Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ்.போதனா வைத்தியசாலை படுகொலை 29 ஆவது ஆண்டு நினைவு தினம் அனுஷ்டிப்பு

Featured Replies

யாழ்.போதனா வைத்தியசாலை படுகொலை 29 ஆவது ஆண்டு நினைவு தினம் அனுஷ்டிப்பு
 
 
யாழ்.போதனா வைத்தியசாலை படுகொலை 29 ஆவது ஆண்டு நினைவு தினம் அனுஷ்டிப்பு
யாழ்.போதனா வைத்தியசாலையில் 1987 ஆம் ஆண்டு இந்திய இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்ட உறவுகளின் 29 ஆவது ஆண்டு நினைவு தினம் இன்று அனுஷ்டிக்கப்பட்டது.
 
மூன்று வைத்தியர்கள், இரண்டு தாதிகள், மேற்பார்வையாளர் உள்ளிட்ட 21 பணியாளர்களும், சிகிச்சை பெற்றுவந்த 47 நோயாள ர்களுமாக 68 பேர் கொல்லப்பட்டனர்.
19872.jpg
1987 ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் 21 ஆம் திகதி இந்திய இராணுவத்தினர் வைத்தியசாலை மீது மேற்கொண்ட தாக்குதலில் இந்த  68 பேரும் உயிரிழந்தனர்.
 
இன்றையதினம் இடம்பெற் நிகழ்வில் யாழ்.போதனா வைத்தியசாலை பிரதிப்பணிப்பாளர் செ.பவானந்தராஜா உயிரிழந்த உத்தி யோகத்தர்களின் உருவப்படத்திற்கு மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.
1477033917_download.jpg
அதனைத் தொடர்ந்து சுட்டுக்கொல்லப்பட்ட உத்தியோகத்தர்களின் உறவினர்கள் சுடரேற்றியும், மலர் மாலை அணிவித்தும் மலர் தூவியும் தமது அஞ்சலிகளை செலுத்தினர்.
 
குறித்த அஞ்சலி நிகழ்வில், யாழ்.போதனா வைத்தியசாலையின் மேலதிக பணிப்பாளர் மற்றும் நிர்வாக உத்தியோகத்தர்கள், தாதி யர்கள் உட்பட கொல்லப்பட்ட வைத்தியர்கள் மற்றும் தாதியர்களின் உறவினர்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.
1477033936_download%20%281%29.jpg

http://onlineuthayan.com/news/19224

1987ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்ட யாழ் வைத்தியசாலை ஊழியர்கள், வைத்தியர்கள் உட்பட அனைவரினதும் 29ஆவது நினைவுதினம் இன்று நினைவுகூரப்பட்டது.

1987ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 21ஆம் திகதி யாழ் போதனா வைத்தியசாலையில் வைத்து இந்திய இராணுவத்தினரால் கடமையில் இருந்த வைத்தியர்கள், தாதியர்கள், ஊழியர்கள் உட்பட 21 பேர் படுகொலை செய்யப்பட்டனர்.

இவ்வாறு இறந்தவர்களின் நினைவு தினத்தில் வைத்தியசாலையின் ஊழியர்கள், வைத்தியர்கள், தாதியர்கள் மற்றும் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் எனப் பலர் கலந்து கொண்டுள்ளனர்.

குறித்த நிகழ்வில் யாழ் போதனா வைத்தியசாலையின் பிரதி பணிப்பாளர் செ.பவானந்தராஜா விளக்கேற்றி ஆரம்பித்து வைத்துள்ளார்.

