்சிகளின் வேட்பாளர்கள் பெற்ற விருப்பு வாக்குகள் எண்ணப்படும். இதன் போது ஒவ்வொரு கட்சியின் அனுமதிக்கப்பட்ட முகவர்களும் தத்தமது கட்சிகளின் விருப்பு வாக்குகளில் மட்டுமே கவனம் செலுத்துவர். மக்கள் 1 முதல் 3 வேட்பாளர்களுக்கு வாக்களித்து இருப்பர். இவை பல்வேறு தொகுதிகளாக பிரிக்கப்பட்டு எண்ணப்படும். இதில் தான் கட்சியின் அனுமதிக்கப்பட்ட முகவர்கள் முன்னரே கட்சியால் தீர்மானிக்கப்பட்ட சிலர் வெல்லத்  தேவையான வாக்குகளை மாற்றி வைப்பர். இதற்காக உண்மையில் வென்ற சிலர் பலிக்கடா ஆவர்.

கடந்த தேர்தலில் சுமந்திரன் தோற்பது உறுதி என்றபடியால் அவரை வெல்லவைக்க முதலே சம்பந்தன், அரச தரப்பினரால் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் மாவை தோற்பதை யாரும் எதிர்பார்க்கவில்லை. சுரேஷ் பிரேமச்சந்திரன், அருந்தவபாலன் போன்றவர்களுக்கு கிடைத்த விருப்பு வாக்குகள் மாற்றப்பட்டு வெல்ல வைக்கப்பட்டனர். இந்த கூத்துக்களை அறிந்த சரவணபவன் முகவர்களை பிளாக் மெயில் செய்து வாக்குகள் மாற்றப்பட்டு வென்றார்.

இது இலங்கையில் நடக்கும் போலி ஜனநாயகக் கூத்துக்கள்.

விளக்கத்துக்கு நன்றி போல்!!!

  • கருத்துக்கள உறவுகள்

இது இப்பிடியிருக்க, அதை மறைக்க   கனடாவில இருந்து ஒருவர் அரக்கப் பறக்க ஓடி வந்து சிங்களவருக்கு வோட்டுப் போட்டதென்று அடிக்கடி ஒப்பாரி வைத்து அழுகிறார். அடுத்த முறை என்றாலும்எல்லாரும் இந்தத் தப்பிலியளுக்கு வாக்கு போடுவினம். அவையளும்   தில்லு, முல்லுப் பண்ணாமல் கம்பீரமாய் வீரவசனம் பேசுவினம் எண்டொரு நப்பாசை. அடுத்தமுறை வாக்கு கேட்டு வரமாட்டினம். வேறை ஏதாவது ஏமாத்து வேலையை சிங்களவனோடு சேர்ந்து அரங்கேற்றுவினம். அதை  மக்கள் எல்லோரும் திரண்டு முறியடிக்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

வாயாலை திட்டம் போட்டுத் தண்ணியில் வடை சுடும் இந்த அமைப்பிற்கு மாவை, சிறிதரன் போன்றவர்கள் வக்காலத்து வாங்குபவர்கள்.
கெப்பிலை வேறை புலம்பெயர்ந்த தமிழர்களை கேணைப்பயல்களாக்குபவர்கள்.
ஊரில் மக்களை ஏமாற்றுவது போல இங்கும் செய்ய வெளிக்கிட்டால்    நிலைமை கவலைக்கிடமாகத்தான் இருக்கும்

உயிராயுதம்செய்து இனங்காத்த இனத்தின் சாபக்கேடுகள் இப்படியான சமூக அசைவுகள்.

 

சுய ஒழுக்கம்  இல்லாத  ........எல்லாம்  தேசியம்  விடுதலை பேசுது  துப்பினால்  எச்சிக்கு  மரியாதையை  இல்லை .

பாரீஸில் பெண்கள், குழந்தைகள் , மக்கள் மீது நடத்தப்பட்ட கஜன் சமூக விரோத கும்பலின் கண்ணீர் புகை தாக்குதலை ஆதரிக்கும் எந்த ........ இனி அருகதை கிடையாது....

