Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வவுனியாவில் சிவசேனா அமைப்பு உருவானது!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
வவுனியாவில் சிவசேனா அமைப்பு உருவானது! Top News 
[Sunday 2016-10-09 16:00]
வவுனியா மாவட்டத்தில் சிவசேனா என்ற புதிய அமைப்பின் அங்குரார்ப்பண  நிகழ்வு இன்று இடம்பெற்றது. இந்து மதத்தின் பாதுகாப்பு மற்றும் இந்து மக்களின் நலன்களில் கவனம் செல்லும் முகமாக இந்த அமைப்பு அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது.  இவ் அமைப்பின் அங்குரார்ப்பண நிகழ்வில் வடக்கு கிழக்கு  மாகாணங்களைச் சேர்ந்த பெருமளவான இந்து மக்கள் கலந்துகொண்டிருந்தனர்.

வவுனியா மாவட்டத்தில் சிவசேனா என்ற புதிய அமைப்பின் அங்குரார்ப்பண நிகழ்வு இன்று இடம்பெற்றது. இந்து மதத்தின் பாதுகாப்பு மற்றும் இந்து மக்களின் நலன்களில் கவனம் செல்லும் முகமாக இந்த அமைப்பு அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது. இவ் அமைப்பின் அங்குரார்ப்பண நிகழ்வில் வடக்கு கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த பெருமளவான இந்து மக்கள் கலந்துகொண்டிருந்தனர்.

   

இதன்போது இந்து மதத்தின் வளர்ச்சி, மத மாற்றங்களும் அதனால் ஏற்படும் பாதிப்புகளும், இந்து மக்கள் வாழும் பிரதேசங்களில் இடம்பெற்று வரும் மத ரீதியான அளுகைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பாக இன்றைய நிகழ்வில் கலந்துரையாடப்பட்டது. இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரன், தமிழறிஞர் மறவன்புலவு சச்சிதானந்தம், வைத்திய கலாநிதி நந்தகுமார் உள்ளிட்ட இந்து மக்கள் என பலர் கலந்துகொண்டிருந்தனர்.

அண்மைக்காலமாக வடக்கு, கிழக்கு உள்ளிட்ட பல பிரதேசங்களில் அமைந்துள்ள இந்து ஆலயங்கள் உடைக்கப்பட்டும், ஆலயத்தில் திருட்டு சம்பவங்கள் இடம்பெற்றுவரும் நிலையில், இந்து மதத்தின் புனிதத்தை பாதுகாக்கும் முகமாக சிவசேனா என்ற புதிய அமைப்பின் அங்குரார்ப்பணம் செய்யப்பட்டுள்ளது.

 

sivasena-vavuniya-091016-seithy.jpg

 

http://www.seithy.com/breifNews.php?newsID=167195&category=TamilNews&language=tamil

 

 

Edited by nochchi

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவின் ஒரு கிளையா அல்லது சிறிலன்காவின் தனித்துவமான அமைப்பா?எது எப்படியோ அடிபாட்டுக்கு இடம் உண்டு.....

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, putthan said:

இந்தியாவின் ஒரு கிளையா அல்லது சிறிலன்காவின் தனித்துவமான அமைப்பா?எது எப்படியோ அடிபாட்டுக்கு இடம் உண்டு.....

பிக்குகளுக்கும், சிவ சேனாவிற்கும்.... புடுங்குப் பாடு வராமல், பார்த்துக் கொள்ள வேண்டியது, புத்தனின் பொறுப்பு.  :grin:

  • கருத்துக்கள உறவுகள்

முதலில் இந்த அல்லுலோயாவை கொஞ்சம் கவனிங்கப்பு

  • கருத்துக்கள உறவுகள்

எங்களுக்குச் சிவனும் வேண்டாம்....சேனாவும் வேண்டாம்...!

ஆளை விடுங்கப்பு!

 

சீதையைத் தொடாமலே...இராவணேசன் அழிந்தான்!

இந்தியாவைத் தொட்டால் நிச்சயம் அழிவு தான்!

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, புங்கையூரன் said:

எங்களுக்குச் சிவனும் வேண்டாம்....சேனாவும் வேண்டாம்...!

ஆளை விடுங்கப்பு!

 

சீதையைத் தொடாமலே...இராவணேசன் அழிந்தான்!