 

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

இதனை தொடர்ந்து உயிரிழந்தவர்களின் உறவினர்கள் மலர்மாலையிட்டு, விளக்கேற்றி மற்றும் மலர்தூவி அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

உயிரிழந்தவர்களின் நினைவுதினம் வருடம் தோறும் நினைவுகூரப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

http://www.tamilwin.com/community/01/121763?ref=morenews

  • தொடங்கியவர்

இந்திய அமைதிப்படையால் சுட்டுக்கொல்லப்பட்ட யாழ்.போதனா வைத்தியசாலை  பணியாளர்களின் 29 ஆவது ஆண்டு  நினைவுதினம்

 

 

(ரி.விரூஷன்)

1987 ஆம் ஆண்டு இந்திய இராணுவத்தினரால் சுட்டுக்கொல்லப்பட்ட யாழ்.போதனா வைத்தியசாலையின் வைத்தியர்கள் உட்பட 21 உத்தியோகத்தர்களுக்கான அஞ்சலி நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

14741663_764075530410485_1164205323_n.jp

1987ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 21 மற்றும்  22 ஆம் திகதிகளில் இச் சம்பவம் இடம்பெற்றது.

14741593_764075290410509_1541894944_n.jp

இதன்போது யாழ்.போதானா வைத்தியசாலையில் அன்று கடமையில் இருந்த வைத்தியர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் படுகொலைசெய்யப்பட்டனர்.

14741779_764076630410375_2032873474_n.jp

இவ்வாறு உயிரிழந்தவர்களின் நினைவாக இன்றைய தினம் யாழ்.போதானா வைத்தியசாலையில் நினைவஞ்சலி அனுஷ்டிக்கப்பட்டது.

14805618_764075383743833_1834108646_n.jp

14801151_764076500410388_133407875_n.jpg




யாழ் போதனா வைத்தியசாலை ஊழியர்களின் ஏற்பாட்டில் யாழ்.போதனா வைத்தியசாலை கதிரியக்க பகுதியில் நடைபெற்றது.கொல்லப்பட்ட 21 உத்தியோகத்தர்களின் 29வது ஆண்டு நினைவு தின நிகழ்வுகளில் யாழ்.போதனா வைத்தியசாலை பிரதிப்பணிப்பாளர் செ.பவானந்தராஜா மங்கள விளக்கேற்றியதுடன் உயிரிழந்த உத்தியோத்தர்களின் உருவப்படத்திற்கு மலர்மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.பின்னர் கடமையின் போது சுட்டக்கொல்லப்பட்டு உயிரிழந்த வைத்தியர்கள் மற்றும் தாதியர்கள் உத்தியோகத்தர்களின்  உறவினர்கள் சுடரேற்றியும் மலர்மாலை அணிவித்தும் மலர் தூவியும் தமது அஞ்சலிகளை செலுத்தினார்கள்.நிறைவில் யாழ் .போதனா வைத்தியசாலை பிரதிப்பணிப்பாளர் செ.பவானந்தராஜா அஞ்சலி உரையாற்றினார். இந்த அஞ்சலி நிகழ்வில் யாழ்.போதனா வைத்தியசாலையின் மேலதிக பணிப்பாளர் மற்றும் நிர்வாக உத்தியோகத்தர்கள் தாதியர்கள் உட்பட கொல்லப்பட்ட வைத்திய மற்றும் தாதியர்களின் உறவினர்கள் எனப்பலர் கலந்துகொண்டனர்.

http://www.virakesari.lk/article/12607

  • தொடங்கியவர்
29ஆவது ஆண்டு நினைவுதினம்...
 
 

article_1477038104-IMG_3205.JPG

எம்.றொசாந்த்

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இந்திய அமைதிப்படை மேற்கொண்ட தாக்குதலில் உயிரிழந்தவர்களின் 29ஆவது நினைவுதினம், இன்று வெள்ளிக்கிழமை (21) அனுஷ்டிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பிரதி பணிப்பாளர் ஸ்ரீ.பவானந்தராஜா, வைத்தியசாலை வைத்தியர்கள், தாதியர்கள், ஓய்வுபெற்ற வைத்தியசாலை பணியாளர்கள், உயிரிழந்தவர்களின் உறவினர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

கடந்த 1887 ஆம் ஆண்டு, ஒக்டோபர் மாதம் 21,22 ஆம் திகதிகளில், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குள் நுழைந்த இந்திய அமைதிப்படை, 3 வைத்தியர்கள், 2 தாதியர்கள், மேற்பார்வையாளர்கள் என 21 வைத்தியசாலை பணியாளர்களையும், 47 நோயாளர்களையும் சுட்டுக்கொன்றமை குறிப்பிடத்தக்கது.   