சிங்களவன் முள்ளிவாய்க்காலில் மக்கள் மீது நச்சுக்குண்டு தாக்குதல் செய்தான் என சொல்வதற்கு.

இரண்டும் வன்முறையையும் மனிதர்கள் செய்யக்கூடிய ஒன்றல்ல.

 

14317504_10209284620447075_3800981056865255201_n.jpg?oh=1a20755f98763f384508254f9135692f&oe=58436EF8

  • கருத்துக்கள உறவுகள்

பிழையான அரசியல்வாதிகளையும் அமைப்புக்களையும்  நம்பி அவர்களின் பின்னால் செல்லும் எவரும் இனி மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் என்ற பாடத்தை நான் படித்துக் கொண்டேன்

இப்பாடியான  ரவுடிசத்தை  கும்பலை  வளர்ப்பது  பெரும்பாலும்  பாரீஸ்  கடை  முதலாளிகள்,  வட்டிக்கு  பணம்  கொடுக்கும்  பிறவிகள்  தான்  தங்கள்  சுய  தேவைக்கு தண்ணி  வாங்கி  கொடுத்து  ஏவி  விட்ட  கூட்டம்  இப்ப  இவ்வாறான  தமிழ்  தேசிய  நிகழ்வுகளை  குழப்பவும்  பயன்படுத்த  தொடங்கி  விட்டது  என்பதுதான்  வேதனை .

 

ஒருநாள்  இவர்கள் அவர்கள்  மார்பில்  பாயும்போது  தெரியும்  அதன்  விளைவு .

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்

இந்த மாநாட்டுக்கு நானும்   போக இருந்தேன்

பாராளுமன்ற உறுப்பினர்களின் வரவு சார்ந்து சில கேள்விகளை நேரிடையாக  கேட்கலாம் என்றிருந்தேன்

நல்ல காலம் யேர்மனியில் ஒரு அலுவலாக  போகவேண்டி வந்துவிட்டது

இல்லை என்றால் நானும் கேள்வி  கேட்க

அவர்கள் நம்ம கன்னத்தில்  போட...

முகநூல் வியாபாரிகளும் விளம்பரதாரிகளும்

என் சிறுவயதிலிருந்து

குடும்பம்வரை கிழி கிழி என்ற கிழித்திருப்பார்கள்.....

 

 

14 hours ago, விசுகு said:

இந்த மாநாட்டுக்கு நானும்   போக இருந்தேன்

பாராளுமன்ற உறுப்பினர்களின் வரவு சார்ந்து சில கேள்விகளை நேரிடையாக  கேட்கலாம் என்றிருந்தேன்

நல்ல காலம் யேர்மனியில் ஒரு அலுவலாக  போகவேண்டி வந்துவிட்டது

இல்லை என்றால் நானும் கேள்வி  கேட்க

அவர்கள் நம்ம கன்னத்தில்  போட...

முகநூல் வியாபாரிகளும் விளம்பரதாரிகளும்

என் சிறுவயதிலிருந்து

குடும்பம்வரை கிழி கிழி என்ற கிழித்திருப்பார்கள்.....

 

 

அங்கு  பொடியள் முந்திவிட்டான்கள் லண்டனில் கேள்வி கேட்டவங்களை சுமத்திரன் அடியாள்கள் வாடகைக்கு அமர்த்தி வெளியேற்றின சம்பவம் உண்டு (லண்டனில் சம்சும் கும்பல் பவ்ன்சர் இல்லாமல் ஒரு கூட்டம் வைப்பதில்லை பவுன்சரின் ஆசன வாய்பக்கமாக இருந்து ஆம் பிரபாகரன் செய்தது பிழை என்று சொல்லிவிட்டு அடுத்த பிளைட் பிடித்து இருவரும் ஓடிதப்புவினம் இங்கு வழமையானது )

மாவைக்கு அடியுங்கடா என உசுப்பி விட்ட இணைய போராளீஸ் ..அவர்கள் அங்கு சென்று கண்ணீர் புகை அடித்து குழப்பிய பின்னர் ...