இந்தியாவைத் தொட்டால் நிச்சயம் அழிவு தான்!

அவையளாக வில்லங்கத்துக்கு வந்து தொட்டால் என்ன செய்யிறது அண்ணேtw_tounge_wink:

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, putthan said:

அவையளாக வில்லங்கத்துக்கு வந்து தொட்டால் என்ன செய்யிறது அண்ணேtw_tounge_wink:

tmm+maruveda+thiruvila+3.jpg

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 10.10.2016 at 4:48 AM, nochchi said:

மகிழ்ச்சியுடன் வாழ்த்துக்கள்.

வயோதிபர்கள் கூடிக் கதைக்க ஒரு அமைப்பு தேவைப்படுகுது.

அனுபவம் வாய்ந்த இந்த வயோதிபர்களின் அமைப்பால் வறிய மக்களின் வாழ்வில் ஒளியேற்ற முடிந்தால், தமிழ் மக்களின் (குறைந்தது சைவர்களின்) நசுக்கப்பட்ட உரிமைகளை மீளப் பெற முடியுமாக இருந்தால் முதலாவது பாராட்டு என்னுடையதாக இருக்கும்.

 

  • கருத்துக்கள உறவுகள்
50 minutes ago, போல் said:

வயோதிபர்கள் கூடிக் கதைக்க ஒரு அமைப்பு தேவைப்படுகுது.

அனுபவம் வாய்ந்த இந்த வயோதிபர்களின் அமைப்பால் வறிய மக்களின் வாழ்வில் ஒளியேற்ற முடிந்தால், தமிழ் மக்களின் (குறைந்தது சைவர்களின்) நசுக்கப்பட்ட உரிமைகளை மீளப் பெற முடியுமாக இருந்தால் முதலாவது பாராட்டு என்னுடையதாக இருக்கும்.

 

நாளைக்கு ஏதும் தீர்வு வரும்போது...சிவசேனாவைக் காட்டியே..தமிழர்கள் மீண்டும் பயங்கரவாதிகளாகச் சித்தரிக்கப் படக் கூடிய சாத்தியங்களே அதிகம்!

சிவ சேனா என்ற அமைப்பும்...ஏறக்குறைய இன்னொரு தலிபான் அமைப்பே!

எனக்கென்னவோ இவர்களது வருகை...நல்லது போலத் தெரியவில்லை..போல்! இது ஒரு ஏற்கெனவே திட்டமிடப்பட்ட ஒரு  'நிகழ்ச்சி நிரலில்' நடப்பது போல உள்ளது!

35 minutes ago, புங்கையூரன் said:

நாளைக்கு ஏதும் தீர்வு வரும்போது...சிவசேனாவைக் காட்டியே..தமிழர்கள் மீண்டும் பயங்கரவாதிகளாகச் சித்தரிக்கப் படக் கூடிய சாத்தியங்களே அதிகம்!

சிவ சேனா என்ற அமைப்பும்...ஏறக்குறைய இன்னொரு தலிபான் அமைப்பே!

எனக்கென்னவோ இவர்களது வருகை...நல்லது போலத் தெரியவில்லை..போல்! இது ஒரு ஏற்கெனவே திட்டமிடப்பட்ட ஒரு  'நிகழ்ச்சி நிரலில்' நடப்பது போல உள்ளது!

மகாராஷ்டிரத்தில் இயங்கும் சிவசேனைக்கும் இவர்களுக்கும் எந்த தொடர்பும் இருப்பதாக தெரியவில்லை. இவர்களின் நடவடிக்கைகளை அல்லது அறிக்கைகளை வைத்தே இவர்களின் நோக்கம் உணரப்படும். குறிப்பாக யோகேஸ்வரன், சச்சிதானந்தம் இருவரும் மிக நீண்டகாலமாக தமிழினத்தின் / தமிழின் எழுச்சிக்கு தத்தமது வழிமுறைகளில் நேர்மையாக உழைத்து வருபவர்கள்.  

மேலும் எமது அடிப்படை உரிமைப் போராட்டத்தை மற்றவர்கள் பயங்கரவாதமாக சித்தரிப்பது நீண்ட காலமாக நடந்து வருகிறது. இந்த விஷமத்தன பிரச்சாரங்களை முறியடிப்பதில் தமிழர் போதிய அக்கறை எடுக்கவில்லை. அதனால் தொடர்ச்சியாக தோற்றுக் கொண்டுள்ளார்கள்.