article_1477038122-IMG_3168.JPG

article_1477038131-IMG_3176.JPG

article_1477038141-IMG_3182.JPG

article_1477038151-IMG_3189.JPG

article_1477038163-IMG_3193.JPG

article_1477038172-IMG_3201.JPG
 

அமைதிப்படை என்ற பெயரில் தமிழினப் படுகொலைகளை செய்து எல்லை தாண்டிய பயங்கரவாதத்தில் ஈடுபட்ட ஹிந்திய கொலைகாரக்கும்பல் எந்த விசாரணைகளும் இன்றி சுதந்திரமாக திரிகின்றனர்.

  • கருத்துக்கள உறவுகள்

நினைவாஞ்சலிகள்

ஒன்றையும் மறக்கவில்லை

மன்னிக்கவில்லை

மறக்க மன்னிக்கக்கூடியதாகவா தாண்டவமாடினீர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

நினைவு அஞ்சலிகள் 

 

இந்நிகழ்வுக்கு  கட்டாயம் இந்திய துணை தூதரகத்துக்கு  அழைப்பு அனுப்பியிருக்க வேண்டும் .கலாமுக்கும் ,காந்திக்கும்  யாழில் சிலை வைத்து  கொண்டாடும் இந்தியனுக்கு  அவர்களால்  கொல்லப்பட்ட  மக்களையும் அறிமுகம் செய்தே ஆகவேண்டும் .

யாழ்.போதனா வைத்தியசாலையின் 21 ஊழியர்கள் கொல்லப்பட்டமை மன்னிக்க முடியாத பாவச்செயல் என யாழ்.போதனா வைத்தியசாலையின் பிரதிப்பணிப்பாளர் செ.பவானந்தராஜா தெரிவித்தார்.

யாழில் இன்று இடம்பெற்ற கொல்லப்பட்டவர்களுக்கான அஞ்சலி நிகழ்வில் நினைவுரை ஆற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

யாழ்.போதனா வைத்தியசாலையில் நடைபெற்றது துன்பகரமான நிகழ்வு.

அன்றைய தினம் கடமையின் நிமித்தமும் சிரமத்தின் மத்தியிலும் தமது வீடுகளில் இருந்து வைத்தியசாலையிக்கு வந்தவர்களால் மீண்டும் தமது வீடுகளிற்கு செல்லமுடியாத நிலைமை ஏற்பட்டது.

கடமைக்கு சென்றவர்களை காணவில்லை என்றால் எவ்வாறு அவர்களது குடும்பத்தினர் பதறிப் போய்விடுகின்றார்கள். இந்த துன்பத்தினை 21 உத்தியோகத்தர்களினதும் குடும்பத்தவர்கள் அன்றைய தினம் அனுபவித்திருப்பார்கள் என்பதில் ஐயமில்லை.

சர்வதேச நியமங்களின் படியும், போர்ச்சட்டங்களின் படியும், வைத்தியசாலைகள் மீதும், நோயாளிகளின் காவு வண்டிகள் மீதும் தாக்குதல்கள் நடாத்தக்கூடாதென்பது சர்வதேச சட்டம்.

ஆனால் அதையும் மீறி வைத்தியசாலையில் நடைபெற்ற இந்த கொடூர சம்பவம் எமது ஊழியர்களிடையே பாதிப்பை ஏற்படுத்தியிருப்பது இந்த அஞ்சலி நிகழ்வில் இருந்து புலப்படுகின்றது என்று கூறியுள்ளார்.