அந்த சமூக விரோத கும்பலுக்கு ஒரு நன்றி கூட பேஸ்புக்கில் சொல்லவில்லை என்பதை இங்கு மென்மையாக கண்டிக்கிறேன்.

இதுதான் உங்க நன்றிக்கடனா போராளீஸ் சிலரை பேஸ்புக் பக்கம் காணவே இல்லை என்றால் பாருங்களன்.

 

நாங்க  வெளியில  கிளீன்...  உண்மைக்கு   அவர்கள்  தங்கள்  சொந்த   பக்கத்தில்  படத்தை  போட்டு  வாழ்த்தி  இருக்கணும் .செய்யமாட்டம்  ஆனால்  உசுப்பி  விடுவம்  போறது  எங்க  உயிரா  உடமையா  எவனோ  ஒருவன்   தானே  போய்  தொலையட்டும்  என்னும்  எண்ணம்   தான்  இப்ப  உள்ள  தேசியவாதிகளுக்கு .

 

 

  • கருத்துக்கள உறவுகள்

மாவைக்கு.... புகை, அடித்தது ஏன்?
#####
(வாழைக்குலை மாதிரி ..... மாவை,    இருந்தால்,
புகை அடித்து, பழுக்க வைக்க வேண்டியது.. எம் கடமை. -தமிழ் சிறி-)

 

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, அஞ்சரன் said:

மாவைக்கு அடியுங்கடா என உசுப்பி விட்ட இணைய போராளீஸ் ..அவர்கள் அங்கு சென்று கண்ணீர் புகை அடித்து குழப்பிய பின்னர் ...

அந்த சமூக விரோத கும்பலுக்கு ஒரு நன்றி கூட பேஸ்புக்கில் சொல்லவில்லை என்பதை இங்கு மென்மையாக கண்டிக்கிறேன்.

இதுதான் உங்க நன்றிக்கடனா போராளீஸ் சிலரை பேஸ்புக் பக்கம் காணவே இல்லை என்றால் பாருங்களன்.

 

நாங்க  வெளியில  கிளீன்...  உண்மைக்கு   அவர்கள்  தங்கள்  சொந்த   பக்கத்தில்  படத்தை  போட்டு  வாழ்த்தி  இருக்கணும் .செய்யமாட்டம்  ஆனால்  உசுப்பி  விடுவம்  போறது  எங்க  உயிரா  உடமையா  எவனோ  ஒருவன்   தானே  போய்  தொலையட்டும்  என்னும்  எண்ணம்   தான்  இப்ப  உள்ள  தேசியவாதிகளுக்கு .

 

 

இயக்கத்தில் பெண்கள் கூட கரும்புலி படகேறி போக 
நீங்கள் வெட்டி ஓடி பாரிஸ் வரலாம் ....

அடுத்தவன்தான் முன்னுக்கு போக வேண்டும்.
முக புத்தகத்தில் படம் போட வேண்டும் ???

  • கருத்துக்கள உறவுகள்

 

16 hours ago, Maruthankerny said:

இயக்கத்தில் பெண்கள் கூட கரும்புலி படகேறி போக 
நீங்கள் வெட்டி ஓடி பாரிஸ் வரலாம் ....

அடுத்தவன்தான் முன்னுக்கு போக வேண்டும்.
முக புத்தகத்தில் படம் போட வேண்டும் ???

இதை  தான்  மேல  தமிழில்  சொல்லுறன்  ஓடிவந்தவன்  எல்லாம்  வீரம்  பேசிட்டு  ஒளிச்சு  நிண்டு  பின்னாடி  உள்ளவனை  முன்னுக்கு  தள்ளிவிடும்  வேலை  நிறுத்த  சொல்லி ஆமா .

நாங்க  இறங்கனும்  அல்லது  மூ .........இருக்கணும்  கோயில்  பூசாரிகள்  போல  உருவேற்றும்  வேலை  செய்யக்கூடாது  .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.