மாறாக மற்றவர்கள் (குறிப்பாக தமிழின விரோதிகள்) எம்மை பயங்கரவாதிகள் என்று சொல்லிவிடக் கூடாது என்ற மனப்பாங்கு தமிழினத்தின் பாரிய பலவீனமாகவே தெரிகிறது.

குறிப்பாக கடத்தல், கொலை, கொள்ளை, பாலியல் பலாத்காரம் போன்றவற்றை பிரதான தொழிலாக செய்துவந்த டக்ளஸ் தேவானந்தாவின் ஈபிடிபி கும்பலை யாரும் பயங்கரவாதிகள் என்று முத்திரை இடவில்லை. தமிழின அழிப்பை, தமிழினப் படுகொலைகளை  பல தசாப்தங்களாக திட்டமிட்டு நடத்திய, நடத்திவரும் ஐக்கிய தேசக் கட்சி (UNP) என்ற மிக மோசமான பயங்கரவாதக் கும்பலை, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி (SLFP) என்ற மிக மோசமான பயங்கரவாதக் கும்பலை, ஜாதிக ஹெல உறுமய (JHU) என்ற மிக மோசமான பயங்கரவாதக் கும்பலை, இன்னும்  எக்சத் ஜாதிக பெரமுனை போன்ற மிக மோசமான பயங்கரவாதக் கும்பல்களை, இதுவரை யாரும் பயங்கரவாதிகளாக முத்திரை குத்தவில்லை. ஆனால் கட்டுக்கோப்பாக தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகளுக்கு போராடிய தமிழீழ விடுதலைப் புலிகள் "பயங்கரவாதிகளாக" சித்தரிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அடிப்படையில் பாரிய தவறுகள் இருப்பதையும் தமிழ் மக்கள் உணர்ந்து, இந்த சூழ்நிலைகளை திருத்த முயலவேண்டும்.      

அண்மையில் எழுக தமிழ் மூலம் முதலமைச்சர் விக்னேஸ்வரன் மீது இனவாத சாயம் பூசிய சிங்கள-பௌத்த இனமதவெறியர்கள் (சுமந்திரன் உட்பட) தாயகத் தமிழரின் உடனடி எதிர்பால் அடங்கியதை மறந்திருக்க முடியாது. போர்க்குற்றவாளிகள் மகிந்த ராஜபக்ச கும்பலில் பலர், பௌத்த மதவெறியர்களின் தலைவர்களான மகாநாயக்க தேரர்கள் முதலமைச்சர் விக்னேஸ்வரன் இனவாதி இல்லை என்று பகிரங்கமாக சொல்ல வேண்டிய நிலை உருவானது. இந்த திடீர் திருப்பங்களால்  மிக மோசமான சிங்களச் சதிகாரனும்  தமிழின அழிப்பை, தமிழினப் படுகொலைகளை  பல தசாப்தங்களாக திட்டமிட்டு நடத்திய, நடத்திவரும் ஐக்கிய தேசக் கட்சி (UNP) என்ற மிக மோசமான பயங்கரவாதக் கும்பலின் இன்றைய தலைவனுமாகிய  ரணில் விக்ரமசிங்க கலக்கமடைந்ததையும் தமிழ் மக்கள் கவனித்திருப்பார்கள்.

Edited by போல்

  • கருத்துக்கள உறவுகள்

விளக்கத்துக்கு நன்றி போல்!

ஆபிரிக்கர்களையும், தென்அ மெரிக்கர்களையும் வத்திக்கான் உபயோகித்து போலவே..ஆரியர்களும் தமிழர்களை உபயோகித்தார்கள்!

எனக்குத் தெரிய ஐரோப்பியர்களில் பெரும்பாலானோர்..சேர்ச்சுக்கு...ஞாயிறுகளில் போவது மிகவும் குறைந்து வருகின்றது! எனினும்.கிருஸ்துவ மதம் ஒரு நாளும் அழிந்து விடாது என்று அவர்களுக்கு நன்கு தெரியும்! ஏனெனில் அந்தப் பொறுப்பு..இப்போது ஆபிரிகர்களினதும், தென் அமெரிக்கர்களிடம் ஒப்படைக்கப் பட்டுள்ளது!