தொடர்ந்தும், எதிர்காலத்தில் இவ்வாறான சம்பவங்கள் எந்தவொரு வைத்தியசாலையிலும் நிகழக்கூடாது. அந்தவகையில், கடமையுணர்வுடன் தமது உயிர்களை நீத்த இந்த ஊழியர்களின் பாதையில் எமது கடமைகளை உணர்வுடன் செய்ய வேண்டுமென்றும் என்றும் செ.பவானந்தராஜா வேண்டுகோள் விடுத்தார்.

http://www.tamilwin.com/community/01/121803?ref=home

  • தொடங்கியவர்

மருத்துவமனையை சவச்சாலையாக்கிய இந்தியப் படைகள்! குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்

135
1987 ஒக்டோபர் 21, ஈழத் தமிழ் மக்களின் படுகொலை வரலாற்றில் மறக்க முடியாத ஒருநாள். இந்தியப் படைகள் யாழ் மருத்துவமனையில் படுகொலை புரிந்த நாள். இந்திய அமைதிப் படைகள் மேற்கொண்ட படுகொலை ஒன்றான யாழ் போதனா வைத்தியசாலைப் படுகொலைகள் அல்லது யாழ் வைத்தியசாலைப் படுகொலைகள் நிகழ்ந்து 29 வருடங்கள் கடந்துவிட்டன.இலங்கை – இந்திய ஒப்பந்தத்தின் பிரகாரம் இந்தியப் படைகள் அமைதிகாக்கும் படைகள் என்ற பெயரில் இலங்கைக்கு வந்தனர். அமைதியை ஏற்படுத்தவே இந்தியப் படைகள் வருகின்றன என்று ஈழத் தமிழர்களும் நம்பியிருந்தனர். தமிழ் மக்கள்மீது தமது தீர்வை திணிப்பதன் ஊடாக தமது அரசியல் பிராந்திய நலன்களை இந்தியா சாதிக்க நினைத்தது. இந்திய இலங்கை உடன்படிக்கையின்படி ஏற்படுத்தப்பட்ட 13ஆவது அரசியல் திருத்தம் தமிழ் மக்கள் தரப்பால் புறக்கணிக்கப்பட்டது.இந்த நிலையில் 13ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்தவும் இலங்கை இந்திய ஒப்பந்ததத்தை பாதுகாக்கவும் இந்தியப் படைகள் விடுதலைப் புலிகளுக்கு எதிராக யுத்தத்தை தொடங்கினர். 1987 ஒக்டோபர் மாதம் இந்தியப் படைகள் யுத்தம் தொடங்கிய மாதம். விடுதலைப் புலிகள் இயக்கத்திடமிருந்து யாழ்ப்பாணத்தைக் கைப்பற்ற யுத்தம் செய்வதாக இந்தியா கூறியது. இதன்படி இலங்கை அரசுகள் தமிழ் மக்கள்மீது எவ்வாறு படுகொலைகளைப் புரிந்ததோ அவ்வாறே இந்திய அரசும் ஈழத் தமிழர்கள்மீது  படுகொலைகளைப் புரிந்தது. அத்தகைய படுகொலை ஒன்றே யாழ் போதனா வைத்தியசாலை படுகொலையும்.

 

யாழ்ப்பாண நகரில் அமைந்துள்ள யாழ் வைத்தியசாலை வடக்கிழக்கு மக்களின் வைத்திய தேவையை நிவர்த்தி செய்யும் மையமாகும். இந்தியப் படைகளுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் போர் மூண்ட அன்றைய நாட்களில் மக்கள் வீடுகளுக்குள்ளும் பதுங்குகுழிகளுக்குள்ளும் பதுங்கி இருந்தனர். போரில் காயமடைந்த மக்கள் வைத்தியசாலைக்கு மருத்துவத்திற்காக கொண்டு வரப்பட்டனர். அத்துடன் இந்தியப் படைகளின் தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் பிணங்களும் வைத்தியசாலையில் நிறைந்து கிடந்தன. 1987 அக்டோபர் 21 தீபாவளி நாள். விடுமுறை நாளன்று அனர்த்த காலத்தில் மருத்துசேவைக்கு வந்த வைத்திய சேவையாளர்களே இந்த தாக்குதல்களில் கொல்லப்பட்டனர்.