அதே போலவே இந்து மதமும்..தன்னை ஒருவாறு ..சைவ மதத்தினுள் நுழைத்துக் கொண்டு விட்டது!

இனி அது எப்படியாயினும் வளரும் என்று அவர்களுக்குத் தெரியும்!

ஈழத் தமிழன் இன்று புலம்பெயர் தமிழனாகி..உலகமெங்கும் 'இந்து' மதம் வளர்க்கிறான்!

தமிழனில்  ஒரு குணம் உண்டு!

கும்பிடுவதற்கு என்னவெல்லாம்..கண்ணில் படுகின்றதோ..எல்லாவற்றையும் கும்பிடுவான்!

அது மாதாவாக இருக்கட்டும்....கிரிஷ்ணனாக இருக்கட்டும்....அனுமானாக இருக்கட்டும்...அல்லது துர்க்கையாக இருக்கட்டும்!

அவன்...வேறு பாடு காட்டுவதில்லை!

 

 

  • கருத்துக்கள உறவுகள்
On 10/10/2016 at 3:45 PM, தமிழ் சிறி said:

பிக்குகளுக்கும், சிவ சேனாவிற்கும்.... புடுங்குப் பாடு வராமல், பார்த்துக் கொள்ள வேண்டியது, புத்தனின் பொறுப்பு.  :grin:

உணர்ச்சிகளில் இருந்து விடுபட முடியாமல் திருமணத்தில் இணைந்த புத்தர், தான் மட்டும் தப்புவதற்காக, மனைவி, பிள்ளைக்கு எடுத்துரைத்து உரிய முறையில் வெளியேற திராணியில்லாமல் கோழைபோல  மனைவியையும், குழந்தையையும் நித்திரையிலேயே தவிக்கவிட்டு நழுவிய புத்தர், இன்று பிக்குகளிட்டை  மாட்டுப்பட்டு தன்னையே காப்பாற்ற முடியாமல் கந்தலாகும் புத்தர், இவர்களை எப்படிப் பார்ப்பது? பொறுப்பெடுப்பது?

  • கருத்துக்கள உறவுகள்

கொழும்பில் பொதுபல சேனா வவுனியாவில் சிவ சேனா மட்டக்களப்பில் அல்லாஹ்வின் சேனை மொத்தத்தில் பயங்கரவாதிகள் அனைவரும் இலங்கைக்குள் இருக்கின்றார்கள் 

வவுனியாவின் சிவசேனைக்கும் இந்தியாவின் சிவசேனாவுக்கும் தொடர்பில்லை

வவுனியாவில் ஆரம்பிக்கப்பட்டுள்ள சிவசேனை இயக்கத்துக்கும் இந்தியாவில் இயங்கிவரும் சிவ்சேனா இயக்கத்துக்கும் தொடர்புகள் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த வாரத்தில் வவுனியாவில் சிவசேனை என்ற அமைப்பு தோற்றுவிக்கப்பட்டது.

ஏனைய மதங்களில் இருந்து இந்து மதத்துக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்களில் இருந்து பாதுகாப்பை வழங்கும் பொருட்டே இந்த அமைப்பு நிறுவப்பட்டதாக அதன் முதன்மை ஏற்பாட்டாளர் மரவன்புலவு சச்சிதாநந்தன் த ஹிந்துவுக்கு தெரிவித்துள்ளார்.

எனினும் இந்தியாவின் சிவசேனா அமைப்பு தமக்கு ஆதரவு வழங்குவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமது அமைப்பு மதமாற்றங்களுக்கு எதிராக செயற்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தாம், சிவசேனை அமைப்பை நிறுவுவதற்கு முன்னர், இந்தியாவின் சிவ்சேனா, ஆர்எஸ்எஸ், விஎச்பி மற்றும் கோஆவை தளமாகக்கொண்ட ஹிந்து ஜாக்ருதி சமத்தி என்பவற்றுடன் கலந்தாலாலோசனைகளில் ஈடுபட்டதாகவும் சச்சிதாநந்தன் தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில் தமது அமைப்புக்காக பல பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டபோதும் இறுதியில் சிவசேனை என்ற பெயரை தெரிந்தெடுத்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

http://www.tamilwin.com/statements/01/120847?ref=home

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.