யாழ் கோட்டையை ஆக்கிரமித்திருந்த இந்தியப் படைகள், அன்றைய தினம் காலையிலேயே அங்கிருந்து பீரங்கிக் தாக்குதல்களை நடத்தத் தொடங்கினர். அத்துடன் ஹெலிகப்டர்களும் தாக்குதலில் ஈடுபட்டன. யாழ் நகரமே போர்க் கோலம் பூண்டிருந்தது. இந்தியப் படைகளின் ஏவுகணை ஒன்று காலை வேளையில் வெளிநோயளர் பிரிவில் வந்து வீழ்ந்து வெடித்தது. அத்துடன் ஏழாம் கூடத்தில் விழுந்த எறிகணையினால் ஏழுபேர் கொல்லப்பட்டார்கள். அத்துடன் மருத்துவமனைமீது துப்பாக்கிச் கூடுகளும் நடாத்தப்பட்டன.

மருத்துவமனைக்குள் விடுதலைப் புலிகள் நடமாடுவதாக சொல்லிக் கொண்ட இந்தியப் படைகள் மருத்துவமனைக்குள் நுழைந்து எல்லோரையும் உள்ளே செல்லுமாறு கூறினர். மேற்பார்வையாளர் அலுவலகம் முதல் மருத்துவனை வளாகமெங்கும் சராமாரியாக துப்பாக்கிச் கூடு நடாத்தினர். கண்டவர்களை எல்லாம் சுட்டு வீழ்த்தினர். ஒரு இந்தியப் படையினன் நோயாளி ஒருவரை நோக்கி கிறினைட்டை கழற்றி எறிந்தார். அதில் பலர் கொல்லப்பட்டனர்.

மருத்துவமனையில் இருந்த சில நோயாளிகள் இறந்தவர்களைப் போல தரையில் வீழ்ந்து கிடந்தமையால் உயிர் தப்பினர். இரவு முழுவதும் துப்பாக்கிச் சூடுகளும் எறிகணை வீச்சும் மருத்துவமனையை அதிரச் செய்தன. மறுநாள் 22 ஆம் திகதி காலை டொக்டர் சிவபாதசுந்தரம் என்பவருடன் மூன்று தாதிமார் கைகளை உயர்த்தியபடி நாம் மருத்துவர்கள் தாதியர்கள் நாம் சரணடைகிறோம் என்று சொல்லிக் கொண்டு மருத்துவமனை வாசலால் வந்தனர்.

அவர்கள்மீதும் இந்தியப் படைகள் சுப்பாக்கிச் சூடுகளை நடத்தினர். சிவபாதசுந்தரம் டொக்டர் அவ்விடத்தில் கொல்லப்பட்டார். இதைப்போலவே டொக்டர் கணேசரத்தினமும் வாசலில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டார். இத் தாக்குதல்களில் மருத்துவர்கள், தாதியர்கள், பணியாளர்கள் மற்றும் நோயாளிகள் என 70 பேர் வரையில் கொன்று வீசப்பட்டனர். விடுதலைப் புலிகளுக்கும் இந்திய இராணுவத்திற்கும் நடந்த சண்டையின் இடையே சிக்கிய மக்களே உயிரிழந்தனர் என்று இந்திய இராணுவத்துக்குப் பொறுப்பான லெப். செனரல் டெப்பிந்தர் சிங் தமது படுகொலை நடவடிக்கையை மூடி மறைத்தார்.

காலம் காலமாக ஈழத் தமிழ் மக்களை படுகொலை செய்த இலங்கை அரசே இந்தப் படுகொலையை இனப்படுகொலை என்று கூறியது. மானுடத்திற்கு எதிரான குற்றங்கள் என 2008இல் இலங்கை அரசு கூறியது.(ஆனால் அதே ஆண்டிலும் தனது இனப்படுகொலையை இலங்கை அரசு நடத்திக்கொண்டிருந்தது) இந்தியப் படைகள் ஈழத்தில் செய்த ஏனைய கொலைகள், பாலியல் வன்புணர்வுகள் என்பனவும் இனப்படுகொலை சார்ந்த நடவடிக்கையாகவே நடந்தேறியுள்ளன.

ஒரு இனத்தை பகுதியாகவோ அல்லது முழுமையாகவோ, மனித இனம் சார்ந்த, இன ஒதுக்கல், சமய வேற்றுமை அல்லது தேசிய இன வேற்றுமை போன்ற காரணங்களால், உடல் ரீதியாகவோ, மன ரீதியாகவோ தொல்லை கொடுப்பது, கொல்ல நினைப்பது அல்லது அழிப்பது, இனவேறுபாட்டைக் காரணங்காட்டி குழந்தைப் பிறப்பை தடுப்பது, குழந்தைகளை இடம் பெயரச் செய்வது, வேறு எவ்வகையிலாயினும் இனவேறுபாடு காட்டுவது போன்றவை குற்றமுறை செயல்களாக, சர்வதேச தடைச்சட்டத்தின்படி குற்றச்செயலாகும் என என 1948 இல் ஐக்கிய நாடுகளின் பிரதிநிதிகள் சபை தடைசெய்யப்பட்ட, தண்டனைக்குரிய மற்றும் குற்றமுறை செயலாக ஐ நா சட்ட விதி 2ஐ எழுதியது.

துப்பாக்கிளும் போரும் தவிர்க்கப்படவேண்டிய இடங்களில் வைத்திய சாலை முதன்மையானது. வைத்தியசாலை வளாகத்தில் இதற்கான அறிவிப்பு பலகைகள் மற்றும் ஆயுதத் தடைக் குறியிடுகள் வைக்கப்பட்டிருக்கும். உயிரை காக்க வேண்டிய வைத்தியசாலையை உயிரை அழித்தனர் இந்தியப் படைகள். அமைதி காப்பதற்காக வந்ததாக கூறிய படைகள் உயிர்களை பாதுகாக்க வேண்டிய அமைதி வலயமாக மதிக்க வேண்டிய வைத்தியசாலையை போர்க்களமாக்கினர்.

வைத்தியசாலைகளை போர்த் தவிர்ப்பு வலயமாக மதிக்க வேண்டிய போர் தர்மத்தை ஈழத்தில் முதன் முதலில் மீறியது இந்தியப் படைகளே. பின்னர் இலங்கை அரசுகள் வைத்தியசாலைகள்மீது பல தாக்குதல்களை நடாத்தி மக்களை படுகொலை செய்தது. ஈழத் தமிழ் படுகொலை விடயத்தில் இந்தியா இலங்கையை ஊக்குவித்தது. அதைப்போலவே வைத்தியசாலைகள்மீது இனவெறித் தாக்குதலை நடத்தும் விடயத்திலும் இந்தியாவே இலங்கைக்கு முன்னோடி.

சந்திரிக்கா அரசாங்கத்தில் கிளிநொச்சி வைத்தியசாலை மீது நடாத்தப்பட்ட விமானத் தாக்குதலை எவரும் மறக்க முடியாது. பிறந்து சில நிமிடங்களேயான பச்சிளங் குழந்தைகள் கூட மண்ணில் புதைந்தனர். குழந்தையை பெற்றெடுக்க வைத்தியசாலை வந்த தாய்மாரும் குழந்தைகளும் ஒன்றாக விமானக் குண்டுகளினால் மண்ணில் புதைக்கப்பட்டனர். நூற்றுக் கணக்கானவர்கள் கொல்லப்பட்ட அந்த தாக்குதலை எவரலாறும் மறக்க இயலாது. ஈழத்தில் வைத்தியசாலைமீது நடந்த மற்றொரு இனப்படுகொலை தாக்குதல் அது.

இதைப்போல மகிந்த ராஜபக்சவின் காலத்தில் புதுக்குடியிருப்பு வைத்தியசாலைமீதும் கொடும் எறிகணைத் தாக்குதல் நடாத்தப்பட்டு பலர் கொல்லப்பட்டார்கள். ஒரு நேர்காணலின் அப்போது இராணுவத்தளபதியாக இருந்த சரத்பொன்சேகா புதுக்குடியிருப்பு வைத்தியசாலைமீது ஒரே ஒரு எறிகணைதான் எறிந்ததாக சொன்னார். எத்தனை அதிர்ச்சிகரமான ஒப்புதல்? போரால் காயமடைந்தவர்களும் இறந்தவர்களும் பரவியிருந்த புதுக்குடியிருப்பு வைத்தியசாலையை இலங்கைப் படைகள் பிண வைத்தியசாலையாக மாற்றினர்.

மிகவும் மனித உரிமை மீறல் கொண்ட மனி குலத்திற்கு விரோதமான இப் படுகொலைகளுக்காக இதுவரையில் இந்தியா மன்னிப்பு கேட்கவில்லை. அத்துடன் இப் படுகொலைகளை தாம் புரிந்ததாக ஒப்புக்கொள்ளவுமில்லை.. ஈழத் தமிழ் மக்கள் இலங்கை அரசின் இனப்படுகொலை நடவடிக்கைகளினால் அழிக்கப்பட்டமைக்கான நீதி கோரும் காலத்தில், இந்திய அரசு ஈழத்தில் மேற்கொண்ட படுகொலை நடவடிக்கைகளுக்கு என்ன நீதி கிடைத்தது என்பதையும் மதிப்பிடுவதுடன் இந்திய அரசிடம் நீதி கோரும் குரலை வலுப்படுத்துவதும் இன்றைய நாட்களில் அவசியமானது.
.
குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்

http://globaltamilnews.net/archives/3916

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, நந்தன் said:

நினைவு அஞ்சலிகள் 

 

இந்நிகழ்வுக்கு  கட்டாயம் இந்திய துணை தூதரகத்துக்கு  அழைப்பு அனுப்பியிருக்க வேண்டும் .கலாமுக்கும் ,காந்திக்கும்  யாழில் சிலை வைத்து  கொண்டாடும் இந்தியனுக்கு  அவர்களால்  கொல்லப்பட்ட  மக்களையும் அறிமுகம் செய்தே ஆகவேண்டும் .

நான் எழுத நினைத்தது அப்படியே நீங்கள் எழுதி விட்டீர்கள் 

  • கருத்துக்கள உறவுகள்

நினைவு அஞ்சலிகள்.

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, நந்தன் said:

நினைவு அஞ்சலிகள் 

 

இந்நிகழ்வுக்கு  கட்டாயம் இந்திய துணை தூதரகத்துக்கு  அழைப்பு அனுப்பியிருக்க வேண்டும் .கலாமுக்கும் ,காந்திக்கும்  யாழில் சிலை வைத்து  கொண்டாடும் இந்தியனுக்கு  அவர்களால்  கொல்லப்பட்ட  மக்களையும் அறிமுகம் செய்தே ஆகவேண்டும் .

நீங்கள் சம்மந்தன் ஐயா சுமந்திரன் ஐயாவிடம் வாங்கி கட்ட போகிறீர்கள்.

அரசு தட்ட்டில் வைக்க வேண்டியது  எல்லாம் சரி செய்துவிடடார்கள் 
இப்போ தாம்பாளம் மினுக்கி கொண்டு இருக்கிறார்கள் .....

இந்த நேரம் இந்தியா கொலை செய்தது என்றால் 
அமைதி குழம்பாதா ??? 

  • கருத்துக்கள உறவுகள்

நினைவு அஞ்சலிகள்.இந்திய துணை தூதுவரை காணவில்லை.......29 வருடங்களின் பின்பு அதே தினத்தில் நாம் கம்பனுக்கு விழா எடுத்து இராமயணப்பாடம் படிக்கின்றோம்...சிட்னியில்

  • கருத்துக்கள உறவுகள்
On 21/10/2016 at 0:44 PM, நந்தன் said:

நினைவு அஞ்சலிகள் 

 

இந்நிகழ்வுக்கு  கட்டாயம் இந்திய துணை தூதரகத்துக்கு  அழைப்பு அனுப்பியிருக்க வேண்டும் .கலாமுக்கும் ,காந்திக்கும்  யாழில் சிலை வைத்து  கொண்டாடும் இந்தியனுக்கு  அவர்களால்  கொல்லப்பட்ட  மக்களையும் அறிமுகம் செய்தே ஆகவேண்டும் .

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.